ஆட்டோ ரிக்ஷாக்காரனின் மனைவி - எம். முகுந்தன் - தமிழில்: சுரா

/idhalgal/eniya-utayam/wife-auto-rickshawker-m-mukundan-tamil-sura

புதிய ஆட்டோ ரிக்ஷா வாங்கிய அதே மாதத்தில் தான் மீத்தலெப்புரை இல்லத்தைச் சேர்ந்த சஜீவன் ஒரு பெண்ணையும் வாங்கினான். ஆட்டோ வாங்கு வதற்காக வங்கியிலிருந்து கடன் வாங்க வேண்டிய திருந்தது. பெண் முற்றிலும் இலவசமாகக் கிடைத்து விட்டாள். ஒரே அடியில் ஒரு புதிய ஆட்டோ ரிக்ஷாவும் ஒரு புதிய பெண்ணும் சொந்தமானார்கள். அவன் வாழ்க்கையைக் குதூகலத்துடன் நடத்தத் தீர்மானித்தான். நெடும்பரத்து பாலனின் இருபத்தாறு வயது கொண்ட மகள் ராதிகாதான் மணப்பெண். நிறைந்த உடலும் வெளுத்த தோலும் அவளுக்கு இருந்தன. உயரம் சற்று குறைவு என்ற குறைபாடு மட்டுமே. "பெண்களுக்கு இந்த அளவுக்கு உயரம் போதும்' என்று பெரியவரான மடிக்குன்னேம்மல் கோபாலன் கூறினார்.

கே.எல்.37 பி.ஜி..0026... சஜீவனின் ஆட்டோ ரிக்ஷாவின் எண். ஃபைவ் ஸ்பீட் கியர் பாக்ஸ்... நிறம் சன்ஸெட் யெல்லோ. ராதிகாவின் வயதும் ஆட்டோவின் எண்ணும் இருபத்தாறு. அந்த எண் பொருத்தம் அவனுடைய கண்களில் படவில்லை. அன்னத்தை அளிக்கக்கூடிய ஆட்டோவின், குழந்தைகளைத் தரக்கூடிய பெண்ணின் ஜாதகப் பொருத்தத்தை யாரும் கவனிக்கவில்லையா?

அவனுடைய மனதிற்கு அலைச்சலால் உண்டான ஒரு வெறுப்பு இருந்தது. ஆட்டோவை ஓட்டும்போது மட்டும் அவனுடைய ஐம்புலன்களும் சிலிர்த்தெழுந்து செயல்படும். கூர்ந்து கவனிக்கக்கூடிய அவள், சஜீவனின் வீட்டில் கால்களை வைத்த சில மணி நேரங்களுக்குள் அதைத் தெரிந்துகொண்டாள். உடனடியாக அந்த ஆட்டோ ரிக்ஷாவுடன் அவளுக்கு ஒரு சகோதர உணர்வு உண்டானது.

மீத்தலெப்புரையில் சஜீவன் தன் அக்கா மீனாட்சி யுடனும், பெரியவர் மடிக்குன்னேம்மல் கோபாலனு டனும் சேர்ந்து பெண் பார்ப்பதற்காக சென்றது தன் சொந்த ஆட்டோவில்தான். அதற்கு ஷோ ரூமிலிருந்து வெளியே கொண்டு வந்த புதிய வாகனத்தின் இனிய நறுமணம் இருந்தது. மிகவும் வேகமாக... ஒரு பூனையின் காலை ஒடித்துவிட்டு அவன் ஆட்டோவை ஓட்டினான். ஆட்டோ கடந்து சென்றபோது, அது உயர்த்திய தூசிப்படலத்தில் அமர்ந்து காயம்பட்ட பூனை, "நீ அழிஞ்சு போடா நாயோட மகனே!' என்று சஜீவனை நோக்கி சாபமிட்டது. கடந்த பிறவியில் அந்த பூனை மனிதனாக இருந்தது. வேறு யாருமல்ல- பழைய அஞ்சல் அலுவலகத்திற்குக் கிழக்கு திசையில், ஓலை வேய்ந்த இரு தளங்களைக்கொண்ட வீட்டில் வசித்துக் கொண்டிருந்த ஊர்சுற்றி சந்து அச்சன்தான் அது. பூனைக்குள் இப்போதும் சந்து அச்சன் இருக்கிறார். பணத்தையும், குடும்பப் பெருமையும் கொண்டல்ல. நாக்கில் புரளும் ஆபாசத்தால்தான் அவர் ஊரில் அறியப்பட்டிருந்தார். அவருடைய கண்களிலும் ஆபாசம் இருந்தது. ஒன்று... இரண்டாயிரம் கீற்றுகள் கொண்ட சுமையைத் தலையில் சுமந்தவாறு நடந்து செல்லும் குறும்பேடத்து கிட்டனின் மனைவி மாதவி, அவர் எய்துவிட்ட பார்வை மார்பில் பாய்ந்து ஒரு பக்கமாக சாய்ந்து விழுந்துவிட்டாள். சுமையிலிருந்த கீற்றுகள் நான்கு திசைகளிலும் சிதறி விழுந்தன. இப்படி சந்து அச்சனைப் பற்றி எவ்வளவோ கதைகள் இருக்கின்றன. சந்து அச்சனின் இளைய மகன் ஊர்சுற்றி சசிதரன்- நாயனார் ஆட்டோ நிறுத்தத்தில் ஆட்டோ ஓட்டுநர். சஜீவனின் நண்பனும்... சசீதரனுக்கு தந்தையின் கெட்ட பழக்கங்கள் எதுவுமில்லை.

அவனிடம் எவ்வளவோ நல்ல விஷயங்கள் இருந்தன.

திண்ணையின் வெப்பத்தில் மேற்துண்டைக் கொண்டு விசிறியவாறு அமர்ந்திருக்கும் நெடும்ப்ரத்து பாலன் ஒற்றையடிப் பாதையில் ஓடிவந்தான்.

அவனுடைய கவனம் சஜீவன்மீதோ, முழங்கால் வேதனை காரணமாக விந்தியவாறு வந்து கொண்டிருக்கும் பெரியவரின்மீதோ, தோளில் பிரகாசித்துக் கொண்டிருக்கும் துபாய்பேக்கைத் தொங்கவிட்டவாறு நடந்துவரும் அக்காமீதோ இல்லை. சன்ஸெட் யெல்லோ நிற ஆட்டோவின்மீது அவனுடைய பார்வை பதிந்து கிடந்தது. அவனுடைய மூக்கு புதிய பெயின்டின் வாசனையை முகர்ந்து எடுத்தது. பகவதி கோவில் என்பதைப்போல அவன் ஆட்டோ ரிக்ஷாவை இரண்டுமுறை சுற்றிவந்து, முழுமையான திருப்தியுடன் தலையைக் குலுக்கினான்.

""உனக்குப் பிடிச்சிருக்குதா, ராதிகாவோட தாயே?'' நெடும்ப்ரத்து பாலன் குரலைத் தாழ்த்தி மனைவி கமலாக்ஷியிடம் கேட்டான்.

""எனக்கு ரொம்பவும் பிடிச்சிருக்கு.''

""அருமையான ஆட்டோ... அப்படிதானே? யாருக்குப் பிடிக்காம இருக்கும்?''

""இருந்தாலும்... இனி எதையும் யோசிக்குறதுக்கு இல்ல. நம்ம பெண்ணை அவனுக்குக் கொடுக்கலாம்.''

பெண்ணைப் பார்க்க வந்திருப்பது மீத்தலெப்புரை யில் சஜீவன் அல்ல- ஆட்டோ ரிக்ஷாதான் என்பதைப் போல அவர்கள் பேசிக்கொண்டார்கள். மகளுக்கு வரப்போகும் மணமகனை அவர்கள் சிறிதுகூட கவனிக்கவே இல்லை. அவர்களுடைய கண்களிலும் மனதிலும் ஆட்டோ மட்டுமே இருந்தது. நெடும்ப்ரத்து பாலனின் வீடு வறுமையும் பற்றாக்குறையும் உடையது. கூலி வேலை செய்யும் அவன் குத்தகை என்பது பழக்கத்தில் இருந்த காலத்தில் நன்றாக மினுமினுப்புடன் வாழ்ந்தான். ராதிகாவின் திருமணத்திற்காக கொஞ்சம் தங்கத்தைக்கூட சேமித்து வைத்திருந்தான். குத்தகை வழக்கம் நின்றதுடன், அந்த மினுமினுப்பும் நின்றுவிட்டது.

கால் ஆடக்கூடிய மேஜையின் அருகில் அமர்ந்து நெய்யப்பத்தையும் தேநீரையும் இளைஞன் சஜீவனும் அக்கா மீனாட்சியும் பெரியவர் மடிக்குன்னேம்மல் கோபாலனும் சுவைத்து சாப்பிட்டுக்கொண்டிருந்தார்கள். அவளுடைய கணவன் வளைகுடாவில் ஃபுஜைராவில் இருக்கிறான்.

கால் ஆடக்கூடிய மேஜையின் அருகில் அமர்ந்து நெய்யப்பத்தையும் தேநீரையும் இளைஞன் சஜீவனும் அக்கா மீனாட்சியும் பெரியவர் மடிக்குன்னேம்மல் கோபாலனும் சுவைத்து சாப்பிட்டுக்கொண்டிருந்தார்கள். அவளுடைய கணவன் வளைகுடாவில் ஃபுஜைராவில் இருக்கிறான். தையல் கடை வைத்திருக்கிறான்.

"நெய்யப்பம் நல்லா... கறுமுறுன்னு இருக்கு. பெண் தயாரிச்சதா?'' பெரியவர் கேட்டார்.

""அவதான்... தேநீர் தயாரிச்சதும் அவதான். அவள் அருமையா சோறும் சமைப்பா...'' பெண்ணின் தந்தை கூறினான்.

""அருமையான தேநீர்...''

இளைஞன் சஜீவன் கூறினான். அவன் மனதிற்குள் மேலும் சேர்த்துக் கொண்டான். "நீயும் இப்போது சுட்டெடுத்த நெய்யப்பத்தைப்போலவே இருக்க பெண்ணே! கறுமுறுன்னு உன்னை கடிச்சுத் தின்னணும் போல இருக்கு.' அவன் அவளை ஒருமுறைதான் பார்த்திருக்கிறான். அதற்குள் "இதோ... பிடித்துக் கொள்' என்பதைப்போல தேநீரையும் பலகாரத்தையும் மேஜையின்மீது வைத்துவிட்டு அவள் உடனடியாகப் போய்விட்டாள். அவளுக்கு அந்த அளவுக்கு என்ன அவசரம்? பின்னால் எதையோ வைத்துவிட்டு மறந்துபோனதைப்போல அவள் ஓடிப்போய்விட்டாள்.

தேநீரையும் நெய்யப்பத் தையும் வாழைப் பழத்தையும் சாப்பிட்டுவிட்டு, வாசலில் வைக்கப் பட்டிருந்த தகரத் தாலான தொட்டியிலிருந்து நீரையெடுத்து, பெரியவர் மடிக்குன்னேம்மல் கோபாலன் ஆடியவாறு நீட்டித் துப்பினார். அவருடைய வாயிலிருந்து நெய்யப்பத்தின் எஞ்சிய பகுதிகள் கலந்த நீர் பூவானத்தைப்போல வெளியே தெறித்து விழுந்தது. அவளுடைய பற்களுக்கு நடுவில் பெரிய இடைவெளிகள் இருந்தன. அதனால் வாய்க்குள் எப்போதும் எச்சில்தான்...

""இப்போதைய பையனாச்சே! பையனும் பெண்ணும் ஒருத்தருக்கொருத்தர் பார்த்து கேட்கவும் சொல்லவும் செய்யட்டும்.'' பெண்ணின் தந்தை கூறினான்.

""கேட்கறதுக்கு என்கிட்ட எதுவுமில்ல. பெண்ணை கண் நிறைய பார்த்தாலே போதும்.''

பையன் சஜீவன் கூறியதைக் கேட்டு, நெடும்ப்ரத்து பாலன் தன்னையே அறியாமல் சிரித்துவிட்டார். பெரியவர் மடிக்குன்னேம்மலின் முகத்தில், அடிவயிற்றில் சிறுநீர் தேங்கிக் கிடப்பதைப் போன்ற ஒரு தர்மசங்கடமான நிலை... குடும்பத்திற்கு வெட்கக்கேட்டை உண்டாக்கக்கூடிய செய்தியை மருமகன் கூறுகிறான். வயது முப்பதாகிவிட்டது. பெண்ணைக் கட்டுவதற்கு தாமதமாகிவிட்டது. பையனுக்கு பெண்ணின்மீது இப்படி வெறி உண்டானதற்கு அதுதான் காரணம். பெரியவர் மனதிற்குள் கோபப்பட்டார்.

சஜீவன் அறைக்குள் சென்றபோது, ராதிகா கட்டிலில் அமர்ந்து கவனமாக கை நகங்களில் பாலிஷ் தேய்த்துக் கொண்டிருப்பதைப் பார்த்தான். காலையில் விரல்களில் சாயம் தேய்க்கும் பணி முடிவடைவதற்கு முன்பே பையனும் உடன் வந்தவர்களும் அங்கு... வாசலுக்கு வந்துவிட்டார்கள். வலது கையில் மூன்று விரல்கள் அப்போதும் எஞ்சியிருந்தன. அவளுக்கு கோபம் வந்தது. அந்த எஞ்சியிருந்த நகங்களில்தான் அவள் இப்போது சாயம் தேய்த்துக்கொண்டிருக்கிறாள்.

யானையின் மீதிருந்து இறங்குவதைப் போலத்தான் பெரியவர் புதிய ஆட்டோ ரிக்ஷாவிலிருந்து வெளியே இறங்கினார். காலையில் பத்து மணிக்கு வருவதாக அவர் அலைபேசியில் அறிவித்திருந்தார். வந்ததோ அரை மணி நேரத்திற்கு முன்பே... எப்படி முன்பே வராமல் இருப்பார்கள்? காரையும் பேருந்தையும் "ஓவர்டேக்' செய்தல்லவா இளைஞன் ஆட்டோவை ஓட்டினான்? ஆட்டோவைக் கிளப்பிவிட ஆரம்பித்து விட்டால், உடனே அவனுக்குள் ப்ரேக்கும் வேகத்தைக் குறைக்கும் கருவியும் செயல்படாமல் நின்றுவிடும்.

அவள் சாயம் தேய்ப்பதைத் தொடர்ந்தவாறு தலையை உயர்த்தாமல் கேட்டாள்: ""என்ன... பிடிச்சிருக்கா?''

""நெய்யப்பம் அருமை!''

""உங்களுக்கு எப்பவும் தின்னக்கூடிய சிந்தனை மட்டுமே இருக்கு. இல்லியா? பெரியவரும் நீங்களும் போட்டிபோட்டுக்கிட்டு நெய்யப்பத்தை வெட்டி விழுங்குறதை நான் பார்த்துக்கிட்டிருந்தேன்.... தெரியுமா?'' அவள் கூறினாள்: ""நான் கேட்டது என்னைப் பிடிச்சிருக்கான்னு.''

""அய்யோ... உன்னை யாருக்குப் பிடிக்காமப்போகும்?''

""மாதத் தவணை எவ்வளவு இருக்கு?''

கேள்வி புரியாமல் சஜீவன் ராதிகாவின் முகத்தையே பார்த்தவாறு, ஆர்வத்துடன் நின்றுகொண்டிருந்தான்.

""வங்கியில கடன் வாங்கித்தானே ஆட்டோ வாங்கியிருக்கீங்க?''

""ஓ... அதுவா? அது பெருசா ஒண்ணுமில்ல... நான் சீக்கிரமா அதை அடைச்சு முடிச்சிடுவேன்.''

""நான் வர்றேன். ஆனா ஒரு நிபந்தனை... மூணு மாசம் ஆகறப்போ, எனக்கு ஒரு புதிய சுடிதாரும் குர்த்தாவும் வாங்கித் தரணும்.''

சஜீவனின் மனம் கொதித்தது.

""அய்யே... சுடிதாரா? பொண்ணுங்க கல்யாணம் செஞ்சுக்கிட்டபிறகு புடவைதானே கட்டிக்குவாங்க?''

அதை காதில் வாங்காததைப்போல தொடர்ந்து கூறினாள்: ""பிறகு... சுடிதாருக்குப் பொருத்தமா இருக்கற மாதிரி செருப்பும் வேணும்.''

""மூணு மாசம் ஆனபிறகா?''

""அது முடியாதுன்னா இப்பவே நீங்க அதைச் சொல்லிடணும். வக்கீலைப் பார்க்கறதுக்கும் நீதிமன்றத்துக்கு ஏறி இறங்குறதுக்கும் நான் தயாரில்ல...''

சஜீவன் வெறுப்படைந்தான். எனினும், அவளுடைய அனைத்து நிபந்தனைகளுக்கும் அவன் தலையைக் குலுக்கி சம்மதித்தான். அவளுடைய உடலைச் சொந்தமாக்குவதற்காக உலகத்திலுள்ள அனைத்து நிபந்தனைகளையும் ஏற்றுக்கொள்ள அவன் தயாராக இருந்தான்.

""கல்யாணம் முடிஞ்சபிறகு உன்னை நான் ஆட்டோவுல ஏத்தி குருவாயூருக்கு கூட்டிட்டுப் போறேன்.''

""எனக்கு லூலு மாலுக்குப் போனா போதும்.''

""டேய் சஜீவா... உன் புகழ்ச்சிப் பேச்சு முடியலையா? வா... நாம போவோம்.''

பெரியவர் மடிக்குன்னேம்மல் கோபாலன் கூறினார்.

அவர் போவதற்காக எழுந்துவிட்டிருந்தார். பிரகாசித்துக்கொண்டிருக்கும் ஹேண்ட் பேக்கை கையில் எடுத்தவாறு சஜீவனின் அக்காவும் எழுந்தாள். பெரியவர் வாசலிலிருந்த தூணின்மீது சாய்த்து வைக்கப்பட்டிருந்த குடையைக் கையில் எடுத்தார். பையனும், பையனின் அக்காவும் அவருடன் சேர்ந்து வெளியேறினார்கள். அப்போது ஒற்றையடிப் பாதையிலிருந்து ஊர்சுற்றி சந்து அச்சன் இடது பின் காலை மேலே உயர்த்தி வைத்தவாறு மூன்று கால்களில் தாவி வாசலுக்கு வந்தார். பூனையைப் பார்த்ததைப்போல காட்டிக்கொள்ளாமல் சஜீவன் ஒற்றையடிப்பாதையில் கால் வைத்தான். ஆட்டோ தூசியைப் பரவ விட்டவாறு பறந்தது. முன்னாலிருந்த சாலையோ, அதன் ஓரத்தில் ஆட்டை ஓட்டிக்கொண்டு செல்லும் முட்டாள் அச்சூட்டியையோ அவன் பார்க்கவில்லை. பார்த்தது- ராதிகாவை மட்டுமே. பெண்ணுக்கு அருமையான ஒரு அழகு! ஸ்டாண்டிலுள்ள ஆட்டோ ஓட்டுநர்கள் அனைவருக்கும் இனிமேல் தன்மீது பொறாமை உண்டாகும். சந்தேகமே இல்லை.

குளித்து, கழுத்தைச் சுற்றி "லேஸ்' வைத்து தைக்கப் பட்ட கவுனை அணிந்து, தலையை வாரிப் பின்னால் இறுகக்கட்டி, அவள் கண்ணாடியைப் பார்த்தவாறு முகத்தில் "க்ரீம்' தேய்த்துக்கொண்டிருந்தாள். க்ரீம் தேய்த்துவிட்டு, அவள் கட்டிலில் அவனுக்கு அருகில் வந்து அமர்ந்தாள். அவன் காத்துக்கொண்டிருந்தான்.

திருமண வீட்டில் இரவு பதினோரு மணி ஆனபிறகும், குழல் விளக்குகள் அணைவதற்குத் தயங்கின. குழல்விளக்கின் வெளிச்சத்தில் வாசலில் பணியாட்கள் பந்தலை அவிழ்த்துக் கொண்டிருந்தார்கள். சாய்ந்தும் கவிழ்ந்தும் கிடக்கும் பிளாஸ்டிக் நாற்காலிகளை ஒரு மனிதன் ஒன்றின்மீது மற்றொன்று என்று அடுக்கி வைத்துக்கொண்டிருந்தான். காலையில் டெம்போ வேன் வந்து அவையனைத் தையும் ஏற்றிக்கொண்டு செல்லும். விருந்து முடிந்து சுருட்டிப்போடப்பட்டிருந்த வாழையிலைகள் ஓரத்தில் சிதறிக் கிடந்தன. இரவானபிறகும், அங்கு நாய்களும் பூனைகளும் வாசனை பிடித்தவாறு நடந்துகொண்டிருந்தன.

""என் கழுத்தில நீங்க கட்டிய இந்த தாலி எத்தனை பவுன்?''

""மூணரை பவுன் இருக்கும்.'' அவளுடைய முகத்தை அவன் பார்க்கவில்லை. பார்ப்பதற்கு தைரியம் போதாமல் இருந்தது.

""யானை முட்டை... இது ஒரு முக்கால் பவுன்கூட இருக்காது. உங்களோட கையில தாலியைப் பார்த்தப்போ நான் உருகிப் போயிட்டேன். இதை கழுத்தில கட்டிக்கிட்டு நான் எப்படி வெளியே இறங்கி நடக்குறது?''

""அமைதியா இரு கண்ணு. என் கடன் முழுவதும் தீர்ந்துட்டா உனக்கு நான் மூணரை பவுன்ல தாலி மாலை செஞ்சு தருவேன். என் அம்மாமீது சத்தியம்...''

""அப்படின்னா... தவணைப் பணம் தவிர, கடனும் இருக்கா?''

""தூக்கம் வருது... நாம படுப்போம்.''

""நான் கேட்டதுக்கு பதில் சொல்லுங்க. கடன் இருக்கா?''

"கல்யாணத்துக்கு செலவில்லையா? இரண்டு சீட்டு போட்டேன். அப்படி இல்லாம எனக்கு எங்கேயிருந்து காசு கிடைக்கும்?''

சிறுவயதிலிருந்தே அவன் கடன் வாங்கிக் கொண்டிருக்கிறான். அமெரிக்கக்காரர்களைப்போல அவன் கடன்வாங்கித்தான் வாழ்ந்துகொண்டிருக் கிறான். கடன் வாங்கிவிட்டால், பொதுவாக அவன் அதை மறந்துவிடுவான். பிறகு... பாதையின் ஓரத்தில் கடன் கொடுத்த மனிதனைச் சந்திக்கும்போது மட்டுமே அவன் அதை நினைத்துப் பார்ப்பான். "இன்னும் ஒரு வாரம் வாய்ப்பு தரணும். என் அம்மாமேல சத்தியம். பைசாவை நான் வீட்டுக்குக் கொண்டுவந்து தர்றேன்' என்று அவன் கூறுவான். கூறியதைப் போலவே அவன் செயல்படவும் செய்வான். அந்த காரணத்தால்தான் மீத்தலெப்புரை இல்லத்தைச் சேர்ந்த சஜீவனுக்கு கடன் தருவதற்கு யாரும் தயங்காமல் இருக்கிறார்கள். பிறரின் பையில் பைசா இருக்கும் காலம்வரை, தனக்கு வறுமை என்ற ஒன்று இருக்காது என்று அவன் நம்புகிறான். அப்படித்தானே அமெரிக்காகாரர்களும் நம்புகிறார்கள்.

மஞ்சள் மற்றும் நீலநிறங்களில் பெரிய பூக்களைக் கொண்ட விரிப்பு விரிக்கப்பட்டிருந்த கட்டிலில், ராதிகா தலையணையில் சாய்ந்து படுத்திருந்தாள். க்ரீமின் மனதை மயக்கும் நறுமணம் சஜீவனின் முகத்தில் மோதிக்கொண்டிருந்தது. அவன் அவளை நோக்கி உணர்ச்சி வசப்பட்டு சாய்ந்தபோது, அவள் விலக்கினாள். ""அதுக்கு இன்னும் நேரம் இருக்கு. இப்போ நாம சில விஷயங்களைப் பேசவேண்டியதிருக்கு.''

""என்ன விஷயம்?''

""நாளையிலிருந்து ஆட்டோ ஒட்டி கிடைக்கறகூடிய பணம் முழுசையும் என் கையில் தந்துடணும். நான் கணக்கு வச்சிக்கிறேன். எல்லா கடன்களையும் நாம தீர்க்கணும். அதுக்குப் பிறகு குழந்தைங்க பிறந்தா போதும்.''

""அப்படின்னா... இந்த பிறவியில் நமக்கு குழந்தைங்க இருக்காது.''

அவன் ஏமாற்றத்துடன் திரும்பி மல்லாந்து படுத்தான்.

""கோபம் வந்திருச்சா?''

அவன் எதுவும் பேசவில்லை. பேசத் தோன்றவில்லை.

""கோபம் வர வேண்டியதில்ல. ஒரு நிமிஷம்...''

அவள் மார்பிலிருந்து எதையோ தடவி எடுத்தாள். சிவப்பு நிறத்தைக் கொண்ட ஒரு சிறிய பொட்டலம்.

""இது என்ன ராதிகா?''

""நல்ல கதை! நீங்க... ஆம்பளைங்க பயன்படுத்தற பொருளை உங்களுக்கே பார்க்கறப்ப தெரியலையா? குழந்தை பிறக்காம இருக்கறதுக்கான பொருள் இது.''

""இது உனக்கு எங்கிருந்து கிடைச்சது?''

""கிடைச்சது இல்லை... வாங்கினது.''

காஞ்ஞிரத்தின் கீழிலிருந்து நகரப் பேருந்தைப் பிடித்து பழைய பேருந்து நிலையத்தில் இறங்கி, மானிகேக்கல் அஃப்ஸலின் மருந்துக் கடையில் ஏறி, அங்கிருந்து வாங்கியது அது. ஒவ்வொரு மாதமும் சானிட்டரி டவல் வாங்குவதற்காக அவள் அந்த மருந்துக் கடையில் ஏறி இறங்குவதுண்டு.

""என்ன... சகோதரி... இந்த மாசம் முன்கூட்டியே?''

அஃப்ஸல் கேட்டான். இரண்டு வாரங்களுக்கு முன்புதான் அவள் வந்து சானிட்டரி டவல் வாங்கிச் சென்றிருந்தாள்.

""ஓ.... அது இல்ல... அடுத்த வாரம் என் கல்யாணம். எனக்கொரு நிரோத் பாக்கெட் வேணும்.''

அஃப்ஸலின் கண்ணாடித் துண்டுகள் சிரித்தன. அவனுக்கு அவளை நன்றாகத் தெரியும். எந்தவொரு இளம்பெண்ணும் இந்த அளவுக்கு தைரியமாக அங்கு வந்து இப்படிப்பேசுவதை அவன் பார்த்ததில்லை.

""ஸ்பெஷல் வேணுமா?''

""ஆர்டினரி போதும்.''

ddat

அவள் குர்த்தாவுக்குள் மார்பில் வைத்திருந்த சிறிய பர்ஸை வெளியே எடுத்து அதிலிருந்து பைசாவை எடுத்துக் கொடுத்தபோது, அவன் கூறினான்: ""கல்யாணத்துக்கு என்னைக் கூப்பிட மறந்துடாதே சகோதரி!''

இரண்டுபேரும் சிரித்தார்கள். அவர்களுடைய உரையாடலைக் கேட்டு சற்று அருகில் நின்றுகொண்டிருந்த இரண்டு அறிமுகமற்ற ஆண்கள் திகைத்துப்போய்விட்டார்கள்.

""கலிகாலம்...''

""இன்னும் என்னவெல்லாம் பார்க்கவும் கேட்கவும் இருக்கோ தெரியல. அதுக்கு முன்ன கடவுள் உயிரை எடுத்துக்கிட்டா நல்லா இருக்கும்.''

ராதிகா படுக்கையில் மல்லாந்து படுத்தாள். குழல் விளக்கின் வெளிச்சத்தில் அவளுடைய உடல் மேலும் வெளுத்துக் காணப்பட்டதை அவன் பார்த்தான். ஒரு அருவியைப்போல அவளுடைய உடலிலில் சென்று விழுந்து நுரைகளாக வெடித்துச் சிதறவேண்டும்போல அவனுக்குத் தோன்றியது.

""மேலும் ஒரு நிபந்தனை இருக்கு... அதுக்கும் சம்மதிச்சாதான் நான் தொடுறதுக்கு அனுமதிப்பேன்.''

"உன் நிக்காத நிபந்தனைங்க!' அவன் மனதிற்குள் கூறிக்கொண்டான்.

""ஆட்டோ ரிக்ஷாவை ஓட்டுவதற்கு நான் தெரிஞ்சிக்கணும்.''

அவன் திகைப்படைத்துவிட்டான். தன் முப்பது வருட வாழ்க்கையில் இதுவரை எந்தவொரு பெண்ணும் ஆட்டோ ஓட்டி அவன் பார்த்ததில்லை.

""கத்துத் தருவீங்களா?''

அவன் பேசவில்லை. அவர்களுக்கு மத்தியில் ஒரு தலையணையின் இடைவெளி மட்டுமே இருந்தது. எனினும், சற்று தொடுவதற்கு முடியாதது குறித்து அவன் தன்னைத்தானே குற்றம் சுமத்திக்கொண்டான். "இந்த அளவுக்கு தைரியமில்லாதவனா போய்ட்டானே மீத்தலெப்புரையில் சஜீவன்!' அவன் பற்களை நெறித்தான்.

""என்ன... எதுவுமே பேசல?''

""கத்துத் தர்றேன்.''

அவள் எழுந்து விளக்கை அணைத்தாள்.

காலையில் சஜீவன் கண் விழித்து சாளரத்திற்கருகில் சென்று உலகத்தை நோக்கிக் கண்களைச் செலுத் தினான். வெளியே நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோ ரிக்ஷாவை ராதிகா குளிப்பாட்டிக் கொண்டிருந்தாள். அவள் பக்கெட்டில் நீரை நிறைத்து இளம்வெயில் விழுந்த ஆட்டோவின்மீது ஊற்றிக்கொண்டிருந்தாள். ஒரு பழைய வெள்ளைநிற ரவிக்கையை நீரில் முக்கிப் பிழிந்து முன்பக்கமிருந்த கண்ணாடியையும் ஹேண்டிலையும் இருக்கையையும் துடைத்தாள். பயணிகளின் செருப்புகளின் அடிப்பகுதியின் அளவுகளில் மண் உலர்ந்து கிடந்த ரப்பர் மிதியை எடுத்து, குழாய்க்கு அடியில் விழுந்துகொண்டிருந்த நீரில் காட்டி, கழுவி சுத்தம் செய்தாள். தொட்டியில் எஞ்சியிருந்த நீரை சக்கரங்களில் நீட்டி ஊற்றினாள். ஈரமான தன்னுடைய ஆட்டோவைப் பார்த்தபோது, அவன் ஒரு பழைய கனவை நினைத்துப் பார்த்தான். "செம்மீன்' திரைப்படத்தைப் பார்த்த நாளிலிருந்து அவன் மனதில் வைத்துக்கொண்டிருந்த ஒரு கனவு இருக்கிறது. வளர்ந்து திருமணம் செய்துகொண்டால், சத்யனை ஷீலா குளிப்பாட்டியதைப்போல தன் மனைவி தன்னைக் குளிப்பாட்டக்கூடிய கனவு... எனினும், பார்த்தானே... அவள் குளிப்பாட்டிக்கொண்டிருப்பது ஆட்டோ ரிக்ஷாவை... தன்னையல்ல. நெடும்ப்ரத்து பாலனும் மகளும் ஆட்டோ ரிக்ஷாவின்மீது காட்டக்கூடிய ஈடுபாட்டைக்கூட ஆட்டோவின் உரிமையாளரான தன்னிடம் காட்டுவதில்லை என்பதை அவன் நினைத்துப் பார்த்தான்.

""புதிய ஆட்டோ ரிக்ஷா... இருந்தாலும், அதன் கோலத்தைப் பார்த்தீங்களா? முழுக்க மண்ணும் சேறும்... கொஞ்சம் சுத்தம் செஞ்சு வச்சா என்ன?''

ஃபைவ் ஸ்பீட் கியர் பாக்ஸைக் கொண்ட ஒரு ஆட்டோ ரிக்ஷாதான் தங்களுக்கு சோறு போட்டுக்கொண்டிருப்பது என்ற விஷயம் அவளுக்குத் தெரியும். அவனுடைய தலையில் அப்படியொரு சிந்தனை தோன்றியதில்லை. அவனுக்கு ஆட்டோ என்பது ஒடித்தும், "ஓவர்டேக்' செய்தும் குதிப்பதற்காக இருக்கக்கூடியது. வயிற்றுப் பிழைப்பிற்காக இருப்பதல்ல. ஆட்டோவுக்குப் பின்னால், கீழே, "இடது பக்கம் முந்திச் செல்லக்கூடாது' என்று பெரிய எழுத்துகளில் அவன் எழுதி வைத்திருந்தான். அதற்குக் கீழே "ஹார்ன்... ப்ளீஸ்...' என்றும். எனினும், அவன் எப்போதும் இடது பக்கத்தில்தான் முந்திச் செல்வான். முன்னால் ஒரு வாகனத்தைப் பார்த்துவிட்டால் அதை "ஓவர் டேக்' செய்வதற்கு அவனுடைய கை துடிக்கும். ஆட்டோவின் முன்பகுதியில் பெரிய சிவந்த எழுத்துகளில் "திவ்யாமோள்' என்றும் எழுதி வைத்திருக்கிறான். நாயனார் ஸ்டாண்டிலிருக்கும் ஆட்டோ ரிக்ஷாக்களில் இதைப்போல பிள்ளைகளின் பெயர் எழுதி வைத்திருப்பதைப் பார்க்கலாம்.

""சரி... இது யார்...? இந்த திவ்யாமோள்...''

""என் மகள்.''

""என்ன?''

""நீ பதைபதைப்பு அடையாம இருடீ.'' அவளுடைய அதிர்ச்சியைப் பார்த்து அவன் கூறினன்; ""அவள் இன்னும் பிறக்கல. பிறக்கும்போது திவ்யாமோள்னு தான் நான் பேரு வைப்பேன்.''

""ஆண் பிள்ளையா இருந்தா...?''

""வேணாம். பெண் பிள்ளை போதும்.''

அப்போது அவளுடைய கண்கள் மீட்டரின் எண்களில் பதிந்தது.

""சரி... நீங்க மீட்டரை "ஆன்' செய்றது இல்லையா?''

""இல்லை.''

""இனி "ஆன்' செய்யணும். சொல்றது நான்... பயணிகளோட கையிலிருந்து ஒரு பைசா அதிகமா வாங்கக்கூடாது.''

அன்றே அவள் எஞ்ஜினை "ஸ்டார்ட்' செய்வதையும் கியர் மாற்றுவதையும் கற்றுக்கொண்டாள். வயிறு நிறைய புட்டும் கடலையும் சாப்பிட்டுவிட்டு, அதற்கு மேலே கடும் தேநீரையும் பருகிவிட்டு அவன் ஆட்டோ ஸ்டாண்டிற்குச் செல்ல ஆரம்பித்தபோது அவள் கூறினாள்: ""நான் "ஸ்டார்ட்' பண்ணி விடுறேன்.''

அவள் ஆட்டோவில் ஏறியமர்ந்து எந்தவித சிரமமுமில்லாமல் எஞ்ஜினை "ஸ்டார்ட்' செய்தாள்.

""இனி நீங்க போலாம்.''

சஜீவன் சென்றான்.

மதியத்திற்கு முன்பே அவன் ஆட்டோவில் திரும்பி பறந்து வந்தான். வாசலில் ஆட்டோவை நிறுத்திவிட்டு, சட்டைக்குள் ஊதியவாறு அவன் முன்னறைக்குள் வந்தான். நல்ல... உறுதியான நெஞ்சையும் தோள்களையும் அவன் கொண்டிருந்தான். பலமான ஒரு சரீரத்தின் உரிமையாளன்....

""வெயில்ல ஆட்டோ ஓட்டி களைச்சுப் போயிட்டேன்டீ.''

""எத்தனை "ட்ரிப்' கிடைச்சது? எங்கெல்லாம் போனீங்க?''

""பூழித்தலைவரை போனேன். ஸ்டாண்டிலிருந்து ஹஸன்மொட்டைவரை ஒரு ஆள் கிடைச்சாரு.''

""அவ்வளவுதானா?''

மதியம்வரை அவனுக்குக் கிடைத்தது... மொத்தமே இரண்டு ஓட்டங்கள்தான். பூழித்தலைவரை குறைந்தபட்ச கட்டணமான இருபது ரூபாய். ஹஸன்மொட்டைக்கு முப்பது ரூபாய். மொத்தத்தில் வருமானம் ஐம்பது ரூபாய். அவளுடைய மனைவிக்கு நம்பிக்கை வரவில்லை.

""மீதி நேரம் நீங்க என்ன செஞ்சிக்கிட்டிருந்தீங்க? தூங்கிக்கிட்டிருந்தீங்களா?''

""உனக்குத் தெரியாது... வெயில்ல'' ஆட்டோ ஓட்றதுல இருக்கற கஷ்டம்...''

மத்திக் குழம்பையும் சேர்த்து சோற்றைச் சாப்பிட்டுவிட்டு, சட்டையையும் பனியனையும் அவிழ்த்துக் கொடியில் போட்டுவிட்டு, அவன் பாயும் தலையணையுமாக திண்ணைக்கு வந்தான்.

""என்ன செய்யப் போறீங்க?''

""இங்க அருமையான காத்து! நான் கொஞ்சம் தூங்கறேன்.''

""காத்து வாங்கிக்கிட்டு தூங்கலாம்ங்கிற நினைப்பா?''

""தெற்கே போற மெயில் இரண்டரைக்குதானே?''

அவனை வெறுப்படையச் செய்யும் வகையில் அவள் பாயையும் தலையணையையும் எடுத்து, திரும்பவும் உள்ளே கொண்டு சென்று வைத்தாள்.

""ம்... சீக்கிரமா சட்டையை எடுத்துப் போட்டுக்கிட்டு ரயில்வே ஸ்டேஷனுக்குப் போங்க. மோந்தாகடவுஜ்கோ வயலளத்திற்கோ ஒரு ஓட்டம் கிடைச்சா, நிச்சயம் நூறு நூற்றைம்பது பையில விழும். நமக்கு காசுக்கு சிரமமான காலம்... ஞாபகத்தில் வச்சிக்கணும்.''

அவள் சட்டையையும் பனியனையும் எடுத்து அவனுடைய முகத்திற்கு நேராக எறிந்தாள். பள்ளிக்கூடம் செல்லத் தயங்கும் சிறுவனை அனுப்புவதைப்போல, அவனை அவள் திட்டியவாறு ரயில் நிலையத்திற்கு விரட்டிவிட்டாள்.

""ராத்திரி ஒன்பது மணிக்கு முன்ன இங்க வரக்கூடாது. ஐந்நூறு ரூபாய் இல்லாம வந்தா, இன்னைக்கு தனியா படுத்துத் தூங்க வேண்டியிருக்கும்.''

""ஐந்நூறு ரூபாயா? கடவுளே...''

ஆறு மணிக்கு முன்பே சஜீவன் திரும்பி வந்துவிட்டான். தூரத்தில் ஆட்டோவின் இரைச்சல் சத்தம் கேட்டபோதே அவளுக்குத் தெரிந்து விட்டது- அது தன் கணவன்தான் என்று. அவன் எழுபது ரூபாய் கொண்டு வந்தான். நான்கு மணி நேரத்தில் அவன் சம்பாதித்த தொகை...

""என் தப்பில்ல... இப்போ எல்லார்கிட்டயும் காரும் பைக்கும் இருக்கு. யாருக்கு வேணும் ஆட்டோ?''

திருடன்! ஆட்டோ ரிக்ஷாக்களின் தேவை அவளுக்குத் தெரியாதா? ரயில் நிலையத்தில் வண்டி வந்து நிற்கும்போது, அதிலிருந்து இறங்கும் பயணிகள் ஆட்டோவிற்காக கூட்டமாக ஓடுவதைப் பார்க்கலாம். அவள் கேள்விப்பட்டிருக்கிறாள். நாயனார் ஸ்டாண்டிலிருக்கும் ஆட்டோக்காரர்கள் தினமும் ஆயிரம் ரூபாய்வரை சம்பாதிக்கிறார்கள். ரயில் நிலையத்திலிருந்துதான் அவர்களுக்கு நீளமான ஓட்டங்கள் கிடைப்பது. அவளுக்கு வெறுப்பு உண்டானது. மாதத் தவணையை எப்படி அடைப்பது? திருமணத்திற்காக சீட்டு போட்டு வாங்கிய பணத்தை எப்படித் திருப்பி அடைப்பது? ஊரில் உள்ளவர்களிடமிருந்து நூறு, ஐந்நூறு என்று வாங்கிய சில்லரைக்கடன்கள் வேறு இருக்கின்றன. அவனுக்கு அதைப்பற்றியெல்லாம் எந்தவொரு கவலையுமில்லை.

ஒருநாள் அவள் கோபப்படும் வகையில் அவன் சாயங்கால வேளையில் மூச்சில் எரிச்சலுடன் திரும்பி வந்தான். அன்று அவள் அவனை படுக்கையறைக்கு வெளியே படுக்கும்படி செய்தாள். அவன் கெஞ்சியும் தலையைக் கதவில் மோதியும்... அவள் கதவைத் திறக்கவில்லை. நெடும்ப்ரத்து ராதிகாவிடம் விளையாடினால், அனுபவிக்க வேண்டியதுதான். இனிமேலும் அனுபவிப்பான். அவள் உரத்த குரலில் கூறினாள்.

மதிய உணவு முடித்தபிறகு இருக்கக்கூடிய தூக்கத்தை நிரந்தரமாக அவள் தடை செய்தபிறகு, அவன் ஆட்டோ ரிக்ஷாவை ஆட்கள் யாருமே இல்லாத பகவதி கோவிலுக்குப் பின்னால் நிறுத்திவிட்டு சாய்ந்து படுத்து சுகமாக உறங்கினான். இரண்டரை மணி மெயில் வண்டி வந்தபோது, மற்ற ஆட்டோ ரிக்ஷாக்காரர்கள் பயணிகளுடன் குறுக்கும் நெடுக்குமாக பாய்ந்துகொண்டிருக்க, அவன் ஆலமரத்தின் நிழலில், கோவிலிலிருந்து வந்துகொண்டிருக்கும் காற்றை ஏற்றவாறு சுகமான தூக்கத்தில் மூழ்கிக் கொண்டிருந்தான்.

uday010819
இதையும் படியுங்கள்
Subscribe