எல்லாம் வல்ல இயற்கையின் வழியில் பயணிக்கும் மனிதனின் மனமானது, எரியும் தீப்பந்தத்தை கீழ்நோக்கி பிடித்தாலும், மேல் நோக்கி எரிவதுபோல் எந்த மாற்றத்தை அளித்தாலும், கணப்பொழுதில் நின்ற இடமான ஆர்ப்பாட்டத்தின் வாச-லேயே நின்றுவிடும்.
இதனால் உணர்வுகளின் ஊசலாட்டத்தில் சிக்கி தன்னிலை இழந்துவிடும் தன்மையை அடைந்து அதன்பொருட்டு வாழ்வில் சிக்கல் களையும், சீரழிவுகளையும் சந்திக்கின்றது.
இந்த கலைந்த உணர்வை நல்வழிப்படுத்தும் அற்புத ஆற்றல் மகத்தான மலர் மருந்தி டையே பொதிந்துள்ளது என்பதை பயன்படுத்தியவர் கள் மனதார உணர்கின்றனர்.
இந்தப் பய ணத்தில் துலாம் ஆட்சிக்கோள் சுக்கிரனாகவும், உச்ச சனி கிரக மாகவும், நீச ஆன்மகாரகனான சூரியனாகவும் திகழ் கின்றது.
இங்கு ஆறாம் அதிபதி குருவாகவும், அஷ்டமாதி பதி சுக்கிரனாகவும் இருக்கும்.
மேலும் சித்திரை, சுவாதி, விசாகம் போன்ற நட்சத்திரங்களின் கூட்டுத்தன்மை அமையப்பெற்ற ராசியாக திகழ் கின்றது.
வால்நட் ((WALLNUT)+ இம்பேசன்ஷ் (IMPTIENTS)+ஸ்டார் ஆஃப் பெத்தலகம் (STAR OF BETHLEHEM) + லார்ஜ் (LARGE)+ வைல்ட் ஓட் (ரஒகஉ ஞஆப) போன்ற கூட்டு மருந்து சிறப்பளிக்கும்.
இந்த ராசியின் காலமானது இறந்த காலமாக இருப்பதனால் ஹனி ஸ்ட்ரகில் (HONEY SUCKLE) எடுத்துக் கொள்ளலாம்.
எப்பொழுதும் தன்னிடத்தே ஒரு மறைவு தன்மையை கொண்டிருக்கும் இந்த ராசி காலபுருஷனுக்கு ஏழாவது பாவக மாகவும் வருவதனால் ஆ-வ் (WILD OAT) எடுத்துக்கொள்ளும்பொழுது பொதுஜன தொடர்புகளிடத்தையும், கணவன்- மனைவி சார்ந்த பிரச்சினைகளி-ருந்தும் விடுபடமுடியும்.
மலர் மருத்துவத்தில் 13-ஆவது மருந்தாக கார்ஸ் (GORSE) அமைந்துள்ளது. தோல்வியினால் ஏற்படும் பயத்தால் அனைத்து விஷயங்களிலும் நம்பிக்கை இழப்பது, எதற்காகவும் முயற்சி செய்யாமல் தன்னிச்சையாக அமைதியாக காணப்படுவது, பரம்பரை பரம்பரையாக வந்த விளைவுகள் என்கின்ற எண்ணத்தை ஆழ்மனதில் நிலை நிறுத்திக்கொண்டு அவநம்பிக்கையுடன் திகழ்வது, அடுத்தடுத்து வரும் தோல்வியினால் தானும் பயந்து, தன்னை சுற்றி உள்ளவர்களையும் பயமுறுத்தும் மனோபாவம், இனி இந்த வாழ்க்கையை தொடரவே முடியாது. தன்னை யாராலும் குணப்படுத்தவே முடியாது என்கின்ற இறுதித் தன்மையில் சென்று நின்று கொள்வது போன்றவை இந்த மருந்தினால் குணப்படுத்தப்படும் மனநிலைகள் ஆகும்.
இம்மருந்து நேர்மறையான சிந்தனையும், நம்பிக்கையும், கிடைக்கச் செய்யும் எண்ணத்தை மேம்படுத்தும் அற்புதமான ஆற்றலை பெற்றிருக்கும்.
14-ஆவது மருந்தாக ஹீதர்o(HEATHER) அமையப் பெற்றுள்ளது.
தற்பெருமை பேசுதல், தன்னை வியத்தல், தன் சுகம் சந்தோஷம் மட்டுமே நினைத்து கவலை கொள்ளுதல், அதை சார்ந்து புலம்புதல், தன்மீது கவனம் வர மற்றவர்களை ஈர்க்கும்வண்ணம் நடந்து கொள்வது, அவர்களை தொட்டு பேசும் தன்மை, யாரிடமாவது தன்னைப் பற்றிய கவலை மற்றும் நோயைப் பற்றி எப்பொழுதும் பேசிக்கொண்டே இருப்பது, அடுத்தவர் பேசுவதற்கு வாய்ப்பு அளிக்காமல், அறிவுரை சொன்னால் ஏற்காமல், ரகசியங்களை உளறிக்கொண்டே இருக்கும் தன்மையும் இம்மருந்தினாள் குணமாக்கப்படும்.
இது தகவல் சேகரிக்கவும், நாள்பட்ட நோய்களை குணமாக்கவும், சரியான ஆலோசனை வழங்குபவர்களுக்கும், பேச்சாளர்கள் பேச்சாளர்களுக்கும், பேருதவி செய்யும் மருந்தாக அமைந்துள்ளது.
15-ஆவது மருந்தாக ஹா-(HOLLY) அமைந்துள்ளது.
பிறர்மீது பொறாமை கொள்வது, பழிவாங்கும் குணத்தை தன்னிடையே போதித்து வைத்திருப்பது, பிறரை பற்றி தவறான சிந்தனையை மற்றவர்களிடம் சித்தரித்து பரப்புவது, தனக்குரிய மரியாதையை அதிகமாக எதிர்பார்ப்பது, பிறருக்கு அளிக்க வேண்டிய மரியாதையை அளிக்காமல் தன்னிச்சையாக இருப்பது, சரியாக புரிந்துகொள்ளாமல் ஏற்படுவதால் வரும் கோபம், பொறாமை, பிறரை துன்புறுத்துவது போன்ற மனநிலை இந்த மருந்தினால் மாற்றமடையும். பரஸ்பர ஒற்றுமையும், நல்-ணக்கத்தையும், ஏற்படுத்தும். உறவுமுறை விரிசல்களை தங்களின் அணுகுமுறையினால் சரிசெய்ய உதவும்.
மனதில் அன்பையும், அமைதியும் உண்டாக்கும். பங்காளிகளின் பகையை தீர்க்க பேருதவி செய்யும் மருந்தாக இது அமைந்துள்ளது.