ளர்ச்சியின் முழுமை யில் மனம் கவரும் மலர் களில் இருந்து பெறப்படும் ஒவ்வொன்றும் உயர்வானது தான், தேன் முதற்கொண்டு அத்தனையும். 

Advertisment

மலர் மருந்தும் அவ் வகையே, மனம் என்னும் மாயக்குதிரையின் வேகத் திலும், தடுமாற்றத்திலுமே, வாழ்க்கை பயணம் சென்று கொண்டிருக்கிறது.

இதை சரி செய்யும் பட்சத்தில் உருவான மலர் மருத்துவம் சிறப்பை அள்ளி வழங்குகின்றது. 

இதன் வழியில் ரிஷப ராசிக்கு ஆட்சிக் கோளாக சுக்கிரனும், உச்சம் அடையக்கூடிய கோள்  சந்திரனாகவும், சில ஜோதிட நூல்களின் கூற்றுப்படி ஆட்சி மற்றும் உச்ச வீடாக ராகு கேதுக் களுக்கும், 6-ஆம் அதிபதியாக சுக்கிரனாகவும், 8-க்கு குருவும், சம்பந்தப் படுகின்றது.

Advertisment

 இதில் உள்ள நட்சத் திரங்கள் ஆன கிருத்திகை, ரோகிணி, மிருகசீரிடத்தில், சந்திரன் உச்சம் அடையக்கூடிய இடமாகவும் சந்திரனின் நட்சத்திரம் இதில் இருப்பது என்பதனால் ஒரே மருந்து ஏஊசபஆஒச அதேபோன்று ஆட்சி வீடாகவும், 6 ஆம்வீடாகவும், சுக்கிரன் வருவதால் இதற்கும்  WALLNUT  WALLNUT+LARCH+ GENTIAN+IMPATIENTS+CHERRY PLUM+WILD OAT

இந்த ராசியின் காலம் நிகழ்காலமாக இருப்பதால் மேலே கூறப்பட்டுள்ள கூட்டுக்களுடன் CHESTNUT BUD சேர்த்து எடுத்துக் கொள்ளவும். 

அதோடு இது பொதுவாக பாவக ரீதியாக இரண்டாம் இடம் தனம், குடும்பம், வாக்கு ஸ்தானம், எனப்படுவதனால் குடும்பத்தில் ஒற்றுமை நிலைக்க விட்டுக் கொடுத்து வாழ CENTAURY சேர்த்துக் கொள்ளலாம். 

Advertisment

பணத்தட்டுப்பாடு இல்லாமல் இருக்க பணம் சம்பாதிப்பது குறிக்கோளாகக் கொண்டு இயங்க WATER VIOLET இணைத்துக் கொள்வது சிறப்பு. 

மூன்றாவது மருந்தாக மலர் மருத்துவத்தில் BEECH கையாளப்படுகின்றது. 

பீச் மருந்து குணப்படுத்தும் மனநிலை (எல்லா விஷயங்களிலும் சட்ட ஒழுங்கை எதிர்பார்த்தல்) இவர்கள் எல்லா செயல்களிலும் ஒரு ஒழுக்கத்தை கடைப்பிடிப்பார்கள்.

 எல்லோரும் நியாயமாகவும், நேர்மை யாகவும், உண்மையாகவும், நடந்து கொள்ள வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள்.

 நீதி, நேர்மை, தவறி நடப்பவர்கள் மீது கடுமையாக கோபப்படுவார்கள்.

 அவர்களைப் பற்றி எப்பொழுதும் விமர்சனம் செய்து கொண்டே இருப்பார்கள்.

 வீடு மற்றும் பணியிடங்களில் ஒரு அழகையும், ஒழுங்கையும், கடைப் பிடிப்பார்கள்.

 எந்த பொருள் எந்த இடத்தில் இருக்க வேண்டுமோ, அந்த பொருள் அதே இடத்தில் இருக்க வேண்டும் என்று விரும்புவார்கள் மீறினால் கோபப்படுவார்கள்.

 இதனால் நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் இவர்களுக்கு மரியாதை குறைவாக இருக்கும்.

 கடுமையான சொற்களை பிரயோகிப் பதில், துருவித் துருவி குற்றம் கண்டுபிடிப்பது போன்றவை இவர்களின் குண நலன்கள் ஆகும்.

 தலைக்கனம், திமிர், தற்பெருமை, கொள்ளுதல் போன்றவை இவர்களுக்கு இருக்கும்.

 உடை, அணிகலன் ஆகியவற்றை ஒரு நேர்த்தியாக எதிர்பார்ப்பார்கள்.

 உறவினர்கள் நண்பர்கள் வீட்டுக்கு சென்றால் அங்கேயும் அலங்கோலமாக இருக்கும் பொருட்களை ஒழங்கு படுத்துவார்கள்.

அவர்களுக்கு ஒழுக்கத்தைப் பற்றிய அறிவுரையையும் கூறுவார்கள்.

இதனால் இவர்களை கூட்டத்தில் ஏற்றுக்கொள்ள முடியாத மனநிலையில் பயணிப்பார்கள். 

இந்த மனநிலையில் இருப்பவர்களுக்கு பீச் மருந்தை கொடுப்பதன் மூலம் இந்நிலையில் இருந்து விடுபடுவதற்கான ஒரு அற்புதமான வழி கிடைக்கும். 

மலர் மருத்துவத்தில் நான்காவது மருந்து CENTAURY  இவர்கள் (எல்லாவற்றிற்கும் பணிந்து போக வேண்டும் என்கின்ற மன நிலையில் இருப்பார்கள்) அப்பாவி, மன வ-மை குன்றியவர்கள்,  அடிமைகளாக இருப்பவர்கள், கடுமையான வியாதிக்கு பின் ஏற்படும் மனச்சோர்வு, தன் வேலைகளை, கடமைகளை, மறந்து பிறரின் சொற்களுக்கு பயந்து வேலை செய்தல், போதை மற்றும் பாலுணர்வுக்கு அடிமையானவர்கள், கிடைத்த வேலையை செய்பவர்கள், ஆகிய நபர்களுக்கு இம்மருந்து சிறந்த குணத்தை வழங்கும். 

அடுத்த பதிவில் இன்னும் சுவாரசிய மான சில மலர் மருந்துகளின் தன்மை யையும் ராசிகளின் இயல்புக்கேற்ற மலர் மருந்து என்ன என்பதையும் காணலாம்.

செல்: 80563 79988