பெண்களுக்கு அதிகாரமளிப்பது என்பது பின்வரும் ஐந்து அம்சங்களை உள்ளடக்கியதாக கூறலாம். அவை, பெண்களின் சுயமரியாதை உணர்வை மேம்படுத்துதல், சொந்த விஷயங்களில் தங்களின் விருப்பங்களைத் தீர்மானிப் பதற்கான உரிமை, வாய்ப்புகள் மற்றும் வளங்களை அணுகுவதற்கான உரிமை, வீட்டிற்கு உள்ளேயும் வெளியேயும் தங்கள் சொந்த வாழ்க்கையை குறித்து முடிவெடுக்கும் உரிமை மற்றும் சமூக நீதியை உறுதி செய்வதற்கும் சமூக பொருளாதார சமத்துவத்தை உருவாக்குவதற்கும் உகந்த சூழ்நிலை ஏற்படுத்துவதில் பெண்களின் பங்களிப்பாகும்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலி-ன் மதுரை மாவட்டம் பாப்பம்பட்டி ஊராட்சி கிராம சபையில் கலந்து கொண்டு கோடிட்டு காட்டிய கோட்பாடுகள் இக்கொள்கை வகுப்பதற்கான அடிப்படையாக அமைந்தது எனலாம். அதனை இங்கு காணலாம்.
பெண்கள் மற்றும் சிறுமியர்க்கு எதிரான வன்கொடுமைகளைத் தடுப்பது பற்றி பேசும் உலக சுகாதார அமைப்பின் RESPECT FRAME Work -ஐ கொண்டு, சமூகத்தில் பாலின அடிப்படையிலான வன்முறை மற்றும் குடும்பங்களுக்குள் இருக்கும் பலவிதமான வன்முறை சம்பவங்கள் நடைபெறுவதற்கான அடிப்படை காரணிகளை அடையாளம் கண்டு தனிநபர்கள் மற்றும் சமூக அமைப்பு களுடன் கூட்டாக இணைந்து அவற்றை களைவதற்கு அரசு வழிவகுக்கும்.
தொலைநோக்கு பார்வை
பெண்களின் உரிமைகள் பாதுகாக்கப் பட்டு, பெண்கள் அனைத்து சேவைகளை பெற்றிடவும், உரிமைகளை சமமான முறையில் அணுகவும், பாகுபாட்டைக் குறைக்கவும், பெண்களுக்கு எதிரான அனைத்து வகையான வன்முறைகளை தடுத்தும், அவர்களின் திறன் மேம்படவும், கனவுகளை நனவாக்கவும் சமவாய்ப்புகளை தமிழ்நாடு அரசு வழங்கும். இலக்கு
மாநிலத்தின் 3.2 கோடி பெண்களுக்கும் அதிகாரமளிக்கும் வகையில், பாதுகாப்பான, ஆரோக்கியமான மற்றும் தங்கள் குறிக்கோளை அடைவதற்கு முழு உயிர்ப்புடன் கூடிய சூழலை தமிழ்நாடு ஏற்படுத்தும். அனைத்து துறைகளுக்கிடையேயான செயல்பாடுகளை ஒருங்கிணைப்பதன் மூலம், பெண்களுக்கு அதிகாரம் என்ற ஒற்றை இலக்கை நோக்கி இரு பா-லினத்தவர்களையும் உள்ளடக்கிய வளர்ச்சி பாதையில் தமிழ்நாடு பயணிக்கும்.
முக்கிய குறிக்கோள்கள்
இக்கொள்கை ஐந்து வருட காலத்திற்குள் செயல்படுத்தப்படும். இதன் குறிக்கோள்கள் பின்வருமாறு :
வளர் இளம் பருவத்தினரிடையே ஊட்டச்சத்து குறைபாடுகள் மூலம் ஏற்படும் விளைவுகளை செய்வதுடன், இரத்த சோகை மற்றும் குறைந்த எடை போன்ற குறைபாடுகளை பாதியாக குறைப்பது.
ஒரு கோடி பெண்களை சுய உதவிக் குழு அமைப்பிற்குள் கொண்டு வருதல், விரிவான வலையம் (ய்ங்ற்ஜ்ர்ழ்ந்) மற்றும் வழிகாட்டுதல் வாயிலாக தீவிர வழிகாட்டுதல் மூலம் வாழ்வாதார நிலையிலி-ருந்து குறைந்தபட்சம் 1,00,000 வாழ்வாதார அமைப்புகள் நிறுவனங்களாக நிலை உயர்த்தப்படும்.
நகர்ப்புற மற்றும் கிராமப்புறங்களில் பெண்களிடையே டிஜிட்டல் பாலி-ன இடைவெளியைக் குறைக்க இணைய சேவைகள் அதிகரிக்கப்படும்.
தரவு (உஹற்ஹ) அடிப்படையிலான கொள்கை உருவாக்கத்தை எளிதாக்க, அனைத்து அரசுத் துறைகளும் ஆண்டுதோறும் பா-லினம் வாரியாக பிரிக்கப்பட்ட தரவுகள் (உஹற்ஹ) வழங்கும்.
இடைநிலையில் ஒவ்வொரு ஆண்டும் இடைநிற்றல்களை 10% குறைத்தல் மற்றும் மூன்றாம் நிலை சேர்க்கை விகிதத்தை ஒவ்வொரு ஆண்டும் 5% அதிகரித்தல்.
ஒவ்வொரு ஆண்டும் குறைந்தது சமூகத்தின் பின்தங்கிய பிரிவுகளை சார்ந்த 1000 பெண் ஆராய்ச்சியாளர்களுக்கு குறிப்பாக அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணக்கியல் பாடங்களில் (நபஊங) ஆராய்ச்சி மேற்கொள்பவர்களுக்கு ஆதரவு வழங்குதல்.
குடும்ப சூழல் காரணமாக வேலையிலிருந்து நின்ற 10,000 பெண்களுக்கு மீண்டும் வேலையில் இணைவதற்கு வாய்ப்புகள் ஏற்படுத்தப்படும். இவர்களுடைய திறன் இடைவெளியைக் குறைப்பதற்கு பொருத்தமான தொழில்நுட்பப் பயிற்சிகள் மற்றும் விட்ட இடத்தில் மீண்டும் வேலையில் சேர்வதற்கு (lateral entry) தக்க வாய்ப்புகள் ஏற்படுத்தி தருதல்.
மகளிர் வங்கியை நிறுவுவதன் மூலம் கடன் தேவைப்படும் பெண்களுக்கு கடன் கிடைப்பதற்கு வாய்ப்பு ஏற்படுத்துதல். (வாழ்ந்து காட்டு பெண்ணே) அனைத்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கும் தற்காப்புக் கலைபயிற்சி அளிப்பதன் மூலம் பெண்களின் தன்னம்பிக்கையை அதிகரித்தல், பெண்களின் சுய மதிப்பை மேம்படுத்துதல் மேலும், பா-லின சமத்துவத்தை நோக்கி செல்வதற்கு அனைத்து பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பிற நிறுவனங்களில் பா-லின பாகுபாடு இல்லாத நிலையை உறுதிசெய்தல்.
ஆறு மாதங்களுக்கு ஒருமுறை முதலமைச்சருடன் நேரடியாக பேசி (சொல்வதைச் செய்வோம்) திட்டம்) பெண்களின் குறைகளை நிவர்த்தி செய்வதற்கான தளம் அமைத்தல்.
தற்போதைய நிலை
பொருளாதார வளர்ச்சியில் 2006 நிதி ஆண்டு முதல் தமிழ்நாடு சராசரியாக 8.5% நிலையான சீரான வளர்ச்சியுடன் நாட்டிலேயே பொருளாதார வளர்ச்சியில் இரண்டாவது பெரிய மாநிலமாக திகழ்ந்து வருகிறது.
2019-20-ஆம் ஆண்டில் பெண் களுக்கு எதிரான குற்றங்களில் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் ஒரு லட்சம் பெண்களில் 14.6 பெண்கள் ஆவர்.
2019-20-ஆம் ஆண்டு பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டவர்களில் தண்டனை பெற்றவர்களின் சதவீதம் 18.3 என்ற அளவிலேயே உள்ளது.
வரதட்சனை கொடுமை வழக்குகளில் தண்டனை பெறும் சதவீதம் 7.7 என்ற நிலையில் உள்ளது.
கல்வி மற்றும் ஆராய்ச்சி
பாலின ரீதியாக வேறுபடுத்தும் நிகழ்வு களை பள்ளியிலும் இல்லங்களிலும் குறைப்பதன் வாயிலாக மாணவ மாணவியர் எதிர்பாலினருடன் எவ்வித முரண்பாடுகளும் இன்றி கருத்து பரிமாற்றம்

பாலின ரீதியாக வேறுபடுத்தும் நிகழ்வு களை பள்ளியிலும் இல்லங்களிலும் குறைப்பதன் வாயிலாக மாணவ மாணவியர் எதிர்பாலினருடன் எவ்வித முரண்பாடுகளும் இன்றி கருத்து பரிமாற்றம் மூலம் ஒருவரிடமிருந்து மற்றொருவர் கற்றுக்கொள்வது, பெண்ணுரிமைக்கெதிரான மனநிலை மாற்றம் மற்றும் பழைய கண்மூடித்தனமான வழக்கங்களை குறைத்தல் ஆகியவை நிகழும். இதற்கேற்ற வகையில், மாணவ மாணவியர் இருபாலருக்கும் போட்டிகள், கைவேலை, சமையல் திறன் மற்றும் புதுமையான செயல்பாடுகள் ஆகியவை பயிற்றுவிக்க ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும்.
இடைநிலைக் கல்வியி-லிருந்து இடைநிற்கும் மாணவியர் விகிதத்தை ஆண்டுக்கு 10 சதவிகிதம் குறைத்து மேல்நிலைக் கல்வி சேர்க்கையில் 5 சதவீதம் கூடுதலாக மாணவியர் சேர்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும்.
உயர்கல்வி பயில விரும்பும் மாணவியர் களுக்கு வேலைவாய்ப்பிற்கான வழிகாட்டுதல்கள் வழங்கப்படும். ஊரக மற்றும் நகர்ப்புறங்களில் ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் மற்றும் பேராசிரியர்களின் சேவை பெறப்பட்டு எதிர்கால வேலை/தொழில்வாய்ப்புகள் பற்றி விவரங்கள் பகிரப்பட்டு வழிநடத்தப்படும்.
குழந்தை திருமணம் மற்றும் சிறார் களுக்கு எதிரான வன்கொடுமை களை தடுப்பதற்கு, பாதுகாப்பு நடவடிக்கைகள் சரியாக உள்ளது குறித்து தணிக்கைகள் நடத்தப்படும். பள்ளிக்கு செல்லும் வழித்தடங்களில் வன்முறை நடப்பதற்கான வாய்ப்புகள்/ அச்சுறுத்தல்கள் இருப்பின் அவற்றை களைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
பெண் ஆராய்ச்சியாளர்களுக்கு உதவும் வகையில் கடன் வசதி, அறிவுசார் சொர்துரிமை மற்றும் காப்புரிமை பெறும் வசதி மற்றும் தமது ஆராய்ச்சியை வணிக தயாரிப்புகளாக மாற்றும் வசதி ஆகியவை வழங்கப்படும்.
பள்ளி மற்றும் கல்லூரிகளில் மாணவியர் களுக்கு தற்காப்புக் கலை பயிற்சி கட்டாயமாக்கப்படும்.
பெண்ணியம் சார்ந்த துறைகளில் ஆராய்ச்சி மேற்கொள்கின்ற பெண் ஆராய்ச்சியாளர்களுக்கு கூடுதல் ஆதரவு வழங்கப்படும். தொழிற்பயிற்சி மற்றும் தொழில்நுட்ப பயிற்சி தேர்ச்சி பெற்ற மாணவியர்களுக்கு தொழில் பழகுனர் (ஆல்ல்ழ்ங்ய்ற்ண்ஸ்ரீங்ள்ட்ண்ல்) பயிற்சிக்கு இணைமானியம் மாநில அரசால் வழங்கப்படும்.
பள்ளி பாடத்திட்டங்களில் தொழிற் திறன்கள் குறித்து பயில திட்டமிடப்பட்ட நிகழ்வுகள் நடத்தப்படும்.
கணினி மற்றும் இணையதள சேவை குறித்த அறிவினை (உண்ஞ்ண்ற்ஹப் ப்ண்ற்ங்ழ்ஹஸ்ரீஹ்) மேம்படுத்த கிராமப்புறங்களில் உள்ள சமுதாய வளபயிற்றுனர்கள் (ஈதட/ஈடஈ) மூலம் சமூக ஊடகம் முதல் இணையதளங்கள் கையாள்வது குறித்த (ள்ர்ஸ்ரீண்ஹப் ம்ங்க்ண்ஹ ற்ர் ண்ய்ற்ங்ழ்ய்ங்ற் க்ஷழ்ர்ஜ்ள்ண்ய்ஞ்) பயிற்சிகள் வழங்கப்படும்.
சுகாதாரம், தூய்மை மற்றும் ஊட்டச்சத்து
பள்ளி மற்றும் கல்லூரிகளில் பெண்களுக்கான வருடாந்திர கட்டாய உடல்நல பரிசோதனை நடத்தப்படும். இதில் இரத்தப் பரிசோதனைகள் (இரத்த சோகை), புற்றுநோய் மற்றும் தொற்றற்ற நோய்கள், மாதவிடாய் மற்றும் பெண் உடல் சார்ந்த பிரச்சினைகள் போன்ற சோதனைகள் அடங்கும்.
பெண்கள் வேலை செய்யும் இடங்களில் சுகாதார அணையாடை (ய்ஹல்ந்ண்ய்) வழங்கும் இயந்திரங்கள், எரியூட்டிகள், குப்பைத் தொட்டிகள், கழிவு காகிதம் போன்ற வசதிகள் வழங்கப்படும்.
அனைத்து பொது இடங்கள், அரசு அலுவலகங்களில் பெண்களுக்கு உகந்த கழிப்பறை வசதிகள் வழங்கப்படும். துப்பட்டா/பையை வைத்திருப்பதற்குத் தேவையான கொக்கிகள், நாப்கின்கள் வைக்க இடம் மற்றும் செயல்படும் தாழ்ப்பாள் ஆகியவற்றைக் கொண்ட கழிப்பறைகள் அமைக்கப்படும்.
நலவாழ்வு மற்றும் சுகாதார பணியாளர்கள் மற்றும் நோயாளிகளை பராமரிப்பவர்கள், உடல்நலக்குறைவால் பாதிக்கப்படுவதற்கு இருமடங்கு அதிக வாய்ப்புள்ளது. நிறைவு செய்யப்பட்ட ஒவ்வொரு ஆறு மாதசேவைக்கு ஒரு வாரம் கட்டாய விடுப்பு எடுக்க அவர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.
சுகாதார சீர்முறைகள்/நெறிமுறைகள் (டழ்ர்ற்ர்ஸ்ரீர்ப்ள்) குறித்த அறிவை வல்லுநர்களிடையே மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். அவர்களின் தனித்துவமான சிக்கல்கள் மற்றும் இடர்பாடுகள் தீர்க்கப்படும்.
பா-லின விகிதத்தை மாற்றும் பாலி-னத் தேர்வு, கருக்கொலை, சிசுக்கொலை ஆகியவை நடைபெறும் இடங்களை அடையாளம் கண்டு அவ்விடங்களில் துரித நடவடிக்கைகள் மேற்கொள்ளும்.
தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம், 2013-ன்படி, அதிக ஊட்டச்சத்து குறைபாடுகள் உள்ள குடும்பங்களுக்கு குறிப்பாகச் பெண்களுக்கும் குழந்தை களுக்கும் அதிக ஊட்டச்சத்து மற்றும் பாதுகாப்பான உணவு கிடைத்திட ஏதுவாக கூடுதல் பருப்பு வகைகள், சிறுதானிய வகைகள் (ம்ண்ப்ப்ங்ற்ள்), வெல்லம் போன்றவை பொது விநியோக முறை (டஉந) மூலம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இளம்பருவப் பெண்களின் ஊட்டச்சத்து மற்றும் சுகாதார நிலையை மேம்படுத்துவதில் சிறப்பு கவனம் செலுத்தப்படும். குடும்பத்திற்குள் பெண்களுக்கான ஊட்டச்சத்து பாகுபாட்டை முடிவுக்குக் கொண்டுவர பொருத்தமான உத்திகள் வகுக்கப்படும்.
முதியோர் பராமரிப்பு (ஏங்ழ்ண்ஹற்ழ்ண்ஸ்ரீ ஸ்ரீஹழ்ங்) வயதானவர்களில் குறிப்பாக பெண்கள் மிக அதிகமாக பாதிக்கப்படக்கூடிய நிலையில் உள்ளார்கள். மூத்த குடிமக்கள் மீதான தேசியக் கொள்கை 2011-க்கு இணங்க, முதியோர் உடல்நலப் பாதுகாப்பில் சிறப்பு கவனம் செலுத்தப்படும். நோய்த்தடுப்பு, சிகிச்சை மற்றும் மறு-நலவாழ்வு உள்ளிட்ட முதியோர் சேவைகள் பொருத்தமான அரசு மற்றும் பொது-தனியார் மூலம் பலப்படுத்தலாம்.
முதியோர்களுக்கு தேவையான உணர்வுபூர்வமான மற்றும் உளவியல் ரீதியிலான ஆதரவை வழங்குவதையும் பாதுகாப்பை உறுதி செய்வதையும் அரசு கவனிக்கும். தனிப்பட்ட நபர் அடிப்படையிலான தேவை மற்றும் மதிப்பீடுகள் அடிப்படையில் சமுதாய அடிப்படையிலான ஆதரவு அமைப்புகள் நிறுவப்படும்.
சமூக வகைபாடுகளின் பகுப்பாய்வு (ஒய்ற்ங்ழ்-ள்ங்ஸ்ரீற்ண்ர்ய்ஹப்ண்ற்ஹ்) திட்டங்கள் தீட்டும்போதும், தரவுகள் திரட்டப்படும் போதும் பாதிக்கப்படக்கூடிய அனைத்து தரப்பு பெண்களுக்கும் முன்னுரிமை அளிக்கப்படும். குறிப்பாக, ஆதரவற்ற மற்றும் சிறுபான்மையின பெண்கள், மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள், பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்கள், கைவிடப்பட்ட பெண்கள், விதவைகள், கவனிக்கப்படாத வயதான பெண்கள் ஆகியோருக்கு அனைத்து துறைகளாலும் தங்கள் திட்டங்களில் முன்னுரிமை அளிக்கப்படும்.
மாற்றுத்திறனாளி இளம் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு பள்ளிகளில் ஒரே மாதிரியான பா-லினம் மற்றும் உறவுமுறைக் கல்வி அளிக்கப்படும்.
இதனால் அவர்கள் பா-லியல் சுரண்டலுக்கு ஆளாகாமல் இருப்பதோடு, தனக்கு தகுந்த தேர்வு களை செய்வதற்கு போதுமான தகவல் உள்ளவர்களாகவும் இருப்பார்கள்.
ஜே.ஜே. சட்டம் 2015-ன் கீழ், மாற்றுத் திறனாளி மற்றும் ஆதரவற்ற குழந்தைகளுக்கான சிறப்புக் கல்வியாளருடன் கூடிய பகல் பராமரிப்பு மையங்கள் நிறுவப்படும்.
மாநில அரசால் வழங்கப்படும் உரிமைகள் மற்றும் சலுகைகளை பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்கள் எளிதில் பெறுவதை உறுதி செய்யப்படும்.
வன்முறை ஒழித்தல்
கருவறை முதல் கல்லறை வரையிலான பெண்களுக்கு எதிரான அனைத்து வகையான வன்முறைகளையும் ஒரு முழுமையான கண்ணோட்டத்துடன் அரசு தனது முயற்சிகளை ஒருங்கிணைக்கும். கரு முதல் மூப்பு வரை பெண்கள் எதிர்கொள்ளும் வன்முறையானது குழந்தை திருமணம், வீடு, பொது இடங்கள் மற்றும் பணியிடங்களில் நீள்கிறது. இக்கொள்கை பல்வேறு பங்குதாரர்களின் ஆதரவுடன் சட்டங்கள், திட்டங்கள் மற்றும் சேவைகளின் கலவையின் மூலம் வன்முறை மற்றும் அத்துமீறல்களை அடையாளம் கண்டு எதிர்த்து போராட வழி வகுக்கும். தற்போதுள்ள உதவி மையம் (ட்ங்ப்ல்ப்ண்ய்ங்), ஒன் ஸ்டாப் மையங்கள், தங்குமிடங்கள், சட்ட ஆலோசனை மையங்கள், ஆலோசனை மற்றும் ஆதரவு வழிமுறைகள் ஆகியவற்றை ஒருங்கிணைக்கும் பொதுவான தளம் உருவாக்கப்பட்டு ஒவ்வொரு வழக்கும் அதன் இறுதி முடிவு எட்டும் வரை கண்காணிக்கப்படும்.
பள்ளிகள்/கல்வி நிறுவனங்கள் பாலி-ன சமத்துவத்திற்கான பணிக்குழுவை அமைப்பதை உறுதி செய்ய வேண்டும். இக்குழு பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான பாகுபாடு மற்றும் வன்முறையை கையாளும் திறன் கொண்டதாக அமையும். பாலின சமத்துவ விளைவுகளின் அடிப்படையில் பணிக்குழுவின் செயல்பாடுகள் மதிப்பீடு செய்யப்படும். பாலர் ஊராட்சிகள் இப்பணியில் தீவிரமாக ஈடுபடுத்தப்படும்.
அனைத்து காவல் நிலையங்களிலும் ஆலோசகர்கள் மற்றும் மகளிர் காவல் குழு (ல்ர்ப்ண்ஸ்ரீங் க்ஷங்ஹற்) இருக்க வேண்டும் மற்றும் காவல் நிலையங்களை அணுகுவதை ஊக்குவிக்கும் வகையில் அங்கு பாலி-ன உணர்திறன் மிக்க சூழல் இருக்க வேண்டும்.
ஒவ்வொரு உள்ளாட்சி அமைப்பிலும், பாதிக்கப்படக்கூடிய பெண்களுக்கு ஆதரவளிப்பதற்கும், பாலி-ன அடிப்படையிலான வன்முறை வழக்குகளில் புகாரளிக்க வசதியாக ஒரு மகளிர் காவல் தன்னார்வலரை காவல் துறை நியமிக்கும். அவ்வாறு நியமிக்கப்பட்ட நபரின் பெயர் மற்றும் தொடர்பு விவரங்கள் எளிதாக அணுகுவதற்கு முக்கிய இடங்களில் வைக்கப்படும்.
குடிப்பழக்கம் காரணமாக குடும்ப வன்முறையில் ஈடுபடும் குற்றவாளிகள் பொருத்தமட்டில், உள்ளூர் காவல் துறையுடன் இணைந்து சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையால் அவர்களை போதை ஒழிப்பு திட்டத்தில் சேர்த்து ஆலோசனை அமர்வுகள் நடத்தப்படும்.
இடர் எச்சரிக்கை ஒலி (நஹச்ங்ற்ஹ் ஆப்ஹழ்ம்)
எழுப்பும் சாதனங்கள்/கருவிகள் / அபாய பொறிகள் தடுப்புகளாக செயல்படும் மற்றும் பொது இடத்தில் பெண்கள் பாதிக்கப்படும் போது இவை அருகிலுள்ள காவல் நிலையங்களுக்கு தகவல் தெரிவிக்கும் மற்றும் அவசரகால பதில் ஆதரவு அமைப்பு (ஊதநந) ஆக செயல்படலாம்.
போதைப்பொருள் பிரச்சினையை அறிவியல்பூர்வமாக தீர்க்க, ஐந்தாம் வகுப்பு முதல் கல்லூரி வரை கல்விப் பாடத்திட்டத்தில் மது மற்றும் போதைப்பொருள் பற்றிய விழிப்புணர்வு சேர்க்கப்படும்.
சமூக பாதுகாப்பு
தகுதியுள்ள அனைவருக்கும் சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள் எளிதில் கிடைக்கப்பெறுவதை அரசு உறுதி செய்யும்.
தலைமுறைகளுக்கு இடையேயான வறுமை குழந்தைகளை குறிப்பாக, சிறுமியரை தாக்குகிறது. குழந்தை திருமணத்திற்கு கட்டாயப்படுத்து வதற்கான பொதுவான காரணங்களில் வறுமையும் ஒன்றாகும். எனவே, தங்கள் மகள்களுக்கு விரைவில் திருமணம் செய்து வைக்க விரும்பாத ஏழை குடும்பங்கள் அல்லது சமூகங்களுக்கு சமூக ஆதரவு அமைப்புகளை ஏற்படுத்துவதற்கு அரசு போதுமான நடவடிக்கைகளை எடுக்கும்.
சமுதாய மட்டத்தில் இளம்பெண் குழுக்களை உருவாக்குவதற்கு அரசு வழிவகை செய்யும். இவை இளம்பெண்களின் வாழ்க்கையை பாதிக்கும் விஷயங்களை விவாதிப்பதற்கு, சவால்களைக் கண்டறிவதற்கு, பாதுகாப்பான சூழலில் தரவுகளின் அடிப்படையிலான தீர்வுகளை கண்டறிவதற்கு ஒரு வாய்ப்பை வழங்கும்.
அனைத்து திருமணங்களையும் கட்டாயமாக பதிவு செய்தல் வேண்டும். மதத் தலங்களில் நடைபெறும் திருமணங்களும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளால் முறையாகப் பதிவு செய்யப்படும்.
பா-லின சமத்துவம் பற்றிய விழிப்புணர்வை அதிகரிக்க, நகர்ப்புற மற்றும் கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகள் அளவில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் உள்ள உரிமைகள் பற்றிய விழிப்புணர்வை அதிகரிக்க பாலி-ன மன்றங்களை (ஏங்ய்க்ங்ழ் ஸ்ரீப்ன்க்ஷள்) உருவாக்கப்படும். பாலி-ன மீறல்கள் நிகழாமல் இருப்பதை உறுதி செய்யும் காவலர்களாகவும் இவை உருவாகும்.
அனைத்து ஒற்றை மற்றும் பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கும் ஙஏசதஊஏந இன் கீழ் 50 வேலை நாட்கள் கூடுதலாக வேலை வழங்கப்படும்.
பிறவி குறைபாடுகள் உள்ள குழந்தைகள், ஆட்டிசம் குழந்தைகள் மற்றும் உடல் ஊனமுற்ற குழந்தைகளை கவனித்துக் கொள்வதற்கு அதிக செலவு மற்றும் நேரம் தேவை. எனவே, இக்குழந்தைகளை முறையாக கவனித்து கொள்ள ஏதுவாக அவர்களின் தாயின் வங்கிக் கணக்கில் சிறப்பு ஓய்வூதியம் வழங்கப்படும்.
ஒற்றைப் பெண்கள் தனி குடும்பமாக கருதப்படுவார்கள் மற்றும் குடும்ப அட்டை பெற தகுதி பெறுவார்கள்.
சட்டம்
மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து கிராம ஊராட்சி / பேரூராட்சி / நகராட்சி / மாநகராட்சி அளவில் உள்ள சமூகத்தில் நலி-வுற்ற பிரிவினருக்கு சட்ட உதவி வழங்கவும், நீண்ட கால தகுதியான நிலுவை வழக்குகளை தீர்வு செய்ய மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவில் உள்ள இலவச சட்ட உதவி மையங்களுக்கு (உகநஆ) பரிந்துரைக்கப்படும்.
நீதித்துறை கல்லூரி (ஆஸ்ரீஹக்ங்ம்ஹ்) பெண்கள் அமைப்பு அமைப்புகளுடனும், பெண்கள் மற்றும் குழந்தைகள் தொடர்பான துறைகளுடனும் இணைந்து பெண்களின் பாதுகாப்பிற்கு பொருந்தும் தற்போதைய சட்டங்கள் (சட்டம் என்ன சொல்கிறது?) குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.
ஊராட்சி அளவில் பெண்களுக்கான பாதுகாப்புச் சட்டங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த சமூக வள பயிற்றுனருக்கு (ஈட/ஈதட) நீதித்துறை கல்லூரி பயிற்சி அளிக்கும்.
தற்போதுள்ள சட்டங்கள், கொள்கைகள் மற்றும் திட்டங்களில் உள்ள இடைவெளிகளை நிவர்த்தி செய்ய, குறிப்பாக தற்போதுள்ள சட்டங்களை வலுப்படுத்தவும், புதிய சட்டங்களை அறிமுகப்படுத்தவும், மாநில சட்ட ஆணையத்தின் மூலம் மாநில அரசு அவ்வப்போது சட்ட மறுஆய்வு மற்றும் நிர்வாக சீர்திருத்தங்களை மேற்கொள்ளும்.
தரவு அமைப்புகளை ஒழுங்குபடுத்து வதற்கும், பிரிக்கப்பட்ட தரவைச் சேகரிப்பதற்கும், பல்வேறு தரவு ஆதார அமைப்புகளின் (சஎஐந, சநந, சஈதஇ, ஙர்நடஒ) மதிப்பாய்வு மூலம் தரவைத் தொகுப்பதற்கும், பெண்களுக்கான விரிவான தரவுத்தளத்தை உருவாக்குவதற்கும் ஆதார அடிப்படையிலான கொள்கை உருவாக்குவதற்கும் மாநில அரசு முயற்சிகளை மேற்கொள்ளும்.
ஊடகம்
வெகுஜன ஊடகங்களில் பாலி-ன சமத்துவம்: அதாவது அச்சு மற்றும் மின்னணு ஊடகங்கள், விளம்பர உலகம், திரைப்படத்துறை மற்றும் சமூக ஊடகங்கள் ஆகியவற்றில் ஆசிரியர் பதவிகளில் பெண்கள் இருப்பதை 50% அதிகரிப்பதன் மூலம் பாலின சமத்துவம் ஊக்குவிக்கப்படும்.
பெண்களை இழிவுபடுத்தும் வகையில் அல்லது பழமைவாத கண்ணோட்டத் துடன் அல்லது பிரதிநிதித்துவப் படுத்தாத வகையில், பெண்களை பா-லின உணர்வுடன் மற்றும் பாரபட்சமற்ற வகையில் அனைத்து வகையான ஊடகங்களிலும் சித்தரிப்பதை, தமிழ்நாடு அரசு ஊக்குவிக்கும். தனியார் துறை ஊடக வலையமைப்புகள் சுய-கட்டுப்பாட்டு வழிமுறைகளுடன் பெண்களை உரிமையளிக்கும்/அதிகாரமளிக்கும் வகையில் சித்தரிக்க ஊக்குவிக்கப்படும்.
பெண்களுக்கு பயனளிக்கும் வகையில் இணையம், முகநூல், ட்விட்டர் மற்றும் மொபைல் போன் தொடர்பு மற்றும் தகவல் அமைப்புகள் போன்ற சமூக ஊடகப் பயன்பாடுகளை பயன்படுத்துவதை அரசு ஊக்குவிக்கிறது. அதே நேரத்தில் சைபர் கிரைம் தலையீடுகள் மூலம் பெண்ணின் கண்ணியம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்ய போதுமான பாதுகாப்புகளை வழங்கும்.
சட்டத்திற்கு புறம்பான காட்சிகள் கதையின் ஒரு பகுதியாக இருந்தால், அது தவறு என்று இணைக்கப்பட்ட சட்ட விதிகள் திரையில் பிரதிபலி-க்க வேண்டும் அல்லது அச்சில் இருந்தால் பக்கத்தின் கீழ் பகுதியில் எழுத வேண்டும். (எ.கா. வரதட்சணை பற்றிய விவாதம் அல்லது உரையாடல் இருந்தால் - அது சட்டப்படி தவறு என்றும் சம்பந்தபட்டவர்கள் சட்டப்படி தண்டிக்கப்படுவார்கள் என்றும் அல்லது ஒரு பெண் தாக்கப்பட்டால், உதவி மைய எண் காட்டப்பட வேண்டும். இவை விழிப்புணர்வு ஏற்படுத்தும் நடவடிக்கையாகவும் அமையும்)
பெண்கள் தொடர்பான சட்டங்களும் உரிமைகளும் குறித்த விழிப்புணர்வை ஊடகங்கள் ஏற்படுத்த வேண்டும்.
உட்கட்டமைப்பு
மாற்றுத்திறனாளி பெண்கள் மற்றும் சிறுமியர் எளிதாக நடமாடும் வகையில் உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும்.
போதைக்கு அடிமையானவர்களை மீட்க நவீன சிகிச்சை மற்றும் மறுவாழ்வு உட்பட அனைத்து வசதிகளுடன் மையங்கள் அமைக்கப்படும்.
பா-லின தணிக்கை மூலம் உள்கட்டமைப்பு திட்டங்களின் வடிவமைப்பு, திட்டமிடல் மற்றும் இடம் ஆகியவற்றில் முன்னுரிமை களை அமைப்பதில் பெண்களின் கருத்துகளுக்கு முத-லிடம் கொடுக்கப் படும்.
அனைத்து வகையான போக்குவரத்து அமைப்புகளும் பெண்களுக்கு பாதுகாப்பானதாகவும் பயணிக்க உகந்ததாகவும் இருக்க தக்க வசதிகள் செய்யப்பட வேண்டும். பேருந்துகளில் முதல் பாதி இருக்கைகள் பெண்களுக்கு ஒதுக்கப்படும். முன் வாயில் வழி, நுழைய / வெளியேற பெண்கள் மட்டுமே பயன்படுத்துவர்.
பொதுப் போக்குவரத்தில் தொலைதூர இடங்கள் / நகரங்களுக்கு பயணிக்கும் பெண்கள் விரும்பிய இடத்தில் இறங்கவோ ஏற்றவோ செய்யலாம். பொதுப் பேருந்து நிறத்தமாக இல்லாமல் இருப்பினும் இம்முறை கடைப்பிடிக்க வேண்டும்.
பொதுவாக பொதுப் போக்குவரத்தை நம்பியிருக்கும் தெருவோர வியாபாரிகளுக்கு வசதியாக பெரிய பைகள், கடைகள், பெரிய பாத்திரங்கள் போன்வற்றை வைக்க, தனியாக பேருந்துகள் (அனைத்து வகையான போக்குவரத்துகளும் அடங்கும்) இடவசதியுடன் பயன்படுத்தப்படும்.
பொருளாதாரம்
தொழில் மற்றும் சேவைத்துறைகளின் வளர்ச்சிக்கு பெண்களி பங்கு மிக முக்கியமானது. பல்வேறு தொழில் துறைகளில் பெண்கள் அதிகமாக பங்கேற்க தொழிலாளர் சட்டம், சமூக பாதுகாப்பு மற்றும் பிற ஆதரவு சேவைகள் ஆகியவற்றின் அடிப்படையில் அவர்களுக்கு விரிவான ஆதரவு வழங்கப்படும். பெண்கள் தொழிற்சாலைகளில் இரவு பணி சுழற்சி வேலை செய்வதற்கும், பாதுகாப்பு, போக்குவரத்து போன்றவற்றுக்கான ஆதரவு சேவைகளுடன கூடிய உகந்த சூழலை ஏற்படுத்துவதற்கும் தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
பட்டிய-லிடப்பட்ட பழங்குடியினர் மற்றும் பிற பாரம்பரிய வனவாசிகள் (வன உரிமைகளை அங்கீகரித்தல்) சட்டம் 2007-இல் வன உரிமைகளை பயன்படுத்துவதற்கான நிர்வாகக் குழுக்களில் பெண்கள் சம விகிதத்தில் இடம் வகிப்பர்.
பெண் விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்கள் சிறு வனப் பொருட்களையும் விறகுகளையும் பயன்படுத்த அனுமதி கொடுக்கப்படும்.
விவசாயம் செய்யப்படாத நிலங்களை குத்தகைக்கு விடுவது அல்லது விற்பனை செய்வது போன்றவற்றில் மகளிர் கூட்டுறவு சங்கங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
தொழில் ரீதியான பிரிவு மற்றும் பாலி-ன ஊதிய இடைவெளி 50% குறைக்கப்படும்.
அனைத்து பெண் ஊழியர்களுக்கும் அவர்களின் மாதவிடாய் ஒழிவு/நிற்கும் காலத்தில் விடுப்பு அளிக்கப்படும். இதை ஒரு வருடகால மகப்பேறு விடுப்புடன் இணைக்கப்படும். மகப்பேறு விடுப்பு முழுவதையும் பெறாத பெண்கள், தங்கள் வாழ்க்கையின் போது மாதவிடாய் ஒழிவு/நிற்கும் கால விடுப்பைத் துய்க்கலாம். இது மகப்பேறு விடுப்புடன் இணைக்கப்பட்டு அதிகபட்ச ஒருங்கிணைந்த வரம்பான ஒரு வருடத்திற்கு மட்டுமே அளிக்கப் படும்.
ஆண் குடும்ப உறுப்பினர்கள் குறிப்பாக கணவர், சகோதரர் அல்லது தந்தையின் அங்கீகாரம் இல்லாமல் பெண்களுக்கு கடன் தற்போது வழங்கப்படுவதில்லை. இந்த நிலையை மாற்றி அனைத்து வகையான கடன் தேவைகளுக்கும் பெண்களுக்கு பிணையில்லா கடன் வழங்க வேண்டும்.
திறன் வளர்ப்பு
சம வாய்ப்புகள், நிதி மற்றும் தங்குமிட ஆதரவுடன் பெண்கள் விரும்பும் எந்தப் பகுதியிலும் திறன் பயிற்சியை அரசு அளிக்கும். இந்த பயிற்சியில் வழங்கப்படும். ஆளுமை மேம்பாடு மற்றும் தனிப்பட்ட சுயமாற்றம் ஆகியவை சுயமாக வணிகத்தை நிர்வகிக்க அவர்களுக்கு நம்பிக்கை அளிக்கிறது. இப்பயிற்சி மையங்கள் சந்தையின் தேவைக்கேற்ப திறன்களை மேம்படுத்தும் பள்ளிகளாக செயல்படும்.
தொழில்நுட்பத் துறையில் உள்ள மாணவர்களுக்கு புதிய மற்றும் வளர்ந்து வரும் துறைகளில் குறைந்தபட்சம் 50% வாய்ப்புகள் மற்றும் உயர்தர திறன்கள் வழங்கப்படுவதை அரசு உறுதி செய்யும்.
பெண்கள் மற்றும் சிறுமியர்க்கு குறிப்பாக தொழில் இடைவெளியில் இருந்தவர்களுக்கு திறன் மேம்பாட்டிற் கான வாய்ப்புகளை அரசு கிடைக்க செய்யும்.
தொழிற் கல்வி முடித்த பெண்களுக்கு பழகுநர் பயிற்சி ஊக்கத் தொகை அவர்களை ஊக்குவிக்கும் பொருட்டு.
வேலைவாய்ப்பு
குறிப்பிட்ட துறைகளில் பெண்கள் மற்றும் பெண்களுக்கான வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்படும் மற்றும் சிறந்த தொழில் நிறுவனங்கள் பங்கேற்க மற்றும் ஆட்சேர்ப்பு செய்ய ஊக்குவிக்கப்படும்.
புத்தாக்க நிறுவனங்களில் உள்ளகப் பயிற்சி (ஒய்ற்ங்ழ்ய்ள்ட்ண்ல்) வாய்ப்புகள் வழங்க ஏதுவாக வேலைவாய்ப்பு முகாம்களின் ஒரு பகுதியாக ஏற்பாடு செய்யப்படும்.
பெண்கள் பணிபுரியும் பகுதிகளில் மருத்துவ வசதிகள்/அழைப்பின் பேரில் மருத்துவர்கள் கிடைக்க செய்வதும் மற்றும் அவ்வப்போது மருத்துவ பரிசோதனை நடத்தப்படவும் வேண்டும்.
வங்கி மற்றும் காப்பீடு
பெண்கள் தங்கள் சொந்த அல்லது கூட்டு பிணையத்துடன் கடன் பெற வங்கியை/ தனியார் நிதி நிறுவனங்களை எளிதில் அணுகுவதற்கான தடைகளை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடன் பெறுவதில் குறிப்பிடத்தக்க பா-லின இடைவெளியை நீக்குவதற்கான உத்தியை நிதி நிறுவனங்களுக்கு உருவாக்கி தரவும் அரசு உதவும்.
குறு நிறவனங்கள் மற்றும் பெண் தொழில் முனைவோர் அல்லது 50% பெண்களை கொண்ட எந்தவொரு நிறுவனத்திற்கும் முன்னுரிமையுடன் வட்டி மானியத்தை அரசாங்கம் வழங்கும். எந்தவொரு முறையான நிதி நிறுவனம் மூலமாகவும் கடனாக கொடுக்கப்பட்ட பணத்தை வெற்றிகரமாக திருப்பிச் செலுத்திய பட்சத்தில் அத்தகைய நிறுவனங்கள் வட்டி ஏதும் செலுத்த வேண்டிய நிலை ஏற்படாது.
இளைஞர்களை குடிபழக்கத்திலி-ருந்து தடுக்க, போதைக்கு அடிமையாவதை கண்காணிப்பதற்கு வசதியாக, வாங்குவதற்கு சட்டப்பூர்வ அடையாளச் சான்று வழங்குமாறு நுகர்வோரிடம் கேட்கப்படும். இத்திட்டத்தின் கீழ் சேகரிக்கப்படும் நிதியானது மதுவிற்கு அடிமையான மற்றும் கணவன் இறந்ததால் பாதிக்கப்பட்ட குடும்பத் திற்கு பயன்படுத்தப்படும்.
புதிய முயற்சிகள்
தமிழ்நாட்டில் புதிய தொழில் துவங்கும் மகளிரை ஊக்குவிக்கும் பொருட்டு முதலீடுகளுக்கு, குழுவில் ஒன்றுக்கு மேற்பட்ட பெண் முதலீட்டாளர்கள் சேர்க்கப்படுவதை உறுதி செய்வதன் மூலம் பெண்களின் முடிவெடுக்கும் திறனை உறுதிபடுத்துகிறது.
இதன் மூலம் நிதியுதவி கோரும் மகளிருக்கு உரிய பலன்கள் சென்றடைய உதவி செய்யும்.
குறிப்பிட்ட நேரம் சார்ந்த பணியாக இல்லாமல் பெண்களின் வேலைத் திறன் சார்ந்ததற்கு முன்னுரிமை.
மகளிருக்கு கட்டாயமாக வாரத்திற்கு இரண்டு நாட்கள் விடுப்பு அளித்தல்.
விரிவுபடுத்தப்பட்ட தொழில்களில் ஒரு சிலரே பெண் நிறுவனர்களாக உள்ளனர். இது குறித்தான உரிய ஆய்வு மேற்கொண்டு தொடர் நடவடிக்கை மேற்கொள்ளுதல்.
மகளிருக்கான தொழில்முனைவோர் புதிய தொழில் தொடங்குவோர் அவர்களை சிறப்பிக்கும் பொருட்டு வருடந்தோறும் விருதுகள் வழங்கப்படும்.