பொருநை ஆற்றங்கரை நாகரிகம்
அண்மையில் சதுர வடிவிலான செங்கல் கட்டுமானம் ஒன்றும் கிடைத்துள்ளது. இச்செங்கற்கள் சங்க காலத்தவை என்று அடையாளங் காட்டுகின்றன. இச்செங்கல் கட்டுமானம் 29 அடுக்குகளைக் கொண்டு 2.35மீ உயரம் கொண்டுள்ளது. இக்கட்டுமானத்தின் நடுவே பெரிய கொள்கலன் ஒன்று தலைகாட்டியுள்ளது. இந்தக் கொள்கலன் தனித்துவமாக இச்செங்கல் கட்டுமானத்தில் வைக்கப்பட்டுள்ளதால் இக்கட்டுமானம் ஒரு சிறப்பான இடத்தைப் பெறுகிறது. இதனின் தரைத்தளத்தில் சுக்கான் பாறைக் கற்களைக் கொண்டு அடுக்கி அதனின் மீது மணல் பரப்பி அதன்மேல் செங்கல் கட்டுமானம் செம்மையாக எழுப்பப்பட்டுள்ளது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/keladi_3.jpg)
இந்தக் கட்டுமானத்திற்குச் சிறப்பு சேர்க்கும் வகையில் இதனருகே துளைகளுடன் கூடிய 9 அடுக்குகளைக் கொண்ட வடிகட்டும் குழாய் ஒன்றும் வெளிப்பட்டுள்ளது. இதனருகே மேற்கத்திய நாட்டு பானையோடுகளும் கிடைத்துள்ளன. கொற்கையில் தற்போது கிடைத்துவரும் தொல்லியல் சான்றுகள் நீண்ட நெடுங்காலமாகத் தமிழகம் பிற நாடுகளுடன் வணிகத்தொடர்பு கொண்டு இருந்தது என்பதையே பறைசாற்றுகிறது.
அண்மையில் கொற்கை அகழாய்வில் கி.மு. 5-ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்ட கங்கைச் சமவெளியைச் சார்ந்த கருப்பு வண்ணப்பூச்சு பெற்ற (Black Slipped ware of Gangetic valley) பானை ஓடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
கொற்கை அகழாய்வுகளில் கிடைக்கப் பெற்றுள்ள வெள்ளி முத்திரைக் காசுகள், வடக்கத்திய மெருகூட்டப்பட்ட கருப்பு நிறப் பானை ஓடுகள் (Northern Black Polished ware),, கங்கைச் சமவெளியைச் சார்ந்த கருப்பு வண்ணப் பூச்சு பெற்றுள்ள பானை ஓடுகள் கிடைக்க பெற்றுள்ளதன் மூலம் தென்னிந்தியாவானது கி.மு. 6-ஆம் நூற்றாண்டிற்கு முன்னரே இந்தியாவின் பல்வேறு பகுதிகளுடன் வணிகத் தொடர்பு கொண்டிருந்தது என்று இந்தியத் தொல்லியல் துறையின் முன்னாள் தலைமை இயக்குனர் முனைவர் ராகேஷ் திவாரி மற்றும் இந்து பனராஸ் பல்கலைக்கழகத்தைச் சார்ந்த பேராசிரியர் ரவிந்திர நாத் சிங் ஆகியோர் கருத்து தெரிவித்துள்ளனர்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/keladi1_2.jpg)
மேலும், இப்பகுதியைச் சுற்றி அதிகளவிலான தொல்லியல் இடங்கள் காணப்படுவது கொற்கைத் துறைமுகம் கி.மு. 8-ஆம் நூற்றாண்டிற்கு முன்னரே நிறுவப்பட்டுள்ளது என்று கருதலாம்.
மேலை நாட்டினருடனும், கீழைநாட்டி னருடனும் இந்தியாவின் பிற பகுதி களுடனும் வணிகத் தொடர்பு கி.மு. 8-ஆம் நூற்றாண்டிற்கு முன்னரே நடைபெற்றிருந்ததைக் கொற்கை அகழாய்வின் காலக் கணக்கீடு உறுதி செய்துள்ளது.
சிவகளைப் பறம்பில் மேற்கொள்ளப் பட்ட அகழாய்வில் ஈமத்தாழி ஒன்றில் சேகரிக்கப்பட்ட நெல்லினைக் காலக் கணக்கீடு செய்ததில் இதனின் காலம் கி.மு. 1155 என்று கண்டறியப்பட்டுள்ளது. எனவே, பொருநை ஆற்றங்கரையில் வாழ்ந்த தமிழ்ச் சமூகத்தினரின் மேம்பட்ட பண்பாடு 3200 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்று உறுதி செய்ய முடிகிறது.
ஆதிச்சநல்லூர் மற்றும் சிவகளையில் கிடைக்கப்பெற்றுள்ள உயரிய வெண்கலம் மற்றும் தங்கத்திலான பொருட்களும், உயரிய சடங்கு முறைகளும் அவர்களின் வளமான பொருளாதாரத்திற்கும் சமூக வாழ்க்கை நிலைக்கும் சாட்சியம் கூறுகின்றன.
ஆதிச்சநல்லூர், கொற்கை, சிவகளை ஆகிய தொன்மை வாய்ந்த ஊர்களைப் பெற்றுள்ள பொருநை ஆற்றங்கரை நாகரிகம் 3200 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்பதை சிவகளை அகழாய்வில் கிடைக்கப்பெற்ற உமி நீங்கிய நெல்லின் வழிப்பெறப்பட்ட காலக் கணக்கீடு நிலை நிறுத்தியுள்ளது.
தனிச் சிறப்பான பிரிவுகளின் மதிப்பு வாய்ந்த பங்களிப்பினை ஆழமாகப் பகுத்தாய்ந்து தொல்லியல் கண்டுபிடிப்பு களை அங்கீகரிக்கும் வகையில் தமிழ்நாடு தொல்லியல் துறையானது தொல்- தாவரவியல், மூலக்கூறு உயிரியல், மக்கள் மரபியல், சுற்றுச்சூழல் தொல்லியல் மற்றும் மொழியியல் தொல்லியல் போன்ற துறைகளின் வல்லுநர்களுடன் இணைந்து பணியாற்றி வருகிறது.
இப்பெரு முயற்சியில், மும்பையிலுள்ள இந்திய புவிகாந்தவியல் நிறுவனம், பெங்களூருவிலுள்ள இந்திய அறிவியல் நிறுவனம், பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் தொலையுணர்வுத் துறை, அண்ணா பல்கலைக்கழகத்தின் தொலையுணர்வு நிறுவனம் மற்றும் இந்திய தொழில்நுட்பக் கழகம், சென்னை போன்ற புகழ்பெற்ற நிறுவனங் களுடன் இணைந்து, தரை ஊடுருவல் தொலையுணர்வு மதிப்பாய்வு (Ground Penetrating Radar), காந்த அளவியல் மதிப்பாய்வு (Magnetometer Survey), ஆளில்லா வான்வழி ஊர்தி மதிப்பாய்வு (Unmanned Aerial Vehicle) போன்ற பல்வகையான தொழில்நுட்பங்களைப் பின்பற்றி அவற்றின் மூலம் தொல்லியல் இடத்தை அடையாளம் காண்பது மற்றும் முறையான தொல்லியல் தளங்கள் மற்றும் அகழாய்வுப் பணிகள் மேற்கொள்வது என சீரிய நடவடிக்கைகளில் தொல்லியல் துறை ஈடுபட்டுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2022-05/keladi-t.jpg)