மாற்றங்கள் பல நிகழ்த்தும் மானுட மனதிற்கு மயிலிறகாய் இதமளிக்கும் மலர் மருந்தின் ஆற்றல் அளப்பரியது.
அதிக பற்றுதல், அதிகப் படியான பேராவல், அற்ப காரணங்களுக்காக அச்சம் கொள்ளுதல், உணர்ச்சிக்கு ஆட்படுதல், ஊக்கமின்மை, கட்டுப்பாட்டை மீறிய கோபம், கருணையை வேண்டுதல், கர்ப்ப கால பயம், குறிக்கோள் இன்றி இருத்தல், காமம் சார்ந்த எண்ணங்கள் என்ற அனைத்து வகையான மனநிலைக்கும் இணையாக நின்று துணைபுரியும் ஆற்றல் இறைவனைப்போலவே மலர் மருந்திற்கும் உள்ளது.
இந்த பயணத்தில் மகரம் காலபுருஷனுக்கு கர்மஸ்தானமாக நிலை பெற்றுள்ள மகர ராசியில், ஆட்சிக் கோளாக சனிப
மாற்றங்கள் பல நிகழ்த்தும் மானுட மனதிற்கு மயிலிறகாய் இதமளிக்கும் மலர் மருந்தின் ஆற்றல் அளப்பரியது.
அதிக பற்றுதல், அதிகப் படியான பேராவல், அற்ப காரணங்களுக்காக அச்சம் கொள்ளுதல், உணர்ச்சிக்கு ஆட்படுதல், ஊக்கமின்மை, கட்டுப்பாட்டை மீறிய கோபம், கருணையை வேண்டுதல், கர்ப்ப கால பயம், குறிக்கோள் இன்றி இருத்தல், காமம் சார்ந்த எண்ணங்கள் என்ற அனைத்து வகையான மனநிலைக்கும் இணையாக நின்று துணைபுரியும் ஆற்றல் இறைவனைப்போலவே மலர் மருந்திற்கும் உள்ளது.
இந்த பயணத்தில் மகரம் காலபுருஷனுக்கு கர்மஸ்தானமாக நிலை பெற்றுள்ள மகர ராசியில், ஆட்சிக் கோளாக சனிபகவானும், உச்சமடையக்கூடிய கோளாக செவ்வாயும், நீசம் அடையக் கூடிய கோளாக குருவும் அமர்ந் துள்ளனர்.
இங்கு ஆறாம் அதிபதியாக புதனும், அஷ்டமாதிபதியாக சூரியனும், இடம் பெறுகின்றனர்.
இந்த ராசியில் உத்திராடம், திருவோணம், அவிட்டம் என்கின்ற அளப்பெரிய ஆற்றல் கொண்ட நட்சத்திரங்களின் கூட்டம் அமைந்துள்ளது.
இந்த ராசிக்கான மலர் மருந்தாக இம்பேஷன்ஸ் (IMPTIENTS)+ ஸ்டார் ஆஃப் பெத்தலகம் (STAR OF BETHLEHEM) லார்ஜ் (LARCH)+ வைல்ட் ஓட் (WILD OAT)+ ஜென்டென் ( GENTAIN) போன்ற கூட்டு மருந்தும் இறந்தகால ராசிக்காக ஹனி ஸ்ட்ரகில் (HONEY SUCKLE) என்கின்ற மருந்தையும் சேர்த்துக் கொள்வது சிறப்பு.
கர்மஸ்தானமாக அமையப்பெற்ற மகரம், தொழில் சார்ந்த பிரச்சினைகளை எதிர்கொள்ளும் சூழல்கள் இருப்பதனால் ஸ்கெர்லாந்தஸ் (SCLERANTHUS) எடுத்துக்கொள்வதன்மூலம் தொழிலில் ஏற்படும் மன குழப்பங்கள் நீங்கும்.
அதேபோன்று கர்மாவழியில் சில தொந்தரவுகள் அதாவது இறந்தவர்களை அடிக்கடி நினைவுகொள்ளும் தன்மையும், கண்முன் தோன்றுவது போன்ற பிரம்மையும், இவர்களுக்கு ஏற்பட வாய்ப்புகள் உண்டு.
இதற்கு வைட் செஸ் நெட் (WHIT CHESTNUT) இணைத்துக் கொள்ளவேண்டும்.
மலர் மருந்தில் 22-ஆவது மருந்து ஓக் ((OAK) அமைந்துள்ளது.
முடியாத காரியத்திலும் விடாப்பிடியாக தொடர்ந்து சளைக்காமல் முயற்சிசெய்வது, வாழ்க்கையில் எதிர்நீச்சல் போட்டுக்கொண்டே இருப்பது, வெளித் தோற்றத்தில் தன்னம்பிக்கை நாயகர்களாக திகழ்வது, தன்னால் முடியாது என்று ஒத்துக்கொள்ளமுடியாத மனநிலை, எப்படியாவது எதிர்பார்த்த பலனை அடைந்தே தீரவேண்டும் என்கின்ற முயற்சி போன்ற எண்ணம் கொண்டவர்களுக்கு அந்தத் தன்மையின் எதிர்தன்மையான தன் திறமையை கண்டு அதில் முன்னேற்றம் அடைய உதவுவது, தனக்கேற்ற திறமையை வெளிக் கொண்டுவர உதவும் தன்மை போன்றவற்றை இந்த மருந்து அளிக்கும்.
மலர் மருந்தில் 23-ஆவது மருந்தாக ஆலிவ் (OLIVE) உள்ளது.
உழைப்பிலேயே அதிக கவனம், அதனால் முடங்கிப் போகும் வாழ்க்கை தரம், உழைப்பின்மூலம் அதீத சுகம் காணுதல், இந்த அதீத உடல் உழைப்பி னால் உடல்நலம் கெட்டு அதன்மூலம் வறுமை மற்றும் நிம்மதியின்மையை பெறுபவர்கள், ஒரு வேலையை ஆரம்பிக்கும்பொழுது இருக்கும் ஊக்கம் நாளடைவில் குறைந்து விடுதல், சிறிது நேரத்திலேயே கலைப்படைவது, எப்பொழுதுமே சோர்வாகவே காணப்படுவது, நிறைய ஓய்வு தேவைப்படுவது போன்ற மனநிலை போன்றவற்றினை இந்த மருந்து சீர்படுத்தும் தன்மையை தன்னகத்தே கொண்டுள்ளது. இதனை உட்கொள்ளுவதனால் உடலுக்கும் மனதிற்கும் உற்சாகம் அளிக்கும் தன்மையும், தூக்கமின்மையை போக்கும் தன்மையும் ஏற்படும்.
செல்: 80563 79988