தீத ஆற்றல் மற்றும் அனைத்தையும் வசமாக்கிக்கொள்ளும் சூழல் ஆகியவை அமையப்பெற்றும், சில நமக்கு நன்மை தரக்கூடிய செயலை செய்ய மனம் ஒத்துழைப்பது கிடையாது.

Advertisment

நம்மை வழிநடத்தும் மனதை தற்காலிகமாக தன்வசப்படுத்திக் கொண்டால்கூட சில மாற்றங்களையும், ஏற்றங்களையும் நம்மால் கைக்கொள்ள முடியும்.

இதற்கு மலர் மருந்து பெரும் துணைபுரிகின்றது. இந்தப் பயணத்தில் கும்பம் இங்கே சனி ஆட்சிக்கோள் ஆகவும், உச்ச நீசம் எந்த கிரகத்திற்கும் வழங்காமலும், ஆறாம் அதிபதியாக சந்திரனும், அஷ்டமாதிபதியாக புதனும் அமர்ந்துள்ளனர். இதிலுள்ள நட்சத்திரங்கள் அவிட்டம், சதயம், பூரட்டாதி என்கின்ற கூட்டு பெறும் மர்மத்தை உணர்த்துகின்றது. 

ஸ்டார் ஆப் பெத்தலகம்  (STAR OF BETHLEHEM)+எல்ம் ((ELM)+ஜென்டின் (GENTAIN) + வைல்டூ  (WILD)ஆகியவற்றின் கூட்டு, மன நிம்மதியை அளிக்கும். 

Advertisment

இது நிகழ்காலமாக இருப்பதனால் செஸ் நட் பட் (CHESTNUT BUD) சேர்ப்பது சிறப்பு. 

மலர் மருந்தில் 24-ஆவது மருந்து பைன் (PINE) தன்னைத் தானே தாழ்த்திக்கொள்ளுதல், மனசாட்சிக்கு பயப்படுதல், குற்ற உணர்ச்சியால் அவதிருவது, நான் எதற்குமே தகுதி இல்லை என்கின்ற எண்ணம், பாவ- புண்ணியம் பார்ப்பது, விதி வலியது என்று சொல்வது போன்ற எண்ணங்கள் உள்ளவர்கள் மேற்கூறிய மருந்தினை உட்கொள்ளும்பொழுது. செய்யும் தொழிலே தெய்வம், பாவவிமோசனம் தீர வழி கிடைத்துவிட்டது. தன்னைத்தானே திருத்திக்கொள்வதுதான் சிறப்பு என்கின்ற எண்ணம் மேலோங்கும். 

25 ஆவது மருந்து ரெட்செஷ்னட் (REDCHESTNUT)மற்றவர்களுக்காக அதிகமாக கவலைப்படுதல், அசம்பாவிதம் ஏதோ நடந்துவிடுமோ என்கின்ற கவலை, அதிக பாசத்தால் உணர்ச்சி வசப்படுதல், அதனால் உண்டாகும் கவலை, பதட்டம், பயம், பிறருக்கு உள்ள நோயைப் பற்றி கவலைப்படுவது போன்ற மனநிலைக்கு இந்த மருந்தினை எடுக்கும்பொழுது நிபந்தனையற்ற அன்பால் தானும் வாழ்ந்து, பிறரையும் வாழவைக்கும் குணம், அமைதியும், கருணையும், உருவாகும் தன்மை, அவரவர்களின் பிரச்சினையை முதலில் சரி செய்யும் தன்மை போன்றவை ஏற்படும். 

Advertisment

26-ஆவது மருந்து ராக் ரோஸ் (ROCK ROSE)அதிர்ச்சியான சம்பவங்களை கேட்கும்பொழுது நிலைகுலைந்து போவது, ரத்தத்தை பார்த்தாலே அதிர்ச்சி அடைவது, பரிசோதனைகளுக்கு தயங்குவது, எதிர்பாராத சின்ன அதிர்வுகளுக்குகூட மயங்கி விழுவது, பேய், பிசாசு போன்றவற்றை பார்த்ததுபோல் பயந்து நிற்பது, தூக்கத்தில் அலறி அடித்து எழுந்துகொள்வது, விபத்தினை நேரில் பார்த்தால் உண்டாகும் மன பாதிப்பு போன்ற மனநிலைக்கு இந்த மருந்தினை எடுத்துக் கொள்ளும்பொழுது நிதானமாக யோசித்து முடிவு எடுக்க உதவிகரமாக அமையும். நெருக்கடியான நேரத்தில் நிலைகுலையாமல் உதவிச் செய்யும். 

வீரதீர செயல்களைச் செய்வதற்கு துணைபுரியும். 

27 ஆவது மருந்து ராக் வாட்டர் (ROCK WATER) விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை இல்லாத தன்மை, கண்டிப்பா நடந்துகொள்வது, அதிகப்படியான சுய கட்டுப்பாடு, மனைவி குழந்தைகளை துன்புறுத்துவது, பிறருக்கு தன் வறட்டு கொள்கையால் துன்பம் விளைவிப்பது, தனக்குத்தானே தண்டனை கொடுத்துக்கொள்வது, பிடிவாதமான தன்மையில் பயணிப்பது போன்ற குணங்களுக்கான மருந்தாக இது அமைகின்றது. இதனை உட்கொள்ளும் பொழுது நமக்கு வேண்டியதை சிலரின் கொள்கையால் தடைப்பட்டிருந்தால் அதை உடைக்க பயன்படும். மனைவி மற்றும் குழந்தைகளை துன்புறுத்தும் தன்மை குறையும். நல்ல கொள்கைகளைக் கடைபிடிக்கும் தன்மைகள் இவர்களுக்கு அமையப்பெறும். 

செல்: 80563 79988