பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் இந்திய அரசியல் தலைமையைப் பற்றியும் இந்தியத் தலைவர்களுக்கு அதிகாரத்தை மாற்றித்தருவது இந்திய மக்களுக்கு என்ன அர்த்தத்தைத் தரும் என்பது பற்றியும் என்ன கருதினார்கள் என்பது சி. ஆர். அட்லியால் தொழிற்கட்சியின் அணுகுமுறை என்ற தலைப்பில் 1931-இல் எழுதப்பட்ட புத்தகத்தில் மிக அற்புதமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அட்லி எழுதினார்: ""இந்தியா இந்தியர் களுக்கே என்பது ஒரு எளிய முழக்கம். ஆனால், இது மனிதவாழ்வு என்ற முறையில் என்ன பொருளைத் தருகிறது? என்று பார்ப்பது அவசியமானதாகும். இந்தியாவின் விவசாயிகளையும், தொழிலாளர்களையும் அவர்களது சொந்த நாட்டின் முதலாளிகளாலும், நிலப்பிரபுக்களாலும் சுரண்டப்படுவதற் காக அவர்களிடம் ஒப்படைப்பதில் எந்தப் பயனும் இல்லை.''
தேசியவாதம் என்பது ஒரு நம்பிக்கை கோட்பாடு. அதை மாபெரும் சுயதியாகத்தாலும், கோட்பாட்டாலும் உயிர்ப்புடன் வைத்திருக்க முடியும். ஆனால் அது வர்க்க ஆதிக்கத்தையும், சிறுபான்மையினர்மீது சகிப்புத் தன்மையின்மையையும், அதுபோலவே பொருளாதாரச் சுரண்டலையும் பாதுகாக்கும். இந்தியாவின் அரசியல மைப்புக்காக நடத்தப்பட்ட விவாதங்கள் முழுவதிலும் தொழிற்கட்சி உறுப்பினர்கள் தேசியவாதம் மட்டும் போதுமானதல்ல என்று உணர்ந்தார்கள். பெரும்பான்மை யான வறிய மற்றும் கல்வியறிவற்ற மக்களுக்குக், கிடைக்காத, நல்வாய்ப்பும், கல்வியறிவும் அதைப் பெற்றுள்ள பணக்கார வர்க்கத்தின் சுரண்டலிலிருந்து அவர்களைத் தப்பவைக்காது என்பதைக் கண்டறிந்திருந்தார்கள்.
ஆனால் ஒருமுரண்நிகழ்வாக அவர்களது சொந்த இந்திய முதலாளிகளாலும், நிலப்பிரபுக்களாலும் சுரண்டப்பட இந்தியாவின் விவசாயிகளையும், தொழிலாளர்களையும் தனது கட்சி அதிகாரத்தில் இருந்தபோது கிரேட்பிரிட்டனின் பிரதமரான அட்லி ஒப்படைத்தார். இரண்டாம் உலகப்போருக்குப்பிறகு அட்லி தலைமை யிலான தொழிற்கட்சி ஆட்சிக்கு வந்திருந்தது. வருந்தத்தக்க வகையில் அட்லி தனது புத்தகத்தில் குறிப்பிட்ட வாறு இந்தியாவில் சோசலிசக் கொள்கையை நடைமுறைப்படுத்த அவர் எந்தவித நடவடிக்கையையும் எடுக்கவில்லை.
இரண்டாம் உலகப்போரின் முடிவில் கிரேட் பிரிட்டன் இராணுவரீதியிலும், பொருளாதார ரீதியிலும் பலவீனம் அடைந்தது. அதனுடைய மனித ஆற்றலும் வீழ்ச்சியுற்றது. அது தனது இந்தியப் பணியாளர்களின் விசுவாசத்தின் மீது இனியும் உறுதியான நம்பிக்கை கொண்டிருக்க முடியவில்லை. அதற்கு மாறாக, அது தன்னுடைய காலனியாதிக் கத்தைத் தொடருமானால் இந்தியாவில் புரட்சி ஏற்படும் என்ற சாத்தியத்தால் மிரட்சி அடைந்திருந்தது.
இந்தியாவைத் தொடர்ந்து ஆளுவதா? அல்லது அதிகாரத்தை இந்தியத் தலைமை யோடு பகிர்ந்துகொள்வதா? அல்லது இந்தியாவைவிட்டு விலகிவிடுவதா? என்ற கேள்வி 1942 முதல் பிரிட்டிஷ் அமைச்சரவைக்குள்ளும், அப்போதைய வைஸ்ராய்களிடமும் அதேபோல இந்திய அரசியல் தலைவர்களிடமும் அவ்வப்போது விவாதிக்கப்பட்டு வந்தது.
பிரிட்டிஷ் தொழிற்கட்சி ஆட்சிக்கு வந்தபிறகு பெரும்பான்மையினரின் கண்ணோட்டம் இந்தியர்களுக்கே அதிகாரத்தை வழங்குவதாக இருந்தது.
அடுத்துவரும் பத்திகள் முடிவெடுக்கக் கூடியவர்களின் மனநிலைபற்றியும், இறுதியாக தங்கள் இந்தியக் கூட்டாளி களிடம் (காங்கிரஸ் மற்றும் முஸ்லீம் லீக் தலைவர்கள்) அதிகாரத்தை ஒப்படைப்ப தற்கான காரணங்கள், சூழ்நிலைகள் பற்றியும் கணநேரக் கண்ணோட்டங் களாகத் தருகின்றன.
கிட்டத்தட்ட தொழிற்கட்சி நிர்வாகம் முழுமையாக அமைவதற்கு முன்பே பிரதமர் சி. ஆர். அட்லி. தனது மேஜை யின்மீது புகழ்பெற்ற பொருளாதார நிபுணரான ஜே.எம். கீய்ன்ஸ் பிரபுவின் இரகசிய அறிக்கையை வைத்திருந்தார். அது பிரிட்டன் மிகவும் அதிர்ச்சி தரும் பொருளாதார நிலையில் உள்ளது என்று எச்சரித்தது. பொருளாதாரத் தின் பின்விளைவுகள் என்னவாகும் என்பதைப்பற்றி முழுவதும் கரு
பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் இந்திய அரசியல் தலைமையைப் பற்றியும் இந்தியத் தலைவர்களுக்கு அதிகாரத்தை மாற்றித்தருவது இந்திய மக்களுக்கு என்ன அர்த்தத்தைத் தரும் என்பது பற்றியும் என்ன கருதினார்கள் என்பது சி. ஆர். அட்லியால் தொழிற்கட்சியின் அணுகுமுறை என்ற தலைப்பில் 1931-இல் எழுதப்பட்ட புத்தகத்தில் மிக அற்புதமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அட்லி எழுதினார்: ""இந்தியா இந்தியர் களுக்கே என்பது ஒரு எளிய முழக்கம். ஆனால், இது மனிதவாழ்வு என்ற முறையில் என்ன பொருளைத் தருகிறது? என்று பார்ப்பது அவசியமானதாகும். இந்தியாவின் விவசாயிகளையும், தொழிலாளர்களையும் அவர்களது சொந்த நாட்டின் முதலாளிகளாலும், நிலப்பிரபுக்களாலும் சுரண்டப்படுவதற் காக அவர்களிடம் ஒப்படைப்பதில் எந்தப் பயனும் இல்லை.''
தேசியவாதம் என்பது ஒரு நம்பிக்கை கோட்பாடு. அதை மாபெரும் சுயதியாகத்தாலும், கோட்பாட்டாலும் உயிர்ப்புடன் வைத்திருக்க முடியும். ஆனால் அது வர்க்க ஆதிக்கத்தையும், சிறுபான்மையினர்மீது சகிப்புத் தன்மையின்மையையும், அதுபோலவே பொருளாதாரச் சுரண்டலையும் பாதுகாக்கும். இந்தியாவின் அரசியல மைப்புக்காக நடத்தப்பட்ட விவாதங்கள் முழுவதிலும் தொழிற்கட்சி உறுப்பினர்கள் தேசியவாதம் மட்டும் போதுமானதல்ல என்று உணர்ந்தார்கள். பெரும்பான்மை யான வறிய மற்றும் கல்வியறிவற்ற மக்களுக்குக், கிடைக்காத, நல்வாய்ப்பும், கல்வியறிவும் அதைப் பெற்றுள்ள பணக்கார வர்க்கத்தின் சுரண்டலிலிருந்து அவர்களைத் தப்பவைக்காது என்பதைக் கண்டறிந்திருந்தார்கள்.
ஆனால் ஒருமுரண்நிகழ்வாக அவர்களது சொந்த இந்திய முதலாளிகளாலும், நிலப்பிரபுக்களாலும் சுரண்டப்பட இந்தியாவின் விவசாயிகளையும், தொழிலாளர்களையும் தனது கட்சி அதிகாரத்தில் இருந்தபோது கிரேட்பிரிட்டனின் பிரதமரான அட்லி ஒப்படைத்தார். இரண்டாம் உலகப்போருக்குப்பிறகு அட்லி தலைமை யிலான தொழிற்கட்சி ஆட்சிக்கு வந்திருந்தது. வருந்தத்தக்க வகையில் அட்லி தனது புத்தகத்தில் குறிப்பிட்ட வாறு இந்தியாவில் சோசலிசக் கொள்கையை நடைமுறைப்படுத்த அவர் எந்தவித நடவடிக்கையையும் எடுக்கவில்லை.
இரண்டாம் உலகப்போரின் முடிவில் கிரேட் பிரிட்டன் இராணுவரீதியிலும், பொருளாதார ரீதியிலும் பலவீனம் அடைந்தது. அதனுடைய மனித ஆற்றலும் வீழ்ச்சியுற்றது. அது தனது இந்தியப் பணியாளர்களின் விசுவாசத்தின் மீது இனியும் உறுதியான நம்பிக்கை கொண்டிருக்க முடியவில்லை. அதற்கு மாறாக, அது தன்னுடைய காலனியாதிக் கத்தைத் தொடருமானால் இந்தியாவில் புரட்சி ஏற்படும் என்ற சாத்தியத்தால் மிரட்சி அடைந்திருந்தது.
இந்தியாவைத் தொடர்ந்து ஆளுவதா? அல்லது அதிகாரத்தை இந்தியத் தலைமை யோடு பகிர்ந்துகொள்வதா? அல்லது இந்தியாவைவிட்டு விலகிவிடுவதா? என்ற கேள்வி 1942 முதல் பிரிட்டிஷ் அமைச்சரவைக்குள்ளும், அப்போதைய வைஸ்ராய்களிடமும் அதேபோல இந்திய அரசியல் தலைவர்களிடமும் அவ்வப்போது விவாதிக்கப்பட்டு வந்தது.
பிரிட்டிஷ் தொழிற்கட்சி ஆட்சிக்கு வந்தபிறகு பெரும்பான்மையினரின் கண்ணோட்டம் இந்தியர்களுக்கே அதிகாரத்தை வழங்குவதாக இருந்தது.
அடுத்துவரும் பத்திகள் முடிவெடுக்கக் கூடியவர்களின் மனநிலைபற்றியும், இறுதியாக தங்கள் இந்தியக் கூட்டாளி களிடம் (காங்கிரஸ் மற்றும் முஸ்லீம் லீக் தலைவர்கள்) அதிகாரத்தை ஒப்படைப்ப தற்கான காரணங்கள், சூழ்நிலைகள் பற்றியும் கணநேரக் கண்ணோட்டங் களாகத் தருகின்றன.
கிட்டத்தட்ட தொழிற்கட்சி நிர்வாகம் முழுமையாக அமைவதற்கு முன்பே பிரதமர் சி. ஆர். அட்லி. தனது மேஜை யின்மீது புகழ்பெற்ற பொருளாதார நிபுணரான ஜே.எம். கீய்ன்ஸ் பிரபுவின் இரகசிய அறிக்கையை வைத்திருந்தார். அது பிரிட்டன் மிகவும் அதிர்ச்சி தரும் பொருளாதார நிலையில் உள்ளது என்று எச்சரித்தது. பொருளாதாரத் தின் பின்விளைவுகள் என்னவாகும் என்பதைப்பற்றி முழுவதும் கருத்தில் கொள்ளாமலேயே போர் நடத்தப் பட்டது.
கீய்ன்ஸ் மேலும் எழுதுகிறார்:
""பிரிட்டன் முழுவதும் திவாலாகி விட்டது, அந்தப்பொருளாதார வீழ்ச்சியிலிருந்து மீட்சிபெறுவோமா என்பதை மிகைப் படுத்தாமல் கூறினார். ""அதற்கான நம்பிக்கை எதுவும் இல்லை. பின்விளைவு கள் என்னவாகும் என்பதை முற்றிலும் கருத்தில் கொள்ளாமலேயே போர் நடத்தப்பட்டது. பிரிட்டன் முற்றிலும் திவாலாகிவிட்டது. இது நம்மை வலுக் கட்டாயமாகவும், வருந்தத்தக்கவகை யிலும் கடல்கடந்த நாடுகளிலிருந்து திரும்பிவருவதை வலியுறுத்துகிறது.
அல்லது போர்க்காலங்களில் கடைப் பிடித்ததை விடவும் கூடுதலான சிக்கன நடவடிக்கைகளை மேற்கொண்டுகுறைவான வாழ்க்கைத் தரத்தை உள்நாட்டில் கடைப் பிடித்தாக வேண்டும். முடிவு தவிர்க்கவியலாதது.'' என கீய்ன்ஸ் வாதிட்டார். பிரிட்டன் அமெரிக்காவிட மிருந்து பணம் கேட்க வேண்டும்.
அப்படி நடந்தால், அமெரிக்க மிகக் கடுமையான பேரத்தை நடத்தும். (பிரிட்டனின் அதிகார வீழ்ச்சி-
ரொனால்டு ஹாயன் பக்கம் 130)
இரண்டாம் உலகப்போருக்குப்பின், அனைத்துலக செயற்களத்தில் நடந்தது என்ன வென்றால் உலகப்பேரரசு என்பது பிரிட்டனின் மூலமாக அமையாது என்பது மட்டுமல்ல, இப்போது அதன் கௌரவத்துக்கும் மரியாதைக்கும்கூட அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. மேலும் அது இப்போது ஒருசுமையாகி விட்டது என்ற உணர்வு மெல்ல மெல்ல ஆனால் உறுதியாக வலுப்பட்டுவந்தது பனிப்போர் பிரிட்டனின் கொள்கையின் முக்கியமான உருவமைப்பை நிர்ண யித்தது. அதன் காரணமாக பிரிட்டன் தேசியவாதிகளை திருப்திப்படுத்த வேண்டியிருந்தது. அமெரிக்காவைச் சார்ந்திருக்க வேண்டியதாயிற்று.
காமன்வெல்த் நாடுகளை வலுப்படுத் தவும் ஐ. நா வுடன் ஒத்துப்போக வேண்டி யிருந்தது. இதனால் மேற்கத்திய ஆதரவு தேசிய அரசுகள் உருவாகவும், உற்சாகப்படுத்தவுமான வழியில் காலனியாதிக்கத்தைக் கைவிட வேண்டிய முழுஅழுத்தம் ஏற்பட்டது.
புவிசார் அரசியலில் வலுவான, நன்கு இயங்கும்தன்மைகொண்ட உள்ளார்ந்த ஆட்சிமுறைமைகள் அவசியம். அதிகார வெற்றிடம் என்ன விலை கொடுத்தேனும் தவிர்க்கப்பட வேண்டும். சுதந்திர இந்தியாவில் குறைந்தபட்சமாகவேனும் தனது செல்வாக்கைச் செலுத்த ரஷ்யா முயற்சிக்கும் என அதிகாரிகளின் தலைமை எண்ணியது. பிரிட்டன் மட்டும் ரஷ்யாவுடன் போரில் ஈடுபடாமல் இருந் திருந்தால் இந்தியா வெகு எளிதாக ரஷ்யாவிடம் சென்றிருக்கும். காமன்வெல்த் நாடுகளுடனான வான்வழித்தகவல் தொடர்புகளிலும், பாரசீக வளைகுடா எண்ணெய் விநியோகத்தை ராஜதந்திர ரீதியாகப் பாதுகாப்பதிலும் மையப் புள்ளியாக இந்தியா இருந்துவந்தது.
அது மட்டுமல்ல, அன்று ஆயுதங்களைத் தயாரிக்கத் தேவைப்படும் தோரியம் இருப்பை அது திருவாங்கூர் பகுதியில் கொண்டிருந்தது. இந்த மாபெரும் விளையாட்டு நீண்ட நிழலைப் படியவைத்துவிடும்.
ஃபீல்ட் மார்ஷல் வேவல் பிரபு (வைசிராய்)
இராணுவத் தலைமைத் தளபதி அச்சின் லெக் ஆகிய இருவரும், 1946-இல் பிரிட்டிஷாருக்கு எதிரான மிகப்பெரிய ஒருசட்ட விரோத அச்சுறுத்தல் உள்ளது. அது பிரிட்டி ஷாரின் ஆட்சி நிர்வாகத்தை முடக்கி அவர்களைத் தூக்கியெறிவதை நோக்கமாகக்கொண்ட, நன்கு திட்டமிடப்பட்ட ஓர் எழுச்சியாக அது அமையும் என எச்சரித்தார்கள்.
ராயல் இந்தியன் கப்பல்படையின் பிப்ரவரி நடவடிக்கைகள் எதிர்வினைகளைத் தூண்டிவிட்டன. இது மிகவும் ஆபத்தானது. இந்த அதிருப்தி மத்திய கிழக்கில் உள்ள இந்தியத் துருப்புக் களிடமும் பரவி ஆபத்தான பின்விளைவு களை ஏற்படுத்திவிடும் என எச்சரித் தார்கள்.
1946 ஜூன் 29 அன்று பதவியில் இருந்த பிரதமருக்கு ஃபீல்டு மார்ஷல் விஸ்கவுண்ட் வேவல் அனுப்பிய இந்தியா வுக்கு அதிகாரங்களை மாற்றுவதற்கான தொடர் (பழ்ஹய்ள்ச்ங்ழ் ர்ச் டர்ஜ்ங்ழ் நங்ழ்ண்ங்ள் ச்ர்ழ் ஒய்க்ண்ஹ (பஞடஒ) தொகுப்பு யஒஒ பக்கம் 1087-இல் ஒரு குறிப்பில், போரின்போது ஐ. சி. எஸ். அணியினர் தங்களுக்கு அளிக்கப்பட்ட கடமைகளுக்குப் பொருத்தமற்றவர்களாக இருந்தார்கள். அவர்களில் வயதான பலர் களைப்படைந்து மனமொடிந்தவர்களாக இருந்தார்கள். இளைஞர்களிலும்கூட பலர் தங்கள் பணி நிலைகள் சுவையற்றதாக இருந்ததைக்கண்டு இந்தியாவில் தங்களுக்கு இனி எதிர்காலம் இல்லை என்று எண்ணி எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் ஓய்வுபெற விரும்பினார்கள். காவல்துறையிலும் நிலைமைகள் இவ்வாறே இருந்தன. போர் துவங்கியதிலிருந்து புதியவர் களைப் பணியில் சேர்ப்பது நடைபெற வில்லை என எழுதினார்.
மூத்த அமைச்சரான பெவின், இதற்கு ஒருமுடிவுகாணாமல் இந்தியாவில் நமது நிலையைக் கைவிடும் எந்த ஒரு ஆலோசனையும் பிரிட்டிஷ் ஆட்சியின் வீழ்ச்சிக்கான ஆதாரம் என்று விளக்கப் பட்டுவிடும் இந்த முடிவு அமெரிக்கர் களை நிலைகுலைய வைத்துவிடும். இந்தியா பலதுண்டுகளாக சிதறிவிடு மானால், ரஷ்யா இதில் தலையிடும். உலக மோதல்களுக்கான விதைகள் தூவப்பட்டுவிடும் என்று வாதிட்டார். (ரொனால்ட் ஹயாம் எழுதிய Britain’s Declining Power என்ற நூலின் பக்கம் 106) புத்தாண்டு தினத்தன்று-1947 ஜனவரி 1-இல் பெவின் விரக்தியுற்ற மனநிலையில், பிரிட்டனின் நிர்வாகத்தைத் தொடர்ந்து நடத்தும் இளைஞர்களைக் கண்டுபிடிப் பதற்குப்பதிலாக இதிலிருந்து தப்பியோடு வதைத்தவிர வேறு எந்த ஒன்றையும் அவர்கள் செய்ததாகத் தெரியவில்லை என்று எழுதினார். இந்தியாவிலிருந்து விலகுவதற்கான தேதியை நிர்ணயிப்பதை அவர் எதிர்த்தார். அவர் அட்லியிடம் ஒரு உறுதியான நிலையை எடுக்கு மாறும், மிகவும் மோசமான தோல்வி மனப்பான்மைக்கு இடம்தர வேண்டாம் என்றும் கெஞ்சினார்.
அட்லி இவையனைத்தையும் உறுதியாக நிராகரித்தார். 1946 நவம்பரில் இதை நிராகரிப்பதற்கான காரணங்களை தனக்கே உரியமுறையில் வகுத்தார். (1) உலகம் முழுமைக்குமான நமது கடமைப்பொறுப்பின் பார்வையில் பரந்து விரிந்து பெருகிவரும் கொரில்லா இயக்கத்துக்கு எதிராக இந்தியாவைத் தொடர்ந்து வைத்துக்கொள்வதற்கு அல்லது இந்தியாவை வெற்றிகொள் வதற்கு இராணுவ பலம் நம்மிடம் இல்லை. பொதுக் கருத்தின்படி- குறிப்பாக நமது கட்சியின் கருத்தின்படி நாம் அந்த நிலையை எடுக்க முடியாது. (2) நமது சொந்தத் துருப்புக்கள்கூட அவ்வாறு செயல்பட ஆயத்தமாக உள்ளனவா? என்பது சந்தேகத்துக்கு உரியது. (3) நமக்கு எதிராக உலகக்கருத்து உள்ளது. அது ஐ,நா அமைப்பில் எழுப்பப்படு மானால், நமக்கு ஒரு சாத்தியமற்ற நிலையை ஏற்படுத்திவிடும். (4) பிரிட்டி ஷாரோ அல்லது இந்தியர்களோ இத்தகைய கொள்கையை முன்னெடுத்துச்செல்ல நமக்கு இப்போது எந்த நிர்வாக இயந்திரமும் இல்லை.
நிதித்துறைப் பொறுப்புவகித்த ஹக் டால்டன் தமது நாட்குறிப்பில், இந்தியாவை நாம் படைபலத்தால் பிடித்து வைத்திருப்பதுபற்றி நாம் நினைத்துக்கூடப் பார்க்கக் கூடாது என்பதில் நான் மிகவும் தெளிவாக உள்ளேன் என்று குறிப்பிட்டு, மிகவிரைவில் பின்வாங்கவேண்டும் என்று வலியுறுத்தினார். கிளமெண்ட் அட்லி, பெவினுக்கு எழுதிய தனிப்பட்ட இரகசியத் தகவலில், இந்தியப்பிரச்சனைகள் பற்றிஆய்வு செய்வது நம் அனைவருக்கும் ஒருபொது விஷயமாக ஆகியுள்ளது. அங்கு பல இலட்சக்கணக்கான இந்தியர்கள் அரசு மாறுவதை உண்மையிலேயே விரும்பவில்லை. ஆனால் அவர்கள் அமைதியாக உள்ளார்கள். மக்கள்தொகையில் செயல் ஈடுபாடு கொண்டவர்கள்- படித்த வர்க்கத்தினர் உட்பட தேசியஉணர்வினால் பெரிய அல்லது சிறிய அளவுக்கு போதம் பெற்றுள்ளவர்களாக ஆகிவருகிறார்கள் இது சைமன்குழு (1928) காலத்திலிருந்தே மிகப்பெருமளவுக்கு உண்மையாகும் அப்போது முதலே இது வேகம் பெற்றுள்ளது,. நாம் எப்போதும் இந்தியர் களை இந்தியர்களைக்கொண்டே ஆண்டு வந்திருக்கிறோம். பல பத்தாயிரத்துக்கும் குறைவான செயல்பாட்டாளர்கள் இல்லாமல் நாம் இதைத் தொடர்ந்து நடத்த முடியாது. 10 இலட்சம், 20 இலட்சம் மக்கள்தொகையுள்ள ஒருமாவட்டத்தில் நாம் ஒன்று அல்லது இரண்டு வெள்ளை அதிகாரிகளைக் கொண்டிருப்பது வழக்கமாக உள்ளது.
சட்டபூர்வ அரசுகளின் கீழான ஆட்சியில் அவை இப்போது நடைமுறையில் உள்ளன. பல ஆண்டுகள் இடைவெளியில் இந்திய அதிகாரிகளின் விசுவாசம் பிரிட்டிஷ் ராஜ்யத்தின்மீது அல்ல இந்திய அரசுகளை நோக்கியதாக வளர்ந்து வருகிறது. இந்தியாவிலிருந்து பிரிட்டிஷ் ஆட்சி தூக்கியெறியப்படும் நாள் வெகுதொலைவில் இல்லை என்பதைப் புரிந்து கொள்ளவேண்டும். அவர்கள் தங்கள் சொந்த இந்திய அரசுகளை நோக்கிய விசுவாசம் கொண்டிருக்க மாட்டார்கள் என்று நீங்கள் எவ்வாறு எதிர்பார்க்க முடியும்? நீங்கள் சிலநூறு பிரிட்டிஷ் நிர்வாகிகளைக் கண்டுபிடித் தாலும்கூட, அரசியல் சிந்தனையும், ஒட்டுமொத்த செயலாற்றலும் மிக்க மக்கள்தொகையின் எதிர்ப்புக்களுக்கு எதிராக எவ்வாறு நிர்வாகம் செய்ய முடியும்? அது முற்றிலும் சாத்தியமே இல்லை.
சி. ஆர். அட்லி தனது "ஆள் ஒற் ஐஹல்ல்ங்ய்ங்க்’ என்ற நூலின் 189-ஆம் பக்கத்தில்.ஒப்பீட் டளவில் உயர்ந்த வாழ்க்கைத் தரத்தை அனுபவித்துக்கொண்டிருப்பவர்களிடம் கம்யூனிசத்தின் தாக்கம் குறைவாகவே இருந்தாலும், ஆசியாவின் மக்களில் பலருக்கு அது விடுதலை அளிக்கும் சக்தியாகவே தோன்றுகிறது. பழைய காலனி ஆட்சிமுறையைத் தொடர்வது ஆசியாவின்மீது கம்யூனிசத் தின் செல்வாக்கு விரைவாகப் பரவ உதவுவதாகவே ஆகிவிடும் என்று மேலும் எழுதினார்.
மகாத்மா காந்தியின் ஒத்துழையாமை இயக்கம், சட்டமறுப்புப் போராட்டம் அல்லது சத்தியாக்கிரக இயக்கம் பற்றிய எந்த ஒருகுறிப்பும் கிரேட் பிரிட்டனின் முடிவுகளை எடுப்பவர்களிடம் இருக்க வில்லை. 1942-ன் இந்தியாவைவிட்டு வெளியேறு (வெள்ளையனே வெளியேறு) இயக்கம் அப்போதைய வைஸ்ராய் லின்லித்கோவ் பிரபுவால் இந்திய அரசுக்கான செயலாளர் அமெரி-க்கு எழுதப்பட்ட ஓர் அறிக்கையில் விவாதிக்கப்பட்டது. அவை அனைத்தும் பெரும்பாலும் காவல்துறையினர் கொல்லப்பட்டது, காவல் நிலையங்கள் தீயிட்டுக்கொளுத்தப்பட்டது மற்றும் நாட்டின் பலபகுதிகளிலும் நடைபெற்ற வன்முறைச்செயல்கள் பற்றியதாகவே இருந்தது. இந்தத் துணிகரமான நடவடிக்கைகள் வன்முறையற்றவை என்று தொழிலாளி வர்க்கத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தன என்ற குறிப்போடு அந்த அறிக்கையில் இடம் பெற்றிருந்தன. ரொனால்டு ஹயாம் தனது நூலின் 66-ஆம் பக்கத்தில் மகாத்மா காந்தியைப் பற்றியும் எழுதினார்.
அது, ""இந்தியாவிலுள்ள பிரிட்டிஷ் பேரரசை இரத்தம் சிந்துவதிலிருந்து அதாவது புரட்சியிலிருந்து அஹிம்சை பற்றிய மகாத்மா காந்தியின் நம்பிக்கையே காப்பாற்றியது'' என நன்றி தெரிவிக்கும் உணர்வுடன் எழுதப் பட்டிருந்தது. அவர் எழுதினார்: அவரது (காந்தியின்) அஹிம்சைபற்றிய போதனைகள்தான் இந்தியாவுக்கும், இரத்தம் சிந்துதலுக்கும் (புரட்சிக்கும்) இடையேவேறு எந்தவொரு அம்சத்தை விடவும் அதிர்ச்சியூட்டும் அளவுக்கு உறுதியாக நின்ற அம்சமாகும்.
ரெஜினால்ட் மாஸே தனது மாவீரன் பகத் சிங்கும், மறக்கப்பட்ட இந்திய தியாகிகளும் (நட்ஹட்ங்ங்க் இட்ஹஞ்ஹற் நண்ய்ஞ்ட் ஹய்க் ற்ட்ங் ச்ர்ழ்ஞ்ர்ற்ற்ங்ய் ஒய்க்ண்ஹய் ஙஹழ்ற்ஹ்ழ்ள்) என்ற நூலில் ராயல் இந்தியன் கப்பற்படையின் 1946 எழுச்சி பற்றிய (கப்பற்படைக் கலகம்) அற்புதமான விவரங்களைத் தருகிறார்.
அத்துடன் அன்றைய மேற்கு வங்க ஆளுநர் பொறுப்பிலிருந்த நீதிபதி பானி பூஷன் சக்ரவர்த்தி, 1956-இல் கல்கத்தாவுக்கு வருகைதந்த சி. ஆர். அட்லியுடன் 1947-இல் இந்தியாவை விட்டு வெளியேற பிரிட்டனை முடிவுசெய்ய வைத்த முக்கிய நிகழ்வுகள் தொடர்பாக நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் பற்றிய விவரங் களையும்சக்ரவர்த்தி இவ்வாறு பதிவு செய்துள்ளார்: நான் அட்லியிடம் காந்தியின் நடவடிக்கைகள் எந்த அளவுக்கு பிரிட்டன் எடுத்த முடிவுகளில் செல்வாக்கு செலுத்தியது? என்று கேட்டேன். இதைக்கேட்ட அட்லியின் உதடுகள் மெல்ல விரிந்து ஒவ்வொரு எழுத்தின்மீதும் அழுத்தம் தந்து மி-னி-ம-ல் (மிகக்குறைவாக) என்றன.
மகாத்மா காந்தி வகித்த பாத்திரமும், அவரது ஒத்துழையாமையும், அவரது சட்டமறுப்பு மற்றும் சத்தியாக்கிரகமும், அஹிம்சை பற்றிய அவரது மகத்தான நம்பிக்கையும்- அதேபோல, பண்டித ஜவஹர்லால் நேரு மற்றும் காங்கிரஸ் கட்சியின் தலைவர்களும் தொண்டர் களும் சிறைசென்ற தியாகங்களும் பிரிட்டிஷ் ஏகாதிபத்திய ஆட்சியாளர் களிடம் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை! அவர்கள் புரட்சியைக் கண்டே அதிர்சியடைந்தார்கள். அந்தப் புரட்சி தீவிரவாதம் என்றும், புரட்சி யாளர்கள் தீவிரவாதிகள் என்றும் பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் என்ற இருதரப்பினராலும் அழைக்கப்பட்டன.
இரண்டாம் உலகப்போருக்குப் பிறகு, இந்திய அரசியல் தலைவர்களுக்கு அதிகாரத்தை மாற்றும் பிரிட்டனின் திடீர்முடிவுக்குக் காரணம் பிரிட்டனுக்கு இருந்த நிர்ப்பந்தங்கள் மட்டுமே. மகாத்மா காந்தியின் "வெள்ளையனே வெளியேறு' இயக்கத்தின்போது பிரிட்டிஷ் மற்றும் இந்திய அதிகாரிகளுக்கு எதிராக பெருமளவில் வெடித்தெழுந்த வன்முறை நடவடிக்கைகளின் காரணமாக அவர்கள் அதிர்ச்சியில் உறைந்து போனார்கள்.
இந்திய சுதந்திரப்போராட்ட வீரர்கள்- காங்கிரஸ் அணியினர் உட்பட- அந்த இயக்கத்தின்போது அஹிம்சை என்ற காந்தியின் நம்பிக்கையைப்பற்றிச் சிறிதளவும் கவலைகொள்ளவில்லை. பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் இந்தியாவின் மீதும் அதேபோல பிற காலனியப் பகுதிகள்மீதும் தங்களது கட்டுப்பாட்டை நிலை நிறுத்தப் போதுமான அளவுக்கு மனித ஆற்றலையும், நிதி ஆதாரங்களையும் திரட்ட முடியாத அளவுக்கு அவர்கள் பொருளாதார ரீதியாகவும், இராணுவ ரீதியாகவும் பலவீனமடைந்திருந்தார்கள்.
எனவே அவர்கள் தங்கள் ஆட்சியை நேரடி ஆட்சி என்பதற்குப் பதிலாக வேறு வழிகளில் நடத்த முடிவு செய்தார்கள்.
அவர்கள் தங்களது அதிகாரத்தை காலனி நாடுகளிலுள்ள தங்கள் கூட்டாளி களின் தலைவர்களிடம் ஒப்படைத் தார்கள். இந்தக்கொள்கைதான் மற்ற ஐரோப்பிய ஏகாதிபத்திய சக்தி களாலும்கூட ஆசியாவில்-இந்தோனேஷியாவின் ஹாலாந்து, பெல்ஜியம் நாடுகளிலும், ஆஃப்ரிக்காவில்- காங்கோவிலும் முறையே பின்பற்றப் பட்டன. ஃப்ரான்ஸ் அவ்வாறு செய்யத் தயக்கம் காட்டியது.எனவே அது ஆசியாவில்- இந்தோ சீனாவிலும் (வியட்நாம்) ஆஃப்ரிக்காவில்- அல்ஜீரியா விலும் வருந்தத்தக்க தோல்விகளை அடைந்தது. கிரேட் பிரிட்டனோ அமெரிக்க ஏகாதிபத்தியத்துக்கும், அதனுடைய கார்பரேட்குழுக்களுக்கும் அடிபணிந்து தன்னை மிகவும் ஒரு இளைய கூட்டாளியாக்கிக்கொள்ள ஒப்புக்கொண்டது. இதன்காரனமாக சில ஆண்டுகளுக்குப்பின் பிரிட்டன் அமெரிக்காவின் கைப்பாவை என ஊடகங்களால் அழைக்கப்பட்டது.
அமெரிக்கா, முதலாளித்துவம் மற்றும் ஏகாதிபத்தியத்தின் நலன்களைப் பாதுகாக்கும் உலகப் போலீஸ்காரன் பாத்திரத்தை எடுத்துக்கொண்டது!
1946 கப்பல்படைஎழுச்சியை-படேல் களின் முடக்கும் முயற்சி என அந்த எழுச்சியின் முன்னணித் தலைவர்களில் ஒருவரான மதன்சிங் குறிப்பிட்டார்.
அந்த நாட்களை, வீரம் செறிந்த நாட்கள் என 2007 ஜனவரி 23-இல் இந்துஸ்தான் டைம்ஸ்ன் விஷால் பரத்துக்கு அளித்த நேர்காணலில் அவர் வர்ணித்தார்.
1946 பிப்ரவரி 19 அன்று ராயல் இந்தியன்நேவி போர்க்கப்பலின் வீரர்கள் பிரிட்டிஷ் பேரரசுக்கு எதிராக புரட்சி செய்து போர்க்கப்பலின்மீது இந்திய தேசியக் கொடியை ஏற்றினர். அத்துடன் உடனடியாக அணிவகுத்த துருப்புக்கள் பம்பாயின் தெருக்களில் ஊர்வலம் நடத்தினர். மக்களை அந்த மாபெரும் போராட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுத்தனர். மேலும் போர்க்கப்பலின் கம்பியில்லாத்தந்தி அமைப்பு புரட்சிகரப் பாடல்கள் கவிதைகள் கலந்த புரட்சி செய்தியைப் பரப்பின. நாடு முழுவதும் புரட்சி நீடூழி வாழ்க என்ற முழக்கத்தை எதிரொலித்தது.