மனச் சிக்கல்கள் தீர்க்கும் மலர் மருந்து! (5) மேல்மருவத்தூர் எஸ். கலைவாணி

flower

 

லர்களின் வண்ணத்திலும், வாசத்திலும், ஈர்க்கப்படும் மனது, சில பாரமான சூழலை எளிதில் கடந்துவர அதே மலரின் உதவியை பெருமளவு நாடுகின்றது.

கனத்த மனதையும் கலைகளின் வசமும், கல்வியின் வசமும், ஈர்த்து சமன் செய்ய இந்த மலர் மருந்து மாபெரும் துணைபுரிகின்றது. 

இந்த பயணத்தில் மிதுனம் ஆட்சி கோள். புதன், இங்கு உச்சமும் நீசமோ அடையக்கூடிய கோள்கள் ஏதுமில்லை நோய் வந்தால் எளிதில் குணமடையாத காரணம் இதுவே.

இந்த ராசிக்கு 6-ஆம் அதிபதி செவ்வாயாகவும், அஷ்டமாதிபதி சனியாகவும், இதில் அமர்ந்த நட்சத்திரங்கள் மிருகசீரிடம், திருவாதிரை, புனர்பூசமாகவும் அமர்வதனால் இவர்களுக்கு ELM+ IMPATIENTS+  CHERRY+ PLUM+ STAR OF BETHLEHEM

 

லர்களின் வண்ணத்திலும், வாசத்திலும், ஈர்க்கப்படும் மனது, சில பாரமான சூழலை எளிதில் கடந்துவர அதே மலரின் உதவியை பெருமளவு நாடுகின்றது.

கனத்த மனதையும் கலைகளின் வசமும், கல்வியின் வசமும், ஈர்த்து சமன் செய்ய இந்த மலர் மருந்து மாபெரும் துணைபுரிகின்றது. 

இந்த பயணத்தில் மிதுனம் ஆட்சி கோள். புதன், இங்கு உச்சமும் நீசமோ அடையக்கூடிய கோள்கள் ஏதுமில்லை நோய் வந்தால் எளிதில் குணமடையாத காரணம் இதுவே.

இந்த ராசிக்கு 6-ஆம் அதிபதி செவ்வாயாகவும், அஷ்டமாதிபதி சனியாகவும், இதில் அமர்ந்த நட்சத்திரங்கள் மிருகசீரிடம், திருவாதிரை, புனர்பூசமாகவும் அமர்வதனால் இவர்களுக்கு ELM+ IMPATIENTS+  CHERRY+ PLUM+ STAR OF BETHLEHEM  ஆகிய கூட்டு மருந்து சிறப்பாக அமையும்.

மேலும் இந்த ராசி எதிர்காலமாக இருப்பதால்CLEMATSம், இரட்டைப்படை ராசி என்பதால் இரண்டு தொழில் செய்பவர்கள் சோர்வாகக் காணப்படுவார்கள். அதற்கு OAk+OLIVE
-ம் முடிவெடுக்க முடியாத தன்மையில் பயணிக்கும் இரட்டை மனம் படைத்த மிதுனத்திற்கு VINE+CHERY PLUM-ம் இணைத்து எடுத்துக்கொள்வது சிறப்பு. 

ஒரு ஆழ்ந்த குழப்பமும், இனம்புரியா பயமும் இவர்களை தொடர்வதனால் தேவைப்படும்பட்சத்தில் ASPEN என்ற மருந்தையும் இணைத்து எடுத்துக்கொள்வது சிறப்பு. 

ஐந்தாவது மருந்தாக மலர் மருத்துவத்தில் CERATO  என்கின்ற மருந்து கையாளப்படுகின்றது. 

எப்பொழுதுமே எதையாவது தேடிக்கொண்டே இருப்பது, அதிகமான அறிவை தேடிக்கொண்டே இருப்பது, ஏன் செய்ய வேண்டும் எதற்காக செய்யவேண்டும் என்று ஏகப்பட்ட கேள்வி கேட்பது, தகவல் களஞ்சியமாக செயல்படுவது, தான் எடுக்கும் முடிவுகளின்மீது நம்பிக்கை இல்லாமல் இருப்பது, அடுத்தவர்களை மிக எளிதில் கேலி பேசி காண்பிப்பது, இடம், பொருள், ஏவல் தெரியாமல் நடந்துகொள்வது, எந்த ஒரு செயலுக்காகவும் பலரிடம் கருத்து களை கேட்டு முடிவில் எதையும் செய்யாமல் தன் விருப்பத்திற்கு செய்வது போன்றவை இந்த CERATO 
 என்கின்ற மருந்தின் குணமாக எடுத்துரைக்கப்படுகின்றது.

இவர்களிடத்தில் எந்த ஒரு காரியம் செய்யும் முயலும்பொழுதும் தானாக அனைத்து உதவிகளையும் செய்துவிடுவார்கள். வெளியே தேடாமல் உள்ளே தேடுவார்கள். தனக்கு மட்டுமல்லாமல் அடுத்தவர்களுக்கும் வழிகாட்டக்கூடிய தன்மை இவர்களுக்குள் இருக்கும். அடுத்தவரை எதிர்பார்க்காமல் இருக்க கற்றுக் கொள்பவர்கள் இவர்கள்தான். தன்னைத்தேடி பலரும் வரவேண்டும் என்கின்ற எண்ணம் இவர்களின் மனதில் ஆழபதிந்திருக்கும். இந்த மனநிலையில் பயணிப்ப வர்கள் இம்மருந்தை பயன்படுத்துவது சிறப்பு. 

ஆறாவதாக CHERRY PLUM என்கின்ற மருந்தை மலர் மருத்துவத்தில் இடம் பொருத்தியுள்ளார்கள். 

எளிதில் உணர்ச்சிவசப்படுவது, கடும்கோபம், கெட்ட வார்த்தைகளைப் பயன்படுத்துதல், தன் உடல்வலி வேதனைகளை தாங்கவே முடியாமல் துடிக்கும் தன்மை, கோபத்தால் பிறரை திட்டுதல், பிடிவாதம் செய்து ஒரு காரியத்தை சாதித்தல், எடுத்தேன் கவிழ்த்தேன் என்று முடிவுசெய்வது, ஆத்திரத்தில் குழந்தைகளை, மாணவர்களை அடிப்பது, பிறரை துன்புறுத்தி சந்தோஷம் காண்பது, கவர்ச்சிக்கும் அழகுக்கும் முக்கியத்துவம் தருவது, கோபத்தால் பொருட்களை தூக்கி உடைப்பது, தனக்கு பிடித்த பொருட்களை மறைத்துபோட்டு வைத்துக்கொள்வது, கட்டுக்கடங்காத காமம், குடி, சிகரெட் போன்றவற்றில் ஈடுபடுவது போன்றவையும் உள்ளே அடக்கி வைக்கப்பட்ட கோபமானது வெப்பமாக மாறி அதனால் அல்சர், மூலம், கொழுப்பு கட்டி, உடல் வெப்பமடைதல் போன்ற பெரும் பாதிப்புகளை அடையக்கூடிய தன்மைகளில் இருப்பவர்களுக்கு இந்தச் CHERRY PLUM  என்கின்ற மருந்து பெரும் ஆதரவும் குணத்தையும் அளிக்கும். 

செல்: 80563 79988

 

bala110725
இதையும் படியுங்கள்
Subscribe