"மன்னனையும் மாசில்லாமல் கற்றவனையும் சீர்தூக்கிப் பார்த்தால், மன்னனைக் காட்டிலும் கற்றவனே சிறப்புடையவன். எப்படியென்றால், மன்னனுக்கு அவனது ஆட்சிக்கு உட்பட்ட நாட்டில் மட்டுமே சிறப்பு.

கற்றவனுக்கோ அவன் சென்ற இடத்திலெல்லாம் சிறப்பு' என மூதுரையில் கல்வியின் சிறப்பு குறித்து சொல்கிறார் ஔவையார். அத்தகைய சிறப்புடைய கல்வி யைக் கற்கும் மாணவர்களை, அவர்கüன் பாடத்தைத் தாண்டி, சமூகம் சார்ந்த சிந்தனைகüல் பட்டை தீட்டும் நோக்கில், தமிழ்நாட்டிலுள்ள அரசு மற்றும் தனியார் பள்ü மாணவர்களுக்கு பல்வேறு தலைப்புகள் பேச்சுப்போட்டி நடத்தி ஊக்கப்படுத்திவருகிறது நக்கீரன் குழுமம். நக்கீரன் இதழோடு அதன் அங்கமான சி.என்.சி. கைட்ஸ் இணைந்து நடத்திய மூன்றாவது ஆண்டு பேச்சுப் போட்டி நிகழ்ச்சியின் பரிசüப்பு விழா, கடந்த நவம்பர் 18, சனிக்கிழமையன்று, என் ஸ்டுடியோ வளாகத்தில் நடைபெற்றது.

ff

இந்த பேச்சுப்போட்டியில் தமிழ்நாட்டிலுள்ள 13 மாவட்டங்களைச் சேர்ந்த 850 பள்ü மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர் களுக்கு இந்த போட்டி நடத்தப்பட்டது. மாவட்ட அளவில் நடைபெற்ற போட்டிகüல் பங்கேற்று, இறுதிச்சுற்றுப் போட்டிக்கு 120 மாணவ, மாணவி கள் தேர்வு செய்யப்பட்டனர். இவர்கü-ருந்து பரிசுக்குரிய 21 மாணவ, மாணவிகள் தேர்வு செய்யப் பட்டனர். வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்கு ஷீல்டு, சான்றிதழ் மற்றும் புத்தகப்பரிசு வழங்கப் பட்டது. சென்னையில் நடைபெற்ற முதலாவது இறுதிச்சுற்றில்,கவிஞர் ஆதிரா முல்லை, முனைவர் மஞ்சுளா, ஆவ ணப்பட இயக் குநர் ராஜகம்பீரன் ஆகியோர் நடுவர் களாக செயல் பட்டனர்.

பரிசüப்பு விழா

வில், கூடுதல் காவல் துறை இயக்குநர் (ரயில்வே பாதுகாப்புத்துறை) வே.வனிதா ஐ.பி,எஸ்., பட்டிமன்ற பேச்சாளர் அருள் பிரகாஷ், நமது ஆசிரியர் நக்கீரன் கோபால் ஆகியோர் சிறப்புரையாற்றினர். விழா நிகழ்ச்சியை தமிழ்நாடு அரசின் இலங்கைத் தமிழர் நலன் மறுவாழ்வுக்குழு உறுப்பினர் கோவி.லெனின் ஒருங்கிணைக்கும் பணியை மேற்கொண்டார்.

கோவி.லெனின் தனது பேச்சின்போது, "வருங் கால தலைமுறையை அறிவுச்செல்வமாக மாற்று வதற்கு, வளர்த்தெடுப்பதற்கு கடந்த மூன்றாண்ட்டு களாக தொடர்ந்து மேற்கொண்டிருக்கின்ற இந்த பேச்சுப்பயிற்சி, பேச்சுப்போட்டி எனும்போது சிலருக்கு பரிசுகள் கிடைக்கும், சிலருக்கு பரிசுகள் கிடைக்காது, பயிற்சி எனும்போது எல்லோருமே சமமானவர்களாகத்தான் இருப்பார்கள். எனவே நீங்கள் அத்தனை பேரும் சமம் தான். இங்கு வர இயலாமல் போனவர்களும் சமம் தான். இன்றைக்கு விதைக்கப்படுகின்ற எந்த விதையும் நாளை பழுதின்றி வளரும் என்ற நம்பிக்கை நக்கீரன் குடும்பத்திற்கு எப்போதுமே உண்டு! ஏறத்தாழ 36 ஆண்டுகளாக இந்த சமுதாயத்தில் விழிப்புணர்வ் விதையை விதைத்துவருகின்ற நக்கீரன் குடும்பத்தினுடைய தலைவர் எங்கள் அன்புக் குரிய அண்ணன் நக்கீரன் கோபால் அவர்களுடைய பெருமுயற்சியின் இன்னொரு விளைவுதான்... ஆலமரத்தின் இன்னொரு விழுது தான் இந்த பேச்சுப்பயிற்சி!" என்று பேச்சுப்போட்டியின் சிறப்பை எடுத்துரைத்தார்.

Advertisment

ff

நக்கீரன் ஆசிரியர் உரையாற்றியபோது, இந்த பேச்சுப்போட்டியை நடத்துவதற்காகப் பாடுபட்ட அனைவருக்கும் பாராட்டுக்களை தெரிவித்தார். போட்டியில் கலந்துகொண்ட மாணவர்கü-ருந்து வெற்றியாளர்களைத் தேர்வுசெய்ய உறுதுணை யாக இருந்த நடுவர்கள் அனைவர் பெயர்களையும் குறிப்பிட்டு நன்றி தெரிவித்தார். நக்கீரன் குழுமம், சி.என்.சி. கைட்ஸ் தயாரிப்பில் இறங்கியதற்கான காலச்சூழல் குறித்து விவரித்தார். தொடர்ந்து பேசியவர், "இந்த பேச்சுப்போட்டியில் தங்கள் பிள்ளைகள் கலந்துகொள்வதற்காக அக்கறையெடுத்து வந்துள்ள பெற்றோர்களுக்கு வாழ்த்துகள். நீ போய் பேசிட்டு வா என்று அனுப்பிவிடாமல் பிள்ளைகளை ஊக்கப்படுத்தி உடன் வந்துள்ளார்கள். இந்த நிகழ்ச்சிக்கு சிவகாசியி-ருந்து ஒருவர் வந்திருந்தார். தனது பிள்ளை சிவகாசி பட்டாசுத் தொழிலாளர்களைப் பற்றி பேசியிருக்காங்க சார். அந்த பேச்சை கேளுங்க என்றுகூட சொல்லல... அந்த தொழிலாளர்கள் படும் கஷ்டத்தை நீங்க கவனம் எடுக்கணும் சார் என்றார்கள். தன்னைச் சார்ந்த ஒரு கஷ்டத்தை வெüயே கொண்டுவர வேண்டுமென்று ஆசைப்படுவதே பெரிய விஷயம். அதைத்தான் அந்த பிள்ளை பேசியிருப்ப தாக சொன்னார்கள். ஆக, ஏதோ தலைப்பு கொடுத்தோம், பேசினோம் என்றில்லாமல், தான் சார்ந்த... அப்பா பார்க்கும் தொழில் சார்ந்த கஷ்டத்தை பேசியிருப்பது பாராட்டுக்குரிய விஷயம். பேச்சுப்போட்டியில் அனைவரும் ஆர்வத்தோடு கலந்துகொள்வதைப் பார்க்கும்போது எதிர்காலத்தின்மீது நம்பிக்கை யும், மனதுக்கு மகிழ்ச்சியாக உள்ளது. நீங்கள் அனைவரும் எதிர்காலத்தில் பெரிய அளவில் வருவதற்கான ஆரம்பம் தான் இது." என்று பெருமிதத்தோடு கூறினார்.

சிறப்புரையாற்றிய வே.வனிதா ஐ.பி,எஸ்., "பேசுவது ஒரு கலை. ஆய கலைகள் அறுபத்தி நான்கில் அது ஒரு முக்கியமான கலை. சின்ன வயதில் பேசும் கலையைக் கற்றுத்தரும் ஆசிரியர்கள் நம்முடைய வாழ்க்கைக்கு முக்கியமான ஏணிப் படிகள் என நீங்கள் போற்ற வேண்டும்." என்றவர், தனது பேச்சின் வழியாக, "நக்கீரன் கோபால் அவர்களை தெரியுமா?" என மாணவர்களை நோக்கி கேட்டார். அதற்கு மாணவர்கள் அனைவரும், தெரியு மென்றும், யூட்யூப்பில் பார்த்திருக்கிறோம் என்றும் கூறினார்கள். அவர்கள் கூறியதை வைத்தே, தன் வாழ்வில் ஆன்ட்ராய்ட் செல்போன் பயன்பாட்டில் இருக்கும் சிக்கல்களை அனுபவப்பூர்வமாக விளக்கி விட்டு, அத்தகைய செல்போன்களை பிள்ளைகள் பயன்படுத்தும்போது பெற்றோர்கள் கண்காணிக்க வேண்டுமென்று கேட்டுக்கொண்டார். மாணவர் களுக்கு அüக்கப்பட்ட தலைப்புகள் குறித்தும், அரசியல் குறித்தும் மாணவர்கள் தெரிந்துகொள்ள வேண்டியதன் அவசியம் குறித்தும் பேசினார். தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, கலைஞரின் பேச்சுக்கள் குறித்தெல்லாம் சிலாகித்துப் பேசியவர், அதிகாரத்தை கைப்பற்ற அறிவுத்திறனும், பேச்சுத்திறனும் வேண்டுமென்பதை எடுத்துரைத்தார்.

இறுதியாக சிறப்புரையாற்றிய பட்டிமன்ற சிறப்பு பேச்சாளரான அருள்பிரகாஷ், தனது நகைச்சுவையான பேச்சின் மூலம் அரங்கத்தை சிரிப்பலையில் அதிரச் செய்ததோடு சிந்திக்கவும் வைத்தார். "நாம் எந்த பேச்சைத் தயாரிப்பதாக இருந்தாலும், இந்த அரங்கத்தை விட்டுப் போகும் போது, இன்று எனக்கு என்ன செய்தி எடுத்துக் கொண்டு போகிறேன் என்று யோசிக்க வேண்டும்.

ffff

Advertisment

எழுதி வைத்துக் கொள்ளுங் கள் இன்னும் ஐந்தாண்டு களோ பத்தாண்டு களோ கழித்து இதே பேச் சுப்போட் டிக்கு இங் கிருக்கும் ஒருவர் சிறப்பு விருந்தினராக வந்தால் தான் இந்த பேச்சுப்போட்டிக்கு வெற்றி! மொழியை நிறைய படிக்க வேண்டும். நிறைய படைக்க வேண்டும். பாதுகாக்க வேண்டும். அது தான் இந்த பேச்சுப்போட்டியின் நோக்கமே." என்றார். தாய்மொழி தமிழின் பெருமை என்னவென்பதை எடுத்துரைத்தார்.

"ஒரு பேச்சை எப்படி வடிவமைக்க வேண்டும்? பேச்சாளர்களுக்கு சேமித்த அறிவு இருக்க வேண்டும். அடுத்து, சிந்தித்த அறிவு இருக்க வேண்டும்.

நீ சேமித்த அறிவு பலரை சிந்திக்கத்தூண்டுவதாக இருக்க வேண்டும். நீ சிந்தித்த அறிவு, பலர் சேமித்து வைக்கக்கூடியதாக இருக்க வேண்டும். இதுதான் பேச்சாளன் வெற்றிபெறுவதற்கான சூத்திரம்" என்று குறிப்பிட்டார். அன்றைய நிகழ்ச்சியில் வெற்றிபெற்ற மாணவர்கள் பரிசுகளைப் பெற்றதோடு, அவையி-ருந்தவர்கள் சிந்திப்பதற்கான பல்வேறு செய்திகளையும் பேச்சாளர்கüடமிருந்து பெற்றனர். அதுதானே இந்த நிகழ்ச்சியின் வெற்றியே!