வள்ளுவனுக்கு இணையாக ஒளவை : சங்க இலக்கியங்களில் பெண்கள் : தேன்மொழி எத்துராசன்

valluar

 

ங்க இலக்கியங்களில் இடம் பெற்ற பெண் பாற் புலவர்களின் எண்ணிக்கை குறைவாய் இருந்தாலும். இன்றுவரை வள்ளுவன். கம்பன் போற்றப்படுவதற்கு இணையாக ஔவையார் அளித்த ஆத்திசூடி, கொன்றைவேந்தன், மூதுரை, நல்வழி, பந்தன் அந்தாதி, விநாயகர் அகவல், ஞானக்குறள் போற்றப்படுகிறது. எட்டுத் தொகையில் உள்ள புறநானூறு, அக நானூறு. நற்றினை, குறுந்தொகை ஆகிய நான்கு நூல்களில் ஔவையாரின் பாடல்கள் இடம்பெற்றுள்ளன.

பண்டைத் தமிழகத்தில் ஆண்பாற் புலவர்களின் எண்ணிக்கை 1446 பெண் பாற்புலவர்கள் 100க்கும் குறைவாய் இருந்துள்ளனர். பெரும்புலவர்களின் பெயர்கள் பாடலின் அடிப்படையில் பெயரிடப்பட்டு குறிப்பிடப்பட்டுள்ளது. அவர்களின் பெயர்கள். 1. அஞ்சியத்தை மகள் நாகையார், 2. அஞ்சில் அஞ்சியார், 3. அள்ளூர் நன்முல்லையார், 4. ஆதி மந்தியார், 5. ஊண்பித்தையார், 6. ஒக்கூர் மாசாத்தியார், 7. ஔவையார், 8. கச்சிப்பேட்டு நன்னாகையார், 9. கழார் கீரன் எயிற்றியார், 10. காக்கைப் பாடினியார், 11. காமக்காளிப் பசலையார், 12. காவற்பெண்டு, 13. குழமி ஞாழிலார் நப்பசலையார், 14. குறமகள் குறியெயினி 15. குறமகள் இளவெயின், 16. குன்றியனார், 17. தாயங்கண்ணியார், 18. நக்கண்ணையார், 19. நல்வெள்ளியார், 20. நன்னாகையார், 21. நெடும்பல்லியத்தை, 22. பாரி மகளிர், 23. பூங்கண் உத்திரையார், 24. பூதப் பாண்டியன் தேவியார், 25. பெருங

 

ங்க இலக்கியங்களில் இடம் பெற்ற பெண் பாற் புலவர்களின் எண்ணிக்கை குறைவாய் இருந்தாலும். இன்றுவரை வள்ளுவன். கம்பன் போற்றப்படுவதற்கு இணையாக ஔவையார் அளித்த ஆத்திசூடி, கொன்றைவேந்தன், மூதுரை, நல்வழி, பந்தன் அந்தாதி, விநாயகர் அகவல், ஞானக்குறள் போற்றப்படுகிறது. எட்டுத் தொகையில் உள்ள புறநானூறு, அக நானூறு. நற்றினை, குறுந்தொகை ஆகிய நான்கு நூல்களில் ஔவையாரின் பாடல்கள் இடம்பெற்றுள்ளன.

பண்டைத் தமிழகத்தில் ஆண்பாற் புலவர்களின் எண்ணிக்கை 1446 பெண் பாற்புலவர்கள் 100க்கும் குறைவாய் இருந்துள்ளனர். பெரும்புலவர்களின் பெயர்கள் பாடலின் அடிப்படையில் பெயரிடப்பட்டு குறிப்பிடப்பட்டுள்ளது. அவர்களின் பெயர்கள். 1. அஞ்சியத்தை மகள் நாகையார், 2. அஞ்சில் அஞ்சியார், 3. அள்ளூர் நன்முல்லையார், 4. ஆதி மந்தியார், 5. ஊண்பித்தையார், 6. ஒக்கூர் மாசாத்தியார், 7. ஔவையார், 8. கச்சிப்பேட்டு நன்னாகையார், 9. கழார் கீரன் எயிற்றியார், 10. காக்கைப் பாடினியார், 11. காமக்காளிப் பசலையார், 12. காவற்பெண்டு, 13. குழமி ஞாழிலார் நப்பசலையார், 14. குறமகள் குறியெயினி 15. குறமகள் இளவெயின், 16. குன்றியனார், 17. தாயங்கண்ணியார், 18. நக்கண்ணையார், 19. நல்வெள்ளியார், 20. நன்னாகையார், 21. நெடும்பல்லியத்தை, 22. பாரி மகளிர், 23. பூங்கண் உத்திரையார், 24. பூதப் பாண்டியன் தேவியார், 25. பெருங்கோழி நாயகன் மகள் நக்கண்ணையார், 26. பேய்மகள் இளவெயினி, 27. பொதும்பில் புல்லாளங்கண்ணியார், 28. பொன்மணையார், 29. பொன்மணியார், 30. போந்தைப் பகலையார், 31. மதுரை மேலைக்கடையத்தார். நல்வெள்ளையார், 32. மாரிப்பித்தையார் 33. மாறோக்கத்து நம்பச்சையார், 34. முள்ளியூர்ப் பூதியார். 35. வருமுலையாசித்தி, 36. வெண்ணிக்குயத்தியார், 37. வெண்பூதியார், 38. வெண்மணி பூதியார், 39. வெள்ளி வீதியார், 40. வெறிபாடிய காமக்காணியார், 41. வெள்ளைமாளர், 42. காரைக் காலம்மையார், 43. ஓரிற் பிச்சையார், 44. பெருங் கோப்பெண்டு 45. வில்லிபுத்தூர்க் கோதைமார்.

சங்க காலத்தில் பெண்களின் நிலை மரியாதைக் குரியதாகவும் உயர்வாகவும் இருந்துள்ளது. பாலின சமூகப் பரிகுபாடு இல்லாமல் கல்வியின் நிலை இருபாலருக்கும் இணையாக அமைந்திருந்தது. பெண்ணின் வீரத்தை நயம்பட எடுத்துரைத்த சிவகங்கைச் சீமையில் ஒக்கூர் கிராமத்தில் பிறந்த மாசாத்தியார். புறநானூற்றில் எழுதிய "கெடுக சித்தை கபுது இவள் துணிவே. மூதின் மகளிர் ஆதல தகுமே. மேல்நாள் உற்ற செருவிற்கு இவள் தன்னை யானை எறிந்து களத்து ஒழிந்தன்ன பாடல்கள் என்றும் இலக்கியத்தில் நிலையாய் நிலைபெற்றுள்ளது. முதல் நாள் நடந்த போரில் தன் கணவர் மரணம் எய்தியும், அடுத்த நாள் போர் முரசு ஒலிக்கக் கேட்டு தன் ஒரே மகனை அழைத்து, போர்க்களம் நோக்கி புறப்பட்டு போ என அனுப்பிவைத்த வீரமங்கை மாசாத்தியார் வீரத்திற்கும். கல்வி அளவிற்கும் ஒரு சிறந்த மேற்கோள். கல்வி, அறிவியல், தொழிற்புரட்சி எல்லாம் வளர்ச்சியுற்ற நாட்டில் இன்றுவரை பெண்கல்வி. பெண் பாதுகாப்பு, என்று பெண்ணுரிமை கேட்டுப் பெறும் நிலையில் உள்ளது. கேள்விக் குறியதே, சங்கத்தமிழ் கூறும். நன்னூல்கள் எல்லாம் தமிழ்வழி பாடத் திட்டத்தில் முழுமை யாக இடம்பெறவேண்டும். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பெண் பாற்புலவர்கள் குறைந்த எண்ணிக் கையில் இருந்தாலும் அவர்கள் தமிழ் இலக்கியத்தில் பெரிதும் கொண்டாடப்பட வேண்டியவர்கள். உரிமை என்பது யாவர்க்கும் பொது என்ற கேள்வி ஞானம் மிக்கவர்கள் சங்க காலப் பெண்பாற் புலவர்கள். பெண்பாற்புலவர் ஔவையின் அறம் கூறும் நன்னூல்கள்தான் திருக்குறளுக்கு நிகராக இன்றவும் மேற்கோள் காட்டப்பட்டு வருகிறது. தெளிந்த அறிவும். சிறந்த நிர்வாகத் திறமையும் பெண்களுக்கு இயற்கையிலேயே அமைந்த ஒன்று. பெண்களைக் கொண்டாடும் குடும்பங்கள் கல்வியிலும் பொருளாதாரத்திலும் வளர்ச்சி பெற்று இருக்கிறது. ஆனால் அவை சிறுபான்மை. அரசும், பெண்கள் கல்வி மேம்பாட்டுத் திட்டத்திற்கு பெரிதும் பொறுப்பேற்றால், பெண் உலகம் பாதுகாப்பாய் முன்னேறும் என்பதில் எள்ளளவும் சந்தேக மில்லை. ஒவ்வொரு பெண்ணின் குரலும் மாற்றத்தை ஏற்படுத்தும். தனக்காக குரல் தருவார்கள் என்று எதிர்பார்க்கக்கூடாது. ஒரு பெண்ணின் உரி மைக்கான குரல் தனக்கான தேவையை பூர்த்தி செய்கிறதோ இல் லையோ, அது. பெண் சமுதாயத்திற்கான குரலாக்கத்தான் பதிவாகிறது. ஒரு பெண் குரல் கொடுப்பதாலேயே அவள் வலிமை பொருந்தியவளாக கருதப்படுகிறாள். மேலும் அவர்களை உற்சாகப்படுத்தும் பெண்களாலேயே அது மிகவும் சக்தி வாய்ந்ததாகிறது.

valluar1

சுதந்திரமாக சிந்திக்கும் பெண்கள் மொத்தமாக திரண்டால் நல்லதொரு சமுதாயத்தை படைக்க இயலும். பெண்ணின் முயற்சிக்கு எல்லையில்லை. பன்முக சிந்தனையும் பெண்களுக்கே அமைந்த இயல்பு. குடும்ப நிர்வாகம், அலுவலக நிர்வாகம் மற்றும் இயல், இசை, நாடகம் என அனைத்து துறைகளிலும் தடம்பித்து வெற்றிநடைபோடும் பெண்கள், அரசியலில் மட்டும் பெரும்பான்மையாக ஈடுபட தயக்கம் காட்டுகிறார்கள்.

பொதுவாக பராமரிப்பவள் ஆணாகவும், பரிமாறுபவள் பெண்ணாகவும் இருக்கிறார்கள். சொற்ப வருமானத்தை வைத்து குடும்பத்தை நேர்த்தியாக கொண்டு செல்லும் பாங்கு பெண்ணுக்கே உரித்தானது. ஒரு குடும்பத்தை சீராக நடத்திச் செல்லும் மிகப்பெரிய பொறுப்பு பெண்ணிடம் உள்ளது. ஒரு காலத்தில் பெண் கல்விக்கு முக்கியத்துவம் இல்லாத நிலையில் ஆணின் கல்வி நிலைகூட குறைவாகவே இருந்திருக்கிறது. எப்போது பெண்கள் எல்லாம் கல்வித்தரத்தை உயர்த்திக்கொண்டார்களோ, அப்போது ஆண்களின் மேற்படிப்பிற்கு உந்துகோலாய் அமைந்தது. தந்தையின் கட்டுப்பாட்டில் படித்த பிள்ளைகளின் எண்ணிக்கையை விட கல்வி படிக்கின்ற தாயின் கட்டுப்பாட்டில் படிக்கும் பிள்ளைகளின் எண்ணிக்கை அதிகம். மேற் படிப்பு சதவீதமும் அதிகரித்துள்ளது. படித்த பெண்ணால் ஒரு குடும்பமே பல்கலைக் கழகமாகிறது.


மகாகவி பாரதி 1920-ல் கண்ட கனவின் பாதியை நிறைவேற்ற ஒரு நூற்றாண்டு ஆகி யுள்ளது. ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால் அறிவி லோங்கி இவ்வையம் தழைக்குமாம். 100 சதவீதம் இதனை மெய்ப்பிக்க வேண்டு மென்றால், அரசியலில் பெண்களின் பங்கு 50 சதவீதம் கட்டாயமாக்கப்படவேண்டும். பெண் சுதந்திரமாக சிந்திப்பவள் மட்டும் அல்ல நேர்மையையும் அதிகம் விரும்புபவள். 

என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில் எல்லாம் நமக்குள்ளே இருக்கிறது. சரியான பங்கீடுதான் இல்லை. எல்லாரும் எல்லாமும் பெறவேண்டும் என்று குடும்பத்தில் ஒரு தாய் தன் பிள்ளைகளின் பசியை தீர்க்க தன்னலம் பாராமல் செயல்படுகிறாளோ அதே உணர்வோடுதான் பொதுவான பொறுப்பை ஏற்றுக்கொண்டாலும் அவளது பங்கிடுதல் எல்லாருக்குமான தாகத்தான் இருக்கும்.

ஆதி பெண்வழிச் சமுதாயமாகத்தான் இருந்தது. சிந்து சமவெளி நாகரிகம். ஹரப்பா நாகரீகம் அனைத்திலும் பெண்கள் மரியாதை யாக நடத்தப்பட்டுள்ளனர். புதியதோர் உலகம் செய்வோம் என்ற பாரதிதாசனின் கோரிக்கையை நிறைவேற்ற பெண் இனம் வீறு கொண்டு செயல்பட்டு பொது உடைமைச் சமுதாயத்தை உருவாக்கும் என்பதில் ஐயமில்லை.  

OM010725
இதையும் படியுங்கள்
Subscribe