Advertisment

நனையும் ஆட்டுக்காக அழுகிற ஓநாய்! -கோவி.லெனின்

/idhalgal/eniya-utayam/wolf-cries-wet-sheep-govlenin

சிவராத்திரி விழாவை ஜிலுஜிலு ராத்திரியாக மாற்றிய பெருமைக்குரியவர் ஈஷா யோக மையம் எனும் ஆன்மிக வியாபாரத் தலத்தை நடத்திவரும் ஜக்கிவாசுதேவ் சாமியார். பிரதமர் முதல் பிரபல திரை நட்சத்திரங்கள் வரை பலரையும் அழைத்து, தன்னுடைய மார்க்கெட்டை உயர்த்திக் கொண்டவர். சிவனுக்கு ஆதியோகி சிலை வைக்கிறேன் என்று சொல்லிலி, தன் முகத்தை சிலையாக வைத்து பக்தர்களையே அதிர்ச்சியடைய வைத்தவர்.

Advertisment

ஈஷா மையத்தில் எந்த நிகழ்வாக இருந்தாலும் தனித்தனி கட்டணம் விதித்து, அதற்கேற்ப அனுமதிக்கும் கார்ப்பரேட் சாமியாரான ஜக்கி வாசுதேவ், இந்த சிவராத்திரியில் குவிந்த பக்தர்களிடம் ஓர் அட்டையைக் கொடுத்து, உயர்த்திப்பிடிக்கச் சொன்னார். அந்த அட்டையில், "கோவில் அடிமை நிறுத்து' என எழுதப்பட்டிருந்தது. கோவிலில் அடிமைகள் இருக்கிறார்களா, அவர்களை எங்கே கொண்டுபோய் நிறுத்துவது என்றெல்லாம் குழம்பவேண்டாம். அரசாங்கத்தின் இந்து அறநிலையத் துறையிடம் கோவில்கள் அடிமையாக இருக்கின்றனவாம். அதை நிறுத்தி, அரசாங்கத்திடமிருந்து விடுவிக்கவேண்டுமாம்.

Advertisment

isha

எதற்காக அரசாங்கத்திடமிருந்து விடுவிக்கவேண்டும்?

பல கோவில்கள் பராமரிக்கப்படவில்லையாம். ஒரு கால பூசைகூட நடைபெறவில்லையாம். அதனால், அரசாங்கத்திடமிருந்து மீட்டு, இந்துக் களிடம் ஒப்படைக்க வேண்டும் என்கிறார். அவர் சொல்லும் இந்துக்கள் யார்?

கொஞ்சம் விவரமாகப் பார்க்கலாம்.

கடந்த மார்ச் 25-ஆம் நாள் திருவாரூர் தியாகராச சாமி திருக்கோவிலிலின் ஆழித் தேரோட்டம் நடைபெற்றது. 1920-களில் ஓடிய தேர், தீவிபத்தில் எரிந்து போன நிலையில், புதிய தேர் வடிவமைக் கப்பட்டு, 1940-களின் நடுப்பகுதி வரை ஓடிய

சிவராத்திரி விழாவை ஜிலுஜிலு ராத்திரியாக மாற்றிய பெருமைக்குரியவர் ஈஷா யோக மையம் எனும் ஆன்மிக வியாபாரத் தலத்தை நடத்திவரும் ஜக்கிவாசுதேவ் சாமியார். பிரதமர் முதல் பிரபல திரை நட்சத்திரங்கள் வரை பலரையும் அழைத்து, தன்னுடைய மார்க்கெட்டை உயர்த்திக் கொண்டவர். சிவனுக்கு ஆதியோகி சிலை வைக்கிறேன் என்று சொல்லிலி, தன் முகத்தை சிலையாக வைத்து பக்தர்களையே அதிர்ச்சியடைய வைத்தவர்.

Advertisment

ஈஷா மையத்தில் எந்த நிகழ்வாக இருந்தாலும் தனித்தனி கட்டணம் விதித்து, அதற்கேற்ப அனுமதிக்கும் கார்ப்பரேட் சாமியாரான ஜக்கி வாசுதேவ், இந்த சிவராத்திரியில் குவிந்த பக்தர்களிடம் ஓர் அட்டையைக் கொடுத்து, உயர்த்திப்பிடிக்கச் சொன்னார். அந்த அட்டையில், "கோவில் அடிமை நிறுத்து' என எழுதப்பட்டிருந்தது. கோவிலில் அடிமைகள் இருக்கிறார்களா, அவர்களை எங்கே கொண்டுபோய் நிறுத்துவது என்றெல்லாம் குழம்பவேண்டாம். அரசாங்கத்தின் இந்து அறநிலையத் துறையிடம் கோவில்கள் அடிமையாக இருக்கின்றனவாம். அதை நிறுத்தி, அரசாங்கத்திடமிருந்து விடுவிக்கவேண்டுமாம்.

Advertisment

isha

எதற்காக அரசாங்கத்திடமிருந்து விடுவிக்கவேண்டும்?

பல கோவில்கள் பராமரிக்கப்படவில்லையாம். ஒரு கால பூசைகூட நடைபெறவில்லையாம். அதனால், அரசாங்கத்திடமிருந்து மீட்டு, இந்துக் களிடம் ஒப்படைக்க வேண்டும் என்கிறார். அவர் சொல்லும் இந்துக்கள் யார்?

கொஞ்சம் விவரமாகப் பார்க்கலாம்.

கடந்த மார்ச் 25-ஆம் நாள் திருவாரூர் தியாகராச சாமி திருக்கோவிலிலின் ஆழித் தேரோட்டம் நடைபெற்றது. 1920-களில் ஓடிய தேர், தீவிபத்தில் எரிந்து போன நிலையில், புதிய தேர் வடிவமைக் கப்பட்டு, 1940-களின் நடுப்பகுதி வரை ஓடியது.

அதன்பிறகு தேரோட்டம் நின்றுபோனது.

வருமானம் இல்லையா? தியாகராச சாமி திருக்கோவிலுக்கு 1000 வேலிலி நிலம் (1 வேலிலி=ஏழரை ஏக்கர்) உண்டு. அதனை நிர்வகித்தவர்கள் இந்து பரம்பரை தர்மகர்த்தாக்கள்தான்.

ஆனாலும், தேரோட்டத்தை நடத்த முடியவில்லை.

d

1969-ல் முதலமைச்சரான கலைஞர், அடுத்த ஆண்டு திருவாரூர் ஆழித் தேரோட்டத்தை சிறப்பாக நடத்திக் காட்டினார்.

வடம்பிடித்து இழுக்கும் பக்தர்கள் பெரியளவில் சிரமப்படாத வாறு, தேரோடும் தெருக்களை அகலப்படுத்தி, தேரின் சக்கரத்துக்கு பால் பேரிங் பொருத்தி, தேரை சீராக ஓட்டுகிற வகையில் திருச்சி பெல் நிறுவனத்தின் பொறியாளர்களைக் கொண்டு ஹைட்ராலிலிக் பிரேக் சிஸ்டம் அமைத்து ஆழித் தேரை ஓடச் செய்தார். இப்போதும் அதே நவீன முறைப்படி தேரோட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்து அறநிலையத்துறைதான் தேரோட்டத்தை நடத்துகிறது.

அதன் நெறிமுறைகள்-ஆகமங்கள் ஆகியவற்றை அதற்கான பக்தர்களைக் கொண்ட குழு கவனித்துக் கொள்கிறது.

de

திருக்கோவில் திருவிழாக்களுக்கே உரிய அனைத்து அம்சங்களுடனும் தேரோட்டத்தை சிறப்பாக நடத்துகிறார் கள். அதிலும் இந்த முறை, பங்குனி மாதம் ஆயில்யம் நட்சத்திரத்தில் தேரோட்ட வேண்டும் என்கிற இந்து முன்னணி-ஆர்.எஸ்.எஸ்.-சிவபக்தர்கள் உள்ளிட்ட அமைப்புகளின் கோரிக்கையையும் ஏற்று, அதே நட்சத்திரத்தில் தேரோட்டம் நடை பெற்றது. நவீன முறையில் கலைஞர் ஆட்சியில் தேரோட்டம் நடைபெற்ற போதும் இதுபோலவே பக்தர்களின் கோரிக்கையை ஏற்று ஆயில்யத்தில் தேரோட்டம் நடைபெற்றது.

பின்னர் எம்.ஜி.ஆர். ஆட்சிக்காலத்தில், புராதன கோவில்களில் பாதுகாப்பற்ற நிலையில் கைவிடப்பட்டிருந்த இறைவன்-இறைவி செப்புத் திருமேனிகளை பத்திரமாக எடுத்துவந்து, திருவாரூர் கோவிலில் கட்டப்பட்ட சிலை பாதுகாப்பு மையத்தில் வைத்தனர். அவை எந்த கோவில் களுக்கு உரியனவோ, அந்தக் கோவிலிலின் திருவிழா நடைபெறும்போது இந்த செப்புத் திருமேனிகள் அங்கு எடுத்துச் செல்லப்படும். அதன்பிறகு மீண்டும் சிலை பாதுகாப்பு மையத்திற்கு கொண்டு வரப்படும் .

இதனிடையே, புராதன கோவில் களைப் பாதுகாக்கும் பணியை இந்து அறநிலையத்துறை, தொல்லிலியல் துறை ஆகியனவும் மேற்கொண்டன. அதன் காரணமாக பல கோவில்கள் புனரமைக்கப்பட்டன. அங்கேயே பாதுகாப் பாக சிலைகளை வைக்கும் வழக்கம் ஏற்பட்டது. எம்.ஜி.ஆர்.

முதல்வராக இருந்தபோது, ஆசியாவிலேயே உயரமான திருவரங்கம் கோவிலின் தெற்கு ராஜகோபுரப் பணிகள் நிறைவடைந்து புனித நீராட்டு நடைபெற்றது. கலைஞர் ஆட்சிக் காலத்தில் மன்னை ராஜகோபாலசுவாமி, திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் உள்ளிட்ட பல பெரிய கோவில்களுக்கு குடமுழுக்கு நடைபெற்றது. மயிலாப்பூர் தெப்பக்குளம், திருவாரூர் கமலாலயம் திருக்குளம் ஆகியவை தூர் வாரப்பட்டன.

திருக்கோவில்களில் ஒரு கால பூசை என்பது உறுதி செய்யப்பட்டது. அதற்கான நிதிவசதி இல்லாத கோவில்களுக்கு நன்கொடைகள் பெறப்பட்டன. உபயதாரர்கள் வாயிலாக பூசை மட்டுமின்றி, அன்னதானமும் நடைபெற்றது. ஜெயலலிலிதா ஆட்சியில் திருக்கோவில்களில் அன்னதானத்தை தொடர்ச்சியாக மேற்கொண்டு வந்தார். இவை அனைத்தையும் ஒருங்கிணைக்க வேண்டிய பொறுப்பு இந்து அறநிலையத்துறையினுடையது. அந்த அறநிலையத்துறையிடமிருந்து கோவில்களை மீட்டு "இந்து'க்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று ஜக்கி வாசுதேவ் சொல்கிறார்.

அவர் மட்டுமா சொல்கிறார்? பா.ஜ.கவின் ஹெச்.ராஜா சொல்கிறார். ஆர்.எஸ்.எஸ். சொல்கிறது. விஸ்வ இந்து பரிஷத் சொல்கிறது. அதையேதான் ஜக்கியும் சொல்கிறார் என்கிறபோது, இவர்களின் உள்நோக்கம் என்ன என்பதை புரிந்து கொள்ளலாம்.

திருக்கோவில்கள் பாதுகாப்புக்கான இந்து அறநிலையச் சட்டம் என்பது பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியத்தில் சென்னை மாகாணத்தை தேர்தல் வெற்றி மூலம் நிர்வாகம் செய்த நீதிக் கட்சி ஆட்சியின் முதல் அமைச்சர் பனகல் அரசரால் கொண்டுவரப்பட்டதாகும். காஞ்சி சங்கராச்சாரியார் உள்ளிட்ட இந்து மதத் தலைவர்களின் ஆலோசனைகள்-

திருத்தங்கள்-ஒப்புதல் இவற்றோடுதான்

அது நிறைவேற்றப்பட்டது. இதன்படி கோவில் சொத்துகளை ஆக்கிரமித்து வைத்திருந்த தனியார் பெருமுதலை களிடமிருந்து அவற்றை மீட்டு, உரிய கணக்கு வழக்குடன் நிர்வாகம் செய்யும் பணியை அரசு மேற்கொண்டது. திருவிழாக்கள் உள்ளிட்ட ஆகமங்கள் சார்ந்தவற்றை அரசாங்கம் மாற்றமுடியாது.

car

பின்னர் சுதந்திர இந்தியாவில் காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் ஓமந்தூர் ராமசாமியார், காமராஜர் போன்றவர்களின் ஆட்சியில் இந்து அறநிலையத்துறை பலப்படுத்தப்பட்டது. அதன்பிறகே, கோவில் நிலங்கள் காலம்காலமாக எவர் எவர் கைகளிலோ சிக்கியிருப்பது கண்டறியப்பட்டு, மீட்கப்பட்டு கணக்கிற்குள் கொண்டுவரப்பட்டது. இந்து அறநிலையத்துறையில் இந்து மதத்தினர் மட்டுமே இடம்பெறுவர். அது அமைக்கும் கமிட்டிகளில் பட்டியல் இனத் தவர்-பெண்கள் உள்பட இந்துக்களே இடம்பெறுவர். எல்லா வகையிலும் இந்து மதத்தினரை சார்ந்தே இயங்கக்கூடிய அறநிலையத்துறையை அரசாங்கத்திடமிருந்து எடுத்து, தனியாரிடம் கொடுக்கவேண்டும் என கார்ப்பரேட் சாமியாரும் அவரை ஆதரிக்கும் காவிக் கட்சியினரும் கூறுவது ஏன்?

கோவில்கள் பராமரிக்கப்படவில்லை-கோவில் நிலங்கள் பறிபோகின்றன-சிலைகள் திருட்டுப்போகின்றன என்கிறார் கள். அரசு நிர்வாகத்தில் முறைகேடுகளே இருக்காது என்று சொல்லமுடியாது. அவற்றைச் சரிசெய்ய வேண்டியது கட்டாயம். அதேநேரத்தில், சிலைகள் திருட்டுப் போகிறதென்றால், கோவிலிலின் அர்ச்சகருக்குத் தெரியாமல் களவுபோக முடியாது. செப்புத் திருமேனியை அன்றாடம் தொட்டுப் பூசை செய்யும் உரிமை கொண்டவர்கள் அர்ச்சகர்கள் மட்டுமே. அதிலும், அனைத்து சாதியினரும் அதற்குள் வரக்கூடாது என்று ஒரு தரப்புக்கே பட்டா போட்டுத் தரப்பட்டிருக்கும் நிலையில், கோவில் சிலைகள் களவு போகின்றன என்றால் அதற்கு உடந்தையாக இருப்பது யார்?

சிதம்பரம் நடராசர் கோவிலை அரசாங்கம் நிர்வகித்த போது, உண்டியல் காணிக்கை லட்சங்களில் இருந்தது. தீட்சிதர்களிடம் ஒப்படைக்கப்பட்டபோது, மூவாயிரம், நான்காயிரம் என வெகுவாக குறைந்தது. சிதம்பரம் பக்தர்கள் திடீர் ஏழைகளாகிவிட்டார்களா? பொய்க்கணக்கு காட்டியது அரசா? தனியார் நிர்வாகமா?

கோவில் நிலங்கள் ஆக்கிரமிப்பு எனக் கூவுகிற ஈஷா மையம் எங்கே உள்ளது? வெள்ளியங்கிரி அடிவாரத்தில் யானைகள் வலசை செல்லும் வனப்பகுதியை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளதால் இன்றுவரை இயற்கை ஆர்வலர்களும் வனப்பகுதி மக்களும் போராடிக் கொண்டிருக்கின்றனர்.

அதிகாரத்தில் இருப்பவர்களிடம் செல்வாக்கை வளர்த்துக்கொண்டு ஆன்மிகத்தின் பெயரால் இயற்கையை சுரண்டி வயிறு வளர்ப்போர், "கோவில் அடிமை நிறுத்து' என்கிறார்கள். இந்நிலையில், தமிழக பா.ஜ.கவின் தேர்தல் அறிக்கையில், இந்து கோவில்களை "துறவி'களிடம் ஒப்படைப் போம் என வாக்குறுதி அளிக்கப்பட்டிருக்கிறது.

இப்போது புரிகிறதா, ஆடுகளுக்காக அழுகிற ஓநாய்களின் லட்சணம்?

uday010421
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe