உண்மையான வாரிசு - மாதவி குட்டி தமிழில் சுரா

/idhalgal/eniya-utayam/true-heir-madhavi-kutty-sura-tamil

ஸ்ரீஜாமோள் சிங்க மாதத்தில் திருமணம் செய்துகொள்வதாக இருந்தது. ஆனால், த்ராஸ்ஸில் வினோதன் கொல்லப்பட்டு விட்டான்.

இறந்த உடல் சிறப்புப் பெட்டியில் வைக்கப்பட்டு ஊருக்கு வந்தது. தேசியக் கொடி போர்த்தப்பட்டிருந்த பெட்டியின்மீது நான்கு மலர் வளையங்களும் இருந்தன.

ஸ்ரீஜாமோளும் கேமராவை தயக்கமே இல்லாமல் சந்தித்தாள்.

வினோதனின் தாய் "வண்டு உரசுவது' போல தலையில் அடித்துக் கொள்வதை அவள் பார்த்தாள்.

சாயங்காலம் தொலைக்காட்சியில் அவளும் தானும் தோன்றுவோம் என்பதை ஸ்ரீஜா ஒரு வெறுப்புடன் நினைத்துப் பார்த்தாள்.

dsd

‌வீட்டிற்கு வந்த நிமிடத்திலிருந்து அவளுடைய தாயும் தந்தையும் ஒருவரோடொருவர் சண்டை போட்டுக்கொண்டிருந்தார்கள். வினோதனின் தியாக மரணத்திற்குப் பிரதிபலனாக அரசாங்கம் அளிக்கும் ஐந்து லட்சத்திற்கான உண்மையான வாரிசு ஸ்ரீஜாதான் என்று தாய் கூறினாள். திருமணம் நடக்கவில்லை.

தந்தை கூறினார

தந்தை கூறினார்: "ஐந்து லட்சம் அந்த அம்மாவிற்குத்தான் கிடைக்கும்.'' "கிடைத்தால் கிடைக்கட்டும். பெற்றெடுத்த தாய் அல்லவா? உங்களுக்கென்ன எரிச்சல்?'' தந்தை வாய்க்காலுக்குச் சென்று சிறுநீர் கழித்துவிட்டு, திரும்பி வந்தார்.

"இந்த பெண்ணின் கண்ணில் ஒரேயொரு துளி கண்ணீர்கூட இல்லை'' -தந்தை கோபத்துடன் கூறினார்.

"அவளுக்குக் கவலை இல்லைன்னா...

நாம் ஏன் கவலைப்படணும்? ஆட்களுக்கு அறிவுரை கூற வேண்டிய அவசியமில்லை.''- தாய் கூறினாள்.

‌"எனக்கு ஒரு விஷயத்தில் சந்தோஷம் இருக்கு. வரதட்சணை தருவதற்காக ஃபைனான்ஸ் கம்பெனிக்குப் போகவேண்டிய தேவை இல்லை.''- தந்தை கூறினார்.

ஃபைனான்ஸ் கம்பெனியிலிருந்து கடன் வாங்கி தனக்கு பதினைந்து பவுனில் தங்க நகைகள் வாங்குவதற்கு தந்தை திட்டமிட்டிருந்தார். ஸ்ரீஜா நினைத்துப் பார்த்தாள். பீமா நகைக்கடைக்குச் சென்று சங்கிலியையும் ஆறு வளையல்களையும் ஜிமிக்கியையும் தேர்வு செய்யலாம் என்று அவள் கருதியிருந்தாள்.

அதை நினைத்ததும், திடீரென ஸ்ரீஜா வாய்விட்டு அழுதாள்.

__________

மொழிபெயர்ப்பாளரின் உரை

sura

வணக்கம்.

இந்த மாத "இனிய உதய'த்திற்காக 3 சிறந்த சிறுகதைகளை நான் மொழிபெயர்த்திருக்கிறேன்.

"துவாதசிப் பணம்' கதையை எழுதியவர்... நட்சத்திர மலையாள எழுத்தாளரும், கேரள சாகித்ய அகாடெமி விருது பெற்றவருமான உண்ணி கிருஷ்ணன் புதூர்.

கடன் பிரச்சினையில் சிக்குண்டு, யாருக்கும் தெரியாமல் வீட்டிலிருந்து ஓடிச் சென்ற தன் தந்தை திரும்பி வர வேண்டும் என்று கடவுளை வழிபடும் ஒரு மகனின் கண்ணீர் கதை.

இதில் வரும் சிறுவன் நாகராஜாவாக வேடம் பூண்டு இருக்கும் காட்சியை நினைக்கும்போது, நிச்சயம் நம் நெஞ்சம் கனக்கும்.

துவாதசிப் பணம் வைக்கும் சிறுவனை குருவாயூரப்பன் கைவிடவில்லை என்பது எவ்வளவு பெரிய ஆறுதல்!

"உண்மையான வாரிசு' கதையை எழுதியவர்... மலையாள பெண் எழுத்தாளர்களின் அரசியும், தேசிய சாகித்ய அகாடெமி விருது பெற்றவருமான மாதவிக்குட்டி.

தான் திருமணம் செய்ய இருக்கும் இளைஞன் போரில் வீர மரணம் அடைய, அதைத்தொடர்ந்து, இதன் நாயகியான ஸ்ரீஜாமோளின் மன ஓட்டம் எப்படி இருக்கிறது என்பதுதான் கதை.

ஒரு சிறிய கதையில் எவ்வளவு பெரிய பிரச்சினையை அலசுகிறார் மாதவிக்குட்டி!

உண்மையிலேயே மாதவிக்குட்டியின்மீது அளவற்ற மதிப்பு நமக்கு உண்டாகிறது.

"பட்டு நூல் புழு' கதையை எழுதியவர்... உலகப்புகழ்பெற்ற... மாபெரும் இலக்கிய மேதையான லியோ டால்ஸ்டாய்.

பட்டுப்புழுவை மையமாக வைத்து இப்படியொரு ஆழமான கதையை எழுத முடியுமா?

பட்டுப் புழுவின் நடவடிக்கைகளையும் மாற்றங் களையும் எந்த அளவிற்கு டால்ஸ்டாய் கூர்ந்து கவனித்துப் பார்த்திருக்கிறார் என்பதை நினைக்கும் போது, நமக்கு ஆச்சரியம்தான் உண்டாகிறது.

டால்ஸ்டாய்க்கு இருந்த அறிவியல் அறிவு நம்மை வியக்க வைக்கிறது.

இந்த மூன்று சிறுகதைகளும் உங்களுக்கு மாறுபட்ட இலக்கிய அனுபவங்களைத் தரும் என்பது நிச்சயம்.

"இனிய உதயம்' வெளியிடும் என் மொழி பெயர்ப்பு படைப்புகளை ஆர்வத்துடன் வாசிக்கும் உயர்ந்த உள்ளங்களுக்கு என் இதயத்தின் அடித்தளத்திலிருந்து நன்றி.

இந்த இடத்தில் ஒரு தகவல்...

நான் மொழிபெயர்க்கும் அருமையான இலக்கிய ஆக்கங்களை 'இனிய உதயம்' 2002 ஆம் ஆண்டு ஜூலை மாதத்திலிருந்து வெளியிட ஆரம்பித்தது.

அந்தப் பயணம் 23-ஆம் வருடத்தில் கால் பதித்திருக்கிறது.

இந்தக் காலகட்டத்தில் 30 மொழிகளிலிருந்து நான் மொழிபெயர்த்த 1000-க்கும் மேற்பட்ட சிறுகதைகளையும், எவ்வளவோ குறுநாவல்களையும், புதினங்களையும் "இனிய உதயம்' வெளியிட்டிருக்கிறது.

இதற்கு மூலகாரணமாக இருக்கும் திரு. நக்கீரன் கோபால் அண்ணன் அவர்களுக்கு என் இதய நன்றி.

இலக்கிய பயணம் தொடர்கிறது..

உங்களின் வாழ்த்தும், ஆதரவும் என்றும் வளரட்டும்.

அன்புடன்,

சுரா

uday010724
இதையும் படியுங்கள்
Subscribe