Advertisment

17-வது மக்களவை தேர்தல் 2019

/idhalgal/general-knowledge/17th-lok-sabha-election-2019

நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெறும் என்று புதுதில்லியில் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா அறிவித்தார்.

Advertisment

17-வது மக்களவைக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால், தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வருவதாகவும் அவர் அறிவித்தார்.

Advertisment

ஏப்ரல் 11-ஆம் தேதி தொடங்கும் இந்தத் தேர்தல் வாக்குப்பதிவு, மே மாதம் 19-ஆம் தேதியன்று நிறைவடைகிறது. வாக்கு எண்ணிக்கை மே 23-ஆம் தேதி நடைபெறும்.

dஏப்ரல் 11-ஆம் தேதி தொடங்கும் முதற்கட்ட தேர்தலில், ஆந்திரப் பிரதேசம், தெலுங்கானா உள்ளிட்ட 20 மாநிலங்களில் அடங்கிய 91 மக்களவைத் தொகுத

நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெறும் என்று புதுதில்லியில் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா அறிவித்தார்.

Advertisment

17-வது மக்களவைக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால், தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வருவதாகவும் அவர் அறிவித்தார்.

Advertisment

ஏப்ரல் 11-ஆம் தேதி தொடங்கும் இந்தத் தேர்தல் வாக்குப்பதிவு, மே மாதம் 19-ஆம் தேதியன்று நிறைவடைகிறது. வாக்கு எண்ணிக்கை மே 23-ஆம் தேதி நடைபெறும்.

dஏப்ரல் 11-ஆம் தேதி தொடங்கும் முதற்கட்ட தேர்தலில், ஆந்திரப் பிரதேசம், தெலுங்கானா உள்ளிட்ட 20 மாநிலங்களில் அடங்கிய 91 மக்களவைத் தொகுதி களுக்கு வாக்குப்பதிவு நடைபெறும்.

தமிழ்நாடு, புதுச்சேரி, கர்நாடகா, மேற்கு வங்காளம், உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரா உள்ளிட்ட 13 மாநிலங் களில் இரண்டாம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு 97 மக்களவைத் தொகுதி களில் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெறும். இதில், தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதிக்கும் ஒரேகட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெறும் மூன்றாம் கட்ட தேர்தலில் கேரளா, கர்நாடகா, குஜராத், உத்தரப்பிரதேசம், மேற்கு வங்காளம் உள்ளிட்ட 14 மாநிலங்களில் 115 மக்களவைத் தொகுதி களுக்கு வாக்குப்பதிவு நடைபெறும்.

நான்காம் கட்டமாக பீகார், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரம், ராஜஸ்தான் உள்ளிட்ட ஒன்பது மாநிலங்களில் 71 மக்களவைத் தொகுதிகளுக்கு ஏப்ரல் 29-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும்.

ஜம்மு-கஷ்மீர், மத்தியப் பிரதேசம், உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட ஏழு மாநிலங்களில் 51 மக்களவைத் தொகுதிகளுக்கு ஐந்தாம் கட்டமாக மே மாதம் 6-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும்.

ஆறாம் கட்டமாக ஏழு மாநிலங்களில் 59 மக்களவைத் தொகுதிகளுக்கு மே 12-ஆம் தேதியும், ஏழாவது மற்றும் இறுதிக்கட்டமாக எட்டு மாநிலங்களில் 59 தொகுதிகளுக்கு மே 19-ஆம் தேதியும் வாக்குப்பதிவு நடைபெறும்.

d

நாடு முழுவதும் 543 மக்களவைத் தொகுதிகளில் தேர்தல் நடைபெறுகிறது. மக்கள் வாக்குப்பதிவு செய்ய வசதியாக நாடு முழுவதும் 10 லட்சம் வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்படும் என்று தலைமைத் தேர்தல் ஆணையர் அறிவித்தார். இந்தத் தேர்தலில் பூத்சிலிப் எனப்படும் வாக்குச்சாவடி சீட்டுகள் அடையாளத்திற்காக மட்டுமே பயன்படுத்தப்படும் என்றும், வாக்களிப்பதற்கான அடையாள ஆவணமாக ஏற்றுக்கொள்ளப்படாது என்றும் அவர் தெரிவித்தார்.

ஆந்திரப்பிரதேசம், ஒடிஷா, அருணாச்சலப் பிரதேசம், சிக்கிம் ஆகிய நான்கு மாநில சட்டப்பேரவைகளுக்கான தேர்தலும், அந்தந்த மாநிலத்தில் மக்களவைத் தேர்தல் நடைபெறும் தேதியிலேயே நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் மாதம் 18-ஆம் தேதி நடைபெறும் மக்களவைத் தேர்தலோடு, 18 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் நடைபெறுகிறது. இதற்கான முறையான தேர்தல் அறிவிப்பு வரும் 19-ஆம் தேதி வெளியிடப்படும். அன்றைய தினமே வேட்புமனு தாக்கல் துவங்கும். வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் மார்ச் 26. மார்ச் 27-ஆம் தேதி வேட்புமனுக்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும். வேட்புமனுக்களை விலக்கிக் கொள்வதற்கான கடைசி தேதி மார்ச் 29. ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெறும் தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே மாதம் 23-ம் தேதி எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப் படும்.

gk010419
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe