ருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை

எரிமுன்னர்

வைத்தூறு போலக் கெடும்-

என்கிற குறளின் அறிவுறுத்தலின்படி உரிய நேரத்தில், அதாவது சீனாவில் கொரோனா தன் ஆட்டத்தைத் தொடங்கிய போதே, உரிய பாதுகாப்பு நடவடிக்கையை மேற்கொண்டு இந்தியாவை உலகத் தொடர்பில் இருந்து துண்டித்துக்கொண்டிருந்தால், இன்று இத்தனை இழப்பும் பேரச்சமும் ஏற்பட்டிருக்காது.

Advertisment

vv

கொரோனா வைரஸ் கவனக்குறைவாக இருப்போரை விடமாட்டேன் பார்’ என்று துரத்திக்கொண்டே இருக்கிறது, இதன் பரவும் வேகத்தைக் குறைக்க பல்வேறு நடவடிக்கைகளை அரசு நிர்வாகங்கள் எடுத்துவருகின்றன. அதிலிருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ள தனிமை, தூய்மை, சமூக விலக்கம் ஆகியவற்றைக் கடுமையாகக் கடைப்பிடிக்கவேண்டும். அதையும் மீறி ஏதோ ஒரு கவனப்பிசகில் கொரோனா நம்மைத் தன் கொடுங்கரங்களால் தொட்டுவிட்டால் மரணம்தான் ஒரே வழியா? இல்லவே இல்லை. மரண அச்சம் தேவையில்லை.

Advertisment

கொரோனா தீண்டியவர்களில் இங்கே 98 சதம் பேர் பூரண குணமாகிவிடுகிறார்கள். மிகவும் மோசமான பலவீனமான நிலையில் இருக்கும் நோயாளிகளுக்கே கொரோனா ஆபத்தை ஏற்படுத்துகிறது. எனவே கொரோனாவை உயிர்க்கொல்லி எமனாகக் கண்டு அஞ்சாமல், பதட்டம் கொள்ளாமல், அதை எதிர்கொண்டு முறியடிக்கும் வழிகளில் நாம் கவனம் செலுத்தவேண்டும். இந்த நேரத்தில் பொதுவாக வைரஸ்களைப் பற்றி நாம் தெரிந்துகொள்வது அவசியம். இதுகுறித்து புதுக் கோட்டை மாவட்ட கொடுவை ஸ்ரீ சக்தி மருத்துவ மனையின் மேலாண்மை இயக்குநரான புரட்சித்தமிழன் சத்தியசீலன் இக்கட்டுரையில் விவரிக்கிறார்.

“இன்று உலகெங்கும் பேசப்படும் ஒரே வார்த்தை கொரோனா. இதன் பாதிப்பால் உலகெங்கிலும் பல்லாயிரக்கணக்கான மனிதர்கள் தொடர்ந்து அழிந்துவருகின்றனர்.

கை, கால், காது, மூக்கு, மூளை என்று எந்த உறுப்புமே இல்லாத ஒரு கிருமியால் உலகையே மாற்றமுடிகிறதென்றால் அதைப்பற்றியும் நாம் கொஞ்சம் தெரிந்துகொள்ளலாம்.

வைரஸ் என்றால் என்ன?

vv

வைரஸ் என்பது மிகச்சிறிய புரதங்கள் மற்றும் மரபணுப் பொருட்களை கொண்ட ஒரு உயிரற்ற ஆபத் துப் பொருள். உலகில் நூற்றுக்கணக்கான வைரஸ்கள் உள்ளன. வைரஸ் தொற்றால்தான் காய்ச்சல், சளி போன்றவையும் ஏற்படுகிறது. சில வகையான வைரஸ்கள் நேரடியாக ஒரு மனிதரிடம் இருந்து மற்றொரு மனிதருக்கு பரவும்.

வைரஸ் தொற்று பரவுதலை மூன்றாக பிரிக்கலாம்.

1) எண்டமிக்

2) எபிடமிக் மற்றும்

3) பாண்டமிக்

* எண்டமிக் என்பது ஒரு குறிப்பிட்ட பகுதியில் எந்த நேரம் வேண்டுமானாலும் பரவக்கூடிய வைரஸாகும். உதாரணமாக அம்மை போன்ற விஷயங்களைச் சொல்லலாம். அதேபோல மலேரியா காய்ச்சலையும் இதற்கு உதாரணமாகச் சொல்லலாம்.

*எபிடமிக் என்பது ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் அதிகமாக பரவக்கூடிய நோயாக இருக்கும். உதாரணமாக, மழைக்காலத்தில் பலருக்கும் காய்ச்சல் வரும். அந்த குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு அந்த வைரஸ் பரவுவது குறைந்துவிடும்.

*பாண்டமிக் வகையை சேர்ந்த வைரஸ்கள் ஒரே நேரத்தில் உலகம் முழுவதும் பரவக்கூடியதாகும். ஒரு நாட்டில் இருந்து மற்ற நாட்டுக்கு இந்த வைரஸால் பாதிக்கப்பட்ட மக்கள் பயணிக்கும்போது, அந்த குறிப்பிட்ட நாட்டில் வைரஸ் பரவக்கூடிய சூழல் இருந்தால், அது அங்கும் பாதிப்பை ஏற்படுத்தும்.

வைரஸ்களின் கொடூர ஆட்டம்:

21-ஆம் நூற்றாண்டில் ஒருசில வைரஸ் தாக்குதலால் பல நாடுகள் பாதிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இதில் மிகுந்த கவனம் பெற்று, பல உயிர்களைக் கொன்ற வைரஸ்கள் குறித்து பார்க்கலாம்.

ஜிகா வைரஸ் - 1947 (உகாண்டா)

மார்பக் வைரஸ் - 1967 (ஜெர்மனி)

லாசா வைரஸ் - 1969 (நைஜீரியா)

இபோலா வைரஸ் - 1976 (சூடான்)

ஹென்ரா வைரஸ் - 1994 (ஆஸ்திரேலியா)

நிபா வைரஸ் - 1998 (மலேசியா)

சார்ஸ் வைரஸ் - 2002 (சீனா)

மெர்ஸ் வைரஸ் - 2012 (சௌதி அரேபியா)

நாவல் வைரஸ் - 2019 (சீனா)

* ஜிகா வைரஸ்

ஏடீஈஎஸ் எனப்படும் கொசு வகைக் கடிப்பால் ஜிகா வைரஸ் தொற்று ஏற்படும். இந்த கொசு பகல் நேரத்தில் கடிக்கக்கூடியது. முதன்முதலில் உகாண்டாவில் 1947-ல் குரங்குகளிடம் இந்த வைரஸ் தொற்று கண்டுபிடிக்கப்பட்டது. இதுவரை 86 நாடுகளில் பதிவாகியிருக்கிறது.

vv

ஏஈடீஇஎஸ் கொசு வகைதான் டெங்கு, சிக்குன்குனியா போன்ற நோய்களையும் பரப்புகிறது. காய்ச்சல், தடிப்பு, தசை மற்றும் மூட்டு வலி, தலைவலி ஆகியவை இதன் அறிகுறிகள். ஜிகா வைரஸிற்கு இதுவரை எந்த சிகிச்சையும் கிடையாது.

* மார்பக் வைரஸ்

அங்கோலாவில் மார்பக் வைரஸ் தொற்றால் 200-க்கும் மேலானவர்கள் இறந்தனர் இபோலாவுடன் தொடர்புடைய வைரஸ் கிருமி மார்பக் வைரஸ். பாதிக்கப்பட்டவரின் உடல் திரவம் மூலம் இது பிறரைத் தொற்றிக்கொள்ளும். பழந்தின்னி வௌவால்கள் மூலமே இந்தக் கிருமியும் பரவுகிறது.

இதில் பாதிக்கப்பட்டவர்களில் 24% முதல் 88% வரை இறக்கின்றனர். அதீத குருதிப்போக்கில் நோய் தாக்கிய எட்டு - ஒன்பது நாட்களில் மரணம் ஏற்படும். ஜெர்மனியில் உள்ள மார்பக் நகரில் 1967-ல் முதன்முதலில் இது கண்டறியப்பட்டது.

*லாசாஜவைரஸ்

லாசா வைரஸ் பாதிப்புக்குள்ளான எலிகளின் சிறுநீர் அல்லது மலத்துடன் தொடர்பு கொள்ளும் மனிதர்களுக்கு இந்தக் காய்ச்சல் உண்டாகிறது. பாதிக்கப்பட்டவர்களின் ரத்தம், சிறுநீர், மலம், பிற உடல் திரவங்கள் ஆகியவற்றின் மூலம் இது மனிதர்களிடையே பரவுகிறது.

மோசமான சமயங்களில் ரத்த நாளங்கள் பாதிப்பு அல்லது உறுப்பு செயலிழப்பால் 14 நாட்களுக்குள் மரணம் உண்டாகும். காய்ச்சல், தலைவலி, உடல் சோர்வு ஆகியவையே இதன் அறிகுறிகள். நைஜீரியாவின் லாசா நகரில் 1969-ல் இந்த கிருமி இருப்பது கண்டறியப்பட்டது.

*இபோலா வைரஸ்

மனிதக் குரங்குகள், பழந்தின்னி வௌவால் கள் போன்ற விலங்குகளிடம் இருந்து மனிதர் களுக்கும், ஒரு மனிதரிடம் இருந்து மற்றொரு வருக்கு வேகமாக பரவக்கூடியது இபோலா வைரஸ். 1976-ஆம் ஆண்டு முதன்முதலில் தற்போதைய தென்சூடான் பகுதியிலும், காங்கோ குடியரசு நாட்டிலும் இபோலா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது.

திடீர் காய்ச்சல், கடுமையான உடல் சோர்வு,

தசைவலி மற்றும் தொண்டை வலி இதன் அறிகுறிகள். நீர்சத்து இழப்பு மற்றும் உறுப்பு செயலிழப்பின் காரணமாகவே அதிக உயிரிழப்புகள் ஏற்படும். நிரூபிக்கப்பட்ட தீர்வு அல்லது சிகிச்சை என்று இபோலா வைரஸிற்கு ஏதுமில்லை. இதற்கான மருந்துகள் மற்றும் சிகிச்சைகள் பரிசோதிக்கப்பட்டு வருகின்றன.

*ஹென்ரா வைரஸ்

ஹென்ரா வைரஸ் குதிரைகளையும் மனிதர் களையும் தாக்கும். பழம்தின்னி வௌவால் களிடம் இருந்து பரவும் 'ஹெனிபா வைரல்' நோய்கள் குழுவைச் சேர்ந்ததே நிபா வைரஸ்.

ஆஸ்திரேலியாவில் முதல்முறையாக அடையாளம் காணப்பட்ட 'ஹென்ரா' வைரஸ் இதே வகையைச் சேர்ந்தது. இந்த வைரஸ் பழம்தின்னி வௌவால் களிடம் இருந்து குதிரைகள் மற்றும் மனிதர்களுக்கு பரவுகிறது. பிரிஸ்பேன் நகரில் 1994-ல் இது முதலில் கண்டறியப்பட்டது. அப்போது முதல் 70 குதிரைகள் மரணத்துக்கு இது காரணமாக இருந்துள்ளது. இக்கிருமியின் தாக்குதலுக்கு உள்ளான ஏழு பேரில் நால்வர் மரணித்துவிட்டனர்.

*நிபா வைரஸ்

நிபா தொற்று விலங்குகள் மற்றும் மனிதர்களுக்கு கடுமையான நோயை உண்டாக்கும் வைரஸாகும். இதன் பிறப்பிடம் ஷஃபுரூட் பேட்ஸ்’ எனப்படும் பழந்தின்னி வௌவால்கள். 1998-ஆம் ஆண்டு முதன்முதலில் மலேஷியாவில் இந்த வைரசால் நோய் தொற்று ஏற்பட்டது. வௌவால்களிடம் இருந்து பன்றிகளுக்கு இந்த நோய் பரப்பப்பட்டது. 2004 ஆம் ஆண்டு வங்க தேசத்தில் பழந்தின்னி வௌவால்கள் கடித்த பழத்தைச் சாப்பிட்ட மனிதர்களுக்கு நிபா வைரஸ் பரவியது. ஒரு மனிதரிடம் இருந்து மற்றவருக்கு பரவுவதும் கண்டறியப்பட்டது.

இந்த வைரஸ் தொற்றால் கடுமையான சுவாசப் பிரச்சனை ஏற்பட்டு உயிரிழப்புகளும் ஏற்படலாம். இந்தியாவின் கேரள மாநிலத்தில் 2018-ஆம் ஆண்டு நிபா வைரஸ் பரவியபோது, 17 பேர் உயிரிழந்தனர்.

* கொரோனா

இப்போது கோவிட் 19 நோயை உண்டாக்கக்கூடிய 'நாவல் கொரோனா வைரஸ்' பற்றியும் அவற்றின் குடும்பம் பற்றியும் பார்க்கலாம்.

*கிரீடம் அணிந்த வைரஸ்:

பூனைக் குடும்பத்தில் பூனை, புலி என பல விலங்குகள் உள்ளதுபோல இந்த கரோனா வைரஸ் குடும்பத்தில் மனிதர்களை தாக்கும் வைரஸ், பறவைகளை தாக்கும் வைரஸ், விலங்குகளை தாக்கும் வைரஸ் என பற்பல இனப்பிரிவுகள் உண்டு.

நுண்ணோக்கி வழியே பார்க்கும்போது கிரீடம் (கிரவுன்) போல அல்லது சூரியனைச் சுற்றி இருக்கும் ஒளிக் கதிர்கள் (கரோனா) போல கூர்முனைகளைக் கொண்டு தென்படுவதால் கரோனா வைரஸ் குடும்பம் என இதற்கு பெயர் ஏற்பட்டது. 1950-ஆம் ஆண்டு இவ்வகை வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது.

இவற்றின் துணைக்குடும்பத்தில் ஆல்பா, பீட்டா, டெல்டா, காமா என நான்கு வகைகள் உள்ளன.

நமக்கு தெரிந்த வரையில், மனிதர்களை தாக்கும் ஆறு கரோனா வைரஸ்களில் 1) 229E (alpha coronavirus) 2) NL63 (alpha coronavirus) 3) OC43 (beta coronavirus)

4) HK01 (beta coronavirus) ஆகிய நான்கும் ஆபத்தற்ற உடல் உபாதைகளை ஏற்படுத்தும்.

5) SARS#CoV (beta coronavirus) மற்றும்

6) MERS#CoV (beta coronavirus)

ஆகிய இரண்டும் கிருமி தாக்கியவர்களில் சிலருக்கு மரணம் சம்பவிக்கும் அளவுக்கு நோயை ஏற்படுத்தும்.

*சார்ஸ் வைரஸ்

21-ஆம் நூற்றாண்டின் மோசமான நோயாகவும், உலக சுகாதாரத்திற்கு அச்சுறுத்தலாகவும் பார்க்கப்பட்டது சார்ஸ்.

Severe Acute Respiratory Syndrome என்பதுதான் சார்ஸ் என்பதன் பொருள். தீவிர சுவாசப் பிரச்சனைக்கான நோய்க்குறி என்று அர்த்தம். இதுகுறித்து உலக சுகாதார அமைப்பும் அதீத கவலை தெரிவித்திருந்தது. புனுகுப் பூனையிலிருந்து மனிதர்களுக்கு பரவக்கூடிய சார்ஸ் வைரஸ், கொரோனா வைரஸ் வகையை சார்ந்தது.

2002 ஆம் ஆண்டு தென் சீனாவில் உள்ள குவாங்டாங்க் மாகாணத்தில்தான் முதன்முதலில் இந்த தொற்று கண்டறியப்பட்டது. அதனைத் தொடர்ந்து 26 நாடுகளில் 8,000-க்கும் மேற்பட் டோருக்கு சார்ஸ் பாதிப்பு ஏற்பட்டதாக உலக சுகாதார அமைப்பின் வலைத்தளம் கூறுகிறது.

காய்ச்சல், தலைவலி, வாந்தி மற்றும் உடல் நடுக்கம் இதன் அறிகுறிகள். இந்த வைரஸ் பாதிக் கப்பட்ட இரண்டாம் வாரத்தில் இருமல், மூச்சுத் திணறல் போன்ற பிரச்சனைகள் ஏற்பட்டு, தீவிரமான சுவாசக் கோளாறில் இது முடியும்.

சார்ஸ் பரவுவது குறித்தும், இதனை கட்டுப் படுத்தவது குறித்தும் உலக சுகாதார அமைப்பு 2003ஆம் ஆண்டு ஜெனீவாவில் உலக நாடுகளுடன் சந்திப்புக் கூட்டம் நடத்தியது. சார்ஸ் வைரஸால் சீனாவில் மட்டும் 774 பேர் உயிரிழந்தனர். இதில் மருத்துவர்களும் அடங்குவர். இதனை கட்டுப் படுத்த தவறியதாக சீனாவை ஐ.நா விமர்சித்தது. தற்போது வரை இதற்கு எந்த சிகிச்சையும் கிடையாது.

*மெர்ஸ் வைரஸ்

சவுதி அரேபியாவில் 2012-ல் முதல்முதலாக ‘மெர்ஸ்’ நோய்க்குக் காரணமான வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. சவுதியை அடுத்த கத்தாருக்கு இந்நோய் பரவியது. அலி முகமது ஜகி என்ற எகிப்து மருத்துவர், நுரையீரலைத் தாக்கும் ஒருவகை வைரஸ்தான் இந்நோய்க்குக் காரணம் என கண்டுபிடித்தார். இந்த வைரஸ், வௌவால்களிடம் இருந்து ஒட்டகங்களுக்கும், அதன் பின்னர் மனிதர்களுக்கும் பரவியதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். சவுதி அரேபியா, கத்தார், ஜோர்டான் உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளில் இந்த வைரஸ் நோய் வேகமாக பரவியதை அடுத்து இதற்கு ‘மிடில் ஈஸ்ட் ரெஸ்பரேட்டரி சிண்ட்ரம் - மெர்ஸ்’ என பெயர் சூட்டப்பட்டது. வைரஸ் தாக்குத லால், நுரையீரல் பாதிக்கப்பட்டு, சுவாசக் கோளாறை உண்டுபண்ணி, ஆளைக் கொல்லும் இந்நோய் 20-க்கும் அதிகமான நாடுகளில் பரவியுள்ளது. இதுவரை 800 பேர் பலியாகியுள்ளனர். இதில் பெரும்பாலானோர் சவுதியைச் சேர்ந்தவர்கள். உலக அளவில் 2500 பேர் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த பயங்கர நோய்க்கு இதுவரை மருந்தோ தடுப்பூசியோ கண்டுபிடிக்கப்படவில்லை. அதே நேரம் 2002-ல் முளைத்த கொடிய ‘சார்ஸ்’ நோயை விட தொற்று வீச்சுக் குறைந்ததாக மெர்ஸ் கருதப்படுகிறது.

ஏழாவதாக உருவானதுதான் இந்த coronovirus) எனவேதான், புத்தம் புதிதாக சமகாலத்தில் பரிணமித்த இனப்பிரிவு என பொருள்படும் '-நாவல்' என்ற அடைமொழியோடு 'நாவல் கரோனா வைரஸ்' என பெயர் சூட்டப்பட்டது. இந்த வைரஸ் ஏற்படுத்தும் நோயின் பெயர்தான் -கோவிட்-19.

கோவிட்-19

கோவிட்-19, இது சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் மனிதர்களிடம் ஏற்படுத்தும் தொற்று நோயாகும். சீனாவின் ஊகான் நகரத்தில் இது ஏற்படுத்திய மோசமான தாக்கத்திற்குப் பின்பு தான் இந்த பெயர் வைக்கப்பட்டது. 31 திசம்பர் 2019 அன்று, உலக சுகாதார அமைப்பால்அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட 2019-nCoV என்ற கொரோனா வைரசின் ஒரு புதிய திரிபு சீனாவின் ஊகான் மாகாணத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. 2020 சனவரி 24-க்குள் 25 இறப்புகள் பதிவாகின, 547 பேர் பாதிக்கப்பட்டதாக உறுதிப்படுத்தப்பட்டது. ஊகான் தீநுண்மம் 2பி குழுவின் SARS-CoV தீ நுண்மியுடன் கிட்டத்தட்ட 70% மரபணு ஒற்றுமையுடன் பீட்டா கொரோனா தீ நுண்மியின் புதிய திரிபு என அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்த தீ நுண்மிகள் பாம்புகளில் இருந்து தோன்றியதாக சந்தேகிக்கப் பட்டது. ஆனால் பல முன்னணி ஆய்வாளர்கள் இந்த முடிவுக்கு உடன்படவில்லை.

கொரானா பரவும் முறை:

கொரோனா வைரசு காற்று வழியாகப்பரவுவதை விட, சுவாசத் துளிகளுடன் தொடர்பு கொள்வதன் மூலமே பெரும்பாலும் பரவுவதாகவும், இதுவரை மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் இதை உறுதிப்படுத்து வதாகவும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. கொரோனா வைரசு பாதிக்கப்பட்டவரிடம் இருந்து தான் இது பரவுகிறது. கோவிட் -19 இருக்கும் நபர் இருமும்போதோ அல்லது சுவாசிக்கும்போதோ, மூக்கு அல்லது வாயிலிருந்து வெளியேறும் சிறிய துளிகள் மூலம் மற்றொரு நபருக்குப் பரவுகிறது. சில சமயம் இந்த துளிகள் பாதிக்கப்பட்ட நபருக்கு அருகில் இருக்கும் பொருளிலோ அல்லது நிலத்திலோ விழுந்து விடும். நோய் பாதிப்பு இல்லாத நபர் இந்த துளிகள் இருக்கும் பொருளையோ இடங்களையோ கையால் தொட்டுவிட்டு பின்பு அவரது கண், மூக்கு, வாய் என இவற்றில் ஏதாவது உறுப்பைத் தொடும் போது நோய் அவருக்கும் பரவி விடுகிறது. அந்த துளிகளை சுவாசம் மூலம் உள்ளிழுத்தாலும் நோய் பரவி விடும்.

முறையான தகவல்கள்:

ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் கொரோனா தொடர்பாக உலகம் முழுவதிலிருந்தும் தகவல்களைத் திரட்டி உடனுக்குடன் தங்கள் இணையத்தில் வெளியிட்டு வருகிறது. இந்த வார நிலவரப்படி (30-ந் தேதி ) உலகம் முழுவதிலும் 7,22,664 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்த எண்ணிக்கை இப்போது உயர்ந்துகொண்டே இருக்கிறது. அதுபோல 13,049 என்று இருந்த பலி எண்ணிக்கை, இப்போது 34,000 ஆக விர்ரென உயர்ந்துவிட்டது.

* தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கையும் ஐம்பதைக் கடந்து கொண்டிருக்கிறது.

கொரோனாவை முகக்கவசம் தடுக்குமா?

ஒரு வைரசின் அளவு, 20-300 நானோ மீட்டர்.

ஒரு நானோமீட்டர் என்பது மெட்ரிக் முறையில் ஒரு மீட்டரின் ஒரு பில்லியனில் ஒரு பங்கைக் குறிக்கும் (0.000000001 ம்)நீள அலகு ஆகும்.

கொரோனா வைரஸ் மற்ற வைரசைவிட அதிக எடை கொண்ட வைரஸ். இது 5 மைக்ரான் அளவு கொண்டது.

ஒரு மைக்ரான் (மைக்ரோ மீட்டர்) என்பது ஒரு மீட்டரில் ஒரு மில்லியனில் ஒரு பங்கு (1/1000000). ஒரு மில்லிமீட்டரில் (1/1000) ஆயிரத்தில் ஒரு பங்காகும்.

இப்போது உலகெங்கும் பரவலாக காணப்படும் COVID 19 என்னும் நோய், கொரோனா குடும்பத்தைச் சேர்ந்த நஆதநஈர்ய-2 என்னும் -வைரசால் பரவுகிறது என்பதை ஏற்றுக்கொள்வோமானால் இந்நோய் பரவுவதைத் தடுக்க முகக்கவசம் (Mask)அணிவதால் தடுக்கமுடியும் என்பது மூடத்தனம்.

ஏனெனில், ஒரு சாதாரண சட்டைத்துணியின் துளை களைவிட பல்லாயிரம் மடங்கு மிகச்சிறிய நுண்ணுயிரி வைரஸ். அதனை தடுப்பதற்கு எந்தவகை முகக்கவசத் தாலும் முடியாது.

ஆக்சிஜன், நைட்ரசன், கார்பனீராக்சைடு போன்றவை மேற்புறத்தோலில் சிறிதளவு உட்புகுகின்றன. மேலும், நமது உடலின் வியர்வைத்துளியானது தோல்களின் நுண்துளை வழியாக வெளிவருகின்றன. இவற்றின் மூலமாக நுண்ணுயிரி வைரஸ் உட்புக வாய்ப்புள்ளது.

வைரசிற்கு காற்றில் உயிர்வாழும் சூழல் இல்லை. எனவே இவை காற்றில் பரவாது. ஆனால், இவை உயிர்வாழ சளி போன்ற ஒரு திரவப்பொருள் தேவைப் படுகிறது. ஈரப்பதம் உள்ள இடங்களில் மட்டுமே உயிர் வாழ்கிறது. அதனால்தான் வெப்பநிலை குறைவாக உள்ள நாடுகளில் அதிக பாதிப்பை ஏற்படுத்துகின்றன.

இருமல் மற்றும் தும்மலின்போது மூக்கு மற்றும் வாய் வழியாக, மிகச்சிறிய, சுமார் 3,000 எண்ணிக்கை அளவிலான உமிழ்நீர்த் துளிகள் வெளிவரும்.

இந்தத் துளிகளின் அளவு 1-5 மைக்ரோ மீட்டர் மட்டுமே. அதாவது மனிதர்களின் சராசரி மயிரிழை ஒன்றின் அகலத்தில் 30-ல் ஒரு பங்கு. ஆடைகள், பொருட்கள் மீது மட்டும் படியாமல் காற்றிலும் கலக்கும் இந்தத் துகள்கள், காற்றில் மூன்று மணிநேரம் வரை உயிர்ப்புடன் இருக்கும்.

ஒரு துளியில் எத்தனை வைரஸ்கள் இருக்கும் என்பது குறித்த சரியான தரவுகள் இல்லை.

கொரோனா தொற்றில் இருந்து தப்பிக்க, தூய்மை யைக் கடைப்பிடித்தல், கூட்டத்திருலிருந்து விலகித் தனித்திருத்தல் உள்ளிட்ட பாதுகாப்பு முறைகளைப் பின்பற்றுவதுதான். நம் இந்தியாவும், தமிழகமும் கொரோனாவின் பிடியில் அதிகம் சிக்காமல் தப்பித்துக் கொள்ளவேண்டும் என்பதுதான் நம் எல்லோரின் பேரவா ஆகும்.

_________________________________

யோ டெக்னாலஜித் துறை ஒரு பெரும் ஆராய்ச் சியை மேற்கொண்டு, எதிர்ப்பு சக்தி மருந்துகளால் கொரோனா வைரஸின் வீரியத்தை அழிக்கமுடியும் என்ற நம்பிக்கை யூட்டும் தகவலைத் தெரிவித்திருக்கிறது. இதுகுறித்துச் சொல்லும் சென்னை அரசு மருத்துவமனை மருத்துவரும் எழுத்தாளருமான சில்வியா பிளாத்...

vv

வூஹான், இத்தாலி, யு.எஸ்.ஏ., நேபாளம் என்று ஐந்து நாடுகளில் உள்ள கொரோனா வைரஸ் அமைப்பை எடுத்து ஆராய்ச்சி பண்ணி இருக்காங்க. அதாவது ஒரு நாட்டில் இருந்து இன்னொரு நாட்டிற்குப் பரவும்போது வீரியம் குறையுதா? அதுல ஏதாவது மாற்றம் இருக்கிறதா என்று பார்ப்பதற்கு செய்த ஆராய்ச்சி இது.

ஆராய்ச்சி முடிவில் நேபாளத்தில் இருந்து வந்த வைரஸ் வூஹான் வைரஸ் கூட 100% ஒத்துப் போகுது. மீதி எல்லாம் 99% தான் ஒத்துப் போகுதுன்னு கண்டுபிடிச்சிருக்காங்க.

இத்தாலி வைரஸ்ல உள்ள ஒரு சின்ன மாறுபாடுதான் இந்த அளவுக்குத் தீவிரமாப் போனதற்குக் காரணமாக இருக்கலாம்ன்னு சொல்லி இருக்காங்க.

இந்தியாவில் உள்ள வைரஸை ஆராய்ச்சி பண்ணியபோது அவங்களுக்கு இந்த வைரஸ் அமைப்பில் ஒரு குறிப்பிட்ட திடீர் மாற்றம் (mutation) உண்டானது தெரிய வந்தது.

இந்த திடீர் மாற்றம் உண்டான இடத்தில் எதிர்ப்பு சக்தி உள்ளே நுழைவதற்குப் பாதை இருக்கிறது என்று கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. இந்தப் பாதை வழியாக m RNA வைரஸ் பெருக்கத்தைக் கட்டுப்படுத்தும் தகுதி உள்ளவை.

இந்தப் பாதை (target site) ஏற்கனவே ஐஒய வைரஸ் கிருமிகளில் கண்டுபிடிக்கப்பட்டு இதன் வழியாக செல்லும் மருந்துகள் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதனால் தான் HIV க்கு பயன்படுத்தும் மருந்துகள், நம்ம ஊரில் வேலை செய்யலாம்ங்கிற கோட்பாடு வைக்கப்படுகிறது.

இந்த மாற்றங்கள் இத்தாலி மற்றும் அமெரிக்காவில் உள்ள வைரஸ் அடிப்படையில் இல்லை. எனவே அங்கு இந்த மருந்துகள் பலனளிக்காமல் போய் இருக்கக்கூடும். மேலும் இந்த டார்கெட் ஏற்கனவே herpes simplex, vesicular stomatitis, Hepatitis C போன்றவற்றில் இருப்பதாக அறியப்பட்டுள்ளது.

எனவே இந்த இந்திய வைரஸ் அமைப்பில் வந்த தனிப்பட்ட இந்த வகையான மாற்றம் இதனுடைய வீரியத்தை குறைக்கலாம் எனவும், இந்தியர்கள் இந்த எதிர்ப்புச் சக்தியை ஏற்கனவே பெற்று இருப்பதால் நோயின் தாக்குதலில் இருந்து எளிதாக மீள வாய்ப்பு உள்ளது என்றும் இந்த ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன.

எனினும் இன்னும் நீண்ட ஆராய்ச்சிகள் மேற் கொள்ளப்பட்டு வருகிறது என்று பயோடெக்னாலஜி துறை கூறியுள்ளது என்கிறார்.

கொரோனா வைரஸில் எதிர்ப்பு சக்தி நுழைய இடம் இருக்கிறது என்பதால் அதை அழிக்கமுடியும் என்ற நம்பிக்கையை இந்த ஆய்வு அழுத்தமாக ஏற்படுத்துகிறது.