Advertisment

சாகித்ய அகாதமி விருது 2017

/idhalgal/general-knowledge/caakaitaya-akaatamai-vairautau-2017

* சாகித்ய அகாதமி விருது (Sahitya Akademi Award),, சிறந்த இந்திய இலக்கிய படைப்பாளிகளுக்கு, இந்திய அரசால் ஒவ்வோர் ஆண்டும் தேசிய அளவிலும்மாநில அளவிலும் வழங்கப்படும் மதிப்பிற்குரிய விருதாகும்.

* பரிசுத்தொகையாக 1 இலட்சம் ரூபாயும், ஒரு பட்டயமும் வழங்கப்படுகின்றன.

Advertisment

* இருபத்து நான்கு இந்திய மொழிகளில் சிறுகதை, நாவல், இலக்கிய விமர்சனம் போன்ற பலவகையான எழுத்தாக்கத்திற்கு இவ்விருது வழங்கப்படுகிறது.

* சாகித்ய அகாதமி இந்திய அரசினால், 1954, மார்ச் 12-இல் துவக்கப்பட்ட ஓர் அமைப்பு.

* இந்திய மொழிகளில் இலக்கியமும்

இலக்கியம் சார்ந்த நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கும் எண்ணத்தோடு துவக்கப்பட்ட அமைப்பு, சாகித்யஅகாதமி.

Advertisment

* இதுவரை ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட இலக்கிய கூட்டங்களும், பயிற்சி முகாம்களும் மற்ற பிற இலக்கியம் சார்ந்த நடவடிக்கைகளை நடத்தியுள்ளது சாகித்ய அகாதமி.

* இந்திய மொழிகளில் வெளிவரும் சிறந்த படைப்புகளை பிற

* சாகித்ய அகாதமி விருது (Sahitya Akademi Award),, சிறந்த இந்திய இலக்கிய படைப்பாளிகளுக்கு, இந்திய அரசால் ஒவ்வோர் ஆண்டும் தேசிய அளவிலும்மாநில அளவிலும் வழங்கப்படும் மதிப்பிற்குரிய விருதாகும்.

* பரிசுத்தொகையாக 1 இலட்சம் ரூபாயும், ஒரு பட்டயமும் வழங்கப்படுகின்றன.

Advertisment

* இருபத்து நான்கு இந்திய மொழிகளில் சிறுகதை, நாவல், இலக்கிய விமர்சனம் போன்ற பலவகையான எழுத்தாக்கத்திற்கு இவ்விருது வழங்கப்படுகிறது.

* சாகித்ய அகாதமி இந்திய அரசினால், 1954, மார்ச் 12-இல் துவக்கப்பட்ட ஓர் அமைப்பு.

* இந்திய மொழிகளில் இலக்கியமும்

இலக்கியம் சார்ந்த நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கும் எண்ணத்தோடு துவக்கப்பட்ட அமைப்பு, சாகித்யஅகாதமி.

Advertisment

* இதுவரை ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட இலக்கிய கூட்டங்களும், பயிற்சி முகாம்களும் மற்ற பிற இலக்கியம் சார்ந்த நடவடிக்கைகளை நடத்தியுள்ளது சாகித்ய அகாதமி.

* இந்திய மொழிகளில் வெளிவரும் சிறந்த படைப்புகளை பிற மொழிகளில் மொழிபெயர்த்து வெளியிடுவது, சிறந்த படைப்புகளை விருது அளித்து ஊக்கப் படுத்துவது போன்ற பல பணிகளை சாகித்ய அகாதமி செய்து வருகிறது.

* இந்தியாவில் 24 மொழிகளில் வெளியாகும் சிறந்த இலக்கியப் படைப்புகளைத் தேர்வு செய்து சாகித்ய அகாடமி சார்பில் ஆண்டுதோறும் விருதுகள் வழங்கப் படுகின்றன

* 2017-ஆம் ஆண்டு விருதுக்கான போட்டியில் மறைந்த கவிஞர் இன்குலாப் எழுதிய "காந்தள் நாட்கள்' கவிதை நூல் தேர்வு செய்யப்பட்டு விருது அறிவிக்கப் பட்டது.

Ingulab

கவிஞர் இன்குலாப்

* கவிஞர் இன்குலாப் பேராசிரியராகப் பணியாற்றியவர். இவரது இயற்பெயர் ஷாகுல் ஹமீது மேலும் நாடக ஆசிரியர், பத்திரிகையாளர், பொது வுடைமைச் சிந்தனையாளர் என பன்முக ஆளுமை கொண்டிருந்தவர். தெளிந்த அரசியல் பார்வையும் நேரடித் தன்மையும் இவரது கவிதைகளின் பலம்.

* வாழ்நாள் முழுக்க சமூக அக்கறையுடன், ஒடுக்குமுறைகளுக்கு எதிரான போராட்ட கவிதைகளை எழுதியவர் இன்குலாப்.

* தொடக்கத்தில் திராவிட இயக்க சிந்தனை வழியில் பயணித்த இவர், கீழவெண்மணி படுகொலைக்குப் பிறகு மார்க்சியத்தை தனது கண்களாகக் கொண்டு இயங்கியவர்.

* இளவேனில் நடத்திய "கார்க்கி' இதழில்தான் இவரது ஆரம்ப கால கவிதைப் பேரணி தொடங்கியது.

அதைத் தொடர்ந்து இவரது எழுத்துகள் இலக்கிய உலகத்தால் மட்டுமல்ல; போராட்டக்காரர்களுக்கும், தொழிற்சங்கத் தோழர்களுக்கும் உரம் சேர்க்கும் படைப்புகளாயின.

* விருதுக்கு தேர்வாகியுள்ள "காந்தள் நாட்கள்' கவிதை நூலை சென்ற ஆண்டு அகரம் பதிப்பகம் வெளியிட்டுள்ளது.

* இதுவரை 12 கவிதைத் தொகுப்புகள் வெளியாகியுள்ளன.

* ஔவை, மணிமேகலை உள்ளிட்ட 6 நாடகங்களும் எழுதி மேடையேற்றி யுள்ளார். அவையும் நூல்களாக வெளிவந்துள்ளன. மேலும் 1 சிறுகதைத் தொகுப்பும் 2 கட்டுரைத் தொகுப்புகளும் வெளியாகியுள்ளன.

* இன்குலாப் விதைகள், வெள்ளை இருட்டு, ஆக்டோபஸ் கவிதை தொகுப்புகள் வெளியிட்டார்.

* இன்குலாப் எழுதிய "அவ்வை' நாடகம் பெண் முன்னேற்ற மேடைகளில் அதிக கவனம் பெற்ற பெருங்கலையாகும்.

அடங்காத தமிழ் பற்றும், விடுதலைப் பற்றும் கொண்ட இன்குலாப்பின் காந்தள் நாட்கள் சாகித்ய அகாதமி விருது பெற்றுள்ளது சிறப்பாகும். எனினும் அவரது இவ்விருதை ஏற்கவில்லை.

யூமா வாசுகி

* இந்த ஆண்டு தமிழ் மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாதமி விருது யூமா வாசுகிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அவரது "கசாக்கின் இதிகாசம்' என்ற மொழிபெயர்ப்பு நூலுக்காக இந்த விருது வழங்கப்படுகிறது.

* யூமா வாசுகி தனது "ரத்த உறவு' நாவல் மூலம் தமிழ் இலக்கியத்தில் நன்கு அறிமுகமானவர். யூமா வாசுகி கவிஞராகவும் அறியப்படுகிறவர். இவர் சிறந்த ஓவியரும்கூட. குதிரைவீரன் பயணம் இவர் நடத்திவரும் இலக்கிய இதழ். யூமா வாசுகி பல ஆண்டுகளாக மலையாளத்திலிலிருந்து தமிழுக்கு பல்வேறு படைப்புகளை மொழிபெயர்த்து வருகிறார்.

* மலையாளத்தில் புகழ்பெற்ற எழுத்தாளரான ஓ.வி. விஜயன் எழுதிய இந்நூல் யூமா வாசுகியால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு காலச்சுவடு வெளியீடாக வெளிவந்துள்ளது.

* இவை தவிர, தமிழிலிலிருந்து பிற மொழிகளுக்குச் சென்ற இரண்டு மொழிபெயர்ப்பு புத்தகங்களுக்கும் சாகித்ய அகாதமி விருது கிடைத் திருக்கிறது.

* தோப்பில் முகம்மது மீரானின் "சாய்வு நாற்காலி' நாவலை காஷ்மீரியில்மொழிபெயர்த்த இக்பால் நஸ்கிக்கும், ஜெயகாந்தனின் தேர்ந்தெடுத்த சிறுகதைகளை மலையாளத்தில் மொழிபெயர்த்த கே.எஸ்.வெங்கடாசலத் துக்கும் மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாதமி விருது வழங்கப்பட்டிருக்கிறது.

அக்னி-5 ஏவுகணை

* ஒடிசா மாநிலம் பாலாசோரில் அமைந்துள்ள அப்துல் கலாம் ஏவுதளத்தில் அக்னி-5 ஏவுகணை சோதனை நடைபெற்றது.

* இந்த ஏவுகணையானது 19 நிமிடங்களில் 4,900 கிலோமீட்டரை கடந்து நிர்ணயிக்கப் பட்ட இலக்கை துல்லிலியமாக தாக்கியது.

* அக்னி-5 ஏவுகணையின் மொத்த எடை 50 டன் ஆகும். சுமார் 1.5 டன் எடை வரையிலான அணு ஆயுதங்களை தாங்கி செல்லும் திறன் கொண்டது.

* அதைத் தவிர, வழிகாட்டும் (நேவிகேஷன்) வசதியும், வேறு சில தொழில்நுட்ப வசதிகளும் அதில் அமைந்துள்ளன.

இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe