உலகில் மனிதர்களின் வாழ்க்கை, அளவெடுத்த மாதிரி, ஒரேமாதிரி நடப்ப தில்லை. இதற்கு காரணம், கிரகங்கள் நகர்ந்து கொண்டேயிருந்து, அதன் தாக்கத்தை மனிதர்களின்மீது செலுத்துகின்றது. இந்த கிரகங்கள் வருடக் கணக்கு, மாதக் கணக்கு, நாள் கணக்கு என்ற விகிதத்தில் சுற்றிக் கொண்டு இருக்கும். இந்த நகர்வு கிரகத்துக்கு கிரகம் வேறுபாடுடையது.
சரி, ஒரு ராசிக்கு நகர்ந்தாயிற்று...
அங்கேயே இருப்பார்களா என்றால், மாட்டார்கள். சில கிரகங்கள் தான் இருக்கும் ராசியைவிட்டு, சும்மா ஒருமுறை முன்னால் உள்ள ராசியை எட்டிப் பார்க்கும். இதனை அதிசாரம் என்பர்.
சிலசமயம் இருக்கும் இடத்தில் இருந்து, பின்னோக்கிப் போகும். இதனை வக்ரம் என்பர்.
தற்போதைய கோட்சாரத்தில், குரு பகவான் மிதுனத்தில் உள்ளார். அவர் தனது அடுத்த ராசியான கடகத்தை கடந்த 2025 அக்டோபர் 8ஆம் தேதியன்று சும்மா எட்டிப் பார்த்தார்.
கடக ராசியில் அக்டோபர் 8 முதல் நவம்பர் 18 வரை உச்சமடைகிறார் குருபகவான்.
ஒரு பத்து நாட்களுக்கு உச்சத்தில் இருப்பார்..
பின் நவம்பர் 18 முதல் டிசம்பர் 21 வரை 33 நாட்களுக்கு உச்ச நிலையில் வக்ரம்.
எனவே குரு நீசம்.
டிசம்பர் 21 அன்று மறுபடியும் குரு மிதுனம் சென்றுவிடுவார். அங்கு வக்ரகதியில் சுமார் மூன்றுமாத காலம் இருப்பார்.
பின், 2026 மே 26 அன்று வழக்கமான பெயர்ச்சியாக கடக ராசிக்கு செல்வார்.
குருபகவான், கடக ராசியில் மாறி மாறி தனது இயல்பை, இருப்பிடத்தை மாற்றும் போது, கண்டிப்பாக, 12 ராசிகளும் சற்று, மாறுபாடான பலன்களைச் சந்திக்கும்.
கவனியுங்கள். இத்தனை மாறுதல்களையும் தனது சுய நட்சத்திரமான புனர்பூசத்தில் மட்டுமே நடத்துகிறார்.
மேஷம்
மேஷ ராசிக்கு, குருபகவான் 9, 12-ன் அதிபதி. நடப்பு கோட்சாரப்படி அவர் மேஷ ராசியின் 3-ஆமிடமான மிதுனத் தில் உள்ளார். தற்போதைய மாற்றத்தில், 4-ஆமிடமான கடகத்திற்கு மாறி அமர்கிறார். கடகத்தில் அமரும் குருபகவான், உங்கள் மேஷ ராசியின், 8, 10, 12-ஆமிடங்களைப் பார்வையிடுகிறார். இதனால் உங்களுக்கு, உங்கள் தொழிலை எப்படியாவது மேன்மையடையச் செய்யவேண்டும் என்று வெகு பேராசை தோன்றும். மேலும் தொழில் நிமித்தமாக, வெளிநாடு செல்லும் திட்டமும் மனதில் உருவாகும். எனினும் அதனை வெளிப்படையாக செய்யாமல், மறைமுகமாக செய்ய திட்டம் போடுவீர்கள். ஏனெனில் குரு 8-ஆமிடத்தைப் பார்ப்பதால், ரகசிய எண்ணங்கள் மேலோங்கும். உங்கள் தொழி-ன் தளம், எந்தப் படியில் முதலீட்டைப் பெருக்கவும், ஏதோ ஒரு குயுக்தியான யோசனையை கையில் எடுப்பீர்கள். இந்த யோசனையை நடைமுறைபடுத்த, உங்கள் தாயார், பரம்பரை பழக்கம், அசையா சொத்துகள் இவை உதவும்.உங்கள் மன எண்ணெங்கள் ப-க்க, நதி, கடல் ஓர சிவனை நெய் விளக்கேற்றி வணங்குங்கள்.
ரிஷபம்
ரிஷப ராசிக்கு 2-ஆமிடத்தில் அமர்ந்த குரு, 3-ஆமிடமான கடகத்திற்கு மாறுகிறார். அவர் அங்கிருந்து, உங்கள் ரிஷப ராசியின் 7, 9, 11-ஆமிடங்களைப் பார்வையிடுவார். இப்போது உங்களுக்கு கல்யாணம் பண்ணினால்தான் ஆச்சு எனும் நினைப்பு கொப்பளிக்கும். அடுத்து கல்யாணம் ஆனவர்கள், அட, "அடுத்து ஒரு ரகசிய கல்யாணம் பண்ணிக்கொண்டால், என்ன' எனும் நினைப்பு ஊஞ்சலாடும். இன்னும் சிலருக்கு எப்படியாவது, அதிர்ஷ்ட தேவதையை கையை பிடித்து இழுத்து வந்துவிட மாட்டோமா என்று தோன்றும். இதன் காரணியாக, அரசிய-ல் தொபுக்கடிரென்று குதிக்க பிரயத்தனம் செய்வீர்கள். அரசிய-ல் நுழைய ஏற்றவாறு, வெகுஜன தொடர்பும், நல்ல பேரும் கிடைக்கும். இந்த வெற்றி பாதையை எப்படியாவது கண்டுபிடித்து, முதல்தரமான மனிதராக, முதன்மை ஆளாக ஆக பெரு விருப்பம் பெருகி பொங்கும். இந்த முதன்மை ஆசை நிறைவேற, உங்கள் வாழ்க்கைத்துணை, தந்தை, மூத்த சகோதரம் என இவர்கள் உதவுவர். நீர்நிலை அருகில் இருக்கும், சிவனை இனிப்பான பழங்கள் கொண்டு வணங்குங்கள்.
மிதுனம்
மிதுன ராசியில் அமர்ந்திருந்த குருபகவான், தற்போதைய டெம்ப்ரவரி மாற்றத்தால், கடக ராசியான 2-ஆமிடத்தில் வந்து அமர்ந்துள்ளார். இவர் மிதுன ராசியின் 6, 8, 10-ஆமிடத்தை உற்று நோக்குவார். இந்த மாதங்களில், இவர்களுக்கு வேண்டாத, கற்பனை பயம் வந்து வந்து தாக்கும். அட, திடீரென்று நோய் வந்துவிடுமோ அல்லது ஏதேனும் விபத்து ஏற்பட்டுவிடுமோ அல்லது விபரீதமாக ஏதேனும் ஆகிவிட்டால், நம்ம குடும்பம் என்ன செய்யும் என தவியாய் தவிப்பர். இன்னும் சிலருக்கு, எவ்வளவு வட்டி என்றாலும் பரவாயில்லை, பெரிய அளவு கடன் வாங்கி, சொந்தமாக ஒரு தொழிலை ஆரம்பிச்சுட்டுத்தான் மறுவேலை என ஒத்தக்கா-ல் குதிப்பர். இதற்கு இவர்கள் மனம் வெகு கௌரவத்தை எதிர்பார்ப்பதுதான் உண்மையான காரணமாக இருக்கும். சிலர் வேலை போய்விடுமோ என்றோ, சிலர் நெட்டி முறியும் அளவிற்கு வேலை அதிகமாகிவிடுமோ என்று பயம் கொள்வர். மிதுன ராசியின் 2-ல் அமர்ந்த மாறுபட்ட குரு, ஜாதகருக்கு விபரீதமான எண்ணங்களை உருவாக்குவார். இதன்காரணம் உங்கள் தாய்மாமன், மாமியார் வாழ்க்கைத் துணை யின் குடும்பத்தார் காரணம் ஆவர். நதி கரையிலுள்ள சிவனுக்கு வில்வம் சார்த்தி வணங்கவும்.
கடகம்
இதுவரையில் உங்களின் 12-ஆமிடத்தில் அமர்ந்த குரு, தற்போது ராசியிலேயே வந்து அமர்ந்து சற்று ஓய்வு எடுக்கிறார். இவர் உங்களின் 5, 7, 9-ஆமிடங்களை நோக்குகிறார். உங்களுக்கு பூர்வீக இடத்திற்கு போய், உங்கள் தந்தையின் பெருமை பரவும்விதமாக ஏதேனும் செய்துவிட மனம் பரபரப்புக்கும். வேறுசிலருக்கு, "எவன் எக்கேடோ கெட்டு போகட்டும். நாம ஒரு காதல் கல்யாணம் பண்ணினால்தான் ஆச்சு' என்று ஆசை அலைகக்கழிக்கும். வேறு சிலருக்கு, வாழ்க்கைத்துணையின் மூத்த இளைய சகோதரர்களின் சொத்தை எப்படி தன்வசப்படுத்தலாம் என மூளை பிராண்டும். சிலர் எப்பாடுபட்டாலும், ஒரு சினிமா கதாநாயகன், நாயகி ஆகியே தீர்வது என ஆவேச ஆர்வம் ஆட்டம் போடும். சிலருக்கு மந்திரி ஆகிவிட என்ன வழி என்று தேட ஆரம்பித்து விடுவீர்கள். வாரிசு பற்றிய யோசனையும் ஓடும். உங்கள் மனதில் வெகுகாலமாக தேக்கி வைத்திருந்த பேராசைகள் அனைத்தையும், இதோ இக்கணம் நிறைவேற்றியே தீரவேண்டும் என விடாப்பிடியாக இருப்பீர்கள். இதற்கு காரணம் நீங்களேதான்! நதி ஓரங்களிலுள்ள சிவனின் அபிஷேகத்திற்கு பால் வாங்கிக் கொடுங்கள்.
சிம்மம்
இதுவரையில் சிம்ம ராசிக்கு 11-ல் அமர்ந்த குருபகவான், சற்றே நகர்ந்து 12-ஆமிடத்திற்கு எண்ட்ரி கொடுக்கிறார். அங்கிருந்து சிம்ம ராசியின் 4, 6, 8-ஆமிடங்களை லுக்விடுகிறார். உங்களுக்கு ஏனோ இந்த மாதங்களில் ரொம்ப கவலையும், விசனமும், அலுப்பும், திகைப்பும் மனதில் அலையடிக்கும். இதற்கு காரணம், குரு சுகஸ்தானத்தையும், நோய் ஸ்தானத்தையும், விபத்து ஸ்தானத்தையும் தன் பார்வையால் சேர்ப்பதே ஆகும். இதனால் உங்களில் அனேகர் உடல்நிலை கெட்டு, மருத்துமனைக்கு போக வேண்டி இருக்குமோ என்று ஒரு அச்சவுணர்வு தோன்றும். இதனால் பணம் செலவாகுமே, வாரிசுகள் உதவி செய்வார்களா என்று மனம் யோசிக்கும். சிலர் வாடகை வீடு சரியாக இருக்குமோ என கவலை கொள்வர். சிலருக்கு தாயார் பற்றிய கவலையும், பயமும் ஆட்கொள்ளும். விரயத்தில் அமர்ந்த குரு, பண விரயம் மட்டுமல்ல; மன எண்ண விரயத்தையும் தருகிறார். இதன்காரணம் உங்கள் வாரிசு, தாயார் ஆகும்.நதிக்கரையிலுள்ள சிவனை நெய் தீபமேற்றி வணங்கவும்.
கன்னி
கன்னி ராசிக்கு இதுவரையில் 10-ஆமிடத்தில் அமர்ந்த குரு, தற்போது 11-ஆமிடத்திற்கு மாறி அமர்கிறார். அவ்விடத்தில் இருந்து அவர் கன்னி ராசியின் 3, 5, 7-ஆமிடங்களைப் பார்வையிடுகிறார். இந்த மூன்று பாவங்களும், சற்று ஒருமாதிரி வில்லங்கமான- விவகாரமான இடங்கள். எனவே கன்னி ராசியார். "லவ் பண்ணாத்தான் ஆச்சு' என அடமாய் அடம் பண்ணுவர். இன்னும் சிலர் ஒரு வியாபாரத்தை குத்தகை எடுத்து பண்ணத்தான் செய்வேன் என்று தொடை தட்டி கிளம்பிவிடும் ஆவேசம் மனதில் ஏற்படும். சினிமா டிஸ்டிரிப்யூஷன் எடுத்து, செமத்தியாக கொழிக்க, செழிக்க வேண்டும் எனும் எண்ணம் மனதை போட்டு துவைத்து எடுக்க, அது சார்ந்த மனிதர்களை சந்திக்க கிளம்பிவிடுவீர்கள். இதற்கு தூபம் போட உங்கள் வாழ்க்கைத்துணை முயல. உங்கள் மாமனார், "மாப்ளே நானும் கூடவர்றேன்' என முன்னாடி போய் நிற்பார். பூர்வீக சொத்து சம்பந்த வழக்கை, நீங்கள் மறந்தே போயிருக்க, இந்த குரு அதனை ஞாபகபடுத்தி ஓடச் செய்வார். நீர்நிலை அருகிலுள்ள சிவனை வில்வ மாலை சாற்றி வழிபடவும்.
துலாம்
இவ்வளவு நாளும் துலா ராசிக்கு 9-ல் இருந்த குருபகவான் 10-ஆமிடத்துக்கு பதவிசாக மாறுகிறார். அங்கிருந்து அவர், 2, 4, 6-ஆமிடங்களை உற்று நோக்குகிறார். இந்த நாட்களில் உங்களுக்கு வாடகை வீட்டு பண விஷயமாக மனம் அல்லாடும். அது நீங்கள் வாடகை வீட்டுக்கு போவதாக இருந்தாலும் சரி அல்லது உங்கள் வீட்டை வாடகைக்கு விட்டாலும் சரி, காரணம் இரண்டில் ஒன்றினால் கவலையும், யோசனையும் மனதைக் கவ்விக்கொள்ளும். சிலருக்கு வீட்டுக்கு கடன் கிடைக்குமா, அதுவும் போதிய அளவில் கிடைக்குமா அல்லது வாங்கிய கடனை தற்போது அடைத்து விடலாமா என வீட்டு கடன் தொகை சார்ந்து மன யோசனைகள் வளரும். சிலர் வேலையில் சம்பளம் உயர்த்துவார்களா, வேலை செய்யும் இடத்தில் வீடு கிடைக்குமா எனும் நினைப்பு வரும். இன்னும் சிலர் தன் தாயாரின் உடல்நிலை பற்றி வெகு கவலை கொள்வர். உங்களின் தாய்மாமன் உங்கள் தாயார், குடும்பம், பண விஷயம் பற்றி ஒன்றுக்கு பத்தாக பெரிதுபடுத்துவார். நீர்நிலை அருகிலுள்ள சிவனை இனிப்புகள் கொண்டு வணங்கவும்.
விருச்சிகம்
இதுவரையில் 8-ல் இருந்த குரு, தற்போது 9-ஆமிடத்தில் ஒத்து வருகிறார். இவர், அங்கிருந்து ராசி 3, 5-ஆமிடங்களைப் பார்க்கிறார். இந்த குரு உங்களை ஏனோ பூர்வீக நில பங்கீடு பற்றி நிறைய சிந்திக்கச் செய்வார். உங்கள் இளைய சகோதர திருமணம் பற்றி வெகு கவலை கொள்வீர்கள். கலை உலகில், குறிப்பாக டி.வியில் பணியாற்ற, வெகு ஆவல்கொண்டு, அது சார்ந்த நிறுவனங்களை அணுகி, வேலை கேட்பீர்கள். சிலர் இரண்டாவது குழந்தை பற்றி யோசிப்பீர்கள். உங்களில் நிறைய பேர், உங்களின் தோற்றப் பொ-வு மேன்மையடையும் வழிகளை சிந்தித்து, அதற்குரிய இயற்கை முறைகளை பின்பற்றுவீர்கள். கல்வி பயிற்சி சம்பந்தமாக முடிவு எடுப்பீர்கள். அது நீங்கள் கல்வியில் சேர்ந்து பயில்வதாக இருக்கலாம். அல்லது ட்யூசன் எடுப்பதாக இருக்கலாம். பள்ளி வாகன ஒப்பந்தம் பற்றி திட்டம் போடுவீர்கள். இந்த யோசனைகள் அனைத்தும் உங்களின் சுயமுயற்சியாக அமையும். கடல் அல்லது நதிக்கரை ஓரமுள்ள சிவனுக்கு நெய் தீபமேற்றி வணங்கவும்.
தனுசு
தனுசு ராசிக்கு இதுவரையில் 7-ல் இருந்த குருபகவான், இப்போது 8-ஆம் வீட்டிற்கு எட்டி பார்க்கிறார். இவர் அங்கிருந்து, தனுசு ராசியின் 12, 2, 4-ஆம் வீடுகளைப் பார்க்கிறார். கல்வி விஷய செலவுகள் சார்ந்து மனம் யோசித்துக்கொண்டே இருக்கும். வீடு முதலீட்டு விஷயமாக மண்டை காயும். தாயாருக்கு பணம் அனுப்பும் விஷயத்தில் ஏற்படும் சுணக்கம், மனச் சுருக்கம் தரும். வாகன, வயல், படகு முதலீட்டின்போது ஏற்படும் பணக் குறைவுத் தொகை, மனப்பதட்டம் தரும். வெளிநாடு சார்ந்த பணவிஷயங்கள் சற்று குழப்பம் உண்டாக்கும். உங்கள் வாழ்க்கைத் துணையின் தொழில் விஷயம், சற்று தடை ஆவதுபோல் தோன்றும். நல்ல சுகமான தூக்கம் வரமாட்டேன்கிறதே என்றும் எரிச்சல் வரும். இதற்கெல்லாம் காரணம் உங்கள் குடும்பமும், உங்கள் தாயாரும் ஆவார். முக்கியமாக பண விஷயம் முதன்மை பெறும்.நதி அருகிலுள்ள சிவனுக்கு வஸ்திரம் சாற்றி வணங்கவும்.
மகரம்
இதுவரையில் 6-ஆமிடத்தில் அமர்ந்த குரு, தற்போது 7-ஆமிடமான கடகத்திற்கு வந்து அமர்கிறார். அங்கிருந்து, உங்களின் 11-ஆமிடம் ராசி, 3-ஆமிடத்தைப் பார்க்கிறார். இந்த மாதங்களில், உங்களுக்கு மூளை ஓவராக வேலை செய்யும். இந்த அதீத யோசனை திறன் உங்களை பதம் பார்ப்பதோடு நிற்காது. யோசனை சொல்கிறேன் பேர்வழி என்று நண்பர்கள் மட்டுமல்ல, உங்களின் பணியாளர்களையும் பிராண்டி எடுப்பீர்கள். இதனால் உங்களை சந்திக்கு நபர்கள் விட்டால் போதுமடா சாமி என்று ஓடுவார்கள். அரசிய-ல் இருப்பவர்கள், சிறு வயதுக்காரர்களிடமும் மிகப் பணிவாக பேச கற்றுக்கொள்வார்கள். கொஞ்ச தூரப் பயணத்தில் முடியவேண்டிய வேலையை ரொம்ப தூரம் பயணித்து முடிப்பீர்கள். மாறாக ரொம்ப தூரம் அலைந்து முடிக்க வேண்டிய வேலையை, கைபேசிமூலம் ஒரு க்ளிக்கில் முடித்துவிடுவீர்கள். உங்கள் மூளை இதுமாதிரி கோக்குமாக்காக வேலை செய்யும். இதற்கு முழுக்காரணமும் உங்களின் அருமையான மூளைதான். நீர் நிலைகள் அருகிலுள்ள சிவனுக்கு அபிஷேகத்திற்கு, எண்ணெய் வாங்கிக் கொடுங்கள்.
கும்பம்
இதுவரையில் கும்ப ராசியின் 5-ஆமிடத்தில் அமர்ந்த குருபகவான், தற்போது 6-ஆமிடத்திற்கு வந்து அமர்கிறார். அவர் அங்கிருந்து, 10, 12, 2-ஆமிடங்களை உற்று நோக்குகிறார். இந்த மாதங்களில் தொழில் விஷயமாக மண்டை காயும். தொழி-ல் இன்னும் கொஞ்ச பணத்தை முதலீடாக போடலாமா அல்லது தொழிலையே மாற்றலாமா அல்லது தொழிலை வேறு இடத்திற்கு, மாற்றலாமா, தொழில் சார்ந்து, மாமியாரிடம் பண உதவி பெறலாமா, கடன் வாங்கி, தொழி-ல் போட்டால், எதிர்பார்த்த லாபம் வருமா என ரொம்ப ரொம்ப யோசனை செய்வீர்கள். பண விஷயத்தில் உங்கள் கௌரவம் விரயமாகிவிட்டால் என்ன செய்வது எனவும் யோசிப்பீர்கள். சிலருக்கு மாமியார் விஷயமாக பணச் செலவு ஏற்படும். தொழில் சார்ந்த வெளிநாட்டு வணிகம், உரிய நேரத்தில் பண வரவு கொடுக்காது. எனவே இது சார்ந்த கவலையும் அதிகமிருக்கும். இந்த மன அல்லாட்டத்திற்கு உங்கள் தொழிலும், பணமும், உங்கள் மாமியாரும் காரணமாக இருப்பார்கள்.நதி அருகேயுள்ள சிவனுக்கு விளக்கேற்ற, எண்ணெய் வாங்கிக் கொடுக்கவும்.
மீனம்
இதுவரையில் 4-ஆமிடத்தில் அமர்ந்திருந்த குரு, தற்போது 5-ஆமிடத்தில் வந்து அமர்கிறார். அங்கிருந்து அவர் 9, 11 ராசியை பார்க்கிறார். உங்களின் மன அலைகள் அனைத்தும், அதிர்ஷ்டம், லாபம் இவை சார்ந்தே வீசும். வேலையில் பதவி உயர்வு, அரசிய-ல் மந்திரி பதவி, வக்கில்களுக்கு நீதிபதி பதவி, ஆசிரியர்களுக்கு பேராசிரியர் பதவி என இவ்விதம் உங்கள் முன்னேற்றம் அடுத்த படியை நோக்கி நகரும்விதத்தில் திட்டமும் ஆசையும் அலைபாயும். உங்கள் பதவி உயர்வுக்கு, உங்கள் தந்தையும், உங்கள் மூத்த சகோதரனும் வெகு ப்ராயாசைப் படுவார்கள். உங்களுக்கு முதன்மை ஸ்தான இடம் வெகு ப்ரியமாக இருக்கும். அது பற்றிய சந்திப்புக்கள். நண்பர்கள், அரசியல்வாதிகள்மூலம் நகரவைக்க பெருமுயற்சி அடைவீர்கள். வாழ்வின் முன்னேற்றம் காரண மன பரபரப்பிற்கு உங்கள் தந்தை மூத்த சகோதரன் காரணமாவர். உங்களின் லட்சியமும் முக்கியமாகும். கடல் அருகிலுள்ள சிவனுக்கு மஞ்சள் நிறம் சார்ந்த பொருட்களை காணிக்கையாக்கி வணங்கவும்.பொதுவாக, குருப்பெயர்ச்சி பலன் என்றாலே வெகு நல்ல நல்ல பலன்கள் கூற இயலும்.இப்போது சுமார் 43 நாட்கள் மட்டுமே கடக ராசியில் அமர்கிறார்.அதில் உச்சம் பெறுகிறார். பின்பு அந்த உச்சத்தில் வக்ரம் பெற்று நீசமும் பெறுகிறார். இவ்விதம் குருபகவான் உச்சமும் நீசமும், குறுகிய காலத்தில் பெற்று அல்லாடுகிறார். (இதில் மிதுனத்திற்கு வக்ரகதியில் திரும்பச் சென்றும் அமர்வார்).இருக்கும் இடம் சந்திரனின் வீடு கடகம். இது ரொம்ப அலைபாயும் வீடு. எண்ண அலைகள் மாறி, மாறி வந்து தாக்கும். சிந்தனை வேறுபடும். யோசனை சிறகடிக்கும்.இந்தமாதிரி தன்மையுள்ள வீட்டில், அலைபாயும் குரு அமரும்போது, மக்களுக்கு சிந்தனை சிதறலை தருகிறார்.மக்கள் யோசனையிலேயே காலம் கடத்துவார்கள். அதனால்தான் உச்ச குரு தரும் பலனாக மனம் சம்பந்தமான விஷயம் வருகிறது. இருப்பது நீர் ராசி. அதனால் நீர் சார்ந்த இடத்து சிவனை வணங்குவது நல்லது.
செல்: 94449 61845