சிலந்திகள் கூறியவை ஒ.வி. விஜயன் தமிழில் : சுரா

/idhalgal/eniya-utayam/what-spiders-said-ov-vijayan-tamil-sura

ரு இரவு வேளையில் வினோதமான குரல்கள் போதவிரதனை எழச் செய்தன. மேற்கூரையில் ஒட்டிக்கொண்டிருந்த இரண்டு சிலந்திகள் பேசிக் கொண்டிருந்தன.

கிழவனான கருத்த சிலந்தி தவிட்டு நிறத்திலிருந்த சிறிய சிலந்தியிடம் கூறியது: "நான் இப்போது கூறுவதற்கு சரியான சான்றுகள் இல்லை... மகனே. என் சொந்த ஒரு அனுபவம் மட்டுமே அது, மனிதன் இருக்கிறான்.''

சிறிய சிலந்தி சிரித்தது. "கற்பனைகளைப் பார்த்து பிரமிப்படைய நான் தயாராக இல்லை தந்தையே! இந்த வலையைப் பாருங்கள்.

ரு இரவு வேளையில் வினோதமான குரல்கள் போதவிரதனை எழச் செய்தன. மேற்கூரையில் ஒட்டிக்கொண்டிருந்த இரண்டு சிலந்திகள் பேசிக் கொண்டிருந்தன.

கிழவனான கருத்த சிலந்தி தவிட்டு நிறத்திலிருந்த சிறிய சிலந்தியிடம் கூறியது: "நான் இப்போது கூறுவதற்கு சரியான சான்றுகள் இல்லை... மகனே. என் சொந்த ஒரு அனுபவம் மட்டுமே அது, மனிதன் இருக்கிறான்.''

சிறிய சிலந்தி சிரித்தது. "கற்பனைகளைப் பார்த்து பிரமிப்படைய நான் தயாராக இல்லை தந்தையே! இந்த வலையைப் பாருங்கள். அது கற்பனையல்ல. வெளிப்படையான உண்மை. அதன் அமைப்பு வரலாற்று சட்டத்தின்படி உள்ளது."

spider

"இல்லையென்று நான் கூறவில்லை. ஆனால், வலைக்கு வெளியே ஒரு மிகப்பெரிய பிரபஞ்சம் இருக்கிறது.''

சிறிய சிலந்தி அறையின் சுவர்களின்மீது கண்களைப் பதித்தது. பிரபஞ்சத்தின் எல்லைகள்...

சிறிய சிலந்தி கூறியது: "பிரபஞ்சத்தின் எல்லைகளை சிலந்தியின் அறிவியல் ஆராய்ச்சி கண்டடைந்த செயல் நடந்திருக்கிறது.''

"பிரபஞ்சம் இந்த எல்லைகளைவிட பெரியது மகனே.

இந்தச் சுவர்களுக்கு அப்பால் இதேபோல சுவர்களைக் கொண்ட வேறு மண்டலங்கள் இருக்கின்றன. ஒளி மயமான... நீளமான தெருக்கள் இருக்கின்றன. அவற்றின் வழியாக மனிதன் இயந்திர வாகனங்களில் பயணிக்கி றான்.''

"இதை வெளிப்படையாகக் காட்டமுடியுமா?''

"நான் தியானத்தில் கண்டதாயிற்றே! எப்படி வெளிப்படையாகக் காட்டமுடியும்?''

"தந்தையே... இது மனிதனின் படைப்பென்று நீங்கள் கூறுவீர்களா?''

"நகரசபையின்...''

"நகரசபையா? அது என்ன?''

கருத்த சிலந்தி சிறிது யோசித்துவிட்டுக் கூறியது: "பிரபஞ்ச மனம்...''

சிறிய சிலந்தி கேட்டது: "அப்படியென்றால்... மனிதன்... என்ன அது?''

"பிரபஞ்ச மனதின் உருவாக்கம்.''

"மனிதன் ஒருவனா? ஒன்றுக்கும் மேற்பட்டவனா?''

"ஒருவனாக இருக்கும் மனிதன்மீது நம்பிக்கை வைக்க நான் விரும்புகிறேன்.''

சிறிய சிலந்தி மீண்டும் சிரித்தது. "தந்தையே... உங்களின் மனிதன் எங்கிருக்கிறான்?''

"கீழே... காவி வண்ணம் பூசப்பட்ட வானத்தில்... மரக்கட்டிலில்...''

"அது இயற்கையல்லவா?'' "இல்லை... மனிதன்...''

"தந்தையே... உங்களின் மனிதனுக்குப் பெயர் இருக்கிறதா?''

"இருக்கிறது... போதவிரதன்.''

இப்போது சிறிய சிலந்தி கட்டுப்பாடற்று சிரிக்க ஆரம்பித்தது. அது கூறியது: "போதவிரதன் என்ற ஒன்று இல்லவே இல்லை. தந்தையே, உங்களுக்குப் பைத்தியம் பிடித்துவிட்டது.''

கேட்டுக்கொண்டிருந்த போதவிரதனுக்கு முதன் முறையாக உரையாடலின் ஆழம் புரிந்தது. சிறிய சிலந்தி கூறுவதிலும் அர்த்தம் இருப்பதாகத் தோன்றியது.

அவனுக்குள் ஒரு கேள்வி எழுந்தது. தெய்வமே... போதவிரதன் என்றொருவன் இருக்கிறானா?

uday010323
இதையும் படியுங்கள்
Subscribe