அந்தச் சிறிய நகரத்தில் பல இடங்களிலும் உதுப்பானைப் பார்க்கலாம்.
ஹோட்டல்களின் வாசல்களில்... வண்டிப் பேட்டையில்... படகுத் துறையில்... தன்னைவிட எடை அதிகமாக இருக்கும் சுமைக்குக் கீழே... நகரம் உறங்கிய பிறகு, கடையின் திண்ணையில்.
முடிந்த வரைக்கும் அவன் பணி செய்வான். கிடைப்பதை வைத்து வாழுவான்.
உதுப்பானுக்கென யாருமில்லை. எனினும், அந்த இரக்க குணம் கொண்டவன் நினைப்பான்...
தனக்குச் சில பொறுப்புகள் இருக்கின்றன என்று.
அவனுடைய வாழ்க்கைத் தேவைகள் மிகவும் குறைவு. எனினும், அவனுக்கு அது பெரியது.
அவனும் நாட்களை நகர்த்திக்கொண்டிருந்தான்.
குருதியில் கலந்திருக்கும் மனக்குறைகளை அவன் தூங்கும் நேரத்தில் பாட்டாகப் பாடுவான்.
இதயத்திலும் அவனுக்கு வேதனைகள் குடி கொண்டிருந்தன. மர நிழலில் அமர்ந்து பாதையில் செல்பவர்களிடம் யாசிக்கும் குருடனையும், பனியில் நடுங்கிக் கொண்டும் வெயிலில் சுட்டெரிக்கப்பட்டுக் கொண்டும் மழையில் நனைந்து கொண்டும் பாதைகளின் ஓரத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் குழந்தைகளையும், தேநீர் கடைக்கு முன்னால் சென்று வெந்நீருக்காக கெஞ்சும் போது கொதிக்கும் வெந்நீர் தலையின் வழியாக ஊற்றப்பட்ட கிழவியையும் உதாசீனப்படுத்தும் செயலைப் பற்றி... குருதியில் கலந்திருக்கும் வேதனையை உதுப்பான் பொருட்டாக நினைக்கவில்லை.
இதயத்தின் வேதனையை அவன் அடக்கினான்.
பரிதாபப்படுவதுகூட அவனைப் பொருத்த வரையில் ஆணவம்தான்.
சகோதரர்களுக்கு உதவ வேண்டும் என்ற ஆசை அவனுக்கு உண்டு.
முடியவில்லை.
அவனும் வளர்ந்து வந்தான். தந்தையும் தாயும் இருந்திருந்தால், தங்களைத் தாங்கக்கூடிய ஒருவனாக அவன் இருப்பான் என்று கருதி சந்தோஷம் அடைந்திருப்பார்கள்.
ஓய்வாக இருக்கும் நேரங்களைப் பிரார்த்தனை செய்வதற்கும் சுவிசேஷ சொற்பொழிவுகளை கேட்பதற்கும் அவன் செலவிட்டான்.
காலப்போக்கில் பாதைகளின் ஓரங்களிலும் சந்தையின் மூலையிலும் நின்று கொண்டு வேதச் சொற்பொழிவு செய்வதும், குழந்தைகளுக்கு ஏசு கதைகளைக் கூறுவதும் அவனுடைய அன்றாட பணி கள் என்ற நிலை உண்டாகி, காலம் கடந்தோடியது.
அந்த நகரத்தின் ஒரு மூலையில் புதிதாக உண்டாக்கப்பட்ட ஒரு சாலையின் காரணமாக முக்கோண வடிவத்தில் கிடந்த ஒரு துண்டு இடத்தை வாங்குவதற்குத் தேவையான பணத்தை அவன் தயார் பண்ணினான். அவன் நிலத்தின் உரிமையாளனாக ஆனான். தன் சொந்த நிலத்தில் அவன் பணியை ஆரம்பித்தான்.
கிணறு தோண்டுவதுதான் வேலை... அந்த அளவிற்குத்தான் அந்த இடம் இருந்தது.

முடிந்த வரைக்கும் அவனே தோண்டினான்.
தேவைப்படும்போது, கூலிக்கு ஒரு ஆளை வைத்துக் கொண்டான்.
"இவன் என்ன ஒரு பைத்தியக்காரனாக இருக்கி றான்!'' என்று சிலர் கூறினார்கள்.
"ஏதாவது புதையல் கிடைக்கும்னு நினைச்சு, பாவம்...
பாடுபட்டுக் கொண்டிருக்கிறான்'' என்று சிலர் கூறினார்கள்.
கிணறு தாழ்ந்து வர...வர உதுப்பானின் உற்சாகம் அதிகரித்து வந்தது. மண் நீங்கி, கல் தெரிந்தது. சேற்று மண்ணாக ஆனது. மண்ணுக்கு ஈரம் இருந்தது. நீர்! நீரைப் பார்த்தான்.
உரிமையாளனின் மனம் குளிர்ந்தது.
அந்த சாதாரண மனிதன் தெய்வத்தை வணங்கி னான். உடன் பணியாற்றிய மனிதனுக்கு அன்று நான்கு அணா பரிசாகக் கிடைத்தது.
அன்று பணியில் நுழைந்த பிறகு, அவன் நீண்ட நேரம் நீரையே பார்த்துக் கொண்டு நின்றிருந்தான். அந்த கிணற்றில் தோன்றிய சிறிய நீர்க்குமிழ்கள் உதுப்பானின் விசாலமான இதயத்தில் பெரிய அலை களை உண்டாக்கின.
கேட்பவர்களுக்கு சுவாரசியம் உண்டாகா விட்டாலும், அவன் அன்று பார்த்தவர்கள் ஒவ்வொருவரிடமும் கிணற்றில் நீரைப் பார்த்த கதையைக் கூறினான்.
அவனுடைய இதயத்தின் புனிதத் தன்மையின் அடிப்பகுதியைப் பார்ப்பதைப் போல கிணறு நீர் வளையங்கள் தோன்ற ஆழமாக இறங்கியது.
பிள்ளைகள் கிணற்றிற்குள் பெரிய கல்லை எடுத்து போட்டு, எதிரொலி எழுவதைப் பார்த்து ரசித்தார்கள்.
பக்கத்திலுள்ள ஒரு கிழவி கூறினாள்: "அந்த போக்கிரி பாதையோரத்தில் ஒரு கிணறு தோண்டியிருக்கான்... பசுவை அவிழ்த்துவிட்டால், வெறித்து..வெறித்துப் பார்த்துக்கொண்டிருக்கிறான்...
பிள்ளைகளே!''
கிணறு அடியில் வரை தாழ்ந்ததை, உதுப்பானின் இடுப்புத்துணியின் கனமும் பார்த்தது. கிணறை உண்டாக்குவதற்காக அதிகமான சுமையை ஏற்றுக்கொண்டும் நேரத்தை நீட்டிக்கொண்டும் அவன் அதை உருவாக்கினான்.
முப்பது நாட்கள் கூலிப்பணிக்குச் செல்வதன் மூலம் கிடைக்கக்கூடிய சேமிப்பை வைத்து, மூன்று நாட்கள் கிணறு உண்டாக்கும் வேலையைச் செய்வான். அந்த வகையில் ஐந்தோ ஆறோ சுற்று வளைவுகளையும் சுவரையும் கல் தூணையும் கட்டி, கிணற்றிற்கு அருகில் பாலத்தை உண்டாக்கி, அதன் மேல் ஒரு சிலுவையின் இரு பக்கங்களிலும் ஒற்றையடிப் பாதையில் நடந்து செல்பவர்கள் காணக்கூடிய வகையில் "இங்கு வாருங்கள்! இங்கு நிம்மதி பெறலாம்' என்று எழுதி, ஒரு கப்பியை இணைத்து, ஒரு தொட்டிக் கயிறையும் தொங்கவிட்டபோது, இளமையை அழுத்தி மிதித்து முன்னோக்கிச் செல்லும் மகளுக்கு வந்து சேர்ந்திருக்கும் மணமகன் தாலி கட்டும் வேளையில் தந்தைக்கு உண்டாகக்கூடிய சந்தோஷம் அந்த குடும்பமற்றவனுக்கு உண்டானது.
"அங்கு ஒரு குடிசையைக் கட்டி, புட்டையும் பழத்தையும் விற்றிருந்தால், அவனுக்குச் செலவுக்கானது கிடைத்திருக்குமே!'' என்று சிலர் உதுப்பானின் அறிவற்ற தன்மையை வெளியிட்டார்கள்.
" "உபயம்: உதுப்பான்' என்றும் எழுதி வச்சிருந்தா, புகழ் கிடைச்சிருக்கும்.'' என்றொருவன் பொறாமைப் பட்டான்.
"நிலைமை மிகவும் மோசமாகிவிட்டால், குடிச்சு சாகுறதுக்கு வேறு யாருக்காவது சொந்தமாக இருக்கக்கூடிய கிணற்றை அவன் தேடவேண்டியது இல்லையே!'' என்று ஒரு ரசிகன் கூறினான்.
சிலர் அவனுடைய செயலைப் பாராட்டவும் செய்தார்கள்.
உதுப்பான் பொதுவாக கூறுவான்: "இரண்டு பக்கங்களிலிருந்தும் நீர் மொண்டு எடுப்பதற்கேற்ற வகையில் வசதி வேண்டும்''... "ஒரு கல் தொட்டி அமைக்கவேண்டும். பசுக்களும் நீரைப் பருகட்டும்.''....
"மழையில் நனையாமல் நின்று நீரை எடுக்கும் வகையில் ஒரு மேற்கூரை கட்டியிருந்தால், நன்றாக இருந்திருக்கும்.''
இவை அனைத்தும் படிப்படியாக நடந்தன.
அருகில் இருப்பவர்களில் கிணறு தோண்டுவதற்கு இயலாதவர்கள் அந்த பாதையோரத்து கிணற்றிலிருந்து நீர் எடுத்தார்கள். பலரும் குளிப்பதே அந்தக் கிணற்றின் கரையில்தான் என்று ஆக்கி விட்டார்கள்.
பிள்ளைகள் அதில் குப்பைகளையும் கற்களையும் போட்டு ரசித்தார்கள்.ஒரு கெட்ட மனிதன் தொட்டியையும் இன்னொரு பாவி கப்பியையும் திருடினார்கள்.
அவர்களில் எவரும் உதுப்பானின் கஷ்டங்களை நினைத்துப் பார்க்கவில்லை.
அந்த அப்பிராணி மனிதன் குறைகளைச் சரி பண்ணினான். அது திரும்பவும் நடக்காமல் இருக்குமாறு பார்த்துக்கொண்டான். தினமும் இரண்டு தடவைகள் உதுப்பான் கிணற்றின் கரைக்குச் செல்வான்.
சுற்றுப்புறத்தைச் சுத்தம் செய்வான். நீரை எடுத்து கல் தொட்டியை நிறைப்பான். சிறிது பருகுவான். "அசுத்தம் செய்யக்கூடாது' என்று அங்கு வரக்கூடிய அனைவரிடமும் கூறுவான். யாராவது நீரை மொண்டு பருகுவதைப் பார்க்கும்போது,
அவனுடைய இதயம் உற்சாகம் அடையும்.
அவனுடைய பல நாட்களின் உழைப்பின் பலன்! மதிப்புமிக்க சம்பாத்தியம்!
நகரம் வளர்ந்தது. மக்கள் தொகை பெருகியது.
மக்களின் நலன்களைப் பார்த்துக் கொள்வதிலும், தனி மனித சுதந்திரத்தைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதிலும் நகராட்சி மிகவும் கவனமாக இருந்தது.சுத்த நீரை வினியோகம் செய்வதற்கும் கழிவு நீரை அகற்றுவதற்கும் திட்டங்கள் போடப் பட்டன.
நீர்க் குழாய்களைப் பதிப்பதற்கு வாய்க்கால் களைத் தோண்டிய பணியாட்கள் அந்த கிணற்றின் சுற்றுத்தரையின் சிறிய பகுதியை உடைத்து நீக்கினார்கள்.
உதுப்பானின் இதயம் வேதனைப்பட்டது.
அந்த எஞ்சிய பகுதியைச் சீர் செய்யாமல் அவன் அடுத்த நாள் தேவாலயத்திற்குச் செல்லவில்லை.
குழாய் நீர் செயல் வடிவத்திற்கு வந்தது.
நகரத்திலிருந்த நீர்நிலைகள் அனைத்தையும் முப்பது நாட்களுக்குள் மூட வேண்டுமெனவும், அப்படிச் செய்யாதபட்சம் நகராட்சி அந்த பணியைச் செய்யுமெனவும், அதற்கான செலவை உரிமையாள ரிடம் வாங்குமெனவும் முரசு அடித்து அறிவித்தது.
உதுப்பானின் கிணறும் மூடப்பட வேண்டும்.
அவன் அதிகாரிகளைப் பார்த்தான். அங்கு ஏமாற்றம்தான் உண்டானது. புதிய நாகரீகத்தை அந்த பழைய மனிதன் சபித்தான். சிறிது கால அளவை நீட்டித் தருமாறு அவன் கெஞ்சினான்.
அதுவும் நடக்கவில்லை.
தனக்கென்றிருந்த இரண்டோ நான்கோ பற்களால் கிழவன் நகராட்சியை நெறித்தான்.
பாதையில் நடந்து செல்பவர்களைத் தடுத்து நிறுத்தி, அவன் நகராட்சியைத் திட்டினான்.
அரசாங்கத்திடம் கவலையை வெளியிட்டான்.
அவனுடைய கவலையில் எந்தவொரு நியாயமும் இருப்பதாக சட்டப்படி செயல்படும் அரசாங்கம் பார்க்கவில்லை. எது வந்தாலும், தன் வாழ்க்கையின் அனைத்துமான கிணற்றை மூடுவதாக இல்லை என்பதில் அந்த படுகிழவன் பிடிவாதமாக இருந்தான்.
அப்போதும் சிலர் கூறினார்கள்:
"உதுப்பான் அண்ணனுக்கு பைத்தியம் பிடித்து விட்டதைப் போல தோணுது''.
கிட்டத்தட்ட அந்த அப்பிராணி மனிதனைப் பார்க்கும்போது, அப்படித்தான் தோன்றும்.ஒரு இளம் நாகரீக இளைஞன் கூறினான்: "அந்த கிழவனின் இறுதி, அதில்தான் என்று தோணுது.'' பலரும் கிழவனின் கஷ்டத்திற்கு கண்ணையும் இதயத்தையும் தரவேயில்லை.
குழாய் நீர் கிடைத்தவுடன், கிணறு விஷயத்தை அனைவருமே மறந்து விட்டார்கள். நன்றி கெட்ட உலகம்! இப்போதும் மறக்காதவர்கள் இருக்கிறார்கள்...
அதில் கற்களைப் போட்டு விளையாடும் குழந்தைகள்!
நகரத்திலிருந்த நீர் நிலைகள் மறைய ஆரம்பித்தன.
உதுப்பானின் குழி விழுந்த கண்கள் அந்த இடத்தையே பார்த்துக் கொண்டிருந்தன.
குழாய் நீர் கிடைக்கும்போது, கிணற்றிற்கான அவசியம் இல்லையெனவும், பயன்படுத்தாமல் கிடக்கக்கூடிய கிணற்றில் கொசுக்கள் உற்பத்தியாகி பொதுமக்களின் உடல்நலம் பாதிக்கப்படும் எனவும் உள்ள அறிவுரைகளைக் கூறி, அவனை சமாதானம் செய்வதற்கும், கிணற்றை மூடச் செய்வதற்கும் நண்பர்கள் முயன்றார்கள்.
கிழவனுடைய ஆசையின் இறுதி இழையும் அறுந்தது.
தனக்கு நெருக்கமான ஆட்களும் தன்னுடைய எதிரிகளாக ஆகி விட்டார்களே என்பதை நினைத்து மிகவும் கவலைப்பட்டான்.
அவனுடைய இதயம் பரிதவித்து, வேதனைப் பட்டு, கண்களின் வழியாக வழிந்து, மார்புப் பகுதியை மறைத்து நின்று கொண்டிருக்கும் நரைத்த தாடிக்கு முன்னால் தொங்கியது.
கிணற்றை மூட வேண்டிய இறுதி நாளும் இருட்டில் மூழ்கியது. இயற்கை அசைவற்று இருந்தது. நகரம் ஓய்விற்காக ஏங்கியது.
உணர்ச்சிகளின் மோதல்கள் இல்லாதவர்களை நித்திரை தேவி அணைத்துக் கொண்டாள்.
உதுப்பான் கிணற்றின் கரைக்குச் சென்றான்.
அந்த இடம் முழுவதையும் பெருக்கி சுத்தம் செய்தான். அதை பல தடவைகள் சுற்றி வந்தான். ஊஞ்சல் ஆடுவதைப்போல அவன் அங்குமிங்குமாக நடந்தான்.
அவனுடைய மனமும் அதைத்தான் செய்தது. எவ்வளவு நேரம் இவ்வாறு கடந் தோடியது என்று அவனுக்கே தெரியவில்லை.
உலகத்தின் நன்மைக்கான தன்னுடைய கடுமையான உழைப்பின் விளைவு...
ஏராளமான உயிர்களுக்கு நிம்மதி அளித்த அமிர்த கலசம்... ஆன்மாவின் கதிக்கான வழி என்று தான் கருதிய புண்ணியப் பொருள்... அந்த கிணற்றைத் தோண்டிய கைகளைக் கொண்டே மூடுவது... அதற்குப் பிறகும் வாழ்வது...
நன்மையைத் தடுக்கக்கூடிய நாகரீகத்தின் காலத்தில்... நன்றி கெட்ட மனிதர்களுக்கு மத்தியில்... அந்த வயதான கண்கள் நிறைந்து வழிந்தன.
மனதின் ஆட்டம் நின்றவுடன், அந்த பலவீனமான கால்களின் செயல்பாடும் நின்று விட்டது. அவன் கிணற்றின் சுவரில் சாய்ந்து நின்றான்.
அவன் கிணற்றின் சுவரில் ஏறினான்.
சந்திரன் கேள்விக்குறியுடன் கிழக்கு திசையிலிருந்து எட்டிப் பார்த்தது.
வெடிப்பதற்குத் தயாராக இருந்த நெஞ்சுப்பகுதியை அவன் அந்த சிலுவையுடன் சேர்த்து வைத்தான். அதே நிலையில் நின்றான்.
எவ்வளவு நேரம் நின்றானோ! அவன் பிரார்த்தனையில் மூழ்கிவிட்டானோ?
அவனின் தலையைத் தாங்கக்கூடிய சக்தி கழுத்திற்கு இல்லாமற் போனது. ஒரு துளி நீர் கூட அந்த கண்களில் அரும்பவில்லை.
அவனுடைய தொண்டை வறண்டது. இதயம் துடித்தது.
தேவாலயத்தில் மணிச் சத்தம் முழங்கியது. அவன் கேட்டானா என்று தெரியவில்லை. "இங்கு வாருங்கள்! இங்கு நிம்மதி பெறலாம்' என்று யாராவது அந்த உலகத்திற்கு உதவும் மனிதனை அழைத்தார்களா? அவன் அறிந்து தான் செய்தானா? அந்தத் தெளிந்த நீர் அவனை மார்புடன் அணைத்தது. அந்த கிணறு மக்களை நேசித்தவனின் மீது நீரைத்தெளித்தது.
அவன் தனக்குச் சொந்தமான கிணற்றிலிருந்து இறுதி முறையாக நீராடினான். பக்கத்து வீட்டின் நாய் மரண பாடலைப் பாடியது. சந்திரனின் முகம் வெளிறியது. அந்த கிணறு உதுப்பானின் ரகசியத்தை நம்பிக்கையுடன் ஏற்றுக்கொண்டது.