உயிரினங்களை மனிதன் அழித்து வருவதால், உலகின் ஆதி விலங்குகள் தங்களைக் காப்பாற்றிக் கொள்ள, தங்களை அழிக்கத்துடிக்கும் மனிதர்களை, அழிக்க முயல்கின்றன என்கிறார் கட்டுரையாள ரான இரா.மீனாட்சிசுந்தரம். கடல் உயிரியல் துறையில் பட்டம்பெற்ற இவர், பாரதியார் பல்கலைக் கழகத்தில் பணியாற்றுகிறார். வைரஸ்களின் பழிவாங்கும் கோபம் பற்றி அவரே இந்தக் கட்டுரையில் விவரிக்கிறார்.
பலகோடி ஆண்டுகளுக்கு முன்பு உலகம் தோன்றியபோதே, வைரஸ்கள் தோன்றிவிட்டன. சொல்லப்போனால் நம் மனித இனம் தோன்றும் முன்பே வைரஸ் எனும் நுண்ணுயிர் தோன்றிவிட்டது. மனிதர்கள் தோன்றியிராத அந்தக் காலத்தில் அவைதான் இந்த உலகத்தை ஆட்சி செய்தன. இதை யாரும் கருத்தில் கொள்வதில்லை.
அந்த வைரஸ்கள், காலப்போக்கில் வேறுவேறு உயிரினங்களில் புகுந்து நோய்களை உருவாக்கின. அதோடு மட்டுமின்றி, அது தன்னுடைய ஜீன்களில் சிற்சில மாற்றங்களை ஏற்படுத்தி புதிய புதிய உயிரினத்தையும் உருவாக்கிய பெருமை வைரஸ் என்னும் நுண்ணுயிருக்கே உண்டு.
டார்வின் 1859-ல் பரிணாம வளர்ச்சியையும் (Evolution of Species) உயரினங் களின் தோற்றத்தையும் (The Origin of Species) கருத்தில் கொண்டாலும், அப் பொழுது வைரஸ் நுண்ணுயிர்கள் கண்டுபிடிக்கப்படாததால், அவை அவரது பார்வையில் படாமல் விடுபட்டுப் போயிற்று.
*
இந்த உண்மை அறியாததால் வைரஸ் போன்ற நுண்துகள்களை வெறும் ஜடப்பொருள் (non#living thing) என்றே நினைத்தனர். 1892-ல் தான், முதன்முதலாக வைரஸ் எனும் நுண்துகளுக்கு உயிர் உள்ளதை விஞ்ஞானி டிமிட்ரி (Scientist Dmitri Ivanovsbky discovered the living organisms in Tobacco# & named it as Tobacco Mosaic Virus) கண்டுபிடித்தார். குறிப்பாக புகையிலையில் இருந்து மொசய்க் வைரஸை அவர் முதல்முதலில் கண்டுபிடித்தார். அதன்பிறகே லூயி பாஸ்டர், எட்வர்ட் ஜென்னர் போன்ற விஞ்ஞானிகள் வைரஸ் நுண்ணுயிர்களிடமிருந்து நாம் தப்பிக்க, வேக்சின்களைக் கண்டுபிடித்தார்கள். வைரஸ் நுண்ணுயிரிகள் தங்கள் எதிரிகளான பேக்டீரியா, தாவரங்கள், மிருகங்கள், மனிதர்கள் என்று அனைத்து உயிரிகளையும் தாக்கும் டேஞ்சரஸ் வஸ்துவாகும். அவற்றுள் மனிதனுக்கு உதவிபுரியும் வைரஸ்களும் உண்டு. அதுதான் இந்த பேக்டீரியோ ஃபேஜ் வைரஸ் (Bacteriophage Virus affects Bacteria and it offers chance to control Human#affecting Bacteria). இவை சிலவகை வைரஸ்களைத் தாக்கி ஒழிக்கும்.
ஒவ்வொரு உயிரினத்திற்கும் அடிப்படையில் அதன் ஒவ்வொரு செல்லிலும் நியூக்ளிக் அமிலமும், புரதமும், மாவுச்சத்தும், கொழுப்பின் மூலக்கூறான லிப்பிடும் இருப்பது இயற்கை. இவை அவை உயிர்வாழ அத்தியாவசியமானதாகும். இதை மனதிலே வைத்துக்கொண்டு நாம் கொரோனாவுக்கு வருவோம்.
*
மனிதக் கொரோனா வைரஸ் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்ட ஆண்டு 1960. சாதாரண சளியில் அது கண்டுபிடிக்கப்பட்டது.
நமது இந்திய வம்சாவளி அமெரிக்க விஞ்ஞானியான ஹர்கோபிந் குரானா, புரதத்தின் அணுக்கூறுகளான அமினோ அமில மூலக்கூறுகளை வைத்து, அவற்றை செயற்கையாக உருவாக்க முயன்று, வெற்றியும் பெற்றார், -தானாகவே பல்மடங்கு பெருகி நியூக்ளிக் அமிலம் தயாரிக்கும் முறையில் வெற்றி கண்டார். அவர் இதற்காக 1968-லேயே மருத்துவத்திற்கான நோபல் பரிசை, இன்னும் இரு விஞ்ஞானிகளுடன் பகிர்ந்து கொண்டார். எனினும் அவரால் செயற்கை வைரஸுக்கு உயிருண்டாக்க முடியவில்லை.
ஒருசெல் உயிரான அமீபா, பேக்டீரியா மற்றும் உயர்ந்த விலங்குகள் வரை அனைத்து உயிரினங்களும், அதனதன் ஜீன்களில் ஒரே அடிப்படையான “டிஎன்ஏ’’ (DNA #Deoxy Ribo Nucleic Acid) என்ற மூலக்கூறுகளையே பிரதானமாகக் கொண்டவை. இவை அனைத் திற்குள்ளும் பலகோடி செல்கள் உள்ளன. அந்த ஒவ்வொரு உயிரினத் தின் செல்லிலும் ஒரு நியூக்ளியஸும் அதனுள் குரோமோசோம்களும் அதனுள் ஜீன்ஸ்சும், அதனுள் டி.என்.ஏ. வும் கொண்டுள்ளன. இதை ஜினோம் என்கிற உயிர்க் குறியீடு என்பர். இந்த இரகசியக் குறியீடு, தொடர்புடைய அந்த உயிரினம் உள்ளவரை மாறவே மாறாது என்பதும் உலக நியதி.
*
இதில் ஓர் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், ஒருசெல் உயிரினங் கள் முதல் அனைத்து உயிரினங்களும் இயற்கையிலேயே தங்களது ’’உயிர்க் குறியீடுகளாக’’ டி.என்.ஏ. என்பதை மட்டுமே அடிப்படையாக வைத்துக் கொண்டுள்ளன. இந்த டிஎன்ஏ “டபுள் ஹெலிக்ஸ்’’ என்னும் இரட்டை ஏணி போன்ற அமைப்பைக் கொண்டது. அந்த உயிர் ஏணியில் இருஜோடி உயிர் இரசாயன அணுக்கள் (Guanine#Cytosine and Adenine#Uracil represented by G#Cpair & A#Upair) உள்ளன. இவை தமது மாறுபட்ட சேர்க்கையினால், உயிரியல் குறியீடுதனை இயற்கையிலேயே உருவாக்கிக் கொள்கின்றன என்பது இயற்கையின் பேராச்சர்யம்! இது விஞ்ஞான ஆராய்ச்சிகளின் மூலம் கண்டுபிடிக்கப்பட்ட உண்மையாகும்!
அதே சமயம், கொரோனா போன்ற நுண்ணுயிர்களுக்கு மேற்குறிப்பிட்ட ஆச்சர்யமான அடிப்படை உண்மைகள் முற்றிலும் மாறுபட்டு இருக்கின்றன. இதுவும் இயற்கையின் அடுத்த ஆச்சர்யம்தான்! கொரோனா போன்ற நுண்ணுயிரிகள் டிஎன்ஏ-க்குப் பதில் “ஆர்.என்.ஏ’’-வை அடிப்படைக் குறியீடுகளாகவும், தம் “உயிரியல் குறியீடாகவும் கொண்டுள்ளன! இந்த ஆர்என்ஏ என்பது “ரைபோ நியூக்ளிக் ஏசிட்’’ (Ribo Nucleic Acid) என்பதன் சுருக்கமாகும்.
“கொரோனா நுண்கிருமியில் இருக்கும் ஆர்என்ஏ தனக்குத்தானே தனித்து இயங்கக்கூடியது, இனப் பெருக்கம் செய்யக்கூடியது, மிகவிரைவில் பல்கிப்பெருகித் தொற்றக்கூடியது என்பது இயற்கையின் ஆபத்தான ஆச்சர்யம்! அந்தக் கிருமி ஒரு மனித செல்லில் உட்கார்ந்தவுடன், மடங்கு மடங்காகப் பெருக ஆரம்பித்து விடுகின்றது. இந்த கொரோனாவின் உடலளவு மிகச்சிறிய பேக்டீரியாவின் அளவில் நூறில் ஒருபங்குதான். எனினும் அது தனித்தியங்காது, அது நம் உடலில் உள்ள உயிர்ப்பான செல்களில் ஏறிவிட்டால், அதற்கு உயிர் முழுமையாக வந்துவிடும். அதன்பின் அது தன் வேலையைக்காட்ட ஆரம்பித்துவிடும்.
கொரோனா என்ற நுண்ணுயிரை “எலக்ட்ரான் மைக்ரோஸ்கோப்பில் மட்டுமே நம்மால் பார்க்கமுடியும்!! மற்றபடி அவை, அணுக்கூறுகள் போல் அமைந்துள்ளதால், காற்றில் மிதந்தோ அல்லது நீர்த் துளிகளாகவோ, பயணித்து சில மணி நேரங்களுக்கு அது உயிரோடு வியாபித்திருக்கும். பனி மற்றும் குளிர் இடங்களில் 5 மணி நேரம் முதல் 8 மணி நேரம் வரை உயிரோடு இருக்கும். வெயில் மற்றும் வெப்ப இடங்களில் 1 மணி நேரம் முதல் 3 மணி நேரம் வரை உயிரோடு இருக்கும்.
*
நுண்ணுயிரான கொரோனா, வெறும் ஒரே செல்லால் ஆன உருண்டை வடிவக் கிருமி. அந்த நுண்ணுயிர் வைரஸை மூடி இருப்பது புரதத்தோல் ஆகும். அதற்கு மேல் கிரீடம் (ஈழ்ர்ஜ்ய்) போன்ற கொழுப்பு-முள் இருக்கும். அதனால் தான் அந்த நுண்ணுயிருக்கு “கொரோனா’’ எனப் பெயரமைந்தது. சுவாசத்தின் வழியாக மனிதனுக்குள் நுழையும் இந்தக் கிருமி, தன் கொழுப்பு முள் மூலம், நுரையீரல் செல்லில் உள்ள ஏஸ்-2 ரிசப்ட்டார் என்ற அமைப்பில் ஒட்டிக் கொள்கிறது. பின் நியூக்ளியஸுக்குள் நுழைந்து இனப்பெருக்கமாகி, நமது செல்லையே குறுகிய நேரத்திலேயே உடைத்துக் கொண்டு வெளிவருவதால், நுரையீரல் ""நிமோனியா"" என்ற பேராபத்தைச் சந்திக்கிறது, கொரொனாவின் உயிரணுவான ஆர்என்ஏ,வை நுண்நோக்கியில் பார்த்தால், ஒரே நூலில் கட்டிய மணிகள் போலத் தோற்றமளிக்கும்; இதுவே கொரொனா வைரஸின் உட்கட்டமைப்பாகும்.
*
இது போன்ற வைரஸ்கள் மனிதனை ஏன் குறிவைத்துத் தாக்குகின்றன?
இது போன்ற வைரஸ்காள், உலகின் மிகவும் தொன்மையான உயிரினங்களான புனுகுப் பூனை, எறும்புத் திண்ணி, ஒட்டகம், வவ்வால், போன்றவற்றோடு, இணைந்து இணக்கமாக வாழ்ந்து வந்தன. வைரஸ்களால் இந்த உயிரினங் களுக்குத் தொல்லை இருந்தாலும், இந்த உயிரினங் களால் வைரஸ்களுக்கு எந்தவிதத் தொல்லையும் இருந்ததில்லை. அவை தனிகாட்டு ராஜாக்களாக இருந்தன.
வைரஸின் தோழர்களான அந்தத் தொன்மையான உயிரினங்களை மனிதன் வேட்டையாடினான். இதைப் பார்த்த வைரஸ்கள், அவற்றோடு சேர்ந்து தாமும் அழிவோம் என்ற உயிர் பயம் கொண்டன. அதனால் அவை, விலங்குகளிடம் இருந்து மனிதனின் உடலில் தாவத்தொடங்கின. அவை தங்கள் கோபத்தைத்தான் மனிதன் மீது நோய்களாகக் காட்டிவருகின்றன. இது ஒருவகை பழிவாங்கல் அல்லவா?
மனிதனைத் தாக்க ஆரம்பித்த வைரஸ்கள், மனிதனை விட்டுவிட்டு வேறு விலங்குக்குத் திரும்பிச் செல்லாது. இது போன்று நுண்ணுயிர்கள் விலங்குகளிடம் இருந்து மனிதனுக்கு வருவதற்கு ஜூநாட்டிக் என்று பெயர்.
*
இந்த கொரோனா குடும்பத்தில் ஆல்ஃபா, பீட்டா, காமா மற்றும் டெல்டா என்ற நான்கு வகை கொரோனாக்கள் உள்ளன. இதில் பீட்டா வகைதான் கொடூரமான தாக்குதல் ஏற்படுத்துகிறது. இந்த பீட்டா வகையில் வந்ததுதான் 1. சார்ஸ் (2003) (சிவியர் அக்யூட் ரெஸ்ப்பிரேட்டரி சிண்ட்ரோம்) 2. மெர்ஸ் (2012) (மிடில் ஈஸ்ட் ரெஸ்பிரேட்டரி சிண்ட்ரோம்) மற்றும் 3. ""நாவல் கொரோனா-19 ஆகும். இவை அனைத்தும் மனிதனின் நுரையீரல் மற்றும் உணவுக்குழாய் உறுப்புகளைத் தாக்குபவை. இவற்றை அகில உலகத் தொற்றுநோய்கள் (டஹய்க்ங்ம்ண்ஸ்ரீ) என்று உலக சுகாதார நிறுவனம் பிரகடனம் செய்திருக்கிறது.
ஆசியாவில், புனுகுப்பூனை,, வௌவால்களின் உடலிலிருந்து இவை முதன் முதலில் சார்ஸ் என்ற வடிவத்தில் மனிதனுக்கு வந்ததாக 2002-லேயே கண்டுபிடிக்கப்பட்டது. அதேபோல், சௌதி அரேபியாவில் ஒட்டகத்தின் உடலில் இருந்து மனிதனுக்கு வந்ததாக 2012-ல் மெர்ஸ் என்ற கொரோனா நுண்கிருமி கண்டுபிடிக்கப்பட்டது. இந்த மெர்ஸ் என்ற கொரோனா 2012 ஆம் ஆண்டிலேயே உலகத் தொற்று எனப் பிரகடனப்படுத்தப்பட்டது. பாதிக்கப்பட்டவர்களில் சுமார் 36 சதம் கொடிய இந்த வைரஸின் பிடியில் சிக்கி மரணமடைந்தனர்.
*
இப்போதைய கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்தபடியே இருக்கிறது.
சீனாவின் பெருநகர் வூகனில் கடந்த டிசம்பர் கடைசியில் இந்த புது கொரானா நுண்கிருமி கண்டுபிடிக்கப்பட்டது. உலக சுகாதார மையம் அந்நுண்ணுயிர்க்கு நவீன கொரோனா (Novel Corona) எனப் பெயரிட்டது.
இது மனிதனை மட்டுமே தாக்கும் ஒட்டுண்ணிக் கிருமி என முதற்கட்ட ஆய்வுகள் சொன்னது. இப்போது புலி, பூனை போன்றவற்றுக்கும் தொற்று இருப்பதாக செய்திகள் வருகின்றன.
சீனப் பெருநகர் வூகனில் ஜனவரி 23 ஆம் தேதி ஊரடங்கை அமல்படுத்திய போது, பாதிக்கப்பட்ட சுமார் ஐம்பது லட்சம் வெளிநாட்டு மக்கள் முன்பே சொந்த நாட்டுக்கு இடம்பெயர்ந்திருந்தனர்.
அவர்கள் மூலம், கொரோனா உலகமெங்கும் பரவி பாதிப்பையும் பதட்டத்தையும் உருவாக்கிக் கொண்டிருக்கிறது.
இந்த கொரோ0னா நுண்கிருமி ஒருவர் உடலில் அடைகாக்கும் காலம் வெறும் மூன்று வாரமே. முதல் நாளில் இருந்தே மற்றவர்களுக்குப் பரவவும் ஆரம்பித்துவிடுகிறது, பாதிக்கப்பட்டவர்களுக்கு எந்த அறிகுறியும் முதலில் இல்லாவிட்டாலும், முதல் இரண்டு வாரங்களில் அது வந்துவிடும். பின்னரே ஜுரமும் நெஞ்சுவலியும் ஏற்படும், ஆனால் அதற்குள் நுரையீரல் பாதிக்கப்பட்டு அபாயகட்டத்திற்கு சென்றுவிடுகிறார்கள். எனினும் பெரும்பாலானோர் சின்னச்சின்ன பாதிப்பில் இருந்து மீண்டுவிடுவது ஆறுதலான செய்தி.
அமெரிக்கா இந்த நோயின் ஆரம்பத்தில் அசிரத்தையாய் இருந்ததன் பின்விளைவே, நுண்கருமியின் தாக்கம் விரைந்து மிகப் பெரிய அளவான மக்களைப் தாக்கியுள்ளது. இந்தியாவோ மனிதாபிமான அடிப்படையில் (உள்நாட்டின் எதிர்ப்பையும் பொருட்படுத்தாது) அமெரிக்காவிற்கு “ஹைட்ராக்ஸி குளோரோக் குவின்’’ மருந்துகளை ஏற்றமதி செய்தது. இத்தாலியும் ஸ்பெயினும் இந்தக் கொரோனா நோயால் மிகமோசமான பாதிப்பை சந்தித்து வருகிறது. பிரான்ஸும் இதன் பிடியில் சிக்கித் தவித்துக்கொண்டிருக்கிறது. ஜெர்மனி போன்ற ஒரு சில நாடுகள், ஆரம்பக் கட்டத்திலேயே அதிரடி நடவடிக்கையில் இறங்கி, தங்களைத் தற்காத்துக்கொண்டிருக்கின்றன. ஏனைய ஐரோப்பிய நாடுகள் பெரும் சிக்கலில் சிக்கியுள்ளன.
*
தனிமையும், கைசுத்தமும், சமூக விலகலும்தான் வருமுன் காக்கும் விதிகள்! சுடுநீர் அடிக்கடி குடித்தலும், சுடுநீராவி முகத்திற்குப் பிடித்தலுமே நோய் வந்தாலும் அதனின்று தப்பும் வழிகள். இது பாதிப்பிலிருந்து மீண்டிருக்கும் சீனாவின் அனுபவப் பாடம்.
மனிதன் என்னும் விலங்கு தான், உயிர்வாழ, காடுவாழ் விலங்குகளைத் தேர்ந்தெடுத்தது தவறான செயல் என்பதையே இயற்கை உணர்த்துகிறது. எனவே இயற்கையையும் இயற்கையின் அரவணைப் பில் இருக்கும் விலங்கு களையும், கவனமாக பராமரிக்கவேண்டும். அவற்றை மீண்டும் மீண்டும் சீண்டினால், எண்ணற்ற கொரோனாக் களின் அணிவகுப்பை இந்த உலகம் தொடர்ந்து சந்திக்கவேண்டியிருக்கும்.