ஒரு காலத்தில் ஒரு அரசருக்கு இது நடைபெற்றது.
ஒவ்வொரு காரியத்தையும் செய்வதற்கான சரியான நேரத்தைத் தெரிந்து கொள்ள விரும்பினார்.
எப்படிப்பட்ட மனிதர்கள் கூறுவதைக் கேட்க வேண்டும், எப்படிப்பட்ட மனிதர்களை ஒதுக்க வேண்டும் என்பதை அறிந்து கொள்ள விரும்பினார்.
அனைத்திற்கும் மேலாக... செய்ய வேண்டிய மிகவும் முக்கியமான காரியம் என்ன என்பதைத் தெரிந்துகொள்ள விரும்பினார்.
ஏனென்றால், தான் செய்யும் எந்தச் செயலிலும் தான் தோற்றுவிடக் கூடாது என்பதில் அவர் மிகவும் கவனமாக இருந்தார்.
இந்த சிந்தனை தனக்கு உண்டானவுடன், தன் நாடு முழுவதும் அறியும் வண்ணம் ஒரு அறிவிப்பை அவர் வெளியிட்டார்.
ஒவ்வொரு செயலையும் செய்வதற்கான உரிய நேரம் எது, யார் மிகவும் முக்கியமான மனிதர்கள், தான் செய்யவேண்டிய முக்கியமான காரியம் எது.... இந்த விஷயங்களைப் பற்றி தனக்கு ஆலோசனை கூறுபவர்களுக்கு தான் உயர்ந்த பரிசு அளிக்கப் போவதாக அவர் கூறினார்.
அறிவாளிகள் மன்னரிடம் வந்தார்கள். ஆனால், அவர்கள் ஒவ்வொருவரும் அவரின் கேள்விகளுக்கு வேறு... வேறு பதில்களைக் கூறினார்கள்.
முதல் கேள்வியின் பதிலுக்கு, சிலர் கூறினார்கள்...
ஒவ்வொரு செயலையும் செய்வதற்கு முன்னால் முன்கூட்டியே முறைப்படி திட்டமிட வேண்டும்... நாட்கள், மாதங்கள், வருடங்கள் ஆகியவற்றைக் குறிப்பிட்டு வைத்துக்கொண்டு அதற்கேற்றபடி உறுதியாக நடக்கவேண்டும் என்று. அவ்வாறு செய்தால்தான் ஒவ்வொரு செயலையும் சரியான நேரத்தில் முடிக்கமுடியும் என்று அவர்கள் கூறினார்கள்.
ஒவ்வொரு செயலையும் செய்வதற்கான நேரத்தை முன்கூட்டியே திட்டமிடுவது என்பது இயலாத ஒன்று சிலர் கூறினார்கள்.
எதுவுமே செய்யாமல் நேரத்தை ஒருவர் ஓட விட்டுவிடக் கூடாது என்றும், நடக்கும் அனைத்து செயல்களையும் ஒருவர் கவனிக்க வேண்டும் என்றும், அதற்குப் பிறகு எதை முதலில் செய்ய வேண்டுமோ... அதைச் செய்ய வேண்டும் என்றும் அவர்கள் கூறினார்கள்.
நடந்து கொண்டிருக்கும் அனைத்து விஷயங்களிலும் அரசர் என்னதான் முழுமை யான கவனத்துடன் இருந்தாலும், ஒவ்வொரு செயலையும் எப்போது செய்வது என்பதை ஒருவரால் சரியாக தீர்மானிப்பது என்பது இயலாத ஒரு விஷயம் என்று சிலர் மீண்டும் கூறினார்கள்.
அதற்காக அவர் அறிவாளிகள் கொண்ட ஒரு குழுவை வைத்திருக்க வேண்டும் என்றும், அவர்கள் அவருக்கு ஒவ்வொரு செயலையும் செய்வதற்கான உரிய நேரத்தைக் கண்டுபிடித்து கூறுவதில் உதவுவார்கள் என்றும் அவர்கள் கூறினார்கள்.
அப்படிப்பட்ட குழுக்களிடம் வெளியிட முடியாத பல விஷயங்கள் இருக்கின்றன என்று சிலர் கூறினார்கள். வேறு சிலரோ அப்படிப்பட்ட குழுக்களை உண்டாக்கலாமா வேண்டாமா என்றும் கேள்வி எழுப்பினார் கள்.
ஆனால், அதைப் பற்றி தீர்மானிப்பதற்கு முன்னால், என்ன நடக்கப் போகிறது என்பது தெரிந்திருக்கவேண்டும்.
மந்திரவாதிகளுக்கு மட்டுமே அது தெரியும். அதனால், ஒரு செயலைச் செய்வதற்கான உரிய நேரத்தை அறியவேண்டுமெனில், ஒருவர் மந்திரவாதிகளைச் சந்திக்கவேண்டும்.
அதேபோல இரண்டாவது கேள்விக்கும் பல பதில்கள் இருந்தன.
அவருடைய

அவருடைய ஆலோசகர்கள்தான் அவருக்கு மிகவும் முக்கிமானவர்கள் என்று சிலர் கூறினார் கள். வேறு சிலரோ முக்கிய மனிதர்கள் ஆன்மிகத்தில் திளைத்திருப்பவர்கள்தான் என்றார்கள். சிலர் மருத்துவர்கள்தான் முக்கிய மானவர்கள் என்றார்கள். வேறு சிலரோ மிகவும் தேவையானவர்கள் போர்வீரர்கள்தான் என்று கூறினார்கள்.
மூன்றாவது கேள்வி... எது முதலில் செய்யப்படவேண்டிய காரியம் என்பதைப் பற்றியது.
உலகிலேயே மிகவும் முக்கியமானது அறிவியல்தான் என்று சிலர் கூறினார்கள். சிலர் போர்க்களத்தில் வெளிப்படுத்தும் வீரம் என்றார்கள். வேறு சிலரோ கடவுள்களை வழிபடுவதுதான் என்றார்கள்.
அனைத்து பதில்களும் வெவ்வேறாக இருந்தன. அவற்றில் எதையுமே அரசர் ஏற்றுக்கொள்ளவில்லை.
யாருக்கும் விருதை அளிக்கவில்லை.
எனினும், தன் கேள்விகளுக்கான சரியான பதில்களைப் பெறுவதற்கு இப்போதும் அவர் விரும்பினார்.
அதைத் தொடர்ந்து தன் தெளிவுக்காக பெரிய அளவில் புகழ் பெற்றிருந்த ஒரு ஆன்மிக மனிதரைச் சந்தித்து ஆலோசனை பெற அவர் தீர்மானித்தார்.
ஆன்மிக மனிதர் தான் வெளியே எப்போதுமே வராத ஒரு காட்டில் வாழ்ந்தார். அவர் சாதாரண மக்களைத் தவிர, வேறு யாரையுமே சந்திப்பதில்லை.
அதனால், அரசர் எளிய ஆடைகளை அணிந்தார்.
சாமியாரின் இருப்பிடத்தை அடைவதற்கு முன்பே, தன் குதிரையிலிருந்து கீழே இறங்கினார். தன் மெய்க்காப்பாளனை அங்கேயே இருக்குமாறு கூறிவிட்டு, தான் மட்டும் தனியாக நடந்து சென்றார்.
அரசர் அருகில் வந்தபோது, தன் குடிசைக்கு முன்னாலிருந்த நிலத்தை சாமியார் தோண்டிக் கொண்டிருந்தார்.
அரசரைப் பார்த்ததும், சாமியார் அவரை வரவேற்று விட்டு, தான் தோண்டுவதைத் தொடர்ந்து கொண்டிருந்தார்.
சாமியார் மிகவும் மெலிந்தும் பலவீனமாகவும் இருந்தார்.ஒவ்வொருமுறை தன் மண்வெட்டியைக்கொண்டு நிலத்தின் சிறு பகுதியைத் தோண்டும்போதும், அவர் பலமாக பெருமூச்சு விட்டார்.
அவருக்கு அருகில் சென்ற அரசர் கூறினார்: "அறிவாளியான ஆன்மிக பெரியவரே... மூன்று கேள்விகளுக்கான பதில்களைக் கேட்பதற்காக நான் உங்களைத் தேடி வந்திருக்கிறேன்.
சரியான நேரத்தில் சரியான வேலையைச் செய்வதற்கு நான் எப்படி தெரிந்து கொள்வது? எனக்கு எப்படிப்பட்ட முக்கிய மான ஆட்கள் தேவை? அதாவது... மற்றவர்களைவிட, நான் யாரிடம் அதிகமாக கவனம் செலுத்தவேண்டும்? எனக்கு எப்படிப் பட்ட காரியங்கள் மிகவும் முக்கியமானவை? அதாவது... நான் முதல் கவனத்தைச் செலுத்த வேண்டியது...?''
அரசர் கூறியதை சாமியார் கேட்டார். ஆனால், எந்த பதிலையும் கூறவில்லை.
அரசரின் கையைத் தொட்டுவிட்டு, அவர் தோண்டுவதைத் தொடர்ந்தார்.
"நீங்கள் மிகவும் களைத்து விட்டீர்கள்''- அரசர் கூறினார்:
"நான் மண்வெட்டியை எடுத்து உங்களுக்காகச் சிறிது நேரம் பணி செய்கிறேன்.''
"நன்றி!''- சாமியார் கூறினார்.
மண்வெட்டியை அரசரிடம் தந்துவிட்டு, அவர் தரையில் அமர்ந்தார்.
இரண்டு பாத்திகளை வெட்டிவிட்டு, பணியை நிறுத்திய அரசர் தன் கேள்விகளைத் திரும்பவும் கேட்டார். சாமியார் மீண்டும் பதில் எதுவும் கூறவில்லை.
ஆனால், எழுந்து மண்வெட்டிக்காக தன் கையை நீட்டிக் கொண்டே கூறினார்:
"இப்போது சற்று ஓய்வெடுங்கள். நான் சிறிது நேரம் பணி செய்கிறேன்.''
ஆனால், அரசர் அவரிடம் மண்வெட்டியைத் தராமல், தொடர்ந்து தோண்டிக் கொண்டிருந் தார். ஒரு மணி நேரம் ஓடியது. இன்னொரு மணி நேரமும்...
மரங்களுக்குப் பின்னால் சூரியன் மறைய ஆரம்பித்தது.
இறுதியாக நிலத்தைத் தோண்டிய அரசர் கூறினார் :
"அறிவாளியான மனிதரே... என் கேள்வி களுக்கான பதில்களுக்காக உங்களைத்தேடி நான் வந்தேன். நீங்கள் எனக்கு எந்த பதிலையும் கூறுவதாக இல்லை என்றால், அதை என்னிடம் சொல்லி விடுங்கள்.நான் வீட்டிற்கு திரும்பிச் செல்கிறேன்.''
"யாரோ இங்கு ஓடி வந்துகொண்டிருக்கிறார் கள்.''- சாமியார் கூறினார்: "அது யார் என்று நாம் பார்ப்போம்.''
அரசர் சுற்றிலும் பார்த்தார். தாடிவைத்த ஒரு மனிதன் காட்டிற்குள் ஓடி வந்து கொண்டிருந்தான்.
அவன் தன் கைகளை வயிற்றின் மீது இறுக பற்றியிருந்தான்.
அதற்கு அடியில் ரத்தம் வழிந்து கொண்டிருந்தது.
அவன் அரசருக்கு அருகில் வந்ததும், பலவீனமாக முனகியவாறு தரையில் மயங்கி விழுந்தான். அரசரும் சாமியாரும் சேர்ந்து அந்த மனிதனின் ஆடைகளை நீக்கினார்கள்.
அவனின் உடலில் ஒரு பெரிய காயம் இருந்தது. தன்னால் இயன்ற அளவிற்கு அரசர் அதைச் சுத்தம் செய்துவிட்டு, அதை தன் கைக் குட்டையாலும் சாமியார் வைத்திருந்த துணி யாலும் கட்டுப் போட்டு விட்டார். ஆனால், ரத்தம் வழிவது நிற்கவில்லை.
சூடான ரத்தத்தில் தோய்ந்த... கட்டப் பட்டிருந்த துணியை அரசர் திரும்பத் திரும்ப கழற்றிக் கொண்டிருந்தார்.
அதைச் சுத்தம் செய்துவிட்டு, மீண்டும் காயத் தில் கட்டினார். இறுதியில் ரத்தம் வழிவது நின்றவுடன், அந்த மனிதன் கண் விழித்து, பருகுவதற்கு ஏதாவது கிடைக்குமா என்று கேட்டான். அரசர் குளிர்ந்த நீரைக்கொண்டு வந்து அவனிடம் கொடுத்தார்.
இதற்கிடையில் சூரியன் மறைந்துவிட்டது. குளிர்ந்த சூழல் உண்டானது.
சாமியாரின் உதவியுடன், காயமடைந்த அந்த மனிதனை குடிசைக்குள் தூக்கிச்சென்று, அரசர் அவனைப் படுக்கையில் படுக்க வைத்தார்.
படுக்கையில் படுத்த அந்த மனிதன் தன் கண்களை மூடிக் கொண்டு அமைதியாக இருந்தான். நடந்து வந்ததாலும், தான் செய்த கடுமையான வேலையாலும் அரசர் மிகவும் களைத்துப் போயிருந்தார்.
அதனால், அவர் தரையில் சாய்ந்து தூக்கத் தில் மூழ்கினார். அந்த இரவு வேளை முழுவதும் அவர் அமைதியாக உறங்கினார்.
காலையில் அவர் கண் விழித்தபோது, தான் எங்கிருக்கிறோம் என்பதையும், படுக்கையில் படுத்திருக்கும் அந்த தாடி வைத்திருந்த வினோதமான மனிதன் யார் என்பதையும் நினைத்து புரிந்துகொள்வதற்கே அவருக்கு நீண்டநேரம் ஆனது. ஒளிரும் கண்களால் அவனையே தொடர்ந்து பார்த்துக் கொண்டிருந்தார்.
"என்னை மன்னித்து விடுங்கள்''-அரசர் கண் விழித்திருப்பதையும், தன்னையே பார்த்துக் கொண்டிருப்பதையும் பார்த்த அந்த தாடி வைத்த மனிதன் பலவீனமான குரலில் கூறினான்.
"உன்னை எனக்குத் தெரியாது. உன்னை மன்னிப்பதற்கு எந்தவித காரணமும் இல்லை''- அரசர் கூறினார்.
"என்னை உங்களுக்குத் தெரியாது. ஆனால், உங்களை எனக்குத் தெரியும். நான் உங்களின் எதிரி... உங்களைப் பழிக்குப் பழி வாங்குவதற்காக உறுதிமொழி எடுத்திருப்பவன்... ஏனென்றால், நீங்கள் என் சகோதரனைக் கொன்றுவிட்டு, அவனுடைய சொத்துக்களை எடுத்துக் கொண்டீர்கள்.
நீங்கள் தனியாக சாமியாரைப் பார்ப்பதற்காக கிளம்பியிருக்கும் தகவல் எனக்குக் கிடைத்தது. நீங்கள் திரும்பி வரும்போது, உங்களைத் தீர்த்துக் கட்டிவிடவேண்டும் என்று நான் திட்டம் வகுத்திருந்தேன்.
ஆனால், நாள் கடந்து சென்ற பிறகும், நீங்கள் திரும்பி வரவில்லை.
அதனால், பதுங்கியிருந்த இடத்திலிருந்து உங்களைப் பார்ப்பதற்காக நான் வெளியேறி வந்தேன். உங்களின் மெய்க்காப்பாளர்களை நான் பார்த்தேன். அவர்கள் என்னை அடையாளம் தெரிந்துகொண்டு, காயத்தை உண்டாக்கினார் கள். அவர்களிடமிருந்து தப்பித்தேன். நீங்கள் என் காயங்களைச் சுத்தம் செய்து கட்டுப்போடா திருந்தால், நான் ரத்தம் சிந்தி இறந்திருப்பேன்.
நான் உங்களைக்கொல்ல நினைத்தேன். என் உயிரை நீங்கள் காப்பாற்றி விட்டீர்கள்.
இப்போது... நான் உயிருடன் இருந்தால்... நீங்கள் விரும்பினால்...நான் உங்களுக்கு மிகவும் கீழ்ப்படிந்த அடிமையாக இருந்து, சேவை செய்வேன். என் மகன்களையும் அதேபோல செய்யச் சொல்லுவேன்.என்னை மன்னித்து விடுங்கள்.''
தன் எதிரியுடன் இந்த அளவிற்கு எளிதில் சமாதானம் உண்டானதற்காக அரசர் சந்தோஷப்பட்டார்.
அவன் ஒரு நண்பனாக இருக்கவேண்டும் என்பதற்காக, அவர் அவனை மன்னிப்பதுடன் நிற்காமல், தன்னுடைய பணியாட்களையும் தன் சொந்த மருத்துவரையும் அவனை கவனித்துக் கொள்வதற்காக அனுப்பி வைப்பதாகவும் கூறினார்.
அவனுடைய சொத்தை திருப்பித் தருவதாக வும் வாக்களித்தார்.
காயமடைந்த மனிதனிடமிருந்து கிளம்பி, சாமியாரைப் பார்ப்பதற்காக வாசல் பகுதிக்கு அரசர் வந்தார்.
புறப்படுவதற்கு முன்னால், தான் கேட்ட தன் கேள்விகளுக்கான பதிலுக்காக தாழ்மையுடன் வேண்டிக் கொள்ள அவர் விரும்பினார்.
வெளியே... முழங்காலிட்ட நிலையில்... நேற்று வெட்டிய பாத்தியில் சாமியார் விதைகளை விதைத்துக் கொண்டிருந்தார்.
அவரிடம் வந்த அரசர் கூறினார்:
"இறுதி முறையாக...என் கேள்விகளுக்கு பதில் கூறும்படி உங்களிடம் வேண்டுகிறேன்... அறிவாளி மனிதரே...!''
"உங்களுக்கு ஏற்கெனவே பதில்கள் கூறப் பட்டு விட்டன!''- தன் மெலிந்த கால்களில் அமர்ந்த வாறு, தனக்கு முன்னால் நின்று கொண்டிருந்த அரசரைப் பார்த்து சாமியார் கூறினார்.
"பதில் கூறிவிட்டீர்களா? நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?''- அரசர் கேட்டார்.
"நீங்கள் பார்க்கவில்லையா?''-சாமியார் கேட்டார்:
"நேற்று என் சோர்வு நிலையைப் பார்த்து நீங்கள் பரிதாபப்படாமல் இருந்திருந்தால்.. எனக்காக இந்த பாத்திகளை வெட்டாமல் இருந்திருந்தால்...
உங்களின் வழியில் நீங்கள் போயிருந்தால்...
அந்த மனிதன் வந்து உங்களைத் தாக்கி யிருப்பான்.
என்னுடன் தங்காமல் போனதற்காக நீங்கள் வருத்தம் அடைந்திருப்பீர்கள். அதனால்... மிகவும் முக்கியமான தருணம் எது என்றால், நீங்கள் பாத்திகளை வெட்டிய நேரம்தான்.
நான்தான் மிகவும் முக்கியமான மனிதன். எனக்கு நல்லது செய்ததுதான் நீங்கள் செய்த முக்கியமான காரியம். பிறகு... அந்த மனிதன் நம்மை நோக்கி ஓடி வந்தபோது, முக்கியமான தருணம் எது என்றால், நீங்கள் அவனைக் கவனித்த வேளைதான். நீங்கள் அவனின் காயங்களுக்கு கட்டுப்போடாமல் இருந்திருந் தால், உங்களுடன் சமாதானம் ஏற்படுத்திக் கொள்ளாமலே அவன் இறந்திருப்பான்.
அதனால், அவன்தான் மிகவும் முக்கியமான மனிதன்.
அவனுக்காக நீங்கள் செய்ததுதான் உங்களின் மிகவும் முக்கியமான பணி. அதனால், ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள். ஒரே ஒரு நேரம்தான் முக்கியமானது- இப்போது!
அதுதான் மிகவும் முக்கியமான நேரம். ஏனென் றால், அந்த நேரத்தில்தான் நம்மிடம் ஏதாவது பலம் இருக்கும். யாருடன் இருக்கும்போது, நம்மிடம் ஏதோ சக்தி இருக்கிறது என்பதைப் போல உணர்கிறீர்களோ...
அவன்தான் மிகவும் தேவைப்படும் மனிதன். நீங்கள் யாருடன் இருக்கிறீர்களோ... அவன்தான் மிகவும் முக்கியமான மனிதன். யாருடனும் ஏதாவது வகையில் தனக்கு தொடர்பு இருக் கிறதா என்று எந்த மனிதனுக்கும் தெரியாது. எது முக்கியமான காரியம் என்றால்...
அவனுக்கு நல்லது செய்வதுதான்! ஏனென் றால்... இந்த வாழ்விற்குள் மனிதன் அனுப்பப் பட்டிருப்பதே அந்த ஒரு வேலைக்குத் தான்!''
_______________________
வணக்கம்.
இந்த மாத "இனிய உதய'த்திற்காக மூன்று சிறந்த சிறுகதைகளை நான் மொழிபெயர்த்திருக்கிறேன்.
"ஆனந்த நர்த்தகன்' என்ற கதையை எழுதியிருப்பவர்... கேரள சாகித்ய அகாடெமி விருது பெற்றவரும், மூத்த மலையாள எழுத்தாளருமான உண்ணிகிருஷ்ணன் புதூர்.
ஒரு ஆண் மயிலை மையமாக வைத்து எழுதப்பட்ட கதை.
இது ஒரு உண்மைக் கதை.
உண்ணிகிருஷ்ணன் புதூர், குருவாயூர் கோவிலில் பணியாற்றியவர். இதில் வரும் ஆனந்த நர்த்தகன் என்ற அழகு மயிலை நேரடியாகப் பார்த்தவர். அந்த மயிலை வளர்த்த மனிதர் இவரின் நண்பர். தான் பார்த்த சம்பவங்களை உண்ணிகிருஷ்ணன் புதூர் கதையாக எழுதியிருக்கிறார்.
மயிலுக்கு உண்டான முடிவு நம் நெஞ்சை நெகிழச் செய்யும்.
"பத்து சென்ட்' என்ற கதையை எழுதியவர்... தேசிய சாகித்ய அகாடெமி விருது பெற்ற நட்சத்திர மலையாள எழுத்தாளரான மலயாற்றூர் ராமகிருஷ்ணன்.
அனந்தகிருஷ்ணன் என்ற வயதான மனிதரை மையக் கதாபாத்திரமாக வைத்த எழுதப்பட்ட கதை.
கதையின் இறுதிப் பகுதி, நம் மனதில் அந்த முதியவரின் மீது ஈரம் படர வைக்கும்.
"மூன்று கேள்விகள்' என்ற கதையை எழுதியவர்... உலகப் புகழ் பெற்ற இலக்கிய மேதையான லியோ டால்ஸ்டாய்.
ஆழமாக சிந்திக்க வைக்கும் கதை.
கதையை வாசிக்கும் ஒவ்வொருவரும் தீவிரமான சிந்தனையில் மூழ்கி விடுவார்கள் என்பது நிச்சயம். இத்தகைய படைப்புகளை எழுதியதால்தான் டால்ஸ்டாய் காலத்தைக் கடந்து வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
இந்த மூன்று கதைகளும் உங்களுக்கு மாறுபட்ட இலக்கிய அனுபவங்களை அளிக்கும் என்பது உறுதி.
"இனிய உதயம்' மூலம் நான் மொழிபெயர்க்கும் அருமையான இலக்கிய படைப்புகளைத் தொடர்ந்து வாசிக்கும் உயர்ந்த உள்ளங்களுக்கு என் இதயத்தின் அடித்தளத்திலிருந்து நன்றி.
அன்புடன்,
சுரா