ந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ் 10 அம்ச அறிவிப்புகளை வெளியிட்டார் அதன் விவரம்.

உலக பொருளாதாரம் மீண்டும் பழைய நிலைக்குத் திரும்பும் வளர்ச்சி அறிகுறிகளைக் காட்டியுள்ளது. இருப்பினும் இந்த வளர்ச்சி நாடு முழுக்க, பொருளாதாரத்தின் அனைத்து துறைகளிலும் சமமாக இல்லை. இப்போதைக்கு எதிர்காலம் நிலையற்றதாகவும் சரிவு ஏற்படுவதற்கான அபாயங்கள் நிறைந்ததாகவும் இருக்கின்றன. முன்னேறிய பொருளாதாரங்கள் மற்றும் சில வளரும் பொருளாதாரங்களைக் கொண்ட நாடுகளில் 2021-ஆம் ஆண்டு கோடை காலத்துக்கு முன்பும், மற்ற பெரும்பாலான நாடுகளில் 2022-ஆம் ஆண்டின் இரண்டாவது அரையாண்டு காலகட்டத்தில் கொரோனா தடுப்பூசி கிடைக்கும் என்கிற கணிப்பில், 2021--ஆம் ஆண்டுக்கான உலக பொருளாதார வளர்ச்சி 6 சதவீதமாக இருக்கலாமென சர்வதேச பன்னாட்டு நிதியம் தன் கணிப்பை அதிகரித்திருக்கிறது. இதே அமைப்பு கடந்த ஜனவரி 2021-இல் உலக பொருளாதாரத்தின் வளர்ச்சி 5.5 சதவீதமாக இருக்கலாம் என கணித்திருந்தது நினைவுகூரத்தக்கது.

rbi

இந்தியாவில் 2020 - 21 கால கட்டத்தில் காணப்பட்ட அதிக அளவிலான உணவு உற்பத்தி மற்றும் கூடுதலாக கையிருப்பில் இருக்கும் உணவு தானியங்கள், இந்தியாவுக்கு உணவுப் பாதுகப்பை வழங்குவதோடு, மற்ற பொருளாதார துறைகளுக்கும் கிராமபுற தேவை, வேலைவாய்ப்பு, விவசாய உள்ளீடுகள், விநியோகம், ஏற்றுமதி என பல வழிகளில் ஆதரவு வழங்குகிறது.

நுகர்வுத் தேவை இந்திய பொருளாதாரத்தை தூக்கிப் பிடித்துக் கொண்டிருக்கிறது. நுகர்வுப் பொருட்களின் விற்பனை கடந்த ஜனவரி முதல் மார்ச் வரையிலான மூன்று மாத காலத்தில் இரட்டை இலக்கத்தில் வளர்ச்சி கண்டிருக்கின்றன. அதே போல சராசரி (தினசரி) மின்சார உற்பத்தி, கடந்த ஏப்ரல் 2020-ஐ விட தற்போது 40 சதவீதம் கூடுதலாக இருக்கிறது.

ஏப்ரல் 2021-இல் வாகன பதிவுகள் எண்ணிக்கை, கடந்த மார்ச் மாதத்தை விட கொஞ்சம் வளர்ச்சி கண்டிருக்கிறது. டிராக்டர் வாகனப் பதிவுகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.

பர்சேஸிங் மேனேஜர்ஸ் இண்டெக்ஸ் எனப்படும் பிஎம்ஐ குறியீடு, கடந்த ஏப்ரல் 2021-இல் 55.5 புள்ளிகளாக அதிகரித்து இருக்கிறது. அதற்கு முந்தைய மாதம் இக்குறியீடு 55.4 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

நுகர்வோர் பணவீக்கக் குறியீடு கடந்த மார்ச் 2021-இல் 5.5 சதவீதமாக அதிகரித்து இருக்கிறது. அதற்கு முந்தைய மாதத்தில் இக்குறியீடு 5 சதவீதமாக இருந்தது, உணவு மற்றும் எரிபொருள் விலை ஏற்றத்தால் இந்த குறியீடு அதிகரித்திருக்கிறது.

இந்தியாவில் கொரோனா தொடர்பான சுகாதார மற்றும் மருத்துவ கட்டமைப்பு சேவைகளுக்கு தேவையான நிதி வசதிகளுக்காக 50,000 கோடி ரூபாய்க்கு சிறப்புக் கடன் வசதி வழங்கப்படும். இத்திட்டத்தின் கீழ் 2022 மார்ச் 31-ஆம் தேதி வரை ரெப்போ ரேட் வட்டி விகிதத்தில் கடனைப் பெறலாம்.

இத்திட்டத்தின் கீழ், தடுப்பூசி உற்பத்தியாளர்கள், தடுப்பூசி மற்றும் முன்னுரிமை கொடுக்கப்பட்டிருக்கும் மருத்துவ சாதன விநியோகஸ்தர்கள் மற்றும் இறக்குமதியாளர்கள், மருத்துவமனைகள், மருந்தகங்கள், நோயியல் பரிசோதனைக் கூடங்கள், ஆக்சிஜன் மற்றும் வென்டிலேட்டர் உற்பத்தியாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள், கொரோனா தடுப்பூசி மற்றும் கொரோனா தொடர்பான மருந்து இறக்குமதி யாளர்கள், போக்குவரத்து நிறுவனங்கள், மருத்துவ சிகிச்சைக்காக நோயாளிகள் போன்றோர்களுக்கு வங்கிகள் புதிதாக கடன் வழங்கலாம்.

தனி நபர்கள், சிறு வியாபாரிகள், சிறு குறு தொழில்முனைவோர்கள் வாங்கி இருக்கும் மொத்த கடன் அளவு 25 கோடி ருபாய்க்குள் இருந்து, அவர்கள் இதுவரை அறிவிக்கப்பட்ட எந்த ஒரு கடன் மறுசீரமைப்புத் திட்டங்களையும் (06 ஆகஸ்ட் 2020 அன்று அறிவித்த கடன் மறுசீரமைப்புத் திட்டம் உட்பட) பயன்படுத்தாதவர்களாக இருந்து, 31 மார்ச் 2021 தேதி வரை முறையாக கடனுக்கான வட்டியைச் செலுத்தி 'ஸ்டாண்டர்ட்' கடனாக இருந்தால் அவர்கள் கடன் மறுசீரமைப்புத் திட்டம் 2.0-இல் பயன் பெறலாம்.

ஏற்கனவே கடன் மறுசீரமைப்புத் திட்டம் 1.0-வில் பலன் பெற்றவர்களின் கடனைத் திருப்பிச் செலுத்தும் காலம் (தங்ள்ண்க்ன்ஹப் பங்ய்ர்ழ்) அல்லது கடன் ஒத்திவைப்பு காலத்தை (டங்ழ்ண்ர்க் ர்ச் ஙர்ழ்ஹற்ர்ழ்ண்ன்ம்), இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, வங்கிகள் 2 ஆண்டு காலம் வரை நீட்டித்துக் கொள்ளலாம். மற்ற விதிமுறைகள் அப்படியே பொருந்தும் என கூறியுள்ளார்.

நெட்-ஜீரோ - இந்தியா வைக்கும் முக்கிய கருத்துகள்

அமெரிக்காவின் காலநிலை மாற்ற சிறப்பு தூதர் ஜான் கெர்ரி மூன்று நாள் பயணமாக இந்தியா வந்தார்.

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரெம்பின் நிர்வாகத்தின் போது நிறுத்தி வைக்கப்பட்ட காலநிலை மாற்ற கூட்டமைப்பை ( ஸ்ரீப்ண்ம்ஹற்ங் ஸ்ரீட்ஹய்ஞ்ங் ல்ஹழ்ற்ய்ங்ழ்ள்ட்ண்ல் ) மீண்டும் புதுப்பிப்பதற்காக வந்தார் .

தன்னுடைய உலகளாவிய காலநிலை தொடர்பான தலைமையை மீட்டெ டுக்கும் முயற்சியாக இந்த கூட்டத்தில் ஜீரோ – எமிஷன் எனப்படும் பூஜ்ஜிய உமிழ்வு இலக்கை அமெரிக்கா 2050-ஆம் ஆண்டுக்குள் எட்டும் என்று அவர் அறிவிக்கலாம் என்று கூறப் படுகிறது. ஏற்கனவே இங்கிலாந்து, ஃபிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் இந்த ஜீரோ எமிஷனை நடைமுறைப்படுத்த பல சட்டங்களை இயக்கியுள்ளது. ஐரோப்பிய ஒன்றியம் இதே போன்று ஐரோப்பா முழுமைக்கான சட்டங்களை இயற்ற முயன்று வருகிறது. கனடா, தென் கொரியா, ஜப்பான் மற்றும் ஜெர்மனி போன்ற நாடுகள் எதிர்காலத்தில் இப்படியான ஜீரோ உமிழ்வை கடைபிடிக்க உறுதி அளித்துள்ளது. சீனாவும் கூட 2060-ன் போது இந்த சாத்தியத்தை நிகழ்த்த விரும்புவதாக கூறியுள்ளது. பசுமை வாயுக்களை அமெரிக்கா சீனாவிற்கு அடுத்தபடியாக அதிக அளவில் வெளியிடும் நாடாக உள்ளது இந்தியா. கெர்ரியின் வருகையின் நோக்கங்களில் ஒன்று, புதுடெல்-லி அதன் கடுமையான எதிர்ப்பைக் கைவிட முடியுமா என்பதை ஆராய்வது, மேலும் 2050 நிகர பூஜ்ஜிய இலக்கை அடைவதற்கான வாய்ப்பைத் திறந்து வைப்பது தான்.

நெட் ஜீரோ இலக்கு என்பது

நெட் ஜீரோ என்பது கார்பன் நடுநிலைமையை குறிப்பதாகும். இது எமிசனை ஜீரோவிற்கு கொண்டு வருமென்று அர்த்தமில்லை. நெட் ஜீரோ என்பது ஒரு நாட்டின் கார்பன் உமிழ்வை, வளிமண்டலத்தில் இருக்கும் பசுமை வாயுக்களை உறிஞ்சுதல் அல்லது நீக்குதலுடன் தொடர்புடையது. பசுமை வாயுக்களை உறிஞ்ச காடுகள் போன்ற கார்பன் சிங்குகள் அதிகம் தேவைப்படுகின்றன. கார்பன் பிடிப்பு மற்றும் சேமிப்பு போன்ற எதிர்கால தொழில்நுட்பத்தின் உதவி மூலம் மட்டுமே வளிமண்டத்தில் இருந்து கார்பன் வாயுக்களை நீக்க முடியும். உறிஞ்சுதல் மற்றும் நீக்குதல் உண்மையான கார்பன் வெளியீட்டைக் காட்டிலும் அதிகமாக இருக்கும் போது எதிர்மறையில் கார்பன் வெளியீடு இருக்கும். உதாரணத்திற்கு பூடான் நாடு அடிக்கடி எதிர்மறை கார்பன் வெளியீட்டு நாடு என்று அழைக்கப்படுகிறது.

2050-ஆம் ஆண்டிற்கான ஒவ்வொரு நாடும் நிகர பூஜ்ஜிய இலக்கில் கையெழுத்திட கடந்த இரண்டு ஆண்டுகளாக மிகவும் சுறுசுறுப்பான பிரச்சாரம் நடந்து வருகிறது. 2050-ஆம் ஆண்டளவில் உலகளாவிய கார்பன் நடுநிலைமைதான் பாரிஸ் ஒப்பந்த இலக்கை அடைய ஒரே வழி என்று வாதிடப்படுகிறது. தொழில்துறைக்கு முந்தைய காலங்களுடன் ஒப்பிடும்போது கிரகத்தின் வெப்பநிலை 2 ளி ஈ க்கு அப்பால் உயரும். தற்போதைய கொள்கைகள் மற்றும் உமிழ்வைக் குறைக்க எடுக்கப்படும் நடவடிக்கைகள் நூற்றாண்டின் தொடக்கத்தில் 3-4ளி ஈ உயர்வைக் கூட தடுக்க முடியாது.

கார்பன் நடுநிலைமையின் குறிக்கோள் ஒரு நீண்ட கால இலக்கைக் கொண்டு பல தசாப்தங்களாக நடந்து வரும் ஒரு விவாதத்தின் சமீபத்திய உருவாக்கம் மட்டுமே. நீண்டகால இலக்குகள் நாடுகளின் கொள்கைகள் மற்றும் செயல்களில் முன்கணிப்பு மற்றும் தொடர்ச்சியை உறுதி செய்கின்றன. ஆனால் இந்த இலக்கு என்னவாக இருக்க வேண்டும் என்பதில் ஒருமித்த கருத்து இருந்ததில்லை.

ஆரம்ப காலத்தில் எமிஷன் குறைப்பு

இலக்குகள் 2050 அல்லது 2070 ஆண்டுகளை மையப்படுத்தி இருந்தது. வளர்ந்த, பணக்கார நாடுகளில் ஒழுங்குப்படுத்தப்படாத உமிழ்வுகளின் விளைவாகவே புவி வெப்பமயமாகுதல் மற்றும் காலநிலை மாற்றம் உருவானது.

இந்த நெட் ஜீரோ உருவாக்கம் எந்த நாட்டில் எவ்வளவு அளவில் எமிஷனை குறைக்க வேண்டும் என்ற இலக்கு எதையும் வைக்கவில்லை.

கோட்பாட்டளவில் உமிழ்தல் அதிகரிக்கும் போது அதனை உறிஞ்சவோ, கிரகித்துக் கொள்ளவோ அல்லது நீக்கவோ அதிகப்படியாக முடியும் என்றால் அந்த நாடு கார்பன் நியூட்ரல் என்ற அளவை எட்டுகிறது என்று கோட்பாடுகள் கூறுகின்றன. வளர்ந்த நாடுகளின் கண்ணோட்டத்தில், இது ஒரு பெரிய நிவாரணமாகும், ஏனென்றால் இப்போது சுமை அனைவராலும் பகிர்ந்து கொள்ளப்படுகிறது, மேலும் அவர்கள் மீது மட்டும் விழாது.

இந்தியா தெரிவிக்கும் ஆட்சேபனைகள்

இந்த இலக்கிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் ஒரே ஒரு நாடு இந்தியா தான். ஏன் என்றால் இதனால் அதிக பாதிப்பினை சந்திக்கக் கூடியது இந்தியா மட்டுமே.

அடுத்த இருபது அல்லது 30 வருடங்களில் இந்தியாவின் கார்பன் எமிஷன் உலக அளவில் வேறெங்கும் இல்லாத வகையில் அதிகமாக அதிகரிக்கக் கூடும். லட்சக்கணக்கான மக்களை பஞ்சத்தில் இருந்து காக்க இந்த வளர்ச்சி இன்றியமையாதது. எத்தனை காடுகள் மறுவளர்ச்சியும் இதனை ஈடு செய்யாது. தற்போதைய சூழலில் இருக்கும் கார்பன் நீக்கும் தொழில்நுட்பம் அனைத்தும் நம்பத் தகாதவையாக இருக்கிறது அல்லது மிகவும் விலை உயர்ந்தவையாக உள்ளது.

கொள்கை மற்றும் செயற்பாட்டளவில் இந்தியாவின் வாதத்தை நிராகரிக்க இயலாது. 2015-ஆம் ஆண்டு பாரீஸ் ஒப்பந்தத்தில் நெட் ஜீரோ குறித்து எந்த விதமான குறிப்பும் இல்லை. காலநிலை மாற்றத்திற்காக செயல்படும் உலகளாவிய கட்டமைப்பாக பார்க்கப்படும் பாரீஸ் ஒப்பந்தம் கையொப்பமிட்ட ஒவ்வொரு உறுப்பினர்களும் தங்களின் பங்கை சிறப்பாக செய்ய வேண்டும் என்றே கூறுகிறது. ஒவ்வொரு நாடும் ஐந்து அல்லது 10 வருட காலநிலை இலக்கை தங்களுக்குள்ளே நிர்ணயித்துக் கொள்ள வேண்டும் என்றும், ஒவ்வொரு அடுத்தடுத்த கால அளவிற்கான இலக்குகள் முந்தையதை விட அதிக லட்சியமாக இருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

பாரீஸ் ஒப்பந்தத்தை நடைமுறைப் படுத்துவது இந்த ஆண்டில் இருந்தே துவங்குகிறது. பெரும்பாலான நாடுகள் 2025 அல்லது 2030 காலத்திற்கான தங்களின் இலக்குகளை சமர்ப்பித் துள்ளன. பாரிஸ் ஒப்பந்த கட்டமைப் பிற்கு வெளியே நிகர பூஜ்ஜிய இலக்குகள் குறித்து ஒரு இணையான விவாதத்தை நடத்துவதற்கு பதிலாக, நாடுகள் தாங்கள் ஏற்கனவே உறுதியளித் ததை வழங்குவதில் கவனம் செலுத்த வேண்டும் என்று இந்தியா வாதிடுகிறது. புது டெல்-லி அதற்கு உதாரணமாக செயல்பட விரும்புகிறது. பாரீஸ் ஒப்பந்தத்தின் கீழ் 3 திட்டங்களை செயல்படுத்தவும் அந்த இலக்குகளை எட்டவும் முடிவு செய்துள்ளது.

உலகளாவிய வெப்பநிலை 2ளிஈ க்கு மேல் உயராமல் இருக்க வைக்கும் பாரிஸ் ஒப்பந்த இலக்கிற்கு இணங்கக் கூடிய ஒரே ஜி-20 நாடு இந்தியா மட்டுமே என்று பல ஆய்வுகள் தெரிவிக் கின்றன. காலநிலை மாற்றத்தில் மிகவும் முற்போக்கானதாகக் கருதப் படும் ஐரோப்பிய ஒன்றியத்தின் நடவடிக்கைகள் மற்றும் அமெரிக்கா கூட போதாதுஎன்று மதிப்பிடப்படுகின்றன. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், இந்தியா ஏற்கனவே பல நாடுகளை விட காலநிலை குறித்து அதிக கவனம் செலுத்தி வருகிறது.

வளர்ந்த நாடுகள் தங்களின் கடந்த கால வாக்குறுதிகள் மட்டும் கடைமைகளை ஒரு போதும் வழங்கவில்லை என்று இந்தியா தொடர்ந்து கூறி வருகிறது. எந்த பெரிய நாடுகளும் க்யோடோ உடன்படுக்கையில் கூறப் பட்டது போல் உமிழ்வு குறைப்பு இலக்கை எட்டவில்லை. சிலர் இந்த உடன்படுக்கையில் இருந்து எந்தவிதமான விளைவுகளும் இன்றி வெளிப்படையாக வெளியேறினார்கள். 2020-ஆம் ஆண்டு அடைய வேண்டிய இலக்காக கூறப்பட்ட எந்தவிதமான சத்தியங்களையும் அவர்கள் நிறைவேற்றவில்லை. காலநிலை மாற்றத்தின் தாக்கங்களைச் சமாளிக்க உதவுவதற்காக வளரும் மற்றும் ஏழை நாடுகளுக்கு பணம் மற்றும் தொழில்நுட்பத்தை வழங்குவதற்கான அவர்களின் அர்ப்பணிப்பு குறித்த அவர்களின் பதிவு இன்னும் மோசமானது.

2050-ஆம் ஆண்டுக்கான கார்பன் நடுநிலை வாக்குறுதியும் கூட இவ்வாறு முடிவடையலாம் என்று இந்தியா கருத்து தெரிவிக்கிறது. சட்டங்களில் மாற்றங்களை கொண்டு வருவதற்கு பதிலாக அதற்கு பதிலாக, வளர்ந்த நாடுகள், நிறைவேறாத முந்தைய வாக்குறுதிகளுக்கு ஈடுசெய்ய, இப்போது அதிக லட்சிய காலநிலை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று வ-லியுறுத்தி வருகிறது. அதே நேரத்தில் கார்பன் நடுநிலைமையை 2050 அல்லது 2060-க்குள் அடைவது சாத்தியம் இல்லை என்று கூறவில்லை என்று கூறும் புதுடெல்-லி, இது தொடர்பாக இவ்வளவு முன்கூட்டியே சர்வதேச அளவில் உறுதி கூற விரும்பவில்லை என்று கூறியுள்ளது.