அந்த வரையாத ஓவியம் உறுத்துகிறது! -இயக்குநர் மனசெல்லாம் சந்தோஷ்!

/idhalgal/eniya-utayam/unpainted-painting-popping-director-manasellam-santosh

டிகர் விவேக், அபூர்வமான் மனிதர். இதயத்தையே உடம்பாகக் கொண்ட அன்பாளர் அவர். அவருக்கும் எனக்கும் மன ரீதியாக ஒரு நெருக்கம் உண்டு. அந்த நெருக்கம்தான், உயிரை உருக்கிக்கொண்டு இருக்கிறது.

இயக்குநர் சசியின் ’சொல்லாமலே’ படத்தில் கோலிடைரக்டராகப் பணியாற்றிய போதுதான் விவேக் சாரின் அறிமுகம் எனக்குக் கிடைத்தது. ’சொல்லாமலே’ படம், கதைக்காக மட்டுமன்றி, கட்லிஅவுட்வுக்காகவும் பேசப்பட்ட படம்.

அந்தப் படத்துக்கு சென்னை அண்ணாசாலையில் வெகு பிரமாண்டமாக ஒரு கட்-அவுட்டை வைக்க நான் காரணமாக இருந்தேன் என்பது, நான் பெற்ற பேறு. டைரக்டரிடம் பேச்சுவாக்கில், அது ஒரு ஓவியனின் கதை என்பதால், ஹீரோயினை நிஜமாக ஹீரோ வரைவது போலவே இந்தப் படத்திற்கு ஒரு பிரமாண்டமான கட்-அவுட்டை வைக்கலாம் என்று சொன்னேன். அவர் உற்சாகமாக ஓகே சொன்னார். ஆர்ட் டைரக்டர் ஜே.பி.கிருஷ்ணாவுக்கும் அது மிகவும் பிடித்துப்போனது. தயாரிப்பாளர் ஆர்.பி.சௌ

டிகர் விவேக், அபூர்வமான் மனிதர். இதயத்தையே உடம்பாகக் கொண்ட அன்பாளர் அவர். அவருக்கும் எனக்கும் மன ரீதியாக ஒரு நெருக்கம் உண்டு. அந்த நெருக்கம்தான், உயிரை உருக்கிக்கொண்டு இருக்கிறது.

இயக்குநர் சசியின் ’சொல்லாமலே’ படத்தில் கோலிடைரக்டராகப் பணியாற்றிய போதுதான் விவேக் சாரின் அறிமுகம் எனக்குக் கிடைத்தது. ’சொல்லாமலே’ படம், கதைக்காக மட்டுமன்றி, கட்லிஅவுட்வுக்காகவும் பேசப்பட்ட படம்.

அந்தப் படத்துக்கு சென்னை அண்ணாசாலையில் வெகு பிரமாண்டமாக ஒரு கட்-அவுட்டை வைக்க நான் காரணமாக இருந்தேன் என்பது, நான் பெற்ற பேறு. டைரக்டரிடம் பேச்சுவாக்கில், அது ஒரு ஓவியனின் கதை என்பதால், ஹீரோயினை நிஜமாக ஹீரோ வரைவது போலவே இந்தப் படத்திற்கு ஒரு பிரமாண்டமான கட்-அவுட்டை வைக்கலாம் என்று சொன்னேன். அவர் உற்சாகமாக ஓகே சொன்னார். ஆர்ட் டைரக்டர் ஜே.பி.கிருஷ்ணாவுக்கும் அது மிகவும் பிடித்துப்போனது. தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரி சாரிடமும் இது பற்றி நானே போய் விவரித்தேன். அதுவரை தன் படங்களுக்கு அண்ணாசாலையில் கட்- அவுட் வைக்காத அவர், என் ஐடியா மிகவும் பிடித்துப்போனதால், அதை அங்கீகரித்தார். இதைத் தொடரந்து நடிகர்கள் வையாபுரி, தாமு, லிவிங்ஸ்டன் ஆகியோரை அண்ணாசாலைக்கு நான் அழைத்துச்சென்று, லிவிஸ்டன் படம் வரைவது போலவும் மற்றவர்கள் அவருக்கு உதவுவது போலவும் ஸ்டில் எடுத்தேன். அதை அப்படியே தத்ரூபமாக கட்- அவுட் ஆக்கினார் ஜே.பி.கிருஷ்ணா.

vivek

அந்த கட் -அவுட் மக்கள் மத்தியில் பரபரப்பையும் வியப்பையும் ஏற்படுத்தியது. அண்ணாசாலை வழியாகச் சென்றவர்கள் அத்தனை பேரும் அந்த கட் -அவுட்டை கூடிக் கூடி ரசித்தார்கள். பத்திரிகைகளும் பாராட்டின. இதற்குக் கிடைத்த வரவேற்பைப் பார்த்த ஆர்ட் டைரக்டர் ஜே.பி.கிருஷ்ணா ”மணிரத்தினம், பார்த்திபன் போன்றவர்கள்தான் இப்படி வித்தியாசமான ஐடியாக்களைக் கொடுப்பார்கள். இப்ப சந்தோஷ் ஐடியா கொடுத்திருக்கார். இது ரொம்பவும் புதிய ஐடியா” என்று என்னைப் பாராட்டினார். தனது பேட்டிகளிலும் இதைக் குறிப்பிட்டார். பின்னர் இதேபோன்ற டெக்னிக்கில் சந்திப்போமா? என் சுவாசக் காற்றே ஆகிய படங்களுக்கும் பிரமாண்டமான கட் அவுட்டுகள் வைக்கப்பட்டு, மக்களை வெகுவாக ஈர்த்தன.

அதனால் சொல்லாமலே படத்தின் கோலிடைரக்டரான நான், கட்- அவுட் ஐடியாவுக்காகவும் பேசப்பட்டேன். அந்தப் படத்தின் ஆரம்ப நாட்களில், ஒருநாள் நடிகர் டெல்லி கணேஷ் வீட்டில் படப்பிடிப்பு நடந்தபோதுதான், விவேக் சார் எனக்கு அறிமுகமானார். அப்போது அவர் என்னைத் தட்டிக்கொடுத்து, ”நீ பெரிய டைரக்டரா வருவே”ன்னு வாழ்த்தினார். இதை கவனித்த அந்தப் படத்தின் மேக்கப் மேன், “விவேக் சார் கருநாக்கு உள்ளவர். அவர் சொன்னா அப்படியே பலிக்கும்” என்றார். அவரது வாக்கு கொஞ்சம் கொஞ்சமாக உயிர்ப்பெற்று பலித்துக் கொண்டு வருகிறது.

அடுத்து இயக்குநர் எழிலின் ’பெண்ணின் மனதைத் தொட்டு’ படத்திலும் விவேக் சாருடன் பணியாற்றினேன். அந்த சமயத்தில் என் அறை நண்பர்களான இயக்குநர் கரு.பழனியப்பன், மறைந்த நடிகர் கிருஷ்ணமூர்த்தி, ஜெரால்டு ஆகியோருடன் ஒருநாள் அரட்டை அடித்துக்கொண்டிருந்த போது, ஒரு டயலாக்கை எடுத்து விட்டேன். அது எல்லோரையும் குபீர் சிரிப்பில் ஆழ்த்தியது. அந்த டயலாக்கை அப்படியே பேசினால் சென்சாரில் விடமாட்டார்கள். அதனால் அதைக் கொஞ்சம் மாற்றி ”நீங்க வெறும் தாஸா இல்ல லார்ட் லபக்கு தாஸா?”ன்னு, ஏற்காட்டில் நடந்த டிஸ்கஷனின் போது சொன்னேன். அது ஏற்றுக்கொள்ளப் பட்டது. அதை விவேக் சார் அந்தப் படத்தில் பேசி நடித்தபோது, அது ஏகப்பட்ட வரவேற்பைப் பெற்றது. அது அவரது பஞ்ச் வசனங்களில் முக்கியமான ஒன்றாகிவிட்டது.

அந்தப் படத்தில் விவேக்கின் பின் பக்கம் தீப்பற்றிக் கொள்ளும் காட்சிக்கான ஐடியாவையும் நான்தான் சொன்னேன். அதை விவேக் சாரின் டீம் டெவலப் செய்துகொண்டது. அதுவும் ரசிகர்களைக் குலுங்கிக் குலுங்கிச் சிரிக்க வைத்தது. அந்த சமயத்தில் என்னிடம் விவேக் சார் “சந்தோஷ், பெண்ணின் மனதைத் தொட்டு படத்திற்குப் பிறகு என் சம்பளம் 14 லட்சம் ஆயிடிச்சி. தேங்ஸ் சந்தோஷ்” என்று மனம் திறந்து பாராட்டினார். ஒரு சின்ன விசயத்துக்குக் கூட நன்றி தெரிவிக்க வேண்டும் என்று நினைத்த பேருள்ளம் கொண்ட அருளாளர் தான் விவேக் சார்.

அவர் ஒருநாள் தனது சின்ன வயதுப் புகைப்படத்தைக் கொடுத்து, வீட்டில் வைப்பதற்காக, அதை ஓவியமாக வரைந்து கொடுக்கும்படி கேட்டுக்கொண்டார். ஆனால் என்ன காரணத்தாலோ, அது முடியாமலே போய்விட்டது. அவர் இருக்கும் போதே அவர் ஆசைப்பட்டபடி அந்தப் படத்தை வரைந்து கொடுத்திருக்கலாமே என்ற எண்ணம் இப்போது நெஞ்சில், உறுத்திக்கொண்டே இருக்கிறது. விரைவில் விவேக் சார் ஆசைப்ப்படி, அந்தப் படத்தை வரைந்து அவரது வீட்டிலேயே கொடுத்துவிட்டு வரப்போகிறேன். அதுவரை என் ‘கடன்பட்டார் நெஞ்சம்’ நிம்மதி அடையாது.

uday010521
இதையும் படியுங்கள்
Subscribe