வசந்தா -எம்.முகுந்தன் தமிழில் : சுரா

/idhalgal/eniya-utayam/vasantha-m-mukundan-tamil-sura

ஞாயிற்றுக்கிழமை மாலை வேளை... பாட்டி திண்ணையில் நாற்காலியில் அமர்ந்திருக்கிறாள்.

நாற்காலி−க்குப் பின்னால் நின்றுகொண்டு ஜானகி பாட்டியின் தலையிலிருந்து பேன் எடுத்துக்கொண்டி ருக்கிறாள். தலை முழுவதும் நரைத்துவிட்டது. கறுத்த முடி என்று ஒன்றுகூட இல்லை. ஜானகி பேனைத் தேடினாள். கிடைத்தபோது, நகங்களுக்கிடையே வைத்து நசுக்கினாள்.

வசந்தாவும் தாயும் தெருவில் நடந்துவருவதைப் பார்த்தார்கள்.

பாட்டி கண்களுக்கு மேலே கையை வைத்துப் பார்த்தாள். ஆள் யாரென்று தெரியவில்லை. இரண்டு நிழல்கள் அசைந்து வந்துகொண்டிருந்தன.

நிறத்தைக்கொண்ட நிழல்கள்...

""ஜானு... யாருடி அது?''

""வசந்தாவும் அவளோட அம்மாவும்...''

""மாதவியா?''

பாட்டி நாற்காலியைவிட்டு எழுந்தாள். வாசலுக்கு சென்றாள். மாதவியம்மா தெருவில் நின்றுகொண்டே நலம் விசாரித்தாள்:

""என்ன மாதுவம்மா... நல்லா இருக்கீங்களா?''

""எங்கே போறே? வந்து உட்காரு.''

""போகணும் மாதுவம்மா. வர்றதுக்கு நேரமில்ல.''

""மாதவி, வந்து உட்காருன்னு உங்கிட்ட சொன்னேன்!''

மாதவியம்மா சிரித்தவாறு வாசலுக்கு வந்தாள். பின்னால் வசந்தாவும். வசந்தா செருப்பைக் கழற்றி வாசலி−ல் வைத்தாள். பாவாடை நிலத்தில் அசைந்துகொண்டிருந்தது.

""உட்காரு மாதவியம்மா.''

மாதவியம்மா அமர்ந்தாள். வசந்தா அமராமல், தாயின் நாற்காலியின்மீது சாய்ந்து நின்றுகொண்டி ருந்தாள்.

""ஆளுங்களைப் பார்த்தா அடையாளம் கண்டுபிடிக்கமுடியாத நிலையாகிட்டது. நாளாக நாளாக பார்வை சக்தி குறைஞ்சிக்கிட்டு வருது.''

""லட்சுமி எங்க?''

தினேஷனின் அம்மா மாடியில் இருக்கிறாள். பகல் முழுக்க நெருப்பின் வெப்பத்தால ஏற்பட்ட களைப்பைப் போக்கிக்கொண்டிருக்கிறாள்.

""தூங்கிக்கிட்டிருக்கான்னு நினைக்கிறேன். தினேஷா... உன் அம்மாவை இங்கே வரச்சொல்லு மகனே!.''

திண்ணையின் இரு பக்கங்களிலும் ஒவ்வொரு சிறிய அறைகள் இருக்கின்றன. சமீபத்தில் கட்டி சேர்த்தவை. தினேஷனும் ராஜனும் படிப்பதற்காக... தினேஷன் தன் அறையி−ருந்து வெளியே வந்தான்.

""வேட்டி கட்ட ஆரம்பிச்சாச்சா?''

வசந்தாவின் தாய் வியப்புடன் வேட்டி அணிந்திருந்த தினேஷனைப் பார்த்தாள். தினேஷன் வளர்ந்துகொண்டிருக்கிறான். பெரியவனாகிக் கொண்டிருக்கிறான்.

""தினேஷன் எவ்வளவு சீக்கிரம் பெரியவனா யிட்டான்?''

""உயரம் மட்டும்தானே இருக்கு? நெஞ்சில இருக்குற எலும்பை எண்ணிடலாமே! ஏதாவது உடல்நலக்கேடு இ

ஞாயிற்றுக்கிழமை மாலை வேளை... பாட்டி திண்ணையில் நாற்காலியில் அமர்ந்திருக்கிறாள்.

நாற்காலி−க்குப் பின்னால் நின்றுகொண்டு ஜானகி பாட்டியின் தலையிலிருந்து பேன் எடுத்துக்கொண்டி ருக்கிறாள். தலை முழுவதும் நரைத்துவிட்டது. கறுத்த முடி என்று ஒன்றுகூட இல்லை. ஜானகி பேனைத் தேடினாள். கிடைத்தபோது, நகங்களுக்கிடையே வைத்து நசுக்கினாள்.

வசந்தாவும் தாயும் தெருவில் நடந்துவருவதைப் பார்த்தார்கள்.

பாட்டி கண்களுக்கு மேலே கையை வைத்துப் பார்த்தாள். ஆள் யாரென்று தெரியவில்லை. இரண்டு நிழல்கள் அசைந்து வந்துகொண்டிருந்தன.

நிறத்தைக்கொண்ட நிழல்கள்...

""ஜானு... யாருடி அது?''

""வசந்தாவும் அவளோட அம்மாவும்...''

""மாதவியா?''

பாட்டி நாற்காலியைவிட்டு எழுந்தாள். வாசலுக்கு சென்றாள். மாதவியம்மா தெருவில் நின்றுகொண்டே நலம் விசாரித்தாள்:

""என்ன மாதுவம்மா... நல்லா இருக்கீங்களா?''

""எங்கே போறே? வந்து உட்காரு.''

""போகணும் மாதுவம்மா. வர்றதுக்கு நேரமில்ல.''

""மாதவி, வந்து உட்காருன்னு உங்கிட்ட சொன்னேன்!''

மாதவியம்மா சிரித்தவாறு வாசலுக்கு வந்தாள். பின்னால் வசந்தாவும். வசந்தா செருப்பைக் கழற்றி வாசலி−ல் வைத்தாள். பாவாடை நிலத்தில் அசைந்துகொண்டிருந்தது.

""உட்காரு மாதவியம்மா.''

மாதவியம்மா அமர்ந்தாள். வசந்தா அமராமல், தாயின் நாற்காலியின்மீது சாய்ந்து நின்றுகொண்டி ருந்தாள்.

""ஆளுங்களைப் பார்த்தா அடையாளம் கண்டுபிடிக்கமுடியாத நிலையாகிட்டது. நாளாக நாளாக பார்வை சக்தி குறைஞ்சிக்கிட்டு வருது.''

""லட்சுமி எங்க?''

தினேஷனின் அம்மா மாடியில் இருக்கிறாள். பகல் முழுக்க நெருப்பின் வெப்பத்தால ஏற்பட்ட களைப்பைப் போக்கிக்கொண்டிருக்கிறாள்.

""தூங்கிக்கிட்டிருக்கான்னு நினைக்கிறேன். தினேஷா... உன் அம்மாவை இங்கே வரச்சொல்லு மகனே!.''

திண்ணையின் இரு பக்கங்களிலும் ஒவ்வொரு சிறிய அறைகள் இருக்கின்றன. சமீபத்தில் கட்டி சேர்த்தவை. தினேஷனும் ராஜனும் படிப்பதற்காக... தினேஷன் தன் அறையி−ருந்து வெளியே வந்தான்.

""வேட்டி கட்ட ஆரம்பிச்சாச்சா?''

வசந்தாவின் தாய் வியப்புடன் வேட்டி அணிந்திருந்த தினேஷனைப் பார்த்தாள். தினேஷன் வளர்ந்துகொண்டிருக்கிறான். பெரியவனாகிக் கொண்டிருக்கிறான்.

""தினேஷன் எவ்வளவு சீக்கிரம் பெரியவனா யிட்டான்?''

""உயரம் மட்டும்தானே இருக்கு? நெஞ்சில இருக்குற எலும்பை எண்ணிடலாமே! ஏதாவது உடல்நலக்கேடு இருக்குமோன்னு பயமா இருக்கு.''

""ஒவ்வொருத்தரோட உடல் அமைப்பு... தடிமனா இல்லைன்னா என்ன? உடலுக்குக் கேடு வராம இருந்தாபோதும்.''

தினேஷன் மேலே ஏறிச் சென்றான்.

""மாதவி, எப்போ வந்தே?''

""இப்போதான் வந்தேன். தினேஷனைப் பத்தி பேசிக்கிட்டிருந்தோம். பிள்ளைங்க எவ்வளவு வேகமா வளர்றாங்க!''

""வசந்தா, நீ ஏன் உட்காராம இருக்கே? உட்காரு மகளே...'' அவள் அமரவில்லை. அவள் மெதுவாக தினேஷனின் அறைக்குள் நுழைந்து சென்றாள்.

""என்ன படிச்சிக்கிட்டு இருக்கீங்க?''

அவன் தலையை உயர்த்தாமல், பதில் கூறாமல் படிப்பதைத் தொடர்ந்துகொண்டிருந்தான்.

""புத்தகத்தோட பேரு என்ன?''

அவன் பேசாமல் இருந்தான்.

""தினேஷ் அண்ணா, ஏன் பேசாம இருக்கீங்க? கோவமா?''

முகத்தை உயர்த்திப் பார்த்தான். தரையில் அசைந்துகொண்டிருந்த பாவாடை... மெல்லிய பாவாடைக்கு அடியில் கால்களில் கொலுசு தெரிந்தது. நெற்றியில் கறுத்த திலகத்தை வைத்திருந்தாள்.

""புதினம்...''

""என்ன பேரு?''

அவன் கூறவில்லை.

அவளுடைய கண்களி−ருந்து மையின் வாசனை எழுந்து வந்தது.

""தினேஷ் அண்ணா... நீங்க சுற்றுலா போறீங்கள்ல?''

வாசிப்பது தொடர்ந்துகொண்டிருந்தது.

""நான் போறேன்.''

வாசிப்பது தொடர்ந்துகொண்டிருந்தது.

அவன் ஏதாவது கூறுவான் என்பதை எதிர்பார்த்து அவள் நின்றிருந்தாள். எதுவும் கூறவில்லை. தலையைத் தூக்க வில்லை. புத்தகத்தி−ருந்து கண் களை எடுக்கவில்லை.

அவள் காத்து நின்றிருந்தாள்.

அவன் பார்க்கவில்லை. பேசவில்லை. அவள் மெதுவாக அறையிலிருந்து கிளம்பினாள். திண்ணைக்குச் சென்றாள்.

""தினேஷன் என்ன சொல்றான் மகளே?''

தினேஷனின் தாய் அவளுடைய கையைப் பிடித்துக்கொண்டு கேட்டாள். கைத்தண்டு முழுவதும் கரிய வளையங்கள்...

""தினேஷ் அண்ணா சுற்றுலா போறார்ல?''

""சுற்றுலாவா? என்ன சுற்றுலா மகளே?''

தாய்க்கு எதுவுமே தெரியவில்லை.

தினேஷனின் வகுப்பிலும், வசந்தாவின் வகுப்பிலும், வேறு இரண்டு வகுப்புகளிலும் இருக்கும் பிள்ளைகள் ஒன்றுசேர்ந்து மலம்புழா அணைக்கட்டைப் பார்ப்பதற்காகச் செல்கிறார்கள்.

சனிக்கிழமை செல்வார்கள். ஞாயிற்றுக் கிழமை திரும்பிவருவார்கள். ஆர்வமுள்ள பிள்ளைகள் பதினைந்து ரூபாய்வீதம் கொடுக்கவேண்டும்.

""எனக்கு இது எதுவுமே தெரியாது.''

""தினேஷன் சொல்லலையா?''

""மத்தவங்களோட வாயைத் திறந்து பேசினாதானே சொல்றதுக்கு...''

காலையில் எழுந்து பள்ளிக்கூடத் திற்குச் செல்வான். மாலையில் வருவான்.

அறைக்குள் போய் இருப்பான். சாப்பிடக் கூடிய நேரம் வந்தா அழைக்க வேண்டும். அழைக்காவிட்டால் சாப்பிடமாட்டான். இரவில் நேரம் அதிகமானால், விளக்கை அணைத்து விட்டுப்படுக்குமாறு கூறவேண்டும். கூறாவிட் டால் படுக்க மாட்டான்.

விடுமுறை நாள் முழுவதும் அறைக்குள்ளேயே இருப்பான். அழைத்தால் மட்டுமே வெளியே வருவான்.

வசந்தாவின் தாய் கூறினாள்:

""தினேஷனுக்கு விவரம் இல்ல. பிள்ளைகளா இருந்தா விவரமா இருக்க வேணாமா?''

தினேஷன் கேட்கவேண்டும் என்பதற்காகத்தான் கூறினாள். கூறியது காதுகளில் வந்து விழுந்தது. ஆனால் அவன் கேட்கவில்லை. கேட்டாலும், கேட்வில்லை.

ஜானகி தேநீர் தயாரித்து, கூஜாவில் வைத்துக்கொண்டு வந்தாள். தாய் கப்பில் பரிமாறினாள். நான்கு கப் தேநீர்... பாட்டி கூறினாள்:

""எனக்கு வேணாம்.''

ஒரு கப் தேநீரை எடுத்தவாறு வசந்தா கேட்டாள்:

""தினேஷ் அண்ணாவுக்குக் கொடுக்கட்டுமா?''

""குடு... குடு...''

ss4

தாய் கூறினாள். அவள் அர்த்தத்துடன் சிரித்தாள்.

வசந்தாவின் தாயும் சிரித்தாள்.

""நீங்க ஏன் சிரிக்கிறீங்க? பேசறது காதுல விழல. கண்ணுக்கு பார்வையுமில்ல.''

பாட்டி பெருமூச்சுவிட்டாள். அவள் கண்களைக் கூர்மையாக வைத்துக்கொண்டு பார்த்தாள். வசந்தா தேநீருடன் தினேஷனின் அறையை நோக்கிச் சென்றாள்.

""இந்தாங்க... தேநீர்.''

அவன் தலையை உயர்த்தவில்லை. பார்க்கவில்லை.

""அம்மா தேநீர் குடிக்கச் சொன்னாங்க.''

""அங்கியே வை.''

மேஜையைச் சுட்டிக்காட்டினான். அவள் மேஜையின்மீது கப்பை வைத்தாள். தேநீரின் வாசனை அறையில் பரவியது.

அவன் தேநீரைப் பருகுவதைப் பார்ப்பதற்காக அவள் காத்து நின்றிருந்தாள். தேநீரி−ருந்து ஆவி வரவில்லை. வாசனை வற்றியது. தேநீர் குளிர்ச்சியாக ஆரம்பித்தது.

""வசந்தா... போலாமா மகளே?''

வசந்தாவின் தாய் அழைத்தாள். வசந்தா குனிந்த தலையுடன் வெளியே வந்தாள்.

வசந்தாவும் தாயும் சென்றுவிட்டார்கள்.

இரவில் சோறு பரிமாறும்போது தாய் தினேஷனிடம் கேட்டாள்:

""மகனே, நீ மலம்புழாவுக்குப் போகலையா?''

""இல்ல.''

""ஏன் போகல?''

""முடியாது.''

தந்தை வந்தபோது தாய் விஷயத்தைக் கூறினாள்.

தந்தை எதுவுமே கூறாமல், சாதாரணமாக "உம்' கொட்டினார். நீண்டநேரம் சிந்தனையில் மூழ்கினார்.

தாய் கூறினாள்:

""தினேஷனைப் பத்தி சிந்திக்கிறப்போ மனசுக்கு அமைதி கிடைக்கமாட்டேங்குது.''

""என்ன?''

""என் மகன் ஏன் இப்படி ஆயிட்டானோ... தெரியலையே!''

அப்போதும் தந்தை எதுவுமே கூறவில்லை.

அதே விஷயத்தைப் பற்றிதான் தந்தையும் சிந்தித்துக் கொண்டிருந்தார்.

காலையில் தந்தை பள்ளிக்கூடத்திற்குச் சென்றார்.

தலைமையாசிரியரின் அலுவலகத்திற்குச் சென்று, உல்லாசப் பயணத்திற்குச் செல்பவர்களின் பட்டிய−ல் தினேஷனின் பெயரையும் சேர்த்தார். பணத்தைச் செலுத்தினார். நான்கு வகுப்புகளி−ருந்து ஐம்பது பிள்ளைகள் செல்கிறார்கள். எழுபதுக்கும் மேற்பட்ட பிள்ளைகள் போகவில்லை. காரணம் அவர்களிடம் பணமில்லை.

தினேஷனின் தந்தையின் கையில் பணம் இருக்கிறது. பதினைந்து அல்ல. நூற்றைம்பதைக் கொடுப்பதற்குக்கூட தினேஷனின் தந்தையால் முடியும்.

கண்ணன் மாஸ்டர்தான் தினேஷனின் வகுப்பாசிரியர். கண்ணன் மாஸ்டருடன், தந்தை நீண்டநேரம் பேசிக்கொண்டிருந்தார். தினேஷனைப் பற்றிதான் பேசினார்.

""பத்து... பதினாலு வயசாச்சு... விவரமும் சுறுசுறுப்பும் இருக்கக்கூடிய நேரமில்லையா?''

கண்ணன் மாஸ்டர் கூறினார்:

""விவரம் இல்லைன்னா என்ன? படிப்பு விஷயத்தில ரொம்ப திறமைசாலிஆச்சே...''

""ஒரு வயசு வர்றவரைக்கும் இப்படித்தான் இருக்கும். சில பிள்ளைங்க அப்படித்தான். படிப்படியா சரியாகும்.'' கண்ணன் மாஸ்டர் தொடர்ந்து கூறினார்.

""என்னவோ தெரியல... அவனைப் பத்தி சிந்திக்கிறப்போ மனசுல கொஞ்சமும் அமைதி கிடைக்கமாட்டேங்குது.''

தந்தைக்கு மாஸ்டர் ஒரு சிகரெட் கொடுத்தார். தந்தை சிகரெட்டைப் பற்றவைத்தவாறு விடை பெற்றார்.

தந்தை தினேஷனிடம் கூறினார்:

""நீ சுற்றுலாவுக்குப் போகணும்.''

அவன் பேசவில்லை.

""பத்து... ஐம்பது பிள்ளைங்க போறாங்க. யாராவது போகாமலிருந்தா அதுக்குக் காரணம்- அவங்ககிட்ட பணம் இல்லாததுதான். உனக்கு என்னடா? பணம் இல்லையா? உன்கிட்ட எதுடா இல்லை? உனக்கு என்ன குறைடா?''

அப்போதும் தினேஷன் எதுவும் கூறவில்லை.

""ஒவ்வொருத்தரும் போறதுக்கு ஏங்குறாங்க. இங்க இருக்குற ஒருத்தனை மத்தவங்க வற்புறுத்த வேண்டியதிருக்கு.''

""அப்பா பள்ளிக்கூடத்திற்குப் போய் பணத்தைக் கட்டிட்டார் மகனே, நீ போகணும்.''

தாய் கூறினாள்.

அப்போது ராஜன் அங்குவந்தான். ஜெர்ஸி அணிந்திருந்தான். கால்களில் பூட்ஸ்கள். விளையாட்டு முடிந்து வருகிறான். வாச−ல் நுழையும்போது, கிணற்றின் கரையில் நின்று, பின்காலால் பின்பகுதியைச் சொறியக்கூடிய நாயைப் பார்த்தான்.

ஒரு கல்லை எடுத்து குறி தவறாமல் எறிந்தான்.

""நீ சுற்றுலாவுக்குப் போகலையாடா?''

""எங்களுக்கு அடுத்த மாசம். இன்னும் ஒரு மாசம் காத்திருக்கணும்.''

சட்டையை மாற்றிவிட்டு, வேட்டியை மடித்துக் கட்டியவாறு உற்சாகத்துடன் அவன் நடந்து சென்றான்.

வெள்ளிக்கிழமை இரவில் தினேஷன் வாசித்துக்கொண்டிருந்தபோது தாய் கூறினாள்:

""சீக்கிரம் படு... காலையில எழுந்திருக்க வேணாமா? பள்ளிக்கூடத்தில எத்தனை மணிக்கு இருக்கணும்?''

""எட்டு மணிக்கு.''

""அம்மா சீக்கிரமே கூப்பிடுவேன். கண் விழிச்ச வுடனே எழுந்திருக்கணும் புரியுதா?''

""ம்...''

தாய் விளக்கை ஊதினாள். அவன் படுத்தான்.

காலையில் தாய் அழைத்தாள். தினேஷன் கண் விழிக்கவில்லை. தாய் குலுக்கி அழைத்தாள். அவன் திரும்பிப் படுத்தான்.

""எழுந்திரு, மகனே... எழுந்திரு.''

தந்தை நுழைந்து வந்தார்.

""தினேஷன் எழுந்திரிக்கல.''

""நீ அந்த அளவுக்கு ஆயிட்டியாடா? நீ எழுந்திருக்கமாட்ட இல்லியா?''

தந்தை அவனைத் தூக்கி எழுந்திருக்க வைத்தார். தூக்கக் கலக்கத்துடன் அவன் கொட்டாவி விட்டான். தந்தை கத்தினார்:

""போ... போய் குளி.''

தந்தை அவனை அறையி−ருந்து திண்ணைக்குத் தள்ளிவிட்டார்.

""ஜானு... தினேஷனுக்கு சோப்பும் துண்டும் கொடு.''

தினேஷன் சென்று குளித்தான்.

""தேநீர் குடி மகனே.''

தினேஷன் தேநீரைப் பருகினான்.

""சட்டையை மாத்திக்கிட்டு வா. மணி ஏழரை யாயிடுச்சு.''

தினேஷன் ஆடையை மாற்றினான்.

சூட்கேஸை எடுத்துக் கையில் கொடுத்துவிட்டு, தாய் அவசரப்படுத்தினாள்:

""சீக்கிரம் போ... சீக்கிரம்...''

பெட்டியை எடுத்துக்கொண்டு தினேஷன் வெளியேறினான். காலியாகக் கிடந்த, இளம்வெயில் விழுந்த பாதையின் வழியாக பெட்டியைத் தூக்கிப் பிடித்தவாறு நடந்தான். தந்தையும் தாயும் அதைப் பார்த்துக்கொண்டு நின்றிருந்தார்கள்.

என் கடவுளே!

எட்டு மணிக்கு பிள்ளைகள் பள்ளிக்கூடத் திலிலிருந்து புறப்படுகிறார்கள். எட்டரை மணி வண்டிக்கு ரயில் நிலையத்தை அடையவேண்டும்.

தினேஷன் பள்ளிக்கூடத்திற்குச் செல்லவில்லை.

புகைவண்டி நிலையத்திற்கும் செல்லவில்லை.

ஒரு மணி நேரம் கடந்தபிறகு, பெட்டியைத் தூக்கிப் பிடித்தவாறு தினேஷன் திரும்பி வந்துகொண்டி ருப்பதைத் தாய் பார்த்தாள். தந்தையும்... தந்தை வாச−ல் நின்றுகொண்டிருந்தார். தினேஷன் தலையை உயர்த்தவில்லை. அறைக்குள் நுழைந்து சென்றான்.

தந்தை எதுவும் கூறவில்லை. தாயும் எதுவும் கூறவில்லை.

தந்தை ஒரு சிகரெட்டைப் பற்றவைத்து, புகையைவிட்டார்.

uday011119
இதையும் படியுங்கள்
Subscribe