சமூகத்தில் ஊடகங்களின் பங்கு என்பது தகவல் தெரிவிக்கவும், கற்பிக்கவும், பொழுதுபோக்கவுமான ஒரு வழிமுறை என்று பாரம்பரியமாகக் கருதப்படுகிறது.
அச்சு ஊடகங்களும் வானொலிலியும் மட்டுமே இருந்தபோது அல்லது தொலைக்காட்சி அவற்றுடன் இணைந்தபோது, ஊடக நிறுவனங் களின் கவனமும் நோக்கமும் வெளிநபர்களின் கண்ணோட்டமும் ஒரே மாதிரியாக இருந்தன. அதாவது, பார்வையாளர்களை பொறுத்து, வெவ்வேறு வழிகளில் தகவல் தெரிவிக்கவும், கற்பிக்கவும், பொழுதுபோக்கவும் ஊடகங்கள் உள்ளன. ஊடகங்களின் இடம் மற்றும் பங்கு குறித்த மனித சமுதாயத்தின் வழக்கமான புரிதலிலும் மதிப்பீட்டிலும் தவறில்லை. உண்மையில், அவை அப்படித்தான் இருக்க முடியும். ஆனால் வழக்கமான அணுகுமுறைகளும் புரிதல்களும் உள்ளடக்கத் தெரிவு மற்றும் பகிர்வின் பிற சாத்தியமான முறைகளையும் அந்த உள்ளடக்கத்தைப் பரப்புவதற்கான தளங்களையும் கொண்டிருக்கவில்லை அல்லது கணக்கில் கொள்ளவில்லை.
தகவல்களைப் பரப்புவதைப் பொறுத்தவரை சமகால மற்றும் நிகழ்காலச் சூழலுக்குச் செல்வதற்கு முன், ஊடகங்களின் செயல்பாடு மற்றும் பங்களிப்பில் மாற்றங்களுக்கு வழிவகுப்பது 21-ஆம் நூற்றாண்டின் தொழில்நுட்ப முன்னேற்றங்கள் மட்டுமே அல்ல என்பதை நினைவில் கொள்வது நல்லது. உண்மையில், அந்தந்தக் காலத்துத் தொழில்நுட்பத் தைப் பயன்படுத்தி தகவல்களையும் செய்திகளையும் மக்கள் காலங்கால மாகப் பரப்பியும் அறிந்தும் வருகின்றனர்.
சமூகங்களில் மனிதர்கள் குடியேறத் தொடங்கியதிலிருந்து இது தடையின்றி நடந்து வருகிறது. செப்புத் தகடுகள் அல்லது ஓவியங்களைப் பயன்படுத்திய போதும், மையும் காகிதமும் கண்டுபிடிக்கப்பட்ட போதும், புறாக்களின் பயன்பாடு அல்லது அச்சகத்தின் பயன்பாடு அல்லது இணையத்தைப் பயன்படுத்தும் போதும், சமூகங்கள் எப்போதும் தங்களைத் தகவமைத்துக் கொண்டுள்ளன.
அண்மைக் காலங்களில், கடந்த தசாப்தங்களில் அல்லது பிற காலங் களில் என்ன நடந்துள்ளதென்றால், உள்ளடகத்தை உருவாக்குவதற்கும் பரப்புவதற்கும் பல சாத்தியமான வழிமுறைகள் தோன்றியுள்ளன. எனவே, செய்தி அல்லது தகவல்களை உருவாக்குவதற்கும் அதைப் பரப்பு வதற்கும் பல வழிகளில் ஒன்றாக ‘ஊடகம்’ மாறியுள்ளது. நன்மைகள், தீமைகள் என இரண்டையும் இது கொண்டுள்ளது, தகவல்களை உருவாக்குபவருக்கும் அந்தத் தகவலை வாசிப்பவர் அல்லது பயன்படுத்து பவருக்கும் இடையிலான தூரத்தைக் குறைப்பது அல்லது நீக்குவது நேர்மறையானது. டிஜிட்டல் தளங்கள் எந்த சந்தேகமும் இல்லாமல் தூரத்தை எளிதாகத் தகர்த்துவிட்டன. எதிர்மறை என்னவென்றால், அச்சு, மின்னணு அல்லது டிஜிட்டல் தகவல் அல்லது செய்திகள் உருவாக்குதல், திருத்துதல் மற்றும் வெளியிடுதல் ஆகிய நடைமுறைகள் வழியாக தூரம் தகர்க்கப்படுவதில்லை.
எனவே, இந்த ஊடகங்கள், செயற்கை நுண்ணறிவு வலைப்பின்னல்களால் உருவாக்கப்பட்ட மாதிரி வழிமுறைகளைப் பின்பற்றி, பாரம்பரிய ஊடகங்களிலிருந்து வேறுபட்ட ஒன்றுக்கு மதிப்பளிக்கின்றன. அவை 100 விழுக்காடு ஊடாடும் தன்மையை அடைய முயற்சிக்கின்றன. ஒவ்வொரு படியிலும், கவனத்தை ஈர்க்கப் பணம் செலவிடப்படுகிறது. எதிர்காலத்தில் வெகு இயல்பாகவும், அனைத்து நிலையிலும் உரிமைக் குறியீடு இருக்கப்போகிறது. பொழுதுபோக்கு அம்சங்களில் மட்டுமல்ல, ஒவ்வொரு தகவல்துளியிலும். பத்து ஆண்டுகளுக்கு முன், திரட்டிகளை குறிப்பாகப் பொருள் சார்ந்த திரட்டிகளை மக்கள் நேசித்தனர்.
ஆனால் திரட்டிகளின் தேர்வு தனிநபரை பொறுத்தது. தானியங்கி கட்டமைப்பில் கூட, தொகுக்கப்படாத திரட்டிகள் தனிநபரால் முன்கூட்டியே தேர்ந்தெடுக்கப்பட்ட ஆர்வமுள்ள பகுதிகளைச் சார்ந்தது.
இப்போது, ஆர்வமுள்ள பகுதியைத் தேர்ந்தெடுப்பதில் அல்லது ஒரு குறிப்பிட்ட திரட்டியைத் தோந்தெடுப்பதில் மனிதத் தலையீடு தேவைப்படவில்லை; வெறுமனே பிரௌசிங் வரலாறு மற்றும் கிடைக்கக்கூடிய அனைத்துத் தரவு களாலும், திரட்டிகள் தனிநபரின் விருப்பம் எதுவும் இல்லாமலே தனிநபரின் முன் வைக்கப்படுகின்றன. நாம் அனைவரும் அறிந்திருக்கும் விளம்பரங்களுக்கும் இது பொருந்தும். இலக்கு நிர்ணயிக்கப்பட்ட விளம்பரங்கள் ஒரு தசாப்தத்திற்கு முன்பாக இருந்தன. பின்னர் அவை தேர்ந்தெடுக்கப்பட்ட நடவடிக்கையில், குறிப்பிட்ட குழுக்களின் வயது, மதம் அல்லது சமூகம் தொடர்பான குழுக்கள் இலக்கு செல்வாக்கிற்கு முன்னேறின.
ஆனால் இன்று, எதையும் அல்லது யாரையும் குறிவைக்க வேண்டிய அவசியமில்லை. செயற்கை நுண்ணறிவில் இயங்கும் எந்திரங்கள் ஒவ்வொரு வருக்கும் மற்றும் எல்லாவற்றையும் பற்றி அவர்களுக்குத் தேவையான அனைத்துத் தகவல்களையும் கொண்டுள்ளன. சிகிச்சை நெறிமுறைகள், உணவு மற்றும் உடற்பயிற்சி விதிமுறைகள் உள்ளிட்ட தனிப்பயன் கொண்ட சுகாதாரச் சேவைகளை வழங்கும் திசையில் முயற்சிகள் உள்ளன. தனிப்பயன் கொண்ட புத்தகங்கள், தனிப்பயன் கொண்ட கல்வி, தனிப்பயன் கொண்ட மருத்துவம், தனிப்பயன் கொண்ட தகவல்கள், தனிப்பயன் கொண்ட இசை அல்லது சினிமா மற்றும் பிற பொழுதுபோக்குச் சேவைகள் என அனைவரையும் சிறப்புத் தன்மையுள்ள பிரிவுகளில் அல்லது குழப்பம் மற்றும் அழிவின் சுழலுக்குள் தள்ளுவதற்கு எதிர்காலம் காத்திருக்கிறது. இந்தச் செயற்கை நுண்ணறிவு நம்மை எந்தச் திசையில் கொண்டு செல்லும் என்பதைக் காலம்தான் சொல்ல வேண்டும்.
எனவே, கட்டளை விதிகள், தானியங்கி, இயந்திரக்கற்றல், நரம்பியல் வலைப்பின்னல்கள், விரிவான மொழி மாதிரிகள், ஹாலோகிராம்கள், மெய்நிகர் காட்சிகள், மெய்நிகர் உலகங்கள், ஸ்கைநெட் மூலம் திரட்டப்பட்ட புனைகதை, கவிதைகள் ஆகியவற்றால் முற்றிலும் இயக்கப்படும் ஒரு சமூகத்தில் ஊடகங்களின் பங்கு என்னவாக இருக்கும்? மக்களின் உணர்வு மற்றும் கருத்துக்கு மாறாக, ஊடக நிறுவனங்கள் செய்திகளுக்கு வரும்போது, செயற்கை நுண்ணறிவு ஒரு சக்திவாய்ந்த கருவியாக மாறியுள்ளது. எந்திரக்கற்றல் அடிப்படையிலான பரிந்துரை அமைப்புகளால் அதிகாரமளிக்கப்பட்ட, செய்தி மற்றும் ஊடக நிறுவனங்கள் நிகழ்நேரத்தில் அதிக அளவிலான தரவைக்கொண்டு உண்மையைச் சரிபார்க்கவும் ஒப்பிட்டுச் சரிபார்க் கவும் முடியும். இது மனித அளவில் சாத்தியமில்லாத ஒன்று. மேலதிக மாகவும் எந்த சந்தேகமும் இல்லாமலும், செயற்கை நுண்ணறிவு இதழியலுக்கு ஓர் அளவுகோலை அமைக்கிறது. மேலும் அதிக அளவிலான தரவுகளை உருவாக்குதல், துல்லியமான டிஜிட்டல் கதைசொல்லல் மூலம் ஊடக நிறுவனங் களுக்கு செயற்கை நுண்ணறிவு பயனளிக்கிறது. விரிவான மொழி மாதிரிகளால் இயக்கப்படும் இத்தகைய துல்லியம் மற்றும் வெளிப்பாடு மனித ஊடகவியலாளர்களுக்குப் பொருந்துவது மிகவும் கடினம்.
செயற்கை நுண்ணறிவு இதழியல் காரணமாக செய்திகளின் தானியங்கி உருவாக்கம் மற்றும் வடிவ அங்கீகாரத் தைப் பயன்படுத்தி நிகழ்நேரத்தில் அதிக அளவிலான தரவுகளை வேகமாகத் தேடுவது, குறிப்பிட்ட கட்டளை விதிகளைப் பயன்படுத்தி அவற்றை மனிதனால் படிக்கக்கூடிய வகையில் ஒழுங்குப்படுத்துவது ஆகியவை ஊடக நிறுவனத்திற்கு ஒரு பெரிய வெற்றியாக இருக்கும். தரவு இதழியல், அல்காரிதம் இதழியல், ஆட்டோமேட்டிக் இதழியல் ஆகியவை எதிர்கால இதழியலின் முக்கியமான அம்சங்களாக இருக்கும். செயற்கை நுண்ணறிவால் இயக்கப்பட்ட தரவு லேபலிங், தரவுக் குறிப்பு ஆகியவை செய்தி இடுகைகளை நம்பகமானதாகவும், எளிதாக மீட்டெடுக்கக் கூடியதாகவும், எதிர்காலப் பயன்பாட்டிற்கு வரிசைப்படுத்தக் கூடியதாகவும் மாற்றப் போகின்றன. இது ஊடக நிறுவனங் களுக்கு மட்டுமல்ல, வாசகர்களுக்கும் கிடைத்த வெற்றி. எனவே, உடனடியாக இல்லையென்றாலும் காலப்போக்கில் உண்மையை மறைக்கும் பிரச்சாரத்திற்கு செயற்கை நுண்ணறிவு நிச்சயம் முற்றுப்புள்ளி வைக்கும். வாசகர்கள் தானியத்திலிருந்து பதர்களைப் பிரிக்க முயற்சிக்கும் தடுமாற்றத்தில் விடப்படும் அவசியம் இருக்காது.
செய்தி தொடர்பான உள்ளடக்கங்களில் மட்டுமின்றி, இசை, பொழுதுபோக்கு, புத்தக வெளியீடு போன்ற தொடர் புடைய துறைகள் மிகவும் திறமையான செயற்கை நுண்ணறிவுக் கருவிகளால் ஊக்குவிக்கப்படுகின்றன. ஆழக் கற்றல் உருவாக்க மாதிரிகள் ஏற்கனவே இசைப் பதிவுகளை ஏற்பாடு செய்வதிலும் விநியோகிப்பதிலும் புரட்சியை ஏற்படுத்துகின்றன. மேலும் அந்த மாதிரிகள் முடிவுகளை உருவாக்க, பாணிகள், மொழிகள் மற்றும் நேரத்தை அணுகுவதால் தனிப்பயன் கொண்ட இசை ஏற்கனவே வெற்றி பெற்றுள்ளது. இதே போல், தயாரிப்பு, உள்ளடக்க ஆய்வு, விநியோகம் போன்ற பழங்காலத் தலைவலிகளைப் போக்க செயற்கை நுண்ணறிவு உறுதியளிக்கிறது. டிஜிட்டல் கதை சொல்லல் ஊடகத்துறையின் எதிர்காலமாக இருக்கலாம் என்றாலும் முற்றிலும் தானியங்கிப் புத்தக வெளியீடு ஏற்கனவே நடந்து வருகிறது. மேலும் தொழில்நுட்ப திறன் கொண்ட கருவிகளால் இயக்கப்படும் பதிப்பகங்கள் எதிர்காலத்தில் சக்திவாய்ந்ததாக இருக்கப் போகின்றன.
வடிவமைப்பு அறிதல், பேச்சிலிருந்து எழுத்துத் தொகுப்பு, எழுத்திலிருந்து பேச்சுத் தொகுப்பு, உள்ளடக்கத் தொகுப்பு, சைகை மொழியால் இயக்கப்பட்ட எழுத்துரு, பட விளக்கம், தானியங்கி துணைத்தலைப்பு ஆகியவை மெதுவாக ஆனால் நிச்சயமாக ஊடக நிறுவனங்களுக்கான காட்சிக் கலைகள், திரைப்படத்துறை மற்றும் குரல் காட்சிக் கூறுகளில் புரட்சியை ஏற்படுத்துகின்றன. ‘ஒரு ரோபோ இந்த முழுக்கட்டுரையையும் எழுதிவிட்டது. நீ இன்னும் பயப்படுகிறாயா, மனிதா?’ என்று மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தி கார்டியன் பத்திரிகையில் வெளியான இந்தச் செய்தியை மக்கள் நினைவில் வைத்திருப்பார்கள். மூன்று ஆண்டுகளில் எவ்வளவோ மாற்றங்கள் ஏற்பட்டுவிட்டன. செயற்கை நுண்ணறிவால் இயக்கப்பட்ட ஊடகத்துடன் சில கவலைகள், சிக்கல்கள் மற்றும் பிரச்சினைகள் உள்ளன. அவற்றில் சிலவற்றுக்குத் தற்போது தெளிவான மற்றும் நேரடியான பதில்கள் இல்லை.
உள்ளடக்க உருவாக்கிகள் மற்றும் திரட்டிகள் ஊடக நிறுவனங்களுக்கு உள்ளடக்க சரிபார்ப்பு மற்றும் உண்மை சரிபார்ப்கை எளிதாக்கும் கருவிகளாகும். ஆனால் இதே கருவிகள் தவறான தகவல்களைப் பரப்ப விரும்புவோராலும் பயன்படுத்தப்படுகின்றன. இந்த மக்கள் குழுக்களுக்கான நன்மை என்னவென்றால், அனைத்தும் வரலாற்றின் மூலம் பதிவு செய்யப் படவில்லை. மேலும் மனித வெளிப்பாட்டின் பெரும்பகுதி இன்னும் உலகளாவிய வலைத்தளங்களின் (ஜ்ஜ்ஜ்) வழியாக வரவில்லை. நிச்சயமாக, தானியங்கி உருவாக்கிகள் மற்றும் பரிந்துரைகள் தற்போது பயனுள்ளதாக இருக்கின்றன. எதிர்காலத்திலும் அப்படித்தான் இருக்கப் போகின்றன. ஆனால் ஊடக நிறுவனங்கள் முழுமை யாக உறுதியுடன் அவற்றை நம்பக்கூடிய காலம் மிக நீண்டதாக இருக்கும். வடிவ அங்கீகாரம் மற்றும் முக அங்கீகாரக் கருவிகள் பாதுகாப்பு மற்றும் தனியுரிமை விஷயங்களில் பெருமளவு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. ஆனால் அனைத்தும் மோசமான வழியில் இல்லை. இந்தச் செயல்பாட்டில் மனிதர்களும் நிறைய கற்றுக் கொண்டுள்ளனர். இது மனிதர்களின் அறிவாற்றல் திறன்களைப் பற்றிய சிறந்த புரிதலுக்கும் (முழுமையானதாக இல்லாவிட்டாலும்) வழிவ குத்துள்ளது. ஆனால் விஷயம் என்னவென்றால், இந்த செயற்கை நுண்ணறிவுக் கருவிகள் உறுதித்தன்மையிலிருந்து வெகு தொலைவில் உள்ளன. மேலும் உருவ மாற்றம் செய்வது நிச்சம் கேள்விக்குரிய புள்ளியாகும்.
செயற்கை நுண்ணறிவு மதமொழியைச் செம்மைப்படுத்தலாம்; மனிதர்களால் உருவாக்கப்பட்டதை விட மிகவும் சரியான மதப்பள்ளிகளை உருவாக்கலாம்.
அவை நாத்திகப் பள்ளிகளையும் உருவாக்கலாம். இருப்பினும், மனிதர்கள் என்பவர்கள் ஆர்தர் ஷோபன்ஹோவர் (ஆழ்ற்ட்ன்ழ் நஸ்ரீட்ர்ல்ங்ய்ட்ஹன்ங்ழ்) அழகாகப் படம்பிடித் உபாயங்களின் கடந்த கால எஜமானர்கள், அன்றாட வாழ்க்கையில், குடும்பம் முதல் வேலை இடங்களுக்குச் செல்லும் சாலை வரை மனிதர்களால் பயன்படுத்தப்படும் வழிகளைக் கற்றுக்கொள்வது இயந்திரங்களுக்கு கிட்டத்தட்ட சாத்தியமற்றது. எண்களை வரிசைப்படுத்துவதும் தொகுப்பிலிருந்து எண்களைத் தெரிவு செய்வதும் என்ற கணக்கீடே போதுமானது.
இதே போல், மனித முயற்சியின் துறைகள் மற்றும் பகுதிகளில் சந்தேகங்கள், அனுமானங்கள், கவலைகள், சிக்கல்கள் மற்றும் பிரச்சினைகள் உள்ளன. ஆனால் மனித வாழ்க்கையில் செயற்கை நுண்ணறிவின் செல்வாக்கையும் தாக்கத்தையும் முற்றிலுமாக நிராகரிக்க வேண்டிய அவசியமில்லை.
எனவே, செயற்கை நுண்ணறிவு சகாப்தத்தில் ஊடகங்களைப் பொறுத்தவரை, உறுதியாகக் கூறக் கூடிய ஒரு விஷயம் என்னவென்றால், நாம் ஏற்கனவே செயற்கை ஊடக சகாப்தத்தில் நுழைந்துவிட்டோம். மெய்நிகர்க் காட்சிகள் மற்றும் பிற கருவிகள் இந்த செயற்கை அனுபவத்தை வளப்படுத்தப் போகின்றன. ஏறத்தாழ ஓர் ஒத்திசைவு அனுபவத்தை எல்லையாகக் கொண்டுள்ளன. இது அனைத்து வகையான வெளிப்பாடுகளின் உற்பத்தியாளர்களுக்கும் பயன்படுத்து வோருக்கும் நல்லது என முன்னறிவிப்பு செய்கிறது.