"மக்கள்தொகை கணக்கெடுப்பு ஒரு முதல் தர புள்ளிவிவர ஆதாரமாகும். இது குடியிருப்புகளில் வசிக்கும் மக்களை பற்றியது மட்டுமல்லாமல், வீடற்ற மக்கள் மற்றும் நாடோடிகளையும் உள்ளடக்கியதாகும். மக்கள்தொகை கணக்கெடுப்பு புள்ளிவிவரமானது மக்கள் மற்றும் வீடுகளில் குடியிருப்போர் தகவல்களை அலசி ஆய்வு செய்வதாக இருக்கவேண்டும். முழுமையான, தனி நபரின் சிறிய பகுதி, நகரங்களை உள்ளடக்கியிருக்க வேண்டும்' என ஐ.நா.சபையின் மக்கள்தொகை கணக் கெடுப்புக்கான வழிகாட்டுதல் மற்றும் கோட்பாடுகள் - 2008 குறிப்பிட்டுள்ளது. அந்த வழிகாட்டுதலிலின் படிதான் உலக நாடுகள் மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்திவருகின்றன.

மக்கள்தொகை கணக்கெடுப்பு என்பது மக்கள் பற்றிய புள்ளிவிவரங்களை சேகரிப்பது, தொகுப்பது, மதிப்பிடுவது, அலசுவது மற்றும் வெளியிடுவது போன்ற மொத்தமான செயல்பாட்டினை குறிக்கின்றது. வேறுவிதமாகக் கூறவேண்டு மானால் இந்த கணக்கீடு நாட்டின் பொருளாதாரம், மக்கள் வாழ்க்கைத்தரம் ஆகியவற்றையும், ஒரு குறிப்பிட்ட காலத்தில் நாட்டில் வாழும் அனைத்து மனிதர்களை பற்றிய விவரங்களையும் தொகுப்பதாகும். ஒரு நாட்டில் மக்கள்தொகையானது பொருள் உற்பத்தி மற்றும் பகிர்வுக்கு அடிப்படையாக உள்ளது. மக்கள்தொகை புள்ளிவிவரங் கள் பொருளாதாரத்தில் திட்டமிடவும் செயல்படுத்தவும், சமூக முன்னேற்றம், நிர்வாக செயல்பாடு, அறிவியல் ஆராய்ச்சி போன்றவற்றிற்கு தேவைப்படுவதாக உள்ளது. இதன் மூலம் மக்களின் வாழ்க்கைத்தரம், சமூகப் பாதுகாப்பு, மனிதவள வளர்ச்சி ஆகியவற்றை அறிந்துக் கொள்ளலாம்.

இந்த மக்கள்தொகை கணக்கெடுப்பு பத்து ஆண்டுகளுக்கு ஒருமுறை கணக் கெடுப்பது வரையறையாக பின்பற்றப் படுகிறது. ஐக்கிய நாடுகள் சபை மக்கள் தொகை மற்றும் குடியிருப்புகள் குறித்த கணக்கெடுப்புகள் தனித்துவ கணக்கெடுப் பாக, வரையறுக்கப்பட்ட பகுதியில் அனைவருக்கும் பொதுவானதாக, ஒரே நேரத்தில் மற்றும் வரையறுக்கப்பட்ட கால இடை வெளியில் இருக்க வேண்டும். மேலும் மக்கள்தொகை கணக்கெடுப்பு ஒவ்வொரு பத்து ஆண்டுகளுக்கு ஒருமுறை எடுக்கப்பட வேண்டும்' என பரிந்துரைக்கிறது.

இந்தியாவில் மக்கள்தொகை கணக்கெடுப்பு மக்கள்தொகை கணக்கெடுப்பு முறையானது, ஒரு மிகச்சிறந்த ஜனநாயக நடவடிக்கையாகும். இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சியின்போது கொண்டு வரப்பட்ட பல்வேறு நிர்வாக சீர்திருத்தங் களில் இதுவும் ஒன்று. இருப்பினும், மக்கள்தொகை பற்றிய தகவல்கள் இந்தியாவில் முதன்முதலில் வெளியிடப் பட்டது மொகலாயர் காலத்தில்தான்.

Advertisment

அக்பர் அரசவையில் இருந்த அபுல்பாசல் எழுதிய அயனி அக்பரி (கி.மு. 1595-1596) என்ற நூலிலில் அன்றைய மக்கள்தொகை பற்றிய தகவல்களை தந்துள்ளார். பின்னர் ஆங்கிலேயர் ஆட்சியின்போது மெட்ராஸ் மாகாணத்தில் ஆளுநராக இருந்த எலிகு ஏல் என்பவர் இங்கிலாந்து மன்னரின் ஆணைக்கிணங்க அன்றைக்கு செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் வசித்தவர்களின் விவரங்களை திரட்டி தந்தார். அதற்கு பின்னர் குறிப்பிடும்படி எந்தவித கணக்கெடுப்பும் நடத்தப்படவில்லை.

1853 -ஆம் ஆண்டு வடமேற்கு பகுதியில் சிறிய அளவில் கணக்கெடுப்பு நடத்தப் பட்டது.

"1871-இல் இதேபோல சிறிய அளவில் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.

Advertisment

அக்கணக்கெடுப்பை நடத்தியவர் கிறிஸ்டோப் குலிமிட்டோ. இதனை பற்றி கிறிஸ்டோப் குலிமிட்டோ "1871-ஆம் ஆண்டு இந்திய புள்ளியியல் வரலாற்றில் திருப்புமுனையான ஆண்டாகும். அந்த ஆண்டில்தான் பஞ்சங்கள் மற்றும் மக்களின் சமூக வாழ்க்கை பற்றிய தகவல்கள் திரட்டப்பட்டன'' என்றார்.

இருப்பினும் அது முறையான மக்கள்தொகை கணக்கெடுப்பாக இருக்கவில்லை. வெறும் மக்களின் தலைகளை எண்ணப்பட்டதாக இருந்தது.

pp

அதற்கடுத்து 1871-இல் மதராஸ் மாகாணத் தில் மக்கள்தொகை கணகெடுப்பு தலைமை அதிகாரியாக இருந்த டாக்டர் ர.த. கரோனிஸ் "மதராஸ் மாகாணத்தில் 1872-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட நேரடி மக்கள்தொகை கணக்கெடுப்பிற்கும், 1867-இல் நடத்தப்பட்ட கணக்கெடுப் பிற்கும் இடையிலான வித்தியாசம் அதிகளவில் உள்ளது. இதனால் உண்மை யான மக்கள்தொகை எவ்வளவு என்பதில் திருப்திகரமான முடிவுக்கு வரமுடிய வில்லை'' என்றார். பின்னர்தான் முறை யான மற்றும் நவீன மக்கள்தொகை கணக்கெடுப்பானது 1865 மற்றும் 1872 ஆண்டுகளுக்கு இடையே நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடத்தப் பட்டது. இதனால் 1872-ஆம் ஆண்டு மக்கள்தொகையே முதன்முதலிலில் நடத்தப்பட்ட முறையான மக்கள்தொகை கணக்கெடுப்பு என்று அறிவிக்கப்பட்டது.

நாடு முழுவதும் ஒரே நேரத்தில் நடந்த முதல் கணக்கெடுப்பு 1881-ஆம் ஆண்டில் எடுக்கப்பட்டது. அப்போது முதல் 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது.

அப்போதைய மக்கள்தொகை ஆணையர் ஜ்.ஜ். புளோடேன் ஆவார். இதன் தொடர்ச்சியாகதான் உலக அளவில் சிறந்த மக்கள்தொகை கணக் கெடுப்பு தற்போதுவரை இந்தியாவில் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி 2021 மக்கள்தொகை கணக்கெடுப்பனது 1872-வது கணக்கெடுப்பு தொடர்ச்சியின் அடிப்படையில் 16-வது மக்கள்தொகை கணக்கெடுப்பாகும். அதுபோல இந்திய விடுதலைக்கு பிறகு எடுக்கப்பட்ட 8- வது மக்கள் தொகை கணக்கெடுப்பாகும். இது உலக வரலாற்றிலேயே மிகப்பெரியக் கணக்கெடுப்பாகும்.

இந்தியாவில் 140 ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்டு வரும் மக்கள்தொகை கணக்கெடுப்பு பணியில் முதன்முறையாக, புள்ளி விவரங்கள் அனைத்தும் செல்போன் செயலி மூலமாக பெறப்படவுள்ளதென இந்திய மக்கள்தொகை பதிவாளர் அலுவலக அதிகாரிகள் தெரிவித் துள்ளனர். 2021-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்புக்கான செயல் திட்டம் மற்றும் வினாப்பட்டியலை இறுதி செய்வதற்காக, புதுதில்லியில் நடைபெற்ற தரவு உபயோகிப்பாளர் மாநாட்டில் பேசிய அதிகாரிகள், மக்கள்தொகை கணக்கெடுப்பு பணியில் ஈடுபடவுள்ள கணக்கெடுப்பாளர்கள், அவரவர் சொந்த செல்போனை பயன்படுத்த ஊக்குவிக்கப்படுவார்கள் என்று தெரிவித்தனர். இதற்காக அவர்களுக்கு உரிய தொகை வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இதுதவிர, கணக்கெடுப்பாளர்கள் காகித அட்டவணைகள் மூலமாக புள்ளி விவரங்களைப் பெற்று அதனை மின்னணு படிவத்தில் சமர்ப்பிக்க வகை செய்யப் படும் என்றும் மாநாட்டில் தெரிவிக்கப் பட்டது.

2021 மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணி உலகின் மிகப்பெரிய பணியாக இருக்கும் என்று குறிப்பிட்ட மத்திய உள்துறை செயலாளர் ராஜீவ் கவ்பா, கணக்கெடுப்புப் பணியில் 33 லட்சம் பணியாளர்கள் ஈடுபடுத்தப்படவுள்ள தாகவும் இதற்கான அறிவிப்பு ஏற்கெனவே வெளியிடப்பட்டுவிட்டதாகவும் தெரிவித்தார். ஜம்மு-காஷ்மீரிலும் ஹிமாச்சல் பிரதேசம் மற்றும் உத்தராகண்ட் மாநிலங்களின் பனிப் பிரதேசங்களிலும் 2020 அக்டோபர் ஒன்றாம் தேதியை அடிப்படை நாளாகக் கொண்டு கணக்கெடுப்புப்பணி தொடங்கும் என்றும் நாட்டின் பிற பகுதிகளில் 2021 மார்ச் 1-ஆம் தேதியை அடிப்படை நாளாகக் கொண்டு இந்தப்பணி மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

மக்கள்தொகை கணக்கெடுப்பு என்பது மனித தலைகளை கணக்கெடுப்பது மட்டுமல்ல என்று குறிப்பிட்ட ராஜீவ் கவ்பா, கொள்கை வகுத்தல் மற்றும் வளங்களை ஒதுக்கீடு செய்வதற்கு தேவையான சமூகப் பொருளாதார புள்ளி விவரங்களை திரட்டுவதாகவும் இருக்கும் என்றார். நாட்டின் பொருளாதார வளர்ச்சி மற்றும் மக்கள் நலத்திட்டங்களை உருவாக்குவதற்கும், மக்கள்தொகை கணக்கெடுப்பு விவரங்கள் உதவிகரமாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.

இவை தவிர, தொகுதி மறுவரையறை மற்றும் எஸ்.சி.எஸ்.டி பிரிவினருக்கான தொகுதி ஒதுக்கீடு போன்ற அரசியல் சாசன தேவைகளுக்கும் இந்தப் புள்ளி விவரங்கள் உதவிகரமாக இருக்கும் என ராஜீவ் கவ்பா தெரிவித்தார்.

மாநாட்டில் வரவேற்புரையாற்றிய இந்திய தலைமைப் பதிவாளர் மற்றும் மக்கள்தொகை ஆணையர் விவேக் ஜோஷி, 2021 மக்களவை கணக்கெடுப்பு இரண்டு கட்டங்களாக நடைபெறவுள்ளது என்றார்.

முதற்கட்டமாக, 2020 ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான கால கட்டத்தில் மாநில அரசுகளால் தேர்வு செய்யப்படும் ஏதாவது இரண்டு மாதங்களில் வீடுகள் கணக்கெடுப்புப் பணி மேற்கொள்ளப்படும். இரண்டாம் கட்டமாக, மக்கள்தொகை கணக்கெடுப்பு பணி 2021 பிப்ரவரி 9 முதல் 28 தேதி வரையிலும், திருத்தப்பணிகள் 2021 மார்ச் ஒன்று முதல் மார்ச் ஐந்தாம் தேதி வரை மேற்கொள்ளப்படும் என்றும் விவேக் ஜோஷி குறிப்பிட்டார்.

ஜம்மு-காஷ்மீரிலும் ஹிமாச்சல் பிரதேசம் மற்றும் உத்தராகண்ட் மாநிலங்களின் பனிப்பிரதேசங்களிலும் 2020 செப்டம்பர் 11 முதல் 30-ஆம் தேதி வரையிலும், திருத்தப்பணிகள் 2020 அக்டோபர் ஒன்று முதல் ஐந்தாம் தேதி வரை மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.