Advertisment

பொதுப் பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு மற்றும் குடிமக்கள் திருத்த மசோதா

/idhalgal/general-knowledge/10-reservation-and-citizens-amendment-bill-general-public

பொருளாதார ரீதியாக நலிவுற்ற பொதுப் பிரிவினருக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 10% இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்பியிருக்கிறது.

Advertisment

இது தொடர்பாக மத்திய அரசு கொண்டுவந்திருக்கும், 124-வது அரசியல் சட்டத் திருத்த மசோதா நிறைவேற, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மூன்றில் இரண்டு மடங்கு உறுப்பினர் களின் ஆதரவு அவசியம். எந்தக் காரணத்தைக் கொண்டும் மொத்த இடஒதுக்கீடு 50% என்ற அளவைத் தாண்டக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் விதித்துள்ள உச்ச வரம்பை மீறும் வகையில் இருப்பதால் உச்ச நீதிமன்றம் இதை ஏற்குமா என்பது அடுத்த கேள்வி.

Advertisment

இந்திரா சஹானி வழக்கில், பொருளாதார ரீதியாக பின்தங்கியவர் களுக்கு ஒதுக்கப்பட்ட 10% இடங்களை ஒன்பது நீதிபதிகளைக் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வு ரத்து செய்தது. ஒரு வகுப்பினரின் பின்தங்கிய நிலைமையைத் தீர்மானிக்க பொருளாதாரப் பின்புலம் மட்டுமே ஒரு காரணமாக இருக்க முடியாது என்று தீர்ப்பில் தெளிவுபடுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

தற்போது, 10% ஒதுக்கீடு பெற ஆண்டு வருமானம் ரூ. 8 லட்சம் என்று உச்ச வரம்பு விதிக்கப்பட்டுள்ளது.

பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்களில் உயர்

பொருளாதார ரீதியாக நலிவுற்ற பொதுப் பிரிவினருக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 10% இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்பியிருக்கிறது.

Advertisment

இது தொடர்பாக மத்திய அரசு கொண்டுவந்திருக்கும், 124-வது அரசியல் சட்டத் திருத்த மசோதா நிறைவேற, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மூன்றில் இரண்டு மடங்கு உறுப்பினர் களின் ஆதரவு அவசியம். எந்தக் காரணத்தைக் கொண்டும் மொத்த இடஒதுக்கீடு 50% என்ற அளவைத் தாண்டக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் விதித்துள்ள உச்ச வரம்பை மீறும் வகையில் இருப்பதால் உச்ச நீதிமன்றம் இதை ஏற்குமா என்பது அடுத்த கேள்வி.

Advertisment

இந்திரா சஹானி வழக்கில், பொருளாதார ரீதியாக பின்தங்கியவர் களுக்கு ஒதுக்கப்பட்ட 10% இடங்களை ஒன்பது நீதிபதிகளைக் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வு ரத்து செய்தது. ஒரு வகுப்பினரின் பின்தங்கிய நிலைமையைத் தீர்மானிக்க பொருளாதாரப் பின்புலம் மட்டுமே ஒரு காரணமாக இருக்க முடியாது என்று தீர்ப்பில் தெளிவுபடுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

தற்போது, 10% ஒதுக்கீடு பெற ஆண்டு வருமானம் ரூ. 8 லட்சம் என்று உச்ச வரம்பு விதிக்கப்பட்டுள்ளது.

பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்களில் உயர் வருவாய்ப்பிரிவினர் (கிரீமி லேயர்) என்று அடையாளம் காணப்படுபவர்களுக்கு இதே வருமான வரம்பு அமலில் இருக்கும் நிலையில், முன்னேறிய வகுப்பினருக்கும் அதே அளவில் வரம்பு விதிப்பதும் விமர்சனத் துக்குள்ளாகியிருக்கிறது. நாகராஜ் (2006) வழக்கில், அரசியல் சட்ட அமர்வு அளித்த தீர்ப்பு, சமத்துவம் என்பது இந்திய அரசியல் சட்டத்தின் அடிப்படையான அம்சங்களில் ஒன்று என்று தெளிவுபடுத்தியிருக்கிறது.

இட ஒதுக்கீடு மூலம் நிரப்பப்படும் இடங்களின் உச்சவரம்பு 50%-க்கும் அதிகமானால்,அனைவருக்கும் சமவாய்ப்பு என்ற அம்சம் அடிபட்டுப் போய்விடும் என்று சுட்டிக்காட்டி யிருக்கிறது.

இதையொட்டியே பல தீர்ப்புகள் வெளிவந்துள்ளன. மேலும், இடஒதுக்கீடு பெறாத சமூகங்களின் ஏழைகளுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் போதிய பிரதிநிதித்துவம் இல்லை என்று காட்ட அரசிடம் தரவுகள் உள்ளனவா என்று தெரியவில்லை.

வரலாற்றுரீதியாக வாய்ப்பு மறுக்கப் பட்டவர்களுக்கும், சமூகரீதியாக ஒதுக்கப்பட்டு அநீதி இழைக்கப் பட்டவர்களுக்கும் நீதி வழங்கத்தான் இடஒதுக்கீடு. அப்படியிருக்கும்போது சமூகரீதியாகவும் கல்விரீதியாகவும் முற்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்களுக்கு, வருமானம் குறைவு என்பதற்காக மட்டும் இடங்களை ஒதுக்க வேண்டுமா என்பது மிக முக்கியமான கேள்வி. அப்படி ஒதுக்கலாம் என்றால், தேசம் தழுவிய வலுவான விவாதம், அதன் அடிப்படையிலான ஏற்பாடுகள், ஏற்கெனவே பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் இடஒதுக்கீடு தொடர்பிலுள்ள கோரிக்கைகள் ஆகியவற்றுடன் சேர்த்து செய்யப்பட வேண்டியது அது.

தேர்தல் கணக்குகளை முன்வைத்து இப்படியான நடவடிக்கைகளில் ஓர் அரசு இறங்குகிறது என்றால், இடஒதுக்கீடு கொண்டு வரப்பட்டதன் நோக்கம் நீர்த்துப் போய்விடும் என்பதைத்தான் அழுத்தம்திருத்த மாகச் சொல்ல வேண்டியிருக்கிறது.

குடிமக்கள் திருத்த மசோதா பாஜக தலைமையிலான மத்திய அரசு கொண்டுவந்திருக்கும் குடிமக்கள் (திருத்த) மசோதா, வடகிழக்கு மாநிலங்களில் குறிப்பாக, அசாமிலும் திரிபுராவிலும் புயலைக் கிளப்பி யிருக்கிறது. அத்துடன், அசாமில் உள்ள ஆறு சமூகங்களுக்கு பழங்குடி அந்தஸ்து வழங்கும் திட்டத்தையும் கையில் எடுத்திருக்கிறது. மக்களவைத் தேர்தல் நெருங்கும் சமயத்தில், அடுத்தடுத்து காய் நகர்த்திவரும் பாஜகவின் முயற்சிகளில் இதுவும் ஒன்று என்று கருதப்படுகிறது.

அசாமில் பாஜக கூட்டணி அரசில் இடம்பெற்றிருந்த அசாம் கண பரிஷத் இந்த மசோதாவைக் கண்டித்து கூட்டணியிலிருந்தே வெளியேறியிருப்பது பாஜகவுக்குத் தற்காலிகப் பின்னடை வையும் ஏற்படுத்தியிருக்கிறது.

மக்களவையில் நிறைவேறியிருக்கும் குடிமக்கள் (திருத்த) மசோதா, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளிலிருந்து 2014-க்கு முன்னால் இந்தியாவில் புகலிடம் தேடி வந்த இந்துக்கள், ஜைனர்கள், பவுத்தர்கள், சீக்கியர்கள், பார்சிகள், கிறிஸ்தவர்கள் ஆகியோருக்குக் குடியுரிமை வழங்க வழிசெய்கிறது.

இந்த மசோதாவில் முஸ்லிம்கள் சேர்க்கப்படாதது குறிப்பிடத்தக்கது. 1971-இல் வங்கதேச விடுதலைக்குப் பிறகு அந்நாட்டிலிருந்து வெளியேறி அசாம், திரிபுராவில் குடியேறிய வங்காளி இந்துக்களுக்குக் குடியுரிமை வழங்கும் தந்திரமே இது என்று அவ்விரு மாநிலத்தவரும் கொதிப் படைந்துள்ளனர்.

வங்கதேச விடுதலைப் போரின்போது அகதிகளாக வந்து குடியேறியவர் களின் சுமை முழுவதையும் அசாமே தாங்க வேண்டியிருக்காது என்று பாஜக உறுதியளித்துவந்த நிலையில், இம்மசோதாவின் நோக்கம் முற்றிலும் மாறாக இருப்பதாக அம்மாநிலத் திலிருந்து அதிருப்திக் குரல்கள் எழத் தொடங்கியிருக்கின்றன. அகதிகளை அதிக மக்கள்தொகையில்லாத பகுதிகளில் குடியமர்த்த அசாம் அரசு உதவ வேண்டும். ஏற்கெனவே மக்கள் அடர்த்தியுள்ள பகுதிகளில் சுமையை ஏற்றக் கூடாது என்று ராஜேந்திர அகர்வால் தலைமையிலான நாடாளுமன்றக் கூட்டுக் குழுவும் தன்னுடைய அறிக்கையில் பரிந்துரைத் துள்ளது. அசாம் கண பரிஷத் கட்சியின் எதிர்ப்புக்கு இதுவும் ஒரு காரணம்.

இதற்கிடையே, 1985-இல் கையெழுத்தான அசாம் உடன்படிக்கையின் 6-வது பிரிவைச் செயல்படுத்துவதில் முனைப்புக் காட்டுகிறது பாஜக அரசு. ஆறு பெரிய சமூகங்களுக்குப் பழங்குடி இன (எஸ்.டி.) அந்தஸ்து வழங்கவும் முடிவுசெய்திருக்கிறது. இந்தச் சமூகங்கள் இப்போது இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (ஓபிசி) பிரிவில் உள்ளனர். இந்நடவடிக்கைகள், உள்ளூர் மக்களின் நலன்களைப் பாதுகாப்பதற்காக முன்னெடுக்கப்படுவதாக பாஜக சொல்லிக்கொண்டாலும், தேர்தல் கணக்குகளைக் குறிவைத்து அக்கட்சி இதில் இறங்கியிருக்கிறது என்றே தெரிகிறது.

ஆறு சமூகங்களுக்குப் பழங்குடி அந்தஸ்து வழங்குவதன் மூலம், 34% முஸ்லிம்களைக் கொண்ட அசாமை, பழங்குடிகள் பெரும்பான்மையாக உள்ள மாநிலமாக மாற்றுகிறது பாஜக அரசு. சட்டமன்றத்திலும் உள்ளாட்சி மன்றங் களிலும் பழங்குடிகளுக்கு அதிகத் தொகுதிகளை ஒதுக்கும் திட்டம் இது. 2014-இல் மொத்தமுள்ள 14 அசாம் மக்களவைத் தொகுதியில் பாஜக 7 இடங்களில் வென்றது. 2019 மக்களவைத் தேர்தலில் அதே அளவு தொகுதிகளைத் தக்கவைப்பது கடினம் என்பதால், இப்படியான நடவடிக்கைகளில் இறங்கியிருக்கிறது.

gk010219
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe