திருக்குறள் 100 சாமனியன் முதல் சாதனையாளர் வரை - சிவகுமார் என்னும் மகா கலைஞனின் உரையோவியம்

/idhalgal/eniya-utayam/thirukkural-100-commoner-achiever-biography-great-artist-sivakumar

திரைப்பட நடிகர், ஓவியர், பேச்சாளர், எழுத்தாளர் என்று பன்முக ஆளுமை கொண்ட சிவகுமார், ஏற்கெனவே ராமாயணம் மகாபாரதம் சார்ந்த முழு நீள உரையாற் றிப் பலரையும் வியப்பில் ஆழ்த்தியவர். அந்த உரைகள் நூல் வடிவிலும் வந்துள் ளன. இப்போது ஒரு புது முயற்சியாக, அச்சிடப் பட்டு வந்துள்ள 'திருக்குறள் 100 ' என்கிற நூலை ஈரோடு புத்தகத் திருவிழாவில் மக்கள் முன் உரையாக அவர் நிகழ்த் திக் காட்டினார். அவரது உரையோவியம் அத்தனை பேரையும் நெகிழ்ச்சியில் கட்டிப்போட்டது.

இதுவரை திருக்குறளுக்கு வார்த்தைகள் வடிவில் ஏராள மான பேர் உரை எழுதியிருக்கி றார்கள். ஆனால் சிவகுமார் வள்ளுவர் வழி நின்று வாழ்ந்த, தங்களை அறியாம லேயே குறளின் வழியே சென்ற மனிதர்களின் வாழ்க்கையின் வழியே இந்த உரையை எழுதியிருக்கிறார். அந்த வகையில் இது ஒரு புதிய முயற்சி எனலாம்.

இந்தத் 'திருக்குறள் 100 ' நூல் அரங்கேற்று விழா, அதாவது இந்த நூலில் உள்ள வாழ்க்கைக் கதைகள் அனைத்தையும் மேடையில் இடைவிடாது மூன்றரை மணி நேரம் உரையாற்றி அரங்கேற்றும் விழா' 18 வது ஈரோடு புத்தகத் காட்சி'யின் பத்தாவது நாளான ஆகஸ்ட் 14-ல் நடைபெற்றது.

ஆயிரக்கணக்கான மக்கள் முன்னிலையில் நடந்த இந்த அரங்கேற்று விழாவின்போது கூடியிருந்த கூட்டத்தினர் சிறிதும் கவனம் சிதறாமல் சலனமற்று, இரவு நெடுநேரம் சென்றும் இடையில் எழாமல் முழுக் கவனத்துடன் அவரது பேச்சைக் கேட்ட விதம் வியூப்பூட்டியது.

இந்த விழாவின் தொடக்கமாக இப்புத்தகத் திருவிழாவை முன்னின்று நடத்தும் ஈரோடு மக்கள் சிந்தனைப் பேரவையின் தலைவர் த.ஸ்டாலின் குணசேகரன் அனைவரையும் வரவேற்று அறிமுக உரை

திரைப்பட நடிகர், ஓவியர், பேச்சாளர், எழுத்தாளர் என்று பன்முக ஆளுமை கொண்ட சிவகுமார், ஏற்கெனவே ராமாயணம் மகாபாரதம் சார்ந்த முழு நீள உரையாற் றிப் பலரையும் வியப்பில் ஆழ்த்தியவர். அந்த உரைகள் நூல் வடிவிலும் வந்துள் ளன. இப்போது ஒரு புது முயற்சியாக, அச்சிடப் பட்டு வந்துள்ள 'திருக்குறள் 100 ' என்கிற நூலை ஈரோடு புத்தகத் திருவிழாவில் மக்கள் முன் உரையாக அவர் நிகழ்த் திக் காட்டினார். அவரது உரையோவியம் அத்தனை பேரையும் நெகிழ்ச்சியில் கட்டிப்போட்டது.

இதுவரை திருக்குறளுக்கு வார்த்தைகள் வடிவில் ஏராள மான பேர் உரை எழுதியிருக்கி றார்கள். ஆனால் சிவகுமார் வள்ளுவர் வழி நின்று வாழ்ந்த, தங்களை அறியாம லேயே குறளின் வழியே சென்ற மனிதர்களின் வாழ்க்கையின் வழியே இந்த உரையை எழுதியிருக்கிறார். அந்த வகையில் இது ஒரு புதிய முயற்சி எனலாம்.

இந்தத் 'திருக்குறள் 100 ' நூல் அரங்கேற்று விழா, அதாவது இந்த நூலில் உள்ள வாழ்க்கைக் கதைகள் அனைத்தையும் மேடையில் இடைவிடாது மூன்றரை மணி நேரம் உரையாற்றி அரங்கேற்றும் விழா' 18 வது ஈரோடு புத்தகத் காட்சி'யின் பத்தாவது நாளான ஆகஸ்ட் 14-ல் நடைபெற்றது.

ஆயிரக்கணக்கான மக்கள் முன்னிலையில் நடந்த இந்த அரங்கேற்று விழாவின்போது கூடியிருந்த கூட்டத்தினர் சிறிதும் கவனம் சிதறாமல் சலனமற்று, இரவு நெடுநேரம் சென்றும் இடையில் எழாமல் முழுக் கவனத்துடன் அவரது பேச்சைக் கேட்ட விதம் வியூப்பூட்டியது.

இந்த விழாவின் தொடக்கமாக இப்புத்தகத் திருவிழாவை முன்னின்று நடத்தும் ஈரோடு மக்கள் சிந்தனைப் பேரவையின் தலைவர் த.ஸ்டாலின் குணசேகரன் அனைவரையும் வரவேற்று அறிமுக உரையாற்றினார். அப்போது சிவகுமாரின் பன்முக ஆற்றலை வியந்து பாராட்டிய அவர், ஈரோடு புத்தகத் திருவிழாவிற்கு சிவகுமார் தந்து வரும் ஆதரவையும் பங்களிப்பையும் பற்றிக் குறிப்பிட்டு நன்றி கூறினார்.

ss

வாழ்த்துரை வழங்க வந்த சக்தி மசாலா குழுமத்தின் உரிமையாளர் பி.சி. துரைசாமி,தனது வாழ்வின் வழிகாட்டு நூலான திருக்குறள் சார்ந்த விழாவில் கலந்துகொள்வதில் மகிழ்ச்சியும் பெருமையும் அடைவதாக அவர் கூறினார்.

சக்தி மசாலா குழுமத்தின் நிர்வாக இயக்குநர் திருமதி சாந்தியும் அதையே வழிமொழிந்தார்.

திருக்குறள் 100 அரங்கேற்று விழாவில் நடிகர் சிவகுமார் ஆற்றிய உரை சுமார் 7 மணிக்குத் தொடங்கியது.

முதலில் எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகரின் மாமனார் வழக்கறிஞர் முத்து நாராயணன் நாத்திகராக இருந்தவர், ஆத்திகராக மாறிய அந்தத் தருணத்தை விளக்கி அது சார்ந்த குறளான 'வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு' என்ற குறளில் தொடங்கி , நூறாவது கதையாக மலக்குழி இறங்கும் துப்புரவுத் தொழிலாளியின் கதையைக் கூறி 'பிறப் பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்று அதற்குரிய குறளைக் கூறி சிறப்பாக நிறைவு செய்தபோது இரவு 10.30 மணியைத் தாண்டிவிட்டது.

உரையில் கூறப்பட்டவர்களின் கதைகளில் சாமானியர்கள் முதல் சரித்திர புருஷர்கள் வரை உழைப்பாளி முதல் போராளிகள் வரை இடம் பெற்றார்கள். வெறும் வரலாற்றை சொல்லிக் கொண்டிருக்காமல் வரலாற்று நாயகர்களை மட்டும் குறிப்பிட்டுக் கொண்டிருக்காமல் சராசரி மனிதர்களின் வாழ்க்கைச் சம்பவங்களையும் எடுத்துக்காட்டி ஒரு கலவையான உணர்வுகளைத் தூண்டும் அனுபவமாக இந்த நிகழ்ச்சியை மாற்றினார்.

ss

செங்காட்டுத் தோட்டம் ஆத்தா. அம்மா, சின்னத் தம்பி மாமா, பொங்கியாத்தாள், சின்னம்மா எனத் தனது உறவினர்கள் மண்ணின் மைந்தர்கள் சிலரையும், பூலித்தேவன், வேலு நாச்சியார், தீரன் சின்னமலை போன்ற வரலாற்று நாயகர்களையும் ஓமந்தூரார், பெரியார், ராஜாஜி, காமராஜர், ஜீவா, அண்ணா, கலைஞர், எம்.ஜி.ஆர் . எனத் தமிழக அரசியல் தலைவர்களையும் காந்தி, லால் பகதூர் சாஸ்திரி,மொரார்ஜி தேசாய் போன்ற தேசியத் தலைவர்களையும் காரல் மார்க்ஸ் , நெல்சன் மண்டேலா போன்ற உலகத் தலைவர்களையும் திரைப்பட அதிபர்கள் மாடர்ன் தியேட்டர்ஸ் பி. ஆர். சுந்தரம், நாகிரெட்டி,எஸ். எஸ். வாசன், ஏவி.எம் மெய்யப்பன்,சாண்டோ சின்னப்பா தேவர், கவிஞர்கள் கண்ணதாசன், வாலி, திரை நட்சத்திரங்கள் எம் .கே. தியாகராஜ பாகவதர், கே. பி. சுந்தராம்பாள், பத்மினி, எம்ஜிஆர், சிவாஜி, எஸ்.வி. சுப்பையா,சத்யராஜ், இயக்குநர்கள் கே. எஸ். கோபாலகிருஷ்ணன், ஸ்ரீதர், கே. பாலச்சந்தர் என திரை உலகப் பிரபலங்களையும் அவர்களது வாழ்க்கை நிகழ்ச்சிகள் வழியாக வலம் வரச் செய்தார்.

எழுத்தாளர் கி.ராஜநாராயணன், சமூக சேவகர் பாலம் கல்யாணசுந்தரம், நீதிபதி சந்துரு, மார்க்சிய எழுத்தாளர் கோவை ஞானி, ஓவியர் மனோகர் தேவதாஸ், தன்னம்பிக்கைப் பேச்சாளர் இன்ஸ்பயரிங் இளங்கோ என வெவ்வேறு வகையில் தன் மனம் கவர்ந்த மாந்தர்களையும் கதைகளில் நடமாட வைத்தார். இப்படிச் சராசரி மனிதர்கள் வரை சாதனையாளர்கள் வரை இந்த உரையில் ஊர்வலம் வந்தார்கள். ஏன், தான் செல்பி எடுத்தவரின் அலைபேசியைத் தட்டிவிட்ட சம்பவத்தைக் கூட 'செல்'லிடத்துக் காப்பான் சினம் காப்பான்' குறளைக் கொண்டு கூறியிருந்தார். இப்படி அவர் கூறிய பல்வேறுபட்ட முகங்களிலிருந்தும் அனுபவங்களில் இருந்தும் அவரால் ஒரு சித்திரத்தை வரைய முடிந்தது.

சிவகுமார் தேர்வு செய்து பயன்படுத்திய திருக்குறள் களில் எளிமைக்காகப் பிரபலமாகிப் புகழ்பெற்ற குறள் களை மட்டுமல்ல, அதிகப் புழக்கம் இல்லாமல் அறியப்படாத பல ஆழமுள்ள பொருள் கொண்ட குறள்களையும் இடம்பெறச் செய்தது இந்த நூல் முயற்சி சார்ந்து அவர் எவ்வளவு தூரம் ஆராய்ச்சியில் இறங்கி ஆய்ந்து தோய்ந்துள்ளார் என்பதை எடுத்துக்காட்டியது.அந்த வியப்பூட்டும் குறள்கள் என்னென்ன என்பதை நூலைப் படித்துத் தெரிந்து கொள்ளலாம்.

இந்த உரையை அவர் பலரது வழக்கமான மேடை உரையைப் போல் பேசிப் பார்வையாளர்களை சோர்வடையச் செய்யவில்லை. பார்வையாளர்களை ஈர்க்கும் வகையில் சுவாரஸ்யமாக மூன்றரை மணி நேரத்திற்கு மேல் அவர் உரையாற்றி நிறைவு செய்தார் .உரை நிகழ்ந்தபோது வந்திருந்த ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் கவனத்தைத் தன் கட்டுக்குள் வைத்திருந்தார்.

ss

சிலவற்றைக் கதை போலவும், சில கவிதை போலவும், பாடல் போலவும் ,உணர்ச்சிமிக்க வசனங் களைப் பேசுவது போலவும், சிலவற்றுக்கு ஏற்ற முகபாவனைகளைக் காட்டி நடித்தும் காட்டி இயல் ,இசை, நாடகம் என மூன்று தமிழையும் வெளிப்படுத்தினார்.

ஆங்காங்கே வீரம், ஆவேசம், எழுச்சி, பாசம், மகிழ்ச்சி, நெகிழ்ச்சி, துயரம், இழிவு, நம்பிக்கை, நகைச்சுவை என பலவண்ண ரசங்கள் காட்டும் அனுபவங்களை மாறி மாறிக் கூறி இந்த உரையில் பல வண்ணங்களின் தரிசன அனுபவத்தைப் பார்வையாளர்களுக்கு வழங்கினார். பேசும்போது பதற்றமோ மனநெருக்கடியோ அவரிடம் தென்பட வில்லை. உரை தயாரிக்கப்பட்டதுபோல் தோன்றாமல் வெகு இயல்பாகப் பேசினார்.

அவர் ஒவ்வொரு குறளுக்கான கதை சொல்லும் போதும் திரையில் அந்தக் குறள் காட்சி வழியாக வரி வடிவத்தில் நேர்த்தியாகக் காட்டப்பட்டது . அந்த வகையில் நவீன தொழில்நுட்பத்திற்கு ஒத்திசைவாக 80 வயது தாண்டியும் தன்னால் இயங்கமுடியும் என்பதை நிரூபித்தார்.

இதன் மூலம் காலத்திற்கு ஏற்ப பயணம் செய்யும் ஒரு கலைஞராக அவர் தோன்றினார்.இந்நிகழ்ச்சியின் மூலம் சிவகுமார் திருக்குறளுக்குப் புது மரியாதை செய்துள்ளார்.

ஏற்கெனவே சிவகுமார் எழுதிய 'இது ராஜபாட்டை அல்ல 'என்கிற சுயசரிதை நூல் 13 பதிப்புகள் கண்டு சாதனை படைத்தது. 1946முதல் 1975 வரையிலான தன் டைரிக் குறிப்புகளிலிருந்து தொகுத்த முதல் தொகுதியான 'டைரி' நூலும் பெரும் வரவேற்பு பெற்றது.

அவர் ஆற்றிய உரைகள் பலவும் நூல் வடிவம் பெற்றுள்ளன. அப்படி 'கம்பன் என் காதலன்' என்கிற முழு ராமாயண உரையும் மகாபாரதம் பற்றிய 'மகாபாரதம்' உரையும் காவியச் சுவை கொண்டவை எனப் பாராட்டப்பட்டன. இவ்வகையில் மேடையில் உரையாற்றி நூல் வடிவம் பெற்றவை, 'செங்காட்டிலிருந்து சென்னை வரை', 'நேருக்குநேர்' , 'தவப்புதல்வர்கள்', 'சங்கத் தமிழ் முதல் கவியரசு தமிழ் வரை ', 'பெண்', 'என் செல்லக் குழந்தைகளுக்கு', 'தமிழ் சினிமாவில் தமிழ்', 'என் கண்ணின் மணிகளுக்கு' போன்றவையாகும்.

இந்தத் திருக்குறள் 100 அரங்கேற்று விழாவில் பேச்சாளுமைகள் தமிழருவி மணியன், இளம்பிறை மணிமாறன் ஆகியோருடன் நடிகர் கார்த்தி, திருமதி லட்சுமி சிவகுமார், பிருந்தா சிவகுமார் என, சிவகுமாரின் குடும்பத்தினரும் கலந்து கொண்டார்கள்.

-அபூர்வன்

uday010922
இதையும் படியுங்கள்
Subscribe