பண்பாடு மணக்கும் கிராமியத் திருவிழாக்கள்! லிகவிஞர் இயற்கை

/idhalgal/eniya-utayam/village-festivals-smell-culture-liquorist-nature

மது பக்தியும், வணங்குதல் முறையும், கடவுளரும், அவர்தம் பிரதிநிதிகளும் அல்லது சாமியார்களும் எலைட் ஆக மாறிவிட்ட ’எலைட் பக்தி’க் காலத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கி றோம்.

தெய்வத்தின் காருண்யம் முறையே கட்டண வரிசைப் படி அமைந்து விட்டது. ஆன் லைனில் காணிக்கையும் தபாலில் பிரசாதமும் என அருளும் பக்தியும் காற்றில் நெரிசலை உண்டுபண்ணி இந்த உலகை உய்வித்துக் கொண்டிருக்கின்றன.

v

ஞாயிற்றுக்கிழமைகளில் திருமணங்கள் வைப்பதுபோல, அந்த நாளில் திருவிழாக்கள் அமைந்தால் ஏதுவாக இருக்கும் என்கிற மனோ பாவத்திற்கு தகவமைந்த தலைமுறைகளின் காலம் தான் இது என்று புரிவதில் தவறில்லை. பதினைந்து நாள் திருவிழா, பத்து நாள் திருவிழா எனத் திருவிழாக்களின் நெடுநாட்கள் மக்களின் மனதை விழாக்கோலம் பூணச் செய்த காலம் கொஞ்சம் கொஞ்சமாக வண்ணம் வெளிறி வருகி றது. அவை சௌகரியம் போல ஒரு நாள் அளவிற்கு அல்லது ஒரு தொலைக் காட்சிப் பெட்டியின் அளவிற்கும் கூடக் குறைந்துவிட்டதை நாமறிவோம்.

நீண்ட நாட்கள் திருவிழாக்கள் அவை நிகழும் பகுதிகளை, சிற்றூரை, கிராமத்தை அவற்றின் அன்றாடங்களிலிருந்து மீட்டு அந்தப் பிரத்தியேக நாட்களுக்கான மேடைகளாக்கிக் கொள்பவை. மஞ்சள் தெளிப்பது, வேப்பிலை, மாவிலைத் தோரணங்கள் அமைத்துக்கொள்வதென ஒவ்வொரு வீட்டிலும் திருவிழாவின் வாசனை கமழ்ந்திருக் கும். கொண்டாட்டங்கள் தவிர்த்து இவ்வகை யான திருவிழாக்கள் சமூகத்தின் பண்பாட்டு விழுமியங்களை தெருக்களில் விளையாடும் குழந்தைகளின் மகிழ்ச்சிகரமான மனத்தினுள் பூட்டி வைத்துவிடுகின்றன. அப்படிப் பூட்டப் பட்ட பண்பாட்டுக் கூறுகள் அந்த ஈரச் சூழலில் அடுத்தத் தலைமுறைகளும் விரும்பக் கூடியவை யாக வேர் பிடிக்கின்றன. கடை வீதிகளில் வாங்கித் தரப்படும் சின்னச் சின்னப் பரிசுப் பொருட்களினூடாக திருவிழாக்கள் பேசு பொருளாகும் வாழ்வைக் கடந்துவந்த நாம், நம் பிள்ளைகளுக்கு அவை வெறும் ஓர் விடுமுறைத் தினமாக, உப்பு சப்பற்றதாக மாறி வருவதைக் கண்டும் காணாமலிருக்கிறோம்.

vv

எல்லோரும் அப்படியான மன நிலையில் இருக்கிறார்கள் என்று பொத்தாம் பொதுவாகவும் சொல்லவரவில்லை. விதிவிலக்காக, பண்பாட்டு விளக்குகளாக சிலர் இருக்கிறார்கள். அதனால், திருவிழாக்கள் இப்போதும் அங்கங்கே விமரிசை யாகவே கொண்டாடப்படுகின்றன என்றால், அதனை மறுப்பதற்கில்லை. ஆனால் இந்த எழுத்துக்களினூடாக பதியப்படும் ஆதங்கத்திற்கு அவை ஒரு பிரதிவாத பதில் மட்டுமே.

எளிய மக்களின் திருவிழாக்கள் இன்னமும் தமது பச்சைத் தன்மை மாறாமல் யுகங்களைக் கடந்து கொண்டுதான் இருக்கின்றன. தலை முறைகளுக்கு அவற்றின் நெறிகளை இமி பிசகாமல் கையளிப்பதன்

எளிய மக்களின் திருவிழாக்கள் இன்னமும் தமது பச்சைத் தன்மை மாறாமல் யுகங்களைக் கடந்து கொண்டுதான் இருக்கின்றன. தலை முறைகளுக்கு அவற்றின் நெறிகளை இமி பிசகாமல் கையளிப்பதன் மூலம் காலா காலமாய்த் தாங்கள் வாழ்ந்தி ருந்த வாழ்வை, தங்கள் மரபை, கலாச்சாரத்தை, பண் பாட்டை, சுருங்கச் சொன் னால் அம்மக்கள் தங்கள் இருத்தலை இந்தப் பூமியில் நிறுவிக்கொள்கிறார்கள். எழுதப்படாத வாழ்வு கொண்டோரின் ஒற்றை அடையாளமாய் அவர்களின் திருவிழாக்கள் அமைந்துவிடுகின்றன. தவிர ஒருபோதும் அவர்கள் தமது இருத்தலுக் கான அடையாளத்தை விட்டுக் கொடுப்பதாயும் இல்லை.

கடந்த 19 ஆம் தேதி அன்று அப்படியொரு திருவிழாவில் பார்வையாளனாகக் கலந்து கொள்ளும் வாய்ப்புக் கிடைத்தது.

v

டிஜிடல் உலகின் பார் கோடுகள் இன்னமும் வரையப்படாத, தொல் குடிகளின் எஞ்சியிருக்கும் மிகச் சில அடையாளங்களுள் ஒன்றாக இருந்து, சமகாலச் சமூகத்தின் அசூரவேக வாழ்வியலுக்கு வெளியே, தங்களது ஆதி சூரியனுக் கிழேயே இன்னமும் தங்கள் தினசரிகள் புலர்கின்றன என்று காலத்தை எதிர்கொள்ளும் இருளர் சமூக மக்களின் கன்னிமார் திருவிழா கொண்டாடப் படுகிறது என்று கேள்வியுற்று, அந்தச் சிறு கிராமத்தின் சித்திரை இருளுக்குள் பயணித்து, காலை முதல் காய்ந்தப் பாறைகளின் வெப்பப் பெருமூச்சுகளினூடாக கோயிலை அடைந்த போது இரவுமணி 10:08 ஆகியிருந்தது.

படோடாபங்கள் அற்ற எளிய அழகியக் கோயில். சுற்றியிருந்த மரங்களுக்கு மஞ்சள் குங்குமம் வைக்கப்பட்டு, அவைகள் கோயில்கள் தேவையற்ற, வானுக்கும் பூமிக்குமாக கன்னிமார் அம்மன்களாக அசைந்துகொண்டிருந்தன. கொரோனா அச்சுறுத்தல் மற்றும் அரசு வழி காட்டுதல்கள் படி சொற்ப மாகச் சிலரே கூடியிருந்தனர். ஆனால் அது தவிரவும் ஒரு திருவிழாவிற்கான முழுமை ஏதோ வகையில் குறைந்திருப் பதை உணர்ந்து, மற்றொரு மரத்தினை அம்மனாக மாற்றிக்கொண்டிருந்த ஓர் சகோதரியிடம் கேட்ட போது, “இன்னும் அம்மா ஊர்கோலம் முடிஞ்சி வரலை சார், இன்னிக்கி நெல (நிலை) கெரகம், இந்நேரம் ஊரெல்லாம் சுற்றி ஆகியிருக்கும், வர்ர நேரம்தான், அப்படி சேர்ல உக்காருங்க” என்றார்.

v

இப்போதே மணி இரவு 10 ஐத் தாண்டி விட்டது, இன்னமும் கரகம் கோயில் வந்து சேரவில்லையென்றால்... என்று யோசிப்பதைப் புரிந்தது போல, அருகிலிருந்தவர், “இதுக்கே இப்படி என்றால், கரகம் சாயும்காலம் 3 அல்லது 4 மணிக்குக் கோயிலிலிருந்து புறப்பட்டிருக்கும், கிட்டத்தட்ட 7 மணி நேரமாக ஒருவர் கரகத்தைச் சுமந்து வெறும் காலுடன் இந்தக் கோடையில் ஊர் சுற்றி நடந்து வர்றாரே, அதை யோசித்துப் பாருங்க” என்றார். கன்னிமார் அம்மன்களின்மீது மானசீகமாய் பக்தி மிகுந்தது.

அந்தக் கோயிலின் மூத்தப் பூசாரியின் மகன் அல்லது கோயிலின் அடுத்தத் தலைமுறையாளர் கன்னியப்பன் அங்கு வந்ததும் பேச்சு திருவிழாவின் மகத்துவம் பற்றித் திரும்பியது.

“ஒரு சித்திரை விட்டு மறு சித்திரையில்தான் இந்தத் திருவிழா வைப்பது எங்கள் ஐதீகம். இன்று ’நெல கெரகம்’ , நாளிக்கி சக்திக் கெரகம், மறாநாள் நாடகம் வச்சி திருவிழாவை முடிச்சுக்குவோம். கரகம் வந்ததும் இறக்கி சாங்கியம் எல்லாம் செய்துட்டு ஊர் மக்கள் கொடுத்த பச்சை நெல்மணி களை பாறை உரலில் போட்டுக் குத்தி, அரிசியாக் கிப் பச்சப் பந்தல் மேல் அடுப்பு மூட்டி, அம்மாளுக் குப் பொங்கல் வைப்போம். பாற பூசை செய்வது முக்கியமான விசயம்” என்று பூரித்த மனதுடன் பெருமிதம் பொங்க விவரித்தபடி, அருகிருந்த ஒரு பெரும் பாறையைக் காட்டினார் கன்னியப்பன். அவரிடம், அதென்ன பச்சைப் பந்தல் என்றதும், கோயிலுக்கு அருகில் சில அடிகள் தூரத்தில் போடப்பட்டிருந்த பந்தலிடம் அழைத்துச் சென்றார். ஒரு ஆறுக்கு நான்கடி போலான அளவில் நான்கு கழிகள் நடப்பட்டு மேலே வேப்பி லைக் கொத்துக்களால் அடர்த்தியாக மூடி, அதன் மீது கழனி மண் பரப்பி பந்தலின் மீதே அடுப்பு மூட்ட ஏதுவாக பந்தல் அமைக்கப்பட்டிருந்தது.

ஐதீகம் என்பதைத் தாண்டி இந்த நுணுக்க மான வழிபாட்டு வழிமுறைகள் எத்தனைக் காலங்கள் கடந்து கொஞ்சமும் பிசகாமல் இன்று இவர்களிடம் வந்து சேர்ந்திருக்கிறது, என்று எண்ணுகையில், அந்த முது மக்களை நினைத்து கன்னிமார் அம்மனை நோக்கி கை கூப்பினேன். இந்தப் பந்தல் எந்தவித டிஜிடல் ஆக்கிரமிப்புக்கும் ஆட்படாமல் இப்படியே இன்னும் பலத் தலைமுறைகள் கடந்து தொன்மத்தின் சாட்சியமாக இருக்க வேண்டும் என்பதே அப்போதைய ஆதங்கம் நிறைந்த வேண்டுதலாக இருந்தது.

ஒரு சமூகத்தின் வளர்ச்சி, முன்னேற்றம் என்பவை அச்சமூகத்தின் சகல வாழ்வுக் கூறுகளின் தன்னிறைவு என்பதாக அல்லாமல், சமகால வாழ்க்கை முறைகளின் தாக்கத்திற்கு ஆட்படுவது அல்லது அதற்கொப்ப கலாச்சார, பண்பாட்டு, மற்றும் மரபுக் கூறுகளில் மருவலை ஏற்படுத்திக் கொள்வது என்பதாகப் புரிந்துகொள்ளப்பட்டி ருப்பதைப் பரவலாகக் கண்டு வருகிறோம். இதில், இப்படியானப் புரிதல்களின் நிரூபணமாக, முதலில் கைவிடப்படுவது திருவிழாக்களின் ஐதீக முறை களாகவே இருக்கின்றன. முற்போக்கு என்கிற கருதுகோளின் அடிப்படையில், ஐதீக வழிமுறைகள் எல்லாவற்றையும் மூடப் பழக்கங்களோடு ஒப்பிடுவது என்பதை மேற்சொன்ன வரலாற்று விழுமியங்கள் குறித்தான ஒரு பொறுப்பற்றச் செயல் என்றே கருதலாம். மூடப் பழக்கங்களைக் களைவது வேறு, ஒரு திருவிழாவின் ஓர்மைத் தன்மைக்கான அடுத்தடுத்த நுண்ணிய நெறி முறைகளை தவிர்ப்பது வேறு அல்லவா?

கன்னியப்பனுக்கு முன்னதாகவே அவரது பெருமிதம் கலந்த ஆர்வம், பாறை பூசை நடக்கக் கூடிய இடத்திற்குக் அழைத்துப் போனது. “பச்சை நெல் குத்தி, அரிசி இடித்து, மாவிலக்குப் போட்டு, வர்ணித்து, வணங்கி, அம்மாவை அழைப்போம். கன்னிப் போடச் சொல்ல, அவ மனசு வச்சு யார் மேல வந்து எறங்குறாளோ அவங்கக்கிட்ட அருள்வாக்குக் கேட்டு மேற்கொண்டுத் திரு விழாவை நடத்துவோம்” என்று தொடர்ந்து கொண்டிருந்தார் அவர்.

கன்னிமார் தெய்வத்திடம் அருள் கேட்கும் இந்த மொத்த நிகழ்வையே கன்னிப் போடுதல் என்கிறார்கள் என்பது புரிந்தது.

இரண்டாம் நாள், காலையிலேயே ’சக்தி கரகம்’ என்கிற வழிபாட்டிற்குள் பயணித்தது திருவிழா. அருகிலிருந்த விவசாயக் கிணற்றுக்குள் வைத்து கரகம் ஜோடிக்கப்பட்டது. மஞ்சள் காப்புக் கட்டி, தீவிர விரத முறைகளைக் கடைபிடித்து வந்தவர், மருள் வந்து ஆடி கரகத்தை ஏந்த, கிணற்றுப் படிக்கட்டுகள் ஒவ்வொன்றிலும் கற்பூரம் ஏற்றி அம்மனை வரவேற்று மேலே அழைத்து வந்து ஊர்கோலத்திற்கு அனுப்புகிறார்கள்.

ஊருக்குள் எல்லாச் சமூகத்தைச் சார்ந்த மக்களும் முன் கூட்டியே ஆயத்தமாகி, அம்மனுக்கு அர்ப்பணிப்பு நிறைந்த பக்தியுடன் கூடிய வரவேற்பு வாசல்தோறும் கொடுக்கப்படுகிறது. இந்தத் தொல்குடி மக்களின் கரகத்தை ஒவ்வொரு வீட்டு வாசலிலும் மக்கள் தீப ஆராதனை செய்து மனதார வணங்கி வழியனுப்புகிறார்கள். மாறாதப் புன்னகை யுடன் அம்மன் அருள்பாலித்து விடைபெறுகிறாள். அம்மனின் பிறந்தவீடு என்று கருதப்படும் அந்தக் கிராமத்திற்கு வந்ததும் அங்கு தாய் மகளாகிவிடு கிறாள். ஊர் தேடி கரக உருகொண்டு வந்த மகளுக்கு அங்கே சீர் செய்யப்படுகிறது. மக்கள் உரிமையோடு அரிசி உள்ளிட்டத் தானியங்களையும் வழிபாட்டுப் பொருட்களையும் அள்ளித்தந்தும் நேர்த்திக்கடன் செலுத்தியும் வழியனுப்புகிறார்கள்.

அதன் பிறகு, இங்கே, கோயிலில், பிறந்தவீடு சென்று திரும்பும் அம்மனை வரவேற்க, புகுந்த வீட்டுக் காரர்களான விழாக் குழுவினர் தயாராகின் றனர். கரகம் வந்ததும் ஆரத்தி எடுத்து, பொட்டு வைத்து அம்மனை கோயிலுக்கு அழைத்துச் சென்று இறக்கி அமர்த்துகிறார்கள். இந்த மொத்த நிகழ்விலும் வழி நெடுகவும் அம்மனை மகளாகக் கொஞ்சுதல், தாயாக வணங்குதல் என வழிவழி வந்தப் பாடல்களை அதே வழிவழியான பிரத்யேக இசையினை இசைத்தபடி பெண்களும், ஆண்களும், இளைஞர்களும், பிள்ளைகளும் பாடிவருகிறார்கள். சிறுவர்களின் உதடுகள் பாடலுக்கு அனிச்சையாய் அசைகின்றன. அது அடுத்தத் தலமுறைக்கான விதை வேர் பிடித்துவிட்டதை உணர்த்துகிறது.சித்திரை வெயில் அந்தப் பாடல் வரிகளின் ஈரத்தில் சொட்டச் சொட்ட நனைந்து நகர்ந்தபடியிருக் கிறது.

திருவிழாக்கள் எங்கும் நடக்கலாம். சடங்கு களும் சம்பிரதாயங்களும் நிறைந்திருக்கலாம். ஆனால் இப்படியானத் திருவிழாக்களில் தெய்வத் திற்கும் சாமானியருக்கும் இடையில் பாசத்தைத் தவிர எதுவும் இருப்பதில்லை. எவரும் அம்மனை தொடுகிறார்கள், அலங்கரிக்கிறார்கள், கால்களில் விழுந்துக் கண்ணீர் ததும்புகிறார்கள், “ஏண்டி இப்படிச் செய்ற” என்று சண்டையிடுகிறார்கள். இதுவொரு தெய்வீக உணர்வுக்கும் சராசரி வாழ்வுக்கும் இடையேயான தனித்துவமான அன்பின் முடிச்சு என்றே தோன்றுகிறது.

”அம்மனை படம் எடுக்கல்லாமா” என்றால் “அதுக்கென்ன சார் தாராளமாக எடுத்துக்கங்க” என்றபடி, “எந்தக் காலத்துக்கும் எங்க அம்மாவ உட மாட்டம் சார், எங்க அப்பாவுக்குப் பொறவு இப்ப நானு, எனுக்குப் பொறவு எம்மவன்... அப்பிடியே எந்த நெலமிக்கிப் போனாலும், வாழ்ந்தாலும் சாஞ்சாலும் எங்கப் பழக்கம் மாறாது., நாளிக்கி வாங்க சார், உங்களுக்கும் அம்மாக் கிட்ட நல்லது கெட்டது கேட்டுக்குனு, ஆட்டம் (நாடகம்) பாத்துட்டுப் போவலாம்” என்று கபடின்றிச் சிரித்தக் கன்னியப்பனிடம் கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது.

இரவு நேர ஊரடங்கைக் காரணம் சொல்லி விடைபெற்று கோயிலைக் கடந்து அந்த மண் பாதையில் நுழைகையில் தூரத்தில் கேட்கிறது...

நீ வாம்மா என் தெய்வம்

மொகம் பார்த்து நாளாச்சி

நீ வாம்மா என் தேவி

ஒனக்காகக் காத்திருக்கேன்

நீ வாம்மா என் தாயி

மொகம் பாத்து நாளாச்சி

கொட்டு மேளம் கொட்டும் போதும்

என்னடி கோபமோ

நீ வாம்மா என் தாயி

பூங் கரகம் காத்திருக்கு

நீ வாம்மா என் தெய்வம்

கொடிக் கம்பம் காத்திருக்கு

நீ வாம்மா என் தேவி

திரி சூலம் காத்திருக்கு...

கொட்டு மேளம் கொட்டும் போதும்

என்னடி கோபமோ

ஹோய்ய்ய்.

"இப்படியெல்லாம் நாம அந்தக் கன்னிமாரு அம்மன வேண்டி விரும்பி கூப்பிட்டாலும், அவ வரதுக்கு தாமசம் ஆகும்.

அது ஏன்னா...

ஆங்...

இம்மா நாள் கழிச்சி நாம இப்பதான அந்த அம்மாளுக்கு கெரகம் ஜோடிச்சி அலங்காரம் அலங்கரிச்சி தல மேல சொமந்து ஊரெல்லாம் சுத்திவந்தோம்

ஆங்...

அதனால ஊரல்லாம் பாத்து அருள் பாலிச் சிட்டு ஆர அமர வந்து சேர தாமசம் ஆகுது. கட்டாயம் நம்ம கனவுல வந்து நிப்பா. அதனால...

நீ வாம்மா என் தெய்வம்

மொகம் பாத்து நாளாச்சி

ஒரு கொட்டு மேளம் கொட்டும் போதும்

என்னடி கோபமோ

நாங்க கொட்டு மேளம் கொட்டும் போதும்

என்னடி கோபமோ...

ஒரு சந்தன அபிசேகம்

மஞ்ச குங்கும அலங்காரம்

நீ வாம்மா என் தாயி

மொகம் பாத்து நாளாச்சு....

மண் பாதை முடிந்து வண்டி ஊர்ச் சாலையில் நுழைகையில் எதிரில் இருந்தக் குடிசைச் சுவற்றில் ‘இந்த வருடம் மஹா சிவராத்திரியை, வீட்டிலிருந்தபடியே நேரலையில் கொண்டாடிக் களிக்க லாம், ரெஜிஸ்டர் செய்தால் ருத்ராட்சம் ஒன்று இலவசமாக அனுப்பி வைக்கப்படும்’ என்று அறிவிக்கும் பழையப் போஸ்டர் ஒன்று கிழிந்துத் தொங்கிக்கொண்டிருந்து.

uday010521
இதையும் படியுங்கள்
Subscribe