தந்தையும் மேதை பிள்ளையும் மேதை எனும்படியான ஒருவரை சந்திக்கும் வாய்ப்பு அரிதாகவே நிகழும். அதுவும் இருவரும் ஒரே துறையில் மேதையாய்த் திகழ்வதென்பது இன்னும் அரிதான நிகழ்வு. அத்தகைய ஓவியர்கள்தான் மணியமும் மணியம் செல்வனும். இங்கு ஓவியர் மணியம் குறித்து அவரது மகன் மணியம்செல்வன் பகிர்ந்துகொள்கிறார்.
ஓவியர் மணியத்தின் நூற்றாண்டு விழா தருணம் இது. அவரது குடும்பத்தினர் அதனைக் கொண்டாடிக்கொண்டு இருக்கின்றனர். மணியம் செல்வம் தனது தந்தையின் மகத்துவத்தைப் பற்றி பேச ஒருபோதும் சோர்வடைந்ததில்லை, மாறாக அவரைப் பற்றி அதிகம் சொன்னதில்லை என நம்புகிறார். இந்த உலகத்துக்கு ஓவியர் மணியம் நினைவுச்சின்னமாக அளித்த கலைப் படைப்புகளில் மூழ்க மூழ்க, புதிய தரிசனங் களையும் பரிமாணங்களையும் கண்டுபிடித்துக்கொண்டே இருக்கிறார்.
மணியம் நிச்சயமாக தனது காலத்தை விஞ்சிய கலைஞர். அவரது ஆயுட்காலம் (1924-1968) சிறிதாயிருக்கலாம், ஆனால் மேதைகளின் விஷயத்தில் நிகழ்வதுபோல ஆயுள் அவரது சாதனைகளுக்கு ஒரு பொருட்டாக இருக்கவில்லை.
அவர் தனது கலைத்தொழிலில் 28 ஆண்டுகள்தான் பணி புரிந்திருந்தாலும், பல்வேறு ஊடகங்களில் தனக்கென ஒரு பாணியை ஏற்படுத்திக்கொண்டு, பல்வேறு பாணியிலான செவ்வியல் கலைகளின் ஒருங்கிணைப்பாகத் திகழ்ந்துவிட்டுச் சென்றிருக்கிறார். சிறுகதை முதல் தொடர்கதை, பயணக் கட்டுரை, அலங்கார ஓவியங்கள் என அவரது ஓவியம் தொடாத இடமே இல்லை. அதுவும் இவையெல்லாம் தொழில்நுட்பம் வளர்ச்சியடைந்துகொண்டிருக்கிற காலத்திலே சாதித்தது.
அவரது மாறாத துணைவன், ரூ 630-க்கு வாங்கிய ஒரு பேபி ரோலிப்ளெக்ஸ் புகைப்படக் கருவிதான். 1948-ல் அது பெருந்தொகைதான். வேறெந்த சோர்ஸும் கிடைக்காததால், புகைப் படங்களே அவரது ஒரே ரெஃபரன்ஸாக இருந்தது” என்கிறார் ம.செ. அவரது தந்தையின் ஆரம்ப கட்ட வருடங்களின் பற்றிய செழும
தந்தையும் மேதை பிள்ளையும் மேதை எனும்படியான ஒருவரை சந்திக்கும் வாய்ப்பு அரிதாகவே நிகழும். அதுவும் இருவரும் ஒரே துறையில் மேதையாய்த் திகழ்வதென்பது இன்னும் அரிதான நிகழ்வு. அத்தகைய ஓவியர்கள்தான் மணியமும் மணியம் செல்வனும். இங்கு ஓவியர் மணியம் குறித்து அவரது மகன் மணியம்செல்வன் பகிர்ந்துகொள்கிறார்.
ஓவியர் மணியத்தின் நூற்றாண்டு விழா தருணம் இது. அவரது குடும்பத்தினர் அதனைக் கொண்டாடிக்கொண்டு இருக்கின்றனர். மணியம் செல்வம் தனது தந்தையின் மகத்துவத்தைப் பற்றி பேச ஒருபோதும் சோர்வடைந்ததில்லை, மாறாக அவரைப் பற்றி அதிகம் சொன்னதில்லை என நம்புகிறார். இந்த உலகத்துக்கு ஓவியர் மணியம் நினைவுச்சின்னமாக அளித்த கலைப் படைப்புகளில் மூழ்க மூழ்க, புதிய தரிசனங் களையும் பரிமாணங்களையும் கண்டுபிடித்துக்கொண்டே இருக்கிறார்.
மணியம் நிச்சயமாக தனது காலத்தை விஞ்சிய கலைஞர். அவரது ஆயுட்காலம் (1924-1968) சிறிதாயிருக்கலாம், ஆனால் மேதைகளின் விஷயத்தில் நிகழ்வதுபோல ஆயுள் அவரது சாதனைகளுக்கு ஒரு பொருட்டாக இருக்கவில்லை.
அவர் தனது கலைத்தொழிலில் 28 ஆண்டுகள்தான் பணி புரிந்திருந்தாலும், பல்வேறு ஊடகங்களில் தனக்கென ஒரு பாணியை ஏற்படுத்திக்கொண்டு, பல்வேறு பாணியிலான செவ்வியல் கலைகளின் ஒருங்கிணைப்பாகத் திகழ்ந்துவிட்டுச் சென்றிருக்கிறார். சிறுகதை முதல் தொடர்கதை, பயணக் கட்டுரை, அலங்கார ஓவியங்கள் என அவரது ஓவியம் தொடாத இடமே இல்லை. அதுவும் இவையெல்லாம் தொழில்நுட்பம் வளர்ச்சியடைந்துகொண்டிருக்கிற காலத்திலே சாதித்தது.
அவரது மாறாத துணைவன், ரூ 630-க்கு வாங்கிய ஒரு பேபி ரோலிப்ளெக்ஸ் புகைப்படக் கருவிதான். 1948-ல் அது பெருந்தொகைதான். வேறெந்த சோர்ஸும் கிடைக்காததால், புகைப் படங்களே அவரது ஒரே ரெஃபரன்ஸாக இருந்தது” என்கிறார் ம.செ. அவரது தந்தையின் ஆரம்ப கட்ட வருடங்களின் பற்றிய செழுமை யான நினைவுகளைக் கொண்டிருந்தார். அப்போது மணியன் கிட்டத்தட்ட எல்லா நேரமும் பணியாற்றிக்கொண்டிருந்தார் “நான் மிகவும் இள வயதினன், அவர் என்ன செய்து கொண்டிருந்தார் என்பதைப் பற்றி மிகவும் குறைவாகவே அறிந்திருந்தேன். கலை மாணவனாக ஒரு வசீகரத்துடன் அவரைக் கவனித்துக்கொண்டிருந்தேன். ஆனால் எனக்கு பதினெட்டு வயதானபோது, அவர் எங்களைவிட்டுச் சென்று விட்டார். எங்களைத் தாங்கிநின்ற அம்மா சரஸ்வதிதான், அவரது தொழிலைப் பற்றிய அனைத்தையும் எங்களிடம் கூறியது.
கல்கி கிருஷ்ணமூர்த்தியுடனான சந்திப்பு
1924, ஜனவரி 26-ல் உமாபதி- ஞானாம்பாள் தம்பதிக்குப் பிறந்த சுப்பிரமணியன், மாமா லிங்கையா மயிலாப்பூரின் காட்சிகளை வரைவதைப் பார்த்து ஓவியத் துறைக்குள் வந்தார். அவருடன் இருந்த அவரது பள்ளித் தோழர்தான் புகழ்பெற்ற இசைக் கலைஞரும் ஓவியருமான எஸ். ராஜன். மணியமின் ஓவிய ஆர்வத்தைப் பார்த்த மாமா அவரை சென்னை ஓவியக் கல்லூரியில் சேர்த்துவிட்டார். ராஜமின் தந்தை சுந்தரம் கல்கி ஆர். கிருஷ்ணமூர்த்தியைச் சந்திக்கும்படி சுப்பிரமணியனை வலியுறுத்தினார்.
பதினேழு வயதில் கல்கியின் வீட்டுக்கு தனது ஓவியங் களுடன் சென்று அவரைச் சந்தித்தார். அவர் அந்த ஓவியங்களை கல்கியில் பிரசுரிக்க விரும்பினார். அவரது ஓவியங்களைப் பார்த்த கிருஷ்ணமூர்த்தி அவரை, கல்கியில் வேலைக்குச் சேரும்படிச் சொன்னார். ஓவியக் கல்லூரியில் தனது படிப்பைக் குறித்து சுப்பிரமணியம் யோசிக்க, "வரையப் போவது உன் கைதான், உனது பட்டயப் படிப்பு அல்ல' என்றார். அந்த இளைஞன் கல்கியில் சேர்ந்தார்.
இப்படியாகப் பிறந்ததுதான் அந்தக் கூட்டணி. சில பத்தாண்டு களுக்கு இந்தக் கூட்டணியில் உருவான ஓவியங்கள் செழித்துப் பெருகியதுடன், காலம்கடந்து இன்றும் பேசப்படுகிறது.
ஆசிரியர் கல்கிதான் சுப்பிரமணியம் என்ற பெயரை மணியம் எனச் சுருக்கினார். அவரது ஓவியங்கள் கல்கி தொடங்கிய ஐந்தாவது வாரம் முதலே அதில் வெளியாகத் தொடங்கின. 1941- 1957 வரையிலான காலகட்டத்தை மணியம் செல்வம் குருகுல வாசம் என அழைக்கிறார். அந்த வளரும் கலைஞருக்கு மாபெரும் பயிலும் காலகட்டமாக அது அமைந்தது. கல்கி, மற்றொரு நிறுவனரான சதாசிவம் இருவரின் வழிகாட்டுதலில் பல்துறை ஓவியராக வளர்ச்சியடைந்தார். அவர் இரு நிறுவனர்களின் குடும்பத்தாருக்கும் நெருக்கமானவராக இருந்தது ஆச்சரியமல்ல.
அவர் தென்னிந்தியா முழுவதும் பெரிய அளவில் பயணம் செய்தார். அஜந்தா, எல்லாரோ குகைகளுக்குப் பயணித்தது மணியமுக்கு புதிய திறப்பாக அமைந்தது. அந்த ஓவியங்கள், சிற்பங்களின் பாணியை உள்வாங்கிக்கொண்டு அவற்றை தனது படைப்புகளில் பிரமிக்கவைக்கும் வீச்சுடன் வெளிப்படுத்தினார் மணியம். மாமல்லபுரம், அவர் கலையை வளர்த்தெடுத்த இன்னொரு தலம்.
கல்கியின் தீபாவளிச் சிறப்பிதழ்கள் மணியத்தின் ஓவியங்களால் நிறைந்து காணப்பட்டன. ராஜாஜியின் சிறுகதை ஒன்றுக்கு அவர் வரைந்த ஓவியம் அவரிடமிருந்து புகழுரைகளைப் பெற்றுத்தந்தது. ராஜாஜியின் சக்ரவர்த்தி திருமகன் தொடரை ஓவியங்களால் அணிசெய்யும் வாய்ப்பு மணியத்துக்கு வாய்த்தது.
ஆனால் 1950-ல் பொன்னியின் செல்வன் தொடரைத் தொடங்கியபோதுதான் திருப்புமுனை வந்தது. கல்கியில் திறமை வாய்ந்த ஓவியர்கள் பலர் இருந்தபோதும், அந்த முக்கியமான வாய்ப்பு தனக்கு வாய்த்தபோது மகிழ்ச்சியில் திகைத்துப்போனார் மணியம். பொன்னியின் செல்வன் தமிழ் மக்களிடையே மறக்க முடியாத கதையாக மாறிப்போனது கிருஷ்ணமூர்த்தியின் கதை சொல்லும் திறத்தாலும் மணியத்தின் உயிர்த்துடிப்புமிக்க ஓவியத்தாலும்தான். வந்தியத்தேவனின் காலடியைப் பின்பற்றி கல்கி தென்னிந்தியாவினூடாக இலங்கைக்கு மணியத்தையும் இட்டுச்சென்றார். ஒவ்வொரு துல்லிய விவரத்தையும் விவரிக்கும் மணியம் பாணியின் முத்திரையாக அமைந்தது இத்தொடர். வரலாறு மணியனை விழுங்க, அவர் தனது அறிவாலும் செழுமையான கற்பனையாலும் இறந்தகாலத்தை மறுசிருஷ்டி செய்தார்.
உயிர்த்துடிப்புமிக்க ஓவியங்கள்
ஆணும் பெண்ணுமான பிரதான கதாபாத்திரங்கள் அப்படியே பொறித்துருவாக்கப்பட்டன. ஓவியங்கள் தங்கள் உடல்மொழியாலும் முகவெளிப்பாடுகளாலும் பேசின. வந்தியத்தேவன் போர்வீரன் மட்டுமின்றி திறமைமிக்க உளவாளியும்கூட. மணியமோ அவனது அலட்சியமும் குறும்புமான நகைச்சுவையையும் சேர்த்தே காட்சிப்படுத்தினார். நந்தினி, குந்தவையின் தனிப்பட்ட குணங்கள் அவர்களை நிச்சயம் சிறப்பாகக் காட்சிப்படுத்திவிடும், ஆனால் மணியமின் வரைகோடுகள் காதல் சோகத்துடனான வானதியையும் சிறப்பாகக் காட்டின. படகுப் பெண் பூங்குழலியை எளிமையும் துடிப்பும் புத்திசாலித்தனமும் மிக்கவளாகக் காட்டின. அவை அனைத்துமே உணர்வெழுச்சி மிக்கவையாக இருந்தனவேயன்றி வக்கிரமாக இருக்கவில்லை. அதனால்தான் ஒட்டுமொத்த குடும்பமும் அந்தக் கதையை ரசித்துப் படிக்கமுடிந்தது.
கல்கியின் மற்றொரு வரலாற்று நாவலான சிவகாமியின் சபதம் நாவலுக்கு கல்கி இதழின் மூத்த ஓவியரான வர்மாதான் சித்திரங்கள் தீட்டியது என்றாலும், மணியம் அதற்கான காட்சிகளை வழங்க கேட்டுக்கொள்ளப்பட்டார். அது தொடரின் கீழ்ப்பக்கத்தை அலங்கரிக்கும். நாவலின் கடைசி அத்தியாயத்தின்போது அவர்களின் படைப்புகளை அட்டையில் பிரசுரித்து அவர்களது பங்களிப்பை அங்கீகாரம் செய்தார் கல்கி.
“கல்கியில் பொன்னியின் செல்வன் தொடங்கியபோது 1950, அக்டோபர் 27-ல் பிறந்தேன்” என நினைவுகூர்கிறார் லோகநாதன், “பின்னால், நான் என் ஓவியப் பணியைத் தொடங்கியபோது, அப்பா என்னை எம்.செல்வன் என கையொப்பமிட ஊக்குவித்தார். அதாவது மணியம் பையன் என்ற பொருளில். நான் ம.செ. என கையெழுத்திட ஆரம்பிக்கும் வரை மணியம் செல்வன் எனக் கையெழுத்திட்டு வந்தேன். அது ஒன்றும் தற்செயலான, அந்தக் கணத்து முடிவல்ல என்பதை நான் பின்னால் உணர்ந்தேன்.
அப்பா மறைந்து வெகுகாலத்துக்குப் பின் அவரது நாட்குறிப்பேட்டை வாசிக்க நேர்ந்தபோது, அவர், மணியம் செல்வன்’ பிறந்தான் என எழுதிவைத்திருந்தார்.
கல்கி மறைந்து இரண்டு ஆண்டுகளுக்குப் பின் 1957-ல் மணியத்தை கலை இயக்குநராகப் பணியாற்ற அழைத்தனர். படம்- பார்த்திபன் கனவு. அந்த நாவலுக்கு மணியம் சித்திரங்கள் வரைந்திருக்கவில்லை. மணியம் செல்வன் அதற்கு வெறுமனே ஸ்கெட்சஸ் வரைந்து கொடுத்ததோடு நிறுத்திவிடவில்லை. செட்டுகள், டிசைன்கள், பட புரமோஷனுக்காக அவர் செய்த வடிவமைப்புகள், கட் அவுட்டுகள் அனைத்துமே மகத்தானவை.
1957- 1968 ஆண்டுகளில் மணியம் ஃப்ரீலான்சராக சிறந்து விளங்கினார். கல்கி தீபாவளி இதழ்களிலும், வெள்ளிவிழா மலரிலும் அவரது கைவண்ணத்திலான ஓவியங்கள் அலங்கரித்தன. இந்தப் பணிகள் அவரை ஹம்பிக்கும் பாதமிக்கும் அழைத்துச்சென்றன. அவர் அங்கிருந்து திரும்பும்போது இன்னும் செழுமையான உள்ளுணர்வுடன் திரும்பினார். அந்தக் காலகட்டத்திய அவரது படைப்புகளில் அவை பிரதிபலித்தன.
இந்த இடைவிடாத பணிகள் மணியமின் ஆரோக்கியத்தைப் பறித்தன. 1967-ல் பொன்னியின் செல்வன் மீண்டும் தொடங்கப் பட்டபோது புதிய யோசனைகளால் நிரம்பிவழிந்தது அவர் மனது.
ஆனால் அதனைச் செயல்படுத்துவதற்கான ஆரோக்கியம் அவரிடமில்லை. அவர் இதயம் உடைந்து, அந்த இடங்களை மீண்டும் பயணம் செய்து பார்ப்பதற்காக- தஞ்சாவூர் செல்வதற்கான பயணச்சீட்டு எடுக்கும்படி என்னை வலியுறுத்தினார். ஆனால் கடைசியில் அவர் அந்தப் பயணத்தை மேற்கொள்ளவில்லை” என்கிறார் ம.செ. அந்த மேதை செப்டம்பர் 29, 1968-ல் மறைந்தார், ஆனால் அதற்கு முன் கலை சாம்ராஜ்யத்தை கோலோச்ச, தனது மகனிடம் தனது செங்கோலை ஒப்படைத்துவிட்டுத்தான் சென்றிருக்கிறார்.
தமிழாக்கம்: க. சுப்பிரமணியன் நன்றி: தி ஹிந்து