தகவல் தொடர்புத் துறையில் சினிமா என்றால் பொழுதுபோக்கு; சமூக சிந்தனையுள்ள கல்வியாளருக்கு அது மக்களுக்குக் கற்பிக்கும் ஒரு வகுப்பறை; வல்லுநர்களுக்கு மனிதவளத் துறையின் குறிப்பிட்ட பிரிவுகளில் செய்தியைப் பகிரும், பயிற்சியளிக்கும்
சிறந்த களம். தேசிய மற்றும் சர்வதேச அளவில் நல்லெண்ணம் மற்றும் நல்லுறவை மேம்படுத்துவதிலும் சினிமா மிக முக்கியப் பங்காற்றுகிறது.
கலைநயமும் கலையுணர்வும் கொண்ட கருத்தாழ மிக்க படங்களைத் தயாரிப்பதை ஊக்கப்படுத்த திரைப்படக் கேட்புக் குழுவின் பரிந்துரையை ஏற்று 1954-இல் இந்திய அரசு, மாநில திரைப்பட விருதுகளை ஏற்படுத்தியது. அப்போது முதல் ஒவ்வோர் ஆண்டும் சிறந்த படங்களும் தனி முயற்சிகளும் விருதளித்துப் பாராட்டப்படுகின்றன. பின்னர் இது மிக உயர்வான தேசிய அளவில் கௌரவம் பெற்றது. நாட்டின் எல்லா மொழிகளிலும் தயாரிக்கப்படும் ஆழ்ந்த நோக்குடைய படங்கள், பொழுதுபோக்கு, சமூகப்படங்கள் அனைத்திலும் தேசிய திரைப்பட விருதுகள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன என்பது ஒப்புக்கொள்ளப் பட்ட உண்மை.
தொடக்கத்தில் சிறந்த திரைப்படம், சிறந்த செய்திப்படம் ஆகியவற்றுக்காக குடியரசுத் தலைவரின் இரண்டு தங்கப் பதக்கங்களும் சிறந்த குழந்தைகள் படத்துக்காக பிரதமரின் தங்கப்பதக்கமும் பாராட்டுச் சான்றிதழும் மட்டுமே வழங்கப்பட்டன. ஓராண்டுக்குப் பின்னர், மாநில மொழிகளில் சிறந்த திரைப்படங்களுக்காக குடியரசுத் தலைவரின் வெள்ளிப் பதக்கங்களும் சேர்க்கப்பட்டன.
குறிக்கோள் மற்றும் நோக்கத்தில் விருதுகள் பல்வேறு மாற்றங்களை அடைந்தன. 1966-இல் தேசிய திரைப்பட விருதுகள் என்று பெயர் மாற்றம் பெற்றன. 1968-இல் கலைஞர்கள், தொழில்நுட்பாளர்களுக்குத் தனித்தனி விருதுகள் ஏற்படுத்தப்பட்டன. நடிப்புக்கான இரு விருதுகளில் சிறந்த நடிகைக்கான விருது "ஊர்வசி'
எனவும், சிறந்த நடிகருக்கான விருது "பாரத்' எனவும் அழைக்கப்பட்டன. பின்னாளில் இப்பெயர்கள் வழக்கொழிந்தன. சிறந்த நடிகைக்கான விருதை நர்கீஸ் தத்தும் சிறந்த நடிகருக்கான விருதை உத்தம்குமாரும் முதன்முறையாக பெற்றனர்.
திரைப்படங்களை மதிப்பிடும் முறையும் பல்வேறு மாற்றங்களைக் கண்டது. சில ஆண்டுகள் பம்பாய், சென்னை, கல்கத்தா ஆகிய இடங்களில் மாநிலக் குழுக்கள் செயல்பட்டு, அவை பரிந்துரைத்த படங்களை தில்லியிலுள்ள மத்தியக் குழு பரிசீலித்தது. பின்னர் இம்முறை நீக்கப்பட்டு, இப்போது தேசிய திரைப்பட விழா நடுவர்கள் நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங் களைப் பார்த்துப் பரிசீலித்து விவாதம் அல்லது அதிக வாக்குகள் மூலம் விருதுகளைத் தீர்மானிக்கிறார்கள். இதற்கிடையே விருதுகளின் எண்ணிக்கையும் பெருகியது.
1975-க்குப் பிறகு விருதுகளுக்கான வாய்ப்புகள் பெருகின. குடியரசுத்தலைவரின் தங்கப் பதக்கம், தங்கத் தாமரை விருதாகவும், வெள்ளிப் பதக்கம், வெள்ளித்தாமரையாகவும் மாறின.
1978-இல் பழம்பெரும் திரைப்படத் தயாரிப்பாளரான சேத்தன் ஆனந்த் திரைப்பட நடுவர் குழுத் தலைவராக இருந்தபோது ஒரே ஒருமுறை மட்டும் சிறந்த திரைப்படத்துக்கான விருது வழங்கப்படவில்லை.
சேத்தன் ஆனந்த், விருதுபெறும் திரைப்படத்துக்கான தகுதிகளாக வரையறுத்திருந்தவை:
அ) அது நல்ல கதைக் கருவைக் கொண்டிருக்க வேண்டும்;
ஆ) துடிப்பான திரைக்கதை மூலம் அக்கரு சிறந்த முறையில் வெளிப்படுத்தப்பட்டிருக்க வேண்டும்;
இ) திரைக்கதையின் தன்மை மாறாமல் அது படமாக்கப்பட்டிருக்க வேண்டும்.
தேசிய திரைப்பட விருதுகள்
தேசிய திரைப்பட விருதுகள் (National Film Awards) இந்தியாவின் பழமையானதும் முதன்மையானதுமான விருதுகள் ஆகும். 1954-ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இவ்விருதினை இந்திய அரசின் திரைப்பட விழாக்கள் இயக்கம் 1973-ஆம் ஆண்டு முதல் நிர்வகித்து வருகிறது. ஒவ்வோர் ஆண்டும்
அரசால் நியமிக்கப்படும் தேசிய தேர்வுக்குழு விருதுக்குரியவர்களை/படைப்புகளை தேர்ந் தெடுக்கிறது. விருதுகள் குடியரசுத் தலைவரால் தலைநகர் புதுதில்லிலியில் வழங்கப்படுகிறது. இவ்விழாவினைத் தொடர்ந்து துவங்கும் தேசிய திரைப்பட விழாவில் விருது பெற்ற திரைப்படங்கள் பொதுமக்களுக்காக திரையிடப்படுகின்றன. நாட்டின் பலபகுதிகளில் கடந்த ஆண்டில் வெளியான திரைப் படங்களில் இருந்து சிறந்த திரைப்படங்களும் திரைக் கலைஞர்களும் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். இதுதவிர, ஒவ்வொரு மொழி படங்களுக்கு தனியாக விருதுகள் வழங்கப்படுகின்றன.
65-வது தேசிய திரைப்பட விருதுகள் டெல்லியில் அறிவிக்கப்பட்டன.
இந்திய அளவில் சினிமா துறைக்கான தேசிய விருதை மத்திய அரசு ஒவ்வொரு வருடமும் வழங்கி வருகிறது.
சிறந்த படம், சிறந்த நடிகர், நடிகைகள், இயக்கம், ஒளிப்பதிவு என பல்வேறு பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இதுதவிர, ஒவ்வொரு மொழி படங்களுக்கு தனியாக விருதுகள் வழங்கப்படுகின்றன.
இது இந்தியாவின் ஆஸ்கர் விருதாகக் கருதப் படுகிறது.
கடந்த ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி முதல் டிசம்பர் 31 வரை வெளியான திரைப்படங்களுக்கான விருதுகள் டெல்லியில் அறிவிக்கப்பட்டன.
தேசிய விருதுகள் பட்டியல்
சிறந்த படம் - வில்லேஜ் ராக்ஸ்டார்ஸ் (அசாமி)
சிறந்த தமிழ்ப் படம் - டூ-லெட்
சிறந்த நடிகர் - ரித்தி சென் (நகர்கிரதான்)
சிறந்த நடிகை - ஸ்ரீதேவி (மாம்)
சிறந்த இயக்குநர் - ஜெயராஜ் (பயணக்கம்)
சிறந்த துணைநடிகர் - பஹத் பாசில் (தொண்டிமுதலும் த்ரிகாஷியம்)
சிறந்த துணைநடிகை - திவ்யா தத்தா (இரடா)
சிறந்த திரைக்கதை - தொண்டிமுதலும் த்ரிகாஷியம்
சிறந்த திரைக்கதை தழுவல் - பயணக்கம்
சிறந்த பின்னணி பாடகர் யேசுதாஸ்
சிறந்த பின்னனி பாடகி - சாஷா திரிபாதி (வான் வருவான் ... காற்று வெளியிடை)
சிறந்த குழந்தை நட்சத்திரம் - பனிதா தாஸ் (வில்லேஜ் ராக்ஸ்டார்ஸ்)
சிறந்த ஒளிப்பதிவு - பயணக்கம்
சிறந்த படத்தொகுப்பு - வில்லேஜ் ராக்ஸ்டார் மற்றும் ரிமா தாஸ்
சிறந்த பாடலாசிரியர் - முத்துரத்னா, மார்ச் 22
சிறந்த இசையமைப்பாளர் - ஏ.ஆர்.ரஹ்மான் (காற்று வெளியிடை)
சிறந்த பின்னனி இசை - ஏ.ஆர்.ரஹ்மான் (மாம்)
சிறந்த ஆக்ஷன் - அப்பாஸ் அலி மெகுல் (பாகுபலி 2)
சிறந்த நடனம் - கணேஷ் ஆச்சார்யா (டாய்லட் ஏக் பிரேம் கதா)
சிறந்த ஸ்பெஷல் எபெக்ட்ஸ் - பாகுபலி 2
சிறந்த குழந்தைகள் படம் - மார்கியா
சிறந்த சுற்றுச்சூழல் படம் - இரடா
சிறந்த சமூக படம் - ஆலொருக்கம்
மக்களை கவர்ந்த படம் - பாகுபலி 2
சிறப்பு விருதுகள்
மராத்தி படம் - மார்கியா
ஒரியா படம் - ஹலோ மிரர்
சிறந்த நடிகை - பார்வதி (டேக் ஆப்)
சிறந்த நடிகர் - பங்கஜ் திரிபாதி (நியூட்டன்)
தேசிய ஒருமைப்பாட்டிற்கான நர்கீஸ் தத் விருது - தப்பா
சிறந்த அறிமுக இயக்குனருக்கான இந்திரா விருது - பேம்பாலி (சிஞ்சர்)
தாதா சாகேப் பால்கே விருது - வினோத் கன்னா (மறைந்த இந்தி நடிகர்)
சிறந்த பிராந்திய மொழி திரைப்படங்கள்
சிறந்த தமிழ்ப் படம் - டூ-லெட்
சிறந்த தெலுங்கு படம் - காஸி
சிறந்த மலையாள படம் - தொண்டிமுதலும் த்ரிகாஷியம்
சிறந்த கன்னட படம் - ஹெப்பெத்து ராமாக்கா
சிறந்த இந்தி படம் - நியூட்டன்
சிறந்த பெங்காலி படம் - மயூராஷக்ஷி
சிறந்த அசாமி படம் - இஷ்ஷு
சிறந்த குஜராத்தி படம் - த்