வெளிச்சத்தின் பாதையில் தன்னை அர்ப்பணிக்கும் வீட்டில் பூச்சிபோல், ஆசையின் வசம் ஈர்க்கப்படும் மணமானது இன்னல்களுக்கு உட்படுவது வாடிக்கைதான் என்றாலும், அதனால் ஏற்படும் விளைவுகள் வாழ்நாளில் ஒரு தழும்பாக மாறிவிடுகின்றது.

இதன்பொருட்டு சூடான பால் உண்ட பூனை சூடு ஆறிய பாலை கண்டாலும் பயத்தினால் ஆட்கொள்ளும் சூழல் அமைந்து விடுகின்றது.

வாழ்க்கையில் என்றோ அனுபவித்த இக்கட்டான சூழல் மீண்டும் அமைந்து விடுமோ என்கின்ற பயம் மனிதர்களிடையே பற்றிக் கொள்கின்றது.

Advertisment

இதன் அடிப்படையில் முக்கிய முடிவு களிலிருந்து நாம் தப்பிக்கவே எண்ணுகின் றோம். மேலும் இவற்றால் ஏற்படும் சாதக- பாதகங்கள் நம்மை உடல் சார்ந்தும், மனம் சார்ந்தும், கட்டுண்ட நிலையில் நிறுத்தி நோயின் வசம் தள்ளுகின்றது.

இதிலிருந்து மீளவே மகத்தான மலர் மருத்துவம் துணை புரிகின்றது. இந்த பயணத்தில் சிம்மம் இங்கு ஆட்சிக்கோள். சூரியன், உச்சமோ அல்லது நீசமோ இந்த ராசியில் கிடையாது. இங்கு ஆறாம் அதிபதி சனியாகவும், எட்டாம் அதிபதி குருவாகவும் அமைகின்றது.

மேலும் இங்கு மகம், பூரம், உத்திரம் ஆகிய நட்சத்திரங்கள் அமையபெற்றுள்ளது. இதன் அடிப்படையில் மலர் மருந்துகள். லார்ச் (கஆதஈஐ) + ஸ்டார் ஆப் பெத்தலஹம் (நபஆத ஞஎ இஊபஐகஊஐஊங) + வைல்ட் ஓட் (ரஒகஉ ஞஆப)+ வால்நட் (ரஆககசமப)+ ராக் ரோஸ் (தஞஈஃ தஞநஊ) ஆகிய கூட்டு மருந்துகளை எடுத்துக்கொள்வது சிறப்பு. 

Advertisment

இந்த ராசி நிகழ்கால ராசி என்பதனால் செஸ் நெட் பட் (ஈஐஊநபசமப இமஉ) இணைத் துக்கொள்ளலாம். 

ஐந்தாம் பாவகம் குலதெய்வம், புத்திரம், மந்திர உபதேசம் பெறக்கூடிய இடமென்பதனால் காலபுருஷனுக்கு நான்காம் அதிபதியாகிய சந்திரன் ஐந்தில் இருந்தாலோ அல்லது நான்குக்கும் ஐந்துக்குமுடைய அதிபதிகள் அதாவது சூரியன், சந்திரனும், சேர்ந்து ஐந்தில் இருந்தாலும், இவர்களுக்கு சொல்பலிதம் உண்டாகும். மேலும் மந்திரம் பலிக்கும். இவர்களின் கைகளால் மந்திரம் எழுதி வாங்கிசென்று படித்தால்கூட மந்திர சக்தி உண்டாகிஆத்ம சக்தி கிட்டும். இந்த மலர் மருந்து இவர்கள் எழுதிக் கொடுத்தாலும் மந்திரம்போல் வேலை செய்யும். சூரியன் கிரகத்தின் மையம் என்பதனால் மிகுந்த போர் ஆற்றல் பெற்றவர்களாக இவர்கள் திகழ்வார்கள். 
மலர் மருந்தில் ஒன்பதாவதாக கிளமாடிசு (ஈகஊஙஆபஒந) அமைக்கப்பட்டுள்ளது. இவர்கள் நிஜ வாழ்க்கையைவிட கற்பனை உலகில் அதிகமாக வாழ்பவர்களாக இருப்பார்கள். கனவுகளின் மன்னர்கள் என்றுகூட இவர்களைக் கூறலாம். 

நிஜ வாழ்க்கையைவிட கனவு வாழ்க்கை யில் சுகமாக இருப்பதனால் இவர்கள் கனவுலகத்திலேயே இருப்பார்கள். 

மறதி, ஆழ்ந்த தூக்கம் போன்றவற்றாலும், எதிரில் இருப்பவர்களின் பேச்சில் கவனம் இல்லாமல் இருப்பவர்களாகவும், தனக்குத்தானே பேசிக்கொள்ளுதல், சிரித்துக்கொள்ளு தல் போன்றவற்றினாலும் எதிர்காலத்தை நினைத்து பயம்கொள்வதே இவர்களின் வாடிக்கையாகவும் இருக்கும்.

 கூட்ட நெரிசலில்கூட நிம்மதியாக தூங்கும் தன்மை இவர்களிடையே இருக்கும். ஒரு செயலின் பலனை அதிகமாக எதிர்பார்க்கும் தன்மை இவர்களை ஆட்கொண்டிருக்கும்.  இவர்கள் (டட்ஹ்ள்ண்ஸ்ரீஹப்ப்ஹ் டழ்ங்ள்ங்ய்ற் ஙங்ய்ற்ஹப்ப்ஹ் ஆக்ஷள்ங்ய்ற்) என்ற நிலையில் பயணிப்பார்கள். இந்த தன்மையில் இருப்பவர்களுக்கு மேல்கூறிய மருந்து பெரும் உதவியை புரியும். 

பத்தாவது மருந்தாக கிராப் ஆப்பிள் (ஈஆதட ஆடடகஊ) அமையப் பெற்றுள்ளது. இவர்கள் ஒரு செயலை திரும்பத் திரும்ப செய்வார்கள். அசிங்கம், அருவருப்பு, சுத்தம், சுகாதாரம் ஆகியவற்றிற்கு அதீத முக்கியத்துவம் கொடுப்பார்கள்.

 தன் நிறம், உயரம், உடல்வாகு போன்றவற்றை பற்றி தாழ்வு மனப்பான்மை உடையவர்களாகவும், தேவையில்லாமல் அடிக்கடி கை- கால் கழுவுவது, வீடு துடைப்பது போன்ற குணநலன்களும், சிறு குறையைகூட பெரியதாகிகொள்ளும் தன்மையும் இவர்களிடையே இருக்கும்.

மேலும் தனக்கு ஒரு மரு, நரை, வந்தால் அழகு பாதிக்கும் என்று அதைப்பற்றி கவலைப்படுவதும், அதை எப்படியாவது சரிசெய்து கொள்ளவேண்டும் என்கின்ற ஆர்வம் பிறரைவிட இவர்களுக்கு அதிகமாகக் காணப்படும். 

இவர்களின் உடலில் மற்றும் மனதில் அதிகமான கழிவுத்தன்மைகள் தேங்கியிருக்கும். மேற்கூறிய பிரச்சினைகளினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த மருந்து பேருதவியாகவும், பெரும் மருந்தாகவும் இருந்து வழிநடத்தும். 

செல்: 80563 79988