1991-இல் உத்தரப்பிரதேசத்தில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தலைவர் கல்யாண் சிங் முதல்வரானார்.
அவர் பதவியேற்றதும், மசூதிக்கு எதிரே 2.77 ஏக்கர் நிலத்தை சுற்றுலா மேம்பாட்டுக்காக கையகப்படுத்தினார்.
ராம் கதா பூங்காவுக்காக கையகப் படுத்தப்பட்ட 42 ஏக்கர் நிலம் குத்தகை அடிப்படையில் விசுவ இந்து பரிஷத்துக்கு வழங்கப்பட்டது.
பழைய சிவில் வழக்குகளில், அரசின் அறிவுரைகளின் அடிப்படையில், மாற்றப்பட்ட உண்மைகளுடன் அதிகாரிகள் புதிய பிரமாணப் பத்திரங்களை தாக்கல் செய்யத் தொடங்கினர்.
சுற்றுலா துறைக்காக மசூதி எதிரே கையகப்படுத்தப்பட்ட நிலத்தில் கோவில் கட்டும் பணியைத் தொடங்க வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ். விரும்பியது. கட்டுமானத்துக்காக கற்கள் செதுக்கப்பட்டன.
ஆனால் அந்த இடத்தில் நிரந்தரக் கட்டுமானம் எதையும் செய்யக் கூடாது என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அந்த உத்தரவு இருந்தபோதிலும், ஜூலை மாதம் கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டது. அப்போது உச்சநீதிமன்றம் தலையிட்டது. நரசிம்ம ராவ் அரசு இந்து சாதுக்கள் மற்றும் துறவிகளை கஷ்டப்பட்டு சமாதானப் படுத்தி கட்டுமானப் பணிகளை நிறுத்தியது.
மீண்டும் 1992 டிசம்பரில், கரசேவை அறிவிக்கப்பட்டது. அடையாளபூர்வ மான கரசேவையால் மசூதிக்கு எந்த சேதமும் ஏற்படாது என்று கல்யாண் சிங் அரசும் விசுவ இந்து பரிஷத் தலைவர்களும் உச்சநீதிமன்றத்தில் வாக்குறுதி அளித்தனர்.
பலப்பிரயோகம் செய்யக் கூடாது என்று காவல் துறையினருக்கு கல்யாண் சிங் எச்சரிக்கை விடுத்திருந்தார். மத்திய பாதுகாப்புப் படையினரின் உதவியைப் பெறுவதற்கு கூட, மாவட்ட நிர்வாகத்தை அவர் அனுமதிக்க
1991-இல் உத்தரப்பிரதேசத்தில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தலைவர் கல்யாண் சிங் முதல்வரானார்.
அவர் பதவியேற்றதும், மசூதிக்கு எதிரே 2.77 ஏக்கர் நிலத்தை சுற்றுலா மேம்பாட்டுக்காக கையகப்படுத்தினார்.
ராம் கதா பூங்காவுக்காக கையகப் படுத்தப்பட்ட 42 ஏக்கர் நிலம் குத்தகை அடிப்படையில் விசுவ இந்து பரிஷத்துக்கு வழங்கப்பட்டது.
பழைய சிவில் வழக்குகளில், அரசின் அறிவுரைகளின் அடிப்படையில், மாற்றப்பட்ட உண்மைகளுடன் அதிகாரிகள் புதிய பிரமாணப் பத்திரங்களை தாக்கல் செய்யத் தொடங்கினர்.
சுற்றுலா துறைக்காக மசூதி எதிரே கையகப்படுத்தப்பட்ட நிலத்தில் கோவில் கட்டும் பணியைத் தொடங்க வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ். விரும்பியது. கட்டுமானத்துக்காக கற்கள் செதுக்கப்பட்டன.
ஆனால் அந்த இடத்தில் நிரந்தரக் கட்டுமானம் எதையும் செய்யக் கூடாது என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அந்த உத்தரவு இருந்தபோதிலும், ஜூலை மாதம் கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டது. அப்போது உச்சநீதிமன்றம் தலையிட்டது. நரசிம்ம ராவ் அரசு இந்து சாதுக்கள் மற்றும் துறவிகளை கஷ்டப்பட்டு சமாதானப் படுத்தி கட்டுமானப் பணிகளை நிறுத்தியது.
மீண்டும் 1992 டிசம்பரில், கரசேவை அறிவிக்கப்பட்டது. அடையாளபூர்வ மான கரசேவையால் மசூதிக்கு எந்த சேதமும் ஏற்படாது என்று கல்யாண் சிங் அரசும் விசுவ இந்து பரிஷத் தலைவர்களும் உச்சநீதிமன்றத்தில் வாக்குறுதி அளித்தனர்.
பலப்பிரயோகம் செய்யக் கூடாது என்று காவல் துறையினருக்கு கல்யாண் சிங் எச்சரிக்கை விடுத்திருந்தார். மத்திய பாதுகாப்புப் படையினரின் உதவியைப் பெறுவதற்கு கூட, மாவட்ட நிர்வாகத்தை அவர் அனுமதிக்கவில்லை. அதன்பிறகு டிசம்பர் 6-ஆம் தேதி நடந்த சம்பவங்கள் வரலாற்றுப் பதிவுகளில் இடம் பெற்றுவிட்டன. எல்.கே. அத்வானி, ஜோஷி, சிங்கால் போன்ற உயர் தலைவர்கள் மற்றும் உச்சநீதிமன்ற பார்வையாளராக நியமிக்கப்பட்டிருந்த மாவட்ட நீதிபதி தேஜ் சங்கர் மற்றும் காவல் துறையினரின் முன்னிலையில் லட்சக்கணக்கான கரசேவகர்கள் திரண்டு டிசம்பர் 6-ஆம் தேதி மசூதியின் ஒவ்வொரு செங்கல்லையும் இடித்து, இடிபாடுகளின் மீது தற்காலிக கோவிலையும் உருவாக்கினர்.
முன்பைப் போலவே நீதிமன்றம் நியமித்த பார்வையாளரின் முன்னிலையில் பக்தர்கள் வருகையும் பூஜைகளும் தொடங்கின. மத்திய அரசின் திறமை யின்மை என்றும், மறைமுகமாக இந்து குழுக்களுக்கு ஆதரவாக நடந்து கொண்டது என்றும் முஸ்லிம்கள் குற்றஞ்சாட்டினர். ஆனால் அரசியல் சாசனத்தின் படி சட்டம் ஒழுங்கை பராமரிக்க வேண்டியது மாநில அரசின் பொறுப்பு என்றும், அந்த விதிமுறைகளின்படி மத்திய அரசு செயல்பட்டது என்றும் பிரதமர் கூறினார். மீண்டும் மசூதியை கட்டித் தருவதாக அவர் வாக்குறுதி அளித்தார்.
மசூதி இடிக்கப்பட்ட சில தினங்களில், அரசு நிலம் கையகப்படுத்தியதை சட்ட விரோதம் என்று 1993 ஜனவரி யில் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. சர்ச்சைக்கு நிரந்தரத் தீர்வு காணும் நோக்கத்துடன், சர்ச்சைக்குரிய வளாகம் மற்றும் அதைச் சுற்றியுள்ள நிலம் உள்ளிட்ட பகுதிகள் அடங்கிய 67 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த மத்திய அரசு நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றியது.
உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த வழக்குகள் முடிவுக்கு வந்தன. சர்ச்சைக்குரிய இடத்தில் பழைய இந்துக் கோவில் எதையாவது இடித்துவிட்டு பாபர் மசூதி கட்டப் பட்டதா என்பது பற்றி கருத்து தெரிவிக்குமாறு உச்சநீதிமன்றத்தில் கேட்டுக்கொள்ளப்பட்டது. அந்த வகையில் அந்த நிலம் தொடர்பான சர்ச்சையின் வரம்பு குறைக்கப்பட்டது.
தீர்ப்பு யாருக்குச் சாதகமாக அமைந் தாலும், அந்தத் தரப்பினருக்கு வழிபாட்டுத் தலம் கட்டுவதற்கு, பிரதான பகுதி அளிக்கப்படும் என்பதாக புதிய சட்டம் இருந்தது. மற்றொரு தரப்பினர் தங்கள் வழிபாட்டுத் தலத்தைக் கட்டிக் கொள்ள, பிரதான வளாகத்தில் இருந்து சற்று தள்ளியிருக்கும் இடம் வழங்கப்படும். இரு வழிபாட்டுத் தலங்களுக்கும் தனித்தனி அறக் கட்டளைகள் உருவாக்கப்படும். பயணிகளுக்கான வசதிகள் உருவாக்கப்படும். மத்திய அரசின் மேற்பார்வை அதிகாரியாக பைசாபாத் ஆணையாளர் நியமிக்கப்பட்டார்.
ஆனால் மசூதி கட்டப்படுவதற்கு முன்பு அங்கு இந்துக் கோவில் இருந்ததா என்ற கேள்விக்குப் பதில் அளிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.
அதுகுறித்த தகவலை உறுதிப்படுத்த முடியவில்லை என்று நீதிமன்றம் தனது தீர்ப்பில் கூறியது.
இரு தரப்பினரும் நீதிமன்ற நடைமுறைகள் மூலமாக பிரச்சினையைத் தீர்த்துக் கொள்வதற்காக, வழக்குகளை உயர்நீதிமன்றத்துக்கே உச்சநீதிமன்றம் திருப்பி அனுப்பியது.
பாபர் மசூதிக்கு அடியிலும், ராமர் பீடம் அமைக்கப்பட்ட இடத்திற்கு அடியிலும் தோண்டி ஆய்வு செய்யுமாறு தொல்லியல் பாதுகாப்புத் துறையை உயர்நீதிமன்றம் கேட்டுக்கொண்டது. இதற்கு கணிசமான கால அவகாசம் ஆகிவிட்டது. ஆனால் வட இந்தியக் கோவில்களில் உள்ளதைப் போன்ற கட்டுமானங்களின் மிச்சங்கள் சிலவற்றை தாங்கள் கண்டறிந்ததாக தொல்லியல் பாதுகாப்புத் துறை அறிக்கை சமர்ப்பித்தது. அதன் அடிப்படையில், அந்த இடத்தில் ராமர் ஆலயம் இருந்தது என்று இந்து அமைப்பினர் உரிமை கோரினர். ஆனால் அதுபோன்ற குழப்பங்கள் ஏற்கத்தக்கவை அல்ல என்று மற்ற வரலாற்றாளர்கள் கூறினர்.
நீண்டகால விசாரணைகளுக்குப் பிறகு, சாட்சி அறிக்கைகள் மற்றும் ஆவண ஆதாரங்களை ஆய்வு செய்தபிறகு 2010 செப்டம்பர் 30-இல் அலகாபாத் உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. சந்தர்ப்ப ஆதாரங்கள் பலவற்றை ஆய்வு செய்ததன் அடிப்படையில், மசூதியின் மையப் பகுதிக்கு கீழே உள்ள பகுதி தான் ஸ்ரீராமச்சந்திரர் பிறந்த இடமாக இருக்க வேண்டும் என்று மூன்று நீதிபதிகளும் ஒப்புக் கொண்டனர். ஆனால் அந்த நிலத்தின் உரிமைக்கு யாரிடமும் வலுவான ஆதாரம் எதுவும் இல்லை.
நீண்டகாலமாக பராமரித்து வந்த அடிப்படையில் அந்த நிலம் மூன்றாகப் பிரிக்கப்பட்டு, பகவான் ராமர், நிர்மோஹி அகாரா மற்றும் சன்னி வக்பு வாரியத்துக்கு அளிக்கப்பட்டது. கிராமப்புற பஞ்சாயத்தின் தீர்ப்பைப் போல உள்ளது என்று அந்தத் தீர்ப்பு விமர்சனத்துக்கு ஆளானது. சர்ச்சையில் தொடர்புடைய அனைத்து தரப்பினரும் அந்தத் தீர்ப்பை நிராகரித்தனர்.
இப்போது சுமார் பத்தாண்டுகளுக்குப் பிறகு, இந்த விஷயத்தில் உச்சநீதிமன்றம் இறுதித் தீர்ப்பு வழங்கியுள்ளது.
அயோத்தி வழக்கில், உச்சநீதிமன்றம் தெளிவான ஆதாரங்களின்படியே, தீர்ப்பு வழங்கியுள்ளதாக நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்படி, நீதிமாறாதன்மை, சகோதரத்துவம், கண்ணியம் மற்றும் மத நம்பிக்கைகள் மீதான சமத்துவத்தின் அடிப்படை யிலேயே இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ள தாக நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
தீர்ப்பின் சாராம்சங்கள்
சர்ச்சைக்குரிய இடமாக கருதப்படும் பகுதி ஒரு முழு பகுதியாகும். இதில் எவ்வித உட்பிரிவுகளோ இல்லை.
சன்னி வக்பு வாரியம், இந்த வழக்கில், முழு அர்ப்பணித்தன்மையுடன் செயல்படவில்லை.
சன்னி வக்பு வாரியம் தாக்கல் செய்திருந்த மற்றொரு மனுவில், பாதகமான உடைமைகள் குறித்து எவ்வித தகவலும் இல்லை.
சர்ச்சைக்குரிய இடத்தின் வெளிப்புற சுற்றுப்பகுதியில் இந்துக்கள் செல்ல அனுமதி வழங்கப்பட்டது முதல் அவர்கள் அங்கு தொடர்ந்து வழிபாடு நடத்தவும் அனுமதி அளிக்கப் பட்டிருந்தது.
உட்புற சுற்றுப்பகுதி விவகாரத்தில் தான், இந்துக்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் இடையே ஒரு முரண்பாடான நிலை நிலவிவந்தது.
1992 டிசம்பர் 6-ஆம் வரை, மசூதி இருந்ததாக கூறப்படும் இடத்தில் எவ்வித மாற்றங்களும் நிகழ்த்தப்படவில்லை. அதுபோல, அந்த மசூதியில், இஸ்லாமியர்கள் நடைபெற்று வந்த எந்தவொரு காரியங்களும் கைவிடப் படவில்லை.
1934-ஆம் ஆண்டில் மசூதி சேதமுற்றி ருந்தது. 1949-ஆம் ஆண்டு சேதம் சரிசெய்யப்பட்டிருந்தது. 1992-ஆம் அது முழுமையாக இடித்து தள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்துக்கள், சர்ச்சைக்குரிய இடத்தின் வெளிப்புற பகுதியில், ராமர் உள்ளிட்ட இந்து கடவுள் சிலைகளை வைத்து வழிபாடு நடத்தி தங்களது மத சம்பிர தாயங்களை முன்வைத்துள்ளனர்.
சர்ச்சைக்குரிய இடத்தின் உட்புறத்தில் உள்ள 3 குவிமாடங்கள் அமைந்துள்ள பகுதியில் வழிபாடு நடத்த இந்துக்கள் வலியுறுத்தி வந்தனர். இதற்கு, இஸ்லாமியர்கள் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.
மசூதி கட்ட 5 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட வேண்டும். இவ்வாறு உச்ச நீதிமன்றம் இறுதி தீர்ப்பளித்தது.