நீ என் காதலின் சின்னம்.
என் முல்லைக் கொடிக்குப் படர இருக்கும் வயதான தேன்மா நீதான்.
தோற்கடிக்கப்பட்ட ஒரு அரசனைச் சுற்றி நிலவக்கூடிய கவலை களின் வெளிப்பாட்டுடன் நீ எனக்கு முன்னால் தோன்றினாய்.
உன்னை மடியில் படுக்க வைத்து, உன் காயங்களை உலர வைக்கவும் உன் களைப்பைப் போக்கவும் நான் விரும்பினேன்.
நீ அதிர்ஷ்டசாலி.... நீ அதிர்ஷ்டசாலி...
அதிர்ஷ்டக் குலுக்கலில் வெற்றிபெறும் ஒரேயொரு சீட்டு நீ.
நீ கலப்படமற்ற ஆண்மை.
உன் உணர்ச்சிப் பகுதி பெண்ணின் கடிவாளம்.
எனக்குள் ரத்த ஆற்றின் கரையில் வேட்டையாடித் தளர்ந்த அரசனைப்போல நீ ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறாய்.
என் நரம்புகளை, காலணி அணிந்த கால் பாதங்களால் நீ மிதித்து நசுக்குகிறாய். அவை மண்ணுக்குள் மறைந்திருக்கும் காட்டு மரங்களின் வேர்களோ என்று நீ சந்தேகப்படுகிறாய்.
நீ என் ரத்தத்தைக் குடிக்கிறாய். என் மாமிசத்தைச் சாப்பிட்டதால் மட்டுமே நீ சதைப் பிடிப்புடன் ஆகிறாய்.
உன் நெற்றியின்மீது ஒரு அடையாளத்தை குறவர்கள் பச்சைக் குத்தி வைத்திருக்கின்றனர்.
பால்ய வயதில் தரித்திரனாக இருந்த குபேரன் நீ.
உன் தாய் உன்னை கண்ணய்யா என்றழைத்தாள்.
தரித்திரத்திலிருந்த அந்தப் பெண்ணை நினைத்து நான் பொறாமைப்பட்டேன்.
ஒருநாள் நானும் உன் தாயாகிவிட்
நீ என் காதலின் சின்னம்.
என் முல்லைக் கொடிக்குப் படர இருக்கும் வயதான தேன்மா நீதான்.
தோற்கடிக்கப்பட்ட ஒரு அரசனைச் சுற்றி நிலவக்கூடிய கவலை களின் வெளிப்பாட்டுடன் நீ எனக்கு முன்னால் தோன்றினாய்.
உன்னை மடியில் படுக்க வைத்து, உன் காயங்களை உலர வைக்கவும் உன் களைப்பைப் போக்கவும் நான் விரும்பினேன்.
நீ அதிர்ஷ்டசாலி.... நீ அதிர்ஷ்டசாலி...
அதிர்ஷ்டக் குலுக்கலில் வெற்றிபெறும் ஒரேயொரு சீட்டு நீ.
நீ கலப்படமற்ற ஆண்மை.
உன் உணர்ச்சிப் பகுதி பெண்ணின் கடிவாளம்.
எனக்குள் ரத்த ஆற்றின் கரையில் வேட்டையாடித் தளர்ந்த அரசனைப்போல நீ ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறாய்.
என் நரம்புகளை, காலணி அணிந்த கால் பாதங்களால் நீ மிதித்து நசுக்குகிறாய். அவை மண்ணுக்குள் மறைந்திருக்கும் காட்டு மரங்களின் வேர்களோ என்று நீ சந்தேகப்படுகிறாய்.
நீ என் ரத்தத்தைக் குடிக்கிறாய். என் மாமிசத்தைச் சாப்பிட்டதால் மட்டுமே நீ சதைப் பிடிப்புடன் ஆகிறாய்.
உன் நெற்றியின்மீது ஒரு அடையாளத்தை குறவர்கள் பச்சைக் குத்தி வைத்திருக்கின்றனர்.
பால்ய வயதில் தரித்திரனாக இருந்த குபேரன் நீ.
உன் தாய் உன்னை கண்ணய்யா என்றழைத்தாள்.
தரித்திரத்திலிருந்த அந்தப் பெண்ணை நினைத்து நான் பொறாமைப்பட்டேன்.
ஒருநாள் நானும் உன் தாயாகிவிட்டேன்.
என் மார்பகங்களுக்கு மத்தியில் முகத்தை வைத்தவாறு நீ கூறினாய்:
"தாயாக வேண்டாம். மனைவியானால் போதும்.''
காதல் செயல்களுக்குப்பிறகு தூக்கம். தூக்கத்திற்குப்பிறகு சிறிது அரசியல்... உன் கொள்கை எளிதானதாக இருந்தது. உன் ரசனை பழமையானதாகவும்.
விலை மதிக்கமுடியாத ஒரு வெளிநாட்டு மிங்வாஸில் நீ ப்ளாஸ்டிக் பூக்களை எடுத்து வைத்தாய். உன் வரவேற்பறை யில் காந்திஜி, சிவன், விவேகானந்தர் ஆகியோரின் கற்சிலைகளை நீ வைத்திருந்தாய். மரணமடைந்த தலைவர்களின் வண்ண புகைப்படங்களைக் கண்ணாடி போட்டு நீ... ஓ... மகாபாவி.. சுவரில் தொங்கவிட்டாய்.
எனினும், உன்னைக் காதலிப்பதற்காக நான் அவ்வப்போது உன் வீட்டிற்கு வந்தேன். உன் புத்தக சேகரிப்பில் நான் வாசிக்கக்கூடிய அளவிற்குத் தகுதிகொண்ட ஒரு புத்தகத்தைக்கூட நான் பார்க்கவில்லை.
விளக்கை அணைப்பதற்கும் இருட்டை நம்பு வதற்கும் உனக்கு நான் கற்றுத் தந்தேன். இருட்டில்..
உன் மூச்சு விடுதலை நான் பின்தொடர கற்றேன்.
என் கனவின் நீர்த் தடாகங்களில் ஒரு நீலத் தாமரையைப்போல உன் முகம் வெளியே தெரிந்தது.
திருப்தியற்ற இந்த காதலுக்கு சோக காவியங் கள் இயற்றுகிறது என் மனம்.என்னை நீ புரிந்து கொள்ளவில்லை.
நிர்வாணத்திலும் நித்திரையிலும் நீ நிபுணன்... தகுதி கொண்டவன்.
உன் வாயின் எச்சிலுக்கு மழை நீரின் புனிதம் இருக்கிறது. உன் சரீரத்திற்கு பசுமையான மண் ணின் வெப்பமும் வாசனையும் இருக்கின்றன.
நீ ஆண்... ஆதர்ஷ காதலன்...
குடும்பக் கட்டுப்பாடு திட்டத்தில் உனக்கு நம்பிக்கையில்லை.பெண்ணின் சரீரமும் இதயமும் மாற்றி... மாற்றி உன் ஆணவத்தைத் தாலாட்டு பாடி தூங்க வைக்கின்றன.
படுக்கையறையின் வாசலில் உன்னைத் தூக்கத் திலிருந்து எழுப்புவதற்குத் தயாராக நிறைய கோபஸ்த்ரீகள் காத்து நின்றிருக்கின்றனர்.
ஈரம் விலகாத என் சுருள் முடி உன் முகத்தில் விழுந்து அசைகிறது.
கசப்பும் இனிப்பும் உள்ள உன் நரம்புகள் என் காமத்தை வரவேற்று நிரந்தரமாக நிலைநிற்கச் செய்திருக்கின்றன.
உன்னை சூரிய வெளிச்சத்தில் நான் பார்த்ததே இல்லை.
இரவு விளக்கு, பல்லக்கு, சேவகர்களுடன் உன் நாயர் பத்தினியுடன் சேர்வதற்கு வரும் பிராமண காதலன் நான்.கிழக்கு வெள்ளை தோன்றும்போது, இளம் வெப்பமுள்ள நம் படுக்கையை விட்டு நான் திரும்பிச் செல்கிறேன்.
இனி திரும்பிச் செல்லக்கூடாது என்று ஒரு முறையாவது நீ என்னிடம் கூறுவாய் என எதிர் பார்க்கிறேன்.
ஒருநாள் என் முகத்தை மற்ற முகங்களிலிருந்து வேறுபடுத்திப் பார்ப்பதற்கு உன்னால் முடியும் என்பதையும்....
---------------------
வணக்கம்.
இந்த மாத "இனிய உதய'த்திற்காக நான்கு மலையாள சிறுகதைகளை மொழிபெயர்த்திருக்கிறேன். நான்கு கதைகளும் மாறுபட்ட கருக்களைக் கொண்டவை.
வேறுபட்ட உத்தியில் எழுதப்பட்டவை. "கனகாம்பரம்' என்ற கதையை எழுதியவர் மலையாள இலக்கியத்தின் தலைமகன்களில் ஒருவரும், ஞானபீடம் விருது, சாகித்ய அகாடெமி விருது ஆகிய உயர்ந்த விருதுகளைப் பெற்றவருமான எஸ்.கெ. பொற்றெக்காட். வாசலில் வளர்ந்திருக்கும் கனகாம்பர மலருக்குப் பின்னால் இப்படியொரு கதையா! பொற்றெக்காட்டைத் தவிர, வேறு யாரால் இப்படிப்பட்ட ஒரு கதையை எழுதமுடியும்? நான்கு கதாபாத்திரங்களை வைத்து ஒரு குடும்பத்தின் கதையையே நம் கண்களுக்கு முன்னால் கொண்டுவந்து நிறுத்திவிட்டாரே எழுத்தாளர்! கதாபாத்திரங்களை எப்படி உயிர்ப்புடன் படைப்பது என்பதை நாம் பொற்றெக்காட்டிடம் கற்றுக்கொள்ள வேண்டும்.
"கவிஞர்' என்ற கதையை எழுதியவர் சாகித்ய அகாடெமி விருதுபெற்ற நட்சத்திர மலையாள எழுத்தாளரான உண்ணிகிருஷ்ணன் புதூர். ஆன்மிகப் பின்னணியில் எழுதப்பட்ட கதை. கவிஞராகப் பிரகாசிக்க வேண்டும் என்பதையே நோக்கமாகக்கொண்டு அலைந்து திரியும் ஒரு மனிதரின் கதை. குருவாயூர் ஆலயத்தில் உயர் பதவியில் இருந்தவர் உண்ணிகிருஷ்ணன் புதூர். கோவிலின் பின்னணியில் கதைகள் படைப்பதில் கை தேர்ந்தவர் அவர் என்பதை நாம் கூறவும் வேண்டுமோ?
"பெயர்' என்ற கதையை எழுதியவர் சாகித்ய அகாடெமி விருது பெற்றவரும், நவீன மலையாள இலக்கியத்தின் சிற்பியுமான ஒ.வி. விஜயன். அறிமுகமற்ற ஒரு மனிதரை போதவிரதன் சந்திப்பதும், அவர்களுக்கிடையே சில நிமிடங்கள் பெயரைக் குறித்து உரையாடல்கள் நடப்பதும்தான் கதை. ஒரு பெயருக்குப் பின்னால் இப்படியொரு சுமையா என்ற எண்ணம் இந்த கதையை வாசித்து முடிக்கும்போது, ஒவ்வொருவருக்கும் உண்டாகும். சில வரிகளிலேயே எப்படிப்பட்ட பேருண்மையைக் கூறுகிறார் ஒ.வி. விஜயன்!
"காதலின் துயர காவியம்' என்ற கதையை எழுதியவர் சாகித்ய அகாடெமி விருதுபெற்றவரும், மலையாள பெண் எழுத்தாளர்களின் அரசியுமான மாதவிக்குட்டி. மனதில் எழும் எண்ணங்களையே ஒரு முழு கதையாக எழுத முடியுமா? அதைத்தான் செய்திருக்கிறார் மாதவிக்குட்டி.
மனவோட்டத்தின்மூலம் கதாபாத்திரங்களை நமக்கு முன்னால் கொண்டுவந்து நிறுத்தும் மாயச் செயலை மாதவிக்குட்டி செய்கிறார்.
இந்த உத்திக்காகவே நாம் அவரைப் பாராட்ட வேண்டும்.
நான் மொழிபெயர்த்த இந்த சிறுகதை கள்,இவற்றை வாசிக்கும் உங்களுக்கு பயனுள்ள இலக்கிய அனுபவங்களைத் தரும் என்பது உறுதி.
"இனிய உதயம்'மூலம் என் மொழி பெயர்ப்பு ஆக்கங்களை வாசித்து வரும் உயர்ந்த உள்ளங்களுக்கு நன்றி.
அன்புடன்,