நீர், நிலம், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய அடிப்படை பூதங்களில் அனைத்தையும் அழித்து தன்வசமாக்கி தானாக வெந்து தணியும் நெருப்பின் நிலைபோல், உணர்வுகளின் ஊசலாட்டத்தினால் ஏற்படும் மன சங்கடங்களை தவிடு பொடியாக்கும் தன்மையை தன்னகத்தே பொதித்து வைத்துள்ள மலர்மருந்தின் பாதையில் பயணம் மிக சுவாரசியமானதாகவும், சுகமானதாகவும் இருக்கும்.

என்னதான் செய்துவிடும் இந்த ஓரிரு துளி மலர் மருந்து என்கின்ற சந்தேகம் என் உட்பட அனைவருக்கும் இருக்கும். இதை பயன்படுத்தி பலன் காணும் வரை, பலன் கண்டபிறகு நிச்சயமாக சீர் மற்றும் சிறப்பினை காண முடியும். 

இந்த பயணத்தில் கன்னி இங்கு புதன் ஆட்சிக் கோளாகவும், புதன் உச்ச கோளாகவும், சுக்கிரன் நீச கோளாகவும் திகழ்கின்றது. 

Advertisment

இங்கு சனி ஆறாம் அதிபதியாகவும், செவ்வாய் அஷ்டமாதிபதியாகவும் ஆதிபத்தியம் பெறுகின்றனர். 

உத்திரம், ஹஸ்தம், சித்திரை ஆகிய நட்சத்திரங்களை சுமந்துள்ள இந்த கன்னி ராசி இயல்பிலேயே பெண்கள் சார்ந்த தோஷங்களை அனுபவிக்கும் தன்மையை பெற்றிருக்கும். 

எல்ம்(ELM)+வால்நட் (WALLNUT)+ஸ்டார் ஆஃப் பெத்லஹம் (STAR OF BETHLEHEM)+ஜென்சன் (GENTAIN)+லார்ஜ் (LARCH)+ இம்பேசஷன்(IMPATIENTS) ஆகிய கூட்டு மருந்தை எடுத்துக் கொள்வது சிறப்பு. 

Advertisment

இந்த ராசி எதிர்கால ராசி என்பதனால் கிளைமேட்டஸ் (CLEMATIS)  பேருதவிபுரியும்.

நோய், எதிர்ப்பு, கடன், ஆகியவற்றை தன்னில் புதைத்துள்ள கால புருஷனுக்கு ஆறாம் பாவகம் என்பதனால், அதனை எதிர்கொள்ளும் மனநிலையை ஓக் (OAK) என்கின்ற மருந்து அளிக்கும். 

எதிரிகளின் தொல்லையின் வசம் மனதை திருப்பாமல் இருப்பதற்கு ரெட் செஸ் நெட்  (RED CHESTNUT) துணைபுரியும். 

மலர் மருத்துவத்தில் பதினோராவது மருந்தாக எல்ம் (ஊகங) இடம்பெற்றுள்ளது. 

பொறுப்புகள் அதிகரிப்பதனால்  ஏற்படும் கலக்கத்தினால் அவதிப்படுவது, அன்றைய வேலைகளை முடிப்பதற்கு மிகமிக சிரமப்படும் நபர்கள், தனது கடமையை சரிவர செய்யவேண்டும் என்கின்ற ஏக்கமும், செய்த கடமைகளை இன்னும் சற்று தெளிவுடன் செய்திருக்கலாம் என்கின்ற பெரும் கலக்கமும் கொண்டவர்கள். தன்னம்பிக்கை அடிக்கடி குறைந்துவிடுதல், செய்கின்ற வேலையின் ஆர்வத்தில் அதிக முயற்சிசெய்தல், எப்பொழுதுமே ஒரு தெளிவற்ற சூழலும், முடிவெடுக்க முடியாத தன்மையையும், தன்னிடத்தே பொதித்து வைத்திருப்பவர்கள் போன்றவர்களுக்கு இந்த மருந்து மாபெரும் துணைபுரியும். 

இதை எடுத்துக் கொள்ளும்பொழுது அதிக மனோபலமும், எந்த பிரச்சினையும் சமாளிக்கும் சூழலும், நிர்வாகத் திறனும், மேம்பட்டு தன்னை நிர்வகிக்கும் தன்மையும் சிறப்பாக இருப்பார்கள். 

பன்னிரண்டாவது மருந்தாக ஜென்ஷியன் (GENTIAN)அமைந்துள்ளது. எப்பொழுதும் கவலையுடன் இருப்பது, இயல்பாக சிரிக்கத் தெரியாமல் சிறு விஷயத்தைகூட கலக்கத்துடன் எதிர்கொள்வது, சந்தேகம், மனச்சோர்வு ஆகிய வற்றுடன் சதா சர்வகாலமும் காணப்படுவது, பூட்டிய வீட்டை இழுத்துப் பார்ப்பது, வீட்டை விட்டு வெளியே சென்றபிறகும் ஏதாவது தவற விட்டு விட்டோமா என்கின்ற சந்தேகத்துடன் இருப்பது, தனக்கு சாதகமாக எதுவுமே நடக்கவில்லை என்றும் தீமையும், தோல்வியும், மட்டுமே தனக்கு நிகழ்வதாக நினைத்துக்கொள்வது. 

கடவுள் தனக்கு சாதகமாக எதையும் செய்யவில்லை. தனது ஜாதகமும் அதற்கு துணை புரிகின்றது என்று அனைத்தையும் சந்தேக கண்ணுடனே பார்க்கும் தன்மை போன்றவற்றை இந்த மருந்து மாற்றும் சூழலை ஏற்படுத்தும்.

இது வெற்றியையும், தோல்வியையும் சமமாக பாவிக்கும் ஒரு மனநிலையை வளர்க்கும்.

செல்: 80563 79988