Advertisment

நக்கீரன் சாதித்தது இப்படித்தான்... திருச்சியில் பகுத்தறிவுத் திருவிழா

/idhalgal/eniya-utayam/thats-how-nakheeran-achieved

திருச்சி ஸ்ரீரங்கம் தந்தை பெரியார் படிப்பகத்தின் 5 -ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு ஸ்ரீரங்கம் தேவி டாக்கீஸ் அருகில் உள்ள திடலிலில் ""இந்து மதம் எங்கே போகிறது'' தொடரை எழுதிய அக்னி ஹோத்ரம் தாத்தாசாரியாரின் படத் திறப்பு, நூல் ஆய்வுரை மற்றும் நக்கீரன் ஆசிரியர் கோபால் அவர்களுக்கு பாராட்டு நிகழ்ச்சியும் நடைபெற்றது.

Advertisment

இந்த பொதுகூட்டம் நடைபெறுவதற்கு திருச்சி மாநகர காவல்துறை அனுமதி மறுத்த நிலையில் மதுரை உயர்நீதிமன்றத்தில் படத்திறப்பு விழா கூட்டம் நடத்துவதற்கு அனுமதி வாங்கினார்கள்.

இந்துகளை இழிவாகப் பேசினால் முற்றுகைப் போராட்டம் நடத்துவோம் என்று இந்து மக்கள் கட்சி சார்பில் பரபரப்பான அறிக்கைகள் வாட்ஸ்ஆப்பில் பரவ ஆரம்பித்ததால் பொதுக் கூட்டம் நடைபெறும் இடம் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் மிகுந்த எச்சரிக்கையுடன் செய்திருந்தனர்.

விழாவில் "இந்து மதம் எங்கே செல்கிறது' என்கிற புத்தகத்த அறிமுகம் செய்யப்பட பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட ஏராளமானோர் பொதுக் கூட்ட மேடையிலே புத்தகத்தை விலைக்கு வாங்கி சென்றனர்.

Advertisment

trichy-nakkheeran

அதன் பிறகு தாத்தாசாரியாரின் படம் திறந்து வைக்கப்பட்டது. நக்கீரன் ஆசிரியர் நக்கீரன் கோபால் அவர்களை பாராட்டி பொன்னாடை அணிவித்து பெரியார் உருவம் பொறித்த சிலையினை நினைவுப் பொருளாக வழங்கினர்.

விழாவில் நக்கீரன் ஆசிரியர் நக்

விழாவில் நக்கீரன் ஆசிரியர் நக்கீரன் கோபால் பேசும்போது, ""நக்கீரன் பதிப்பகம் சார்பில் இது வரை வெளிவந்திருக்கிற நூல்களில் குறிப்பிடத்தக்க நூல் எது என்றால் முதலிலில் ஞாபகத்திற்கு வருவது அக்னி கோத்ர தாத்தாச்சாரியார் எழுதிய இந்து மதம் எங்கே போகிறது என்கிற நூல்தான்.

கலைஞரின் கையாலும், திராவிடர் கழகத் தலைவர் வீரமணி அவர்கள் கையாலும் இரண்டு பெரியார் விருதுகள் வாங்கியதே போதும்.

நக்கீரனில் வெளிவந்துள்ள கட்டுரைகள் அனைத்துமே பிற்காலத்தில் நிகழ்பவற்றை முன்கூட்டியே எழுதியதாக பல தருணங்களில் நக்கீரன் வாசகர்கள் பெருமைப்பட்ட பல தருணங்கள் உண்டு.

சங்கரராமன் கொலை செய்யப்பட்டபோது நக்கீரன் குழுவினர் புலனாய்வு செய்து ஆறு பக்கத்தில் வெளியிட்டனர்.

இந்த கொலையை செய்தவர் தற்போதைய காஞ்சிப் பெரியவர் ஜெயேந்திரர். சங்கரராமன் கொலைக்கான காரணத்தை கட்டுரையில் மிக விரிவாக தொகுத்து எழுதினோம். செய்தி வெளியான அன்று மாலையே, அவசர அவசரமாக 5 பேர் கொலையாளிகள் என திடீரென சரணடைந்தார்கள்.

எனக்கு சந்தேகம் ஏற்பட்டு இந்த சரண்டர் குறித்து நான், என் தம்பிகள் புலனாய்வு செய்து கொலை நடந்த போது இவர்கள் அனைவரும் சிறையில் இருந்தார்கள் என்றும் கைதானவர்களுக்கும் சங்கராமன் கொலைக்கும் சம்பந்தமில்லை என்பதையும் தெளிவாக கட்டுரையாக வெளியிட்டோம்.

அதைப் படித்துவிட்டு அன்று இரவே என்னை தொலைபேசியில் அழைத்த ஜெயேந்திரர் பார்க்க விரும்புவதாகத் தெரிவித்தார். உடனே நான் எனது சார்பில் காஞ்சிபுரத்தில் இருந்த எனது தம்பி பிரகாஷ் நிருபரை அழைத்துப் போகச் சொன்னேன்.

சங்கர மடத்துக்குச் சென்று சங்கரராமன் கொலைக்கான காரணம் உட்பட அதைச் சுற்றியே கேள்விகள் இருக்கவேண்டுமெனச் சொல்லிலி எனது இணை ஆசிரியர் மற்றும் பொறுப்பாசியர் இணைந்து தயாரித்த கேள்விகளை தொகுத்துக் கொடுத்து, பேசுவதை மைக்ரோ டேப் மூலம் பதிவு செய்யச் சொல்லிலி எனது தம்பி பிரகாஷை சங்கர மடத்திற்குள் அனுப்பினோம்.

அவரும் ஜெயேந்திரரிடம் சென்று சங்கராமன் கொலை குறித்த கேள்விகளை சுற்றிச் சுற்றி கேட்ட போது, பதிலளித்த அவர் "பெரியவரின் காலில் நகத்தில் தூசு இருந்தால் அதை பக்தர்கள் பொறுக்க மாட்டார்கள் எனவே அழுக்கை நீக்கிவிட்டதாக சொல்ல, கட்டுரை வெளியிட்டதன் விளைவாக அவர் கைது செய்யப்பட்டார்.

அது வரை இந்து மதத்தின் தலைமை இடமாக இருந்தது காஞ்சிமடம். ஜெயேந்திரரை மதித்த அகில இந்திய பிரபலங்கள் எல்லோரும் அவருக்கு கீழே அமர்ந்து இருந்தார்கள். நக்கீரன் செய்திக்குப் பிறகு கைதைத் தொடர்ந்து சங்கராச்சாரியரை மதிக்காமல் செல்லும் அளவுக்கு நிலமை தலைகீழானது'' என்றார்.

தாத்தாச்சாரியார் தனது 95 வயதில் இந்து மதம் எங்கே செல்கிறது என்று தொடர்ந்து எழுதினார்.

அவர் என்னிடம், "நான் சொல்வதை எல்லாம் எழுதுவதற்கு தைரியம் இருக்கிறதா' என்று கேட்டார். "தைரியம் இருக்கிறது வெளியிடுவேன்' என்று சொன்னேன்.

அந்த பெரியவர் தாத்தாச்சாரியார் படத்திறப்பு இங்கே ஒருங்கிணைக்கப்பட்டிருக்கிறது இது நக்கீரன் இதழுக்குக் கிடைத்த பெருமை'' எனப் பேசினார்இறுதியாக பேசிய திராவிடர் கழகத் தலைவர் வீரமணி.

""மறைக்கப்பட்ட- மறுக்கப்பட்ட உண்மைகள் இந்து மதத்தைப் பற்றி பேசும் இந்த நூலில் குறிப்பிடத்தக்கது. இந்தப் படத் திறப்பு இங்கே ஏன் செய்கிறார்கள் என்கிற கேள்வி எழாமல் இருக்கலாம். அனைத்துக்குமான விடையும் இதிலேயே இருக்கிறது.

பகுத்தறிவு மட்டுமே உலகில் சிறந்தது. முதன்முதலிலில் 1926-ல் ஈரோட்டில் "குடியரசு' பத்திரிகை பெரியாரால் துவங்கப்பட்ட போது உண்மை விளக்கம் என்று பெயரிட்டார். எனவே பகுத்தறிவுதான் உண்மை. இதில் நிறைய உண்மைகள் தொகுக்கப்பட்டுள்ளன. சடங்குகளை புண்படுத்துவதாக அர்த்தம் இல்லை. தாத்தாச்சாரியார் தனது இறுதிக் காலத்தில் உண்மைகளை ஆவணப்படுத்தி இருக்கிறார். இந்த நிகழ்ச்சி ஆண்டாள் சர்ச்சைக்கு பிறகு ஒருங்கிணைக்கப்பட்ட நிகழ்வு அல்ல. ஆனால் காவல் துறை ஏனோ ஸ்ரீரங்கத்தை ஒதுக்கப் பட்ட இடம்போல் அனுமதி மறுத்து உத்தரவிட்டது.

ஜனவரி 8-ஆம் தேதியே எங்களது தோழர்கள் அனுமதி கேட்டு கடிதம் கொடுத்தார்கள். ஆனாலும் மறுத்திருக்கிறார்கள். திராவிடர் கழகம் தனிப்பட்ட நபர்களை ஒருபோதும் வெறுத்ததாக வரலாறு இல்லை. பிறப்பின் அடிப்படையில் பேதம் காண விரும்பும் தத்துவவாதிகளைத்தான் திராவிடர் கழகம் தத்வார்த்த ரீதியாக எதிர்க்கிறது'' எனத் தெரிவித்தார். ""நாங்களாக வம்பு இழுப்பது இல்லை. வந்த வம்பை எளிதில் விட்டு விடுவதுமில்லை. பகுத்தறிவு வளர்ந்துவிட்ட காலத்தில் நாக்கை வெட்டுவோம், தலையை வெட்டுவோம் என இன்னும் கூறினால் அவர்களுக்கு பெயர் காட்டு மிராண்டிகள் சில வரிகள்.

மதப்பாகுபாடு இல்லை.. எல்லா மதமும் ஒன்றுதான் கடவுள் இல்லை என்பதே திராவிடர் கொள்கை. தேவதாசி முறையை ஒழித்தது திராவிடர் கழகம்தான். எங்களைத் தொட்டால் தீட்டு, படித்தால் தீட்டு என்றீர்களே அதை ஒழிப்பதுதான் திராவிடர் கொள்கை.

திராவிடர் கழகக் கொள்கைகளில் தவறு ஏதும் இருப்பின் பண்போடு பேசத் தெரிந்த நபர்கள் இருப்பின், கடவுள் உண்டு கொள்கையை ஆதரிப்பவர்கள் இதே இடத்தில் மேடை போட்டு தவறைச் சுட்டிக்காட்டுங்கள் வீரமணி அழைப்பு விடுத்தார். அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆக முடியவில்லை. தாழ்த்தப்பட்டவர் மற்ற தொழிலிலில் இருக்கிறார்கள் ஆனால் அர்ச்சகராகத் தடை இருப்பதாகவும் தெரிவித்தார்.

அக்னி கோத்ர தாத்தாச்சாரியார் எழுதியவற்றிற்கு மறுப்புத் தெரிவிக்க ஜீயர்கள், அவர்களை பின்பற்றுவர்கள் கட்டுரை எழுதவோ அல்லது நீதிமன்றத்தை நாட விரும்பினால் அதற்கும் திராவிடர் கழகம் ஆதாரத்தோடு நீதிமன்றத்தில் பதில் தர தயார்' என சவால்விட்டார் வீரமணி.

-ஜெ.டி.ஆர்.

இதையும் படியுங்கள்
Subscribe