தகவல் தொடர்புத் துறையில் சினிமா என்றால் பொழுதுபோக்கு; சமூக சிந்தனையுள்ள கல்வி யாளருக்கு அது மக்களுக்குக் கற்பிக்கும் ஒரு வகுப்பறை; வல்லுநர்களுக்கு மனிதவளத் துறையின் குறிப்பிட்ட பிரிவுகளில் செய்தியைப் பகிரும், பயிற்சியளிக்கும் சிறந்த களம். தேசிய மற்றும் சர்வதேச அளவில் நல்லெண்ணம் மற்றும் நல்லுறவை மேம்படுத்துவதிலும் சினிமா மிக முக்கியப் பங்காற்றுகிறது.
கலைநயமும் கலையுணர்வும் கொண்ட கருத்தாழ மிக்க படங்களைத் தயாரிப்பதை ஊக்கப்படுத்த திரைப்படக் கேட்புக் குழுவின் பரிந்துரையை ஏற்று 1954-இல் இந்திய அரசு, மாநில திரைப்பட விருதுகளை ஏற்படுத்தியது. அப்போது முதல் ஒவ்வோர் ஆண்டும் சிறந்த படங்களும் தனி முயற்சிகளும் விருதளித்துப் பாராட்டப்படுகின்றன. பின்னர் இது மிக உயர்வான தேசிய அளவில் கௌரவம் பெற்றது. நாட்டின் எல்லா மொழிகளிலும் தயாரிக்கப்படும் ஆழ்ந்த நோக்குடைய படங்கள், பொழுதுபோக்கு, சமூகப்படங்கள் அனைத்திலும் தேசிய திரைப்பட விருதுகள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன என்பது ஒப்புக்கொள்ளப் பட்ட உண்மை.
தொடக்கத்தில் சிறந்த திரைப்படம், சிறந்த செய்திப்படம் ஆகியவற்றுக்காக குடியரசுத் தலைவரின் இரண்டு தங்கப் பதக்கங்களும் சிறந்த குழந்தைகள் படத்துக்காக பிரதமரின் தங்கப்பதக்கமும் பாராட்டுச் சான்றிதழும் மட்டுமே வழங்கப்பட்டன. ஓராண்டுக்குப் பின்னர், மாநில மொழிகளில் சிறந்த திரைப்படங்களுக்காக குடியரசுத் தலைவரின் வெள்ளிப் பதக்கங்களும் சேர்க்கப்பட்டன.
குறிக்கோள் மற்றும் நோக்கத்தில் விருதுகள் பல்வேறு மாற்றங்களை அடைந்தன. 1966-இல் தேசிய திரைப்பட விருதுகள் என்று பெயர் மாற்றம் பெற்றன. 1968-இல் கலைஞர்கள், தொழில்நுட்பாளர்களுக்குத் தனித்தனி விருதுகள் ஏற்படுத்தப்பட்டன. நடிப்புக்கான இரு விருதுகளில் சிறந்த நடிகைக்கான விருது "ஊர்வசி' எனவும், சிறந்த நடிகருக்கான விருது "பாரத்' எனவும் அழைக்கப்பட்டன. பின்னாளில் இப்பெயர்கள் வழக்கொழிந்தன. சிறந்த நடிகைக்கான விருதை நர்கீஸ் தத்தும் சிறந்த நடிகருக்கான விருதை உத்தம்குமாரும் முதன்முறையாக பெற்றனர்.
திரைப்படங்களை மதிப்பிடும் முறையும் பல்வேறு மாற்றங்களைக் கண்டது. சில ஆண்டுகள் பம்பாய், சென்னை, கல்கத்தா ஆகிய இடங்களில் மாநிலக் குழுக்கள் செயல்பட்டு, அவை பரிந்துரைத்த படங்களை தில்லியிலுள்ள மத்தியக் குழு பரிசீலித்தது. பின்னர் இம்முறை நீக்கப்பட்டு, இப்போது தேசிய திரைப்பட விழா நடுவர்கள் நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களைப் பார்த்துப் பரிசீலித்து விவாதம் அல்லது அதிக வாக்குகள் மூலம் விருதுகளைத் தீர்மானிக்கிறார்கள். இதற்கிடையே விருதுகளின் எண்ணிக்கையும் பெருகியது.
1975-க்குப் பிறகு விருதுகளுக்கான வாய்ப்புகள் பெருகின. குடியரசுத்தலைவரின் தங்கப் பதக்கம், தங்கத் தாமரை விருதாகவும், வெள்ளிப் பதக்கம், வெள்ளித் தாமரையாகவும் மாறின.
1978-இல் பழம்பெரும் திரைப்படத் தயாரிப்பாளரான சேத்தன் ஆனந்த் திரைப்பட நடுவர் குழுத் தலைவராக இருந்தபோது ஒரே ஒருமுறை மட்டும் சிறந்த திரைப்படத்துக்கான விருது வழங்கப்படவில்லை.
சேத்தன் ஆனந்த், விருதுபெறும் திரைப்படத்துக்கான தகுதிகளாக வரையறுத்திருந்தவை:
அ) அது நல்ல கதைக் கருவைக் கொண்டிருக்க வேண்டும்;
ஆ) துடிப்பான திரைக்கதை மூலம் அக்கரு சிறந்த முறையில் வெளிப்படுத்தப்பட்டிருக்க வேண்டும்;
இ) திரைக்கதையின் தன்மை மாறாமல் அது படமாக்கப்பட்டிருக்க வேண்டும்.
தேசிய திரைப்பட விருதுகள்
தேசிய திரைப்பட விருதுகள் (சஹற்ண்ர்ய்ஹப் எண்ப்ம் ஆஜ்ஹழ்க்ள்) இந்தியாவின் பழமையானதும் முதன்மையானதுமான விருதுகள் ஆகும். 1954-ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இவ்விருதினை இந்திய அரசின் திரைப்பட விழாக்கள் இயக்கம் 1973-ஆம் ஆண்டு முதல் நிர்வகித்து வருகிறது. ஒவ்வோர் ஆண்டும் அரசால் நியமிக்கப்படும் தேசிய தேர்வுக்குழு விருதுக்குரியவர்களை/படைப்புகளை தேர்ந் தெடுக்கிறது. விருதுகள் குடியரசுத் தலைவரால் தலைநகர் புதுதில்லிலியில் வழங்கப்படுகிறது. இவ்விழாவினைத் தொடர்ந்து துவங்கும் தேசிய திரைப்பட விழாவில் விருது பெற்ற திரைப்படங்கள் பொதுமக்களுக்காக திரையிடப்படுகின்றன. நாட்டின் பலபகுதிகளில் கடந்த ஆண்டில் வெளியான திரைப் படங்களில் இருந்து சிறந்த திரைப்படங் களும் திரைக் கலைஞர்களும் தேர்ந்தெடுக்கப் படுகின்றனர். இதுதவிர, ஒவ்வொரு மொழி படங் களுக்கு தனியாக விருதுகள் வழங்கப்படுகின்றன.
தேசிய விருது பட்டியல்
சிறந்த படம் - ஹெல்லாரோ (குஜராத்தி)
சிறந்த குழந்தைகள் படம் - சர்க்காரி ஹிரிதய பிரதாமிகா ஷாலே காஸர்கோடு (கன்னடம்)
சிறந்த குழந்தை நட்சத்திரங்கள் - பி.வி. ரோஹித் (கன்னடம்), சமீப் சிங் (பஞ்சாபி), தல்ஹா அர்ஷத் ரோஹி (உருது), ஸ்ரீனிவாஸ் போகலே (மராத்தி)
சிறந்த நடிகர்கள் - ஆயுஷ்மான் குரானா (அந்ததாதூன் - இந்தி), விக்கி கௌசல் (உரி: தி சர்ஜிகல் ஸ்டிரைக் - இந்தி)
சிறந்த நடிகை - கீர்த்தி சுரேஷ் (மகாநடி - தெலுங்கு)
சிறந்த துணை நடிகர் - ஸ்வானந்த் கிர்கிரே (சும்பக் - மராத்தி)
சிறந்த துணை நடிகை - சுரேகா சிக்ரி (பதாயி ஹோ - இந்தி
சிறந்த பின்னணி பாடகர் - அரிஜித் சிங் (பத்மாவத் - இந்தி)
சிறந்த பின்னணி பாடகி - பிந்து மாலினி (நாத்திசராமி - கன்னடம்)
சிறந்த இசையமைப்பாளர் - சஞ்சய் லீலா பன்சாலி ( பத்மாவத் - இந்தி)
சிறந்த பின்னணி இசை - சாஸ்வத் சத்தேவ் (உரி: தி சர்ஜிகல் ஸ்டிரைக் - இந்தி)
சிறந்த ஒளிப்பதிவு - எம்.ஜெ. ராதாகிருஷ்ணன் (ஒலு - மலையாளம்)
சிறந்த ஒலி வடிவமைப்பு - தீபக் சாட்டர்ஜி (உரி: தி சர்ஜிகல் ஸ்டிரைக் - இந்தி)
சிறந்த திரைக்கதை - ராஹுல் ரவீந்திரன் (சி அர்ஜுன் லா சோ - தெலுங்கு)
சிறந்த படத்தொகுப்பு - எடிட்டர் நாகேந்திர கே. உஜ்ஜனி (நாத்திரசாமி - கன்னடம்)
சிறந்த ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் - அவே (தெலுங்கு), கேஜிஎப் (கன்னடம்)
சிறந்த பாடலாசிரியர் - மஞ்சுநாதா (நாத்திரசாமி - கன்னடம்)
சிறந்த பாடல் வரிகள் - நதிசரமி (கன்னடம்)
சிறந்த வசனம் - தாரிக் (வங்காளம்)
சிறந்த தமிழ் படம் - பாரம்
சிறந்த இயக்குநர் - ஆதித்யா தார்
(உரி: தி சர்ஜிகல் ஸ்டிரைக் - இந்தி)
சிறந்த பொழுதுபோக்கு படம் - பதாய் ஹோ (ஹிந்தி)
சமூக நலனுக்கான சிறந்த படம் - பேட்மேன் (ஹிந்தி)
சிறந்த சுற்றுச்சூழல் படம் - பானி (மராட்டியம்)
சிறந்த நடனம் - க்ருதி மஹேஷ் மிட்யா மற்றும் ஜோதி டி டொம்மார் (பத்மாவத்)
சிறந்த ஆக்ஷன் - கே.ஜி.எஃப். (கன்னடம்)
சிறந்த ஆடை வடிவமைப்பு - மகாநடி (தெலுங்கு)
சிறந்த சிகை அலங்காரம் ஆவ் (தெலுங்கு)
சிறந்த தயாரிப்பு - குமார சம்பவம் (மலையாளம்)
சிறந்த அறிமுக இயக்குநர் படம் - நான்
சிறந்த சமூகத் திரைப்படம் - பத்மன்
தேசிய ஒருமைப்பாட்டுக்கான சிறந்த படம் - ஒன்றல்ல இரடல்ல (கன்னடம்)
சிறந்த வெகுஜனப் படம் - பத்ஹாய் ஹோ
சிறந்த கல்வி படம் - சரளா விரளா
சிறப்பு நடுவர் விருதுகள் - ஸ்ருதி ஹரிஹரன், ஜோஜு ஜார்ஜ்- ஜோசப், சுதானி ஃப்ரம் நைஜீரியாவுக்காக சாவித்ரி, சந்த்ரசூட் ராய்
திரையுலகிற்கு ஏற்ற மாநிலம் - உத்தரகாண்ட்
சிறந்த பிராந்திய மொழித் திரைப்படங்கள்
தமிழ் - பாரம்
ராஜஸ்தானி - டர்ட்டில்
பஞ்செங்கா - இன் த லேண்ட் ஆஃப் பாய்சனஸ் உமன்
மராத்தி - போங்கா
இந்தி - அந்தாதூன்
தெலுங்கு - மகாநடி
அசாமி - புல்புல் கேன் சிங்
பஞ்சாபி - அர்ஜேதா.