ஊர் - எம்.முகுந்தன் தமிழில் : சுரா

/idhalgal/eniya-utayam/ur-m-mukunthan-tamil

காதேவன் மேலே ஏறிச்சென்று மணியடித்தான். உள்ளே காலடிச் சத்தத்தைக் கேட்டான். கதவு திறந்தது. எரிந்த புகையிலையின்... விலை குறைவான ஆரஞ்ச் ஜின்னின் வாசனை நிறைந்திருந்தன.

அறையின் மத்தியில் ஒரு பெரிய தோல்பெட்டி திறந்து வைக்கப்பட்டிருக்கிறது. தோல்பை திறந்து வைக்கப்பட்டிருக்கிறது.

சகாதேவன் கேட்டான்: "நீ எங்க போறே?"

"ஊருக்கு..."

"ஊருக்கா?" சகாதேவனால் நம்பமுடியவில்லை. "நீதானே சொன்னே... இந்த வருஷம் போறதா இல்லைன்னு?"

"திடீர்னு முடிவு செஞ்சேன்."

குனிந்து நின்றுகொண்டு தோல்பைக்குள் தலையணையையும் விரிப்புகளையும் அடுக்கி வைத்தான். சுருண்டுகிடந்த பெல்ட்டை எடுத்துக் கட்டினான்.

"திடீர்னு போறதுக்கு என்ன காரணம்?"

"நான் ஊருக்குப் போய் ரெண்டு வருஷங்களாச்சே! என் மகனைப் பார்த்து ரெண்டு வருஷங்களாச்சுல்ல? நீ எல்லா வருஷங்களும் போற. நான் ஏன் போகக்கூடாது?"

"நான் சும்மா சொன்னேன்."

சகாதேவன் பிரம்புக் கட்டிலில் அமர்ந்தான். கட்டில் நிர்வாணமாக இருந்தது. மெத்தையோ விரிப்போ இல்லை.

"அதுமேல உட்கார வேணாம் சகாதேவா. நாற்காலியில உட்காரு."

"நான் இங்கேயே இருக்கேன்."

கட்டிவைத்த தோல்பையை ஒரு மூலையில் எடுத்து வைத்தான். பெட்டியைத் திறந்தான். யுடிகாலனின் வாசனை உயர்ந்து வந்தது. அழகாக அடுக்கி வைத்திருக்கிறான். ஒரு பொட்டலத்தை எடுத்து நீட்டியவாறு கூறினான்:

"பார் சகாதேவா... நளினிக்காக வாங்கினேன்."

"என்ன?"

சகாதேவன் கையைநீட்டி பொட்டலத்தை வாங்கினான்.

திறந்தான். ஒரு புடவை...அவன் திருப்பியும் புரட்டியும் பார்த்தான். அவன் கேட்டான்: "ஃபுல் வாய்லா?"

"ஆர்கண்டி."

"என்ன கொடுத்தே?"

"நாப்பத்தஞ்சு ரூபாய்."

வெள்ளை நிறம்... தூய வெள்ளை...

"இது உன் மனைவிக்கு ரொம்ப பொருத்தமா இருக்கும்."

அதுக்கு... நீ என் மனைவியைப் பார்த்ததே இல்லியே?"

"பார்த்திருக்கேனே! உன் ஆல்பத்தை நான் எத்தனை முறை பார்த்திருக்கேன்! அது முழுசும் உன் மனைவியும் மகனும்தானே?"

"என் தங்க மகன்... ரெண்டு வருஷங்களாச்சு...

சகாதேவா... நான் என் மகனைப் பார்த்து ரெண்டு வருஷங்கள்..."

அவன் பெருமூச்சு விட்டான். பெருமூச்சில் ஜின்னின் வாசனை இருந்தது. அறையின் மூலையில் சேர்த்து வைக்கப்பட்டிருந்த காலி புட்டிகளிலிருந்து ஜின்னின் வாச

காதேவன் மேலே ஏறிச்சென்று மணியடித்தான். உள்ளே காலடிச் சத்தத்தைக் கேட்டான். கதவு திறந்தது. எரிந்த புகையிலையின்... விலை குறைவான ஆரஞ்ச் ஜின்னின் வாசனை நிறைந்திருந்தன.

அறையின் மத்தியில் ஒரு பெரிய தோல்பெட்டி திறந்து வைக்கப்பட்டிருக்கிறது. தோல்பை திறந்து வைக்கப்பட்டிருக்கிறது.

சகாதேவன் கேட்டான்: "நீ எங்க போறே?"

"ஊருக்கு..."

"ஊருக்கா?" சகாதேவனால் நம்பமுடியவில்லை. "நீதானே சொன்னே... இந்த வருஷம் போறதா இல்லைன்னு?"

"திடீர்னு முடிவு செஞ்சேன்."

குனிந்து நின்றுகொண்டு தோல்பைக்குள் தலையணையையும் விரிப்புகளையும் அடுக்கி வைத்தான். சுருண்டுகிடந்த பெல்ட்டை எடுத்துக் கட்டினான்.

"திடீர்னு போறதுக்கு என்ன காரணம்?"

"நான் ஊருக்குப் போய் ரெண்டு வருஷங்களாச்சே! என் மகனைப் பார்த்து ரெண்டு வருஷங்களாச்சுல்ல? நீ எல்லா வருஷங்களும் போற. நான் ஏன் போகக்கூடாது?"

"நான் சும்மா சொன்னேன்."

சகாதேவன் பிரம்புக் கட்டிலில் அமர்ந்தான். கட்டில் நிர்வாணமாக இருந்தது. மெத்தையோ விரிப்போ இல்லை.

"அதுமேல உட்கார வேணாம் சகாதேவா. நாற்காலியில உட்காரு."

"நான் இங்கேயே இருக்கேன்."

கட்டிவைத்த தோல்பையை ஒரு மூலையில் எடுத்து வைத்தான். பெட்டியைத் திறந்தான். யுடிகாலனின் வாசனை உயர்ந்து வந்தது. அழகாக அடுக்கி வைத்திருக்கிறான். ஒரு பொட்டலத்தை எடுத்து நீட்டியவாறு கூறினான்:

"பார் சகாதேவா... நளினிக்காக வாங்கினேன்."

"என்ன?"

சகாதேவன் கையைநீட்டி பொட்டலத்தை வாங்கினான்.

திறந்தான். ஒரு புடவை...அவன் திருப்பியும் புரட்டியும் பார்த்தான். அவன் கேட்டான்: "ஃபுல் வாய்லா?"

"ஆர்கண்டி."

"என்ன கொடுத்தே?"

"நாப்பத்தஞ்சு ரூபாய்."

வெள்ளை நிறம்... தூய வெள்ளை...

"இது உன் மனைவிக்கு ரொம்ப பொருத்தமா இருக்கும்."

அதுக்கு... நீ என் மனைவியைப் பார்த்ததே இல்லியே?"

"பார்த்திருக்கேனே! உன் ஆல்பத்தை நான் எத்தனை முறை பார்த்திருக்கேன்! அது முழுசும் உன் மனைவியும் மகனும்தானே?"

"என் தங்க மகன்... ரெண்டு வருஷங்களாச்சு...

சகாதேவா... நான் என் மகனைப் பார்த்து ரெண்டு வருஷங்கள்..."

அவன் பெருமூச்சு விட்டான். பெருமூச்சில் ஜின்னின் வாசனை இருந்தது. அறையின் மூலையில் சேர்த்து வைக்கப்பட்டிருந்த காலி புட்டிகளிலிருந்து ஜின்னின் வாசனை உயர்ந்து வந்தது.

அவன் கால்சட்டையின் பைக்குள்ளிருந்து குழாயை எடுத்தான். மேஜையின்மீது கிடந்த பாலித்தீன் பையை எடுத்துத் திறந்தான்.

புகையிலையை குழாய்க்குள் எடுத்துப் போட்டான். பற்றவைத்து உதட்டில் வைத்துப் புகையைவிட்டான்.

"உன் மகனுக்கு என்ன வயசு நடக்குது?"

"டிசம்பர் வந்தா மூணு ஆகுது. ஆறு மாசம் இருக்கறப்போ பார்த்தது... பிறகு... நான் என் மகனைப் பார்க்கவேயில்லை."

''உன் தப்புதானே?"

"என் தவறா?"

"ஆமா... உன்னோட தவறுதான்... வேணாம்னு நினைச்சுதானே நீ இதுவரை போகாம இருந்தே?"

"சகாதேவா... நீ என்ன சொல்றே?"

"வேணுமின்னா... பலா, வேர்மேலயும் காய்க்கும்."

"எனக்கு எவ்வளவு கடன் இருக்குன்னு உனக்குத் தெரியாதா? நீ ஏன் யாரோ ஒருத்தன்கிட்ட பேசுறமாதிரி பேசுறே?"

"கடன் எப்படி வந்தது? வந்த பணம் முழுசையும் குடிச்சு காலி பண்ணியதாலதானே?"

அவன் பேசவில்லை.

"மனைவியைவிட... மகனைவிட உனக்கு மது அருந்துறதுதான் பெருசு."

அவன் பேசவில்லை. சிதறிக்கிடந்த காலி புட்டிகளிலிருந்து ஜின்னின் வாசனை சுருள்களாக உயர்ந்து மேலே வந்தது. அறை முழுவதும் பரவியது.

"நீ சாப்பிட்டாச்சா சகாதேவா?"

"இல்ல."

"அப்படின்னா... வா."

இருவரும் எழுந்து அறையைப் பூட்டினார்கள்.

ரெஸ்ட்டாரெண்டை நோக்கி நடந்தார்கள். உணவு சாப்பிடும்போது அவன் கூறினான்: "அலுவலகத்திலிருந்து ஐந்நூறு ரூபாய் கடன் வாங்கினேன். நயீஸடக்கில் பத்து சதவிகித வட்டிக்கு முந்நூறு ரூபாய் வாங்கினேன்."

st

"இந்த கடனையெல்லாம் நீ எப்போ தீர்ப்பே?"

"பைசாவைவிட எனக்குப் பெருசு... நளினி... என் மகன்..."

சகாதேவன் எதுவும் கூறவில்லை. சாப்பிட்டு முடித்தவுடன் பைக்குள்ளிருந்து குழாயை எடுத்தான். புகையிலையை நிறைத்து பற்றவைத்து இழுத்தான். அவர்கள் வெளியேறி வெய்யிலைத் தின்றுகொண்டே நடந்தார்கள்.

வெய்யில் சுட்டெரித்துக் கொண்டிருந்தது. வெய்யிலின் குமிழ்கள் மேலே உயர்ந்து வந்துகொண்டிருந்தன.

வெடித்தன. வெப்பமாக மேல்நோக்கி உயர்ந்தன. நெருப்பாக வானத்தில் பரவின.

அறையில் அவர்கள் நீண்டநேரம் பேசிக்கொண்டிருந்தார்கள். மனைவிகளையும் பிள்ளைகளையும்பற்றிப் பேசினார்கள். ஊருக்குச் செல்வதில் இருக்கக்கூடிய சிரமங்களைப் பற்றிப் பேசினார்கள். வீட்டுக் கஷ்டங்களைப்பற்றிப் பேசினார்கள்.

கடன்களைப்பற்றிப் பேசினார்கள்.

"செவ்வாய்க் கிழமை நீ நளினியையும் மகனையும் பார்ப்பாய். இன்னும் நாலு நாள் மட்டுமே...

அதிர்ஷ்டசாலி!"

சகாதேவன் பெருமூச்சு விட்டான். அவன் தன் மனைவியையும் பிள்ளையையும் பற்றி நினைத்தான். ஆறு மணியானபோது சகாதேவன் வெளியேறி னான். ஒரு வாடகைக் காருடன் திரும்பவந்தான்.

அவர்கள் பெட்டியையும் தோல்பையையும் எடுத்து காரில் வைத்தார்கள்.

"நயீ தில்லி ஸ்டேஷன்..." சகாதேவன் கூறினான்.

சர்தார்ஜி பரபரப்பான மகாத்மா காந்தி சாலையின் வழியாக வண்டியை ஓட்டினான். மருத்துவ இன்ஸ்டிட்யூட்டைத் தாண்டி சப்தர்ஜங்க் சாலைக்குள் நுழைந்து முன்னோக்கிப் பாய்ந்தது.

அவர்கள் எதுவும் பேசவில்லை. சகாதேவன் வெளியே பார்த்தவாறு அமர்ந்திருந்தான். குழாயை வாயிலிருந்து எடுக்காமலே... பாதி மூடிய கண்களுடன் சாய்ந்தவாறு அமர்ந்திருந்தான்.

என் நளினி...என் தங்க மகன்... என் அப்பிராணி நளினி...

என் அம்மா..

என் வீடு..

என் ஊர்...

வாடகைக் கார் ஸ்டேஷனில் வந்து நின்றது. போர்ட்டர் பெட்டியையும் படுக்கையையும் எடுத்துக்கொண்டு மூன்றாம் எண் நடைமேடையை நோக்கி வேகமாக நடந்தான். நுழைவுச்சீட்டு வாங்குவதற்காக சகாதேவன் வரிசையில் நின்றான்.

ரயில் நிலைய அலுவலகம் முழுவதும் மலையாளிகள்... தமிழர்கள்... பவுடரின் வாசனையைப் பரவவிட்டவாறு நர்ஸ்கள் கூட்டமாக வந்தார்கள். காக்கியின்... வியர்வையின் வாசனையைப் பரவவிட்டவாறு பட்டாளக்காரர்கள் கூட்டமாக வந்தார்கள். தயிர் சாதத்தின்... முல்லைப் பூக்களின் வாசனையைப் பரப்பியவாறு தமிழர்கள் கூட்டமாக வந்தார்கள்.

கூட்டத்திற்கு மத்தியில் குழாயைக் கடித்துப் பிடித்தவாறு போர்ட்டருக்குப் பின்னால் நடந்தான். சகாதேவன் இருக்கையின் எண்ணைக் கண்டுபிடித்தான்.

அமர்வதற்கான இடமே இருந்தது. பெர்த் கிடைக்கவில்லை. ஏன் படுக்கவேண்டும்? ஏன் அமரவேண்டும்? எப்படியாவது அங்குபோய்ச் சேர்ந்தால் போதும்... அங்குபோய்ச் சேர்ந்தால் போதும்...

"ஊருக்குப் போனபிறகு நீ கடிதம் எழுதுவேல்ல?"

"கேட்கணுமா?"

"நளினிகிட்ட நான் விசாரிச்சதா சொல்லு. மகனுக்கு ஒரு முத்தம்..."

ஒன்றோடொன்று இணைந்து கிடக்கும் தண்டவாளங்களைப் பார்த்தவாறு சிந்தனையில் மூழ்கி நின்றிருந்தான்.

"நான் கொட்டாரக்கரை வரை போறேன். உன் மனைவியையும் குழந்தைகளையும் பார்க்கிறேன்."

"சிரமமா இருக்காதா?"

"இதுல என்ன சிரமம் இருக்கு சகாதேவா?"

சகாதேவனின் முகம் பிரகாசமானது. வண்டி கூவியது. நிலக்கரியின் வாசனை பரவியது.

பவுடரின்...

தயிர் சாதத்தின்...

வியர்வையின்...

நெருப்பின் வாசனைகள் சுழற்றியடித்தன.

தன் இருக்கையில் குழாயை இழுத்துப் புகைத்தவாறு அவன் கண்களைமூடி அமர்ந்திருந் தான். காட்டின், மேட்டின் வாசனைகளுக்கு மத்தியில் வண்டி பாய்ந்து சென்றுகொண்டிருந்தது. நதிகளின், மலைகளின் வாசனைகளுக்கு மத்தியில் பாய்ந்து சென்றுகொண்டிருந்தது. மூன்றாவது நாளன்று கிழக்கு திசையிலிருந்து வந்த காற்றில் கடலின் வாசனை வீசியது.

சென்னையில் பெட்டி, படுக்கையுடன் அவன் இறங்கினான். சாயங்காலம்... பிறகும் பயணம் தொடர்ந்தது.

இரவில் சாப்பிடவில்லை. தூங்கவில்லை.

நளினியைப் பற்றி நினைத்தபோது பசி உண்டாகவில்லை. மகனைப் பற்றி நினைத்தபோது தூக்கம் வரவில்லை. குழாயின் புகையை மட்டும் சாப்பிட்டவாறு இரவை ஓட்டினான்.

வயல்களின், தென்னை மரங்களின் வாசனைகள் வந்தன.

பாரதப் புழையின் கரையின் வழியாகப் பாய்ந்து சென்றது.

நடு உச்சிப் பொழுதில் வண்டி அவனுடைய ஊரின் சிறிய புகைவண்டி நிலையத்திற்கு முன்னால் வந்து நின்றது. பெட்டியையும் படுக்கையையும் எடுத்துக்கொண்டு வெளியே இறங்கினான். போர்ட்டர் அப்துல்லாவைத் தேடினான்.

அப்துல்லா கண்ணில் படவில்லை.

ப்ளாட்ஃபாரத்தில் ஒரு போர்ட்டர்கூட இல்லை. எங்கு போனார்கள்? சுற்றிலும் பார்த்தான். யாருமில்லை.புகைவண்டி நிலையம் காலியாகக் கிடந்தது. ஒரு மனிதன்கூட இல்லை.

பெட்டியையும் படுக்கையையும் ஸ்டேஷன் மாஸ்டர் ராமு நம்பியாரிடம் ஒப்படைக்கலாமென்று நினைத்தான்.

நம்பியாரின் அலுவலக அறைக்குச் சென்றான்.

நம்பியார் அங்கில்லை. நம்பியார் எங்கே?

அப்துல்லா எங்கே?

பெட்டியையும் படுக்கையையும் தூக்கியவாறு வெளியே வந்தான். ரிக்ஷாக்களும் வாடகைக் கார்களும் இங்குமங்குமாக சிதறிக் கிடந்தன. ஒரு ஆளைக்கூட காணோம். நான்கு பக்கங்களிலும் பார்த்தான்.

டாக்ஸிக்காரன் மாதவன் எங்கே? ரிக்ஷாக்காரன் நாணு எங்கே?

ஸ்டேஷன் சாலையின் வழியாக பெட்டியையும் படுக்கையையும் தூக்கியவாறு நடந்தான். வெய்யில் அலறிக்கொண்டிருந்தது. முடியை அவிழ்த்துபோட்டுவிட்டுத் துள்ளுகிறது.

முன்னோக்கி நடந்தான். சாலையில் யாருமே இல்லை.

மனிதர்களில்லை...

மிருகங்களில்லை...

சாலையின் இரு பக்கங்களிலும் கடைகள்... சில கடைகள் திறந்திருக்கின்றன.

ஆனால், ஆள் இல்லை. கடைகளின் உரிமை யாளர்களைக் காணவில்லை. தேநீர்க் கடைக்காரன் அபூபக்கர் எங்கே?பலசரக்கு கடைக்காரன் கண்ணன் நாயர் எங்கே?வெற்றிலை, பாக்குக் கடைக்காரன் உண்ணி கிருஷ்ணன் எங்கே?

காலியாகக் கிடந்த கடைகளுக்கு முன்னால் நடந்தான். வெய்யில் அவனை நக்கியது. வெப்பம் நிறைந்த வியர்வைத் துளிகள் வழிந்தன. சாலையின் இரு பக்கங்களிலும் வீடுகள் இருந்தன. சங்கர மேனனின் மாளிகைக்கு முன்னால் நடந்தான். கேட்டில் எப்போதும் இருக்கக்கூடிய நாய் இல்லை. மாளிகை காலியாகக் கிடந்தது. கேளு நாயரின் எட்டு அறைகள்கொண்ட வீட்டிற்கு முன்னால் நடந்தான். யாரையும் காணோம். முற்றத்தில் தேங்காய்களை உடைக்கக் கூடிய கூலியாட்கள் இல்லை. தொழுவத்தில் பசுக்கள் இல்லை.

தொண்டை தாகமெடுத்து வெடித்தது. கால்கள் நடுங்கின. சரீரம் தளர்ந்தது. பெட்டியையும் படுக்கையையும் தூக்கியவாறு, மேலும் கீழும் மூச்சுவிட்டவாறு முன்னோக்கி நடந்தான். தூரத்தில் தன்னுடைய வீட்டைப் பார்த்தான்.

சமையலறையிலிருந்து புகை வரவில்லை.

வெளிவாசலில் தாய் இல்லை. நளினி இல்லை. தங்க மகன் இல்லை.

வெளிவாசலைக் கடந்து, வாசலுக்கு வேகமாக வந்தான்.

"அம்மா!"

"நளினீ!"

அவன் திரும்பத் திரும்ப அழைத்தான். யாரும் அழைத்ததைக் கேட்கவில்லை. கதவு வெறுமனே சாய்த்து வைக்கப்பட்டிருந்தது. தள்ளித் திறந்து உள்ளே வந்தான். ஒவ்வொரு அறைக்குள்ளும் சென்று பார்த்தான்.

யாருமில்லை. செல்லரித்த வாசனை எங்கும் பரவிக் கிடந்தது.

"அம்மா! நளினீ!"

அவன் அழைத்தான். கத்தி அழைத்தான்.

அழைத்து அழைத்து தொண்டை வெடித்தது.

அழைப்பதைக் கேட்பதற்கு யாருமேயில்லை. என் அம்மா எங்கே? என் மனைவியும் மகனும்..? என் குடும்பமும் ஊர்க்காரர்களும் எங்கே?

வெளியே வந்தான். வெளிவாசலைக் கடந்தான். இடுகாட்டைப்போல வெறுமனே கிடந்த சாலையின் வழியாக நடந்தான்... ஓடினான்... தளர்ந்தபோது மண்ணில் விழுந்தான்... கவிழ்ந்து கிடந்து, வெப்பம் உயர்ந்து கொண்டிருந்த மண்ணில் முகத்தை அழுத்தி வைத்துக் கொண்டு தேம்பித்தேம்பி அழுதான்.

uday010721
இதையும் படியுங்கள்
Subscribe