வசந்தாவின் தாய் - உறூப் தமிழில் : சுரா

/idhalgal/eniya-utayam/vasanthas-mother-uroob-tamil-sura

சுய உணர்விழந்து விழுந்துவிடுவாள் என்று எல்லாரும் எதிர்பார்த்தார்கள் என்று தோன்றுகிறது. "அவளைத் தாங்கவேண்டுமா' என்றும் யாரோ அழைத்துக் கூறுவது காதில் விழுந்தது. தாங்குவதற்கு வரவும் செய்தார்கள். அப்படி நினைத்ததில் தவறில்லை. ஒரே மகள் இறந்து கிடப்பதைப் பார்க்கும் தாய் சுய உணர்வை இழக்காமல் இருப்பாளா?

ஆனால், எதுவுமே நடக் கவில்லை. வசந்தாவின் இறந்த சரீரத்தை நோக்கி அவள் மெதுவாக... மெதுவாக... காலடியை எடுத்துவைத்துச் சென்றாள். மாதக்கணக்கில் தூக்கமில்லாமல் காத்திருந்தாள். எல்லா சாத்தியங்களையும் பயன்படுத்தி மரணத்துடன் போராட்டம் நடத்தினாள். எனினும், தோல்வியடைந்து விட்டாள். சுற்றியிருக்கும் விளக்குகள் அணைந்த கோவிலைப் போன்ற அந்த முகத்தையே சிறிதுநேரம் பார்த்துக்கொண்டு நின்றிருந்தாள்.

"வசந்தாவோட அம்மா... போய்ப் படுங்க' என்று அருகிலிருந்து ஒரு ஆண் குரல் ஒலிலிக்குமென்று அவள் எதிர்பார்த்தாள். ஆனால், அது கேட்கவில்லை. அந்த மனிதர் எங்கு போனார்? முற்றிலும் நொறுங்கிப்போய் ஏதாவது இடத்தில் குனிந்த நிலையில் அமர்ந்திருப்பாரோ?

ஆட்கள் எல்லாரும் பிரிந்து போய்விட்டால், இரக்கத்துடன் தன்னை நெருங்கிவருவார் என்னும் விஷயம் தெரியும்.

அப்போதுதான் தன்னை அடக்கி நிறுத்த இயலாமலிருக்கும். "வசந்தாவோட அம்மா... அமைதியா இருங்க' என்று அவர் கூறும்போதுதான், மனதை அடக்குவதற்கு சிரமமாக இருக்கும்.

அவரால் அடக்கமுடியுமா? ""சுடுகாட்டுக்கு ஆள் போயாச்சுல்ல?'' யாரோ சாளரத்திற்கு அப்பாலிருந்து உரத்த குரலில் அழைப்பது காதில் விழுந்தது.

""ம்...'' பெரச்சன் மேஸ்திரியின் கனமான குரலைத் தெரிந்துகொள்வதற்கு சிரமமாக இல்லை.

சிறிது நேரம் சென்றவுடன், பிணவண்டி வரும். அந்த வண்டிக்குமேலே எழுதிவைக்கப்பட்டிருக்கும் வாசகம் அப்போது மனதில் தோன்றியது. "தெய்வமே... உன் கருணையை இறந்த ஆன்மாவுக்கு அளிக்கவேண்டும்.'

கடவுளுக்கு முடியுமானால் அளிக்கட்டும். நேற்றுவரை அவளும் அப்படித்தான் நம்பிக்கொண்டிருந்தாள். இப்போது எல்லா பிரார்த்தனைகளும் வழிபாடுகளும் ஸ்தோத்திரங்களும் பூஜைகளும் வெறும் ஆவிதான் என்று தோன்றுகிறது. எந்தச் சமயத்திலும் ஒரு துளி ஈரத்தைக்கூட உண்டாக்காத ஆவி. "இந்த கானல் வெள்ளத்தில் மூழ்கித் தேடினால் என் குழந்தை திரும்ப கிடைக்காது.'

அவள் சிந்தித்துப் பார்த்தாள்- தான் ஏதாவதொரு குழந்தைக்கு ஏதாவதொரு துரோகத்தைச் செய்திருக்கி றோமா என்று. இல்லை... அப்படிப்பட்ட சிந்தனைகளுக்கு மனதில் இடமே இல்லை. மிகப்பெரிய தொல்லைகளுக்கு ஆளானபோதுகூட, பழிக்குப்பழி வாங்கவேண்டுமென்று தோன்றியதில்லை. அதற்குப்பிறகும் அதிகமாக சிந்திக்க முடியவில்லை.

எரிந்துகொண்டிருக்கும் சிதை ஒரு பொன்னாலான திரைச் சீலை என்று தோன்றியது. அந்த திரைச்சீலைக்கு அப்பால் சுய உணர்விழந்து விழுந்துவிடுவாள் என்று எல்லாரும் எதிர்பார்த்தார்கள் என்று தோன்றுகிறது. "அவளைத் தாங்கவேண்டுமா' என்றும் யாரோ அழைத்துக் கூறுவது காதில் விழுந்தது. தாங்குவதற்கு வரவும் செய்தார்கள். அப்படி நினைத்ததில் தவறில்லை. ஒரே மகள் இறந்து கிடப்பதைப் பார்க்கும் தாய் சுய உணர்வை இழக்காமல் இருப்பாளா?

எரிந்துகொண்டிருக்கும் சிதை ஒரு பொன்னாலான திரைச் சீலை என்று தோன்றியது. அந்த திரைச்சீலைக்கு அப்பால் அழிவற்ற ஒரு உலகம் இருக்கிறதென்பது புரிந்தது.

அங்கு நுழைந்து செல்லக்கூடிய மனித ஆன்மாக்கள் புதிய ஒளியைப் பெறுகின்றன.

உதிராத இலைகளும் வற்றாத ஊற்றுகளும் உள்ள அந்த உலகத்தைப் பற்றி எவ்வளவோ நேரம் மனதில் நினைத்திருக்கிறாள். அங்கு அனைத்துமே அழகாக இருந்தன. அப்போது மரணமென்பது நடக்கக்கூடிய ஒரு காலம் என்பதையும் நினைத்தாள்.

இன்று அந்த திரைச்சீலை இருண்டு புகைப்படலமாக மாறிவிட்டது. அந்த புகைப்படலத்தில் அனைத்தும் முடிவடைகிறது.

அதற்கு அப்பால்...?

இருட்டு... இருட்டு...

வேதனை நிறைந்திருக்கும் இதயத்தைத் தாங்கிப் பிடித்தவாறு ஏராளமான நபர்கள் அந்த இருட்டில் ஏதோவொன்றைத் துருவித் தேடிக்கொண்டிருக் கிறார்கள் என்று தோன்றியது.

""அவளுக்கு குடிக்க ஏதாவது கொண்டுவந்து கொடுங்க.''

யாரோ வந்து காதில் கேட்டார்கள்: ""காலிபி வேணுமா?''

""வேணும்.''

தாகமாக இருந்தது. காபியை உறிஞ்சிப் பருகும்போது, பல வருடங்களுக்குமுன்பு வசந்தா பாலை உறிஞ்சிக் குடித்தது ஞாபகத்தில் வந்தது. சரீரம் முழுவதும் சிலிலிர்த்தது. ஆனால், மனதின் மேற்பகுதி முழுவதும் இருட்டாக இருந்தது.

இந்த குழந்தை ஒருநாள் எழுந்து நின்று கேட்கும்... "அப்பா எங்கே?' என்று.

அப்படிப்பட்ட விசாரிப்புகள் ஆரம்பமாவதற்கு முன்பே அந்த மனிதர் வந்துசேர்ந்தார்.

""இனி... காபி வேணுமா?''

""வேணாம்.''

""பாவம்... மனசு உறுதியா இருக்கறதுனாலதான் அவள் பச்சைமரத்தை அறுப்பதைப்போல தேம்பித் தேம்பி அழாம இருக்கா...'' அப்படிக் கூறியவள் யசோதாம்மா. அவளைப் பற்றி நினைத்துப் பார்ப்பதென்பதே சந்தோஷம் அளிக்கக்கூடிய ஒரு விஷயம். இரண்டு பிள்ளைகளை குழிக்குக் கொடுத்துவிட்டபிறகும், கூந்தலில் பிச்சிப் பூவுடனும் உதட்டில் புன்னகையுடனும் கணவருடன் சேர்ந்து திரைப்படம் பார்ப்பதற்கும், கீதை சொற்பொழிவுக்கும் போகக்கூடிய அந்தத் தாயைப் பார்க்கும்போது பொறாமை உண்டாகும். பொன்னாலான தட்டினைப் போன்ற பிரகாசமான முகம்... எப்போதாவது ஒருமுறை அந்தத் தட்டு சிவக்கும். அந்த பிரகாசத்தை யாரும் அவ்வளவாக பொருட்படுத்துவதில்லை. அந்த அளவுக்கு இளகிய மனம் கொண்டவள் யசோதாம்மா என்ற விஷயம் எல்லாருக்கும் தெரியும்.

சென்ற வாரம் கீதையின் சொற்பொழிவு மழையில் நனைந்து முடிந்து திரும்பிவந்தபோது, டாக்டரின் வாசற்படியில் அவளைப் பார்த்தாள். அன்று அவள் கூறிய வார்த்தைதான் இப்போது ஞாபகத்தில் வருகிறது. அதுதான் இறுதியான உண்மை. பிறந்த வர்கள் அனைவரும் இறப்பார்கள். பரிகாரமற்ற இந்த விஷயத்தில் கவலைப்படாமல் இருப்பதற்குக் கற்றுக்கொள்ள வேண்டியதுதான் படிப்பு. அப்போது அவள் கேட்டாள்: "வசந்தா என்னைக்கு மருத்துவமனையை விட்டுப்போவா?'

கூற இயலவில்லை. அவள் கடந்துசெல்லும்போது, காதில் அணிந்திருந்த சிவப்புநிறக் கம்மல்களின் ஒளி கன்னத்தில் பட்டு மின்னியது. இப்போதும் அந்த கம்மல்கள் காதில் இருக்கலாம். ஆனால், கண் விழித் தால் கண்ணீர் ஒழுகிவிடும். ஒரு பக்கமாக சாய்ந்து படுத்தாள்.

சாய்ந்து படுத்திருக்கும்போது, ஒரு கை மகளின் சரீரத் தில்தான் பொதுவாகச் செல்லும். ஒரு கை தலையில்...

அவள் தலையணையை எடுத்து நெருக்கமாக வைத்துக்கொண்டு, அதில் கையை வைத்தாள்.

அப்படிச் செய்தபோது, மனதில் ஒரு அடி விழுந்ததைப்போல தோன்றவில்லை. மரத்துப்போய் விட்டதோ? ஒரு விஷயம் மட்டும் ஆச்சரியத்தை உண்டாக்கியது. அவருடைய குரல் கேட்கவில்லை. "வசந்தாவோட அம்மா... தூங்குறீங்களா?' என்று அழைத்துக் கேட்கவில்லை.

எல்லாரும் பிரிந்து சென்றபிறகு பேசலாமென்று நினைத்திருப்பார். இல்லாவிட்டாலும்... ஆட்களுக்கு மத்தியில் வைத்து அவர் வசந்தாவின் தாயிடம் அவ்வளவுதானே பேசுவார்?

இனியும் அவர் "வசந்தாவின் அம்மா' என்றுதான் அழைப்பாரா? கடந்த எட்டு வருடங்களாக அழைத்துவந்த பெயரை திடீரென்று மாற்றிக்கொள்ள முடியுமா?

வசந்தா இல்லாமல் போயிருந்தால், அவர் தன்னைப் பார்த்திருப்பாரா? எட்டு வருடங்களுக்குமுன்பு... எனினும் நேற்று நடந்ததைப்போலவே தோன்றுகிறது. மருத்துவமனையின் கட்டிலில் படுத்திருக்கும் குழந்தையைப் பார்த்துக்கொண்டு தூக்கமில்லாமல் அமர்ந்திருந்தாள். மருத்துவமனை பேரமைதியில் மூழ்கியிருந்தது. கட்டில்களுக்கு மத்தியில் கடந்துசெல்லும் வெண்புறாவைப் போன்ற பார்வதி என்ற நர்ஸின் காலடிச் சத்தம் மட்டும் கேட்டது. பார்வதி என்ற நர்ஸ் சிறிது நேரம் அருகில்வந்து நின்றுகொண்டு கேட்டாள்.

"ராத்திரியிலும் பகல்லயும் நீங்கதானே குழந்தைக்குப் பக்கத்துல இருந்துக்கிட்டிருக்கீங்க?'

"நான் இந்த குழந்தையோட தாய்.'

"அப்பா இல்லியா?'

இருப்பதாகக் கூறுவதா? இல்லையென்று கூறுவதா?

"இங்க இல்ல.'

"தூரத்தில வேலையா?'

"ம்.'

அந்த முனகலைக் கேட்டதும் குழந்தையின் தளர்ந்துபோன கையை மெதுவாகப் படுக்கையில் வைத்துவிட்டு, நர்ஸ் பார்வதி அவளுடைய கண்களையே பார்த்தாள். அவளும் பார்த்தாள். இருவரும் இருவரையும் அடையாளம் தெரிந்துகொண்டார்கள் என்று தோன்றியது.

கனிவான குணம்கொண்ட அந்த நர்ஸ் அதற்குப்பிறகு குழந்தையின் தந்தையைப்பற்றி எதுவுமே கேட்க வில்லை. நோயாளியின் விஷயத்தைத் தவிர...

காய்ச்சல் திடீரென்று அதிகமானது. சரீரத்திலிருந்து ஆவி பொங்கி வருவதைப்போல தோன்றியது. குழந்தையின் தொண்டையில் ஒரு முனகல்... அழைத்தால், அழைப்பைக் கேட்கவில்லை. தலையணைகளை எடுத்து குழந்தையின் அருகில் தாங்குவதற்காக வைத்துவிட்டு நர்ஸ் இருக்கும் அறைக்குச் சென்றாள்.

யாருமில்லை. திரும்பவும் கட்டிலை நோக்கி வந்தாள். மீண்டும் சென்றுபார்த்தாள். மீண்டும் திரும்பி வந்தாள்.

மூன்றாவது முறையாகத் திரும்பிவந்துவிட்டு, "தெய்வமே, நீ என்னை கைவிட்டுட்டியா?' என்று மனதிற்குள் கேட்டபோது, "இல்லை' என்று கூறுவதைப்போல அந்த மனிதர் வந்தார். நான்கு கட்டில்களைக் கடந்து படுத்திருக்கும் ஒரு நோயாளியின் கட்டிலுக்கு எதிராக இருந்த வெளிவாசலில் நின்றுகொண்டிருந்தார்.

இரண்டு நாட்களுக்குமுன்பு ஒருமுறை கழிவறைக்குப் போய்விட்டுத் திரும்பி வந்தபோது, அந்த மனிதரை அங்கு பார்த்ததைப்போல தோன்றியது. இப்போது நினைத்துப் பார்த்தாள். குழந்தையின் நோய் பற்றிய விஷயத்தைத் தவிர, எதுவுமே மனதில் பதிந்து நிற்கவில்லை.

அவர் கேட்டார்: "என்ன வேணும்?'

தாய் வெடித்து அழுதுவிட்டாள். உதவிக்கு ஒரு கை நீளும்போது எதற்கு வெடித்து அழவேண்டுமென்று கேட்டால், பதில் இல்லை. அழுதுவிட்டாள். நாம் எதிர்பார்த்த கைகள் அல்ல- பல வேளைகளில் நம்மை நோக்கி நீள்பவை.

அந்த மனிதர் குழந்தையை நோக்கித் திரும்பினார். நெற்றியில் கைவைத்துப் பார்த்தார். பிறகு எதுவுமே கூறாமல் நர்ஸ் இருக்கும் அறைக்குள் சென்று மறைவதைப் பார்த்தாள்.

அவர் முழுமையாகக் கண்களிலிருந்து மறைந் ததும், மனதில் அவருடைய உருவம் நிழலாடியது. கறுத்த முகமும் வெண்மையான பற்களும் பெரிய ரோமம் எழுந்துநிற்கும் செவிகளும்... அந்த கண்கள் பெரியவையாக இருந்தன.

வசந்தா அப்போதும் முனகிக்கொண்டிருந்தாள்.

சிறிதுநேரம் சென்றபிறகு, நர்ஸ் பார்வதியையும், டாக்டர் நம்பியாரையும் அழைத்துக்கொண்டு அந்த மனிதர் வந்தார்.

"ஏன் கூப்பிடல?' இளகிய மனம்கொண்ட நர்ஸ் பார்வதி மெதுவான குரலில் கேட்டாள். அதைக் கேட்டதும் கண்கள் நிறைந்து ததும்பின.

டாக்டர் நம்பியார் சோதித்துப் பார்த்தார்.

பிறகு ஐஸ் பேக்குகள் வந்தன. ஊசி வந்தது. சிறிது நேரம் சென்றபிறகு டாக்டர் நம்பியார் கூறினார்:

"பதைபதைக்கறதுக்கோ அழறதுக்கோ எதுவுமே இல்ல. குழந்தைக்கு உடம்பு குணமாயிடும்'

அதைக் கூறியபோது, டாக்டர் நம்பியாருக்கு எப்போதும் இருப்பதைவிட அதிக அழகு இருப் பதைப்போல தோன்றியது.

"எதுவும் சாப்பிடல.'

"பரவாயில்ல. நாளைக்கு சரியாயிடும். ஒரு இஞ்ஜெக்ஷன் ட்யூப் வாங்கமுடியுமா?'

தயக்கத்திற்கு மத்தியில் அந்த மனிதர் கூறினார்: எழுதித் தாங்க. மறுநாள் காலையில் அந்த ட்யூப்பை அவளுடைய கையில் கொண்டுவந்து தந்து விட்டுக் கூறினார்: "நான் நர்ஸ்கிட்ட சொல்லியிருக்கேன்...'

"சரி...'

"வசந்தாவோட அம்மா... நீங்க பதைபதைக்க வேணாம். பயப்படுறதுக்கு எதுவுமே இல்லைன்னு டாக்டர் சொல்றார்.'

அன்றே அனைத்தும் முடிந்திருந்தால், இன்று இந்தமாதிரி மரத்துப்போய் அமர்ந்திருக்க வேண்டிய சூழ்நிலை உண்டாகியிருக்காது.

ஆசையைக் காட்டி அழைத்தார்.

அந்த நேரத்தில் அவர் எப்போதும் வசந்தாவின் கட்டிலுக்கு அருகில் வரவோ, வேண்டியதை விசாரிக்கவோ செய்யாமலிருந்திருந்தால், இந்த துக்கத்தை அன்றே அனுபவித்திருப்பாள்.

"நீங்க யார்?' என்று கேட்கக்கூடிய மன தைரியம் சில நாட்களுக்கு இல்லாமலிருந்தது. குழந்தை விஷயத்தில் நிம்மதி உண்டானபிறகுதான் எல்லாவற்றையும் கேட்டுத் தெரிந்துகொண்டாள். நான்கு கட்டில்களுக்கு அப்பால் படுத்திருப்பது மனைவி. மூன்றாவது பிரசவம். இந்த முறையும் கிழித்து, குழந்தையை எடுத்தார்கள். ஒரு இறந்த குழந்தை...

அவளுடைய கட்டிலுக்கு அருகில் சென்று தலையைத் தொட்டுத் தடவியபோது, கண்களில் நீர் நிறைந்திருக்க அவள் கேட்டாள்: "வசந்தா நல்லா இருக்காளா?'

"பரவாயில்ல...'

"எத்தனை குழந்தைங்க இருக்காங்க?'

"இந்த ஒண்ணே ஒண்ணு....'

"ஒண்ணாவது இருக்குதே!' அதைக் கூறியபோது, அந்த கண்கள் கலங்கவும், வெளுத்த முகம் சிவக்கவும் செய்தது. அவள் போர்வையின் நுனிப் பகுதியைப் பிடித்துக் கண்களைத் துடைத்துக்கொண்டே கேட்டாள்: "கணவருக்கு வேலை?'

"கமிஷன் ஏஜெண்ட்...' பொய் கூறவேண்டாமென்று நினைத்தாள்.

"சரி...'

மேலும் இரண்டு நாட்கள் சென்றால், மருத்துவமனையிலிருந்து செல்லலாம் என்ற நிலை இருந்தது. அவர் கூறினார்: "இவளையாவது திரும்பக் கொண்டுபோக முடிஞ்சதே! இனி... இந்த விஷயத்திற்கு மருத்துவமனைக்கு வரவேண்டியதில்ல.' எதுவும் கூறவில்லை. சந்தோஷமாக இருக்கிறது என்பதைப்போல நடித்தாள்.

இதற்கிடையில் எழுந்தமர்ந்து பார்லி பருகிக்கொண்டிருந்த வசந்தா கேட்டாள்: "மாமா... நீங்களும் போறீங்களா?'

"போகணுமே!'

"மாமா... நீங்க போகவேணாம். என் மாமாவாச்சே!'

அவர் அதற்கு பதில் கூறவில்லை. அவளுடைய தாடையைப் பிடித்து உயர்த்திக்கொண்டு சிரித்தார்.

கவலை நிறைந்த ஒரு நிலை எப்போதும் இருந்தாலும், மொத்தத்தில் அந்த சூழல் நிம்மதியளிக்கக்கூடியதாக இருந்தது. அன்றிரவு அந்தப் பெண்ணுக்கு கடுமையான காய்ச்சல் வந்தது. மூன்று நாட்கள் தொடர்ச்சியாக காய்ச்சல் இருந்தது. எப்போதும் கட்டிலுக்கு அருகிலேயே இருந்து அவள் அக்கறையுடன் கவனிப்பதற்காகச் சென்றாள். அப்போது கூறினார்: "வசந்தாவோட அம்மா...

நீங்க அங்கே போங்க. குழந்தைக்கு வேண்டியதைச் செய்யுங்க. இங்க நான் இருக்கேனே!'

சிறிது நேரம் நின்றுவிட்டுத் திரும்பி வருவாள். நர்ஸ் பார்வதியும் டாக்டர் நம்பியாரும் அடிக்கடி வந்து பார்த்தார்கள். ஐஸ் பேக்கும், ஊசி போடுதலும், ஆறுதல் வார்த்தைகளும், அவ்வப்போது தெர்மாமீட்டரை வைத்துப் பார்த்தலும்... அனைத்தும் முறைப்படி நடந்தன.

"இப்ப எப்படி இருக்கு?'

"அப்படியேதான்... வசந்தாவோட அம்மா, உங்களுக்கு என்ன தோணுது?'

"காய்ச்சல் கொஞ்சம் குறைஞ்சதைப்போல தோணுது.'

எனினும், கூப்பிட்டால் பேசுவதில்லை. தொண்டையில் எப்போதும் முனகல். கண்களைச் சிமிட்டியவாறு, தலையை சாய்த்துக்கொண்டு, மல்லாந்து படுத்திருந்தாள்.

மறுநாள் அவர் கட்டிலுக்கு அருகில்வந்து கூறினார்: "உங்க நிலைதான் என்னோட நிலையும்... வாழ்க்கையில உங்களுக்கு இருக்கறது இந்த மகள் மட்டும்தான்னு நீங்க சொன்னீங்களே? பிள்ளைங்க இல்லாத இந்த பொண்ணுதான் எனக்குத் துணையா இருக்கா...'

அதைக் கூறியபோது, முதன்முறையாக அந்தக் கண்களில் கண்ணீரைப் பார்த்தாள். அந்த முரட்டுத்தனமான மனிதனுக்குள் இந்த அளவுக்கு மென்மையான ஒரு மனிதன் இருக்கிறானா?

கடலை வர்த்தகத்தின் கணக்குகளையும் ஊர் மரியாதையும் அறிந்திருக்கும் மனிதர் என்று மட்டுமே முதலில் தோன்றியிருந்தது. பிறகு தெரிந்தது- பெரிய இதயமும் இருக்கிறது என்ற விஷயம். எனினும், இந்த அளவுக்கு இளகிய மனம் இருக்கிறதென்பதை நினைக் கவில்லை.

அப்படியே இல்லையென்றாலும், வெளியே தெரியும் மனிதருக்கும், உள்ளே இருக்கும் மனிதருக்குமிடையே உள்ள வித்தியாசம் எவ்வளவு! எத்தனை எதிர்பாராத செயல்கள் மனிதரிடம்! அழகான புன்சிரிப்பைப் பார்க்கும்போது, அந்த மனம் நிலவைப் போன்றது என்று மனதில் நினைப்பாள். அப்படி நினைப்பதில் இருக்கும் ஆபத்து ஞாபகத்தில் இருக்கிறது. பல வேளைகளில் நீண்ட பெருமூச்சுடன் வேண்டிக் கொண்டாள்: "எனக்குத் தேவை அன்பு... அன்பால் என்னை மூடுங்க!'மூடினாள்.

சில நாட்கள் கடந்தபிறகு, அந்த மூடல் மட்டுமே எஞ்சியிருந்ததென்று கூறுவதற்கில்லை. இந்த குழந்தையும் எஞ்சியது.

ஆண் நிரந்தரமாக விலகிச் சென்றுவிட்டார். இறுதிக் கடிதத்தில் இவ்வாறு எழுதியிருந்தார் என்பது ஞாபகத்தில் வந்தது: "தவறு என்னுடையதாக இருக்கலாம். மன்னிப்பீர்களா? மன்னிக்காமல் என்ன செய்யமுடியும்?'

அதற்குப் பிறகும் ஏராளமான இரவுகள் எதிர்பார்த்திருந்தாள். வாசற்படிக்கு அருகிலிருந்த தெருவிளக்கின் திறந்த கண்களையும், வானத்திலிருந்த சந்தன திலகத்தையும் மாறி... மாறிப் பார்த்தவாறு படுத்திருந்தாள். தூக்கம் வராத வாரங்களும் மாதங்களும் கடந்துசென்றன.

பிறகு புரிந்தது- வேறொரு ஆணிடம் "அன்பால் மூடு' என்று கூற ஆரம்பித்துவிட்டாள் என்று. வெடித்து அழுதாலும், எந்தவொரு எதிர்ப்பையும் வெளிப்படுத்தவில்லை.

பாட்டி கூறினாள்: "உன் தலையில களிமண்ணு பெண்ணே!'

பதில் கூறவில்லை.

மாமா கூறினார்: "அந்த ஆளை அப்படி விடமுடியாது.'

தந்தை அந்த கருத்தினை ஏற்றுக்கொண்டார்.

எனினும், அவர்கள் கூறுவது சரியென்று தோன்றவில்லை. மூடிய அன்பினை அவ்வளவு சீக்கிரம் விலக்கி எடுப்பதற்கு முடியாதே! அன்று விவேகமற்ற எதையும் செய்யாமல் விட்டது நல்லதாகப் போய்விட்டதென்று இப்போது தோன்றுகிறது.

ss

""இன்னும் கொஞ்சம் காபி குடிக்கிறீங்களா?''

யாரோ இடையில் புகுந்து கேட்கிறார்கள்.

""வசந்தாவோட அம்மா... நீங்க ஏன் பதிலே சொல்லாம இருக்கீங்க?''

""குடிக்கிறேன்.''

பருகியபோது சந்தோஷமோ சந்தோஷக்குறைவோ... எதுவுமே தோன்றவில்லை. சுற்றிலும் சற்று கண்களை ஓட்டினாள்.

அறை முழுவதும் பெண்கள்... அந்த வருடம் நடைபெற்ற அனைத்து மரணங்களைப் பற்றியும் பட்டியல் போடும் செயல் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. முன்னால் உள்ள தாம்பாளத்தில் வைக்கப்பட்டிருந்த வெற்றிலையும் தீர்ந்துவிட்டது. தத்துவ அறிவுவரை பலவற்றையும் பேசிக்கொண்டிருந்தார்கள். எதைப்பற்றித் தெரியாது? அடுத்த அறையில் இராமாயணம் வாசித்துக்கொண்டிருந்தது அப்போதும் காதில் விழுந்தது. அதைக் கேட்டவாறு படுத்திருந்தபோது, ஒரு சுகம் தோன்றுகிறது.

"விசால குணம் கொண்ட புத்துணர்ச்சி நிறைந் தவன்...'

யாராக வேண்டுமானாலும் இருக்கட்டும். அந்த பாடல் இரக்க உணர்வுள்ளதாக இருக்கிறது. அந்த அளவுக்கு நன்றாக இருந்தது. "ஆனந்தம் நிறைந்தவன்... ஆணவமற்றவன்...!'

சுற்றிலும் கண்களை ஓட்டியபோது, கேட்க வேண்டுமென்று தோன்றியது- ஓ... இங்கு ஒரு மரணம் நடந்திருக்கிறது. இல்லையா?

யாருடைய மரணம்?

வசந்தாவின் மரணம்.

அதை நினைத்தபோது, நெஞ்சில் தாங்கிக்கொள்ள முடியாத, திருகு உளி இறங்கியதைப் போன்ற வேதனை...

இந்த வேதனையை இரண்டாவது முறையாக அனுபவிக்கிறாள்.

முதல்முறை மருத்துவமனையில் இருந்தபோது, கேட்பதற்கு ஆள் இருந்தது. "வசந்தாவோட அம்மா... இந்த குழந்தை நல்லா இருக்குதா?' அந்த கேள்வியின் இறுதிப்பகுதியை அவள் நினைத்துப் பார்த்தாள்.

ஆனால், இன்று அந்த குரல் எங்கு போனது?

அன்றுகேட்ட அதே அளவு லாவகத்துடன் இன்று அவரால் கேட்க முடியதென்பதை அவள் நினைத்துப் பார்த்தாள். அன்று வசந்தா ஒரு அப்பாவி சிறுமியாக மட்டும் இருந்தாள்.

அதற்குப்பிறகு பல விஷயங்கள் நடந்துவிட்டன. மருத்துவமனையிலிருந்து மனைவியின் பிணத்திற்குப் பின்னால் அமைதியாகவும் கவலை நிறைந்தவராகவும் நடந்துசென்ற அந்த மனிதர் திரும்பிப் பார்ப்பார் என்று நினைக்கவில்லை. மாறானதுதான் நடந்தது.

அன்று மாலை அவர் வசந்தாவின் கட்டிலுக்கு அருகில் வந்து, சிறிதுநேரம் பார்த்துக்கொண்டு நின்றிருந்தார். அவள் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள். "இனி நான் குழந்தையைப் பார்த்துக்கறேன்.'

எதுவுமே நடக்காததைப்போல அந்த மனிதர் தொடர்ந்து கூறினார்: "எனக்கு சுமை இல்ல.

அதைக்கேட்டதும் நெஞ்சில் ஒரு குத்து உண்டானதைப்போல தோன்றியது. எனினும், எதுவும் கூறவில்லை. நான்கு கட்டில்களுக்கு அப்பால் கிடக்கும் கட்டிலை சற்று பார்த்தாள். அங்கு வேறொரு பெண் வீங்கிய வயிறுடன் படுத்திருந்தாள். அமைதியாக உறங்கிக்கொண்டிருந் தாள்.

அவர் விசிறியை எடுத்து வீசியபோது, வசந்தாவின் கண்கள் ஒளிர்ந்துகொண்டிருப்பதைப் பார்த் தாள். "மாமா, நான் உங்களை எதிர்பார்த்துக் கிட்டிருந்தேன்.'

"அதனாலதானே மாமா வந்திருக்கேன்.'

"மாமா, இனிமே நீங்க போயிடுவீங்களா?'

"இல்ல.'

பிறகு போகவுமில்லை. காபி கொடுத்ததும், கஞ்சி கொடுத்ததும்... அனைத்துமே மாமாதான். தாயை அவள் மறந்துவிட்டதைப்போல தோன்றியது. சற்று தாங்கி அமரவைக்க வேண்டுமென்றால், மாமா வேண்டும். வேறு யார் சென்றாலும், வசந்தா ஆர்ப்பாட்டம் செய்ய ஆரம்பித்துவிடுவாள்.

நர்ஸ் பார்வதி ஒரு நாள் கேட்டாள்: "இவரு உங்களுக்கு யாரு?'

"தேவதூதன்' என்று பதில் கூறவேண்டுமென்று தோன்றியது. "உறவு எதுவுமில்லை' என்று கூறாமல் இருக்கமுடியாதே!

அந்த விஷயத்தைக் கூறியபோது, நர்ஸ் பார்வதி சற்று ஆச்சரியத்துடன் அவளைப் பார்த்துக்கொண்டே கேட்டாள்: "உண்மையாவா?'

"உண்மை.'

பிறகு ஒரு நாள் அவள் டாக்டர் நம்பியாரிடம் மெதுவாகக் கூறுவது காதில் விழுந்தது.

"அவரை கவனிச்சீங்களா?'

"பாவம்.'

அதைக் கேட்டதும், அவரை இனிமேலும் அங்கு கட்டாயப்படுத்தி இருக்கச் செய்வதில் அர்த்தமில்லை என்று தோன்றியது. "ரெண்டு நாள் ஆனதும் வசந்தா ஆஸ்பத்திரியிலிருந்து போலாம்னு டாக்டர் சொல்லியிருக்காரே...'

அந்த கேள்வியைக் கேட்டதும், அவர் ஆச்சரி யத்துடன் முகத்தை உயர்த்திப் பார்த்துவிட்டுக் கேட்டார்.

"அதுக்காக?'

"இனிமேலும் எங்களுக்காக சிரமப்படணுமா' என்று கூறுவதற்கு கஷ்டமாக இருந்தது. "சிரமம் இருக்குன்னு யார் சொன்னாங்க? எனக்குன்னு இப்போ இருக்கக்கூடிய வாழ்க்கை இதுதான். ஆனா, நான் இருக்கறது உங்களுக்கு சிரமத்தைத் தருதுன்னு தோணுது. நான் போறேன்.'

வசந்தாவின் தலையைத் தடவிவிட்டு, அந்த மனிதர் வாசலை நோக்கி நடந்தபோது பின்னால் போகா மலிருக்க முடியவில்லை.

"மன்னிக்கணும்.'

"நீங்க தவறு எதுவும் செய்யலையே?'

"எங்களோட சிரமத்துக்காக சொல்லல.'

"பிறகு?'

"ஒரு ஆளை எவ்வளவு காலத்துக்கு...'

வாக்கியத்தை முழுமை செய்வதற்குமுன்பே அவர் திரும்பி நின்று முகத்தையே பார்த்தார். அந்த இரண்டு விழிகளும் நிறைந்து ததும்பிக் கொண்டிருந்தன.

அந்த அளவுக்கு பெரிய ஒரு நிமிடம் வாழ்க்கையில் உண்டானதில்லை.

அனைத்தும் இப்போது ஞாபகத்தில் வந்தன. பொருத்தமற்ற நேரத்தில் எதற்கு எல்லாவற்றையும் நினைத்துப் பார்க்கவேண்டும்? நினைவுகள் அப்படித்தான் என்று தோன்றுகிறது.

""இனிமேலும் எதுக்காக தாமதிக்கணும்?'' அப்பாலிருந்து பெரச்சன் மேஸ்திரியின் கரகரப்பான குரல் கேட்டது.

அவர்கள் சுடுகாட்டிற்குச் செல்வதற்குத் தயார் நிலையில் இருக்கிறார்கள் என்று தோன்றுகிறது. எனினும், அந்த குரல் கேட்கவில்லையே! எல்லா சிரம சூழ்நிலைகளிலும் கேட்ட அந்த குரல்: "வசந்தாவோட அம்மா...'

குழந்தை மருத்துவமனையைவிட்டு வீட்டிற்கு வந்தபிறகு, அந்த மனிதர் தன்னுடைய வர்த்தக விஷயமாக அல்லாமல், நீண்டநாட்கள் வெளியே சென்றதில்லை.

பலவற்றையும் கேட்கவேண்டுமென்று நினைத்தாள். எதையும் கேட்பதற்கு தைரியம் வரவில்லை. பக்கத்து வீட்டைச் சேர்த்த பெண் கேட்ட ஒரு கேள்வியை அவள் ஒருநாள் வெளிப்படுத்தினாள்: "அவரு இங்க நிரந்தரமா தங்க ஆரம்பிச்சிட்டாரா?'

அதைக் கேட்டதும் முகத்தை உயர்த்தி மெதுவாக சிரித்துவிட்டுக் கூறினாள்: "வசந்தாவோட அம்மா, உங்களுக்கு என்ன பதில் சொல்லணும்னு விருப்பமோ, அதைச் சொல்லுங்க.'

அவள் என்ன கூறுவாள்?

மீண்டும் சிரித்தார்.

அதற்குப்பிறகு எட்டு வருடங்கள் கடந்து சென்றுவிட்டன. இதற்கிடையில் பல விமர்சனங்களும் வந்தன. சொந்தத்திலிருந்த ஒரு சித்தி வந்து கேட்டாள்: "இது நல்லதா? ஊரும் பேரும் தெரியாத இந்த மனிதர் இங்கவந்து தங்கறது?....'

"அவரோட ஊரும் பேரும் எனக்குத் தெரியும்.'

"என்ன?'

"வசந்தாவோட மாமா...'

"அப்படியொரு ஆளை எங்க யாருக்கும் தெரியாது.'

"வேணாம். வசந்தாவுக்குத் தெரியும். அது போதும். சித்தி, இதை சொல்றதுக்காவது பல வருடங்களுக்குப்பிறகு நீங்க வந்தீங்களே! சந்தோஷம்.'

அப்படியெல்லாம் கூறுவதற்கு எங்கிருந்து தைரியம் வந்தது என்பதைச் சிந்தித்துப் பார்த்தபோது ஆச்சரியம் உண்டானது. அன்றிரவு கூறிய வார்த்தையும் ஞாபகத்தில் இருக்கிறது.

"வசந்தாவோட அம்மா... கடவுள் எவ்வளவு கருணை உள்ளவன்!'

காரணம்?

"நாம அடையவேண்டியதை ஏதாவதொரு ஒரு நாள்ல அவன் நமக்குக் கொண்டுவந்து தருவான்.

ஆனா நாம தேடிய வழியில் இல்ல அவன் வர்றது..!'

கூறியது முழுவதும் புரியவில்லையென்றாலும், அவருடைய மனதைப் புரிந்துகொள்ள முடிந்தது.

அந்த கடவுள் இன்று எங்கே?

வசந்தாவுக்கென்று இருந்த ஒரே கடவுள் அவளு டைய மாமாதான். அவள் விருப்பப்பட்டதை யெல்லாம் கொடுத்தார். இளவரசியைப்போல வளர்த்தார். பல வேளைகளில் கூறக்கூடிய ஒரு வாக்கியம் ஞாபகத்தில் வந்தது: "வசந்தாவோட அம்மா.. குழந்தை பெரியவளா ஆகுறப்போ... எனக்கு பயம் வருது.' "எதுக்கு?' சிரித்துக்கொண்டே கேட்டாள். "சிரிக்கவேண்டிய விஷயமில்ல இது. வசந்தாவோட அம்மா... அவ ஏதோ ஒரு இளவரசனோட சேர்ந்து போவான்னு வச்சிக்கங்க. பிறகு... பிறகு...' சிறிது நேரம் கண்ணுக்குத் தெரியாத ஏதோவொன் றைத் தேடுவதைப்போல சிந்தனையில் மூழ்கிவிட்டு அவர் தொடர்ந்தார்: "நம்மோட வாழ்க்கை என்னாகும்?'

"இருட்டு!'

அன்பு காரணமாக என்னவோ கூறுவதைப்போல தோன்றியது. இன்று அவளுடைய இளவரசன் வந்துவிட்டான். அழைத்துக்கொண்டு சென்று விட்டான். அதற்குப்பிறகும் அவருடைய குரல் கேட்கவில்லையே!'

""பார்க்க வேண்டியவங்க கடைசியா...''

""மூடுறதுக்கு வரட்டுமா?'' அந்த குரல் தெளிவாகக்கேட்டது. அப்போது எழுந்திருக்காமல் இருக்கமுடியவில்லை. கண்களைத் துடைத்துக் கொண்டு, பக்கத்து அறையின் வாசலுக்குச் சென்றாள். யாரோ தேவையில்லாமல் தாங்கினார்கள். எல்லாரும் அமைதியாக வழிவிட்டு நின்றுகொண்டிருந் தார்கள்.

வசந்தா படுத்திருந்த இடத்தைப் பார்த்தாள்.

அந்த முகம் மட்டுமே மூடப்படாமல் இருந்தது.

அங்கு பார்த்தவாறு நின்றுகொண்டிருந்த அந்த கறுத்த முகத்தையே சற்று நேரம் பார்த்தாள்.

விலகிநின்று சிறிதுநேரம் கடந்தபிறகு, பிணத்தை வண்டியில் ஏற்றினார்கள். அது நீங்கியது. பார்த்துக்கொண்டு நிற்க மட்டுமே முடிந்தது. உடன் செல்வதற்கு மனிதர்கள் கையற்றவர்கள் என்ற விஷயம் அப்போதுதான் புரிந்தது.

""வசந்தாவோட அம்மா... போய்ப்படுங்க.''

அந்த குரலை அருகிலிருந்து கேட்டபோது, தாங்க முடியவில்லை. ""அவளோட இளவரசன் வந்துட்டான்.''

அதற்கு அவர் பதில் கூறவில்லை. முறிந்து... முறிந்து. விழுந்துகொண்டிருக்கும் நிமிடங்கள்... இறுதியில் கூறினார்: ""வசந்தாவோட அம்மா... அந்த தலை யணைக்கு அடியில நான் கொஞ்சம் நோட்டுகள் வச்சிருக்றேன். கொஞ்சம் பணம் கையில இருக்கிறது இல்லியா? நான் ஊருக்குப் போறேன். போனதும் பணம் அனுப்பிவைக்கிறேன். பிறகு... தொடர்ந்து இங்க பணம் கிடைக்கும்.''

எதுவுமே கூறமுடியாமல் திகைத் தவாறு நின்றிருந்தாள்.

வாசலை நோக்கி நடந்துசென்ற அவருடைய தோளைத் தொட்டாள். திரும்பிப் பார்த்தார். வசந்தாவின் தாய் நிறைந்த கண்களுடன் நின்று கொண்டிருந்தாள்.

வார்த்தைகள் மனதிற்குள் கிடந்து கொதித்துக்கொண்டிருந்தன. ஆனால், எதுவுமே வெளியே வரவில்லை. அவர் தோளில் கையை வைத்தார்.

""வசந்தாவோட அம்மா...'' வார்த் தைகளால் விளக்கிக் கூறமுடியாத நிம்மதியை அது அளித்தது. அதனால் இவ்வளவையும் கூறமுடிந்தது.

""அவளோட போகக்கூடிய வழி எனக்குத் தெரியல. ஆனா, வசந்தாவோட மாமாவோடயாவது...''

அவர் இறந்துவிட்டாரா? அந்த கண்களில் அசைவுகள் எதுவுமில்லையா?

திடீரென்று அந்த முரட்டுத்தனமான கை தோளில் வந்து விழுந்தது. அவர் கூறினார்: ""இருக்கறதுல அர்த் தமில்லன்னு தோணுச்சு. இல்லாம இருந்தா அர்த்தம் இருக்குன்னு இப்போ புரியது.''

சிறிது நேரம் சிந்தனையில் மூழ்கிய வாறு நின்றுவிட்டு, அவர் தொடர்ந்து கூறினார்: ""கடவுள் எவ்வளவு கருணை மனம் கொண்டவரா இருக்காரு!''

""கொடூரமானவன்!'' கூறிவிட்டாள்.

""அப்படி சொல்லக்கூடாது, வசந்தா ரொம்ப பெரியவளானா... ஒரு தாயானா.

தாயான வசந்தாவைத்தான் இப்போ எனக்குத் தந்திருக்காரு...''

""எனக்கு எதுவுமே புரியல.''

""புரிஞ்சிக்க முயற்சிக்கவேணாம்.

அனுபவிக்க முயற்சிக்கணும்.''

வசந்தாவின் தாய், அவருடைய தோளில் தொங்கியவாறு இன்னொரு அறைக்குள் சென்றாள்.

________________

மொழிபெயர்ப்பாளரின் உரை

ணக்கம்.

"இனிய உதயம்' வாசகர்களுக்கு என் இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்!

இந்த மாத "இனிய உதய'த்திற்காக மூன்று மாறுபட்ட மலையாள சிறுகதை களை மொழிபெயர்த்திருக்கிறேன். மூன்று கதைகளும் வித்தியாசமான கருக்களைக்கொண்டு எழுதப் பட்டவை.

"வசந்தாவின் தாய்' கதையை எழுதியவர் சாகித்ய அகாடெமி விருதுபெற்ற பிரபல எழுத்தாளரான உறூப் என்ற பி.ஸி. குட்டிகிருஷ்ணன். கயிறுமீது நடப்பதைப்போன்ற கரு. அதை மையமாக வைத்து ஒரு கதையை எழுதுவதென்பது சாதாரண விஷயமல்ல. ஒரு பண்பட்ட எழுத்தாளரால் மட்டுமே அந்த சாதனையைச் செய்யமுடியும். அதை மிகவும் அருமையாகச் செய்திருக்கிறார் உறூப். மருத்துவமனையையும், மரணமடைந்த வசந்தாவையும், அவளின் அன்பு அன்னையையும், அவர்களுக்கு உதவும் ஒரு நல்லமனம் படைத்த மனிதரையும் வைத்து எழுதப்பட கதை. எத்தனையோ வருடங்களுக்குமுன்பு இப்படியொரு கதையை அவரால் எப்படி எழுத முடிந்ததென்ற வியப்பு நம் அனைவருக்கும் உண்டாகும்.

"மறுபிறவி' கதையை எழுதியவர் சாகித்ய அகாடெமி விருதுபெற்றவரும், நவீன மலையாள இலக்கியத்தின் முன்னணி நட்சத்திரமுமான எம். முகுந்தன். எப்போதோ இறந்துவிட்ட மோஹனன் இப்போது உயிருடன் தன் நண்பர் தினேஷனுடன் வருகிறான் என்றால், கதையை வாசிக்கும் நமக்கு ஆச்சரியம் உண்டாகத்தானே செய்யும். யாரும் நினைத்துப் பார்க்கமுடியாத கரு. அதைத் தன் தனித்துவ பாணியில் எழுதிய முகுந்தனின் திறமைக்குப் பரிசாக... ஒரு பூச்செண்டு! கடவுள் படைத்த உலகில் வாழ விரும்பாமல், தான் படைக்கும் உலகில் சந்தோஷத்தைத் தேடும் தினேஷனை நம் எல்லாருக்கும் பிடிக்கும்.

"ஆனந்தவர்த்தனன்' கதையை எழுதியவர் சாகித்ய அகாடெமி விருதுபெற்ற மூத்த எழுத்தாளரான டி. பத்மநாபன். ஒரு எழுத்தாளரையும் அவருடைய மனைவியையும் மையமாக வைத்து எழுதப்பட்ட கதை. பத்மநாபனின் முத்திரை கதை முழுவதும் நிறைந்திருக்கிறது. கதையின் இறுதிப் பகுதி, டி. பத்மநாபனின் உதட்டில் மட்டுமல்ல- நம் உதடுகளிலும் புன்னகையை அரும்பச்செய்யும்.

பிறந்திருக்கும் புத்தாண்டில் இந்த வித்தியாசமான கதைகளை வாசிக்கும் உங்களுக்கு புத்துணர்ச்சி நிறைந்த புதிய அனுபவங்கள் கிடைக்கும்.

"இனிய உதயம்' வெளியிடும் என் மொழிபெயர்ப்புப் படைப்புகளைத் தொடர்ந்து வாசித்துவரும் உயர்ந்த இலக்கிய உள்ளங்களுக்கு என் இதயத்தின் அடித்தளத்திலிருந்து நன்றி.

அன்புடன்,

சுரா

uday010120
இதையும் படியுங்கள்
Subscribe