இதனால் சகலமானவர்களுக்கும் சொல்வது என்னவென்றால்-
"நாளொன்றுக்கு, நபர் ஒருவர், இரண்டு லிட்டர் தண்ணீருக்கு மேல் பயன்படுத்தினால் அபராதம்'
"வாரம் ஒரு முறை, போர் தண்ணீர் எடுக்க, வரி கட்ட வேண்டும்.'
2030 ம்- ஆண்டு வாக்கில், இங்கே நிலைமை இப்படி அறிவிப்பு வரும் வகையில்தான் இருக்கக் கூடும், என்று "ஆசியன் வேர்ல்ட் நியூஸ்' நிறுவனம், இங்கே வர இருக்கும் தண்ணீர் பஞ்சம் பற்றி அபாய அறிக்கையை கொஞ்ச காலத்திற்கு முன்பே வெளியிட்டுள்ளது.
ஏனெனில் நீரியல் நிலவரம், கலவரத்தை ஏற்படுத்தும் அளவுக்குப் போய்க்கொண்டிருக்கிறது.
தண்ணீரின் மதிப்பை உலகம் உணரவேண்டும் என்பதற்காகத்தான், மார்ச் -22 ஐ, உலக தண்ணீர் தினமாக ஐ.நா. அறிவித்தது. அந்த தண்ணீர் தினத் திற்கு பதில் நாம் கண்ணீர் தினமாக அதை அனுஷ்டிக் கும் காலமும் வந்துகொண்டிருக்கிறது.
இந்தியாவில் மழை குறைந்த மாநிலம் என்றால், பாலைவன பிரதேசமான ராஜஸ்தானுக்கு அடுத்து, நம் தமிழகமாகத்தான் இருக்கிறது. தொன்மை நாகரிகத்தின் செழிப்பான தொட்டில் என்று அழைக்கப்பட்ட நம் தமிழ்நாடும், மக்கள் அலட்சிய மாக இருந்தால் இப்படிப்பட்ட நிலையை சந்திக்கக் கூடும். ஆண்டுக்கு சுமார் 900 மில்லி மீட்டர் மû ழயளவு கொண்ட தமிழகத்தில், அண்மைக்காலமாக வடகிழக்கு பருவமழை 168.4 மில்லி மீட்டர் அளவிற்கே பொழிந்துள்ளது. இது 120 வருடங்களில் இல்லாத மிக குறைந்த மழை அளவாகும். இதனால் 1 கோடியே 40 லட்சம் ஏக்கர் அளவு கொண்ட தமிழகத்தின் மேற்பரப்பு நீர் வளம் மற்றும் நிலத்தடி நீர் வளம் சுருங்கி, நீர் அருகி வறட்சி நம் தெருமுனை வரை வந்து விட்டது.
"அறுகுளத்து உகுத்தும் அகல்வயல் பொழிந்தும்
உறுமிடத்து உதவாது உவர் நிலம் ஊட்டியும்
வரையா மரபின் மாரி'
-என்று மாமழையின் மாண்பை மனதில் தேக்கி, வான்மழையின் நீரை தடாகங்களில் தேக்கி, குடித்து, குளித்து, விவசாயம் செய்தவர்கள் பைந்தமிழர் கள். உலக நாகரிகத்தின்
இதனால் சகலமானவர்களுக்கும் சொல்வது என்னவென்றால்-
"நாளொன்றுக்கு, நபர் ஒருவர், இரண்டு லிட்டர் தண்ணீருக்கு மேல் பயன்படுத்தினால் அபராதம்'
"வாரம் ஒரு முறை, போர் தண்ணீர் எடுக்க, வரி கட்ட வேண்டும்.'
2030 ம்- ஆண்டு வாக்கில், இங்கே நிலைமை இப்படி அறிவிப்பு வரும் வகையில்தான் இருக்கக் கூடும், என்று "ஆசியன் வேர்ல்ட் நியூஸ்' நிறுவனம், இங்கே வர இருக்கும் தண்ணீர் பஞ்சம் பற்றி அபாய அறிக்கையை கொஞ்ச காலத்திற்கு முன்பே வெளியிட்டுள்ளது.
ஏனெனில் நீரியல் நிலவரம், கலவரத்தை ஏற்படுத்தும் அளவுக்குப் போய்க்கொண்டிருக்கிறது.
தண்ணீரின் மதிப்பை உலகம் உணரவேண்டும் என்பதற்காகத்தான், மார்ச் -22 ஐ, உலக தண்ணீர் தினமாக ஐ.நா. அறிவித்தது. அந்த தண்ணீர் தினத் திற்கு பதில் நாம் கண்ணீர் தினமாக அதை அனுஷ்டிக் கும் காலமும் வந்துகொண்டிருக்கிறது.
இந்தியாவில் மழை குறைந்த மாநிலம் என்றால், பாலைவன பிரதேசமான ராஜஸ்தானுக்கு அடுத்து, நம் தமிழகமாகத்தான் இருக்கிறது. தொன்மை நாகரிகத்தின் செழிப்பான தொட்டில் என்று அழைக்கப்பட்ட நம் தமிழ்நாடும், மக்கள் அலட்சிய மாக இருந்தால் இப்படிப்பட்ட நிலையை சந்திக்கக் கூடும். ஆண்டுக்கு சுமார் 900 மில்லி மீட்டர் மû ழயளவு கொண்ட தமிழகத்தில், அண்மைக்காலமாக வடகிழக்கு பருவமழை 168.4 மில்லி மீட்டர் அளவிற்கே பொழிந்துள்ளது. இது 120 வருடங்களில் இல்லாத மிக குறைந்த மழை அளவாகும். இதனால் 1 கோடியே 40 லட்சம் ஏக்கர் அளவு கொண்ட தமிழகத்தின் மேற்பரப்பு நீர் வளம் மற்றும் நிலத்தடி நீர் வளம் சுருங்கி, நீர் அருகி வறட்சி நம் தெருமுனை வரை வந்து விட்டது.
"அறுகுளத்து உகுத்தும் அகல்வயல் பொழிந்தும்
உறுமிடத்து உதவாது உவர் நிலம் ஊட்டியும்
வரையா மரபின் மாரி'
-என்று மாமழையின் மாண்பை மனதில் தேக்கி, வான்மழையின் நீரை தடாகங்களில் தேக்கி, குடித்து, குளித்து, விவசாயம் செய்தவர்கள் பைந்தமிழர் கள். உலக நாகரிகத்தின் உச்சத்தில் இருக்கும், ஐரோப்பாவிற்கு முன்பே பாசனம் செய்தவர்கள் நாம். 11 நாடுகளில், 6650 கிலோ மீட்டர் ஓடும் நைல் நதியின் அணைகளுக்கு நிகரானது, பழமையானது கி. பி -2 ம் நூற்றாண்டில் சோழப் பேரரசன் கரிகாலன் கட்டிய கல்லணை.
நீர் மேலாண்மை, பயிர் வேளாண்மை பற்றி அறிவாற்றல் கொண்ட மரபில் வந்த நாம், மாறிப் போன வானிலை, மறைந்துபோன வான்மழை குறித்தும் அக்கறை கொள்ள வேண்டும்.
இல்லையென்றால்-
மூன்றாம் உலக போரின் காரணியாய் சொல்லப் பட்டு வரும் தண்ணீர், நான்காம் தலைமுறை தமிழ் மக்களுக்கு தங்கத்தை விட விலை மதிப்புள்ள பொருளாகத் தண்ணீர் மாறக் கூடும்.
தமிழ்மண்ணின் நீரும், செங்குளத்து சேறும் நாளை அருங்காட்சியகத்தில், நினைவுச் சின்னமாக ஆக கூடும்.
தமிழகத்தில் இன்னும் பத்து ஆண்டுகளில் , தமிழகத்தின் தேவைக்கு மட்டும் 2000 கன கிலோ மீட்டர் தண்ணீர் அவசியம். அதாவது 213 காவிரி ஆற்றுக்கு சமம். ஒன்றுக்கே வழியில்லை, இதில் எங்கிருந்து 213?
ஆனால், இன்றைய தமிழகத்தில் இது எப்படி சாத்தியமாகும் ???
லாரிகள் ஏறி, ஏறி, மணலற்றுப் போன சடலமாக கிழிந்து கிடக்கின்றன நீரற்று போன ஆறுகள்.
குளங்கள் புதைக்கப் பட்ட கல்லறை மீது, கல்லூரிகளைக் கட்டி, அதில் தண்ணீர் மேலாண்மை பற்றிப் பாடம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். சொச்ச இடங்களையும் மண் கொண்டு நிரப்பி, 30 அடியில் போர் தண்ணீர் என்று, விளம்பரம் செய்து விற்றுக் கொண்டிருக்கிறார்கள் ரியல் எஸ்டேட்காரர்கள்.
பாவம், ஆற்று நீர் பெருக்கெடுத்து ஓடினால், இப்போதே அபூர்வமாக பார்க்கிறான் 4ஏ இளைஞன். நீர் நிலைகளை தூர் வருவது சர்வதேச கோக், பெப்சி நிறுவனங்களுக்கு இழைக்கப்படும் அநீதி என்பதால், எதற்கு வீண் வம்பு என்று கல்லாக இருக்கிறார்கள் டெல்லிக்காரர்கள்.
தன் கழுத்தில் கிடப்பது தங்க சங்கிலிதான் என்பதை அறியாமல் விளையாடும் குழந்தையைப் போல, மழை நீர் சேமிப்பின் மதிப்பு அறியாமல் வாழ்கின்றனர் மக்கள். ஏதோ கொஞ்ச நஞ்ச மழை நீர் சேகரிப்பையும் கூட பஞ்சாயத்து சிமென்ட் சாலைகள் உறிஞ்சு விடுகிறது.
மழைக்கு ஆதாரமான மலைகளையும், மரங் களையும் அழிப்பவரை மாலை போட்டுப் பாராட்ட, பிரதமர் தனி விமானத்தில் தமிழகம் வருகிறார்.
பத்திரிகையாளர் சந்திப்பில் வயர் பிய்யும் அளவுக்கு மற்ற கட்சிகள் பற்றி பேசும் மத்திய அமைச்சர்கள், ஒரு உப்புக்கு கூட உப்பு நீரை குடிநீராக்கும் திட்டம் பற்றிப் பேசுவதில்லை.
தன் கட்சி உறுபினர்கள் தாவாமல் இருக்க அணை கட்டவே நேரம் போதவில்லை. இதில் எங்கிருந்து நீர் அணை கட்ட? இப்படி இருக்கிறது ஒன்றிய அரசின் நிலை..
மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களில், நீர் நிலைகளின் நிலையோ அந்தோ பரிதாபம்.
தென்னிந்தியாவின் மான்செஸ்டர் கோவையின் அருந்தாகம் தீர்த்த சிறுவாணி ஆற்றின் அச்சாணி முறிந்து கிடக்கிறது. இந்தியாவின் இரண்டாவது சுவை மிக்க தண்ணீர் கொண்ட சிறுவாணியின் அணை நீர் 48 அடி உயரத்திலிருந்து டெத் ஸ்டோரேஜ் எனப்படும் 1.5 அடி துயரத்தில் நிற்கிறது.
கூடம்குளம் அணு உலை போராட்டத்தின் ஈரம் காயும் முன் , நெல்லை வந்தது அடுத்த தொல்லை. ஆண்டுக்கு சராசரியாக 4000 மி.மீட்டர் மழை பொழியும் பொதிகை மலையில் பிறந்து, 125 கிலோ மீட்டர் பயணத்தில் சிறு நதிகளை வாரி அணைத்து அள்ளி சென்று வங்க கடலில் சங்கமிக்கும் தாமிரபரணி ஒரு வற்றாத ஜீவ நதி. தமிழ்நாட்டிலேயே பிறந்து, தமிழ்நாட்டு கடலிலேயே கலக்கும் சிறப்பு மிக்க நதியின் உயிர்நீர் குடிக்க பெப்சியும், கோக்கும் வந்தது. ஏற்கனவே சிற்றோடை போல ஓடிக்கொண்டிருந்த தாமிரபரணி நீரை, பல்தேசிய நிறுவனங்கள் உறிஞ்சிக் கொள்ள, நீதித்துறையும் அனுமதிக், சுட்ட புண்ணில் சூட்டு கோல் பாய்ச்சியது போல் ஆயிற்று.
நொடிக்கு 2 லட்சம் கனமீட்டர் நீர் பாய்ந்த காவிரி ஆற்றை தன் மேல் கொண்டிருந்த திருச்சியில் மூன்றில் ஒரு பங்கு நீர் வளத்தை, கொடும் வறட்சி தின்று விட, ஒன்னரை லட்சம் ஏக்கர் உணவு பயிரை, வெறும் 50 ஏக்கரில் மட்டுமே வேளாண்மை செய்த அவலம்.
“மாடு கட்டி போரடித்தால் மாளாது செந்நெல் என்று
யானை கட்டி போரடித்த அழகான தென்மதுரை”
-என இலக்கியங்களில் போற்றப்பட்ட செழிப்பான மதுரை மண்ணின் விவசாயிகளோ, ஆட்சியாளர் களிடம் கதறுகிறார்கள், எங்கள் மாவட்டத்தையும் வறட்சி மாவட்டமாக அறிவிப்பு செய்யுங்கள் என்று.
5700 கோடி செலவில், மேகதூதுவில் அணை கட்டி காவிரி நீரை கர்நாடக எல்லை தாண்டாமல் , சேமிக்கத் திட்டமிட்டு, ஒப்புதலும் பெற்றுவிட்டது கர்நாடக அரசு. காவிரி நீரும் கானல் நீராகி, கண்ணீராகி விடும்போலிருக்கிறது.
தண்ணீர்ச் சண்டையில், தமிழர்களின் மண்டை உடைந்த பிறகும் கூட, மத்திய அரசு சிறு துளியை கூட நகர்த்தவில்லை. இருந்த ஒரு சொட்டு நம்பிக்கையும் காவிரி ஆற்றைப் போல் காய்ந்து விட்டது.
சென்னையில் 1967 ல் - தமிழ்நாடு என்ற தனிப்பெயர் தாங்கி, அரை நூற்றாண்டை அடைந்த விட்ட நேரத்தில் கூட , தலைநகரை சூழ்ந்து நிற்கும், நீர் சோகம் இன்னும் தீர்ந்த பாடில்லை.
தீர்வு என்ன ?
இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த
வகுத்தலும் வல்லது அரசு
-என்னும் குறளுக்கு ஏற்ப தடையில்லாமல் அனைவருக்கும் நல்ல குடிநீர் தரவேண்டியதும், அதை சேமித்து பாதுகாப்பதும் அரசின் கடமை என்றாலும் அதற்கு உதவிகரமாக இருக்கவேண்டியது மக்களின் பொறுப்பு. எனவே ,நீர் சத்து குறைத்து போய் ஊசலாடிக் கொண்டிருக்கும் தமிழகத்திற்கு கீழ்கண்ட உயர் சிகிச்சைகள் அவசியம்.
விளைநிலங்கள் மற்றும் காடுகள் அழித்தல், தண்ணீர் மற்றும் மணல் திருட்டு, செய்வோரை சிறையில் அடைக்க கடும் சட்டம் செய்வோம்.
சாலையோரம், தரிசு நிலங்கள், மலைச் சரிவுகள் ஆகிய இடங்களில் மரங்கள் நடுதல், நீர் நிலைகள், அணை கட்டுகள் தூர் வாறுதல், மழை நீர் சேமிப்பு, 20 மைக்ரானுக்கும் குறைவான பாலித்தீன்கள் ஒழிப்பு ஆகியனவற்றை அரசியலற்ற மக்கள் இயக்கமாக்கு வோம்.
சொற்ப தண்ணீரில் உற்பத்தி ஆகும் பாரம்பரிய தானியம் செய்ய மானியம் கேட்போம். நீர் குடிக்கும் புது ரக பயிர்கள், செயற்கை உரங்கள் அழித்தொழிப் போம்.
சொட்டு நீர் பாசனம், நீர்தெளிப்பு பாசனம், வாய்கள் பாசனத்தை விட சிக்கனமானது என்று அறிவொளி ஏற்றி, நீர் புரட்சி செய்வோம்.
நிலத்தடி நீர் குடிக்கும் கருவேல மரம் ஒழிப்போம். காற்றின் ஈரம் குடிக்கும் யுகலிப்டஸ் மரம் பயிர் செய்வதை நிறுத்துவோம்.
கனடாவில், சாஸ்ஜெட்சிவான், மானிட்டாபா, அல்பர்ட்டா ஆகிய மாநிலங்களுக்கிடையில் சாஸ்கட்சி வான் ஆற்று நீர் பிரச்சனை தீர்க்கப்பட்டுள்ளது. நியூ சவுத் வேல்ஸ், தெற்கு ஆஸ்திரேலியா, மற்றும் விக்டோரியா மாநிலங்களில் முர்ரே நதி தொடர்பான பிரச்சனையை அந்த நாடு வெற்றிகரமாகத் தீர்த்துள் ளது. இதேபோல், நம் அண்டை மாநில நதி பிரச்சனை தீர இந்திய ஆறுகள் தேசியமயமாக்க ஆவண செய்வோம்.
மழை, காடு , மரம், மணல், நீர், பற்றி கட்டாய பட திட்டம் மழலையர் கல்வியில் இருந்தே கற்பிப்போம்.
காவிரி ஆறு, அக்னியாறு, தெற்கு வெள்ளாறு, மணிமுத்தாறு, வைகை ஆறு, குண்டாறு, தாமிரபரணி ஆறு, கருமேனியாறு, நம்பியாறு, பெண்ணையாறு, செய்யாறு ஆகிய தமிழக ஆறுகள் முதலில் இணைக்க போராடுவோம்.
சுமார் 2 கோடி மக்கள் வாழ்ந்து 4 கோடி மக்கள் புழங்கும், பெரு நகரம் மும்பையில் பல அடுக்கு மாடி குடியிருப்புகளில் சுத்தமான குடி நீர் தனி குழாயிலும் , நிலத்தடி நீர் குளிப்பதற்கும், துவைப்பதற்கு தனி குழாயிலும், அசுத்தமான நீர் சுத்திகரிக்கப்பட்டு கழிவறைக்கும் பயன்படுத்தபடுகிறது.
நீரை சிக்கனமாக்கும் இது போன்ற அமைப்புகள், தமிழக மாநகர்களிலும், பிறகு அணைத்து ஊராட்சி களிலும் கொண்டு வர ஆவன செய்வோம்.
செவ்வாயில் நீர் ஆய்வை விட, நம் கண்மாயில் நீர் பாய்வது முக்கியம் என்று இனியாவது, நம் இளைய தலை முறைகளுக்கு உரக்கச் சொல்வோம். ஏனெனில் இப்போது தண்ணீரும் கூட தாகத்தில்தான் இருக்கிறது.