தாக்கூரின் கிணறு (இந்தி மொழிக் கதை) பிரேம்சந்த் தமிழில் : சுரா

/idhalgal/eniya-utayam/thakurs-well-hindi-language-story-premchand-tamil-sura

ஜோஹு லோட்டாவை தன் உதடுகளுக்கு பருகுவதற்காகக் கொண்டு சென்றபோது, நீர் மிகவும் மோசமான நாற்றத்தை அளித்தது. அவன் கங்கியிடம் கூறினான்:

"தண்ணி என்ன இப்படி இருக்கு? நாற்றத்தைத் தாங்க முடியல. இதை குடிக்கவே முடியாது. என் தொண்டை வறண்டு போயிருக்குது. இந்த பாழாய்ப் போன தண்ணியை நீ என்னைக் குடிக்க வைக்கிறே....!''

சாயங்கால வேளையில் கங்கி நீரைச் சேமித்து வைப்பாள். கிணறு மிகவும் தூரத்தில் இருந்தது. திரும்பத் திரும்ப அவ்வளவு தூரம் நடந்து செல்வது என்பது மிகவும் கஷ்டமான விஷயம். நேற்று அவள் எடுத்துக்கொண்டு வந்த நீர் நன்றாகவே இருந்தது. இன்று எப்படி தவறு உண்டானது? அவள் லோட்டாவை தன் நாசிக்கு அருகில் கொண்டுவந்து பார்த்தாள். ஆமாம்... அது நாற்றமெடுத்தது.

ss

கிணற்றிற்குள் ஒரு மிருகம் விழுந்து மூழ்கியிருக்க வேண்டும். ஆனால், இப்போது அவள் தண்ணீருக்கு எங்கு போவாள்?

தாக்கூரின் கிணற்றில் நீர் எடுப்பதற்குக்கூட யாரும் அவளை விட மாட்டார்கள்.

தூரத்திலிருந்தே அவர்கள் அவளை விரட்டியடித்து விடுவார் கள்.

கிராமத்தின் இன்னொரு மூலையில் சாஹுவின் கிணறு இருந்தது. ஆனால், அங்கிருந்து நீரை எடுப்பதற்கு அவளை யார் விடுவார்கள்?

அதற்கு மேல் நான்காவதாக ஒரு கிணறு அந்த கிராமத்தில் இல்லை.

பல நாட்களாகவே உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் ஜோஹு இருக்கிறான். தாகம் எடுத்தாலும், சிறிது நேரத்திற்கு அவன் அமைதியாக இருந்தான். பிறகு...

அவன் கூறினான்: "இதற்குமேல் என்னால் தாகத்தை அடக்கிக் கொண்டு இருக்க முடியாது. வா... நான் என் மூக்கைப் பொத்திக்கொண்டு கொஞ்சத்தையாவது குடிக்கிறேன்.''

கங்கி அவனைக் குடிக்க விடவில்லை. அந்த பாதுகாப்பற்ற நீரைப் பருகுவது என்பது அவனை மேலும் சுகவீனத்திற்கு ஆளாக்கிவிடும் என்று அவளுக்குத் தெரியும். ஆனால், நீரைக் கொதிக்க வைத்தால், பருகுவதற்கு அது பாதுகாப்பாக இருக்கும் என்பது அவளுக்குத் தெரியாமல் இருந்தது. அவள் கூறினாள்: "இந்த தண்ணியை நீங்க எப்படி குடிக்க முடியும்? அந்த மிருகம் எது என்று கடவுளுக்குத் தெரியு

ஜோஹு லோட்டாவை தன் உதடுகளுக்கு பருகுவதற்காகக் கொண்டு சென்றபோது, நீர் மிகவும் மோசமான நாற்றத்தை அளித்தது. அவன் கங்கியிடம் கூறினான்:

"தண்ணி என்ன இப்படி இருக்கு? நாற்றத்தைத் தாங்க முடியல. இதை குடிக்கவே முடியாது. என் தொண்டை வறண்டு போயிருக்குது. இந்த பாழாய்ப் போன தண்ணியை நீ என்னைக் குடிக்க வைக்கிறே....!''

சாயங்கால வேளையில் கங்கி நீரைச் சேமித்து வைப்பாள். கிணறு மிகவும் தூரத்தில் இருந்தது. திரும்பத் திரும்ப அவ்வளவு தூரம் நடந்து செல்வது என்பது மிகவும் கஷ்டமான விஷயம். நேற்று அவள் எடுத்துக்கொண்டு வந்த நீர் நன்றாகவே இருந்தது. இன்று எப்படி தவறு உண்டானது? அவள் லோட்டாவை தன் நாசிக்கு அருகில் கொண்டுவந்து பார்த்தாள். ஆமாம்... அது நாற்றமெடுத்தது.

ss

கிணற்றிற்குள் ஒரு மிருகம் விழுந்து மூழ்கியிருக்க வேண்டும். ஆனால், இப்போது அவள் தண்ணீருக்கு எங்கு போவாள்?

தாக்கூரின் கிணற்றில் நீர் எடுப்பதற்குக்கூட யாரும் அவளை விட மாட்டார்கள்.

தூரத்திலிருந்தே அவர்கள் அவளை விரட்டியடித்து விடுவார் கள்.

கிராமத்தின் இன்னொரு மூலையில் சாஹுவின் கிணறு இருந்தது. ஆனால், அங்கிருந்து நீரை எடுப்பதற்கு அவளை யார் விடுவார்கள்?

அதற்கு மேல் நான்காவதாக ஒரு கிணறு அந்த கிராமத்தில் இல்லை.

பல நாட்களாகவே உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் ஜோஹு இருக்கிறான். தாகம் எடுத்தாலும், சிறிது நேரத்திற்கு அவன் அமைதியாக இருந்தான். பிறகு...

அவன் கூறினான்: "இதற்குமேல் என்னால் தாகத்தை அடக்கிக் கொண்டு இருக்க முடியாது. வா... நான் என் மூக்கைப் பொத்திக்கொண்டு கொஞ்சத்தையாவது குடிக்கிறேன்.''

கங்கி அவனைக் குடிக்க விடவில்லை. அந்த பாதுகாப்பற்ற நீரைப் பருகுவது என்பது அவனை மேலும் சுகவீனத்திற்கு ஆளாக்கிவிடும் என்று அவளுக்குத் தெரியும். ஆனால், நீரைக் கொதிக்க வைத்தால், பருகுவதற்கு அது பாதுகாப்பாக இருக்கும் என்பது அவளுக்குத் தெரியாமல் இருந்தது. அவள் கூறினாள்: "இந்த தண்ணியை நீங்க எப்படி குடிக்க முடியும்? அந்த மிருகம் எது என்று கடவுளுக்குத் தெரியும். நான் எங்கிருந்தாவது தண்ணி கொண்டு வர்றேன்.''

ஜோஹு அவளையே ஆச்சரியத்துடன் பார்த்தான். "அதை நீ எங்கிருந்து கொண்டு வருவே?''

"இங்கு இரண்டு கிணறுகள் இருக்கின்றன. தாக்கூரின் கிணறு... சாஹுவின் கிணறு. ஒரு லோட்டா தண்ணி எடுக்கக் கூடவா என்னை விடமாட்டாங்க?''

"உன் கைகளும் கால்களும்தான் ஒடியும். வேறு எதுவுமே நடக்காது. அமைதியா உட்காரு. பிராமணர் உன்னை மோசமான வார்த்தைகளால் அர்ச்சனை செய்வார். தாக்கூர் தன் லத்தியைச் சுழற்றுவார். சாஹுஜி ஒன்னுக்கு ஐந்து வாங்குவார். நம் வேதனை யாருக்குமே தெரியாது. நாம் இறந்துவிட்டால் கூட, பார்ப்பதற்கு யாருமே வர மாட்டார்கள்.

சிதையைத் தூக்குவதற்கு தோள் கொடுப்பதற்குக்கூட யாரும் தயாராக இருக்கம ôட்டார்கள். அப்படிப்பட்ட மனிதர்களா உன்னை நீர் எடுக்க விடுவாங்க?''

‌இதுதான் கசப்பான உண்மை. கங்கி அமைதியாக இருந்தாள். அதே நேரத்தில்... அவள் அவனை நாற்றமெடுத்த நீரைப் பருக விடவில்லை.

2

இரவு ஒன்பது மணி...

களைப்படைந்த, சோர்வடைந்த தொழிலாளிகள் தூங்குவதற்காகச் சென்றார்கள்.

அதே நேரத்தில்.. பணியற்ற சிலர் தாக்கூரின் கதவிற்கு வெளியே ஒன்று கூடினார்கள். போர்க்களத்தில் திறமையைக் காட்டக்கூடிய நேரங்களும் வாய்ப்புகளும் இப்போது இல்லாமற்போயின. சட்ட நீதிமன்றத் தில் வென்றெடுத்த போர்களைப் பற்றி அவர்கள் பேசிக்கொண்டார்கள்.

போலீஸுக்கு லஞ்சம் கொடுத்து தன் தோலை எப்படி தாக்கூர் காப்பாற்றிக் கொண்டார் என்பதைப் பற்றி பேசினார்கள்.

குறிப்பிடத்தக்க நீதிமன்ற தீர்ப்பை அவர் எப்படி தந்திரமாக பெற்றார் என்பதைப் பற்றி பேசினார்கள்.

ss

நீதிமன்ற எழுத்தரும், மற்ற நீதிமன்ற அலுவலர்களும் ஒரு தீர்ப்பின் பிரதியைக் கொடுக்கவே கூடாது என்றார்கள். சிலர் ஐம்பது கேட்டார்கள். சிலர் நூறு கேட்டார்கள். ஒரு மாட்டையோ காசையோ தராமல், அவர் தீர்ப்பு நகலைப் பெற்றார். "உருட்டல் புரட்டல்' கலையை ஒருவர் தெரிந்து வைத்திருக்கவேண்டும்.

அதற்குப் பிறகு...

கிணற்றிலிருந்து நீர் எடுப்பதற்காக கங்கி சென்றாள்.

தெருவிலிருந்த எண்ணெய் விளக்கிலிருந்து மெல்லிய வெளிச்சம் கிணற்றில் விழுந்து கொண்டிருந்தது.

கங்கி வந்து, கிணற்றைச் சுற்றி இருந்த பீடத்திற்கு அருகில் அமர்ந்தாள்.

மறைவாக அமர்ந்திருந்த அவள் ஒரு சந்தர்ப்பத்திற்காகக் காத்திருந்தாள்.

அனைவருமே அந்த கிணற்றில் எடுக்கப்பட்ட நீரைத்தான் பருகுகிறார்கள்.

மோசமான விதிக்கு ஆளான... அவர்கள் மட்டும்... விலக்கப்பட்ட உயிர்களாக இருந்தனர்.

பாரம்பரியமாக தொடர்ந்து நடந்து வரும் சமூகத்தின் கட்டுப்பாடுகளுக்கும் உத்தரவுகளுக்கும் எதிராக கங்கியின் போராட்ட சிந்தனை கொண்ட இதயம் ஆர்ப்பரிக்க ஆரம்பித்தது.

எங்களைத் தாழ்ந்தவர்கள் என்றும் அவர்களை உயர்ந்தவர்கள் என்றும் எது ஆக்குகிறது? தங்களுடைய கழுத்துகளில் அவர்கள் ஒரு நூலை அணிந்திருப்பதா காரணம்? அந்த மனிதர்கள் அனைவரும் மிகவும் குறுகிய மனம் படைத்தவர்கள்.

ஒவ்வொருவரும் ஒருவரை யொருவர் விஞ்சக்கூடிய வர்கள். அவர்கள் திருடினார்கள்.

அவர்கள் ஏமாற்றினார்கள். மற்றவர்களுக்கு எதிராக அவர்கள் பொய் வழக்குகள் போட்டார்கள்.

சமீபத்தில்தான் தாக்கூர், மேய்ப்பவனின் ஆட்டை வேட்டையாடி, கொன்று சாப்பிட்டார். அந்த பணக்காரரின் வீடு வருடம் முழுக்க ஏராளமான சூதாடிகளால் நிறைந்திருக்கும்.

சாஹுஜி நெய்யில் எண்ணெய்யைக் கலப்படம் செய்வார். அவர்கள் எங்களை தங்களுக்குப் பணி செய்பவர்களாக ஆக்குவார்கள்.

ஆனால், அதற்கு பணம் தர விரும்பமாட்டார்கள்.

எங்களை விட அவர்கள் எந்த வகையில் உயர்ந்தவர்கள்? தற்பெருமை அடித்துக் கொள்வதில்... ஆமாம்... அவர்களைப் போல நாங்கள் தெருக்களில் கூச்சல் போடமாட்டோம்...

தாங்கள் தான் உயர்ந்தவர்கள் என்று. கிராமத்தின் வழியாக நான் எப்போது நடந்து சென்றாலும், காமவெறி படர்ந்த கண்களுடன் அவர்கள் என்னைப் பார்ப்பார்கள்.

அவர்களின் இதயங்கள் பொறாமையில் நெளியும். எனினும், தாங்கள் உயர்ந்தவர்கள் என்று அவர்களே பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள்.

கிணற்றிற்கருகில் காலடிச் சத்தங்கள் ஒலிப்பதை அவள் கேட்டாள். அவளின் இதயம் பயத்தால் துடிக்க ஆரம்பித்தது. அவள் பார்க்கப்பட்டு விட்டால், நரகமே திறந்து விடப்பட்டதைப்போல ஆகிவிடும். குடத்தையும் கயிறையும் கையில் எடுத்துக்கொண்டு, கீழ்நோக்கி குனிந்துகொண்டு, ஒரு மரத்தை நோக்கி நடந்துசென்று, அதன் இருண்ட நிழல்களுக்குள் அவள் தன்னை மறைத்துக் கொண்டாள்.

அவர்கள் எந்தச் சமயத்திலும் யார்மீதும் எந்தவித கருணையையும் செலுத்தமாட்டார்கள். அவர்கள் ஏழை மனிதனான மங்குவை மிகவும் மோசமாக அடித்தார்கள். அதன் விளைவாக அவன் மாதக்கணக்கில் ரத்த வாந்தி எடுத்துக் கொண்டிருந்தான்.

சம்பளம் இல்லாமல் பணி செய்வதற்கு அவன் மறுத்ததுதான் காரணம். அவர்கள் உயர்ந்தவர்கள்!

இரண்டு பெண்கள் கிணற்றிற்கு நீர் எடுப்பதற்காக வந்திருந்தார்கள்.

அவர்கள் பேசிக் கொண்டிருந்தார்கள்.

"அவர்கள் சாப்பிடுவதற்காக உள்ளே வந்தார்கள். நம்மை நல்ல நீரை எடுத்துக்கொண்டு வரும்படி உத்தரவு பிறப்பித்தார்கள்.''

"சிறிது நேரம் நாம் ஓய்வெடுக்கும் விஷயம் தெரிந்தால், அந்த மனிதர்கள் கோபமடைந்து விடுவார்கள்.''

"இங்கு வந்து, தாங்களே நீர் எடுக்கவேண்டும் என்ற நாகரீகம் அவர்களுக்குக் கிடையாது. நாம் ஏதோ அவர்களின் பிணைப் பெண்கள் என்பதைப் போல, கட்டளைகள் பிறப்பிப்பதற்கு மட்டுமே அவர்களுக்குத் தெரியும்..''

"அவர்களின் பிணைப்பெண் அல்ல என்றால், நீ யார்? உனக்கு உணவும் துணியும் கிடைக்கலையா? நேரடியாகவும் மறைமுகமாகவும் அவர்களிடமிருந்து கொஞ்சம் பணத்தை நீ பிடுங்கலையா? பிணைப்பெண்கள் எந்தவிதத்தில் வேறுபட்டவர்கள்?''

"என்னை அவமதிக்காதே... சகோதரி. சிறிது நேரத்திற்குக்கூட என்னால் ஓய்வு எடுக்க முடியல.

வேறொருவரின் வீட்டில் இந்த அளவிற்கு நான் கஷ்டப்பட்டு உழைத்திருந்தால், வாழ்க்கை எளிதாக அருமையா அமைஞ்சிருக்கும்.

அவர் நன்றியுள்ள மனிதராக இருந்திருக்க வேண்டும். வேலை செய்து உன்னை நீயே சாகடிச்சிக்கிறணும். ஆனால், யாருமே சந்தோஷப் பட மாட்டாங்க.''

நீர் எடுத்துக்கொண்டு இரண்டு பெண்களும் அங்கிருந்து நடந்து சென்றார்கள்.

மரத்தின் நிழலிலிருந்து கங்கி வெளியே வந்து, கிணற்றை நோக்கி நடந்தாள்.பணியற்ற மனிதர்கள் போயிருந்தனர்.

தாக்கூர் உள்பக்கமாக கதவைப் பூட்டிவிட்டு, கூடத்தில் படுப்பதற்காக தன்னைத் தயார்படுத்திக் கொண்டிருந்தார்.

கங்கி ஒரு நிம்மதிப் பெருமூச்சை விட்டாள். சூழல் மிகவும் சரியாக இருப்பதைப் போல தோன்றியது.

அமிர்தத்தைத் திருடச் சென்ற இளவரசன் கூட இந்த அளவிற்கு மிகவும் கவனமாக இருந்திருக்க மாட்டான். கங்கி மெல்லிய எட்டுகளுடன் கிணற்றின் ஓரத்தில் நடந்தாள். இந்த அளவிற்கு வெற்றி பெற்றுவிட்டோம் என்ற உணர்வை அவள் எந்தச் சமயத்திலும் அனுபவித்த தில்லை.

குடத்தின் கழுத்தில் கயிற்றின் ஒரு நுனியை அவள் கட்டினாள். எதிரியின் பாதுகாப்பு படைகளைப் பார்த்து ஒரு படைவீரன் தன்னைத் தயார்படுத்திக் கொள்வதைப் போல, அவள் தன் வலது பக்கத்தையும் இடது பக்கத்தையும் கூர்ந்து பார்த்தாள். இப்போது அவள் பிடிபட்டால், சிறிது கூட கருணை இருக்காது.

இறுதியில்...

கடவுள்களை வேண்டிக்கொண்டு, மனதில் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு அவள் கிணற்றிற்குள் குடத்தை இறக்கினாள்.

குடம் மெதுவாக நீருக்குள் மூழ்கியது.... சிறிதுகூட ஓசையே உண்டாக்காமல்.

கங்கி வேகமாக கயிற்றை இழுக்க, குடம் மேலே வந்தது. பலம் கொண்ட ஒரு சண்டை வீரன்கூட இந்த அளவிற்கு வேகமாக குடத்தை மேலே இழுத்திருக்கமாட்டான்.

குடத்தைப் பிடித்துத் தூக்கி, அதை கிணற்றின் ஓரத்தில் வைப்பதற்காக கங்கி முன்னோக்கி சாய்ந்து நின்றிருந்தாள்.

அப்போது தாக்கூரின் கதவு திடீரென திறந்தது. அந்த சத்தத்தை விட, ஒரு சிங்கத்தின் பார்வை அதிக பயத்தை உண்டாக்குவதாக இருந்திருக்காது.

அவளின் கைகளிலிருந்து கயிறு நழுவியது. குடம் கீழ்நோக்கி கிணற்றிற்குள் இறங்கி, ஒரு பெரிய சத்தத்துடன் நீரில் மோதியது. சில நிமிடங்களுக்கு நீர், அலைகளைப் பரப்பும் ஓசை கேட்டது.

தாக்கூர் கிணற்றை நோக்கி உரத்த குரலில் கத்தியவாறு வந்து கொண்டிருந்தார்.

"அங்கே யாரு?.... அங்கே யாரு?'' கங்கி கிணற்றின் மேடையிலிருந்து குதித்து, பயத்துடன் ஓடினாள்.

அவள் வீட்டை அடைந்தபோது, லோட்டாவிலிருந்த அசுத்த நீரை ஜோஹு பருகிக் கொண்டிருப்பதைப் பார்த்தாள்.

uday010625
இதையும் படியுங்கள்
Subscribe