Advertisment

இந்தியாவின் 15-வது குடியரசுத் தலைவர்

/idhalgal/general-knowledge/15th-president-india

ஜார்க்கண்ட் மாநிலத்தின் முதல் பெண் ஆளுநர், ஒடிசா மாநிலத்திலி-ருந்து ஆளுநராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண் போன்ற பல்வேறு பெருமைகளுக்கிடையே புதிய குடியரசுத் தலைவர் ஆனார் திரௌபதி முர்மு. இவர் முதல் பழங்குடியின குடியரசுத் தலைவர் என்பது முக்கிய தகவல்.

Advertisment

முன்னேறிய மாநிலங்களிலேயே இன்னும் பழங்குடியின மக்களின் வாழ்க்கை முன்னேற்றப்படாமல்தான் இருக்கின்றது. அப்படியென்றால், பின்தங்கிய மாநிலங்களில் வசிக்கும் பழங்குடியின மக்களின் வாழ்க்கை எப்படி இருக்கும்? அப்படியொரு பின்தங்கியுள்ள மாநிலமான ஒடிசாவில், அதுவும் பழங்குடியின சமூகத்தில் பிறந்த முர்மு இந்தியாவின் 'முதல் குடிமகள்' என்ற பெருமையை பெற்றுள்ளார். இதற்காக, அவர்

ஜார்க்கண்ட் மாநிலத்தின் முதல் பெண் ஆளுநர், ஒடிசா மாநிலத்திலி-ருந்து ஆளுநராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண் போன்ற பல்வேறு பெருமைகளுக்கிடையே புதிய குடியரசுத் தலைவர் ஆனார் திரௌபதி முர்மு. இவர் முதல் பழங்குடியின குடியரசுத் தலைவர் என்பது முக்கிய தகவல்.

Advertisment

முன்னேறிய மாநிலங்களிலேயே இன்னும் பழங்குடியின மக்களின் வாழ்க்கை முன்னேற்றப்படாமல்தான் இருக்கின்றது. அப்படியென்றால், பின்தங்கிய மாநிலங்களில் வசிக்கும் பழங்குடியின மக்களின் வாழ்க்கை எப்படி இருக்கும்? அப்படியொரு பின்தங்கியுள்ள மாநிலமான ஒடிசாவில், அதுவும் பழங்குடியின சமூகத்தில் பிறந்த முர்மு இந்தியாவின் 'முதல் குடிமகள்' என்ற பெருமையை பெற்றுள்ளார். இதற்காக, அவர் எத்தனை எத்தனை போராட்டங்களைச் சந்தித்திருப்பார் என்பதை யோசித்தாலே பிரம்மிப்பாகத் தான் இருக்கிறது.

Advertisment

dd

ஒடிசாவின் மிகப்பெரிய மாவட்டமான மயூர்பஞ்ச் மாவட்டத்தின் பைடாபோசி கிராமத்தில் 1958-ஆம் ஆண்டு ஜூன் 20-ஆம் தேதி பிறந்தார் திரௌபதி முர்மு. தேசிய புலிகள் காப்பகம் இருப்பதால் மயூர்பஞ்ச் மாவட்டத்துக்கு 'தி லேண்ட் ஆஃப் டைகர்' என்ற இன்னொரு பெயரும் இருக்கிறது.

திரௌபதி முர்முவுக்கு அரசியல் ஆர்வத்தைத் தூண்டியது அவரது தந்தை பிரஞ்சி நாராயண் டூடுதான். அவர்தான் அந்த ஊரின் கிராமத் தலைவர். அடிப்படை வசதிகளே கிடைக்காத கிராமத்தில் மகளுக்குக் கல்வி கிடைக்கவேண்டும் என்று முர்முவை பள்ளிக் கல்விக்குப்பிறகு, ராய்ரங்பூரில் கல்லூரிப் படிப்பையும் முடிக்கவைத்தார். இளங்கலை பட்டம் முடித்த கையுடன் 1979 முதல் 1983 வரை ஒடிசா மாநில அரசில் நீர்ப்பாசனம் மற்றும் மின்துறையில் இளநிலை உதவியாளராக பணியைத் துவங்கினார் முர்மு.

பின்னர், 1994-ஆம் ஆண்டு ஸ்ரீ அரவிந்தோ ஒருங்கிணைந்த கல்வி மையத்தில் ஆசிரியர் பணியில் சேர்ந்தார். இளநிலை உதவியாளர், ஆசிரியர் என்று பயணப்பட்டாலும் தனது இலக்கை அரசியல் மீதே வைத்திருந்தார் முர்மு. 1997-ஆம் ஆண்டு பா.ஜ.க-வில் இணைந்ததோடு ராய்ரங்பூர் கவுன்சில ராகவும் அரசியலில் தனது என்ட்ரியை பதிவு செய்தார். அதே ஆண்டு பா.ஜ.கவின் பழங்குடியினர் மோர்ச்சாவின் துணைத் தலைவராகவும் அரசியலில் அடுத்த அடியை எடுத்து வைத்தார். பா.ஜ.க-வின் முக்கியத் தலைவரான சுஷ்மா சுவராஜுக்கு அடுத்து, கட்சியில் இணைந்ததிலிருந்து அதிகாரத்திலேயே இருந்து வருபவர் என்றால் அது திரௌபதி முர்முதான்.

2000 – 2009 என இண்டு முறை ராய்ரங்பூர் தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர், பா.ஜ.க - பிஜு ஜனதா தளம் கூட்டணியில் இரண்டு முறை அமைச்சராகவும் ஆனார். போக்குவரத்து மற்றும் வணிகம், மீன்வளம் மற்றும் கால்நடை வளர்ப்பு போன்ற பல்வேறு துறைகளையும் சிறப்பாகக் கையாண்டு பெயர் எடுத்தார். 2006-ஆம் ஆண்டிலிருந்து 2009 வரை பழங்குடியின மாநிலப் பிரிவுத் தலைவராகவும் இருந்து வந்தார். சிறந்த சட்டமன்ற உறுப்பினருக்கான விருதைப் பெற்ற முர்மு, இரண்டாவது முறையாகப் போட்டியிடும்போது தனது பிரமாணப் பத்திரத்தில், “தனக்கு வீடுகூட இல்லை. சிறிய வங்கி இருப்பு, கொஞ்சம் நிலம் மட்டுமே உள்ளது” என்று தெரிவித்து ஆச்சர்யப் படுத்தினார்.

கடந்த 2015-ஆம் ஆண்டு ஜார்க்கண்ட் மாநிலத்தின் முதல் பெண் ஆளுநராக பதவியேற்றுக்கொண்டவருக்கு, பதவிக்காலம் முடிந்தும் கொரோனா வால் பதவியை நீட்டித்தது மத்திய அரசு. கடந்த ஆண்டு ஆளுநர் பதவியிலிருந்து ஓய்வு பெற்றவர், தற்போது குடியரசுத் தலைவர் வேட்பாள ராக மீண்டும் லைம்லைட்டுக்கு வந்திருக் கிறார். பழங்குடியின மக்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்ட முர்மு ஆளும் கட்சியுடன் மோதலில் ஈடுபட்டு அவர்கள் அனுப்பிய திருத்தங்களையும் திருப்பி அனுப்பி தான் சார்ந்த பழங்குடியின மக்களிடம் பாராட்டுக்களைக் குவித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

gk010822
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe