விண்வெளி ஆராய்ச்சிக்கான இந்திய தேசிய கமிட்டியை (Indian National Committee for Space Research#INCOSPAR)1962-ஆம் ஆண்டு நிர்மாணம் செய்ததன் மூலம் நம் நாட்டில் விண்வெளி ஆராய்ச்சிப் பணிகள் கால் பதிக்கத் தொடங்கின. அதே ஆண்டில் திருவனந்தபுரத்திற்கு அருகில் தும்பா நிலநடுக்கோடு ராக்கெட் ஏவும் நிலையத்தின் (TERLS) பணி தொடங்கியது. 1969-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகம்(ISRO) உருவாக்கப் பட்டது. அதைத் தொடர்ந்து இந்திய அரசால் 1927-ஆம் ஆண்டு ஜூன் மாதம் விண்வெளிக் கமிஷன் மற்றும் விண்வெளித் துறை (DOS) ஆகியன உருவாக்கப்பட்டன. 1972-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் இஸ்ரோவானது விண்வெளித் துறையின் கீழ் கொண்டு வரப்பட்டது.
இஸ்ரோ அமைப்பானது இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி முகமையாகச் செயல்படுகின்றது. இந்தக் கழகம் இந்தியாவிற்கும் மனித குலத்திற்கும் புவிக்கு அப்பாலி-ருக்கும் வெளியின் பயன்களை அறிவியல், பொறியியல் மற்றும் தொழில்நுட்பத்தின் மூலம் பெறுவதற்காகவே நிறுவப்பட்டது. இந்திய அரசின் விண்வெளித் துறையின் முதன்மை அமைப்பாக இஸ்ரோ செயல்படுகிறது. இஸ்ரோவிற்குள் இயங்குகின்ற அலகுகள் அல்லது வெளியில் செயல்படுகின்ற இஸ்ரோவின் பல்வேறு மையங்கள் வாயிலாக விண்வெளித் துறையானது இந்திய விண்வெளித் திட்டத்தைச் செயல்படுத்தி வருகின்றது.
இஸ்ரோ அமைப்பானது 1969-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15-ஆம் தேதி தொடங்கப்பட்டது. விண்வெளி ஆராய்ச்சிக்கான இந்திய தேசிய கமிட்டிக்கு மாற்றாக நிறுவப்பட்ட இந்த அமைப்பின் பணியானது விண்வெளித் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் வகையில் விரிவாக்கப்பட்டது. இஸ்ரோ / விண்வெளித் துறையின் முதன்மைக் குறிக்கோள் என்பது தேசத்தின் பல்வேறு தேவைகளை நிறைவு செய்வதற்கு விண்வெளித் தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதும் பயன்படுத்துவதுமே ஆகும். இந்தக் குறிக்கோளை நிறைவு செய்வதற்காக இஸ்ரோ அமைப்பானது தொடர்பியலுக்கான முதன்மை விண்வெளி அமைப்புகள், தொலைக்காட்சி ஒளிபரப்பு மற்றும் வானிலைச் சேவைகள், மூலவளக் காண்காணிப்பு மற்றும் நிர்வாகம், விண்வெளி அடிப்படையிலான நேவிகேஷன் சேவைகள் ஆகியவற்றை நிறுவி செயல்படுத்தி வருகின்றது. செயற்கைக்கோள்களை தேவையான சுற்றுப்பாதையில் செலுத்துவதற்காக இஸ்ரோ அமைப்பானது பிஎஸ்எல்வி மற்றும் ஜிஎஸ்எல்வி ஆகிய செயற்கைக்கோள்களை செலுத்தும் ஏவூர்திகளை உருவாக்கியுள்ளது.
தொழில்நுட்ப மேம்பாடுகள் ஒரு பக்கம் இருந்தாலும், மறுபக்கம் இஸ்ரோ அமைப்பானது நாட்டில் அறிவியல் மற்றும் அறிவியல் கல்விக்கு குறிப்பிடத்தக்க பங்கினையும் செய்து வருகின்றது. விண்வெளித் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் தொலையுணர்தல், வானியல், வான்இயற்பியல், புவி வளிமண்டல அறிவியல்கள், பொதுப் பயன்பாட்டுக்கான விண்வெளி அறிவியல் ஆகியவற்றிற்கான பிரத்யேக ஆராய்ச்சி மையங்கள் மற்றும் தன்னாட்சி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இஸ்ரோவின் சந்திரமண்டல மற்றும் கிரகங்களுக்கு இடையிலான ஆராய்ச்சித் திட்டமானது ஏனைய ஆராய்ச்சி செயல் திட்டங் களோடு இணைந்து அறிவியல் கல்விக்கு ஊக்கமும் மேம்பாடும் அளித்து வருகிறது. அதுமட்டுமல்லாமல் விஞ்ஞானிகளுக்கு மதிப்புமிக்க தரவுத் தகவல்களையும் வழங்கி வருகிறது. இதன் விளைவாக அறிவியல் மேம்பட்டு வருகிறது.
நாட்டின் சமூகப் பொருளாதார பயன்பாடுகளுக்காக விண்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தை அபிவிருத்தி செய்தல், பயன்பாட்டை அதிகரித்தல் ஆகியவற்றிற்கான இந்திய விண்வெளி செயல் திட்டத்தின் கொள்கைகளை விண்வெளி கமிஷனானது உருவாக்கி, அவை நடைமுறைப்படுத்தப்படுவதை கண்காணிக்கவும் செய்கின்றது. இத்தகைய செயல் திட்டங்களை விண்வெளித் துறையானது முதன்மை யாக இஸ்ரோ, இயற்பியல் ஆராய்ச்சி ஆய்வுக்கூடம் (Physical Research Laboratory#PRL), தேசிய வளிமண்டல ஆராய்ச்சி ஆய்வுக்கூடம் (National Atmospheric Research Laboratory#NARL) மற்றும் விண்வெளிப் பயன்பாட்டுகளுக் கான வடகிழக்கு மையம் (NorthEastern Space Applications Centre # NE#SAC) ஆகியவற்றின் மூலம் நடைமுறைப் படுத்தி வருகின்றது. விண்வெளித் துறையின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நடவடிக்கைகளை வர்த்தக மையமாக்குவதற்காக ஆன்ட்ரிக்ஸ் கார்ப்பரேஷன் லி-மிடெட், நியூ ஸ்பேஸ் இந்தியா லி-மிடெட் ஆகிய இரண்டு மத்திய பொதுத்துறை நிறுவனங்கள் தொடங்கப்பட்டுள்ளன. விண்வெளித் துறையின் செயலகமும் இஸ்ரோ தலைமையகமும் பெங்களூருவில் உள்ள அந்தாரிக்ஷ் பவனில் இயங்கி வருகின்றன. செயற்கைக்கோள் தொடர்பியல், புவியைக் கூர்உணர்தல், நேவிகேஷன், செயற்கைக்கோள் செலுத்தும் ராக்கெட்டுகள், விண்வெளி அறிவியல், பேரிடர் மேலாண்மைக்கான ஆதரவு, நிதிநல்கை பெறுகின்ற ஆராய்ச்சித் திட்டங்கள், மனிதர் பயணிக்கும் விண்வெளி ஓடம், சர்வதேச ஒத்துழைப்பு, அமைப்புகளின் நம்பகத்தன்மை, தரம், பாதுகாப்பு, செலவினம் மற்றும் பொருளாதாரப் பகுப்பாய்வு, மனித வளங்கள், திறன் கட்டமைப்பு, பொதுமக்களுக்குத் தகவல் அளித்தல் போன்ற நிகழ்வுகளை இஸ்ரோ தலைமையகத்தில் உள்ள தனித்தனியான செயல் திட்ட அலுவலகங்கள் ஒருங்கிணைக்கின்றன.
விக்ரம் சாராபாய் விண்வெளி மையம் (VSSC)
திருவனந்தபுரத்தில் உள்ள விக்ரம் சாராபாய் விண்வெளி மையமானது செயற்கைக்கோள் செலுத்தும் ஏவூர்தித் தொழில்நுட்பத்தை வடிவமைத்து மேம்படுத்துதல் பணியை பொறுப்புணர் வுடன் மேற்கொண்டுள்ளது. இந்த மையமானது ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தியில் செயலூக்கமாக ஈடுபட்டு வருகிறது. ஏரோஸ்பேஸ் அமைப்புகள் தொடர்பான பல்வேறு புலங்களில் அடிப்படைத் தகுதிறனை இந்த மையம் உருவாக்கியுள்ளது. விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தின் முதன்மைச் செயல் திட்டங்களில் துருவச் செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தும் ஏவூர்தி (Polar Satellite Launch Vehicle # PSLV),, புவி ஒருங்கிணைவு செயற்கைக்கோள் செலுத்தும் ஏவூர்தி (Geosynchronous Satellite Launch Vehicle # GSLV),, செயற்கைக்கோள் செலுத்தும் ஏவூர்தி மார்க்-3 Launch Vehicle Mark#3 LVM3),, வளிமண்டல மேலடுக்குப் பகுதிகளை ஆராயும் ஒலி- எழுப்பும் ராக்கெட்டுகள் (Sounding Rockets) ஆகியன உள்ளடங்கும். அதுமட்டுமல்லாமல் சிறு செயற்கைக்கோள் ஏவும் ஏவூர்தி (Small Satellite Launch Vehicle # SSLV), மீண்டும் பயன்படுத்தும் வகையிலான செயற்கைக்கோளை ஏவும் ஏவூர்தி (Reusable Launch Vehicle # RLV),, பரிசோதனை செயற்கைக்கோள் திட்டம் (TVP),, காற்று சுவாச உந்தெறிவு, மனிதர் பயணிக்கும் விண்வெளி ஓடத்திற்கான முக்கியமான தொழில்நுட்பங்கள் மற்றும் ககன்யான் போன்ற செயல் திட்டங்களும் இந்த மையத்தால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
யு.ஆர்.ராவ் செயற்கைக்கோள் மையம் (U.R.Rao Satellite Centre # URSC)
தொடர்பியல், நேவிகேஷன், தொலைஉணர்தல், அறிவியல் மற்றும் சிறு செயற்கைக்கோள் செயல் திட்டங்கள் ஆகியவற்றை வடிவமைத்தல், அபிவிருத்தி செய்தல், செயல்படுத்துதல் ஆகியவற்றிற்கான முன்னணி மையமாக பெங்களூருவில் உள்ள யு.ஆர்.ராவ் செயற்கைக்கோள் மையம் செயல்பட்டு வருகின்றது. தொலைதொடர்பியல், தொலைக்காட்சி ஒளிபரப்பு, விசாட் (very small aperture terminal VSAT) சேவைகள், தொலைமருத்துவம், தொலைநிலைக்கல்வி, நேவிகேஷன், வானிலை முன்னறிவிப்பு, இயற்கைப் பேரிடர் எச்சரிக்கை, தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள், புவியைக் கூர்ந்து கவனித்தல், இயற்கை மூலவள மேலாண்மை, அறிவியில் மற்றும் விண்வெளி அறிவியல் ஆகிய பிரிவுகளில் பல்வேறு பயன்பாடுகளுக்கான சிக்கலான மற்றும் அதிநவீன செயற்கைக்கோள்களை இந்த மையத்தில் உள்ள விஞ்ஞானிகள், பொறியாளர்கள் மற்றும் தொழில்நுட்ப நிபுணர்கள் அடங்கிய சிறப்புக் குழுக்கள் கட்டமைத்துள்ளன. 2006-ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட இஸ்ரோ செயற்கைக்கோள் ஒருங்கிணைப்பு - பரிசோதனை மையத்தில் (ISRO Satellite Integration and Test Establishments # ISITE) முழுமையான அசெம்பளி மற்றும் தொடர் பரிசோதனைக்கான வசதிகள் உள்ளன. அடிப்படைக் கட்டமைப்பு என்ற நிலையில் இருந்து விமானமாக ஓட்டிப்பார்க்கக் கூடிய நிலையில் விண்கலத்தை உருவாக்கித் தரக்கூடிய வசதிகள் இங்கு உள்ளன.
சதீஷ் தவான் விண்வெளி மையம் (Satish Dhawan Space Centre # SDSC)
இஸ்ரோவின் முதுகெலும்பாக உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையமானது “இந்தியாவின் ஸ்பேஸ்போர்ட்”டாக (நல்ஹஸ்ரீங்-ல்ர்ழ்ற்) விளங்குகிறது. இந்த மையமானது இந்திய விண்வெளி செயல் திட்டங்களுக்கான ஏவூர்தித் கட்டமைப்பு வசதிகளை வழங்குகின்றது. நடப்பு ஆண்டில் ராக்கெட்டுகள் அனைத்து பிரிவுகளும் செயலாக்கப்பட்டு பயன்படுத்திக் கொள்ளப்பட்டன. இங்கு இஸ்ரோவின் செலுத்து வாகனம், செயற்கைக்கோள் பணிகளில் ஈடுபட்டுள்ள விஞ்ஞானிகளில் பல்வேறு தேவைகளை நிறைவு செய்யும் வகையில் குறிப்பிட்ட காலகெடுவிற்குள் ஏவுகணைகளைத் தயாரித்து வழங்கியதோடு துல்-லியமான ஏவுதல், செயல்பாடுகளும் உறுதி செய்யப்பட்டன. அதுமட்டுமல்லாமல் இந்திய மற்றும் அயல்நாட்டு வாடிக்கையாளர்களின் தேவைகளும் பூர்த்தி செய்யப்பட்டன.
திரவ உந்துசந்தி அமைப்புகளுக்கான மையம்(Liquid Propuision Systems Centre # LPSC)
செலுத்து வாகனங்களுக்கான உந்துசக்தி அமைப்புகள், விண்கலங்களுக்கான விண்வெளி உந்துசக்தி அமைப்புகள் ஆகியவற்றை வடிவமைத்தல், அபிவிருத்தி செய்தல், செயலாக்குதல் ஆகியவற்றிற்கான இஸ்ரோவின் முன்னணி மையமாக திரவ உந்துசக்தி அமைப்புகளுக்கான மையமானது செயல்படுகின்றது. இஸ்ரோவின் ஏவுகணை ராக்கெட்டுகள் மற்றும் செயற்கைக்கோள்களுக்கான அதிக செயல்திறன் கொண்ட விண்வெளி உந்துசந்தி அமைப்புகள் வடிவமைத்தல், மேம்படுத்துதல் மற்றும் விநியோகித்தல் ஆகியன இந்த திரவ உந்துசக்தி அமைப்புகளுக்கான மையத்தின் பொறுப்புகள் ஆகும். புவியில் சேமிக்கக்கூடிய கிரையோஜெனிக், செமிகிரையோஜெனிக் மற்றும் மின்சார உந்துசக்தி அமைப்புகளைப் பயன்படுத்தி இந்த மையம் விண்வெளி உந்துசக்தி அமைப்புகளை உருவாக்குகிறது. இந்த மையத்தின் செயல்பாடுகளும் வசதிகளும் திருவனந்தபுரத்தின் வலியமாலாவில் உள்ள திரவ உந்துசக்தி மைய வளாகம், பெங்களூருவில் உள்ள திரவ உந்துசக்தி மைய வளாகம் ஆகிய இரண்டு வளாகங்களின் மூலமாக மேற்கொள்ளப்படுகின்றன. வலியமாலா வளாகத்தில் புவியில் சேமிக்கக்கூடிய கிரையோஜெனிக், செமிகிரையோஜெனிக் மற்றும் மின்சார உந்துசக்தி அமைப்புகளுக்கான உட்கூறுகளை வடிவமைத்தல், அபிவிருத்தி செய்தல் ஆகியன மேற்கொள்ளப்படுகின்றன. இறுதிநிலை வடிவமைப்பு, மேம்பாடு, செயல் தொடர்ச்சிக் கட்டுப்பாட்டுக் கூறுகள், தொகுப்புகளைச் செயலாக்குதல், மேம்படுத்தப்பட்ட உற்பத்தி, புரோட்டோ ஃபேப்ரிகேஷன், உந்துசக்தி மற்றும் உள்ளமைப்புப் பிரிவுகளில் ஆராய்ச்சி, அபிவிருத்தி நடவடிக்கைகள் ஆகியன நிபுணர் குழுக்களால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
விண்வெளி பயன்பாடுகள் மையம் (Space Applications Centre # SAC)
அகமதாபாத்தில் உள்ள விண்வெளிப் பயன்பாடுகள் மையமானது இஸ்ரோவின் மிக முக்கியமான ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி மையமாகும். இந்த மையத்தின் அடிப்படைச் செயல்பாடு என்பது விண்வெளியில் பயன்படுத்தக்கூடிய மற்றும் காற்றால் இயக்கக்கூடிய உபகரணங்களையும் கலச்சுமைகளையும் (payload) உருவாக்குவதே ஆகும். தேசிய மேம்பாட்டுக்காகவும் சமூகத்தின் நலனுக்காகவும் இவற்றைப் பயன்படுத் தலும் இந்த மையத்தின் அடிப்படைச் செயல்பாடு ஆகும். இந்தப் பயன்பாடுகள் பலதரப்பட்டப் பிரிவு களைச் சேர்ந்தவை ஆகும். குறிப்பாக நாட்டின் தொடர்பியல், நேவிகேஷன் மற்றும் தொலைஉணர்தல் தேவை களை இவை பூர்த்தி செய்கின்றன.
இன்சாட் மற்றும் ஜிசாட் வரிசை செயற்கைக்கோள்களுக்காக இந்த மையம் உருவாக்கிய தொடர்பியல் ட்ரான்ஸ்பான்டர்கள் அரசு மற்றும் தனியார் துறையால் விசாட், டிடிஹெச், இணையம், ஒளிபரப்பு, தொலைபேசி சார்ந்த சேவைகள் முதலானவற்றிற்கு பயன்படுத்திக் கொள்ளப்படுகின்றன. விண்வெளிப் பயன்பாடுகள் மையமானது செயற்கைக்கோள்களுக்கான ஒளிஇழை மற்றும் நுண்ணலை சென்சார்களை வடிவமைத்துத் தயாரிக்கிறது. மேலும் சிக்னல் மற்றும் இமேஜ் புராசசிங் மென்பொருள், ஜிஐஎஸ் மென்பொருள் மற்றும் இஸ்ரோவின் புவியைக் கூர்ந்து கவனித்தல் திட்டத்திற்கான பல செயலிகளை இந்த மையம் வடிவமைத்து உருவாக்கித் தருகின்றது.
மனிதர் பயணிப்பதற்கான விண்வெளி ஓட ஆராய்ச்சி மையம்(Human Space Flight Centre # HSFC)
மனிதர் பயணித்து இயக்கும் விண்வெளி ஓட நடவடிக்கைகளுக்கான முன்னணி மையமாக 2019-ஆம் ஆண்டு மனிதர் பயணிக்கும் விண்வெளி ஓட மையம் தொடங்கப்பட்டது. மனித அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் புதிய பலப் பிரிவுகளில் பல்துறை சார்ந்த ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகளில் இந்த மையம் ஈடுபட்டுள்ளது. நம்பகத்தன்மை, மனிதப் பாதுகாப்புக்கான உயர்நிலைத் தர மதிப்பீடுகள் உறுதி செய்யப்படுகின்றன. இந்த மையம் தற்போது ககன்யான் இயக்கத்தைச் செயல்படுத்துவதில் முனைந்துள்ளது. தொடக்கம் முதல் இறுதி வரையிலான இயக்கத் திட்டமிடல், சுற்றுப்பாதையில் தங்கும் இடவசதியை மேம்படுத்துதல், உயிர் வாழ்வதற்கான ஆதரவு அமைப்புகளை அபிவிருத்தி செய்தல், விண்வெளி வீரர்களை தேர்ந்தெடுத்துப் பயிற்சி அளித்தல், பல்வேறு பயிற்சி சிமுலேட்டர்களைத் தயாரித்தல், விண்வெளி வீரர்களை மீட்டெடுத்தல், மறுவாழ்வுக்கான ஒருங்கிணைப்பு, தொழில்நுட்பக் கூட்டு முயற்சியை முன்னெடுக்கும் மையமாக செயல்படுவதற்காக தேசிய மற்றும் சர்வதேச முகமைகள் / நிறுவனங்கள் கியவற்றுடன் ஒருங்கிணைந்து செயலாற்றுதல் ஆகிய பிரிவுகளுக்கு முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. இந்த மையம் தற்போது பெங்களூருவில் உள்ள இஸ்ரோ தலைமையக வளாகத்தில் இருந்து செயல்பட்டு வருகிறது.
தேசியத் தொலையுணர்வு மையம்(National Remote Sensing Centre # NRSC)
செயற்கைக்கோள்கள் அனுப்பும் தரவுகளை நிறுவுவதற்கான தரைக் கட்டுப்பாட்டு நிலையங்கள் அமைப்பதை கட்டாயப் பணியாக தேசியத் தொலையுணர்வு மையம் மேற்கொண்டுள்ளது. தரவு சார்ந்த தொகுப்புகளை உருவாக்குதல், வான்வழி தொலையுணர்வுத் தரவு சேகரிப்பு, பயனாளர்களுக்கு தரவுகளைப் பிரித்துத் தருதல், பேரிடர் மேலாண்மை ஆதரவு உள்ளிட்ட தொலையுணர்வு செயல்களுக்கான தொழில்நுட்பங்களை உருவாக்குதல், சிறந்த ஆளுகைக்கான புவிவெளிசார் சேவைகள், தொழில் நிபுணர்கள், விஞ்ஞானிகள், மாணவர் களுக்குத் திறன் கட்டமைப்புப் பயிற்சிகளை நடத்துதல் ஆகியனவும் இந்த மையத்தின் செயல்பாடுகள் ஆகும். தேசிய மற்றும் பிராந்திய புவி வெளிசார் தேவைகளை நிறைவேற்றுவதற்காக தேசிய தொலையுணர்வு மையம் பல்வேறு வளாகங்களில் செயல்பட்டு வருகிறது.
இஸ்ரோ உந்துசக்தி வளாகம்(ISRO Propulsion Complex # IPRC)
மகேந்திரகிரியில் உள்ள இஸ்ரோ உந்துசக்தி வளாகமானது ஏவுகணை ஏவூர்திகளைத் தயாரித்தல் மற்றும் இயக்குதலில் திரவ உந்துசக்தி அமைப்பு களை சேர்த்தல், ஒருங்கிணைத்தல் மற்றும் பரிசோதித்தல் ஆகிய பணி களுக்கு பொறுப்பான மையமாகச் செயல்பட்டு வருகிறது. திரவ இயந்திரங்கள் கிரையோஜெனிக் இயந்திரங்கள், விண்கல இயந்திரங்கள் மற்றும் முடுக்கிகள் ஆகியவற்றின் தரம், பரிசோதனை மற்றும் ஏற்பு ஆகியவற்றிற்கான பொறுப்பும் இந்த மையத்தையே சேரும். கோள்களுக்கு இடையிலான விண்வெளிப் பயணத் திட்டங்களுக்கு சிமுலேஷன் பரிசோதனைகள் மேற்கொள்வதற்கான வசதியையும் இந்த மையமானது வழங்குகிறது. இஸ்ரோவின் விண்வெளித் திட்டங்களுக்கான அதிநவீனத் தொழில்நுட்பப் பொருள்களை பயன்படுத்துவதற்குத் தேவையான விஞ்ஞான வசதிகளும் இஸ்ரோ உந்துசக்தி வளாகத்தில் உள்ளன.
இஸ்ரோ டெ-லிமெட்ரி, தடம் அறிதல் மற்றும் ஆணையிடல் பின்னலமைப்பு(ISRO Telemetry, Tracking and Command Network # ISTRAC)
இந்த வலைப்பின்னல் மையத்திற்கு டெ-லிமெட்ரி, தடம் அறிதல் மற்றும் ஆணையிடல்(Telemetry, Tracking and Command # TTC) ஆகியவற்றிற்கான முதன்மைப் பொறுப்புகள் வழங்கப் பட்டுள்ளன. மேலும் செலுத்து வாகனமான ஏவூர்திகளுக்கான கட்டுப்பாட்டுச் சேவைகள், மின்ஒளி இழை அமைப்பு களுக்கான ஆய்வுக்கூடம் (Laboratory for Electro#optics Systems # LEOS), இஸ்ரோவின் கோள்களுக்கு இடையிலான விண்கலங்களின் பயணத் திட்டங்கள் ஆகியவையும் இந்த வலைப்பின்னல் மையத்தின் கூடுதல் பொறுப்பாக நேவிகேஷனின் சிக்கலான தரைக்கட்டுப்பாட்டுப் பிரிவின் இயக்குதல் பணியும் உள்ளது. ராக்கெட்டுகளை தடம் அறிதல், வானிலைப்பயன்படுகளுக்கான ரேடார் அமைப்புகளை உருவாக்கும் பணி, தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள், பேரிடர் மேலாண்மைச் சேவைகள், தொலைமருத்துவம், தொலைநிலைக்கல்வி போன்ற வெளிசார்ந்த சேவைகளுக்கான உதவி ஆகியவற்றையும் இந்த மையம் மேற்கொண்டு வருகிறது.
தலைமைக் கட்டுப்பாட்டு மையம்(Master Control Facility # MCF)
தலைமைக் கட்டுப்பாட்டு மையமானது சுற்றுவட்டப்பாதையில் இயக்குதல்கள் (OOP), புவிநிலை / புவி ஒருங்கிணைப்பிற்கான ராக்கெட்டுகளை ஏவுதல் மற்றும் ஆரம்பக்கட்ட சுற்று வட்டப்பாதை செயல்பாடுகள்(Low Earth Orbit Program # LEOP),இஸ்ரோவின் ஐஆர்என்எஸ்எஸ் பிரிவு விண்கலங்கள் Indian Regional Navigation Satellite System) ஆகியவற்றிற்கான பொறுப்புகளை மேற்கொண்டுள்ளது. கர்நாடகாவின் ஹாசனில் உள்ள தலைமைக் கட்டுப்பாட்டு மையமானது 140 டிகிரிக்கு மேல் புவி வளைவுப் பார்வை கொண்டதாகும். இந்த மையம் தெற்காசியப் பிராந்தியத்தின் மிகப்பொருத்தமான கட்டுப்பாட்டு மையமாக விளங்குகிறது. ஹாசன் மற்றும் போபால் மையங்களில் உள்ள வசதிகள் ஒருங்கிணைந்து இப்பொழுது ஜியோசாட் கண்காணிப்பையும் பராமரிப்பையும் மேற்கொண்டு வருகின்றன. தொடர்பியல், வானிலை ஆய்வு மற்றும் நேவிகேஷன் என வகை பிரிக்கப்படும். பேலோடுகளுடன் கூடிய ஐஆர்என்எஸ்எஸ் வகை விண்கலன்களையும் இந்த மையம் கையாளுகின்றது.
இஸ்ரோ இனர்ஷியல் சிஸ்டம்ஸ் ஆய்வுப் பிரிவு (ISRO Inertial Systems Unit IISU)
திருவனந்தபுரத்தில் உள்ள இஸ்ரோ இனர்ஷியல் சிஸ்டம்ஸ் ஆய்வுப் பிரிவானது ஏவூர்திகள் மற்றும் செயற்கைக்கோள்களுக்கான இனர்ஷியல் அமைப்புகளை வடிவமைத்து மேம்படுத்தும் பணிக்கும் பொறுப்பான பிரிவாகச் செயல் படுகின்றது. இயந்திரச் சுழற்சிகள் மற்றும் ஒளி சுழற்சிகள் ஆகியவற்றின் அடிப்படையிலான இனர்ஷியல் நேவிகேஷன் அமைப்புகள், விண்கலத்தின் இருப்பைத் தெரிவிக்கும் அமைப்புகள், சுழற்சி விகிதத் தொகுப்புகள் மற்றும் விரைவு முடுக்கித் தொகுப்புகள் போன்ற முக்கியமான அமைப்புகள் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டு இஸ்ரோவின் பல்வேறு விண்வெளிப் பயணத் திட்டங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளன. விண்கலம் மற்றும் அது சார்ந்த பயன்பாடுகளுக்கான எதிர்வினைச் சக்கரம், உந்துவிசைச் சக்கரம், சூரிய எரிசக்தி முடுக்கி மற்றும் ஸ்கேன் உத்திகள் போன்ற ஆக்ச்சுவேட்டர்ஸ் - மெக்கானிசம்ஸ் என்பதையும் இந்தப் பிரிவு வடிவமைத்து மேம்படுத்துகின்றது. இஸ்ரோ இனர்ஷியல் சிஸ்டம்ஸ் பிரிவானது ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்திப் பணிகளில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகின்றது.
மின்-ஒளியியல் அமைப்புகளுக்கான ஆய்வுக்கூடம் (Laboratory for Electro#optics Systems # LEOS)
விண்கலத்தின் இருப்பு நிலையை உணரக்கூடிய சென்சார்கள், அதிக படத்தெளிவு கொண்ட இமேஜிங் ஒளியியல், பல்வேறு விண்கலன்களுக் கான குறிப்பிட்ட நோக்கத்திற்கான விஞ்ஞானக் கருவிகள் ஆகியவற்றை வடிவமைத்தல், மேம்படுத்துதல் மற்றும் தயாரித்தல் ஆகிய செயல்களுக்கு முன்னணி ஆய்வுக்கூடமாக மின் ஒளியியல் அமைப்புகளுக்கான ஆய்வுக்கூடம் செயல்படுகின்றது. நட்சத்திர உணர்விகள், புவி உணர்விகள், சூரிய உணர்விகள், காந்தப்புல உணர்விகள், நுண்இழை ஒளியியல் சுழற்சிக் கருவி (Laser#inducedbreakdown spectroscopy#LIBS) வெப்ப உணர்விகள் மற்றும் எம்இஎம்எஸ் அடிப்படையிலான சாய்வுமானி ஆகியவை உணர்வி அமைப்புகளில் உள்ளடங்கும். ஒளியியல் அமைப்புகளில் தொலையுணர் கேமராக்கள், ரேடியோ மீட்டர்கள், சென்சார்கள், ஒளி வடிகட்டிகள், ஒளி மறைப்புத் திரைகள், ஒளிப்பூச்சுகள், அகச்சிவப்புக் கதிர்களைக் கண்டறியும் கருவிகள், ராட்ஹார்ட் புறஊதாக் கதிர்களைக் கண்டறியும் கதிர்வீச்சு மானி மற்றும் போட்டோ மீட்டர்கள் ஆகியன ஒளியியல் அமைப்புகளில் உள்ளடங்கும். லேசர் கதிர் அடிப்படை யில் செயல்படும் பிரேக்டவுன் ஸ்பெக்ட்ரோஸ்கோப்பி (Visible Emission Line Coronagraph & Solar Ultraviolet Imaging Telescope VELC & SUIT), எம்இஎம்எஸ் நிலநடுக்க மானி மற்றும் ஆதித்யா-எல்1 (யண்ள்ண்க்ஷப்ங் ஊம்ண்ள்ள்ண்ர்ய் கண்ய்ங் ஈர்ழ்ர்ய்ஹஞ்ழ்ஹல்ட் & நர்ப்ஹழ் மப்ற்ழ்ஹஸ்ண்ர்ப்ங்ற் ஒம்ஹஞ்ண்ய்ஞ் பங்ப்ங்ள்ஸ்ரீர்ல்ங் யஊகஈ & நமஒப) செயற்கைக்கோளின் பேலோடு களுக்கான பிரத்யேக ஒளியியல் ஆகியவை விஞ்ஞான பேலோடுகளில் உள்ளடங்கும்.
தொலையுணர்தலுக்கான இந்தியக் கல்வி நிலையம்(Indian Institute of Remote Sensing # IIRS))
டேராடூனில் உள்ள தொலையுணர்தலுக் கான இந்தியக் கல்வி நிறுவனம் தொலையுணர்தல், புவிசார் தகவலி-யல் மற்றும் அவற்றின் பயன்பாட்டுக்கான திறன் கட்டமைப்பை முதுநிலை பட்ட அளவில் கல்வி மற்றும் பயிற்சியாக வழங்குதல் என்ற முக்கிய குறிக்கோளுடன் முதன்மைக் கல்வி நிறுவனமாகச் செயல்பட்டு வருகின்றது. 1966-ஆம் ஆண்டு இந்த நிறுவனம் இந்திய புகைப்பட விவரணை நிறுவனமாகத் தொடங்கப்பட்டிருந்தது. தென்கிழக்கு ஆசியாவிலேயே இந்த வகையில் இதுதான் முதல் நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிறுவனம் தொடங்கப்பட்டதில் இருந்து பயனாளர் சமூகத்திற்கு தொழில் நிபுணர்களுக்கு பணியிடைப் பயிற்சி மூலம் திறன் கட்டமைக்கும் முதன்மைச் செயலை இந்த நிறுவனம் தொடர்ந்து செய்து வருகின்றது. இந்த நிறுவனம் இன்று மிகப் பெரும் அளவில் வளர்ச்சி பெற்றுள்ளது. புதிய பட்டதாரிகள் முதல் கொள்கை உருவாக்குநர்கள் வரை, கல்வியாளர்கள், தொழிற்சாலையினர், தன்னார்வத் தொண்டு நிறுவனத்தினர் எனப் பல்வேறு பங்குதாரர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய பல்வகைப் பயிற்சித் திட்டங்களையும் கல்வித் திட்டங்களையும் இந்த நிறுவனம் உருவாக்கியுள்ளது.
வளர்ச்சி மற்றும் கல்வித் தொடர்பியலுக்கான பிரிவு (Development and Educational Communication Unit # DECU)
1983-ஆம் ஆண்டு அகமதாபாத்தில் வளாச்சி மற்றும் கல்வித் தொடர்பியலுக் கான பிரிவு தொடங்கப்பட்டது. நாட்டின் செயற்கைக்கோள் அடிப்படை யிலான சமூகத் தேவைகளை நிறைவேற்றுவதற்கான இஸ்ரோவின் முக்கியமான பிரிவாக இது செயல்பட்டு வருகின்றது. அமைப்பை வரையறை செய்தல், திட்டமிடுதல், நடைமுறையாக்கல், பயன்பாடுகள் குறித்த சமூக ஆராய்ச்சி மற்றும் மதிப்பீடு ஆகியவற்றை இந்தப் பிரிவு மேற்கொண்டு வருகிறது. இந்தப் பணிக்காக இந்த பிரிவானது பயனாளர் முகமைகளுடன் இணைந்து, அவர்களது தேவைகளை நிறைவேற்றும் வகையில் புத்தாக்க அளவுக் குறியீட்டுத் தொகுப்புகளுக்கு ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகிறது. தொடர்பியல், கல்வித் தொடர்பியலுக்கான பாடப்பொருள்களைத் தயாரித்தல் ஆகியவற்றிற்காக இந்தப் பிரிவு மேற்கொண்டு வரும் பயன்பாடு சார்ந்த ஆராய்ச்சிகள் மற்றும் செயல் விளக்கங்கள், இறுதிநிலைப் பயனாளருடன் இணைந்து பணியாற்றுதல் ஆகியன வளர்ச்சி மற்றும் கல்வித் தொடர்பியலுக்கான பிரிவில் வசதிகள் விண்வெளி ஆராய்ச்சியின் கடைக்கோடி வரை கிடைக்கச் செய்கின்றன. செயற்கைக்கோள் தொடர்பியலி-ன் பல்வேறு சமுதாயம் சார்ந்த பயன்பாடுகளை கருத்து நிலையில் உருவாக்குதலும் செயல் விளக்கம் தருதலும் இந்தப் பிரிவின் முக்கியப் பொறுப்பாகும்.
இயற்பியல் ஆராய்ச்சிக்கான ஆய்வகம்(Physical Research Laboratory # PRL)
அகமதாபாத்தில் உள்ள இயற்பியல் ஆராய்ச்சிக்கான ஆய்வகம் விண்வெளி ஆராய்ச்சித் துறையின் கீழ் செயல்படும் தன்னாட்சி பெற்ற ஓர் ஆய்வுப் பிரிவாகும். வானியல், வான் இயற்பியல், சூரிய இயற்பியல், கோள்களின் அறிவியல் மற்றும் கண்டுபிடிப்புகள், விண்வெளி மற்றும வளிமண்டல அறிவியல், புவிசார் அறிவியல், கோட்பாட்டு இயற்பியல், அணுஇயற்பியல், மூலக்கூறு மற்றும் ஒளியியல் இயற்பியல், விண்வேதியியல் ஆகிய பிரிவுகளில் அடிப்படை ஆய்வுகளை மேற்கொள்ளக்கூடிய முதன்மை ஆராய்ச்சி நிறுவனமாக இந்த ஆய்வகம் திகழ்கிறது. இந்த ஆய்வகத்தின் முதன்மை பணிக்கடமை என்பது ஆராய்ச்சிகளை மேற்கொள்ளுதல், விஞ்ஞான ஆய்வுக் கட்டுரைகளை வெளியிடுதல், குறிப்பிட்ட அறிவியல் இலக்குகளை செயல்படுத்துவதற்கான பொருத்தமான கருவிகளை உருவாக்குதல் ஆகியவையாகும்.
தேசிய வளிமண்டல ஆராய்ச்சிக்கான ஆய்வகம்(National Atmospheric Research Laboratory # NARL)
திருப்பதிக்கு அருகில் உள்ள கதன்கி என்ற இடத்தில் செயல்பட்டு வருகின்ற தேசிய வளிமண்டல ஆராய்ச்சிக்கான ஆய்வகம் ஒரு தன்னாட்சி பெற்ற நிறுவனமாகும். கூர்ந்து நோக்குதல், மாதிரி ஆய்வுகளை மேற்கொள்ளுதல் மூலமாக புவியின் வளிமண்டலத்தின் போக்கினை முன்கூட்டியே கணிப்பதற்கான திறனை வளர்க்க வேண்டும் என்ற தொலைநோக்குப் பார்வையுடன் வளிமண்டல மற்றும் விண்வெளி அறிவிய-லில் அதிநவீன ஆராய்ச்சிகளை இந்த ஆய்வகம் மேற்கொண்டு வருகிறது. இந்த தொலைநோக்குப் பார்வையை நிறைவேற்றும் வகையில் இந்த ஆய்வகமானது தொழில்நுட்ப அபிவிருத்தி, கூர்ந்து நோக்கல் பணி, தரவு தொகுப்புக் காப்பகம் மற்றும் தரவு பிரித்தளித்தல், தரவுகளைத் தொகுத்தல், மாதிரி ஆய்வு ஆகியவற்றிற்கு சமமான முக்கியத்துவத்தை அளிக்கிறது. சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து ராக்கெட் ஏவும் செயலுக்கு உதவிடும் வகையில் மேற்புறத்தில் உள்ள காற்று நகர்வின் அதிகபட்ச துல்-லியமான தரவினையும் சீதோஷ்ண நிலை குறித்த முன்னறிவிப்பினையும் இந்த நிறுவனமானது அளித்து வருகின்றது. தேசிய வளிமண்டல ஆராய்ச்சிக்கான ஆய்வகமானது மிகச்சிறந்த ஆராய்ச்சித் திட்டங்களையும் திறன் கட்டமைப்புப் பயிற்சிகளையும் பொதுமக்களுக்குத் தகவல் அளிக்கும் செயல்பாடுகளையும் செவ்வனே மேற்கொண்டு வருகிறது.
விண்வெளிப் பயன்பாடுகளுக்கான வடகிழக்கு மையம் (NE#SAC)
விண்வெளி ஆராய்ச்சித் துறையின் கீழ் தன்னாட்சி நிறுவனமாக செயல்படுகின்ற விண்வெளி பயன்பாடு களுக்கான வடகிழக்கு மையமானது விண்வெளித்துறை மற்றும் வடகிழக்கு கவுன்சில் (NEC) ஆகியவற்றின் கூட்டு முயற்சியில் முன்னெடுக்கப்பட்ட நிறுவனம் ஆகும். ஆளுகை மற்றும் வளர்ச்சிக்கு விண்வெளி அடிப்படை யிலான ஆதரவை வழங்க வேண்டும் என்ற பணிக்கடமையுடன் இந்த மையம் செயல்பட்டு வருகின்றது. இதற்காக இந்த மையமானது இயற்கை மூலவள மேலாண்மை, உள்கட்டமைப்பு வசதிக்கான திட்டமிடல், சுகாதாரப் பராமரிப்பு, கல்வி, அவசரக்காலத் தொடர்பியல், பேரிடர் மேலாண்மை, வளிமண்டல அறிவியல் ஆராய்ச்சி ஆகிய புலங்களில் ஆராய்ச்சித் திட்டங்களை மேற்கொண்டு வருகின்றது. புவிவெளித் தொழில்நுட்பம் மற்றும் ஆளில்லாமல் விண்வெளியில் இயங்கும் வாகனம் அடிப்படையிலான தொலையுணர் பயன்பாடுகள் ஆகிய புலங்களில் பயிற்சி மற்றும் திறன் கட்டமைப்பு செயல்பாடுகளையும் இந்த மையம் மேற்கொண்டு வருகிறது. மேலும் இந்த மையமானது வடகிழக்குப் பிராந்தியத்திற்கான மாநிலத் தொலையுணர் பயன்பாட்டு மையங்களோடு ஒருங்கிணைந்து பணியாற்றுகிறது. விண்வெளி சார்ந்த உள்ளீடுகளுக்கான தேவைகன் இருக்கின்ற மிக முக்கியமான தேசிய மற்றும் பிராந்தியத் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கான ஒருங்கிணைப்பு மையமாகவும் இந்த மையம் செயல்படுகிறது. இந்தியாவின் வடகிழக்குப் பிராந்தியத்தின் முழுமையான வளர்ச்சிக்கு இந்த மையம் இருபது ஆண்டுகளுக்கும் மேலாக அர்ப்பணிப்புடன் பணியாற்றி வருகிறது.
விண்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்திற்கான இந்தியக் கல்வி நிறுவனம் ((IIST)
ஆசியாவின் முதல் விண்வெளிப் பல்கலைக்கழகமான ஐஐஎஸ்டி திருவனந்தபுரத்தில் 2007-ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. இந்திய விண்வெளித் திட்டத்திற்கான தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் விண்வெளி அறிவியல் தொழில்நுட்பத்தில் உயர்தரத்திலான கல்வியை வழங்குவதற்காக ஐஐஎஸ்டி தொடங்கப்பட்டது. விண்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்திற் கான இந்தியக் கல்வி நிறுவனமானது விண்வெளி அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் பயன்பாடுகள் ஆகிய பரந்துபட்ட புலங்களில் இளநிலை, முதுநிலை, முனைவர்பட்ட ஆராய்ச்சி. முனைவர் பட்டத்திற்கு பிறகான உயர்நிலை ஆராய்ச்சி ஆகிய படிப்புகளை வழங்குகிறது. கற்பித்தல், கற்றல், ஆராய்ச்சி ஆகியவற்றில் தகைசால் தகுதியை பெறும் வகையில் இந்தக் கல்வி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. விண்வெளி ஆய்வுகளில் அதிநவீன ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தியை ஐஐஎஸ்டி மேற்கொண்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல், இந்திய விண்வெளித் திட்டத்திற்கான புதிய ஆய்வு திசைகளைக் கண்டறிவதற்கான சிந்தனைச் சுரங்கமாகவும் இந்தக் கல்வி நிறுவனம் விளங்குகிறது.
ஆன்ட்ரிக்ஸ் கார்ப்பரேஷன் லி-மிடெட் (Antrix Corporation Limited # ACL)
ஆன்ட்ரிக்ஸ் கார்ப்பரேஷன் -லிமிடெட்டின் நிறுவன அலுவலக மானது கர்நாடகாவின் பெங்களூருவில் உள்ளது. இந்திய அரசிற்கு முழு சொந்தமான இந்தக் கம்பெனியானது விண்வெளித் துறையின் நிர்வாகக் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படுகின்றது. விண்வெளி தொழில்பிரிவின் உற்பத்திப் பொருள்களையும், சேவைகளையும் உலகம் முழுவதும் வழங்கும் பணியில் ஆன்ட்ரிக்ஸ் ஈடுபட்டு வருகிறது. வன்பொருள் மற்றும் மென்பொருள் விநியோகம், புவியைக் கூர்ந்து நோக்குதல், விஞ்ஞான ஆய்வுப் பயணத் திட்டங்கள், தொலையுணர் தரவுச் சேவைகள், ட்ரான்ட்ஸ்பான்டர் குத்தகைச் சேவைகள், ஏவுகணை ஏவும் சேவைகள், விண்வெளி ஆய்வுப் பயணத்திற்கான உதவிச் சேவைகள் மற்றும் ஏனைய தொடர்புடைய சேவைகளை ஆன்ட்ரிக்ஸ் கார்ப்பரேஷன் லி-மிடெட் வழங்கி வருகிறது.
நியூஸ்பேஸ் இந்தியா லி-மிடெட் (Newspace India Limited - NSIL)
இந்திய அரசிற்கு முற்றிலும் சொந்தமான மத்தியப் பொதுத்துறைத் தொழில் நிறுவனமாக நியூஸ்பேஸ் இந்தியா லி-மிடெட் 2019-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த நிறுவனம் இந்திய விண்வெளித் துறையின் நிர்வாகக் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படுகிறது. மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களுக்கான துறையானது நியூஸ்பேஸ் இந்தியா லி-மிடெட்டை ஷெட்யூல்ட் ஏ பொதுத்துறை நிறுவனமாக வகைப்படுத்தியுள்ளது. அரசானது நியூஸ்பேஸ் இந்தியா -லிமிடெட்டின் பணிவரம்பையும் வாய்ப்பையும் ஜூன் 2020-ஆம் ஆண்டு விரிவுபடுத்தியுள்ளது. இதன் மூலம் இந்த நிறுவனத்தின் முதன்மை வர்த்தகப் பணிகளுக்கான பொறுப்புடைமைகளும் வாய்ப்புகளும் அதிகரித்துள்ளன.
இந்திய தேசிய விண்வெளி அபிவிருத்தி மற்றும் அங்கீகார மையம் (IN-SPACE)
விண்வெளித் துறையில் தனியார் நிறுவனங்கள் ஈடுபட அனுமதித்துள்ள நிலையிலும் விண்வெளி பணிகளில் ஸ்டார்ட்அப்புகள் தொடங்கப்பட்டு வரும் நிலையிலும் இத்தகைய தனியார் நிறுவனங்களின் நடவடிக்கைகளுக்கு உதவவும், சீரமைக்கவும், அங்கீகரிக்கவும் ஒரு தனிப்பட்ட ஒருங்கிணைப்பு முகமை யாக இந்திய தேசிய விண்வெளி அபிவிருத்தி மற்றும் அங்கீகார மையமானது விண்வெளித் துறையின் கீழ் உருவாக்கப்பட்டுள்ளது.
ராக்கெட்டுகள் மற்றும் செயற்கைக்கோள் களைக் கட்டமைத்தல் உள்ளிட்ட விண்வெளி சார்ந்த செயல்பாடுகளை இந்த மையம் ஒழுங்குமுறைபடுத்தும். மேலும் விண்வெளி சார்ந்த நடவடிக்கைகளுக்கான வரையறைக்கு உட்பட்டு விண்வெளி சார்ந்த தேவைகளையும் இந்த மையம் வழங்கும். இஸ்ரோவின் உள்கட்டமைப்பு வசதிகளைப் பகிர்ந்து கொள்வதற்கு இந்த மையம் அனுமதி அளிப்பதோடு இஸ்ரோவின் வளாகங்களுக்குள்ளேயே தற்காலி-கத் தொழிலக வசதிகளை உருவாக்கிக் கொள்ளவும் அனுமதி யளிக்கிறது. இந்திய தேசிய விண்வெளி அபிவிருத்தி மற்றும் அங்கீகார மையத்தின் தலைமையகம் அகமதாபாத் திலும் கள அலுவலகங்கள் பெங்களூரு விலும், மும்பையிலும் உள்ளன.