நிரை காத்தல் எனும் பேரறம் மேய்த்தல் தொழிலான அவலம் - ஊ சலேத்

/idhalgal/eniya-utayam/woe-herdsmanship-herding-u-salet

ண்டைகாலம் தொடங்கி "மாடு' என்ற பொதுச்சொல் வீட்டில் வளர்க்கப்படும் எருமை, கிடா, பசு, காளை ஆகியவற்றைக் குறிக்கும் சொல்லாக விளங்கியுள்ளது ஆயர், ஆய்ச்சியர், இடையர், இடைச்சியர் என்று அழைக்கப்பட்ட முல்லை நில மக்களின் செல்வம் என்பது அவர் களால் வளர்க்கப்பட்ட கால்நடைகளின் எண்ணிக் கையைக் குறிப்பதாகக் கருதினர். மண்ணாசை கருதி நடைபெற்ற போர்கள் தொடங்குவதற்கு முன்னோடியாகப் பகையரசன் ஒரு நாட்டு அரசனுடைய ஆநிரையைக் கவர்ந்து செல்வது நடைமுறையில் இருந்தது. ஆநிரை காத்தல் என்பது செல்வமாகவும் தமிழ்நிலத்தின் வளமாகவும் கருதப்பட்டது. விவசாய காலத்தில் செல்வமாக, வளமாகக் கருதப்பட்ட மாடு என்கிற செல்வம் தொழில்புரட்சி யுகத்தில் பயன்படக்கூடிய ஒரு விலங்கு என்ற நிலைக்குத் தள்ளப்பட்டது. மாடு மேய்ப்பதை அவலம், கேவலம் என்கிற எண்ணம் வளர்ந்ததும், மாடுகளின் தேவையை இயந்திரங்கள் எளிதாக நிரப்பியதும் பாட்டாளிகள் விவசாய நிலங் களிடமிருந்து அந்நியப் படத் தொடங்கினர் ஆநிரை காத்தல் என்பது பேரறமாக இருந்து மேய்த்தல் தொழிலான அவலத்தை அலசுகிறது இக்கட்டுரை.

ஒரு மொழியில் படைக் கப்படும் இலக்கியம் என்பது அந்தச் சமூகத்தின் பண் பாட்டைப் பிரதிபலிப்ப தாகவே அமையும். சங்க இலக்கியம் என்பது தமிழர்களின் நாகரீகத்தையும், பண்பாட்டையும் குன்றின்மேலிட்ட விளக்காக நின்று விளக்கும் வரலாற்றுக் களஞ்சியம் என்றால் அது மிகையானதல்ல. சங்க இலக்கிய நூல்களும், அதற்கு முந்தைய இலக்கண நூல்களும் பேரறமாகக் கருதியது ஆநிரை காத்தலாகும். ஆநிரை என்பதை விளக்க முற்படும்போது "ஆ' மற்றும் "நிரை' என்னும் இரண்டு சொற்களை பிரித்து பொருள் காணமுடிகிறது. "ஆ' என்ற ஓரெழுத்து ஒருமொழி பசு என்பதையும், "நிரை'' என்ற சொல் கூட்டம் என்பதையும் குறிக்கிறது. எனவே 'ஆநிரை' என்பதை 'பசுக்கூட்டம்' என்று பொருள் காணமுடிகிறது. ஆநிரை காத்தல் என்பது செல்வமாகவும் தமிழ்நிலத்தின் வளமாகவும் கருதப்பட்டது என்பது மறுக்க இயலாத உண்மை.

"கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு

மாடல்ல மற்றை யவை'

-(திருக்குறள் கல்வி 400)

என்ற குறளில் வரும் "மாடு' எனும் சொல் செல்வத்தைக் குறிக்கிறது என்கிற புரிதல் மாடு செல்வமாகக் கருதப்பட்ட நிலையைத் தெளிவுபடுத்துகிறது.

ஆநிரை எனப்படும் பசுக்கள் மாடுகள் என்கிற விலங்கினத்திற்குள் வந்தாலும், மாடு என்பது பசுக்களை மட்டும் குறிப்பதல்ல என்பதை நாம் புரிந்து க

ண்டைகாலம் தொடங்கி "மாடு' என்ற பொதுச்சொல் வீட்டில் வளர்க்கப்படும் எருமை, கிடா, பசு, காளை ஆகியவற்றைக் குறிக்கும் சொல்லாக விளங்கியுள்ளது ஆயர், ஆய்ச்சியர், இடையர், இடைச்சியர் என்று அழைக்கப்பட்ட முல்லை நில மக்களின் செல்வம் என்பது அவர் களால் வளர்க்கப்பட்ட கால்நடைகளின் எண்ணிக் கையைக் குறிப்பதாகக் கருதினர். மண்ணாசை கருதி நடைபெற்ற போர்கள் தொடங்குவதற்கு முன்னோடியாகப் பகையரசன் ஒரு நாட்டு அரசனுடைய ஆநிரையைக் கவர்ந்து செல்வது நடைமுறையில் இருந்தது. ஆநிரை காத்தல் என்பது செல்வமாகவும் தமிழ்நிலத்தின் வளமாகவும் கருதப்பட்டது. விவசாய காலத்தில் செல்வமாக, வளமாகக் கருதப்பட்ட மாடு என்கிற செல்வம் தொழில்புரட்சி யுகத்தில் பயன்படக்கூடிய ஒரு விலங்கு என்ற நிலைக்குத் தள்ளப்பட்டது. மாடு மேய்ப்பதை அவலம், கேவலம் என்கிற எண்ணம் வளர்ந்ததும், மாடுகளின் தேவையை இயந்திரங்கள் எளிதாக நிரப்பியதும் பாட்டாளிகள் விவசாய நிலங் களிடமிருந்து அந்நியப் படத் தொடங்கினர் ஆநிரை காத்தல் என்பது பேரறமாக இருந்து மேய்த்தல் தொழிலான அவலத்தை அலசுகிறது இக்கட்டுரை.

ஒரு மொழியில் படைக் கப்படும் இலக்கியம் என்பது அந்தச் சமூகத்தின் பண் பாட்டைப் பிரதிபலிப்ப தாகவே அமையும். சங்க இலக்கியம் என்பது தமிழர்களின் நாகரீகத்தையும், பண்பாட்டையும் குன்றின்மேலிட்ட விளக்காக நின்று விளக்கும் வரலாற்றுக் களஞ்சியம் என்றால் அது மிகையானதல்ல. சங்க இலக்கிய நூல்களும், அதற்கு முந்தைய இலக்கண நூல்களும் பேரறமாகக் கருதியது ஆநிரை காத்தலாகும். ஆநிரை என்பதை விளக்க முற்படும்போது "ஆ' மற்றும் "நிரை' என்னும் இரண்டு சொற்களை பிரித்து பொருள் காணமுடிகிறது. "ஆ' என்ற ஓரெழுத்து ஒருமொழி பசு என்பதையும், "நிரை'' என்ற சொல் கூட்டம் என்பதையும் குறிக்கிறது. எனவே 'ஆநிரை' என்பதை 'பசுக்கூட்டம்' என்று பொருள் காணமுடிகிறது. ஆநிரை காத்தல் என்பது செல்வமாகவும் தமிழ்நிலத்தின் வளமாகவும் கருதப்பட்டது என்பது மறுக்க இயலாத உண்மை.

"கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு

மாடல்ல மற்றை யவை'

-(திருக்குறள் கல்வி 400)

என்ற குறளில் வரும் "மாடு' எனும் சொல் செல்வத்தைக் குறிக்கிறது என்கிற புரிதல் மாடு செல்வமாகக் கருதப்பட்ட நிலையைத் தெளிவுபடுத்துகிறது.

ஆநிரை எனப்படும் பசுக்கள் மாடுகள் என்கிற விலங்கினத்திற்குள் வந்தாலும், மாடு என்பது பசுக்களை மட்டும் குறிப்பதல்ல என்பதை நாம் புரிந்து கொள்ளவேண்டும். "மாடு' என்ற பொதுச்சொல் வீட்டில் வளர்க்கப் படும் எருமை, கிடா, பசு, காளை ஆகியவற்றைக் குறிக்கும்'' என்கிற முனைவர் க.ப.அறவாணன் அவர்களின் கருத்து நோக்கத்தக்கது அதேவேளையில் தமிழர்கள் ஆநிரைகளை- மாடுகளை வளர்ப்பதைச் செல்வமாகக் கருதினர் என்கிற புரிதலோடு, ஆங்கிலத்தில் "செல்வம்' என்ற பொருளைத்தரும் சொற்களுள் Pecuniary என்ற சொல்லை ஆராயும்போது, இலத்தீன் வேர்ச்சொல் லான டங்ஸ்ரீன் என்பதில் இருந்து இச்சொல் பிறந்தது என்பதை அறியமுடிகிறது. அதே வேளையில் இலத்தீன் மொழியில் டங்ஸ்ரீன் என்றால் மாடுகள் என்று பொருள் என்பது வியப்பைத் தருகிறது. தமிழ் நிலத்தில் எப்படி 'மாடுகள்' வளமாகக் கருதப்பட்டதோ, அப்படியே இலத்தீன் மொழி பேசப்பெற்ற ரோம் நாட்டிலும் மாடுகள் செல்வமாகக் கருதப்பட்டமை புலப்படுகிறது.

ff

நிரை வளர்ப்பு

முல்லை நில மக்கள் ஆயர்- ஆய்ச்சி இடையர்- இடைச்சி என்று அழைக்கப்பட்டனர். ஆடு, மாடு மேய்ச்சலைத் தொழிலாகக் கொண்டனர். மகளிர் ஆட்டு நிரை, ஆநிரை மூலம் கிடைக்கும் பால் மோர், தயிர், வெண்ணெய் ஆகியவற்றை விற்றல், பண்ட மாற்று செய்தல் முதலிய தொழில்களில் ஈடுபட்டனர். ஆடவர் ஆநிரை மேய்த்தல் தொழிலில் ஈடுபட்டனர். எருமைத்திரளையுடைய ஆயர் கோட்டினத்து ஆயர் என்றும், பசுத்திரளை உடைய ஆயர் கோவினத்து ஆயர் அல்லது நல்லினத்து ஆயர் என்றும் ஆட்டினத்தை யுடைய ஆயர் புல்லினத்து ஆயர் என்றும் கலித் தொகை ஆயர் இனங்களைக் குறிப்பிடுகிறது.

மாட்டைச் சார்ந்த வாழ்க்கை பண்டைத் தமிழர்களின் செல்வம் என்பது அவர்களிடம் வளர்க்கப்பட்ட கால்நடைகளின் எண்ணிக்கையைக் குறிப்பதாகக் கருதினர். ஆநிரையைக் காக்கும், மேய்க்கும் தொழிலில் பெருவாரியாக ஆடவர் ஈடுபட்டிருந்தனர். ஆநிரை வளர்ப்பு ஆண்களிடம் ஒப்படைக்கப்பட்டு இருந்தாலும், பால்கரத்தல் முதல் பால் பொருட்களைப் பண்டமாற்றுதல்வரை பிற செயல்பாடுகள் பெண்களிடம் இருந்திருக்கின்றன. ஆக மாட்டைச் சார்ந்த வாழ்வே பண்டைய வாழ்வாக இருந்தது தெளிவு. ஆநிரையை மூலதனமாகக் கொண்டு குடும்பத்தையும் சமூகத்தையும் மேம்படுத்தியுள்ள னர். இத்தகைய ஆநிரை பெருகவேண்டும் என்பதைப் புறநானூம், சிலம்பும் வெவ்வேறு காலச் சூழலில் புலப்படுத்துகின்றன.

"புலரி விடியல் பாடுபல வாழ்த்தி' (புறம் 385:2)

ஆகாத்து ஓம்பி ஆப்பயன் அளிக்கும்

கோவலர் வாழ்க்கை ஓர்கொடும்பா டில்லை' (சிலம்பு - அடைக்கலக் 120-121)

கலித்தொகை காட்டும் ஆயர் வாழ்க்கை

ஆயர் தன்னிடம் உள்ள ஆநிரைகளை ஊருக்கு அடுத்துள்ள மேய்ச்சல் நிலங்களில் மேயவிடுவர். காலையில் சென்று மாலையில் வீடு திரும்பும் பசுக்கள் மேயும் இடத்திற்கே பால் கறக்கும் கலங்களை எடுத்துச் சென்றனர் என்பதை "கலந்தொடியாஞ் செல்வுழி நாடிப் புலத்தும்'' (கலி -116) என்ற அடியால் அறியமுடிகிறது. ஆநிரை மேய்க்கும் போது பால் கலங்கள் வைத்த உரியும், தோற்பையில் கழுவோடு சூட்டுக் கோல்களும் இட்டு சுருங்கிய பையை கையிடத்துக் கொண்டவராகவும் இனிய குழலோசை உடையவராகவும் காணப்படுவர் என்பதை "கலந்தொடியாஞ் செல்வுழி நாடிப் புலத்தும்'' (கலி - 106) என்றும். ஆநிரை மேயும் போது அவற்றைப் பாதுகாக்க "கோலூன்றி நின்றா யோர்'' (கலி -108) என்ற க-த்தொகை வரிகள் புலப்படுத்துகின்றன. ஆயர்கள் தம் மனைக்கு அருகிலே பிறர் செல்வதற்கு அரிய இடத்தில் பயிர் தொழில் செய்தனர். பயிர்த் தொழில் செய்த இடத்திற்கு ஆநிரையை கன்றுடன் ஓட்டிச் சென்றனர் என்பதை, "பாங்கரும் பாட்டங்கால் கன்றோடு செல் வேமெம்'' (க- -116) என்பதும் தெளிவுபடுத்துகிறது.

நிரையின் மதிப்பு

பண்டைக் காலத்தில் ஆநிரை செல்வங்களாகக் கருதப்பட்டதால் அவற்றைப் பாதுகாத்து வளர்ப்பதும் பேரறமாக இருந்துவந்துள்ளது. இதனை, "ஆவ மாவுங் கொண்டுகழி கொன்றே' (மணி 9:25) என்று மணிமேகலை கூறுகின்றது.

"ஆவிற்கு நீரென்று இரப்பினும் நாவிற்கு

இரவின் இளிவந்தது இல்' (திருக்குறள் குடியியல் 1066)

என்ற குறளுக்கு "ஆகாத்தோம்பல் பேரறமாதலின்' என்று பரிமேலழகர் விளக்கம் அளிந்துள்ளார் "கோசம் ரக்ஷக்ஷ்னை' என்னும் பசுக்காத்தல் நம் மிகுதியாகவும் போற்றப்பட்டும் பசுக்கொலை பெரும்பாவமாகவும் கருதப்பட்டது என்பதே வரலாறு. இந்த அடிப்படையில்தான் போர்க்காலத்தில் பசுவின் உயிர் காக்கப்பட வேண்டும் என்பதை

"அவுமானியற் பார்ப்பன மாக்களும்

எம்மம்பு கடிவிடுது தும்மரண் சோமிலென்'

(புறம் 9: 1-5)

என்று போர் தொடங்குவதற்கு முன்பாக அறிவிப்பு விடுத்து, பசுக்களைப் பாதுகாப்பதிலும் அறங்களைக் கடைப்பிடித்துள்ளனர்.

சங்ககாலச் சமுதாயத்தில் ஆநிரையின் மதிப்பு போற்றற்குரியதாய் இருந்தது. ஆநிரையின் அளவினை வைத்தே அவரவரின் செல்வவளமையானது கணக்கிடப்பட்டுள்ளது. குறைவான பசுக்களைக் கொண்டு வாழ்க்கை நடத்துவோரின் நிலையை, "ஓரான் வல்கிச் சீரில் வாழ்க்கை' குறுந்தொகை 295-4) "ஓர் ஆயாத்த ஒருநாண் முன்றில் (அகம் 369:24) என்ற இலக்கிய வரிகள் விளக்குகின்றன.

திருமணத்திற்கு முன்பு முல்லைநில மகளிர் தம்மால் விரும்பி வளர்க்கப்பெறும் பெரும் வலிமையுடைய எருதுகளை நேருக்கு நேர் நின்று அடக்குபவரை மணந்திடப்பெரிதும் விரும்பினர். இத்தகைய வீரர்களை

"கொல்லேற்றுக் கோடஞ்சு வானை மறுமையும்

புல்லாளே ஆயமகள்' (கலி-103)

என்ற முல்லைக் கலிப்பாடல் அழகுபடச் சுட்டுகிறது.

திருமணத்தின்போது பெண் வீட்டாருக்கு மாப்பிள்ளை வீட்டாரால் பசுமாடுகள் வரதட்சணை யாகத் தரப்பட்டன இப்பழக்கம் இன்றும் அம்பா, அச்சோலி பாண்டு, தாமா, காண்டா, கீமா, கரமோடா ஆகிய பழங்குடிகளிடம் உள்ளது என்பார் க.ப. அறவாணன்.

இயற்கைக்கு அப்பால் இயற்கையோடு இயைந்த உயிரினங்களுள் மனிதனுடன் நெருங்கிய பயனுள்ள விலங்காக முதலில் பழக்கப்பட்டது மாடாகும். மாடே பல பொருளுக்கும் முதலாக விளங்கினமையால், அது ஆதி மனிதனின் உடைமைச் சொத்தும் செல்வமும் ஆயிற்று. மிகப்பழமை நாகரிகமான சிந்துச்சமவெளி நாகரிகத்தில் கிடைக்கப்பெற்றிருக்கும் காளைச் சின்னமும் தமிழர்களுக்கு ஆநிரையோடு இருந்த தொடர்பினை வெளிப்படுத்துகிறது.

வேட்டைச் சமூகம் ஆநிரைச் சமூகம் வேளாண்மைச் சமூகம் என்பன பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பெற்ற சமுதாய வளர்ச்சி நிலைகள் ஆகும். ஆநிரைச் சமூக காலத்தில் தம் தேவையைப் பூர்த்திசெய்வதற்காக மட்டுமின்றி தம் வலிமையை வெளிகாட்டவும் தோன்றியதே மண்ணாசைப் போராகும். இப்போர் தொடங்குவதற்கு முன்னோடியாகப் பகையரசன் ஒரு நாட்டு அரசனுடைய ஆநிரையைக் கவர்ந்து செல்வான் என்பதை புறப்பொருள் வெண்பா மாலை நமக்கு உணர்த்துகிறது.

வென்றிவேந்தன் பணிப்பவும் பணிப்பின்றியும்

சென்றி கள்முனை ஆதத்தன்று' (புற வெ நூற் 1)

பேரறம் தொழிலான அவலம்

"வரலாறு உணர்வுகளின் அடிப்படையில் எழுதப்படாமல் உண்மைகளின் அடிப்படையில் எழுதப்பட வேண்டும்'' (க.ராஜன் (1999) ப. 1) என்ற க.ராஜனின் கூற்றுக்கிணங்க தமிழ் நில வரலாற்றை உலக வரலாற்றின் போக்கோடு ஒப்பிட்டு ஆய்வது அவசியமாகிறது. உலகின் வரலாறு அந்த கால கட்டத்தில் உலகின் சமூக அரசியல் குறிப்பாகப் பொருளாதாரத்தைத் தம் கைக்குள் வைத்திருந்தவைகளோடு இணைத்து விவசாயயுகம், தொழிற்புரட்சியுகம் தகவல் புரட்சி யுகம் என மூன்று யுகங்களாகப் பகுக்கப்படுகின்றது. விவசாய காலத்தில் செல்வமாக வளமாகக் கருதப்பட்ட மாடு என்கிற செல்வம் தொழிற்புரட்சி யுகத்தில் பயன்படக்கூடிய ஒரு விலங்கு என்ற நிலைக்குத் தள்ளப்பட்டது. மாடு மேய்ப்பது கேவலமான தொழில் என்ற மாயையை மக்களிடம் ஏற்படுத்தியதில் தொழிற்புரட்சிக்கு முக்கிய பங்கு உண்டு. விவசாயத்தினை வியாபாரமாக மாற்றுதல் என்கிற தொழிற்புரட்சி விதைத்த எண்ணமே இதற்கு அடிப்படை. அதுவரை வளமாக, சொத்தாக, சமூகக் கௌரவமாகப் பார்க்கப்பட்ட மாடு அப்போது இலாபம் தரும் இயந்திரமாகப் பார்க்கப்படத் தொடங்கியது. பசுக்களுக்கும் காளைகளுக்கும் மதிப்பை இழக்கும்படி செய்த பணப்பித்துப் பிடித்த சுயநலவாதிகள் கால்நடைகளை பராமரிப்பினை புண்ணியமாகக் கருதிய மக்களையும் அந்நியப்படுத்தத் தொடங்கினர்.

தமிழ்ச் சமூகத்தில் அவரவர் அவரவர் தொழில்களைச் செய்த போதிலும் தொழில் அடிப்படையில் ஏற்றத்தாழ்வு, பிரிவினை, தீண்டாமை என்கிற எந்த சமூக அவலமும் அற்ற சமூகம் இலாப நோக்கிற்காக மூளைச்சலவை செய்யப்பட்டபோது செய்கிற தொழில் அடிப்படையில் சமூகப்பாகுபாடு தோன்றத் தொடங்கியது. தனது பொருளினை சந்தைப்படுத்த அடுத்த பொருளைப் பற்றி தரக்குறைவான புரளிகளை உருவாக்குவதைப்போலவே தமது தொழிற்சாலைகளை பெருக்க விரும்பிய சிலர், மாடு மேய்ப்பதை தரக்குறைவாக பேசி தங்கள் பக்கம் இழுக்கத் தொடங்கினர். மாடு மேய்ப்பதை அவலம், கேவலம் என்கிற எண்ணம் வளர்ந்ததும் மாடுகளின் தேவையை இயந்திரங்கள் எளிதாக நிரப்பியதும் பாட்டாளிகள் விவசாய நிலங்களிடமிருந்து அந்நியப்படத் தொடங்கினர். விவசாய நிலங்களை பணக்காரர்களிடம் விற்கத் தொடங்கினர். நிலங்களைப் பறித்த பண்ணையார்கள் இயந்திரங்களை இறக்குமதி செய்தனர். சில பணக்காரர்கள் நிலங்களைத் தூர்த்து தொழிற்சாலைகளாக்கினர்.

எந்த நிலத்தில் முதலாளியாக நின்று உழைத்தனரோ, அதே நிலங்களில் விவசாயக்கூலிகளாகவும் தினக் கூலிகளாகவும் வேலைக்குச் செல்லத் தொடங்கினர். மாடு மேய்த்தல் என்பது தரக்குறைவான பணி என்ற எண்ணமும் அதை பாதுகாத்தல் அவசியமற்றது என்கிற எண்ணமும் பரவத் தொடங்கியது. பெரும்பாலான விளைநிலங்களில் காளை மாடுகளுக்குப் பதிலாக டிராக்டர் எனும் இயந்திரம் பயன்பாட்டிற்கு வந்தன. காளை மாடுகளுக்கோ வேலையில்லாமல் போனதன் விளைவாக மாடுகள் கசாப்புக்கூடங்களுக்கு அனுப்பப்பட்டன. அதன் தொடர்ச்சியாக பால் நின்றுபோன பசு மாடுகளும் கசாப்புக் கூடங்களுக்கு அனுப்பப்பட்டன. ஆதிமருத்துவன் சவரத் தொழிலாளி ஆன அவலத்தைப்போல நிரை காத்தல் என போற்றப்பட்ட சமூகம் மேய்க்கும் தொழிலாளராக்கப் பட்டு சமூகத்தின் எல்லையைவிட்டுத் துரத்தப்பட்டனர் என்பதே துயர உண்மை.

uday010824
இதையும் படியுங்கள்
Subscribe