ழ்ந்த அமைதியான காட்டில், ஒரு மரத்தடியின் கீழ் அமர்ந்து தியானம் செய்துகொண்டிருந்தார்.

மரத்தின் மே-ருந்து சில சொட்டு நீர் புத்தர்மீது சொட்டியது.  அந்த நீர்த்துளிகள் வெதுவெதுப்பாக இருந்தது.

அதனால் புத்தர் அண்ணாந்து பார்த்தார். மரத்தின் கிளையொன்றில் அமர்ந்திருந்த காகத்தின் கண்ணீர் அது என புரிந்துகொண்டார் புத்தர்.

Advertisment

காகத்தை கனிவோடு பார்த்தார். தன் அருகே வருமாறு காகத்தை அழைத்தார். காகம் பறந்து வந்து புத்தரின் அருகே அமர்ந்தது.

"ஏன் காகமே இவ்வளவு சோகமாக இருக்கிறாய்?''

"சுவாமி... எனக்கு மிகுந்த மனக்கவலையாக உள்ளது!''

Advertisment

"அப்படி என்ன கவலை உனக்கு?''

"நான் ஒரு பறவையாக இருந்தாலும் மற்ற பறவைகளுக்கு மக்களிடமிருந்து கிடைக்கும் மரியாதையும், அன்பும் எடைக்கு கிடைப்பதில்லை. என் கருமை நிறத்தையும், குரலையும் கே- செய்கிறார்கள். எதற்கு எனக்கு இந்த பிறவி?''

இப்படிச் சொல்-விட்டு மிகுந்த விரக்தி மனப் பான்மையுடன் மேலும் கண்ணீர் உகுத்தது.

காகத்திற்கு ஆறுதல் சொன்ன புத்தர் "எல்லாருக்குமே பிரச்சினை உள்ளது. உனக்கு மட்டுமே பிரச்சினை இருப்பதாக எண்ணாதே!' எனச் சொன்னார்.

"என்னை சமாதானப்படுத்துவதற்காக சொல்லா தீர்கள் சுவாமி.''

"மற்ற பறவைகள் மக்களின் அன்பிற்கு பாத்திரமாக இருப்பதாக நீ நினைத்தால்... நான் சொல்வது போல் செய்.'' 

"சொல்லுங்க சுவாமி!''

"எந்தப் பறவை மிகுந்த சந்தோஷ மாக இருக்கிறது என நீ நினைக்கிறா யோ... அந்தப் பறவையை சந்தித்து பேசு''.

"அதுவும் நல்ல யோசனைதான் சுவாமி! நான் கிளம்புகிறேன்'' எனச் சொன்ன காகம் வானில் பறந்தது.

சில விதவிதமான பறவைகளைச் சந்தித்துப் பேசியது.

ஒவ்வொரு பறவையும் தங்களுக்கு இருக்கும் பிரச்சினைகளைச் சொன்னது.

பச்சைக்கிளியை மக்கள் கொஞ்சி வளர்ப்பதால் பச்சைக்கிளியைத் தேடிச்சென்றது.

பெரும்பாலும் மனிதர்களின் வீடுகளில் அழகிய கூண்டுக்குள் பழங்களும், சுவையான தானியங்களும் கொடுத்து கிளிகள் வளர்க்கப்படு வதைக் கண்டது.

ஒரு கிளியிடம் பேச்சு கொடுத்தது. 

"இந்த வீட்டு மனிதர்கள் உனக்கு வசிக்க இடமும், ருசிக்க உணவும் கொடுத்து பிரியமாக பார்த்துக் கொள்கிறார்கள். நீ அதிர்ஷ்டசா-.''

"ம்.. ஹூக்கும்... நீதான் மெச்சிக்க ணும். உணவு கிடைத்து என்ன பண்ண...? அவர்கள் சொன்னதைச் சொல்லும் கிளிப் பிள்ளையாக இருக்கிறேன். சுயமரியாதை இல்லை; 

உன்னைப்போல் விரும்பிய இடத்திற்கு பறந்து செல்லும் சுதந்திரம் இல்லை. சுதந்திரம் இல்லாத வாழ்க்கை ஒரு வாழ்க்கையா?'' என கிளி அங்காலாய்த்தது.

காகத்திற்கு உண்மை நிலவரம் புரிந்ததால்... புத்தரிடம் வந்தது. வாழ்க்கையின் யதார்த்தத்தை காகம் புரிந்துகொண்டதை உணர்ந்த புத்தர் மெல்-யதாய் புன்னகைத்தார்.

காகம் தன் அனுபவத்தை புத்தரிடம் சொன்னது.

அதைக்கேட்ட புத்தர்... "காகமே! நீ மிகுந்த அதிர்ஷ்டசா-. உன்னால் எங்கும் செல்லமுடியும். அந்தச் சுதந்திரம் உனக்கு இருக்கிறது. சுயமரியாதையும், சுதந்திரமும் உடையவனே மிகவும் அழகானவன். நிறத்தில் இல்லை அழகு'' என்றார்.

காகம் புத்தரை வணங்கிவிட்டு மிகுந்த மனமகிழ்ச்சியோடு வானத்தில் பறக்கத் தொடங்கியது.

1962-ஆம் ஆண்டின் வெளிவந்த "சுமைதாங்கி' படத்தில் கண்ணதாசனின் வரிகளில் எம்.எஸ். விஸ்வநாதன்- ராமமூர்த்தி இசையில் ஜெமினிகணேசனுக்காக பி.பி. ஸ்ரீநிவாஸ் பாடிய பாடலை கேளுங்கள்.

பல்லவி:
மயக்கமா? கலக்கமா?
மனதிலே குழப்பமா?
வாழ்க்கையில் நடுக்கமா?
சரணம்:
வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்
வாசல் தோறும் வேதனை இருக்கும்.
வந்த துன்பம் எதுவென்றாலும்
வாடி நின்றால் ஓடுவதில்லை.
எதையும் தாங்கும் இதயம் இருந்தால் 
இறுதிவரைக்கும் அமைதி இருக்கும்.
என்ன அற்புதமான வாழ்க்கைப் பாட்டு....


இல்லாததை நினைத்து ஏங்காமல்; ஏளனத்தை பொருட்படுத்தாமல் இருப்பதைக் கொண்டு சிறப்புடன் வாழ்வோம்.