இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த

வகுத்தலும் வல்லது அரசு

-என்பது சிறந்த அரசாங்கத்துக்கு வள்ளுவர் வகுத்த இலக்கணமாகும். இதன் பொருள்...

முறையாக நிதி ஆதாரங்களைக் கணக்கிட்டு-அரசுக்கான வருவாயைப் பெருக்கி-அதை சரியாகப் பாதுகாத்து-மக்கள் பணிகளுக்காக அதைச் செலவிடுவதுதான் திறமையான நல்லாட்சிக்கு இலக்கணம் என்பதாகும்.

Advertisment

ஆனால், இதுபற்றி எல்லாம் எவ்விதத் திட்டமும் இல்லாமல்,கவலையில்லாத ஊர்சுற்றியாக, அடிக்கடி உலகம் சுற்றிக்கொண்டிருக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி.

அவர், நாட்டையும் மக்கüன் வாழ்வையும் உயர்த்த, அரசு எந்திரத்தை விட, ஆன்மீக நம்பிக்கையே போதும் என்று நினைக்கிற பொத்தல் மூளை கொண்டவராக இருக்கிறார்.

ஜவஹர்லால் நேரு, லால்பகதூர் சாஸ்திரி, இந்திராகாந்தி, வி.பி.சிங் என வலிமையும் பெருமையும் வாய்ந்த எத்தனையோ பிரதமர்கள் இந்தியாவில் இருந்திருக்கிறார்கள். பதவியின் மாண்பை அறிந்து, அதன் மூலம் மக்களுக்கான திட்டங்களை உருவாக்க அவர்கள் எல்லோரும் அவரவர் பாணியில் பாடுபட்டிருக்கிறார்கள்.

Advertisment

ஆனால்-

இந்தியாவின் 14 ஆவது பிரதமராக வந்திருக்கும் மோடியோ, மக்களைப் பற்றியும் நாட்டைப் பற்றியும் கவலைப்படாமல்,கடந்த 9 ஆண்டுகளுக்கும் மேலாக பதவி நாற்காலியை வெறுமனே தேய்த்துக் கொண்டிருக்கிறார்.அவரைப் போன்ற ஒரு மோசமான பிரதமரை இந்திய வரலாறு இதுவரை சந்தித்ததாக எந்தக் குறிப்பும் இல்லை.அவரது ஆட்சிக்காலம் இந்திய வரலாற்றின் மோசமான இருண்ட காலமாகவே அமைந்திருக்கிறது.

தன் கையில் கொடுக்கப்பட்டிருக்கும் அதிகாரத்தால், இந்திய நாட்டின் தலையெழுத் தையே மாற்றி அமைக்க முடியும் என்று தெரிந்தும் தெரியாதவராக மோடி இருக்கிறார்.

அவருக்குத் தன்னிடம் இருக்கும் அதிகாரத்தின் மதிப்பு தெரியவில்லை. அதனால்தான் தன் அதிகாரத்தை மக்களுக்காக வும் நாட்டுக்காகவும் பயன்படுத்துவதற்கு பதிலாக தனது விளம்பரத் துக்காகவும் மக்களை ஏமாற்றுவதற்காகவும் பயன்படுத்தி வருகிறார்.

பலம்வாய்ந்த அதிகாரம் மோடியின் கையில் இருக்கிறது. அரசு எந்திரம் அவர் கையில் விரயமாய் உருண்டுகொண்டே இருக்கிறது. அவர் நீட்டிய பணிகளைச் செய்ய அரசு ஊழியர்கள் தயார் நிலையில் காத்திருக்கிறார்கள். அவர் சுட்டிக்காட்டும் திசைகüல் பாய்ந்து வளம் பெருக்க, அரசின் நிதியும் தயாராகத்தான் இருக்கிறது.

modi

இவற்றை வைத்து,இந்திய மக்கüன் நல்வாழ்வை உயர்த்த வேண்டிய மோடியோ, மக்களை ஏமாற்றி வாக்குகளைப் பெற, அரசாங் கத்தின் ஆற்றல் தேவையில்லை; ஆன்மீகமே போதும் என்று நினைக்கிறார்.

அதனால்தான் கடந்த 27 ஆம் தேதி திருப்பதிக்குச் சென்ற அவர், அங்கு வேதமந்திரங்கள் முழங்க சிறப்பு தரிசனத்தை முடித்த கையோடு ...தனது டிவிட்டரில்...

"140 கோடி இந்தியர்கüன் ஆரோக்கி யத்திற்காகவும், நலத்திற்காகவும் வளமான வாழ்வுக்காகவும் பிரார்த்தனை செய்தேன்'' என்று புல்லரிப்போடு பதிவிட்டிருக்கிறார்.

மக்கüன் நலன் காக்கும் பொறுப்பும்,

அதற்கான அதிகாரமும் தன்னிடம் இருக்கும்போது-அதையெல்லாம் ஓரம் கட்டிவிட்டு, மக்கüன் நல்வாழ்விற்கான கோரிக்கையை திருப்பதி ஏழுமலையானிடம் பிரார்த்தனை மூலம் ஒப்படைத்துவிட்டேன் என்கிறார். இதன் மூலம், இதோடு என் கடமை முடிந்துவிட்டது. இனி எல்லாவற்றையும் ஏழுமலையான் பார்த்துக்கொள்வார் என்று சொல்லாமல் சொல்லி இருக்கிறார்.

ஏழுமலையான் இந்த நாட்டையும் மக்களையும் பார்த்துக்கொள்வார் என்றால் இவருக்கு எதற்கு பிரதமர் பதவி? இவருக்குக் கீழ் எதற்கு இத்தனை ஒன்றிய அமைச்சர்கள்? அதிகாரிகள்? அரசுத் துறைகள்? மக்களுக்காக ஏழுமலையானிடம் பிரார்த்தனை என்பதெல்லாம் மோடியின் ஏமாற்று வித்தை.

அடுத்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் வர இருப்பதால், தன்னை பெரும் பக்தராகக் காட்டிகொள்கிறார் மோடி. மக்களுக்காக பிரார்த்தனைகளைச் செய்ததாக நடிக்கிறார். இப்படிச் செய்தால் ஆன்மீக நம்பிக்கை கொண்டவர்கüன் ஓட்டுக்களை எüதாகப் பெறமுடியும் என்று நம்புகிறார்.இதுதான் மோடி வித்தை.

தேர்தல் வெற்றிக்காக அவர் எதை வேண்டுமானாலும் செய்வார்! என்ன மாதிரி வேண்டுமானாலும் நடிப்பார்! எப்படிப்பட்ட வாக்குறுதிகளையும் அள்üக் கொடுப்பார்!

2014 நாடாளுமன்றத் தேர்தலைச் சந்தித்தபோது, தான் வெற்றி பெற்று பிரதமரானால், இந்திய மக்கள் ஒவ்வொருவர் வங்கிக்கணக்கிலும் தலா 15 லட்ச ரூபாய் வீதம் வரவு வைப்பதாக பொய்யான வாக்குறுதியைக் கொடுத்துவிட்டு, மக்கüன் நெற்றியில் நாமம் போட்ட மகா பித்தலாட்டக்காரர்தானே அவர்? இதேபோல், அடுத்து 2019-ல் நடந்த மக்களவைத் தேர்தல் நேரத்திலும், மக்கüன் வாக்குகளைப் பெற, திடீரென பக்திப் பழமாக மாறினார் மோடி. தேர்தல் நடக்கும் போதே 2019 மே மாதத்தில், உத்தரகாண்ட் மாநிலம் கேதார்நாத்துக்கு, அதிகாரிகள் புடைசூழ ஆன்மீக யாத்திரை சென்றவர், அங்கே பிரசித்தி பெற்ற சிவன் கோயிலில் வழிபாடு செய்துவிட்டு, இமய மலையில் நவீன வசதிகளுடன் உருவாக்கப்பட்ட செட்டப் பனிக்குகையில் தியானம் செய்வது போல் அமர்ந்தார். விதவிதமாக போட்டோவுக்கும் போஸ் கொடுத்து, ஆன்மீக நம்பிக்கை கொண்ட அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். இதனால், வடநாட்டு மக்கள், அந்த முறையும் மோடியின் பக்தி நாடகத்தில் ஏமாந்து அவருக்கு வாக்குகளை அள்üக்கொடுத்து, அவரை இரண்டாவது முறையாகவும் பிரதமாராக ஆக்கினார்கள். பதவி மகுடம் வந்ததும், அந்த குகை தியானமெல்லாம் அவருக்கு மறந்துபோய்விட்டது.

இப்படிதான் அவருக்கு தேர்தல் வரும் வரும்போதெல்லாம் அவருக்குப் பக்தி பெருக்கெடுக்கும்.

அப்படிதான் இப்போது அவருக்கு திருப்பதி ஏழுமலையானிடம் பக்தி வந்திருக்கிறது. அவரது பக்திமயமான அத்தனை நடவடிக்கைகளும், மக்களை வயப்படுத்தும் நோக்கத்திலேயே செயற்கையாக அரங்கேற்றப்பட்டு வருகின்றன. இந்த மோசடியான பக்தி மூலம் அவர், பக்தர்களை மட்டுமல்ல; அந்த கடவுளையும் ஏமாற்றப் பார்க்கிறார் என்பதை, மக்கள் உணர ஆரம்பித்துவிட்டார்கள்.

ff

*

ஓட்டுக்காக எதையும் செய்யும் மனோபாவம் கொண்டவர் மோடி என்பதற்கு எத்தனையோ உதாரணங்களைச் சொல்லலாம்.

அண்மையில் உலகப் கோப்பை கிரிக்கெட் போட்டி நடந்தது. 2024 நாடாளுமன்றத் தேர்தலில் ஒட்டுமொத்த இளைஞர்கüன் கவனத்தைத் தன்பக்கம் திருப்பவேண்டும் என்றால், இந்த கிரிக்கெட் போட்டி மைதானத்துக்கு நேரடியாகப் போகவேண்டும் என்று முடிவெடுத்தார். இந்திய டீம் உலகக் கோப்பையை வென்றால், அந்தக் கோப்பையை ஊர்வலமாக எடுத்துச் சென்று, அதை ராமர் கோயிலில் வைத்து, அனைவரையும் அசத்த வேண்டும் என்பதுதான் அவர் போட்டு வைத்திருந்த திட்டம்.

இந்த வருடம் உலககக் கோப்பை கிரிக்கெட் போட்டி குஜராத் மாநில அகமதாபாத்தில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியமான அந்த மைதானத் திற்கு, திட்டமிட்டே சில ஆண்டுகளுக்கு முன் மோடியின் பெயர் சூட்டப்பட்டதையும் நாம் மறந்துவிட முடியாது.

நவம்பர் 19 ஆம் தேதி நடந்த இறுதிப்போட்டிக்கு, திட்டமிட்டபடியே மோடி சென்றார். அது ஆஸ்திரேலிய அணியுடன் இந்திய அணி மோதும் போட்டி. மோடி அங்கு செல்வது இந்திய அணிக்கு கூடுதல் தெம்பைத் தரும் என்று அவரது பரிவாரங்கள் அப்போது அலப்பறை செய்தன.

அகமதாபாத்துக்குக் கிளம்பு போதே ‘140 கோடி இந்திய மக்களும் இந்திய அணிக்கு ஆதரவாக உள்ளார்கள். இந்தப் போட்டியில் மிகவும் நன்றாக ஆடி விளையாட்டை மேம்படுத்துங்கள். இந்திய அணிக்கு எனது வாழ்த்துக்கள்’ என்று வாழ்த்துச் செய்தியைப் பதிவிட்டு விட்டுதான் சென்றார்.

ஆனால்- அந்தப் போட்டியில், மோடி போட்டு வைத்திருந்த கணக்கையும் மீறி, இந்தியாவை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி, 6 ஆவது முறையாக ஆஸ்திரேலிய அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.

பார்வையாளர் கேலரியில் அமர்ந்து விளையாட்டைப் பார்த்துக்கொண்டிருந்த மோடி திகைத்துப்போனார். வெற்றிபெற்ற ஆஸ்திரேலிய வீரர்களுக்கு, ஒரு நாட்டின் பிரதமர் என்ற முறையில், பெருந்தன்மையோடு வாழ்த்துகளைத் தெரிவிக்க வேண்டிய அவர், கொஞ்சம் கூட நாகரிகமில்லாமல் அங்கிருந்து இறுகிய முகத்தோடு கிளம்பிவிட்டார். இதிலேயே தன் இதயம் எவ்வளவு விசாலமானது என்பதை வெüச்சம் போட்டுக் காட்டிவிட்டார் மோடி.

*

மோடி மதப்பற்று மிக்க இந்துக்களை வைத்து, தொடர்ந்து அதிகாரத்தை அனுபவிக்கவேண்டும் என்று ஆசைப்படுகிறார். அதனால்தான் அயோத்தியில் ராமர் கோயிலைக் கட்டுவதில் அவர் தீவிர ஆர்வம் காட்டினார். இதே நோக்கத்தில்தான் காஷ்மீருக்கு அüத்து வந்த சலுகைகளை ரத்து செய்தல், குடியுரிமைத் திருத்தச் சட்டம் நிறைவேற்றம், பொது சிவில் சட்டத்தைக் கொண்டுவர முயலுதல் என்றெல்லாம் சிறுபான்மை மக்களுக்கு எதிரான திட்டங்களையே, தனது அரசு மூலம் அவர் வகுத்துக்கொண்டே இருக்கிறார்.

இப்படி சகல விதத்திலும் அவர் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் சுயநலமும் சறுக்கலும் கொண்ட அடிகளாகவே இருக்கின்றன. எனவே மோடி இப்போது உலக அரங்கிலும் மோசமான பிரதமர் என்கிற பெயரைப் பெற்று வருகிறார்.

அவர் போகிற நாடுகüல் எல்லாம் அவருக்கு எதிரான வெறுப்புக் கொடிகள் பறக்கவிடப்படுகின்றன. தாறுமாறாக ஏறிய விலைவாசி, தனியார் மயக்கோட்பாடு, பணமதிப்பிழப்பு நடவடிக்கை, விவசாயிகளைக் கோவணத்தோடு உருளவிட்டு, ஜக்கிகளோடு போட்ட ஆட்டம், ஏழைகளை மறந்து அதானிகள் மீது காட்டும் அக்கறை என்பது உள்üட்ட மோசமான நடவடிக்கைகளால், சொந்த நாட்டு மக்கüன் வெறுப்பையும் ஏகபோகமாக மோடி சம்பாதித்திருக்கிறார்.

இதைத் தொடர்ந்து அவரை அம்பலப்படுத்தும் விமர்சனங்களும் மீம்சுகளும் அடிக்கடி வைரலாகி வருகின்றன. அண்மையில் அப்படி வைரலான ஒரு மீம்ஸைப் பார்க்க நேர்ந்தது.

அதன் சில வரிகளை மட்டும் இங்கே தருகிறேன். சற்றே நாகரிகப்படுத்தி...

மேக் இன் இண்டியான்னார்; புட்டுக்கிச்சு..

டிஜிட்டல் இந்தியான்னார் ; நட்டுக்கிச்சு..

ஸ்மார்ட் சிட்டி திட்டம்ன்னார்; நாசமாப் போச்சு.

பெண்கüன் பாதுகாப்புனார்; மோசமாச்சு.

ஸ்கில்லான இந்தியான்னார்; பலவீனமாச்சு.

15 லட்சம் தர்றேன்னார்; ஏமாத்தியாச்சு..

பண மதிப்பிழப்புன்னார்; படுகுழியில விழுந்தாச்சு.

கங்கையில கப்பல் விட்டார்; மூழ்கிப் போச்சு..

புதிதான பாலம்ன்னார்; அது இடிஞ்சி 100உயிர் போச்சு..

ஜெய் ஜெய் ஸ்ரீராம்ன்னார்; சீரழிஞ்சாச்சு.

கடைசியா, கிரிக்கெட்டுக்கு வந்தார் சோலியே முடிஞ்சு போச்சு யாரு சாமி இவரு?

எங்கிருந்து வந்திருக்காரு?

-சங்கடம் நீங்காமல்,

நக்கீரன்கோபால்