சுதந்திர தின பிரதமர் உரையின் முக்கிய அம்சங்களானது, உலகின் மிகப் பெரிய ஜனநாயகமாகவும் அதே போல் மக்கள்தொகை பின்னணியிலும் நாம் முதலாவது இடத்தில் இருப்பதாக நம்பிக்கைக் கொண்டுள்ளோம்.
அத்தகைய மகத்தான தேசம் இன்று தனது 140 கோடி சகோதர சகோதரிகள் மற்றும் அனைத்து குடும்ப உறுப்பினர் களுடன் சுதந்திரத் திருநாளைக் கொண்டாடுகிறது. இந்த முக்கியமான, புனிதமான தருணத்தில், நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும், நமது தேசமான இந்தியாவை நேசிக்கும், மதிக்கும் மற்றும் பெருமை கொள்ளும் ஒவ்வொருவருக்கும் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஒத்துழையாமை/சட்டமறுப்பு/ சத்தியாகிரக இயக்கம் ஆகியவற்றில் நமது "பூஜ்யபாபு' என போற்றப்படும் மதிப்பிற்குரிய மகாத்மா காந்தியடிகள், பகத் சிங், சுக்தேவ், ராஜ்குரு போன்ற மாவீரர்கள் மற்றும் அவர்களின் தலைமுறையினர் என நாட்டின் சுதந்திரத்திற்கு பங்களிக்காதவர்களே இருக்க முடியாது. நமது சுதந்திரப் போராட்டத்தின் போது பங்களித்த மற்றும் தங்கள் இன்னுயிரைத் தியாகம் செய்த அனைவருக்கும் இன்று நான் மரியாதையுடன் அஞ்சலி செலுத்துகிறேன். எங்களுக்கு ஒரு சுதந்திர தேசத்தை வழங்கியதில் அவர்களின் தியாகத்திற்கு நான் தாழ்மையுடன் தலைவணங்குகிறேன்.
ஆகஸ்ட் 15-ஆம் நாளான இன்று, ஆன்மீக வாழ்க்கையின் மாபெரும் புரட்சியாளரும் முன்னோடியுமான ஸ்ரீ அரவிந்தரின் 150-வது பிறந்த நாளாகும். சுவாமி தயானந்த சரஸ்வதியின் 150-வது பிறந்த நாளும் ஆகும். இந்த ஆண்டு நமது தேசம், புகழ்பெற்ற பெண் போராளி ராணி துர்காவதியின் 500-வது பிறந்த நாளை மிகவும் உற்சாகமாக கொண்டாடவிருக்கிறது. ஆன்மீகத்தில் திளைத்த மீராபாய் வாழ்க்கையின் 525-வது ஆண்டு நிறைவையொட்டி, 'பக்தி மற்றும் யோகத்தின்' முன்னோடியான மீராபாயையும் நாம் நினைவுகூர்வோம். நமது நாடு அடுத்த ஆண்டு ஜனவரி 26-ஆம் தேதி குடியரசு தினத்தன்று 75-வது ஆண்டின் தொடக்கத்தைக் கொண்டாட உள்ளது. புதிய உத்வேகங்கள், புதிய மனஉணர்வு, புதிய தீர்மானங்கள் ஆகியவற்றுடன், நாடு ஏராளமான சாத்தியங்களையும் வாய்ப்புகளையும் உருவாக்கும் நாளைவிட, தேச வளர்ச்சிக்கு அர்ப்பணிப்பதற்கு ஒரு பெரிய நாள் வேறு இருக்காது.
அனைவருக்கும் மகிழ்ச்சி, அனைவருக்கும் ஆரோக்கியம்; ஒன்றன்பின் ஒன்றாக நாம் முடிவுகளை எடுப்போம். அடுத்த 1000 ஆண்டுகளுக் கான நாட்டின் பொற்கால வரலாறு அதிலிருந்து வெளிவரவிருக்கிறது. இந்தக் காலக்கட்டத்தில் நடக்கும் நிகழ்வுகள் அடுத்த 1000 ஆண்டுகளில் தாக்கத்தை ஏற்படுத்த உள்ளன. அடிமை மனப்பான்மையில் இருந்து மீண்டு, ஐந்து உறுதிமொழிகளுக்கு அர்பணித்துக் கொண்டுள்ள நாடு, இன்று புதிய தன்னம்பிக்கையுடன் முன்னேறி வருகிறது. புதிய தீர்மானங் களை நிறைவேற்ற முழு மனதுடன் நாடு செயல்பட்டு வருகிறது. ஒரு காலத்தில் சக்தியின் மையமாக இருந்த, ஆனால் சாம்பல் குவியலுக்கு அடியில் புதையுண்ட எனது பாரதத்தாய், 140 கோடி மக்களின் முயற்சியாலும், விழிப்புணர்வாலும், ஆற்றலாலும் மீண்டும் விழித்தெழுந்திருக்கிறாள். கடந்த 9-10 ஆண்டுகளில் இந்தியா மீது, இந்தியாவின் ஆற்றலை நோக்கி உலகம் முழுவதும் ஒரு புதிய நம்பிக்கையும், ஒரு புதிய ஈர்ப்பும் உருவாகியுள்ளது என்பதை நாம் அனுபவம் கொண்டுள்ளோம். இந்தியாவில் இருந்து வெளிப்படும் இந்த ஒளிக்கற்றையில் உலகம் தனக்கான ஒரு தீப்பொறியைக் காண முடியும். உலகம் முழுவதும் ஒரு புதிய நம்பிக்கை வளர்ந்து வருகிறது.
நம் மூதாதையர்களிடமிருந்து சில விஷயங்களைப் பெற்றிருப்பதாலும், தற்போதைய சகாப்தம் கூட வேறு சில விஷயங்களை உருவாக்கியுள்ளதாலும் நாம் அதிர்ஷ்டசாலிகள். இன்று நம்மிடம் மக்கள்தொகை உள்ளது; நம்மிடம் ஜனநாயகம் உள்ளது; நம்மிடம் பன்முகத்தன்மை உள்ளது. மக்கள்தொகை, ஜனநாயகம், பன்முகத்தன்மை என்ற மும்மூர்த்திகள் இந்தியாவின் ஒவ்வொரு கனவையும் நிறைவேற்றும் ஆற்றலைக் கொண்டுள்ளனர். உலகெங்கிலும் உள்ள நாடுகள் வயதான கட்டமைப்பை இன்று கண்டு வரும் நிலையில், இந்தியா தனது இளமையான கட்டமைப்பை நோக்கி சுறுசுறுப்பாக நகர்ந்து வருகிறது. இது மிகவும் பெருமைக்குரிய காலமாகும். ஏனெனில் இந்தியா இன்று 30 வயதிற்குட்பட்ட மக்கள் தொகையை அதிகமாகக் கொண்டுள்ளது. இதைத்தான் எனது நாடு கொண்டுள்ளது. 30 வயதிற்குட்பட்ட இளைஞர்கள்; எனது நாடு கோடிக்கணக்கான கைகளை, கோடிக்கணக்கான மூளைகளை, கோடிக்கணக்கான கனவுகளை, கோடிக்கணக்கான தீர்மானங் களைக் கொண்டுள்ளது! எனவே, எனது சகோதர சகோதரிகளே, எனது குடும்ப உறுப்பினர்களே, நாம் விரும்பிய விளைவுகளை அடையலாம்.
இன்று எனது இளைஞர்கள் உலகின் முதல் மூன்று ஸ்டார்ட்-அப் பொருளாதார அமைப்புகளில் இந்தியாவை ஒரு குறிப்பிட்ட நிலைக்கு கொண்டு சென்றுள்ளனர். இந்தியாவின் இந்த சக்தியை கண்டு உலக இளைஞர்கள் வியந்து போயுள்ளனர். இன்று உலகம் தொழில்நுட்பத்தால் இயக்கப்படுகிறது, வரவிருக்கும் சகாப்தம் தொழில்நுட்பத்தால் செல்வாக்கு செலுத்தப்படவுள்ளது. தொழில்நுட்பத்தில் இந்தியாவின் திறமையை வெளிப்படுத்த இது ஒரு தளத்தை வழங்குகிறது. இது ஒரு புதிய முக்கியமான பங்களிப்பை செலுத்தவிருக்கிறது.
அண்மையில், ஜி-20 உச்சிமாநாட்டிற்காக நான் பாலிக்குச் சென்றிருந்தேன்.
அங்கு நமது டிஜிட்டல் இந்தியாவின் நுணுக்கங்கள் மற்றும் வெற்றியைப் பற்றி அறிந்துகொள்ள உலகின் மிகவும் வளமான மற்றும் வளர்ந்த நாடுகளின் பிரதமர்கள் மிகுந்த ஆர்வத்தை வெளிப்படுத்தினர். இந்தியா சாதித்துள்ள இந்த வியத்தகு சாதனை தில்லி, மும்பை, சென்னை இளைஞர்களின் முயற்சிகளுடன் நின்றுவிடவில்லை, 2-ஆம் நிலை, 3-ஆம் நிலை நகரங்களின் இளைஞர்களாலும்தான் என்று நான் பகிர்ந்து கொண்டபோது அவர்கள் நமது திறமையைப் பார்த்து பிரமித்துப் போனார்கள். இன்று எமது இளைஞர்கள் சிறிய இடங்களிலிருந்து கூட, நாட்டின் புதிய ஆற்றலைக் காண்கிறார்கள் என்பதை நான் மிகுந்த நம்பிக்கையுடன் கூறுகிறேன். அதனால்தான் நான் சொல்கிறேன், நமது சிறிய நகரங்கள் அளவிலும் மக்கள்தொகையிலும் சிறியதாக இருக்கலாம், ஆனால் அவை வெளிப்படுத்திய நம்பிக்கை மற்றும் விருப்பங்கள், முயற்சி மற்றும் தாக்கம் எதுவும் சிறியதாக இல்லை. பயன்பாடுகளை உருவாக்குவதற்கும், தீர்வுகளை வழங்குவதற்கும், தொழில்நுட்ப சாதனங்களை வடிவமைப் பதற்கும் அவர்கள் புதுமையான யோசனைகளைக் கொண்டுள்ளனர். நமது விளையாட்டு உலகம் எப்படி வளர்ந்துள்ளது பாருங்கள். குடிசைப் பகுதிகளிலிருந்து வெளியே வந்த குழந்தைகள் இன்று விளையாட்டு உலகில் வலிமையைக் காண்பிக்கிறார்கள்.
இப்போது பாருங்கள், சிறிய கிராமங்கள், சிறு நகரங்களைச் சேர்ந்த, நமது மகன்கள், மகள்கள் இந்த அரங்கில் இன்று அதிசயங்களை நிகழ்த்தி வருகின்றனர்.
நம் நாட்டில் 100 பள்ளிகளில் சிறார்கள், செயற்கைக்கோள்களை உருவாக்கு கிறார்கள். அவற்றை ஒரு நாள் விண்ணில் ஏவவும் விரும்புகிறார்கள். இன்று ஆயிரக்கணக்கான டிங்கரிங் ஆய்வகங்கள் புதிய விஞ்ஞானிகளை உருவாக்குகின்றன. இன்று, ஆயிரக்கணக் கான டிங்கரிங் ஆய்வகங்கள் லட்சக்கணக் கான குழந்தைகளை அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பாதையைத் தேர்வு செய்ய ஊக்குவிக்கின்றன.
இன்று வாய்ப்புகளுக்கு பஞ்சமில்லை, நீங்கள் விரும்பும் அளவுக்கு, இந்த நாடு அதிக வாய்ப்புகளை உருவாக்கும் திறன் கொண்டது என்பதை எனது நாட்டின் இளைஞர்களுக்கு நான் சொல்ல விரும்புகிறேன். வானமே எல்லை.
எனதருமை குடும்ப உறுப்பினர்களே, இந்தியாவின் திறன்கள் மற்றும் சாத்தியக்கூறுகள் நம்பிக்கையின் புதிய உச்சங்களைக் கடக்கப் போகின்றன என்பது உறுதி. மேலும் திறன்கள் மற்றும் புதிய பலங்கள் மீதான இந்தப் புதிய நம்பிக்கை வளர்க்கப்பட வேண்டும். இன்று, ஜி-20 உச்சிமாநாட்டை நடத்தும் வாய்ப்பு நாட்டிற்கு கிடைத்துள்ளது. கடந்த ஆண்டு முதல் இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் நடைபெற்ற பல்வேறு ஜி-20 நிகழ்வுகள், ஏற்பாடு செய்யப்பட்ட விதம் காரணமாக சாமானிய மக்களின் திறன்களை உலகிற்கு எடுத்துக்காட்டியுள்ளன. இந்த நிகழ்வுகள் இந்தியாவின் பன்முகத்தன்மையை அறிமுகப்படுத்தியுள்ளன. இந்தியாவின் பன்முகத்தன்மையை உலகம் வியப்புடன் கவனித்து வருகிறது. இதன் விளைவாக, இந்தியா மீதான ஈர்ப்பும் அதிகரித்துள்ளது. இந்தியாவை அறிந்து கொள்ளவும், புரிந்து கொள்ளவும் வேண்டும் என்ற ஆவல் அதிகரித்து வருகிறது. அதேபோல், இந்தியாவின் ஏற்றுமதியும் வேகமாக வளர்ந்து வருகிறது. உலகெங்கிலும் உள்ள வல்லுநர்கள், இந்த அளவுகோல்களின் அடிப்படையில், இந்தியா இப்போது நிற்காது என்று கூறுகிறார்கள் என்பதை நான் சொல்ல விரும்புகிறேன். இந்தியாவைப் பாராட்டாத எந்த தரவரிசை நிறுவனமும் உலகில் இல்லை.
இன்று இந்தியா வளரும் நாடுகளின் குரலாக மாறி வருகிறது. இந்தியாவின் வளமும், பாரம்பரியமும் இன்று உலகிற்கான வாய்ப்புகளாக மாறி வருகின்றன. நண்பர்களே, உலகப் பொருளாதாரம் மற்றும் உலகளாவிய விநியோகத் தொடரில் இந்தியாவின் பங்களிப்போடு தனக்கான இடத்தையும் இந்தியா பெற்றிருப்பதன் மூலம், இந்தியாவின் தற்போதைய சூழ்நிலை உலகில் நிலைத்தன்மைக்கான உத்தரவாதத்தைக் கொண்டு வந்துள்ளது என்று நான் முழு நம்பிக்கையுடன் கூற முடியும். இப்போது நம் மனதிலோ, 140 கோடி குடும்ப உறுப்பினர்களின் மனதிலோ, உலக மனதிலோ “இருந்தால்”, “ஆனால்” என்பதெல்லாம் இல்லை. முழு நம்பிக்கை உள்ளது.
நாட்டின் சமச்சீரான வளர்ச்சிக்காக காலத்தின் ஒவ்வொரு கணத்தையும், மக்கள் பணத்தின் ஒவ்வொரு பைசாவையும் செலவிடும் ஓர் அரசு இன்று நாட்டில் உள்ளது; எனது அரசு மற்றும் நாட்டு மக்களின் பெருமை ஒரு விசயத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. நமது ஒவ்வொரு முடிவும், நமது ஒவ்வொரு திசையும் ஒரே அளவுகோலுடன் இணைக்கப் பட்டுள்ளது, அதாவது 'தேசம் முதலில்',
தொலைநோக்கு மற்றும் நேர்மறையான முடிவுகளைத் தரவிருக்கிறது. நாட்டில் பெரிய அளவில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆனால் 2014 மற்றும் 2019-ஆம் ஆண்டுகளில் நீங்கள் ஒரு வலுவான அரசை அமைத்தீர்கள். அதனால்தான் சீர்திருத்தங்களைக் கொண்டு வர மோடிக்கு தைரியம் வந்தது என்று நான் சொல்ல விரும்புகிறேன். சீர்திருத்தங்களைக் கொண்டு வர மோடிக்கு தைரியம் ஊட்டிய அரசை நீங்கள் அமைத்தீர்கள். மோடி ஒன்றன்பின் ஒன்றாக சீர்திருத்தங்களைக் கொண்டுவந்தபோது, இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் அரசின் ஒரு பகுதியாக செயல்படும் எனது அதிகார அமைப்பும் மக்களும் அவர்களின் கோடிக்கணக்கான கைகளும் கால்களும் 'மாற்றத்திற்காக செயல்பட்டன'.
அவர்கள் பொறுப்பை மிகச் சிறப்பாக நிறைவேற்றினர், பொதுமக்கள் இணைந்தபோது, மாற்றத்தை மிகத் தெளிவாகக் காண முடிந்தது.
அதனால்தான் "சீர்திருத்தம், செயல்திறன், மாற்றம்' என்ற இந்த காலக்கட்டம் இப்போது இந்தியாவின் எதிர்காலத்தை வடிவமைக்கிறது. வரவிருக்கும் ஆயிரம் ஆண்டுகளின் அடித்தளத்தை வலுப்படுத்தப் போகும் அந்த சக்திகளை நாட்டிற்குள் நாங்கள் ஊக்குவித்து வருகிறோம்.
ஜல் சக்தி அமைச்சகத்தை உருவாக் கினோம். அந்த அமைச்சகத்தின் அமைப்பை ஆராய்ந்தால், இந்த அரசின் மனதையும் மூளையையும் நீங்கள் மிகவும் நல்ல முறையில் புரிந்து கொள்ள முடியும். நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் சுத்தமான குடிநீர் சென்றடைவதை உறுதி செய்ய ஜல் சக்தி அமைச்சகம் முக்கியத்துவம் அளித்து வருகிறது. சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கான உணர்திறன் அமைப்புகளை உருவாக்குவதில் நாங்கள் மீண்டும் கவனம் செலுத்தி வருகிறோம். நம் நாடு கொரோனாவை தைரியமாக எதிர்கொண்ட பிறகு, உலகம் முழுமையான சுகாதார பராமரிப்பைத் தேடுகிறது; இது காலத்தின் தேவையாகும். நாங்கள் ஆயுஷ் தனி அமைச்சகத்தை உருவாக்கினோம், இன்று யோகா மற்றும் ஆயுஷ், உலகில் அதிர்வலைகளை ஏற்படுத்துகின்றன. உலகத்தின் மீதான நமது அர்ப்பணிப்பு காரணமாக, உலகம் நம்மை உற்று நோக்குகிறது. நம்முடைய இந்தத் திறனை நாமே குறைத்து மதிப்பிட்டால், உலகம் அதை எப்படி ஏற்றுக்கொள்ளும்? ஆனால் இந்த அமைச்சகம் உருவாக்கப்பட்டபோது, உலகமும் அதன் மதிப்பைப் புரிந்துகொண்டது. மீன்வளத்தையும், நமது பெரிய கடற்கரைகளையும் நாங்கள் புறக்கணிக்கவில்லை. கோடிக்கணக்கான மீனவ சகோதர, சகோதரிகளின் நலனை உறுதி செய்வதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். அவர்கள் எங்கள் இதயத்தில் உள்ளனர்,
அதனால்தான் சமூகத்தின் அந்தப் பிரிவினருக்கும் பின்தங்கிய சமூகத் திற்கும் ஆதரவளிக்கும் வகையில் மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளம் ஆகியவற்றுக்கு ஒரு தனி அமைச்சகத்தை உருவாக்கியுள்ளோம்.
நாட்டில் அரசுப் பொருளாதாரத்தின் சில பகுதிகள் உள்ளன. ஆனால் சமூகப் பொருளாதாரத்தின் பெரும் பகுதி கூட்டுறவு இயக்கமாகும். கூட்டுறவு அமைச்சகமும் உருவாக்கப்பட்டுள்ளது. இது நமது கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் அதன் வலையமைப்பை விரிவுபடுத்துகிறது. இதன் மூலம் ஏழைகளிலும் ஏழைகளின் குறைகள் கேட்கப்படுகின்றன. அவர்களின் தேவைகள் பூர்த்தி செய்யப்படுகின்றன. அவர்களும் ஒரு சிறிய அலகின் ஒரு பகுதியாக இருப்பதன் மூலம் நாட்டின் வளர்ச்சிக்கு ஒழுங்கமைக்கப்பட்ட வழியில் பங்களிக்க முடிகிறது. ஒத்துழைப்பின் மூலம் செழிப்பான பாதையை நாங்கள் பின்பற்றினோம்.
வீட்டுவசதித் திட்டங்கள், பிரதமரின் ஸ்வநிதி திட்டத்தின் மூலம் தெருவோர வியாபாரிகளுக்கு 50,000 கோடி ரூபாய் அளவுக்கு கடன் வழங்கியது மற்றும் இன்னும் பல திட்டங்களால் இந்த 13.5 கோடி மக்களை வறுமையின் இன்னல்களிலிருந்து மீள உதவியுள்ளன. வரும் நாட்களில், விஸ்வகர்மா ஜெயந்தியை முன்னிட்டு, பாரம்பரிய கைவினைத் தொழிலில் நிபுணத்துவம் பெற்ற தனிநபர்கள், குறிப்பாக ஓ.பி.சி (இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்) சமூகத்தைச் சேர்ந்தவர்கள் பயனடையும் ஒரு திட்டத்தை நாங்கள் தொடங்குவோம். சுமார் 13-15 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீட்டில் தொடங்கும் விஸ்வகர்மா யோஜனா மூலம் நெசவாளர்கள், பொற்கொல்லர்கள், கொல்லர்கள், சலவைத் தொழிலாளர்கள், முடி திருத்தும் தொழிலாளர்கள் மற்றும் இதுபோன்ற குடும்பங்களுக்கு அதிகாரம் அளிக்கப் படும். பிரதமரின் கிசான் சம்மன் நிதி (விவசாயிகள் கௌரவ நிதி) மூலம் விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக 2.5 லட்சம் கோடி ரூபாய் டெபாசிட் செய்துள்ளோம். ஜல் ஜீவன் இயக்கத்துக்கு 2 லட்சம் கோடி ரூபாய் செலவழித்துள்ளோம், ஒவ்வொரு வீட்டிற்கும் சுத்தமான குடிநீர் வழங்குவதை உறுதி செய்கிறோம். ஆயுஷ்மான் பாரத் சுகாதாரத் திட்டத்தின் கீழ் நோய்வாய்ப்பட்டிருக்கும்போது மருத்துவமனைகளுக்குச் செல்லும் ஏழைகளின் சுமையை நாங்கள் குறைத்துள்ளோம். அவர்களுக்கு மருத்துவம், சிகிச்சை மற்றும் தரமான மருத்துவமனை பராமரிப்பு கிடைப்பதை உறுதி செய்வதற்காக ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் 70,000 கோடி ரூபாய் செலவழித்துள்ளோம். கொரோனா நெருக்கடியின் போது இலவச தடுப்பூசிகளை வழங்க நாங்கள் 40,000 கோடி ரூபாய் செலவழித்தோம் என்பதை நாடு அறியும். ஆனால், கால்நடைகளைக் காப்பாற்ற தடுப்பூசி போடுவதற்காக சுமார் 15,000 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளோம் என்பதை அறிந்து நீங்கள் மகிழ்ச்சியடைவீர்கள்.
ஜன் அவுஷதி எனப்படும் மக்கள் மருந்தக மையங்கள் நமது நாட்டில் உள்ள மூத்த குடிமக்கள் மற்றும் நடுத்தர குடும்பங்களுக்கு புதிய பலத்தை அளித்துள்ளன. கூட்டுக்குடும்பத்தில் ஒருவருக்கு சர்க்கரை நோய் இருந்தால், அவருக்கு 2000 முதல் 3000 ரூபாய் வரை மருந்து வாங்குவது இயல்பு. சந்தையில் ரூ.100 மதிப்புள்ள மருந்துகளை வெறும் ரூ.10, ரூ.15, ரூ.20-க்கு மக்கள் மருந்தகங்கள் மூலம் வழங்குகிறோம். இன்று, நாடு முழுவதும் 10,000 மக்கள் மருந்தக மையங்கள் மூலம், இந்த வகையான நோய்களுக்கு மருந்துகளை வாங்கும் இந்த மக்களால் சுமார் ரூ.20 கோடி சேமிக்கப்பட்டுள்ளது. இவர்கள் பெரும்பாலும் நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். ஆனால் இன்று அதன் வெற்றியைப் பார்க்கும்போது, விஸ்வகர்மா திட்டத்தின் மூலம் சமூகத்தின் அந்தப் பிரிவினரை நாம் தொடப் போகிறோம் என்பதை நாட்டு மக்களுக்குச் சொல்ல விரும்புகிறேன். அதே நேரத்தில், தற்போது நாடு முழுவதும் 10,000-ஆக உள்ள மக்கள் மருந்தகங்களின் எண்ணிக்கையை வரும் நாட்களில் 25,000-ஆக அதிகரிக்க நாங்கள் திட்டமிட்டுள்ளோம்.
லட்சிய மனப்பான்மை, பெரிய சிந்தனை, தொலைநோக்குப் பார்வை கொண்ட நமது பணிக் கலாச்சாரம், அனைவருக்கும் மகிழ்ச்சி (சர்வஜன் ஹிதாயா), அனைவருக்கும் ஆரோக்கியம் (சர்வஜன் சுகாயா) என்ற தாரக மந்திரத்தில் நம் பணிகளின் பாணி அப்படி இருந்தது. இந்த ஆற்றலைக் கொண்டு ஒரு தீர்மானத்தைக் காட்டிலும் அதில் எவ்வாறு சாதிப்பது என்பதில் நாங்கள் அதிக கவனம் செலுத்தி பணியாற்றி வருகிறோம். சுதந்திரத்தின் அமுதப் பெருவிழாவில் 75 ஆயிரம் அம்ரித் சரோவர் (அமிர்த நீர்நிலைகள்) உருவாக்க நாங்கள் முடிவு செய்திருந்தோம். அப்போது ஒவ்வொரு மாவட்டத்திலும் 75 அம்ரித் சரோவர் (அமிர்த நீர்நிலைகள்) அமைக்க முடிவு செய்திருந்தோம். அதன்படி சுமார் 50-55 ஆயிரம் அமிர்த நீர்நிலைகள் உருவாக்கப்பட்டுள்ளன. ஆனால் இன்று சுமார் 75 ஆயிரம் அமிர்த நீர்நிலைகள் கட்டும் பணி நடந்து வருகிறது. இது ஒரு மிகப்பெரிய பணி. மனிதவளம் மற்றும் நீர் சக்தியின் இந்த வலிமை இந்தியாவின் சுற்றுச்சூழல் வளத்தைப் பாதுகாக்கவும் பயனுள்ளதாக இருக்கும். 18 ஆயிரம் கிராமங்களுக்கு மின்சாரம் வழங்குவது, மக்களுக்கு வங்கிக் கணக்கு தொடங்குவது, பெண் குழந்தைகளுக்கு கழிவறை கட்டுவது என அனைத்து இலக்கு களும் முழுவீச்சில் நிறைவேற்றப்படும்.
25 ஆண்டுகளாக நம் நாட்டில் விவாதிக்கப்பட்டு வந்த ஒன்றை நிறைவேற்ற வேண்டும், நமது நாட்டிற்கு ஒரு புதிய நாடாளுமன்றம் தேவை; இப்போது அது தயாராக உள்ளது. புதிய நாடாளுமன்றம் அமைய வேண்டும் என்று இப்படி ஒரு நாடாளுமன்றக் கூட்டத்தொடர் நடந்ததில்லை.
எனது அன்பான சகோதர, சகோதரிகளே, புதிய நாடாளுமன்றம் முன்கூட்டியே தயாராக இருப்பதை உறுதி செய்தவர் மோடி. இது உழைக்கும் அரசு, நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளை தாண்டும் அரசு, இது ஒரு புதிய இந்தியா, இது தன்னம்பிக்கை நிறைந்த இந்தியா, இது தனது தீர்மானங்களை நனவாக்க கடுமையாக உழைக்கும் இந்தியா.
எனவே இந்த இந்தியா தடுக்க முடியாதது, இந்த இந்தியா ஓய்வில்லாதது, இந்த இந்தியா சோர்வடையாதது, இந்த இந்தியா விட்டுக் கொடுக்காது.
அதனால்தான், எனதருமை குடும்ப உறுப்பினர்களே, பொருளாதார வலிமையால் நமது தொழிலாளர் படைக்கு புதிய பலம் கிடைத்துள்ளது, நமது எல்லைகள் முன்பை விட மிகவும் பாதுகாப்பானதாக மாறியுள்ளன, வீரர்கள் எல்லைகளை கவனத்தில் கொண்டுள்ளனர்.
சுதந்திர தினத்தின் இந்த நன்னாளில், நமது நாட்டின் எல்லைகளைப் பாதுகாக்கும் நமது வீரர்களுக்கும், நமது உள்நாட்டுப் பாதுகாப்பிற்குப் பொறுப்பான சீருடைப் படையினருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். நமது இராணுவம் ஒரு இராணுவத் தீர்ப்பாயத்தைக் கொண்டிருக்க வேண்டும், அதிகாரமளிக்கப்பட வேண்டும், இளமையாக இருக்க வேண்டும், போருக்கு ஆயத்தமாகவும், தயாராகவும் இருக்க வேண்டும், அதனால்தான் நமது ஆயுதப்படை களுக்குள் தொடர்ச்சியான சீர்திருத்தங்கள் நடந்து வருகின்றன.