இளம் நண்பன் - டி. பத்மநாபன் தமிழில்: சுரா

/idhalgal/eniya-utayam/young-friend-d-padmanabhan-tamil-sura

நேற்றுதான் இது நடந்தது. முனீரின் மிகப்பெரிய "க்ரீன்ஸ்' ஷாப்பிங் மாலின் முதல் தளத்திற்கு நான் சிரமப்பட்டு ஏறிக்கொண்டிருந்தேன். உதவுவதற்கு ராமச்சந்திரனும் உடனிருந்தான். எனினும், படிகளின் முதல் "லேண்டிங்க்'கை அடைந்தபோது, களைப்பு காரணமாக நான் சிறிது நேரம் நின்றேன். உண்மையைக் கூறுவதாக இருந்தால்- களைப்பு மட்டுமே காரணமல்ல.

காதுகளுக்குள் துளைத்துக்கொண்டு நுழைந்த ஒரு அழுகைச் சத்தமும் ஆரவாரமும் அருகில் வந்துகொண்டிருப்பதைப்போல தோன்றியது. பதைபதைப்புடன் மேல்நோக்கிப் பார்த்தபோது, வராந்தாவிலிருந்து படிகளில் இறங்கிவருவதற்கு முயற்சித்துக்கொண்டிருந்த இரண்டு பெண்களைப் பார்த்தேன். ஒருத்தி இளம்பெண், இன்னொருத்தி சற்று வயதானவள். இருவரும் பர்தா அணிந்திருந்தார்கள். அவர்களின் கைகளில் ஷாப்பிங் மாலில் வாங்கிய பொருட்கள் அடங்கிய பெரிய பைகள் இருந்தன. அவர்களுடன் அதிகபட்சம் ஐந்தோ ஆறோ வயது மட்டுமே இருப்பதைப் போன்று தோன்றக்கூடிய ஒரு சிறுவனும் இருந்தான். அட்டகாசம் செய்யும் வகையைக் கொண்ட சத்தத்தை உண்டாக்குவது சிறுவன்தான். அவன் பெண்களின் நடையில் தடை ஏற்படுத்திக்கொண்டும், அவர்களின் ஆடைகளைப் பிடித்து இழுத்துக்கொண்டும் இருந்தான். அவனுடைய அந்த வயதிற்கே உரிய சுறுசுறுப்பு எனக்கு மிகவும் பிடித்திருந்தது. பெண்கள் அவனிடம் என்னவ

நேற்றுதான் இது நடந்தது. முனீரின் மிகப்பெரிய "க்ரீன்ஸ்' ஷாப்பிங் மாலின் முதல் தளத்திற்கு நான் சிரமப்பட்டு ஏறிக்கொண்டிருந்தேன். உதவுவதற்கு ராமச்சந்திரனும் உடனிருந்தான். எனினும், படிகளின் முதல் "லேண்டிங்க்'கை அடைந்தபோது, களைப்பு காரணமாக நான் சிறிது நேரம் நின்றேன். உண்மையைக் கூறுவதாக இருந்தால்- களைப்பு மட்டுமே காரணமல்ல.

காதுகளுக்குள் துளைத்துக்கொண்டு நுழைந்த ஒரு அழுகைச் சத்தமும் ஆரவாரமும் அருகில் வந்துகொண்டிருப்பதைப்போல தோன்றியது. பதைபதைப்புடன் மேல்நோக்கிப் பார்த்தபோது, வராந்தாவிலிருந்து படிகளில் இறங்கிவருவதற்கு முயற்சித்துக்கொண்டிருந்த இரண்டு பெண்களைப் பார்த்தேன். ஒருத்தி இளம்பெண், இன்னொருத்தி சற்று வயதானவள். இருவரும் பர்தா அணிந்திருந்தார்கள். அவர்களின் கைகளில் ஷாப்பிங் மாலில் வாங்கிய பொருட்கள் அடங்கிய பெரிய பைகள் இருந்தன. அவர்களுடன் அதிகபட்சம் ஐந்தோ ஆறோ வயது மட்டுமே இருப்பதைப் போன்று தோன்றக்கூடிய ஒரு சிறுவனும் இருந்தான். அட்டகாசம் செய்யும் வகையைக் கொண்ட சத்தத்தை உண்டாக்குவது சிறுவன்தான். அவன் பெண்களின் நடையில் தடை ஏற்படுத்திக்கொண்டும், அவர்களின் ஆடைகளைப் பிடித்து இழுத்துக்கொண்டும் இருந்தான். அவனுடைய அந்த வயதிற்கே உரிய சுறுசுறுப்பு எனக்கு மிகவும் பிடித்திருந்தது. பெண்கள் அவனிடம் என்னவோ அழுது வேண்டிக்கொள்வதைப்போல கூறிக்கொண்டி ருந்தார்கள். ஆனால் சிறுவனின் ஆர்ப்பாட்டத்தில் என்னால் எதையும் தெளிவாகப் புரிந்துகொள்ள முடியவில்லை. கனமான பைகளாலும், சிறுவனின் தொந்தரவாலும் அவர்கள் சற்று சிரமத்துடனே படிகளில் இறங்கிக்கொண்டிருந்தார்கள். இறுதியான "லேண்டிங்'கில் களைத்துப்போய் நின்றிருந்த எனக்கு முன்னால் வந்தபோது, நான் அவர்களைத் தடுத்தேன். பிறகு ஒரு ஊரின் முக்கிய நபரின் அதிகாரக்குரலில்... ஆனால், அன்புடன் கேட்டேன்:

""என்ன... என்ன விஷயம்?''

முதலில் அந்தப் பெண்களுக்கு சற்று பதைபதைப்பு உண்டானது என்றாலும், அது சீக்கிரமே இல்லாமல் போனது. தொடர்ந்து அந்த இளம்பெண் தயக்கத்துடன் கூறினாள்:

""இவன்தான்... தனக்கு மோட்டார் சைக்கிள் வாங்கிக்கொடுக்கணும்னு சொல்லி ஆர்ப்பாட்டம் பண்றான்.''

நான் அதிர்ச்சியடைந்துவிட்டேன்.

""மோட்டார் சைக்கிளா? இவனுக்கா?''

அப்போது வயதான பெண் கூறினாள்:

""இந்த கிறுக்கு பிடிச்சு கொஞ்ச நாளாச்சு. மோட்டார் சைக்கிள்ல ஏறி அவன் ஓட்டணுமாம். எதிர்த்து சொன்ன அவனோட உம்மாவோட ஆர்ப்பாட்டம்... பாட்டியான என்னிடமும் ஆர்ப்பாட்டம்... எல்லார்கிட்டயும் ஆர்ப்பாட்டம்...''

இளம்பெண் கூறினாள்:

""இருந்தாலும்... இவனுக்கு இன்னிக்கு இதை வாங்கிக் கொடுத்தோம். நல்ல விலை... ஆனா இவனுக்கு இது வேணாமாம். பெரிய வண்டி வேணுமாம்.''

அந்தப் பெண்ணின் குரலில் வெறுப்பும் கவலையும் இருந்தன.

நான் அவர்களின் கையிலிருந்து அதை வாங்கிப் பார்த்தேன். அழகான ஒரு மோட்டார் சைக்கிள்... பிரகாசித்துக்கொண்டிருந்த சிவப்பு நிறம்... நாம் சாலைகளில் பார்க்கக்கூடிய மோட்டார் சைக்கிள் இருக்கிறது அல்லவா? அதேதான். ஆனால், சிறியது என்பது மட்டுமே விஷயம். எனினும் "கீ' கொடுத்தால் குதித்துப் பாயும். அது போதுமே!

சீனாவிலிருந்து வந்திருக்கும் அந்த பொம்மையைக் கையில் வைத்தவாறு நான் கேட்டேன்:

""இவனோட பேரு?''

rrr

சிறுவனின் முதுகில் அப்போது என் ஒரு கையை மிகவும் மெதுவாக வைத்திருந்தேன்.

உம்மா கூறினாள்:

""சொல்லுடா.''

சிறுவன் தயங்கி நின்றாலும், தொடர்ந்து நான் வற்புறுத்தியபோது கூறினான்:

""அன்வர்.''

நான் கூறினேன்: ""இல்லை...''

உம்மாவும் பாட்டியும் அப்போது உறுதியான குரலில் கூறினார்கள்:

""அதேதான்... அன்வர்.''

நான் மறுப்பதைப்போல தலையை ஆட்டினேன்.

"நீங்க என்ன சொல்றீங்க? இவனைப்போல ஒரு சிறுவனுக்கு வெறும் அன்வர்னு பேரா? இல்லவே இல்ல... இவன்... அன்வர்கான்... அன்வர்கான்! நான் அப்படித்தான் கூப்பிடுவேன்.''

சிறுவனின் உம்மாவின் முகத்திலும், பாட்டியின் முகத்திலும் சிரிப்பு வந்துகொண்டிருந்தது. தொடர்ந்து நான் கூறினேன்:

""இவனுடைய வாப்பா?''

கேட்டது உம்மாவிடம் என்றாலும், பதில் கூறியது அன்வர்தான்.

""சவுதியில...''

அவனுடைய குரலில் பெரிய பெருமை இருந்தது. எனக்கு சந்தோஷம் உண்டானது. நான் அவனிடம் கேட்டேன்:

""சவுதி எங்க இருக்குன்னு தெரியுமா?''

அவன் தைரியத்துடன் கூறினான்.

""கல்ஃபில்.''

அப்போது உம்மா கூறினாள்:

""ஜித்தாவுல... ஓட்டுநர்.''

நான் கேட்டேன்:

""ட்ராஃப்ட்டைக் கூடவா?''

அவர்கள் சிரித்துக்கொண்டே தலையை ஆட்டினார்கள். நான் சிறிது நேரம் சிந்தித்தவாறு நின்றுகொண்டிருந்தேன். என் மனதில் சில திட்டங்கள் தோன்றிக்கொண்டிருந்தன.

அன்வரை என் சரீரத்துடன் சேர்த்துப் பிடித்தவாறு அவனுடைய முகத்தைப் பார்த்து, அவனிடம் மட்டுமே என்பதைப்போல கூறினேன்:

""அன்வர்... உன் வாப்பாவிடம் சொல்லி ஒரு முதல் தரமான மோட்டார் சைக்கிளை நான் கொண்டுவந்து தர்றேன். உன் ஊரிலும் வளபட்டணத்திலும் இருக்கற பாடாவதி மோட்டார் சைக்கிளா அது இருக்காது. நல்ல... உயர்தரமான... பெரிய மோட்டார் சைக்கிள். அதுல ஏறி நெருப்பைப் பறக்கவிட்டபடி போறப்போ, ஆட்களெல்லாம் அதிர்ச்சியடைவாங்க. ஹார்லி டேவிட்ஸனைப் பத்தி நீ கேள்விப்பட்டிருக்கியா?''

"இல்லை' என்று அவன் தலையை ஆட்டினான்.

நான் கூறினேன்:

""உலகத்திலேயே அதிக விலை மதிப்புள்ள மோட்டார் சைக்கிள். அது அமெரிக்காவுல தயாராகுது. உடனடியா அது கிடைக்காது. ஆனா, ஒரு நிபந்தனை இருக்கு...''

சந்தேகத்துடன் அவன் என் முகத்தையே பார்த்தான்.

நான் தொடர்ந்து கூறினேன்:

""அன்வர், நீ நல்ல பையனா உம்மாவும் பாட்டியும் கூறுவதைக்கேட்டு நடக்கணும். பள்ளிக்கூடத்திலும் நல்ல பையனா இருக்கணும். நல்ல முறையில படிக்கணும். பிறகு... வீட்ல வேலைகளும் உம்மாவுக்கு உதவியும் செய்யணும். என்ன சொல்றே?''

ஒரு முதிர்ச்சியடைந்த இளைஞனைப்போல அன்வர் தலையை ஆட்டினான். உம்மா, பாட்டி ஆகியோரின் முகத்தில் சிரிப்பல்ல... என்னவென்று கூறமுடியாத நிம்மதி தெரிந்தது.

நான் கூறினேன்:

""அப்படின்னா... நீங்க போங்க. நான் அன்வரோட மோட்டார் சைக்கிள் விஷயத்தைப் பார்க்குறேன்.''

அவர்கள் படிகளில் இறங்க ஆரம்பித்தபோது, நான் அதைப் பார்த்தவாறு அங்கேயே நின்றிருந்தேன்.

அன்வரின் கையில் இப்போது அவனுடைய உம்மாவின் கையிலிருந்த ஒரு பை இருந்தது. எனக்குள் வார்த்தைகளால் கூறமுடியாத அளவுக்கு சந்தோஷம் இருந்தது.

ராமச்சந்திரன் என்னவோ கூறிக்கொண்டிருந்தான். ஆனால் நான் கேட்கவில்லை. நான் கனவு கண்டுகொண்டிருந்தேன். கனவில் ஜித்தாவின் ஆள் அரவமற்ற ஒரு தெரு... தெருவின்வழியாகப் பறந்து செல்லக்கூடிய ஒரு ஹார்லி டேவிட்ஸன்... ஓட்டிக்கொண்டிருப்பது கழுத்தில் பச்சைநிற பட்டாலான துணி கட்டியிருக்கும் என் அன்வர்... அன்வருக்குப் பின்னால் சிரித்தவாறு அவனுடைய உம்மாவும் வாப்பாவும்...

uday011019
இதையும் படியுங்கள்
Subscribe