வேளாண் சட்டங்களும் விவசாயிகளின் போராட்டமும்

/idhalgal/general-knowledge/agricultural-laws-and-struggle-peasantry

த்திய அரசுடன் தொடர்ச்சியாக நடந்த பேச்சுவார்த்தைகள் தோல்வி அடைந்துவிட்டன. தங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரையில் போராட்டத்தைத் தொடரப் போவதாக விவசாயிகள் கூறியுள்ளனர். நாடாளுமன்றத்தைக் கூட்டி 3 வேளாண் சட்டங்களை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆனால் அந்த சட்டங்களை முழுமையாக ரத்து செய்வதற்குப் பதிலாக, சர்ச்சைக்குரிய பகுதிகளைத் திருத்தம் செய்வதற்கு மத்திய அரசு தயாராக உள்ளது. இந்தச் சட்டங்களைப் பார்த்து விவசாயிகள் அச்சப்பட எதுவும் இல்லை என்று அரசு கூறுகிறது.

farmers

போராட்டத்துக்குக் காரணமாக இருக்கும் மூன்று வேளாண் மசோதாக்கள்:

வேளாண் விளைபொருள் வர்த்தகம் மற்றும் வணிகம் (ஊக்குவித்தல் மற்றும் வசதி ஏற்படுத்துதல்) சட்டம், 2020 விலை உத்தரவாதம் மற்றும் வேளாண் சேவைக்கான விவசாயிகள் (அதிகாரம் அளிப்பு மற்றும் பாதுகாப்பு) ஒப்பந்த சட்டம், 2020 அத்தியாவசியப் பொருட்கள் (திருத்த) சட்டம், 2020 வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் அல்லது ஏ.பி.எம்.சி. மண்டிகளிலும், மண்டிகளுக்கு வெளியிலும் வேளாண் விளைபொருள்களை விவசாயிகள் வாங்கவோ, விற்கவோ இந்தச் சட்டங்கள் வகை செய்கின்றன.

இந்த விதிமுறைக்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். ஏ.பி.எம்.சி.களுக்கு வெளியில் தாங்கள் விற்பனை செய்தால், ஷசந்தை விலையை' தரும்போது அரசுக்கு நட்டம் ஏற்படும் என்று விவசாயிகள் கூறுகின்றனர். ஏ.பி.எம்.சி.கள் இல்லாமல் போய்விட்டால், இடைத்தரகர்கள் மற்றும் கமிஷன் ஏஜென்ட்கள் நிலை என்னவாகும் என்றும் அவர்கள் கேட்கின்றனர். இந்தச் சட்டங்கள் அமலுக்கு வந்தால் குறைந்தபட்ச ஆதார விலை முறை கிடைக்காமல் போய்வி

த்திய அரசுடன் தொடர்ச்சியாக நடந்த பேச்சுவார்த்தைகள் தோல்வி அடைந்துவிட்டன. தங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரையில் போராட்டத்தைத் தொடரப் போவதாக விவசாயிகள் கூறியுள்ளனர். நாடாளுமன்றத்தைக் கூட்டி 3 வேளாண் சட்டங்களை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆனால் அந்த சட்டங்களை முழுமையாக ரத்து செய்வதற்குப் பதிலாக, சர்ச்சைக்குரிய பகுதிகளைத் திருத்தம் செய்வதற்கு மத்திய அரசு தயாராக உள்ளது. இந்தச் சட்டங்களைப் பார்த்து விவசாயிகள் அச்சப்பட எதுவும் இல்லை என்று அரசு கூறுகிறது.

farmers

போராட்டத்துக்குக் காரணமாக இருக்கும் மூன்று வேளாண் மசோதாக்கள்:

வேளாண் விளைபொருள் வர்த்தகம் மற்றும் வணிகம் (ஊக்குவித்தல் மற்றும் வசதி ஏற்படுத்துதல்) சட்டம், 2020 விலை உத்தரவாதம் மற்றும் வேளாண் சேவைக்கான விவசாயிகள் (அதிகாரம் அளிப்பு மற்றும் பாதுகாப்பு) ஒப்பந்த சட்டம், 2020 அத்தியாவசியப் பொருட்கள் (திருத்த) சட்டம், 2020 வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் அல்லது ஏ.பி.எம்.சி. மண்டிகளிலும், மண்டிகளுக்கு வெளியிலும் வேளாண் விளைபொருள்களை விவசாயிகள் வாங்கவோ, விற்கவோ இந்தச் சட்டங்கள் வகை செய்கின்றன.

இந்த விதிமுறைக்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். ஏ.பி.எம்.சி.களுக்கு வெளியில் தாங்கள் விற்பனை செய்தால், ஷசந்தை விலையை' தரும்போது அரசுக்கு நட்டம் ஏற்படும் என்று விவசாயிகள் கூறுகின்றனர். ஏ.பி.எம்.சி.கள் இல்லாமல் போய்விட்டால், இடைத்தரகர்கள் மற்றும் கமிஷன் ஏஜென்ட்கள் நிலை என்னவாகும் என்றும் அவர்கள் கேட்கின்றனர். இந்தச் சட்டங்கள் அமலுக்கு வந்தால் குறைந்தபட்ச ஆதார விலை முறை கிடைக்காமல் போய்விடும் என்று விவசாயிகள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

ஒழுங்கமைக்கப்பட்ட ஒப்பந்த வேளாண்மை முறைக்கு புதிய சட்டங்கள் அனுமதி அளிக்கின்றன. எனவே விவசாயிகள் இப்போது மொத்த விற்பனை வணிகர்கள், பதப்படுத்தல் தொழில் நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங் களுடன் சட்டபூர்வ ஒப்பந்தங்கள் செய்து கொள்ளலாம். வேளாண் பொருள் சாகுபடி, உற்பத்தி மற்றும் அவற்றை விற்பதற்கு இந்த ஒப்பந்தங்கள் வகை செய்யும். பேச்சுவார்த்தை மூலம் விலைகளை முடிவு செய்து, ஒப்பந்தத்தில் நிர்ணயம் செய்து கொள்ளலாம். இந்த நடைமுறையில் இடைத்தரகர்கள் இல்லை என்பதால், விவசாயிகள் முழு லாபத்தையும் பெற முடியும் என்று அரசு கூறுகிறது.

விவசாய விளைபொருளுக்கு தற்போது உள்ள குறைந்தபட்ச ஆதரவு விலை என்ற அமைப்பு இல்லாமல் போய்விடும் என்பதுதான் அவர்களுடைய பிரதானமான அச்சம். அதனால்தான் இவ்வளவு பெரிய போராட்டம் நடக்கிறது. துவக்கத்தில், குறைந்தபட்ச ஆதரவு விலை என்பதை இந்தச் சட்டங்களின் ஒரு பகுதியாக மாற்றுங்கள் என்றார்கள். ஆனால், அரசு அதற்கு செவி சாய்க்கவில்லை. ஆகவே இப்போது மொத்தமாக, இந்த மூன்று சட்டங்களையும் நீக்க வேண்டும் என்கிறார்கள். அரசாங்கம், இந்த குறைந்தபட்ச ஆதரவு விலை என்ற முறை தொடரும் என்கிறது.

குறைந்தபட்ச ஆதரவு விலை என்பது எல்லா விளைபொருளுக்கும் அறிவிக்கப்படுவதில்லை. விவசாயிகள் ஆயிரக்கணக்கான பொருட்களை விளைவிக்கிறார்கள். ஆனால், குறைந்தபட்ச ஆதரவு விலை என்பது 23 பொருள்களுக்கு மட்டும்தான் அறிவிக்கப்படுகிறது. ஒரு பயிருக்கான பருவம் துவங்கும்போது, அந்தப் பயிருக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை என்பது அறிவிக்கப்படும். அது வெறும் அறிவிப்பு. அது செயல் வடிவம் பெற வேண்டு மானால், கொள்முதல் நடக்க வேண்டும். ஆகவே, அறுவடை நடக்கும்போது, இந்தக் குறைந்தபட்ச ஆதரவு விலையைக் கொடுத்து நாங்கள் வாங்கிக் கொள்வோம் என அறிவித்து, அரசு கொள்முதல் செய்ய வேண்டும். தனியார், அதைவிட குறைவான விலைக்கு வாங்கவிடாமல் தவிர்ப்பதற்கான அமைப்புதான் இது.

23 பொருட்களுக்கு குறைந்தபட்ச விலை அறிவிக்கப்பட்டாலும், அரிசி, கோதுமை ஆகிய இரண்டு பொருட்களுக்குதான், இந்த ஆதரவு சரியாகக் கிடைக்கிறது. அதுவும் எல்லா இடங்களிலும் ஒரே மாதிரி கிடைப்பதில்லை. பஞ்சாபிலும் ஹரியானாவிலும்தான் இந்தக் கொள்முதல் தீவிரமாக நடக்கிறது. அதற்குக் காரணம் இருக்கிறது. இந்தியாவில் உணவு தானியங்களைச் சேமித்துவைக்கக்கூடிய அமைப்பான இந்திய உணவுக் கழகம், ஒவ்வொரு ஆண்டும் தங்களுக்குத் தேவையான உணவு தானியங்களை பெருமளவில் பஞ்சாபிலும் ஹரியானா விலும்தான் வாங்குகிறார்கள். பஞ்சாபில் விளையக்கூடிய கோதுமையில் 60 விழுக்காட்டை இந்திய உணவுக் கழகமே வாங்கிக் கொள்ளும். 75 சதவீத அரிசியை அவர்களே வாங்கிக் கொள்வார்கள்.

பிற இடங்களிலும் கொள்முதல் நடக்கும் என்றாலும் இந்த இரண்டு மாநிலங்களில்தான் பெருமளவில் கொள்முதல் நடக்கும். ஆகவே, இந்தப் புதிய சட்டம் வரும்போது தங்கள் பாதிக்கப்படுவோம் எனக் கருதக்கூடியவர்கள் இந்த இரு மாநிலங்களிலும் அதிகம் இருக்கிறார்கள். ஆகவேதான் அவர்கள் பெரிதாகப் போராடுகிறார்கள்.

குறைந்தபட்ச ஆதரவு விலையை உறுதிப்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட அமைப்புதான் இந்த வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்கள். உற்பத்திச் செலவைக் கணக்கிட்டு, அதோடு குறிப்பிட்ட சதவீதம் லாபத்தை சேர்த்து, இந்த குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணியிக்கப்படுகிறது. இந்தக் குறைந்தபட்ச ஆதரவு விலை என்ற அமைப்பு செயல்படுவதற்கான கருவிதான் வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்கள். இதற்கு முன்பாக, வேளாண் விளை பொருட்களின் விற்பனை என்பது வியாபாரிகளின் வேட்டைக்களமாக இருந்தது. எந்தக் கட்டுப்பாடும் இருக்காது. வியாபாரிகள் தங்களுக்குள் கூட்டணி அமைத்துக்கொண்டு அடிமாட்டு விலைக்கு பொருட்களை வாங்குவது நடந்து கொண்டிருந்தது. இந்த நிலையில்தான் விவசாயிகளைப் பாதுகாக்க ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்கள் கொண்டுவரப்பட்டன. இங்கே விவசாயிகள் பொருட்களைக் கொண்டுவருவார்கள். அதை வாங்கவிருக்கும் வியாபாரிகளும் வருவார்கள். இதற்குப் பிறகு, அங்கிருக்கும் அரசு அதிகாரிகள் முன்னிலையில் அந்தப் பொருளுக்கான விலை தீர்மானிக்கப்படும். அதில் இரண்டு விஷயங்கள் கவனிக்கப்படும். ஒன்று, குறைந்தபட்ச ஆதரவு விலைக்குக் குறைவாக விலை இல்லாமல் இருப்பது உறுதிசெய்யப்படும். இரண்டாவதாக, போட்டி உறுதி செய்யப்படும். அதாவது, வியாபாரிகள் கூட்டணி அமைத்து, பொருட்கள் வாங்குவதைத் தடுப்பது அங்கே நடக்கும். அதற்காக, ஒவ்வொரு வியாபாரியும் தாங்கள் அந்தப் பொருட்களை எந்த விலைக்கு வாங்கிக் கொள்வோம் என்பதை எழுத்து மூலமாக - அதாவது விலைப் புள்ளியை - தர வேண்டும். குறிப்பிட்ட நேரத்திற்குப் பிறகு, யார் அதிக விலை கோரியிருக்கிறார்களோ அவர்களுக்கு அந்த தானியம் விற்கப்படும். அந்தப் பணத்தை அரசு அதிகாரியிடம்தான் கொடுக்க வேண்டும். அதிகாரி, அதை விவசாயியிடம் தருவார். இதுதான் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் செயல்படும்முறை. ஆனால், பெரும்பாலும் இப்படி நடப்பதில்லை என்பதுதான் நிதர்சனம்.

____________

புதிய திட்டங்கள்

ககன்யான் திட்டம்

அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய 3 நாடுகள் மட்டுமே விண்ணுக்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்தை செயல்படுத்தி வருகின்றன.

அந்தவரிசையில் உலகிலேயே விண்ணுக்கு அனுப்பும் 4-வது நாடாக இந்தியா விரைவில் இடம்பெற உள்ளது. அதற்காக ககன்யான் என்ற பெயரில் ரூ.10 ஆயிரம் கோடி செலவில் மிகப்பெரிய திட்டப் பணிகளில் இஸ்ரோ தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

அதன்படி, ஜிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் செலுத்தப்படும் ககன்யான் திட்ட விண்கலத்தில் 3 வீரர்கள் விண்வெளி செல்ல உள்ளனர்.

ககன்யான் விண்கலம் விண்வெளியில் பூமியை தாழ்வான நிலையில் இருந்து 7 நாட்கள் சுற்றிவரும்வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தில், முதல் ஆளில்லா விண்கலம் 2021-ஆம் ஆண்டு டிசம்பரில் விண்வெளிக்கு மனிதரை அனுப்பும் திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

பிரதமரின் KUSUM திட்டம்

வேளாண் துறையில் அதிக அளவில் சூரிய ஆற்றல் உற்பத்தி செய்யப்படுவதை உறுதிசெய்வதற்காக பிரதமரின் KUSUM திட்டத்தின் நோக்கத்தை விரிவுபடுத்த புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் அமைச்சகம் முடிவெடுத்துள்ளது.

இதன்படி, தரிசு நிலம் மற்றும் விவசாய நிலம் தவிர, விவசாயிகளின் மேய்ச்சல் நிலத்திலும், சதுப்பு நிலத்திலும் சூரிய ஆற்றல் உற்பத்தி ஆலைகளை நிறுவலாம்.

சிறு உழவர்களும் இதில் பங்குபெறும் விதமாக சூரிய ஆற்றல் ஆலைகளின் அளவு குறைக்கப்பட்டுள்ளது.

தேசிய டிஜிட்டல் சுகாதார திட்டம்

இது 2021-ஆம் ஆண்டு ஜனவரியில் இந்தியா முழுவதும் வெளியிடப்படும்.

தேசிய டிஜிட்டல் சுகாதார மேலாண்மை கொள்கையே தேசிய டிஜிட்டல் சுகாதார திட்டத்தின் அடிப்படையாகும்.

டிஜிட்டல் சுகாதாரத் துறையில் இந்தியா ஒரு பயணத்தை மேற்கொள்வது இதுவே முதல்முறையாகும்.

gk010121
இதையும் படியுங்கள்
Subscribe