2022 பிபா உலகக் கோப்பை (2022 FIFA World Cup)பன்னாட்டுக் கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பு நடத்திய ஒரு பன்னாட்டு கால்பந்தாட்டப் போட்டியாகும்.

22-வது உலக கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் நவம்பர் 20, 2022 முதல் டிசம்பர் 18 2022 வரை நடைபெற்றது.

அங்குள்ள 5 நகரங்களில் பிரமாண்டமாக கட்டப்பட்டு இருக்கும் 8 ஸ்டேடியங்களில் போட்டிகள் நடைபெற்றன.

அரபு நாட்டில் உலக கோப்பை கால்பந்து போட்டி நடைபெறுவது இதுவே முதல்முறையாகும்.

Advertisment

அத்துடன் ஆசிய கண்டத்தில் இந்த போட்டி நடப்பது 2-வது முறையாகும்.

இந்த போட்டியில் 5 முறை சாம்பியனான பிரேசில், 4 முறை சாம்பியனான ஜெர்மனி, நடப்பு சாம்பியன் பிரான்ஸ், அர்ஜென் டினா, ஜெர்மனி, இங்கிலாந்து, ஸ்பெயின் உள்பட 32 அணிகள் பங்கேற்றன.

போட்டியை நடத்தும் நாடு என்ற முறையில் கத்தார் மட்டும் நேரடியாக தகுதி பெற்றது. மற்ற அணிகள் அனைத்தும் தகுதி சுற்று மூலம் நுழைந்தன.

Advertisment

இதில் பங்கேற்கும் 32 அணிகள் 8 பிரிவாக பிரிக்கப்பட்டன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை லீக் ஆட்டத்தில் மோதின.

லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் 2-வது சுற்றுக்கு (ரவுண்ட் 16) முன்னேறும்.

எல்லா கண்டத்தை சேர்ந்த அணிகளும் உலக கோப்பை போட்டியில் பங்கேற்றாலும், கோப்பையை வெல்வதில் ஐரோப்பியா மற்றும் தென்அமெரிக்க கண்டத்தை சேர்ந்த அணிகள் தான் ஆதிக்கம் செலுத்துகின்றன.

இதுவரை ஐரோப்பிய கண்டத்தை சேர்ந்த அணிகள் 12 முறையும், தென் அமெரிக்க கண்டத்தை சேர்ந்த அணிகள் 9 முறையும் கோப்பையை வென்று இருக்கின்றன. ஆசியா, ஆப்பிரிக்க கண்டத்துக்குரிய அணிகள் இறுதி சுற்றில் கூட அடியெடுத்து வைத்தது கிடையாது.

தொடக்க நாளன்று நடைபெற்ற ஆட்டத்தில் 'ஏ' பிரிவில் இடம் பெற்றுள்ள போட்டியை நடத்தும் கத்தார்-ஈகுவடார் அணிகள் மோதின.

dd

இதில் ஈகுவடார் அணி 2-0 என்ற கோல் கணக்கில் கத்தாரை வீழ்த்தி தனது முதல் வெற்றியை பதிவு செய்தது.

லீக் சுற்றின் முடிவில் போட்டியை நடத்தும் கத்தார், ஜெர்மனி, பெல்ஜியம், உருகுவே போன்ற முக்கிய அணிகள் வெளியேறின.

கால்இறுதி சுற்றுக்கு நெதர்லாந்து, அர்ஜென்டினா, குரோசியா, பிரேசில், இங்கிலாந்து, பிரான்ஸ், மொரோகோ, போர்ச்சுகல் ஆகிய 8 அணிகள் முன்னேறின.

இதில் இருந்து இறுதிச்சுற்றுக்கு அர்ஜென்டினா, குரோசியா, பிரான்ஸ், மொராக்கோ அணிகள் தகுதி பெற்றன.

அரைஇறுதி ஆட்டங்களில் அர்ஜென்டினா குரோசியாவையும், பிரான்ஸ் மொராக்கோவையும் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றன.

பல்வேறு அதிரடிகள், ஆச்சரியங்கள், ஆரவாரத்தை ஏற்படுத்திய உலகக் கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப் போட்டி தோஹாவில் நடைபெற்றது.

இறுதிப்போட்டியில் லி-யோனல் மெஸ்சி தலைமையிலான அர்ஜென்டினா அணி ஹூகோ லோரிஸ் தலைமையிலான பிரான்சை எதிர்கொண்டது.

கூடுதல் நேரத்துடன் சேர்த்து மொத்தம் 125 நிமிடங்கள் நடைபெற்ற ஆட்டம் 3-3 என்ற கணக்கில் சமநிலையில் முடிந்தது.

இதனால், ஆட்டத்தின் முடிவை அறிய பெனால்டி ஷூட்-அவுட் முறை கொண்டு வரப்பட்டது.

இதில் 4-2 என்ற கோல் கணக்கில் பிரான்சை வீழ்த்தி அர்ஜென்டினா உலகக்கோப்பை கால்பந்து சாம்பியனானது.

-லியோனல் மெஸ்சி தலைமையிலான அர்ஜென்டினா அணி உலக்கோப்பை சாம்பியன் பட்டத்தை வென்று வரலாறு படைத்தது.

அர்ஜென்டினா அணி உலகக்கோப்பையை வெல்வது இது 3-வது முறை ஆகும்.

இதற்கு முன் 1978 மற்றும் 1986-ஆம் ஆண்டு களில் கோப்பையை அர்ஜென்டினா வென்றுள்ளது.

இதன் மூலம் 36 ஆண்டுகளுக்கு பின் அர்ஜென்டினா மீண்டும் கோப்பையை கைப்பற்றியுள்ளது.

அர்ஜென்டினாவுக்காக உலக கோப்பைகளில் 10 கோல் அடித்த பாடிஸ்டுடா சாதனையை இந்த உலக கோப்பையில் மெஸ்சி முறியடித்துள்ளார்.

மேலும் உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தில் 'ஹாட்ரிக்' கோல் என்ற மகத்தான சாதனையை பிரான்சின் 23 வயதான எம்பாப்பே படைத்தார்.

மகுடம் சூடிய அர்ஜென்டினாவுக்கு ரூ.342 கோடியும், 2-வது இடத்தை பிடித்த பிரான்சுக்கு ரூ.244 கோடியும் பரிசுத்தொகையாக கிடைத்தது.